Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை – பகுதி 1

மீராபராதி

ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மையையும் அப் பிரச்சனை மீதான சமூகத்தின் பன்முக பார்வைகளும் அடக்குமுறைகளையும் அலசி ஆராய்வதற்கு நம்மிடம் பன்முகத் தன்மை கொண்ட பார்வை இல்லாமல் இருப்பது மிகவும் துரதிர்ஸ்டமாகும். ஏனெனில் அவ்வாறு பார்க்கும் பொழுது மட்டுமே ஒரு பிரச்சனையின் பன்முகத்தன்மைகள் வெளிப்படும். அதனடிப்படையில் அதற்கான தீர்வுகளை காண்பதும் இலகுவாகும். இந்த அடிப்படையில் அண்மைக்காலங்களில் பேசப்படும் சாமியார்கள் மதகுருமார்கள் மற்றும் அரசியல் குறிப்பாக இடதுசாரி அரசியல் செய்ற்பாட்டாளர்களின் பாலியல் துஸ்பிரயோகங்கள் அல்லது பயன்படுத்தல்கள் மற்றும் அவர்களது காம அல்லது பாலியல் உறவுகள் தொடர்பான செய்திகள் பார்க்கப்படவேண்டும். இவ்வாறன செய்திகள் குறித்த தனிநபர்களுக்கு எதிரான ஒரு வம்புச் (gossip) செய்தியாக குறுகிய காலத்தில் பரபல்யமாகி ஊடக செய்திகளின் விற்பனைக்கும் அதனால் அவர்கள் இலாபம் ஈட்டுவதற்கும் மட்டுமே வழிவகுக்கின்றது. இதற்குக் காரணம், அச் செய்தியின் பால் இருக்கும் கவர்ச்சித்தன்மையே. ஏனெனில் நமக்குள் புதைந்திருக்கும் அல்லது புதைக்கப்பட்ட பிரக்ஞையற்ற காம மற்றும் பாலியல் மீதான ஆசைகளே இச் செய்திகளை நோக்கி நம்மை இழுக்கின்றன. ஆனால் காலோட்டத்தில் இப் பிரச்னைக்குறிய அம்சம் பெரும்பாலும் கதைக்கப்படுவதில்லை ஏனெனில் பல்வேறு வம்புச் செய்திகள் வந்து எம்மை அள்ளிக்கொண்டு சென்றுவிடும். அல்லது மீண்டும் இன்னுமொருவர் மூலம் பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பான பிரச்சனை பெரிதுபடுத்தப்படும். சிறிது காலத்தில் மீண்டும் இச் செய்தியின் முக்கியத்துவம் குறைந்து போகின்றது. ஆனால் இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நமது சமூகத்தன் காமம் மற்றும் பாலியல் தொடர்பான கருத்துக்கள் சிந்தனைகளின் ஆதிக்கம் மற்றும் அது தொடர்பான பிரச்சனைகளும், அதன் மீதான அடக்குமுறைகளும் கேள்விக்குட்படுத்தப்படுவதோ அல்லது ஆராயப்படுவதோ இல்லை. மாறாக இந்த செய்திகள் ஆணாதிக்க சமூகத்தின் பார்வையின் அடிப்படையில் அமைந்ததாகவே பெரும்பாலும் எம்மை வந்தடைகின்றன. அது பற்றிய விமர்சன பார்வையின்றி நாமும் அதை அப்படியே உள்வாங்குவது நமது துரதிர்ஸ்டமே. இதுபோன்று குறிப்பாக அரசியலில் ஆயுதப் போராட்டங்கள் ஏன் உருவாகின என்பது மற்க்கப்பட்டு ஆயுதப் போராட்டம் என்பதே முக்கியபிரச்சனையாகவும் பயங்கரவாத பிரச்சனையாகவும் சித்தரிக்கப்படும் அதேவேளை ஆயுதப் போராட்டத்தற்கு காரணமாக இருந்த சமூக பிரச்சனை மறைக்கப்பட்டு அல்லது மீண்டும் அடக்கப்பட்டு விடுகின்றது. அதேபோல்தான் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கின்றன. ஏனெனில் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பானவையும் அடிப்படையில் ஒரு சமூகப் பிரச்சனையே. அதேவேளை தனிநபரின் பொறுப்புணர்வு மற்றும் உரிமை சுதந்திரம் என்பனவும் பின்னிப்பினைந்த ஒரு பிரச்சனை. ஆனால் இது வெறும் தனிநபர் பிரச்சனையாக மட்டும் பார்க்கப்பட்டு உண்மையான சமூகப் பிரச்சனை முழுகடிக்கப்பட்டுவிடுகின்றது. எப்படி பிரபாகரன் மற்றும் அவரைப் போன்றவர்களை பயங்கரவாதிகளாக மட்டும் காண்பிப்பதன் மூலம் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய சமூக அல்லது தேசிய பிரச்சனையை அடக்கிவிடுவதன் மூலம் அவ்வாறன ஒரு சமூகப் பிரச்சனை இல்லை என்றாகிவிடுகின்றது. இதே நிலைமைதான காமம் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைக்கும் ஏற்படுகின்றது. ஏனெனில் சமூகம் ஒரு புறம் பிரச்சனைக்கான விதைகளை விதைத்துவிட்டு மறுபுறம் அதனால் ஏற்படும் விளைவுகளை மட்டுமே பிரச்சனையாக பார்த்து தண்டனை அளிக்கின்றது. விதைத்த விதைகளை வசதியாக மறந்துவிடுகின்றது. இப்படிதான் சமூகத்தின பல பிரச்சனைகள் இருக்கின்றன. இது முரண்பாடானது மட்டுமல்ல நியாயமற்றதுமாகும். ஆகவே காமம் பாலியல் உறவுகள் தொடர்பான பிரச்சனைகளையும் துஸ்பிரயோகங்களையும் ஒரு சமூகப் பிரச்சனையாகவும் அதனால் உருவாக்கப்பட்ட தனிநபர் பிரச்சனையாகவும் அணுகும் பொழுது அதற்கான காரணங்களையும் நியாயமான தீர்வுகளையும் கண்டறியலாம். அதன் ஒரு முயற்சியே இந்தக் கட்டுரை. இது தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கான ஒரு ஆரம்பமே.

இந்தியாவிற்கான எனது முதல் பயணத்தில் முக்கியமான சென்ற ஒரு இடம் கஜீரோ என்றழைக்கப்படும் இடத்திலிருக்கும் கோவில்கள் ஆகும். இது இந்தியாவின் வட கிழக்குப்பகுதியில் தாஜ்மாகால் இருக்கும் பிரதேசத்திற்கு கீழே இருக்கின்றது. ஜான்ஸி ராணியின் நினைவாக இருக்கும் ஜான்ஸி புகையிரத நிலையத்திலிருந்து பஸ்ஸில் பயணிக்கவேண்டும். இந்தக் கோவில்களில் உள்ள விசேசம் முக்கியத்துவம் என்னவென்றால் இதன் கர்ப்பகிரகத்திற்குள் அதாவது மூலஸ்தானத்தில் கடவுள் இல்லை. வெறுமையான ஒரு இடம் மட்டுமே இருக்கின்றது. கோபுரத்தின் உச்சியிலிருக்கும் சிறுதுவாரத்தின் மூலம் வெளிச்சம் வருகின்றது. இக் கோயில்களின் கோபுரங்களின் வெளிப்புரமாக பிற இந்து சைவ கோயில்களில் இருக்கும் கடவுள் சிலைகளுக்குப் பதிலாக நிர்வாண சிலைகளுகம் மற்றும் பாலியல் அல்லது காமத்தின் இன்பத்தை அனுபவிக்கும் உறவுகளின் பல்வேறுவிதமான முறைகளையும் அழகான சிலைகளாக வடிவமைத்திருக்கின்றனர். இதன் நேரிடையான அர்த்தம் என்னவெனில் காமத்தை அனுபவிக்காது அறியாது அல்லது பூர்த்தி செய்யாது மனிதர்கள் முக்தி அதாவது ஒருநிலை அல்லது முழுமையான பிரக்ஞை நிலை அல்லது சமயங்களின் பார்வையில் கடவுள் நிலையை அடைய முடியாது என்பதே. இப்படி பல காரணணங்களை கூறலாம். அடிப்படையில் மனிதர்கள் தமது காம அல்லது பாலியல் தேவையை பூர்த்திசெய்தபின்பே உயர் நிலையை அடையலாம். இதற்கு புத்தர் போன்று பலர் உதாரணங்களாக இருக்கின்றனர். குறிப்பாக பிற மதக் கடவுகளின் வாழ்க்கை வரலாறுகளின் இருந்து இவ்வாறன பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது புறக்கணிக்கப்பட்டுவிட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு கஜீரோவில் 1000 கோவில்கள் இருந்தன என வரலாற்று ஆதாரங்கள் கூறுகின்றன. ஆனால் அரேபிய மற்றும் ஐரோப்பிய படையெடுப்புகளாலும் மற்றும் இயற்கை அனர்த்தங்களாலும் இந்த கோயில்கள் அழிக்கப்பட்டு இன்று 10 கோவில்கள் மட்டுமே மிகுதியாக உள்ளன. இது மட்டுமின்றி இந்திய வரலாறு நமக்கு ஆணின் பார்வையில் அமைந்த காமசூத்திராவையும் பெண்ணின் பார்வையில் அமைந்த தந்திராவையும் நமக்கு தந்திருக்கின்றன. சீனாவிலும் இதற்கு நிகரான காம சாஸ்திர நூல்கள் உள்ளன. இவற்றில் எல்லாம் காமம் சக்தியின் பயன் மற்றும் அதை எவ்வாறு அணுகுவது மற்று பல்வேறுவிதமான உறவு முறைகள் நிலைகள் தொடர்பாக விளக்குகின்றன. இவ்வாறான வரலாறு கொண்ட இந்திய பிரதேசத்தில்தான் இன்று காமம் மற்றும் பாலியல் உறவுகளுக்கு எதிரான கட்டுப்பாடுகள் பிற நாடுகளைவிட கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்தக் கட்டுப்பாடுகளில் குறிப்பாக பெண்களுக்கு எதிரான போக்கு மிக அதிகமாகவும் நுண்மையாகவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

பிரம்சச்சாரியம்

ஒரு புறம் பெண்களை அடக்கி ஒடுக்கும் சமூகம் மறுபுறத்தில் சமய நம்பிக்கைகளின் அடிப்படையில் ஆண்களையும் அவர்களது காமத்தையும் கட்டிப்போடுகின்றது. பிரம்மச்சாரியம் என்பது அதியுயர் மனித நிலையாக பொதுவாக அணைத்து மதங்களாலும் போற்றப்பட்டுவருகின்றது. இதனால் பல பெற்றோர் குழந்தைகளை குறிப்பாக ஆண் குழந்தைகளை சிறுவயதிலையே சமய நிறுவனங்களில் அல்லது மடங்களில் சேர்த்து அவர்களை துறவிகளாக்கிவிடுகின்றனர். இவ்வாறு செய்வது குழந்தை போராளிகள் போன்று சிறுவர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களாகப் பார்க்கப்படுவதில்லை. காரணம் சமய நிறுவனங்களின் ஆதிக்கம் மட்டுமல்ல மாறாக அதை சரியானதாகவும் நல்லதாகவும் பார்க்கும் சமூகக் கண்ணோட்டமுமே காரணமாகும். குழந்தைப் போராளிகளுக்கு எதிரான சட்டங்கள் போல் இதற்கும் சட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். தனது ஆன்மீகப் பாதையை ஒருவர் தானே தெரிவு செய்வதற்கான உரிமையையும் அதற்கான வயதெல்லையை ஆகக்குறைந்நதது 14 வயதுவரை வைத்திருக்கவேண்டும். அதாவது ஒரு குழந்தை தனக்கு விரும்பியதை தெரிவு செய்யும் மனவளர்ச்சியையும் பக்குவத்தன்மையும் பெறும் வரை சமூகமும் பெற்றோரும் பொறுத்திருப்பது நல்லது. ஏனெனில் குழந்தைப்பருவத்திலிருந்தே பிரம்மச்சாரியம் நோக்கி மத வழியில் வளர்க்கப்பட்டு வாலிப வயதில் தமது காம உணர்வினால் உந்தப்பட்டு பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாது அவதிப்படுகின்ற பலரைக் நமது சமூகங்களில் சாதாரணமாக காணலாம். இவ்வாறானவர்கள் வாய்ப்புகள் கிடைத்தால் துறவற வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு சதாரண வாழ்க்கைக்கு வந்துவிடுகின்றனர். முடியாதவர்கள் களவாக மறைவாக பாலியலுறவுகளில் ஈடுபடுகின்றனர். அதிகாரத்தில் உள்ளவர்கள் அதிகார துஸ்பிரயோகங்களின் மூலம் தமது காம மற்றும் பாலியலுறவின் தேவைகளை பூர்த்திசெய்கின்றனர். இதற்கான உதாரணங்கள் அணைத்து மத நிறுவனங்களிலும் நடைபெறுவதை காலம் காலமாக காணலாம். இது ஒரு புறம் சமய அறிவும் சடங்குகளும் தவறானது மற்றும் நடைமுறை வாழ்வுக்கு பொருத்தாதது என்பதையே இவை சுட்டி நிற்கின்றன. மறுபுறம் வரலாறு தோறும் இது தொடர்பான சர்ச்சைகள் எழுந்தவண்ணமே உள்ளன. ஆனால் அதற்கான தீர்வை யாரும் காண்பதாக இல்லை. மாறாக பொது மனிதர்கள் இந்த மத போதகர்கள் பிரச்சாரர்கள் மீது ஆத்திரம் அடைகின்றனர். ஏனெனில் “படிப்பது தேவராம் இடிப்பது சிவன் கோவில்” என்பது போல இந்த மத போதகர்களும் பிரச்சாரகர்களும் போதிப்பது பிரம்மச்சாரியம் ஆனால் (களவாக) ஈடுபடுவது காம மற்றும் பாலியல் உறவில் என அறியும் பொழுது பொது மனிதர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு ஒரு நம்பிக்கை துரோகமே. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு இரு வழிகள் உள்ளன. ஓன்று பிரம்மச்சாரியம் என்பது மனித வாழ்வில் மற்றும் சமூகத்தின் உயர்நிலை அந்தஸ்து என்பது முதலில் அகற்றப்படவேண்டும். அது தொடர்பான சிந்தனை மாற்றப்படவேண்டும். மாறாக பிரம்மச்சாரியம் மனிதர்களுக்கு இயல்பாக வரவேண்டிய நேரத்தில் வரும் என்ற புரிதலும் அது ஒரு சமூக மற்றும் ஆன்மீக அந்தஸ்து அல்ல என்ற புரிதலும் ஏற்பட வேண்டும். இயற்கைக்கு மாறாக உடலின் தேவைகள் மறுக்கப்பட்டு கட்டாயப்படுத்தி திணிக்கப்படக் கூடாது. செய்யவேண்டியது என்னவெனில் காம உணர்விற்கு மதிப்பளித்து உடலின் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்யும் பொழுது பிரம்மச்சாரியம் இயற்கையாக சிலவேளை நடைபெறலாம். அதாவது ஒரு மரத்திலிருக்கும் பழுத்த பழம் தானாக கீழே விழுவது போல் காமமும் தனது முதிர்வில் மனித மனித்திலிருந்து உடலிலிருந்து விலகிவிடலாம். ஆல்லது அவ்வாறு நடைபெறாதும் விடலாம். ஆப்படி நடைபெறாது விடுவதனால் எந்த மனிதரும் மனித நிலையில் இருந்து ஒருபோதும் குறைந்துவிடப்போவதில்லை. ஏனனில் காமம் இயற்கையான ஒரு சக்தி. மனிதரில் காமம் இருப்பதில் தவறேதும் இல்லையே. இரண்டாவது வழி குழந்தைகளை சிறு வயதிலையே மத வழிப்பாட்டு சடங்குகளில் பின்பற்ற நீர்ப்பந்திப்பதும் துறவற வாழ்க்கைக்கு அவர்களை அனுப்பிவிடுவதும் நிறுத்தப்படவேண்டும். குறிப்பாக இது சிறுவர் மீதான மனித உரிமை மீறல்களாக கணிக்கப்பட்டு தடுக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான் மத குருமாரின் பாலியல் துஸ்பிரயோகங்கள் குறைவதற்கான சாத்தியங்கள் ஏற்படுவது மட்டுமல்ல அவர்களும் தமது உடல் மற்றும் மன தேவைகளின் அடிப்படையில் நியாயமான பாலியல் உறவுகளில் ஈடுபடலாம். அவ்வாறு ஈடுபடுவதும் தவறாக பார்க்கப்படுவது தவிர்க்கப்படும்.

