Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விண்டோசை விட லினக்ஸ் ஏன் சிறந்தது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விண்டோசை விட லினக்ஸ் ஏன் சிறந்தது?

windows-to-linux.jpg

லினக்ஸ் இயங்குதளம் முற்றிலும் இலவசமாகும். இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

வைரஸ் பிரச்சனைகள் கிடையாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடைய முதன்மை அலுவலர் Steve Balmer கூறுகிறார் வைரஸ்தாக்குதலை முற்றிலுமாக விண்டோஸ் இயங்க்குதளத்தில் ஒழிக்கமுடியாது என்று.

விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ளது போன்று Spyware தாக்குதல்கள் லினக்ஸில் கிடையாது.

லினக்ஸ் இயங்குதளங்கள் Crash ஆகாது.

புதிய வன்பொருள்களை கணினியில் இணைத்தால் கணினியை மறுதொடக்கம் (REBOOT) செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்தினால் பற்றி கவலைபடத் தேவையில்லை.

லினக்ஸ் இயங்குதளத்தினால் 100 க்கும் மேற்பட்ட File System ( FAT32, NTFS, EXT3, EXT4, EXT2, VFAT etc...) படிக்க முடியும். விண்டோஸ் இயங்குதளத்தினால் அதனுடைய இரண்டு File System ( FAT32, NTFS) ஆகியவற்றை மட்டுமே படிக்க முடியும்.

விண்டோஸ் இயங்குதளத்தை Primary Partition -ல் மட்டுமே நிறுவ முடியும். லினக்ஸ் இயங்குதளங்களை Logical Partition லும் நிறுவமுடியும்.

லினக்ஸ் இயங்குதளங்கள் PDA, CELLPHONES, SUPER COMPUTERS ஆகியவற்றிலும் இயங்குகிறது.

லினக்ஸ் இயங்குதளங்களை உங்களுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் இயங்குதளங்கள், அதன் மென்பொருள்கள் ஆகியவற்றை பகிர்ந்துகொண்டால் அது சட்ட விரோதமாகும்.

லினக்ஸ் இயங்குதளங்களை கணினியில் நிறுவாமல் நிகல் வட்டாக பயன்படுதிக்கொள்ளலாம் (LIVE CD).

லினக்ஸ் இயங்குதளங்கள் இருப்பியல்பாக virtualization ( XEN / KVM / VirtualBox / etc..) மென்பொருள்களுடன் வருகிறது. இதன் மூலம் பல இயங்குதளங்களை லினக்ஸ் இயங்குதளத்தின் உள்ளேயே நிறுவி பயன்படுத்திக்கொள்ளலாம்.

லினக்சினுடைய Kernel நிறைய வன்பொருள்களுக்கான Drivers களுடன் வெளியிடப்படுகிறது. ஆனால் விண்டோஸ் இயங்குதளத்தில் நீங்கள் Driver CD தனியாக வைத்திருக்க வேண்டும்.

லினக்ஸ் இயங்குதளங்கள் ஆயிரக்கணக்கான உள்ளூர் மொழிகளிலும் வெளிவருகிறது. உங்களுடைய மொழியில் நீங்கள் லினக்ஸ் இயங்குதளத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.

லினக்ஸ் உங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை அளிக்கிறது.

உபுண்டு லினக்ஸ் குறுவட்டுக்களை (BOOT CD) www.ubuntu.com என்ற இணையதளத்தில் இருந்து இலவசமாக பெறமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பயனுள்ள தகவல்கள் நன்றிகள் நுணா??நான் போய் பாக்கிற தளங்களிற்கு போனாலும் வைரஸ் தாக்காதுதானே ?? :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு நன்றி நுணாவில்.எனக்கும் லினக்ஸ் உபயோகிக்க நீண்டநாள் ஆசை.இருந்தாலும் எமக்கு தேவையான சுகமான எல்லா மென்பொருட்களையும் லினக்ஸில் நிறுவ முடியாதென ஒருவர் கூறினார்.இது உண்மையா?

அத்துடன் விண்டோசை மாதிரி லினக்ஸை சுலபமாக கையாளமுடியாது எனவும் கூறினார்.விபரம் தெரிந்தவர்கள் யாராவது விளக்கமாக பதில் தருவீர்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயனுள்ள தகவல்கள் நன்றிகள் நுணா??நான் போய் பாக்கிற தளங்களிற்கு போனாலும் வைரஸ் தாக்காதுதானே ?? :rolleyes:

வழமையாய் போற தளம் எண்டால் வைரஸ் பெரிசாய் தாக்கிறதுக்கு சந்தர்ப்பம் இல்லையாம்.எனக்கும் இதைப்பத்தி பெரிசாய் தெரியாது படிச்சவங்கள் கதைக்கேக்கை காதிலை விழுந்துது...

