Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டக்ளஸ் யாழ்ப்பாண மன்னன்!

Featured Replies

டக்ளஸ் யாழ்ப்பாண மன்னன்;'ஆனால் வடக்கு அபிவிருத்தி அவருக்கு உரியதல்ல அமைச்சர் பசில் ராஜபக்ஷ

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா "யாழ்ப்பாணத்தின் அரசன்'அவர் வடக்கு மக்களின் பிரதிநிதி. ஆனாலும், வடக்கின் அபிவிருத்தி விடயம் அவருக்குரியதல்ல. அது எனது அமைச்சுக்குரிய பணியென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதம் இடம்பெற்றது.இதில் உரையாற்றிய ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.சுனில் ஹந்துன்நெத்தி பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அவர் உரையாற்றுகையில் ;

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சுக்கு குறைந்தளவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிதியை வைத்துக்கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை எவ்வாறு அவரால் அபிவிருத்தி செய்ய முடியும் என்று கேட்டார்.

இதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பதிலளிக்க முற்பட்ட போது பதிலளித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தான் யாழ்ப்பாணத்தின் அரசன் அவர் வடக்கு மக்களின் பிரதிநிதி ஆனால், வடக்கின் அபிவிருத்தி அவருக்குரிய விடயமல்ல.அது எனது பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்குரிய விடயம்.நான் தான் சகல பிரதேசங்களின் அபிவிருத்திக்கும் பொறுப்பானவன்.சகல மாவட்டங்களில் உள்ள பிரதேச அபிவிருத்திக்குழுக்கள் மக்கள் சபைகள் ஊடாக அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இளம் எம்.பி.க்களை உள்ளடக்கிய குழுக்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளன.பிரதேசங்களின் அபிவிருத்திக்கான பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்றார்.

இந்த விவாதத்தை அமைச்சர் டக்ளஸ் சிரித்தவாறு அவதானித்துக்கொண்டிருந்தார்.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=2475:-q---------&catid=74:jaffna&Itemid=102

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விவாதத்தை அமைச்சர் டக்ளஸ் சிரித்தவாறு அவதானித்துக்கொண்டிருந்தார்.

monkey300.jpg

காப்பதற்கும் வகையறியீர்; கைவிடவும்மாட்டீர்;

கவர் பிளந்த மரத்தொளையில் கால் நுழைத்துக்கொண்டே

அப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல

அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே!... :icon_idea::rolleyes:

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதம் இடம்பெற்றது.இதில் உரையாற்றிய ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.சுனில் ஹந்துன்நெத்தி பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

அவர் உரையாற்றுகையில் ;

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அமைச்சுக்கு குறைந்தளவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிதியை வைத்துக்கொண்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தை எவ்வாறு அவரால் அபிவிருத்தி செய்ய முடியும் என்று கேட்டார்.

... உது என்ன பன்னாடைத்தனமாக கேள்வி கேட்டிருக்குது??? அவருக்கு ... யாழ் மன்னனுக்கு .... காசா????????? ...

1) அவர்தானே யாழ்பாண ஏகபோக மண் வியாபாரி!

2) கொழும்பு/யாழ் பஸ் ஓட்டத்திலும் அவருக்கே பெரும் பகுதி!

3) வடக்கே சாமான் கொண்டு செல்ல கப்பங்கள்!

4) யாழில் கடத்தல்களில் ஏகபோகம்!

5) யாழில் கொள்ளைகள் இவரைத்தாண்டி இல்லவே இல்லை!

6 ... .... இப்படி பல ஏகபோக வர்த்தகர்தான் ... இந்த ... யாழ் மன்னன்!!! ... உது தெரியாமல் கேள்வி கேட்குது பன்னாடை!!!????......

36_11_6.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்ளஸ் யாழ்ப்பாண மன்னன்!

கட்டுநாயக்கா ஏயாப்போட்டிலையும் நசனல் வெள்ளைவேட்டியோடை அங்காலை நிண்டு........ வெளியிலையிருந்து வாறசனத்திட்டை.......மன்னன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.