காமம் பாலியல் உறவு ஒரு பிரச்சனை

காமம் அழகானது. ஆந்த உணர்வு அற்புதமானது. இதமானது. இன்பமானது. இந்த அனுபவமானது காமத்தையும் அதனால் உருவாகும் பாலியல் உறவையும் உண்மையாகவும் ஆத்மார்த்மாகவும் பிரக்ஞையாகவும் செயற்படுத்தும் போது மட்டுமே சாத்தியமானது. காமம் ஒன்றும் அசிங்கமானதல்ல. மறைக்கப்படவேண்டிய ஒரு உணர்வும் அல்ல. குற்ற உணர்வால் கூனிக்குறுகி நிற்கப்படவேண்டிய ஒரு செயற்பாடும் அல்ல. ஆனால் அனைத்து அல்லது பெரும்பாலான மனிதர்கள் தமது அல்லது பிறரது காம உணர்வை குற்றவுணர்வுடன் தயக்கத்துடன் கூனிக் குறுகியே பார்க்கின்றனர், அனுபவிகக்கின்றனர். அவ்வாறு ஏன் செய்கின்றனர் என்பதற்கான பதிலைக் கண்டறிவதன் மூலம் காமம் மற்றும் பாலியல் உறவுகளை சுற்றியிருக்கும் மர்மங்களும் பிரச்சனைகளும் நீர்த்துப்போவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இவ்வாறு செய்வதன் மூலமே மனிதர்கள் காமம் மற்றும் பாலியல் உறவு தொடர்பான ஒரு ஆரோக்கியமான பார்வையை கொள்வதுடன் அதை முழுமையாக குற்றவுணர்வின்றி அனுபவித்து நிறைவேற்றலாம். அல்லது வழமையைப்போல் இயந்திரத்தனமாக பார்த்தும் செய்தும் தமக்கும் பிறருக்கும் பாதகமான நிலைமைகளைத் தோற்றுவிக்கலாம் . தெரிவு எங்கள் முன் இருக்கின்றது. தெரிவு செய்வதா இல்லையா என்பதும் ஒவ்வொரு மனிதரதும் உரிமை. ஆனால் நமது தெரிவுகளுக்கு அமைய அதற்கான விளைவுகளும் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்வது நன்று. ஆனால் காமம் மற்றும் பாலியல் உறவு தொடர்பான ஆரோக்கியமான தெரிவை மனிதர்களால் செய்யமுடியாது இருப்பதற்கு காரணம் என்ன?

காம உணர்விற்கும் பாலியல் உறவுகளுக்கும் எதிரான சமூக அடக்குமுறை தான் இதற்க்குக் காரணம் என்றால் மிகையல்ல. இந்த அடக்குமுறைக்கு நீண்ட கால வரலாறும் உள்ளது. இந்த வரலாறு நிச்சயாமாக ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டிய ஒன்று. இதன் மூலம் பல தனிமனிதர்களின் உளவியல் பிரச்சனைகளை கண்டறிவது மட்டுமல்ல அதற்கான தீர்வுகளையும் கண்டறியலாம். இதன்மூலம் ஒரு ஆரோக்கியமான நலமான சமூகத்தை கட்டி எழுப்பலாம். ஆனால் ஆணாதிக்கம் (patriarchy) சமூகம் ஒருதார மணத்தையும் (monogamous) இருபால் ஒரு மண உறவையுமே (heteronormative) சரியானது என கட்டமைத்து அமுல்படுத்தி வருகின்றது. இதற்கு அப்பாற்பட்ட எந்த உறவுகளையும் அங்கிகரிப்பதோ மதிப்பதோ இல்லை. மாறாக ஒரு தார ஒரு வழி இருபால் ஒரு மண உறவுக்கு அப்பாற்பட்ட அணைத்தையும் அடக்கி ஒடுக்குகின்றது.. இது குறிப்பாக பல வழிகளில் ஆண்களுக்கு சாதாகமாகவும் நன்மையளிப்பதாக இருந்தாலும் காம உணர்வின் இன்பத்தையும் பாலியல் உறவையும் உண்மையாகவும் அதன் ஆழத்திற்கும் அனுபவிப்பதையும் பொறுத்தவரை அனைவருக்கும் பாதகமானதே. மேலும் பிற அல்லது ஓரின பால் உறவுகளை (homosexual) மேற்கொள்பவர்களும் மற்றும் பிற பால் அடையாளங்களைக் (trans) கொண்ட அரவாணிகள் போன்ற மனிதர்களுமே இதனால் பாதிப்படைபவர்கள். குறிப்பாக உலகத்தின் சரிபாதி மனித வர்க்கமான பெண்கள் இதனால் பல வழிகளில் இன்றுவரை மிக மோசமாக பாதிக்கப்பட்டுவருகின்றனர். இதற்கு ஆணாதிக்க இருபால் உறவு கொண்ட ஒருதார மண வழி சமூகம் (heteronormative patriarchal society) தனது பல்வேறுவகையான சமூக நிறுவனங்கள் மற்றும் வழிகளின் மூலமாக நடைமுறைப்படுத்துகின்றது. இந்த அடக்குமுறையையும் அது தொடர்பான கருத்தியல் கட்டமைப்பையும் மனிதர்களின் குழந்தை பருவத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. குழந்தைகளை கட்டுப்படுத்தி நெறிப்படுத்துவதன் மூலம் செயற்படுத்துகின்றது. மேலும் காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பான அறிவுத் தேடல்கைளை அழித்து அல்லது ஒழித்து பொய்யான அல்லது தவறான அறிவை கட்டமைத்து பரப்புரை செய்வதன் மூலமும் நிலைநாட்டுகின்றது. இவற்றுக்கு எல்லாம் மேலாக பெண்களை அடக்குவது மட்டுமல்ல அவர்கள் தொடர்பான மாயையை கட்டமைப்பதன் மூலம் அவர்களை ஆண்கள் மட்டும் பயன்படுத்த கூடியவாறு பாலியல் பொருட் பண்டங்களைப்போல (sexual objects) உருவாக்கி உள்ளது. அதேவேளை மறுமுனையில் பிரம்மச்சாரியம் என்பதை சமூகத்தில் உயர்நிலையில் வைத்திருப்பதன் மூலம் காமம் தொடர்பான உண்மைக்குப் புறம்பான யாதார்த்தமில்லாத சடங்குகளை மேற்கொண்டு மனிதர்களை கட்டுப்படுத்துகின்றது. இப்படி பலவற்றை இந்த ஆணாதிக்க சமூகம் தன் சமூக சாதிய சமய கட்டமைப்பைக் காப்பதற்காக செய்கின்றனது. இந்த அடக்குமுறைகளும் கருத்தாதிக்கமும் காலம் காலமாக கேள்வியின்றி பின்பற்றப்பட்டு வருவதால் நமக்குள் ஆழமாக பதிந்துள்ளன. காமம் பாலியல் உறவுகள் தொடர்பான ஆணாதிக்க சமூகத்தின் சிந்தனைகள் தவறானது என்ற சிந்தனைக்கே இடம் இல்லாதவாறு நமது எலும்பு மச்சைகள் வரை இந்த கருத்துக்கள் சென்றுள்ளன. ஆகவே நாமும் எந்தவிதமான கேள்வியின்றி பின்தொடர்கின்றோம் மந்தைக் கூட்டங்களாக….

தொடரும்

http://meerabharathy.wordpress.com/2010/08/10/%e0%ae%95%e0%ae%be%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமம், பாலுறவுகள், சமூகம் மற்றும் குழந்தைகளும், வாலிப வயதினரும் – ஒரு பார்வை- பகுதி 2

மீராபாரதி

குழந்தைகளை நெறிப்படுத்தல்: இயந்திர மனிதர்களை உருவாக்கல்….

நாம் குழந்தைகளாக இருக்கும் பொழுது நமது மனம் தூய்மையானதாக கள்ளம் கபடம் இல்லாது இருக்கின்றது. இக் காலங்களில் குறிப்பாக இரண்டு மூன்று வயதுகளில் பயம் தயக்கம் என்பன குழந்தைகளுக்கு இருப்பதில்லை. நமது உடல் என்ன கூறுகின்றதோ அது படி நடப்பதும் பின் அந்த அனுபவமே அறிவாக நம் தூய மனதில் உருவாகின்றது. மேலும் நம்மை சுற்றியிருக்கும் சூழலில் நடைபெறுகின்றவையும் அதனுடனான நமது உறவும் மற்றும் அதன் மூலம் கிடைக்கின்ற அனுபவங்களும் நமது அறிவாக அதிகரிக்கின்றது. இந்த அறிவின் வழியில் பயமின்றி தயக்கமின்றி குழந்தைகள் செயற்படுவார்கள் மற்றும் எதிர்வினையாற்றுவார்கள். ஆனால் குழந்தைகள் இயல்பாக எந்தக் குற்றவுணர்வுகளுமின்றி ஆனந்தமாக செய்பவற்றை, நம்மை சுற்றியிருக்கும் நமது குடும்பம் பாடசாலை மதம் சமூகம் குறிப்பாக நமது பெற்றோர் அச் செயற்பாடுகளுக்கு, தண்டனைகள் அளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தி நம்மை தமது சமூகத்திற்கு ஏற்றவகையில் நெறிப்படுத்துகின்றனர். இங்கு பெற்றோரை குறை கூறுவதோ அல்லது அவர்களில் குற்றம் காண்பதோ நோக்கம் அல்ல. காரணம் அவர்களது அறியாமை மட்டுமல்ல அவர்களும் அவ்வாறே வளர்க்கப்பட்டனர். அவர்களும் தமது வளர்ப்பு முறையை கேள்விகேட்காததுடன் தொடர்ந்தும் அவற்றை நம்பி பின்பற்றி வருவது மட்டுமல்ல தமது குழந்தைகளுக்கும் அதை அமுல்படுத்துகின்றனர். இவ்வாறு ஒரு குழந்தையின் மனம் மாசுபடுத்தப்படுகின்றது. அவர்களது செயற்பாடுகள் இயந்திரதனமானவையாக்கப்டுகின்றன.

குழந்தைகள் தமது உடல் உறுப்புக்களை குறிப்பாக ஆண் குழந்தைகள் ஆண்குறியுடனும் அல்லது பெண் குழந்தைகள் பெண்குறியுடனும் அல்லது உடலின் எந்தப் பகுதியை தொட்டால் சுகம் தருகின்றதோ அதனுடன் விளையாடுவார்கள். இது அவர்களுக்கு உடல்சார்ந்த இன்பத்தை சுகத்தை அளிக்கின்றது. அவர்களைப் பொறுத்தவரை இது ஒரு உடல்சார்ந்த இன்பம். தாயுடனோ தகப்பனுடனோ கட்டிப்பிடித்திருக்கும்போது ஏற்படும் இன்பம் போன்றதே இதுவும். இது பாலியல் இன்பம் சார்ந்ததாக இருக்கலாம் ஆனால் காமமல்ல. ஆனால் சமூகத்தால் நெறிப்படுத்தப்பட்டு காம மற்றும் பாலியல் உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்டு (socially conditioned) வயதால் மட்டும் வளர்ந்த மனிதர்களின் பார்வையில் இக் குழந்தைகளின் செயற்பாடுகளை காமம் சார்ந்த செயற்பாடாகவே பார்ப்பதற்குத் தோன்றும். இந்த மனிதர்களின் அதாவது குறிப்பாக பெற்றோரின் உடனடி செயற்பாடு அக் குழந்தைகளை அவ்வாறு செய்யாது தடுப்பதேயாகும். குழந்தைகள் மாபெறும் தவறு செய்வதைப்போல அவர்களின் கைகளை அந்த உறுப்பிலிருந்து சடுதியாக தட்டிவிடுவார்கள். இந்த சடுதியான செயற்பாட்டினால் குழந்தைகளின் மனம் உளவியல் அடிப்படையில் பாதிக்கப்படுகின்றது. தாம் ஏதோ தவறுவிட்டவர்களாக உணர்வார்கள். ஆனால் அந்த உறுப்பை தொடுவதனால் ஏற்படும் இன்பத்தை அவர்கள் அனுபவிக்க விருப்புவதால் தொடர்ந்தும் தொடுவார்கள். அதனுடன் விளையாடுவர்கள். ஆனால் குழந்தைகள் தொடர்ந்தும் அவற்றுடன் விளையாடுவதை தடுப்பதற்காக பெற்றோர்கள் அல்லது வளர்ந்தவர்கள் தண்டனைகள் வழங்க ஆரம்பிப்பார்கள். குழந்தைகள் என்ன செய்வார்கள்? தாம் அந்த உறுப்புகளுடன் விளையாடுவது பெற்றோருக்கு பிடிக்கவில்லை என்பதை குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். ஆனால் அவர்களுக்கு அது இன்பம் அளிப்பதால் களவாக செய்வதற்கு ஆரம்பிப்பார்கள். இதனால் தாம் ஏதோ களவு செய்வது போன்ற ஒரு குற்ற உணர்வும் அவர்களை பற்றிக்கொண்டுவிடும். இது இவர்களிடம் உளவியல் அடிப்படையிலான உள் முரண்பாட்டை உருவாக்கிவிடும் (internal conflict or cognitive dissonance).