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி நுனாவிலான்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.enlightenment.org/

http://www.kde.org/

http://www.gnome.org/ போன்ற தளங்களில் லினக்ஸை விண்டோஸ் போல கிறாபிக்ஸ் வடிவத்துக்கு(GUI) மாற்றல்லாம்.அதாவது ஐகோனை(icon) கிளிக் செய்யும் போது fileகள் திறக்கும்.

மேலும் வைரஸ் வர சாத்தியமே இல்லை என்று கூறுகிறார்கள்.

http://www.linux.com/learn/tutorials/284124-myth-busting-is-linux-immune-to-viruses

கீழுள்ள தளத்தில் மென்பொருட்கள் விண்டோவுக்கும் லினக்ஸுக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.அதனை கவனத்தில் எடுத்தால் மென்பொருள் சிக்கலும் வராது.

http://wiki.linuxquestions.org/wiki/Linux_software_equivalent_to_Windows_software

உபுண்டு பாவனையாளர் என்ற முறையில் எனது 2 சதம்:

சாதாரண வீட்டு பாவனைக்கு உபுண்டு லினக்ஸ், விண்டோசை விட மிகவும் சிறந்தது.

அனுகூலங்கள்:

நீங்கள் விண்டோஸ் போல ஒவ்வொரு மென்பொருளாக (உதரணத்துக்கு MS வோர்ட்) நிறுவ தேவை இல்லை. பொதுவாக தேவைப்படும் எல்லா மென்பொருட்களும் உபுண்டு நிறுவும் போதே நிறுவ படுகின்றன.

பாதுகாப்பானது. வைரஸ் செய்பவர்கள் பொதுவாக லினக்சை டார்கெட் பண்ணுவதில்லை. இதற்கு முக்கியமான காரணம் ஏதேனும் வைரஸ் உட்புகுந்தாலும் லினக்ஸ் பெர்மிச்சியன் சிஸ்டத்தை உடைப்பது கடினம்.

நிறுவுவதற்கு மிகவும் இலகுவானது. எனது 5 வருட பழைய கணனியிலேயே இருபது நிமிடம் கூட தேவை படவில்லை.

விண்டோசை விட வேகமாக தொடங்கி விடும். (Startup)

தமிழ் சப்போர்ட் அதிகம். முழு கணினுயும் தமிழிலே நீங்கள் உபயோகிக்காலம். தமிழில் பாவிப்பது ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும் இலகுவாக பழகி விடும்.

இலவசம்! நீங்கள் விண்டோசை சுட்டு பாவிப்பவர் என்றால் இனி அப்பிடி சுட தேவை இல்லை.

சில பிரச்சினைகள்:

நீங்கள் பாவிக்கும் கணணியில் wireless இன்டர்நெட் பாவித்தால், உங்கள் wireless கார்டு டிரைவர் சிலவேளைகளில் உபுண்டுவில் இல்லாமல் இருக்கலாம்.

போடோஷப் போன்ற சில பிரபல்யமான மென்பொருட்கள் லினக்சில் இன்னும் வெளி வரவில்லை.

Edited by nadodi

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் போல் நம் வீட்டை அழகுபடுத்தி பார்க்கனும் அதுவும் சாமான்கள் வாங்குவதற்கு முன்பே செய்து பார்க்கனும் என்று தோன்றினால் மென்பொருட்களின் உதவியில்லாமல் முடியாது அதுவும் வின்டோஸ் கணினி என்றால் பல வித மென்பொருட்கள் இருக்கின்றன.அதெல்லாம் இருந்துட்டு போகட்டும் லினக்ஸில் என்ன இருக்கு என்று சுமார் 10 நிமிடத்துக்கு முன்பு கூகிளாரிடம் கேட்ட போது கொடுத்த முதல் மென்பொருள்..