இவ்வாறான உள்முரண்பாடு (internal conflict or cognitive dissonance) குழந்தைகளின் பால்தன்மையை அடையாளமிடுவதிலும் உருவாகின்றது. குறிப்பாக குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களது வெளி பால் உறுப்புகைளை அடிப்படையாகக் கொண்டு ஆண் அல்லது பெண் என அவர்களது பால் அடையாளம் இடப்படுகின்றது. தொடர்ச்சியாக இந்த வேறுபாடானது அக் குழந்தைகளுக்கு தெரிவு செய்யப்படும் உடைகளிலும் அதற்கான நிறங்களிலும் வித்தியாசமான வேறுபாட்டை உருவாக்கி இரு பால்களும் வேறுவேறானவர்கள் என்றும் எதிர் பால் தன்மைகளுடையவர்கள் என கட்டைத்துவிடுகின்றது. இதற்காக அவர்களது உடல் தன்மைகள் மற்றும் செயற்பாடுகளையும் வரையறை செய்வதன் மூலம் இயல்பான தன்மைகளையும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றன. இதனால் சில அல்லது பல குழந்தைகள் தமது ஆண் மற்றும் பெண் பால் அடையாளங்களுக்கு அப்பாற்பட்ட இயற்கையான பால் அடையாளங்களை இழந்துவிடுகின்றன அல்லது மறைத்துவிடுகின்றனர். இவ்வாறு ஒரு மனிதரை அவரது குழந்தைப்பருவத்திலையே தனது உடலுக்கு எதிராக பல்வேறு வழிகளினுடாக குறிப்பாக பெற்றோர் மூலமாக இந்த சமூகம் திருப்பிவிடுகின்றது. இதன் மூலம் முதன்முறையாக அக் குழந்தை உளவியல் அடிப்படையில் முடமாக்கப்படுகின்றார். இதனால் உருவாகும் உளவியல் பிரச்சனைகளை அவர்களது வாழ்க்கை முழுக்க எதிர்கொள்கின்றனர். இது தொடர்பாக இனியொரு வெளியிட்ட மூன்றாவது பால் அடையாளத்திற்கான அங்கீகாரம் இப் பிரச்சனை தொடர்பானதே.

இதன் தொடர்ச்சியாக பிற அல்லது “எதிர்” பாலுடனான குழந்தைகளின் உறவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. அதாவது குழந்தைகளின் குற்றவுணர்வற்ற வக்கிரமற்ற இயல்பான “அம்மா அப்பா” விளையாட்டுக்கள் தவறானவையாகப் பெற்றோர்களாலும் வயதால் வளர்ந்தவர்களாலும் பார்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. கட்டுப்படுத்த முடியாதபோது தண்டிக்கப்படுகின்றன. இது பிற அல்லது எதிர் பாலுக்கு எதிரான உணர்வுகளையும் அதேவேளை கவர்ச்சியையும் அக் குழந்தையில் உருவாக்கிவிடுகின்றது. மறுபுறம் வயதால் வளர்ந்த மனிதர்கள் சிலர் இக் குழந்தைகளை தமது காம உணர்வின் தேவைகளுக்காக பயன்படுத்துவதன் மூலம் பாலியல் அடிப்படையிலான துஸ்பிரயோகம் செய்கின்றனர். இதுவும் அக் குழந்தைகளில் உளவியல் ரீதியான பாதிப்பை உருவாக்கின்றது எனக் கூறுகின்றனர். உதாரணமாக சுய மதிப்பீடு (self-esteem) மீதான தாக்கம் மற்றும் மனஅழுத்தம் (PTSD) போன்றன ஏற்பட காரணமாகின்றது. சமூகத்தில் நடைபெறும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அப்பால் சிக்மன்பிரைட் (Sigmund Freud) கூறும் பால் உறுப்புகள் தொடர்பான குழந்தைகளின் உளவியலும் (உதாரணமாக: oedipus complex) குழந்தைகளில் மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இத்துடன் இக் குழந்தைகள் அனுபவிக்கும் வறுமை கல்வியின்மை மற்றும் சுய பால் (sex) மற்றும் மனித பால் தன்மை (gender) அடையாளங்கள் போன்ற பிரச்சனைகளும் இக் குழந்தைகளில் உளவியல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான அனுபவங்களை நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் அனுபவித்திருப்போம். இதை யாரும் மறுக்கமுடியாது. ஏனனில் நாம் வாழுவது ஆணாதிக்க இருபால் உறவின் மேலாதிக்கம் (patriarchal heteronormative hegemony) நிலவுகின்ற ஒரு சமூகம்.

இந்த சமூகத்தில் காமம் பாலியல் மற்றும் அது தொடர்பான அறிவுகளும் மற்றும் பெண்களுடன் சாதாரண அல்லது பேராசிரியர் ஸ்டேரிலிங் (Anne Fausto-Sterling) குறிப்பிடும் பொதுவான சமூகத்திற்கு (normative society) அப்பாற்பட்ட பால், பால் தன்மை மற்றும் பாலியலுறவு அடையாளங்களை (identites) கொண்ட பிற மனிதர்களும் (hem. mem, trans, gays, lesbians, and bisexuals) என அனைத்தும் அடக்கப்படுகின்றன. இந்த மனிதர்கள் சாதாரண சமூகத்திற்கு (normative society) ஏற்றவாறு நெறிப்படுத்தப்பட்டு பொதுவான அடையாளங்களான ஆண் (man) பெண் (woman) ஆண்மை (masculine) பெண்மை (feminine) என்பன இரு துருவங்களாகக் கட்டமைக்கப்பட்டு (constructed) அமுல்படுத்தப்பட்டு வழிநடாத்தப்படுகின்றனர். உண்மையில் பெரும்பாலன மனிதர்கள் சமூகம் கட்டமைத்தவாறு இரு துருவங்களாக இல்லை (not polar opposite). மாறாக இந்த எதிர் துருவங்களுக்கு இடைப்பட்ட தொடர்ச்சியின் (continuum) பல இடங்களில் இருக்கின்றனர் என யூடித் பட்லர் (Judith Buttler) போன்ற பல பெண்ணியவாதிகள் வாதிடுகின்றார்கள். ஆனால் இந்த சமூகமானது மனிதர்களின் பாலியலுறவானது இரு துருவங்களிலும் இருக்கின்ற ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையில் மட்டுமே நடைபெறுகின்ற (heteronormative) ஒரு உறவாகவும் அதுவே இயற்கையானது என்றும் மேலதிகமாகவும் ஒன்றைக் கட்டமைக்கின்றது. இதன் மூலம் மனிதர்களின் விருப்பங்கள் ஆசைகள் கூட ஒழுங்கமைக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. அதேவேளை இத் துருவங்களிக்கிடையில் இருக்கின்ற மனிதர்களை இத் துருவங்களை நோக்கி நகர்த்துகின்றனர் அல்லது அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு புறக்கணித்து அடக்கப்படுகின்றனர் அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக கணிக்கப்பட்டு இல்லாத ஒரு நோய்க்கு வைத்தியம் பார்க்கின்றனர். இவற்றையெல்லாம் மேற்கொள்வதற்கு பூக்கோ (foucault) கூறுவது போல் பல்வேறு ஆணாதிக்க சமூக நிறுவனங்களான குடும்பம், பாடசாலை, சமயங்கள், இராணுவம், மற்றும் சிறைச்சாலைகள் மூலமாக நிறைவேற்றுகின்றன. இதனால்தான் பெண்ணியவாதிகள் ஆணாதிக்க சமூகத்தைக் கட்டிக்காப்பதில் ஒருதார இருபாலுறவு (monogamous heteronormative relationship) மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது எனக் கூறுகின்றனர். உதாரணமாக எழுத்தாளர் இளங்கோ (DSe) தனது வலைப்பதிவில் சுமார் 660 000 அமெரிக்க இராணுவத்தினர் தமது பாலியல் தன்மைகளை மறைத்து வாழ்கின்றனர் என குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. அதாவது ஜனநாயகம் மற்றும் பாலியல் சுதந்திரம் ஒப்பிட்டளவில் இருப்பதாகக் கூறப்படும் வட அமெரிக்காவிலையே இப்படியான நிலைமை எனின் பிற நாடுகளின் நிலைமைகளை உணர்ந்து கொள்ளலாம்.

குழந்தைகளாக இருந்த காலத்தில் தமது பாலியல் தொடர்பான எதிர்மறை அனுபவங்களைக் பெற்ற குழந்தைகள் வளர்ந்து வாலிப வயதை அடைந்தவுடன் மேலும் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இயற்கையாக இவர்களுள் எழும் காம சக்தி அவர்களை உடல் மன ரீதியாக அலைக்கலைக்கின்றது. ஆனால் மறுபுறம் சமூகத்தால் உருவாக்கப்பட்ட பயம் மற்றும் தண்டணைகள் மூலம் அது கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. ஆகவே காமத்தின் தேவையை பூர்த்தி அல்லது திருப்தி செய்வதற்கு தமது அறிவுக்குட்பட்ட சரியான அல்லது தவறான குறுக்கு வழிகளை கண்டுபிடிக்கின்றனர் அல்லது செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர். முதலாவது சுயஇன்ப (masturbation) செயற்பாட்டில் ஈடுபடுதல். இதில் பெரும்பாலும் ஆண்களே அதிகமாக ஈடுபடுகின்றனர். ஆனாலும் ஒரு குற்றவுணர்வுடன் களவாகவே இந்த செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். இதற்கு மறுதலையாக பெரும்பாலான பெண்கள் அவ்வாறான குற்றவுணர்வுடன்கூட சுய இன்ப செயற்பாட்டில் பொரும்பாலும் ஈடுபடுவதில்லை. குறிப்பாக ஆண்களைப் போல் அல்லாது பெண்களுக்கு இது தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்கு பல சமூகத் தடைகள் இருக்கின்றன. ஆகவே இது தொடர்பான அறியாமையிலையே தமது காலத்தை பெரும்பாலும் இவர்கள் கழித்துவிடுகின்றனர். சுய இன்பதிற்கு மாறாக அல்லது மேலாக காதல் என்ற முகமுடியும் காமத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இளம் வயதில் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் காதல் என்பது கூட பல சமூகங்களில் தவறாகப் பார்க்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றது. சில சமூகங்களில் காதல் செய்வதற்காக மனிதர்கள் தண்டிக்கவும் படுகின்றனர். காதல் செய்கின்றேன் என்று கூட கூறமுடியாத ஒரு சமூகத்தில் காமத்தின் தேவையை எப்படி கூறுவது அல்லது பூர்த்திசெய்வது. விளைவு காம உணர்வுகளும் அதன் சக்திகளும் அடக்கப்படுகின்றன அல்லது வேறு செயற்பாடுகள் மூலம் திசைதிருப்படுகின்றன. அல்லது நேரடியாக அனுகாது மறைமுகமான அல்லது சுற்றிவளைத்து மாற்று வழிகளில் தமது காமம் மற்றும் பாலியலுறவுக்கான தேவைகளைப் பெறுவதற்கு மனிதர்கள் குறிப்பாக ஆண்கள் முயற்சிக்கின்றனர். இதனால் தமக்கும் பிற மனிதர்களுக்கும் தேவையற்ற பிரச்சனைகளையும் வேதனைகளையும் ஏற்படுத்துகின்றனர். இதன் தொடர்ச்சியாக பாலியல் துஸ்பிரயோகங்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகளிலும் ஈடுபடுகின்றனர். ஆண்களின் இவ்வாறன தன்மைகள் இயற்கையானதா அல்லது சமூகத்தால் கட்டமைக்கப்பட்டதா என்பதில் பல கருத்துவேறுபாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களின் இந்த தன்மையானது ஆண்களுக்கு பாலியல் ரீதியாக சாதகமானதாகவும் பெண்களுக்கு எதிரானதாகவும் இருக்கின்றது. ஏனனில் பெண்கள் பொதுவாகவே தம் உணர்வுகளை தேவைகளை அடக்கி அல்லது அவற்றைப் பற்றிய புரிதல் இல்லாது அல்லது புரிதல் இருப்பினும் நிவர்த்திசெய்ய வழி இல்லாது அமைதியாக வாழ பழகிக் கொள்கின்றனர் அல்லது அவ்வாறு வாழ்வதே சரியானது என கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்டுள்ளனர்.

மனித காம சக்தி 14 வயதிலிருந்து 21 வயதுக்குள் அதன் உச்சத்தை அடைவதாக கூறுகின்றனர். ஆனால் இந்த ஆணாதிக்க இருபால் உறவு கொண்டதும் மற்று காமத்திற்கு எதிரானதுமான சமூகத்தால் குறிப்பாக ஆசிய அல்லது மேலும் குறிப்பாக தென்னாசிய சமூகங்களில் இந்த சக்தி அதன் தேவையை அனுபவிக்காது விரயமாக்கப்படுகின்றது. இச் சமூகங்களில் உள்ள ஆண்களைப் பொறுத்தவரை கல்வி கற்று வேலை ஒன்று எடுத்தபின் குடும்பபொறுப்புகளையும் பூர்த்திசெய்த பின் திருமணம் மூலம் காமம் தனது இறங்குமுகத்தில் இருக்கும் தருணத்தில் காமத்தின் தேவையை பூர்த்தி செய்ய இந்த சமூகம் அனுமதிக்கின்றது. இதில்கூட காமத்தின் மீதான அக்கறை என்பதைவிட தலைமுறை அதாவது சந்ததியை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டே காமம் அனுமதிக்கப்படுகின்றது. இதனால்தான் திருமணம் முடிந்து ஒன்பதாவது மாதத்தில் குழந்தை ஒன்றை இந்த சமூகம் எதிர்பார்க்கின்றது. ஆம் திருமணம் செய்தவர்களின் முதல் கடமை குழந்தை பெறுவது. அவ்வாறு குழந்தை பெறாதவர்கள் தொடர்பாக ஒரு எதிர்மறை பார்வையையும் இந்த சமூகம் கொண்டுள்ளது. இவ்வாறு சமூகம் தனக்குள்ளேயே முரண்பாடுகளை கொண்டுள்ளது. மறுபுறம் இளம் வயதில் பெண்களை திருமணம் செய்துகொடுப்பதால் அவர்கள் காமத்தின் இன்பத்தை அனுபவிக்கின்றார்கள் என்பதல்ல. மாறாக பெண்கள் ஆண்களைவிட மிகமோசமான எதிர் மறை அனுபவங்கைளை தமது காம மற்றும் பாலியலுறவு தொடர்பாக பெறுகின்றனர். இதுபற்றி விரிவாக மூன்றாவது பகுதியில் பார்ப்போம்.

காமத்தை காமத்திற்காக அதன் ஆனந்தமான அனுபவத்திற்காக அதன் இன்பத்திற்காக அனுபவிப்பதை அனுமதிப்பதற்கு இந்த சமூகத்தில் பெரும் தயக்கம் இருக்கின்றது. இது எதனால்? ஆணாதிக்க சமூக கருத்தியலினாலா? ஆண்களினால் உருவாக்கப்பட்ட சமய நிறுவனங்களின் ஆதிக்கத்தினால்? ஆல்லது இருபால் உறவையும் ஒருதார திருமணத்தையும் நடைமுறையில் கட்டிக்காப்பதற்காகவா? அப்படி எனின் பாலியல் தொழிலாளர்கள் அதிலும் குறிபாக பெண் பாலியல் தொழிலாளர்கள் ஏன் தேவைப்படுகின்றனர்? இவர்களது சேவை யாருக்குத் தேவை? மறுபுறம் இதன் மூலம் நன்மை பெறுகின்றவர்கள் அப் பாலியல் தொழிலாளர்களை அவமதிப்பதும் அடக்கி ஒடுக்குவதும் ஏன்? இப்படி பல கேள்விகள் உண்டு. அதேவேளை காமம் தொடர்பான தேடல்களும் அது முக்கியத்துவமானது என்பதற்கான ஆதாரங்களும் வரலாற்றில உள்ளன. அதேவேளை சமூகம் அதற்கு எதிரான செயற்பட்டதற்கான ஆதராங்களும் ஏன் அவ்வாறு செயற்படுகின்றது என்பதற்கான காரணங்களையும் ஆராய்ந்த பல ஆய்வுகளும் உள்ளன. ஆனால் இந்த அறிவுகள் எல்லாம் பெரும்பாலும் முடக்கப்பட்டே இருக்கின்றன. அல்லது தவறாக வெளிப்படுத்தப்படுகின்றன. இதனால்தான் பெண்கள் மற்றும் “பிற பால்” அடையாளங்களைக் கொண்ட மனிதர்கள், காமம் மற்றும் பாலியல் உறவுகளினால் தொடர்ந்தும் கஸ்டப்படுவது மட்டுமல்ல இந்த சமூகத்தால் தொடர்ந்தும் அவர்களது காமம் மற்றும் பாலியலுறவுகள் சுரண்டப்பட்டும் அடக்கப்பட்டும் வருகின்றன. இளமைப் பருவதத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் இவ்வாறன காமம் மற்றும் பாலியலுறவு தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்கு இதுதொடர்பான வெளிப்படையான கலந்துரையாடல்கள் நடைபெறவேண்டும். முதலில் சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட மனிதர்களின் பால் (sex), பால்தன்மை (gender) மற்றும் பாலியல் தன்மை (sexuality) அடையாளங்கள் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டும். ஒவ்வொரு மனிதரும் தான் உணர்கின்ற பால், பால்த்தன்மை மற்றும் பாலியல் தன்மை அடையாளத்துடன் வளர்வதற்கும் வாழ்வதற்குமான வழிலையும் சூழலையும் உருவாக்கவேண்டும். மேலும் ஒரு மனிதருக்கு இன்னொரு மனிதர் மீது ஏற்படும் விருப்பத்தை தெரிவிப்பதற்கான தைரியமான மனநிலையையும் மனிதர்களிடம் ஏற்படுத்தவேண்டும். அதேவேளை மற்ற மனிதர் தனக்கு விருப்பமில்லை எனக் கூறுவராயின் அதை புரிந்துகொண்டு ஏற்கும் பக்குவத்தையும் மனிதர்களிடம் வளர்க்கவேண்டும். இதற்கான சாதகமான நேர்மைறையான சூழலை ஒவ்வொரு சமூகமும் உருவாக்கவேண்டும். அப்பொழுது பெரும்பாலான மனிதர்கள் ஆரோக்கிமாக வளர்வதற்கும் வாழ்வதற்குமான பிற மனிதர்களையும் அவர்களது உரிமைகளையும் மதிப்பதற்கான சாத்தியங்கள் உருவாகலாம்.

http://meerabharathy.wordpress.com/2010/08/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பல காரணணங்களை கூறலாம். அடிப்படையில் மனிதர்கள் தமது காம அல்லது பாலியல் தேவையை பூர்த்திசெய்தபின்பே உயர் நிலையை அடையலாம். இதற்கு புத்தர் போன்று பலர் உதாரணங்களாக இருக்கின்றனர்.

காமத்தை பற்றி எழுதினாலும் புத்தரை புகழ்கிறாங்கள்,அரசியல் என்றாலும் புத்தரை பற்றி புகழ்கிறாங்கள் .......புத்தர் பயங்கர சுழியன் போல இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமத்தை பற்றி எழுதினாலும் புத்தரை புகழ்கிறாங்கள்,அரசியல் என்றாலும் புத்தரை பற்றி புகழ்கிறாங்கள் .......புத்தர் பயங்கர சுழியன் போல இருக்கு

புத்தனைப் போலச் சுழியனாக இருக்கவேண்டும் என்றுதானே பேர் வைத்தீர்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

காமத்தை பற்றி எழுதினாலும் புத்தரை புகழ்கிறாங்கள்,அரசியல் என்றாலும் புத்தரை பற்றி புகழ்கிறாங்கள் .......புத்தர் பயங்கர சுழியன் போல இருக்கு

உங்கள் "சுழியன்" கதையிலேயே சொல்லியிள்ளீர்களே!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமம், ஆண்கள், (ளின்) சமூகம், பாலியலுறவுகள் மற்றும் பெண்கள் – ஒரு பார்வை- பகுதி 3

மீராபாரதி

பெண்களின் காமம் சக்தியும் மற்றும் அது தொடர்பான அறிவின் மீதான அடக்குமுறைகளும்!

ஆணாதிக்க சமூகத்தில் ஆண்களின் காம உணர்வின் தேவையை பூர்த்தி செய்யும் பாலியல் பொருட்களாகவே பெண்கள் பார்க்கப்பட்டுவருகின்றனர். அதேவேளை பொதுவாக பெண்களும் ஆண்களுக்கு சேவை செய்யவும் மற்றும் அவர்களை கவர்வதை நோக்கி தம்மை அழகுபடுத்தவுமே பயிற்றிவிக்கப்பட்டுள்ளார்கள் என பெண்ணியவாதிகள் வாதிடுகின்றனர். இதன் ஆரம்பமம் பெண்கள் குழைந்தைகளாக இருக்கும் பொழுதுதே ஆரம்பித்துவிடுகின்றது. அதாவது ஒரு பெண் (குழந்தை) எப்படி இருக்கவேண்டும், நடக்கவேண்டும், உடை உடுத்தவேண்டும், என அதன் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகளும் என பயிற்றுவிக்கப்படுகின்றது. மேலும் தாயியுடன் வீட்டுவேலைகளில் பங்குகொள்ள நிர்ப்பந்திக்கும் அதேவேளை ஆண்களை அதிலிருந்து விடுவித்தும்விடுகின்றனர். இதற்கும் மேலாக ஆண் குடும்ப அங்கத்தவாகளுக்கு குடும்பத்தில் முதலிடமும் கொடுப்பதும் பெண் குடும்ப அங்கத்தவர்கள் அவர்களுக்கு பணிவிடையும் செய்வது சாதாரண சமூக பழக்கவழக்கமாக ஏற்றுக்கொள்கின்ற அளவிற்கே சமூகங்களின் பண்பாடு கலாசராங்கள் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக பெண்களின் முதல் மாதவிடாய் வெளிவந்தவுடன் அந்த செய்தியை, தம் உறவுகளை அழைத்து பெரும் சடங்காக தென்னாசிய சமூகங்களில் மட்டுமல்ல புலம் பெயர் தமிழ் பேசும் சமூகங்களிலும் வெகு விமர்சையாக நடாத்தப்படுகின்றது. இதன் அர்த்தம் நம் வீட்டு பெண் பிள்ளைகள் குழந்தை பெருவதற்கு தயார் என்றும் பெண் கேட்டு வாருங்கள் என உறவுகளுக்கு அழைப்பு விடுவிக்கும் ஒரு சடங்காகவே பாரம்பரியமாக பின்பற்றபட்டுவந்திருக்கின்றது. ஐரோப்பிய வட அமெரிக்க சமூகங்களிலோ இதற்கு மாறாக பெண்களுக்கு நடைபெறும் இந்த உடலியல் மாற்றமானது இரகசியமானதாகவும் அசிங்கமானதாகவும் பார்க்கப்படுவதாக இதுதொடர்பான பெண்ணிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதுபோன்று பெண்களின் காம உண்ர்வும் அதன் இன்பமும் அவர்களது பாலியல் தேவைகளும், சமூகத்தின் (ஆகவே ஆண்களின்), அக்கறைக்கு அப்பாற்பட்டவை மட்டுமல்ல, மாறாக அவை மிக மோசமாக அடக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அதேநேரம் பெண்கள் ஆண்களின் பாலியல் தேவைகளையும் திருப்தி செய்யவேண்டியுள்ளார்கள். இவ்வாறான நிலைமைக்கு, குறிப்பாக பெண்களது காம மற்றும் பாலியல் பாலியலுறவு தொடர்பான அறிவுகளும் அழிக்கப்பட்டு அடக்கப்பட்டு வந்தமையும் ஒரு காரணமாகும். இந்த அறிவுகளுக்கு மாறாக, ஆணாதிக்க இருபால் உறவு சமூகத்தால் தமக்கு ஏற்றபடி செயற்கையான பொய்மையான தகவல்களின் அடிப்படையில், இவை தொடர்பான கருத்துக்களை கட்டமைத்து, பெண்களை காம பாலியல் பொருட்களாக கட்டமைக்கவும் பயன்படுத்தவும் வித்திட்டிருக்கின்றன என சமூக ஆய்வாளர்களும் பெண்ணியவாதிகளும்; குறிப்பிடுகின்றனர். இதன் தொடர்ச்சியாகத்தான் பெண்களை போகப் பொருட்களாகப் பார்ப்பதும் மற்றும் அவர்களை வன்புணர்ச்சி செய்வதும், அடக்கி வைத்திருப்பதும் (ஆணாதிக்க) சமூகத்தில் சாதராண நிகழ்வுகளாக இருக்கின்றன.

பெண்களுக்கும் காம உணர்வினால் இன்ப நிலை (orgasm) ஏற்படும் என்பது மிக மிக அண்மைக் காலத்திலையே (மீள) கண்டுபிடிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்ட ஒரு விடயம் என்பது ஆச்சரியமானது. அதுவரை பெண்களுக்கு காமத்தினாலான இன்ப நிலை ஏற்படாது என்றே நம்பப்பட்டு வந்துள்ளதாக கூறுகின்றனர். இது ஒன்றே பெண்களது காம உணர்வு, பாலியல் உறவுகள் மற்றும் அதுதொடர்பான அறிவுகள் எந்தளவு மோசமாக அடக்கப்பட்டு வந்துள்ளன என்பதற்கான சாட்சியாக இருக்கின்றது. ஆனால் இந்தப் புதிய அல்லது மீளக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுகள் கூட இன்றைய தகவல் தொழில்நூட்ப புரட்சி காலத்தில் கூட விரைவாக அனைத்து மனிதர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கு சென்றடையவில்லை என்பது துர்ப்பாக்கியமானதே. அதற்கான காரணமும் கவனத்திற்கு உரியது. இது தொடர்பான ஆய்வுகளின்படி குறிப்பாக பெண்களது காம உணர்வினால் ஏற்படும் இன்பமானது (orgasm) அவர்களது கிளிட்டரஸ் (clitoris) பகுதியிலிருந்து யோனிப்பகுதிக்கு (vagina) மாற்றப்பட்டுள்ளது என பெண்ணியவாதிகள் கூறுகின்றார். அதாவது பெண்ணின் காம மற்றும் பாலியலுறவு இன்பமானது யோனிப் (vagina) பகுதியிலையே இருக்கின்றது என இந்த சமூகத்தால் கட்டமைக்கப்பட்டு நம்பப்பட்டு வந்துள்ளது. ஆனால் யோனி என்பது மறுஉற்பத்திக்கானதும் மற்றும் பெண்களினது உடல்சார்ந்த (மாதவிடாய் போன்ற) தேவைகளுக்கமான முக்கியமான ஒரு உடற்பகுதியே என்கின்றனர் பெண்ணியவாதிகள். இதற்கும் பெண்ணினது பாலியல் இன்பத்திற்கும் (orgasm) நேரடித்தொடர்பில்லை என்றும் கூறுகின்றனர். ஏனனில் பெண்களது கிளிட்டரஸ் பகுதியிலையே அவர்களது காம உணர்வு தொடர்பான இன்பத்தை (orgasm) அடைவதற்கான பகுதி அமைந்துள்ளது என்கின்றனர். இந்த கிளிட்டரஸ் (clitoris) பகுதியானது ஆண்களின் ஆண்குறியின் தலைப் பகுதியின் கீழ உள்ள பகுதிபோன்று பெண்களின் யோனிக்கு மேற்பாகத்தில் சிறிய தொப்பிபோன்று உள்ளது. ஆண்களுக்கும் இந்தப் பகுதியே மிகவும் காம உணர்வை அதிகம் உணர்த்தும் பகுதியாகும் என ஆய்வுகள் கூறுகின்றன. இந்தப் பகுதிகள் தொடர்பாக பொதுவாக ஆண்களும் பெண்களும் அறியாதவர்களாகவே இருக்கின்றனர். இக் கிளிட்டரஸ் (clitoris) பகுதி மூலம் ஆணின் துணையின்றி பெண் சுயமாக காம உணர்வை பூர்த்திசெய்யவோ அல்லது புணர்வுக்கு முன்பு தானாகவோ அல்லது தனது காதலரின் துணையுடனோ தனது உடலை பாலியல் உறவுக்கு புணர்வுக்கு தயார் செய்யமுடியும். ஆனால் வழமையான (குறிப்பாக குடும்ப) உறவுகளில் ஆண் பெண் இருவருக்குமான பாலியலுறவு நிலைமைகளில் இவ்வாறு நடைபெறுவதில்லை.