SWEET HOME 3D

Sosweet.png

தரவிரக்கத்திற்கு தேவையான வழிமுறைகளை அங்கேயே கொடுத்திருக்கிறார்கள் அதன் படி செய்தால் சில நிமிடங்களில் உங்கள் வீட்டை வடிவமைக்க வேண்டிய மென்பொருள் தயாராக கணினியில் காத்திருக்கும்.எப்படி செய்ய வேண்டும் என்ற வழிமுறைகள் அவ்வப்போது பெட்டிச்செய்தியுடன் கொடுப்பதால் ஆர்வம் இருப்பவர்கள் உதவி கோப்பை கூட படிக்காமல் வேலை செய்யதொடங்கிடலாம்.

soSweet.png

கட்டம் ஒன்று போட்ட உடனே அதன் பரப்பளவை கொடுத்துவிடுகிறது.ஜன்னல்,சோபா ...என்று எத்தனையோ விதங்களை கொடுத்து வேண்டிய இடத்தில் போட்டு அழகு பார்க்க வேண்டியது தான்.இப்படி உருவாக்கியதை பலவித கோப்புகளாக மாற்றவும் வசதி செய்துகொடுத்துள்ளார்கள்.உங்கள் கற்பனையை கட்டவிழ்த்து விட்டு தேவைப்பட்டதை போட்டு அழகு பாருங்கள்.

Auto Shutdown

சில சமயம் தரவிறக்கம் எப்போது முடியும் என்று தெரியாததால் கணினியை அப்படியே Onயில் விடவேண்டியிருக்கும் மற்றும் அவசியம் இல்லாத நேரத்தில் மின்சாரத்தை மிச்சம் பிடிக்க கணினியை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானாகவே மூடிக்கொள்ள வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்று ரொம்ப நாளாக யோசித்துக்கொண்டிருந்தேன். தேடுதலில் இறங்கிய போதும் அவ்வளவாக அகப்படவில்லை.உபுண்டுவில் Application---> கடைசியில் Ubuntu Software Centre யில் Gshutdown என்கிற மென்பொருள் கிடைக்கிறது,இதன் மூலம் உங்களுக்கு தேவையான நேரத்தில் கணினியை முழுவதுமாக மூடவைக்கலாம்.

முயன்றுபாருங்கள்.

http://2.bp.blogspot.com/_6rYHd3KIKHc/S5iQOfTag5I/AAAAAAAACcU/LMffAsbBqPc/s1600-h/gshut.png

புதுப் புது மென்பொருட்கள்

உபுண்டு 9.10 போட்டு அதை மேம்படுத்திய பிறகு பார்த்தால் புதுப் புது மென்பொருட்களை அவ்வளவாக தேடாமல் இப்படி வரிசைப்படுத்தி கொடுத்துள்ளார்கள்.KDE மற்றும் Gnome க்கு என்று தனித்தனியாக கொடுத்துள்ளார்கள்.இவ்விரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை அதன் பெயர்களை கொண்டே கண்டுபிடித்துவிடலாம்.

பிறகு என்ன? தரவிறக்கி ஜாமாய்ங்க.

http://3.bp.blogspot.com/_6rYHd3KIKHc/S46qyw7fbKI/AAAAAAAACbk/bEHACRxa3f4/s1600-h/softwarecentre.png

USB இணைய இணைப்பு

லினக்ஸுக்கு USB என்றாலே ஆகாது போல் இருக்கு பல முறை சில வன்பொருட்களை வேலைசெய்ய வைப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும்.பொருமை இருந்தால் கவனமுடன் பிரச்சனைகளை அலசினால் வெற்றி பெறலாம் என்பதற்கு இது ஒரு சான்று.

மஸ்கட்டில் இணைய இணைப்பு பெரும்பாலான மக்கள் Nawras அல்லது Omantel ஐயே நம்பி இருக்கவேண்டியுள்ளது.நவ்ராஸூம் ஓமன்டெல் மூலமே இணைய இணைப்பை வழங்குவதாகவே தெரிகிறது.பல வித இணைப்புகள் இருந்தாலும் நான் தேர்தெடுத்து என்னுடைய அலைபேசி மூலம் ஏற்படுத்திக்கொடுக்கும் இணைய இணைப்பை தான்.இரண்டு நாளுக்கு இரண்டு ரியால்.2 GB அளவு மட்டுமே உபயோகிக்க முடியும்.இணைப்பு Wireless மூலம் கொடுக்கப்படுகிறது.