வழமையான ஆணாதிக்க சமூகத்தில் இருபால் உறவுகளில் புணர்வின்போது பெண்கள் பெரும்பாலும் காம சுகம் இன்பம் அனுபவிப்பதில்லை எனக் கூறப்படுகின்றது. காரணம் புணர்வுக்கு முன்பான பாலியல் அல்லது காம விளையாட்டுக்களில் (foreplay) இருவரும் ஈடுபடாமையே. குறிப்பாக முதலில் பெண்ணுக்கு உரிய பாலியலுறவுக்கு புணர்வுக்கு முன்னான பாலியல் விளையாட்டுக்களை (foreplay) ஆண் செய்யவேண்டிய அவசியம் உள்ளது. ஆனால் இது தொடர்பான இருவரதும் அறிவின்மை மற்றும் அக்கறையின்மையானது பாலியல் உறவை நோக்கிய வெறுப்புணர்வை குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுத்துகின்றது. ஏனனில் ஆண்களின் காம உணர்வு உருவாவதற்கான நேரமும் பாலியல் உறவில் புணர்வில் ஈடுபடுவதற்கு தம்மை தயார் செய்வதற்கான நேரமும் பெண்களுடன் ஒப்பிடும் பொழுது (மிக மிகக்) குறைவானது. அதாவது ஆண்களது உடல் குறைந்த நேரத்தில் பாலியல் புணர்வுக்குத் தயாராகிவிடுகின்றது. ஆனால் பெண்கள் ஆண்களை விட, தமது உடலை தயார் செய்யவதற்கு சிறிது அதிக நேரம் தேவைப்படும் நிலையில் உள்ளார்கள். இந்த இடைப்பட்ட நேரத்தில் அதற்குரிய சில வேலைகளை இருவரும் செய்யவேண்டி உள்ளது. அதன் பின்பே அவர்களது உடல் புணர்வுக்குத் தயாராகின்றது. இது இருவர்களது உடலியல் சார்ந்த ஒரு விடயம். இது பற்றிய புரிதலின்மையானது பல பிரச்சனைகளை குறிப்பாக பெண்களுக்கு ஏற்படுத்துகின்றது. ஏனனில் ஆணினது உடனடி தயார் நிலையும் அவனது அதிகாரமும் அதற்கு நேர் எதிரான பெண்ணினது தயாரின்மை, அதிகாரம் இன்மை மற்றும் தயக்கம், வெட்கம் போன்ற சமூகம் கட்டமைத்த பெண்களின் நிலைமைகளும் பல பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் உறவுக்குள் உருவாக்கின்றது. ஏனனில் பெண்களின் விருப்பத்தை அறியமாமல் மட்டுமல்ல அவர்களது உடல் தயார் இல்லாது இருக்கும்போதும் ஆண்கள் தம் பாலியல் தேவைகளையும் விருப்பத்தையும் தமது ஆணாதிக்க பண்புகளினால் உந்தப்பட்டு புணர்வதன் மூலம் நிறைவேற்றிக் கொள்கின்றனர். இதன் மூலம் ஆணிற்கு தற்காலிக சிற்றின்ப சுகம் கிடைக்கின்றது. ஆனால் பெண்ணிற்கு வலியும் வேதனையும் மட்டுமே கிடைக்கின்றது. இவ்வாறு ஆண்களால் மேற்கொள்ளப்படும் பாலியல் புணர்வுகள் அடிப்படையில் ஒரு வன்புணர்ச்சியாகும்.

பாலியல் வன்புணர்ச்சிகள் தொடர்பாக தனியாக ஒரு கட்டுரை எழுதுவதே நல்லது. இருப்பினும் இக் கட்டுரையின் தேவைக்கமைய வன்புணர்ச்சி நடைபெறும் சந்தர்ப்பங்களை மேலோட்டமாக மூன்று வகைப்படுத்தலாம். முதலாவது திருமண அல்லது குடும்ப உறவுக்குள் அல்லது காதலர்களுக்கு இடையில் நடைபெறுவது. இரண்டாவது போர்க்காலங்களில் எதிரி நாட்டு அல்லது தேசத்து பெண்களுக்கு எதிராக நடைபெறுவது. மூன்றாவது பொதுவாக ஆண்களால் குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்ட அல்லது பெண்களுக்கு எதிரான ஆண்களால் பரந்தளவில் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்புணர்வுகளாகும். இவற்றைவிட பாலியல் துன்புறுத்தல்களும் துஸ்பிரயோகங்களும் குறிப்பாக பெண்களுக்கு எதிராக (ஆணாதிக்க) சமூகங்களில் சாதாரணமாக நடைபெறுகின்ற நிகழ்வுகள். ஆனால் இக் கட்டுரை பாலியலுறவு மற்றும் வன்புணர்ச்சி தொடர்பாக மட்டுமே கவனத்தில் கொள்கின்றது.

முதலாவது, திருமண குடும்ப உறவுகளுக்குள், ஆண்களினால் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல்வன்புணர்ச்சி சமூகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கின்றது. ஏனனில் இது இவ்வாறான உறவுகளுக்குள் சாதாரண நடைபெறும் நிகழ்வாகவே பார்க்கப்படுகின்றது. இதனால்தான் திருணமபந்தம் என்பது கூட சட்ட ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு விபச்சாரம் நிறுவனம் என கூறுகின்றனர். ஏனனில், தமது ஆண்களின் காம உணர்வையும் பாலியல் தேவைகளையும் மட்டும் எந்த வருமானமுமில்லாது ஆனால் கடமையுணர்வுடனான ஒரு சேவையாக குடும்பங்களுக்குள் வாழும் பல பெண்கள் பூர்த்தி செய்கின்றார்கள். மறுபுறம் ஒரு பாலியல் தொழிலாளி பணத்தைப் பெற்றுக் கொண்டு செய்கின்றாள். இது மட்டுமே, இரு பெண்களுக்குமிடையிலான அடிப்படை வித்தியாசத்தை உருவாக்கின்றது. (இதை வாசித்துக்கொண்டிருக்கும் போதே, தம் சிந்தனையில் உடனடியாக மறுக்கின்ற ஆண் வாசகர்களிடம் ஒரே ஒரு கேள்வி உள்ளது. எத்தனை பேர் தாம் திருமணம் செய்த (அல்லது காதலிக்கும்) பெண்ணின் அனுமதியுடன் பாலியலுறவுக்கு செல்கின்றனர். எத்தனைபேர் குறிப்பாக பெண்ணுக்குத் தேவையான பாலியலுறவுக்கு புணர்வுக்கு முன்பான பாலியல் விளையாட்டுக்களை மேற்கொள்கின்றனர். எத்தனை பேர் உறவின் பின் தாம் உறவு கொண்ட பெண்ணிடம் உறவு திருப்தியாக சுகமாக இருந்ததா எனக் கேட்கின்றனர். இக் கேள்விகளை நீங்கள் தங்களிடம் கேட்ட பின்பு அதற்கான பதிலைக் கண்ட பின்பு தங்கள் மறுப்பை தராளாமாகத் தெரிவியுங்கள். அதுவரை தொடர்ந்தும் பொறுமையாக பிரக்ஞையுடன் வாசியுங்கள். நன்றி.) பிற பாலியல் வன்புணர்வுகளைவிட குடும்பங்களுக்குள் இவ்வாறான வன்புணர்வுகள் அதிகமாக நடைபெறுவது மட்டுமல்ல அவை வெளியே தெரியவருவதுமில்லை. இதற்கு சமூக ஆணாதிக்க கலாசாரங்களும் சமூக கட்டுமானங்களும் காரணங்களாக இருக்கின்றன. சில சமூகங்களில் ஆண் விரும்பும் நேரம் எல்லாம் பெண் பாலியலுறவுக்கு (அதாவது வன்புணர்வுக்கு) தயாராக இருக்கவேண்டும் என்பது எழுதாத சட்டங்களாகவே இருக்கின்றன. உறவுக்கு செல்ல மறுக்கும் பெண்களுக்கு பலவிதமான தண்டனைகளையும் சில சமூகங்கள் வழங்குகின்றன. மறுபுறம் பெண்களும் தமது குடும்ப வாழ்வு கௌரவம் அந்தஸ்து என்பவற்றைப் பாதுகாக்கவும் இவ்வாறான பிரச்சனைகளை பெரிதுபடுத்தாமலும் தம் கஸ்டங்களையும் வேதனைகளையும் மறைத்தும் அல்லது நடப்பவை சரியானவை என்றும் ஏற்றுக்கொள்கின்றனர். அல்லது இதுதான் (பெண்களின்) வாழ்வு என்று நம்பிக்கொள்கின்றனர். இவை பிழையானது என புரிந்துகொள்ளும் பெண்களுக்கு, இதைவிட்டு வெளியேறி தனியாக வாழ்வதற்கான நம்பிக்கையான சூழலும் அவர்களுக்கான ஆதரவும் நாம் வாழும் (ஆணாதிக்க) சமூகங்களில் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

இதனால், இவ்வாறன பாலியல் வன்புணர்வுகள் ஆகக்குறைந்தது குடும்ப சூழலுக்குள் அதாவது திருமண பந்தத்தற்குள் நடைபெறாது தடுப்பது எப்படி என சிந்திப்பது அவசியமானது. ஏனனில் முழுமையான சமூக மாற்றம் என்பது உடனடியாக சாத்தயமான ஒன்றல்ல. சமூக மாற்றம் ஒன்று நடைபெறும்வரை நம்மால் முடிந்த விடயங்களின் சிறு மாற்றங்களையாவது ஏற்படுத்துவது நன்மையானதும் ஆரோக்கியமானதுமாககும். இந்தடிப்படையில் குறைந்தது பாலியலுறவிலாவது பெண்கள துன்பப்படாமல் எப்படி வாழ்வது என்பதற்கான வழிகளைக் காணவேண்டும். இந்த ஆணாதிக்க சமூகத்தின் குடும்ப நிறுவனத்திற்குள் இணைந்து வாழும் ஆணும் பெண்ணும் மேற்குறிப்பிட்ட பாலியல் வன்புணர்ச்சிக்குப் பதிலாக, தமது காம உணர்வின் இன்பத்தை சமநிலையிலான அனுபவிக்க எவ்வாறான பாலியல் உறவில் ஈடுபடவேண்யுள்ளார்கள் என்பது பற்றி பார்க்கவேண்டிய தேவை உள்ளது. இதன் மூலம் பெண்கள் குறிப்பாக நாளாந்தம் முகங்கொடுக்கும் பாலியலுறவு தொடர்பான வேதனைகளை ஒரளவாவது குறைக்கலாம். சமநிலையிலான பாலியல் உறவிற்கு, ஒரு ஆண் தான் பாலியலுறவு கொள்ளப்போகும் பெண்ணுடன் புணர்வதற்கு முன்பாக பெண்ணிற்குரிய காம பாலியல் விளையாட்டுக்களில் (foreplay) முதலில் ஈடுபடவேண்டிய தேவையிருக்கின்றது என்பதை புரிந்துகொள்வது உறவுக்கு ஆரோக்கியமானது. ஏனனில் பெண்களது உடல் பாலியலுறவுக்கு இயல்பாக தயாரான ஒரு நிலையிலையே, தமது ஆண்களுடன், அவர்களுக்குத் தேவையான அல்லது விருப்பமான, புணர்விற்கு முன்பான, காம பாலியல் விளையாட்டுக்களில் (foreplay) பெண்கள் தம் சுய விருப்புடன், ஈடுபட விரும்புவர். இவ்வாறனா ஒரு பாலியலுறவில் தான் இருவரும் முழுமையான காம மற்றும் பாலியலுறவு இன்பத்தை ஒரளவாவது சமமாக அனுபவிக்கலாம். அல்லது வழமையாக நமது சமூக சூழல்களில் நடைபெறும் பாலியல் புணர்வில் ஆணிற்கு வெறும் விந்து வெளியேற்றமும் பெண்ணிற்கு வேதனையுமே விளைவாக கிடைக்கின்றது. பாலியல் விளையாட்டுக்கள் பலவிதம் இருக்கின்றன. அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

ஆணும் பெண்ணும் ஒருவருக்கு ஒருவர் அல்லது தமக்குத்தாமே, தமது உடல்களை பாலியல் விளையாட்டுக்கள் (foreplay) மூலம் பாலியலுறவுக்குத் தயார் செய்தபின், புணர்தல் என்பது இருவரது உடல் மற்றும் மனதினதும் தேவையையையும் விருப்பத்தையும் பொறுத்து நடைபெறலாம் அல்லது நடைபெறாமலும் விடலாம். தொடர்ந்தும் பாலியலுறவில் புணர்வில் ஈடுபட விரும்புகின்றவர்கள் எவ்வாறு தமது உடல்களை வைத்திருப்பது என்பது தொடர்பான அறிவிலும் பற்றாக்குறையே நமது சமூகங்களில் நிலவுகின்றது. வழமையான குடும்பங்களில் நடைபெறும் பாலியலுறவுகளில் பெண் கீழேயும் ஆண் மேலேயும் இருக்கின்ற ஒரு நிலையே (Missionary position) மேற்கொள்ளப்டுகின்றது. இந்த நிலையில், பெண்ணின் உடல் பாலியலுறவுக்குத் தயார் இல்லாதபோது ஆணின் உடலானது பெண்ணிற்கு சுமையாகவே இருக்கும். இதனால்தான் வழமையாக இவ்வாறன நிலையில் நடைபெறும் பாலியல் புணர்வு, ஒரு வன்புணர் தன்மை கொண்டதாக இருக்கின்றது. ஏனனில் இங்கு பெண் தயார் நிலையில் இல்லாதது மட்டுமல்ல பெரும் சுமையை தன் உடல் மீது சுமப்பதாக உணர்வாள். இதற்கு மாறாக பெண்ணின் உடல் பாலியலுறவுக்கு தயார் நிலையில் இருக்கும் பொழுது அதாவது பாலியல் விளையாட்டுகளின் பின்பு மேற்குறிப்பிட்டவாறான ஒரு நிலையில் புணர்விற்கு செல்லும் பொழுது ஆணின் உடல் பொதுவாக சுமையாக இருப்பதில்லை. மாறாக இருவரும் மென்மையான பாரமற்ற உடல்களையே உணர்வர். ஆணும் பெண்ணும், குறிப்பாக பெண்ணிற்கு பாதகமாகவும் வேதனையாகவும் இல்லாமலும், காம பாலியல் இன்பத்தின் அனுபவத்தை அதிகமும் அனுபவிக்கவும் வேண்டுமானால் ஆண் கீழேயும் பெண் மேலேயும் இருக்கும் நிலைமையே சிறந்தது என்கின்றனர். அதாவது ஆண் இயங்காமலும் (passive) பெண் இயங்கும் (active) நிலையில் இருக்கின்ற நிலை இருவருக்கும் நல்லது என பாலியலுறவு புணர்வுகள் தொடர்பாக ஆய்வு செய்த மாஸ்டர்ஸ் அன்ட் ஜோன்சன் (Masters and Johnson) ஆகியோரும் சிபார்சு செய்கின்றனர். அல்லது இருவரும் சமாந்தரமான அதாவது தாமரைப் பூ (lotus position) நிலையிலும் இருக்கலாம். இந்த நிலை மிகவும் நல்லதாக கருதப்படுவதுடன் இருவருக்கும் சுகமாகவும் அதிகமான இன்பத்தையும் வழங்கும் எனக் கூறுகின்றனர். இவ்வாறு காம பாலியல் விளையாட்டுக்கள் மற்றும் பாலியலுறவு நிலைகள் தொடர்பாக விபரிப்பதற்கான காரணம் பாலியலுறவு செயற்பாடுகள் வாழ்க்கைக்கு முக்கியமானவை மட்டுமல்ல ஆரோக்கியமான உடலுக்கும் உறவுக்கும் அவசியமானவை. ஆகவே, ஆண்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் பாலியலுறவு புணர்தலில் எதிர் மறை அனுபவம் ஏற்படாமல் இருப்பதற்கான வழிவகைகளைக அறிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பு. மேலும் உறவில் ஈடுபடுகின்ற இருவரும் ஒருவரை ஒருவர் புரிவதற்கும் இன்பத்தை சமமாக பகிர்ந்து கொண்டு அதிகமாகவும் அனுபவிப்பதற்கும் இந்த அறிவுகள் உதவிபுரியலாம். இது தொடர்பான இங்கு எழுதுவதன் நோக்கம், இக் கட்டுரையின் இறுதிப்பகுதியில் பத்திரிகைகைளில் பரபரப்பாக பேசப்பட்ட பாலியலுறவு தொடர்பான விடயங்களை ஆராய்வதற்கு உதவியாக இருக்கும். இக் கட்டுரையை எழுதத் துண்டியதே பத்திரிகைகளில் வந்த விடயங்கள் தான்.

இச் சந்தர்ப்பத்தில் இன்னுமொன்றையும் இங்கு குறிப்பிட்டுச் செல்வது நல்லது. அதாவது பொதுவாக மனிதர்களின் மனம் புணர்தல் மூலம் மட்டுமே காம பாலியலுறவு இன்பத்தை முழுமையாக அனுபவிக்கலாம் என நம்பி தம் முழுக் கவனத்தையும் அதைநோக்கி தவறாக குவித்துள்ளது. இந்த சமூகம் மனிதர்களின் மனநிலையில் குறிப்பாக ஆண்களின் மனிநிலையில் இவ்வாறு உருவாக்கியது பெண்களைப் பொறுத்தவரை மிகவும் துர்ப்பாக்கியமானதே. மேலும் இதில் புரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு விடயம் என்னவெனில் காமம் மற்றும் பாலியல் இன்பத்தை அனுபவிப்பது என்பதும் குழந்தை பெறுவது என்பதும் இரு வேறுவேறான விடயங்கள். நமது சமூகம் இரண்டையும் ஒன்றாக இணைத்து குழப்பிவைத்திருப்பது மட்டுமில்லாமல் பெரும்பாலான மனிதர்களையும் கஸ்டப்படுத்துகின்றது. மேலும் பாலியலுறவு புணர்தல் என்பது குழந்தை ஒன்றைப் பெறுவதற்கு மட்டுமான ஒரு செயற்பாடாக சமயங்களின் ஊடாக வரையறுத்து மனிதர்களை நம்பவைத்து பாலியலுறவு சுதந்திரத்தை இந்த சமூகம் கட்டும்படுத்துகின்றது. காம உணர்வின் இன்பத்தை மட்டும் அனுபவிப்பதற்காக பாலியலுறவில் ஈடுபடுவது எதோ பாவச் செயலாக கட்டமைத்து குற்றவுணர்வை மனிதர்களிடம் ஏற்படுத்தியது உள்ளது இந்த சமூகம். அதனால் உடலில் உருவாகும் காம இன்பத்திற்காகவோ அல்லது திருமணத்திற்கு அப்பாற்பட்டு மனிதர்களால் மேற்கொள்ளப்படும் பாலியலுறவுகளில் ஈடுபடுவதற்கான உரிமையை பல சமூகங்கள் மறைமுகமாகவும் சில சமூகங்கள் நேரடியாகவும் மறுக்கின்றது. இதன் தொடர்ச்சியான ஒரு வெளிப்பாடேகவே பிரம்மச்சாரியம் என்பது மேலானதாக சமயங்களால் முன்வைக்கப்படுகின்றது என குறிப்பிடுவது மிகையானதல்ல.

மேலும் வாலிபவயதின் ஆசை மட்டுமல்ல உடலின் இயற்கையான தேவைக்காக பாதுகாப்பற்று காம மற்றும் பாலியலுறவு விளையாட்டில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையாக குழந்தையையும் வழங்கி அதை வளர்ப்பதற்கான பொறுப்பையும் இந்த சமூகம் குறிப்பாக பெண்களுக்கு வழங்குகின்றது. இதானல்தான் அனுபவமில்லாத வாலிபவயது பெற்றோர்கள் (teen parents) பலர் உருவாகின்றனர். இவ்வாறான இளம் பெற்றோர் உருவாவதற்கு காமம் மற்றும் பாலியலுறவுகள் தொடர்பான அறிவின்மையும் அது தொடர்பான சமூகத்தின் அக்கறையின்மையும் சில காணரங்களாகும். இன்றும் பெண்கள் தாம் விரும்பாத தமது கருவை கலைப்பது (abortion) தொடர்பாக பெரும் எதிர்ப்புகள் சமூகங்களில் நிலவுகின்றது. அதேவேளை பாதுகாப்பான பாலியலுறவுகளில் எவ்வாறு ஈடுபடலாம் என்பது தொடர்பான பாலியல் கல்வியை (sexual education) பாடசாலைகளில் அறிமுகப்படுத்துவதற்கும் அதே எதிர்ப்பாளர்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறு இரண்டையும் இவர்கள் எதிர்ப்பது இவர்களது இரட்டைதன்மையையே வெளிப்படுத்துகின்றனது. இதனால் குறிப்பாக முதிர்ச்சியற்ற பக்குவமற்ற இளம் பெண்கள் இளம் தாயாக இந்த ஆணாதிக்க சமூகத்தில் பல சிக்கல்களையும் கஸ்டங்ளையும் எதிர்கொள்கின்றனர். மறுபுறம், குடும்ப உறவுகளுக்குள் குழந்தை பெறுவதை திர்மானிப்பதற்கான உரிமை பெரும்பாலும் பெண்களுக்கு இருப்பதில்லை. ஆண்களே பெரும்பாலும் தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். பெண்கள் பெரும்பாலும் குழந்தைகளைப் பெரும் கருவிகள் மட்மே. மேலும் குறிப்பாக பெண் குழந்தைகள் பெறும் பெண்களுக்கு எதிராக தென்னாசிய சமூகங்களில் பிரச்சினை இருக்கின்றது. அதவாது ஆண் குழந்தைகள் பெறுவதையே பெருமையாகவும் முக்கியமானதாகவும் கருதும் சமூகங்களில் ஒரு பெண், பெண் குழந்தையை பெற்றால் அவளுக்கு எதிரான, எதிர்மறை பார்வை இந்த சமூகங்களில் காணக்கிடைக்கின்றது. இத் தவறான பார்வைக்கும் அறியாமையும் புதிய அறிவுகள் பகிரப்படாமையுமே காரணமாக இருக்கின்றது. ஏனனில் மருத்துவ ஆய்வுகளின்படி ஒரு குழந்தை ஆணா அல்லது பெண்ணா என தீர்மானிப்பது ஆணின் விந்தே. ஆனால் பெண்ணின் உடலிலிருந்து குழந்தை வெளிவருவதால் பெண்ணே இதற்கான பழியையும் சுமக்கின்றாள். மறுபுறம் ஒரு பெண் குழந்தை பெறுவதற்கு காரணமான முதிர்ச்சியற்ற பக்குவமற்ற இளம் ஆண்கள் எந்த பொறுப்புமின்றி சுதந்திரமாக வாழவும் இப் பொறுப்புக்களிலிருந்து இலகுவாக விடுபடக் கூடியதாகவும் இருக்கின்றது. இதனால்தான் கருத்தடை மாத்திரைகள் பெண்களின் விடுதலைக்கான பாதையில் முக்கியமான ஒரு புரட்சிகர பங்கை வகிக்கின்றன எனக் கூறப்படுகின்றது. அதேவேளை வெள்ளை இன ஆணாதிக்க சமூகம் இந்தக் கருத்தடை மாத்திரைகளை பிற நிற இன மனிதர்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக இனவாத அடிபடையிலும் எதிர்மறையாகவும பயன்படுத்தியிருக்கின்றனர் என பல்வேறு நிற பெண்கள் (women of colour) எச்சரிக்கின்றனர் என்பதையும் கருத்தில் கொள்ளவும் வேண்டும். ஏனனில் அமெரிக்க அரசாங்கம் அல்லது அந்த சமூகம் 70ம் ஆண்டுக்கு முன்பு வரை கருவிலே கொன்ற வட அமெரிக்காவில் வாழும் பிற இனத்தவர்களின் குறிப்பாக கருப்பு மற்றும் பூர்விக குடிகளின் எண்ணிக்கை, ஜெர்மனியில் ஹிட்லர் கொன்ற யூதர்களைவிட, அதிகம் என கருப்பின பெண்ணியவாதிகள் வாதிடுகின்றனர். ஆகவே ஒரு விடயம் அல்லது பொருள் யாரால்; எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றது என்பதைப் பொருத்து சமூகத்தில் அதற்கான பாத்திரம் வரையறுக்கப்படுகின்றது என்பதையும் நாம் இங்கு குறித்துக்கொள்வது நல்லது.

இரண்டாவது போர்க் காலங்களில் நடைபெறும் பாலியல் வன்புணர்ச்சி. அதாவது எதிரி நாட்டை அல்லது தேசத்தை ஆக்கிரமிக்கும் பொழுது அந் நாட்டுப் பெண்களை பாலியல்வன்புணர்வு செய்வது ஆணாதிக்க போர்வழிமுறைகளில் ஒரு முக்கியமான செயற்பாடாக காலம் காலமாக இருந்துவருகின்றது. இந்த சூழல்களில், பெண்கள் எதிரி நாட்டின் சொத்தாகவும் (property), அவர்களின் போர்த்தளபாடங்களுக்கு சமாந்தரமாக பொருட்களாகவும் (objects) பார்க்கப்படுகின்றார்கள். இவ்வாறான பார்வையும் அதனடிப்படையிலான செயற்பாடுகளிலும் போர்க் காலங்களில் இருபகுதிகளும் ஈடுபடுவது சாதாரண ஒரு நிகழ்வாகவே இருந்துவருகின்றது. ஏனனில் இரு நாடுகளும் பெண்களை தமது சொத்தாக கருதுவது மட்டுமல்ல (ஒரு பக்கம் பெண்களை அடக்கிக் கொண்டு மறுபக்கம்) அவர்களை தெய்வங்களுக்கு சமமானவர்கள் என கட்டமைத்தும் சமூகத்தின் உயர் அந்தஸ்தில் வைத்துள்ளனர். ஆகவே பெண்களை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்துவது குறிப்பிட்ட நாட்டை அல்லது தேசத்தை அவமானப்படுத்துவது மட்டுமல்ல ஆக்கிரமித்துள்ளாதாகவும் அர்த்தப்படும். மறுபுறமும் இதே நிலைமைதான். ஒரு நாட்டின் அல்லது தேசத்தின் பெண்கள் மீது எதிரி நாடுகள் நடாத்திய பாலியல் வன்புணர்வு மற்றும் நிர்வாணப்படுத்தல்கள் மூலமாக பாதிக்கப்பட நாடு அல்லது தேசம் கோபம் கொள்வது பெண்களை அப்படி செய்தார்கள் என்பதற்கும் மேலாக “நமது (சொத்தான) பெண்களை” “அவர்கள் அவ்வாறு செய்துவிட்டார்கள்” என்பதும் அதனால் அவர்களது தன்முனைப்பு (ego) பாதிக்கப்பட்டதும் ஒரு காரணம். அதாவது ஆண்களின் தன்முனைப்புக்கு வீழ்ந்த ஒரு அடியாகவே ஆண்களால் பிரக்ஞையற்று உணரப்படுகின்றது. இது அடிப்படையில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் ஆணாதிக்க பார்வையே என்றால் மிகையல்ல. ஆக, அனைத்துப் (இரு) பகுதிகளிலும் ஆண் பார்வையின் (patriarchal standpoint) அடிப்படையிலையே போர்களும் வன்முறைகளும் பெண்கள் மீதான வன்வுணர்ச்சிகளும் பாலியல் துஸ்பிரயோகங்களும் அனைத்தும் நடைபெறுகின்றன.

இவ்வாறு நடைபெறும் பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிராக நடாத்தப்படும் போராட்ட செயற்பாடுகளில் போரை நடத்துபவர்கள் (உதராணமாக மகிந்த ராஜபக்ஸ, மற்றும் சரத் பொன்சேகா போன்றவர்கள்) மறக்கப்பட்டு பாலியல்வன்புணர்வில் ஈடுபட்ட சாதாரண இராணுவத்திரை மட்டுமே விசாரித்து தண்டனை வழங்குகின்றனர். இது ஆணாதிக்க சமூகத்தின் ஒரு இரட்டை நிலைப்பாடே. ஏனனில் நடைபெறும் போர்கள் எல்லாம் ஆணாதிக்க சிந்தனை மற்றும் அதன் வழி முறைகளிளையே நடைபெறுகின்றன. இருபகுதி இராணுவத்தினரும் அவ்வாறு செய்வதற்கு அல்லது அவ்வாறு செய்வதற்கான மனநிலை ஏற்படும் வகையிலையே அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றனர். ஒரு வகையில் சாதாரண இராணுவத்தினர் எய்தப்பட்ட அம்புகள் மட்டுமே. ஆகவே இவ்வாறான போர்க்குற்றங்களில் நியாயமாக விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டியது போரை முன்னெடுத்த அரசியல் மற்றும் அதை வழிநடாத்தும் இராணுவ தலைவர்களையே. அப்பொழுதுதான் இவ்வாறான பாலியல் வன்புணர்வுகளுக்கு எதிராக முழுமையான தண்டணை கிடைத்ததாக கருதப்படலாம். (இதேவேளை ஆணாதிக்க சமூகத்திற்குள் வழங்கப்படும் இவ்வாறன தண்டனைகள் கேள்விகுள்ளாக்கப்படுவதுடன் இது தொடர்பான விரிவான ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.) சாதாரண இராணுவத்தினருக்கு தண்டடை வழங்கினாலும் மனநிலை சிகிச்சை அளிப்பதே பொருத்தமானதாக இருக்கும். இதேவேளை போர் தொடர்பான கேள்விகளும் அவை முன்னெடுக்கப்படும் விதங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுவது மட்டுமல்ல எல்லாவிதமான போர்களையும் நிறுத்தவும் குரல் கொடுக்க வேண்டும். ஏனனில் ஆணாதிக்க சமூகத்தில் நடப்பவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பினைத்தே இருக்கின்றன. அப்பபொழுதுதான் இதன் மூலம் ஏற்படும் அழிவுகளையும் குறிப்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகளை நிறுத்தவும் முடியும். ஆணாதிக்கத்தின் பிடியிலருந்து பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பிற மனித பால்களும் விடுதலைபெற முடியும்.