வின்டோசில் அலைப்பேசி மூலம் இணைய இணைப்பை ஏற்படுத்தி உபயோகிக்கும் போது என்ன தான் அலைபேசி மோடமாக செயல்பட்டாலும் இணைப்பின் வேகம் வெகுவாக பாதிக்கப்படுகிறது.இந்நிலையில் என் அலுவலகத்தில் இருப்போர் USB Dongle என்று சொல்லப்படுகிற வகை வன்பொருளை கொண்டு இணைய இணைப்பை ஏற்படுத்தி உபயோகித்திக்கொண்டிருப்பதை பார்த்தேன்.அவர்கள் சிம் கார்டை அதில் சொருகி அதன் மூலம் இணைப்பை கொண்டுவந்தனர்.அதை பார்த்த போது அதன் மேல் Oman Mobile என்று போட்டிருந்தது.என்னுடைய அலைப்பேசி Nawras என்பதால் அதை நான் உபயோகப்படுத்த முடியாது என்று நினைத்திருந்தேன் அதனால் நான் அதை வாங்கவும் இல்லை.என்ன தான் Nawras அதே வன்பொருளை 69 ரியாலுக்கு விற்றாலும், விலை அதிகம் என்பதால் அலைபேசியை மோடமாகவே உபயோகித்து வந்தேன்.இந்நிலையில் என்னுடன் வேலை பார்த்தவர் சிங்கப்பூர் திரும்புவதால் அந்த Dongle சும்மாகவே கிடந்தது.அதை ஒரு நாள் என்னுடைய வின்டோசில் போடு ஆராய்ந்துகொண்டிருக்கும் போது அதற்கு தேவையான டெலிபோன் எண் (*99#) மற்றும் APN முகவரியை கொடுத்தால் எந்த அலைபேசி இணைப்பையும் ஏற்படுத்தலாம் என்பதை தெரிந்துகொண்டேன்.இது தான் ஆதார சுருதி.

இதற்கிடையில் என்னுடைய சோனி எரிக்சன் முலம் உபுண்டுவில் தேவையான மாறுதலை செய்துகொண்டு மேம்படுத்திக்கொண்டிருந்தேன்.ஒரே ஒரு மேம்பாடு (WICD) எல்லாவற்றையும் தலைகீழாக புரட்டிப்போட்டு இணைய இணைப்பே இல்லாமல் செய்துவிட்டது.எல்லா இடங்களில் சொல்லப்பட்ட செயல் முறைகளை செய்துப்பார்த்து சோர்ந்துவிட்டேன்.கொஞ்ச நாள் இந்த பக்கமே வராமல் இருந்துவிட்டாலும் அவ்வப்போது சும்மா கிடக்கே என்று திரும்பவும் தேடுதலை ஆரம்பித்தேன்.

நான் செய்ததெல்லாம் இது தான்.

1.என்னுடைய WVdial கோப்பை மாற்றி அமைத்தேன்.

2.Wicd ஐ தூக்கிவிட்டு Network Manager ஐ நிறுவினேன்.

3.Kernal ஐ மேம்படுத்தினேன்.

அதன் பிறகு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.

http://4.bp.blogspot.com/_6rYHd3KIKHc/S32AhS0XI2I/AAAAAAAACbQ/n7W9sWCQpPI/s1600-h/wvdial.png

http://2.bp.blogspot.com/_6rYHd3KIKHc/S31_kbc5-tI/AAAAAAAACbA/mjAC5l0pK3c/s1600-h/nawras.png

முடிந்தது கதை.இந்த பதிவு கூட இதன் மூலம் கிடைத்த இணைய இணைப்பில் தான்.இந்த Network Manager ஏதும் வேலை செய்கிறதா என்று தெரியவில்லை.பாருங்கள் 2 மாத இணைப்பு என்று காண்பிக்கிறது.

லினக்ஸில் Bug?

வரும் படங்களை பாருங்கள்..

Bit Torrent மூலம் தரவிரக்கம் செய்யும் போது எடுத்தது.தரவிரக்கம் வேகம் MB யில் இருக்கு அதுவும் ஒரு செகண்டுக்கு.

பிழையாக செய்தி காண்பிக்கிறது - 1 நிமிடம் மட்டுமே பாக்கி என்று 20 நிமிடமாக காட்டிக்கொண்டிருக்கிறது.

இது லினக்ஸின் பிழையா அல்லது அந்தமென்பொருளின் பிழையா என்று தெரியவில்லை.

http://2.bp.blogspot.com/_6rYHd3KIKHc/SfKtatzPXlI/AAAAAAAABzI/3ZPJJdMRSwI/s1600-h/Screenshot-Transmission-6.png

கொஞ்ச நேரம் கழித்து,

http://2.bp.blogspot.com/_6rYHd3KIKHc/SfKtaceIrYI/AAAAAAAABzA/IfLFMmc_i4w/s1600-h/Screenshot-Transmission-9.png

Source : http://kumarlinux.blogspot.com/

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.