மூன்றாவது பொதுவாக ஆண்களால் குறிப்பாக மனநிலை பாதிக்கப்பட்ட அல்லது பெண்கள் மீது வெறுப்புக் கொண்ட பழிவாங்கும் எண்ணம் கொண்ட ஆண்களால் மேற்கொள்ளப்படும் பெண்கள் மீதான அதிகாரத்துவமானதும் மற்றும் இழிவுபடுத்தும் பாலியல் வன்புணர்வாகும். இந்த ஆண்கள் தண்டனைக்கு மட்டுமல்ல மனநிலை தொடர்பான சிகிச்சைக்கும் உட்படுத்தப்படவேண்டியவர்களே. ஏனனில் ஆண்களின் இவ்வாறன பாலியல் வன்புணர்வு கொள்ளுதல் போன்ற செயற்பாடுகளுக்கு ஆணகளிடம் இருக்கும் மரபணுக்கள் காரணம் என ஒரு சாராரும் ஆணாதிக்க சமூக வளர்ப்பே காரணம் என இன்னுமொரு சாராரும் வாதிடுகின்றனர். இதற்கான விடை சரியாக தெரியாத நிலையில், இவ்வாறான மனிதர்கள் ஏன் உருவாகின்றார்கள் என சிந்திப்பதும் முக்கியமானது. மறுபுறம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகளில் ஆண்கள் பெரும்பாலும் ஈடுபடுவதால், தனிமனித பொறுப்பு மற்றும் பிரக்ஞை என்பது ஒவ்வொரு ஆணிற்கும் இருக்கவேண்டியது முக்கியமானதும் அவசியமானதுமாகின்றது. இந்தப் பிரக்ஞையையும் பொறுப்புணர்வையும் எவ்வாறு வளர்ப்பது என்பது ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டியது அவரவர் பொறுப்பாகும். அதேவேளை இது ஒரு சமூகப் பிரச்சனையாக இருப்பதால் சமூகத்தின் பொறுப்பு என்ன என்பதும் முக்கியமானது. ஏனனில் இவ்வாறான நிகழ்வுகள் சமூகப் பிரச்சனையாகப் பார்க்காது வெறும் தனிநபர் சம்பவங்களாகப் பார்க்கப்படுவதாலையே முடிவின்றி இன்னும் தொடர்கின்றன. ஆகவே இதற்கான சமூக காரணிகளைக் கண்டு அவற்றை நீக்குவதும் மற்றும் காமம் பாலியலுறவு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அடிப்படைக் கல்வியை வழங்குவதும் குறிப்பாக மனிதர்களில் பிரக்ஞையை வளர்ப்பதும் இவ்வாறான பிரச்சனைகளை ஒரளவாவது தீர்க்க உதவலாம்.

இந்த அடிப்படையில் அண்மையில் பலரது கவனங்களையும் ஈர்த்த நித்தியானந்தர் என்ற மனிதர் மீதான பாலியல் குற்றச்சாட்டையும் அது தொடர்பான சயமங்களின் உள் முரண்பாடுகளையும் மற்றும் வரதராஜன் என்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரின் பிரச்சனையையும் மேலும் காமம் மற்றும் பாலியலுறவு தொடர்பான நமது சிந்தனைகளையும் அடுத்த பகுதியல் பார்க்கலாம். மேலும் இவ்வாறன பிரச்சனைகளை சமூக அக்கறையுள்ள சஞ்சிகைகள் கூட எவ்வாறு பொறுப்பற்று பிரசுரிக்கரின்றன என்பதனையும் இக் கட்டுரைத் தொடரின் நான்காவதும் இறுதியானதுமான பகுதியிலும் ஆராயலாம்.

தொடரும்

http://meerabharathy.wordpress.com/2010/08/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்க்கு நன்றி கிருபன்.இரன்டு படம் போட்டிருந்தால் பக்கங்கள் பிச்சுக்கொன்டு போயிருக்கும் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்க்கு நன்றி கிருபன்.இரன்டு படம் போட்டிருந்தால் பக்கங்கள் பிச்சுக்கொன்டு போயிருக்கும் :lol:

படம் பார்த்துக் "கதை" சொன்னால், மோகன் அண்ணா எல்லாவற்றையும் கடாசிவிட்டுவிடுவார்!

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்க்கு நன்றி கிருபன்.இரன்டு படம் போட்டிருந்தால் பக்கங்கள் பிச்சுக்கொன்டு போயிருக்கும் :)

படத்துக்காக வெயிட்டிங்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படத்துக்காக வெயிட்டிங்.

இலவு காத்த கிளியாக இருக்காதீங்கோ! :)

  • கருத்துக்கள உறவுகள்

காம பாலியல் இன்பத்தின் அனுபவத்தை அதிகமும் அனுபவிக்கவும் வேண்டுமானால் ஆண் கீழேயும் பெண் மேலேயும் இருக்கும் நிலைமையே சிறந்தது என்கின்றனர். அதாவது ஆண் இயங்காமலும் (passive) பெண் இயங்கும் (active) நிலையில் இருக்கின்ற நிலை இருவருக்கும் நல்லது என பாலியலுறவு புணர்வுகள் தொடர்பாக ஆய்வு செய்த மாஸ்டர்ஸ் அன்ட் ஜோன்சன் (Masters and Johnson) ஆகியோரும் சிபார்சு செய்கின்றனர்.

இப்படியான ஆராச்சியை அவர்கள் செய்யும் பொழுது.....பூலாந்தேவியின் கதையை திரைப்படமாக எடுத்தவர்கள் இந்த செயலை அவள் ஆண்ணாதிக்க சிந்தனை கொணடவள் என்ற வகையில் ஒரு காட்சியை அமைத்திருந்தார்கள் .....தெற்காசிய காரர்களின் சிந்தனை பார்த்தீர்களா? :):)

நல்ல பயன் உள்ள கட்டுரையை இணைத்த கிருபனுக்கு நன்றிகள்....

.

.இரன்டு படம் போட்டிருந்தால் பக்கங்கள் பிச்சுக்கொன்டு போயிருக்கும் :D

பாலியல் விளையாட்டுக்கள் பலவிதம் இருக்கின்றன. அவற்றை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

மற்றுமோர் சந்தர்ப்பத்தில் பார்ப்போம் என்று சொல்லி இருப்பதால் படம் போடுவினம் போலதான் இருக்கு வேய்ட் அன் சி :(:unsure::unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காமம், பிரம்மச்சாரியம், மனிதர்கள், சமூகம் மற்றும் காதல் – ஒரு பார்வை- பகுதி 4

மீராபாரதி

காமம், பிரம்மச்சாரியம், சமூகம், மனிதர்கள், குழந்தைகள், பெண்கள், பால், பாலியல் தன்மை, பாலியலுறவுகள் வண்புணர்வுகள் என்பன தொடர்பாக கடந்து மூன்று பகுதிகளிலும் ஒரளவு விரிவாக பார்த்தோம். இக் கட்டுரையினடிப்படையில் ஆணாதிக்க மற்றும் சமய ஆதிக்கம் நிலவும் சமூகங்களில் எவ்வாறு காமம் மற்றும் அது தொடர்பான அறிவுகள் அடக்கப்பட்டு மறுபுறம் பிரமச்சாரியம் சமூகத்தில் அந்தஸ்தில் உயர் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் அதேவேளை பெண்களும் குழந்தைகளும் எவ்வாறு பாலியலடிப்டையில் சுரண்டப்பட்டு அடக்கப்படுகின்றனர் என்பதை அறிந்தோம். மேலும் மனிதர்களின் பால் (sex), பால்தன்மை (gender) மற்றும் பாலியல் தன்மை (sexuality) அடையாளங்கள் பாலியலுறவுகள் (sexual behaviors) என்பன எவ்வாறு ஆணாதிக்க ஒருதார இருபாலுறவு சமூகத்தால் இரு எதிர் எதிர் முனைகளாக மட்டும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதையும் இந்தக் கட்டமைவுகளுக்கு அப்பாற்பட்டவர்களை உடல் குறைபாடுடையவர்களாக அல்லது உளவியல்ரீதியாக பாதிக்கப்பட்ட மனப்பிறழ்வு கொண்டவர்களாக சித்தரிக்கப்டுவதையும் பார்த்தோம். இறுதியாக மனிதர்களிடம் உருவாக்கப்பட்ட இவ்வாறான உளவியல் சிக்கல்களையும் மற்றும் குழந்தைகள் இயந்திரமயமாக நெறிப்படுத்தல், பெண்கள் மீதான பாலியலுறவுகளில் நடைபெறும் வன்புணர்வுகளையும் பொதுவாக நடைபெறும் வன்புணர்வுகளையும் அறிந்தோம். இவற்றிலிருந்து நம்மை எவ்வாறு விடுவிப்பது என்பது தொடர்பாகவும் மற்றும் மாற்றிடாக எவ்வாறான ஆரோக்கியமான வழிமுறைகளைப் பின்பற்றுவது என்பது தொடர்பாகவும் பார்த்தோம். இந்த அறிவின் அடிப்படையில் மனிதர்களின் பாலியலுறவுகள் வன்புணர்வுகள் மற்றும் துஸ்பிரயோகங்கள் போன்ற பிரச்சனைகள் தொடர்பாகவும் மற்றும் இவ்வாறன செய்திகள் தொடர்பாக ஊடகங்கள் எந்தளவு சமூகப் பொறுப்புணர்வுடன் வெளியிடுகின்றன என்பதையும் நான்காவதும் இறுதிப்பகுதியுமான இந்தப் பகுதியில் பார்ப்போம்.

பொதுமனிதர்களது குறிப்பாக பிரபல்யமானவர்களது பாலியலுறவுகள் வன்வுணர்வுகள் துஸ்பிரயோகங்கள் தொடர்பான செய்திகளை பொது மனிதர்கள் மற்றும் ஊடகங்கள் எப்படிப் பார்க்கின்றன என்றும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன எனவும் விமர்சனபூர்வமாக பார்ப்பது முக்கியமானது. இவ்வாறன செய்திகளை வாசிக்கும் நம் ஒவ்வொருவருக்கும் இவை தொடர்பான ஒரு அடிப்படைப் பார்வை இருக்கும். இந்தப் பார்வையானது நம்மை ஆதிக்கம் செலுத்தும் அல்லது நாம் தேர்த்தெடுத்த கருத்தமைவின் அல்லது சமூக சமய நம்பிக்கையின் அடிப்படையிலமைந்ததாக இருக்கும். இதனால் நம் ஒவ்வொருவருக்கும் வேறுவேரான கருத்துக்கள் இச் செய்திகள் தொடர்பாக இருக்கும். இதேவேளை நமது கருத்துக்களை ஆதிக்கம் செலுத்தும் ஒரு சமூக கருவியாக ஊடகங்களும் செயற்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது இவ்வாறான விடயங்கள் தொடர்பாக பொதுவான ஒரு கருத்து மேலாதிக்கத்தை பொது மனிதர்களிடம் உருவாக்குகின்றது. ஆகவே பொதுசன ஊடகங்களுக்கு இவ்வாறன செய்திகளை வெளியிடுவதில் சமூக பொறுப்புணர்வு உள்ளது. ஆனால் குறிப்பிட்ட செய்தி ஒன்றை பிரசுரிக்கும் ஒவ்வொரு ஊடகமும் தமக்கான அரசியல் மற்றும் சமூக கருத்துக்கள் நோக்கங்களை அடிப்படையிலையே வெளியீடுகின்றன. இது அவர்களது கருத்துச் சுதந்திரமாக இருந்தபோதும், நாம் அச் செய்திகளை அது வெளிப்படுத்தும் கருத்துக்களை அப்படியே உட்கொள்ளாது விமர்சனபூர்வமாக பார்க்கவேண்டியது நமது பொறுப்பாகின்றது. குறிப்பாக சாமியார்களின் அல்லது மத குருமாரின் பாலியல் செய்திகளை வெளியிடும் பிரதான ஊடகங்கள் தமது ஊடகங்களை பிரபல்யப்படுத்துவதிலும் வருமானத்தை பெருக்குவதையுமே பிரதானமான நோக்கமாக கொண்டிருப்பார்கள். இது தொடர்பான ஒரு ஆரோக்கியமான உரையாடலை இவை நடாத்துவதில்லை. அதேநேரம் மதங்களின் மீது ஆழமான நம்பிக்கைவைத்திருக்கும் பொது மனிதர்களுக்கு இந்த செய்திகள் முக்கியமானவை. ஆகவே ஊடகங்கள் இந்த மனிதர்களின் மத நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறும் அதேவேளை இந்த நம்பிக்கைகளை மேலும் வலுவுட்டி நிலைநாட்டும் வகையிலையே வெளியிட்டு இதனுடாக தமது பல நோக்கங்களை நிறைவு செய்து கொள்வார்கள். பொது மனிதர்களும் தமது மத நம்பிக்கைகளை தொடர்ந்தும் பாதுகாப்பதற்காக இந்த சாமியர்களுக்கு எதிராக போர்க் கொடி தூக்குவார்கள். இதற்கு மறுபுறம் நாஸ்திகவாதிகள் சாமியர்களின் ஏமாற்று செயற்பாடுகளினால் மகிழ்வடைந்து இச் செய்திகளை கேலியும் கிண்டலுமாக வெளியிடுவார்கள். இவர்களது பிரதான நோக்கம் சமயங்களையும் அதைத் தலைமைதாங்கி நடாத்தும் இந்த சாமியார்களையும் பொது மனிதர்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதும் அவர்களது இரட்டைவேடங்களை வெளிக்கொண்டுவந்து பொது மனிதர்களது மூட நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்குவதும் என பொதுவாக கூறலாம். ஆனால் இவர்களும் தங்களது கேலி கிண்டல்களுக்கு அப்பால் ஒரு ஆரோக்கியமான விவாதத்தை முன்வைக்காது சமயங்களுக்கும் சாமியார்களுக்கும் எதிரான தமது கொள்கைகள் கோட்பாடுகள் சரியானவை என நிரூபிப்பதில் மட்டுமே கவனமாக இருக்கின்றார்கள். மூன்றாவது தரப்பினரான சமூக அக்கறை கொண்ட மனிதர்கள் இவ்வாறான விடயங்களை விவாதப்பொருளாக்கி ஆரோக்கியமான உரையாடலை நடாத்த முனைவார்கள். ஏனனில் இவ்வாறான உரையாடல்கள் மூலமே நாம் நமது கடந்தகால நம்பிக்கைகளை கேள்வி கேட்கவும் நமது அறியாமையை நீக்கவும் முடியும். இதுவே சமூக மாற்றத்திற்கான ஆரோக்கியமான பாதையாக அமையும். ஆனால் அவ்வாறான நோக்கத்துடன் பொறுப்புணர்வுடன் இவ்வாறான செய்திகளை சமூக அக்கறை உள்ள ஊடகங்கள் பிரசுரிக்கின்றார்களா ஒளிபரப்புகின்றார்களா அல்லது வாசகர்களும் பார்வையாளர்களும் விமர்சனபூர்வமாக பார்கின்றோமா விவாதிக்கின்றோமா என்பது கேள்விக்குறியதே.

நித்தியானந்தம் என்ற சாமியார் வேடம் அணிந்த மனிதர் மீதான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அது தொடர்பான செய்திகள் தொடர்பான ஒரு பார்வையை இங்கு முன்வைக்கின்றேன். முதலாவது அவர் தன் மீது நம்பிக்கைவைத்துள்ள மனிதர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்ற அடிப்படையிலும் இம் மனிதர்களது மத நம்பிக்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் மாறாக நடந்து அவற்றை அவமதித்துள்ளார் என்ற அடிப்படையிலும் அவர் மீது ஊடகங்களும் பொது மனிதர்களும் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள். இரண்டாவது தனது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து பல பெண்களை பாலியல் அடிப்படையில் பயன்படுத்தி துஸ்பிரயோகம் செய்தும் சுரண்டியுமுள்ளார் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள். மூன்றாவது மனிதர்களை ஏமாற்றி பிழைப்பு நடாத்துகின்றார் என வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள். இன்னுமொருபுறம் இவர் எந்த தவறும் செய்யவில்லை பாலியலுறவில் ஈடுபடுவது ஒருவரது தனிப்பட்ட சுதந்திரம். ஆகவே இவருக்கு எதிராக எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கத்தேவையில்லை. பாலியலுறவில் ஒருவர் ஈடுபட்டதற்காக தண்டிப்பது தனிமனித உரிமை மீறல் என்றும் குரல்கள் ஒலிக்கின்றன. இப்படி பல கோணங்களில் இப் பிரச்சனையை ஆராயலாம். இதில் யார் சொல்வது சரியானது?

முதலாவது பொதுவான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நித்தியானந்தம் மீது வைக்கப்படக் கூடிய குற்றச்சாட்டு பிரம்மச்சரியத்தை போதித்தது மட்டுமல்ல தான் பிரம்மச்சாரி என மற்றவர்களை நம்பவைத்தது மோசம் செய்தது எனக் கூறலாம். இவ்வாறு இவர் போதனை செய்திருக்காவிட்டால் ஒரு பெண்ணுடன் உறவாடுவதோ அல்லது பாலியலுறவில் ஈடுபடுவதோ தவறானதாக கருதப்பட்டிருக்காது. ஆனால் அவர் தனது மத போதனைகளுக்கும் தனிப்பட்ட வாழ்விற்கும் முரண்பாடாக இருந்துள்ளார். ஆதனால்தான் மத நம்பிக்கை சார்ந்த மனிதர்களால் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரும் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றார். இந்தக் குற்றச்சாட்டு நியாயமானதாக இருப்பினும் இப்படியான இரட்டை வாழ்வை நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் நமது சமூக அரசியல் மற்று சமய தளங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றோம். பல அரசியல் தலைவர்கள் தொடர்பாக ஊடகங்கள் மௌனமாக இருப்பது ஏன்? ஆகவே ஊடகங்கள் இந்த விடயங்களில் பக்கச் சார்பாகவே செய்திகளை வெளியிடுகின்றனர். ஆகவே இவ்வாறன குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் ஒவ்வொருவரும் தமது மனசாட்சியை கேள்வி கேட்டபின் மற்றவர் மீது குற்றம் சுமத்துவதே நியாயமானது. இதன் அர்த்தம் அவரை நியாயப்படுத்துவதல்ல. மாறாக நித்தியானந்தம் போன்றவர்கள் இவ்வாறு ஈடுபடுவதற்கு மறுபுறம் காரணமாக இருக்கும் சமய நம்பிக்கைகளையும், அதன் பழக்கவழங்கங்களையும் மற்றும் சாஸ்திர சம்பிரதாய சடங்குகளையும் கேள்விக்குட்படுத்துவதே நியாயமானதாகும். குறிப்பாக பாலியல் மற்றும் பாலியலுறவுகள் தொடர்பாக சகல சமய நிறுவனங்களின் நிலைப்பாடுகளையும் அவர்களது கருத்துக்களையும் கேள்விக்குட்படுத்துவதே சரியான வழிமுறையாகும். இந்து சமயம் மட்டுமல்ல எல்லா சமய நிறுவனங்களிலும் இவ்வாறன பிரச்சனைகள் இருக்கின்றன. இதில் உள்ள மதத் தலைவர்கள் பலர் இதுதொடர்பான பிரச்சனைகளுக்கு தொடர்ந்து முகம் கொடுத்துக் கொண்டே வருகின்றனர். ஆகவே நித்தியானந்தம் போன்ற சாமியர்கள் போன்று எதிர்காலத்தில் மேலும் பலர் வரமால் தடுப்பதற்கும், மற்றும் பொது மனிதர்களின் ஆன்மீக தேடலை சுரண்டி பயன்படுத்தாமலிருப்பதுற்கும் சமய கோட்பாடுகளையே முதலில் கேள்வி கேட்கவேண்டும். இதற்கு மாறாக மதவாதிகள் தமது மதங்களை தூயனவாக கட்டிக் காப்பதற்கும் மூட நம்பிக்கைள் மூலம் பொது மனிதர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவதற்கும் வசதியாக நித்தியானந்தம் போன்ற மனிதர்களை குற்றவாளிகளாக்கி பிரச்சனையை தனி மனித பிரச்சனையாக்கி திசை திருப்பிவிடுகின்றனர். இதில் ஊடகங்களின் பங்கு கணிசமானது. ஆகவே சமூக அக்கறையுள்ளவர்களும் சமூக மாற்றத்தில் அக்கறையுள்ளவர்களும் சமூகத்தின் பொதுவான கருத்துக்களுக்கும் அதன் ஆதிக்க போக்கிற்கும் தாமும் இழுபடாமல் இந்த வட்டத்திற்கு வெளியில் நின்று நிதானமாகவும் பிரக்ஞைபூர்வமாகவும் இப் பிரச்சனையை பார்ப்பதே ஆரோக்கியமானதாக இருக்கும்.

இரண்டாவது குற்றச்சாட்டு பெண்களின் பார்வையில் முன்வைக்கப்படுவது, இதுவே மிகமுக்கியமானது. அதாவது நித்தியானந்தம் தனது அதிகாரம் பண பலம் பிரபல்யம் என்பவற்றை பயன்படுத்தி எத்தனை பெண்களை பாலியல் சுரண்டலுக்குப் பயன்படுத்தியிருக்கின்றார் என்பதை அறிவதே இவர் மீதான குற்றச்சாட்டுக்கு நியாயமானதும் முக்கியமானதுமான ஆதாரமாக இருக்கும். ஏனனில் இவர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக முன்வைத்துள்ள களவாக எடுக்கப்பட்ட வீடியோவில் இவர் ஒரு பெண்ணுடன் எவ்வாறு பாலியல் விளையாட்டுகளில் ஈடுபடுகின்றார் என்பது இவர் தொடர்பான பல கேள்விகளை எழுப்புகின்றது. இதனடிப்படையில் நித்தியானந்தம் இருக்கின்ற வீடியோவை அலசி ஆராய்ந்தால் (அந்த வீடியோவில் இருப்பவர் அவர் என உறுதிசெய்யப்படும் பட்சத்தில்) அவர் ஒரு சாதாரண மனிதர் என்பதும் புத்தக அறிவின் மூலம் தான் அறிந்ததை மற்றவர்களுக்கு பகிர்ந்துள்ளார் என்பது வெளிச்சமாகின்றது. வீடியோவின் அடிப்படையில் முதலில் நித்தியானந்தர் முக்தி (ஞானம்) என்ற ஒன்றை அடையவில்லை என்பது புலனாகின்றது. ஏனனில் அவரது செயற்பாடுகள் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களின் பிரக்ஞையற்ற இயந்திரத்தனமான செயற்பாடுகளாகவே தென்படுகின்றன. சாதாரண மனிதர்களைப் போன்று இன்னும் காமத்திலிருந்து விடுபடாமலும் மாறாக அதை அடக்கியே வாழ்கின்றார் என்பதையும் அவரது பிரக்ஞையற்ற சிறுபிள்ளைத்தனமாக சிலுமிச செயற்பாடுகள் மூலம் நிரூபணமாகின்றது. மேலும் மூன்றாவது பகுதி கட்டுரையில் குறிப்பிட்டவாறு ஒரு பெண்ணுடனான அவரது உறவு இன்னும் ஆணாதிக்க தன்மையிலேயே இருக்கின்றது என்பது துல்லியமாக தெரிகின்றது. அதாவது ஆண் பெண் இரு பாலருக்கும் இடையிலான காம உணர்வின் வேறுபாடுகளின் அடிப்படையைக் கூட நித்தியானந்தம் புரிந்துகொண்டதாக தெரியவில்லை. உதாரணமாக ஒரு ஆணே முதலில் பெண்ணிற்கான பாலியல் விளையாட்டுக்களில் ஈடுபடுவது பொருத்தமானதும் சரியானது எனவும் ஆய்வுகள் தெரிவிப்பதாக மூன்றாவது பகுதியில் பார்த்தோம். இதற்கு மாறாக நித்தியானந்தம் என்ற மனிதருக்கே அப் பெண் உறவுக்கு முன்பான பாலியல் விளையாட்டுக்களை செய்கின்றாள். ஆகவே காம மற்றும் பாலியலில் ஆய்வுகள் செய்கின்றேன் என்ற நித்தியானந்தரின் கூற்று பொய்யாகின்றது. இது தொடர்பாக அவர் கேள்விக்குள்ளாக்கப்டவேண்டும். ஏனனில் பாலியலுறவு தொடர்பாக ஆய்வு செய்வதாக இவர் மேலும் மேலும் பொய்கள் கூறி பொது மனிதர்களை ஏமாற்றுகின்றார் என்றே கருதவேண்டும். மேலும் வீடியோவில் காண்பிக்கப்பட்ட பெண்ணைத் தவிற வேறு பல பெண்களுடனும் இவர் இவ்வாறு ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையும் இவரது ஆணாதிக்க செயற்பாடுகள் எழுப்புகின்றன. இதன் அர்த்தம் ஒரு மனிதர் (அவர் ஆணோ பெண்ணோ) ஒருவருடன் தான் பாலியலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆணாதிக்க சமூகத்தின் ஒரு தார பாலியலுறவு கருத்தியலை இங்கு முன்வைக்கவில்லை. மாறாக நித்தியானந்தம் தனது பதவி பணம் அதிகாரம் என்பவற்றை பயன்படுத்தி பல பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டியிருக்கலாமா என்ற கேள்வியே முக்கியமானது. அவ்வாறு நிரூபிக்கும் பட்சட்த்தில் அவர் குற்றவாளியாகின்றார்.

நித்தியானந்தம் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக முன்வைக்கப்பட்ட வீடியோவில் கவனிக்கப்படவேணடிய இன்னொரு முக்கியமான அம்சம் ஒன்று உண்டு. பொதுவான ஆணாதிக்க சமூக வழமையாக பெண் என்பவள் ஆணின் அடிமையாக ஆணுக்கு சேவகம் செய்வதும் அவனது காம மற்றும் பாலியல் தேவைகளை பூர்த்தி செய்பவளாகவே இந்த ஆணாதிக்க சமூகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றாள். இந்த வீடியோவில் காண்பிக்கப்பட்ட பெண்ணும் சமூகத்தில் வாழும் பெரும்பான்மையான பெண்களை போல ஒரு ஆணின் தேவைகளை பாலியல் ஆசைகளையும் கனவுகளையும் பூர்த்தி செயற்படுத்துகின்றவளாகவே இருக்கின்றாள். மேலும் மனிதர்கள் தமது ஆணாதிக்க ஆண்டான் அடிமை மற்றும் நிலபிரபுத்துவ உணர்வுகளிலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பது இன்றைய அரசியல் நீரோட்டத்தில் மட்டுமல்ல நித்தியானந்தரின் விடீயோவிலும் புலனாகின்றது. எப்படி அரசியலில் குறிப்பாக இலங்கையில் மகிந்தவை துட்டக்கைமுனுவாகவும் பிரபாகரனை எல்லாளனாகவும் கற்பிதம் செய்கின்றோமோ அதேபோல் இந்தியாவில் எவ்வாறு அரசியல் தலைவர்களை அரசர்களுடன் ஒப்பிடுவது மிக சர்வசாதாரணமான இப்பொழுதும் பின்பற்றப்படுகின்றதோ, அதேபோல் நித்தியானத்தனையும் ஒரு அரசனாக கடவுளாக கற்பிதம் செய்து அவரது தொண்டர்களும் இந்தப் பெண்ணும் சேவகம் செய்கின்றார்கள். இந்த வீடியோவில் இருவருக்கும் இடையில் காண்பிக்கப்படும் உறவு ஆணாதிக்க அடிப்படையிலான காதலாக இருக்கலாம். ஆனால் நித்தியானந்தம் போதிக்கும் அல்லது போதித்ததாக கூறப்படும் இரு மனிதர்களுக்கு இடையிலான சமத்துவமான காம மற்றும் காதல் உறவைக் காணமுடியவில்லை. மாறாக அடக்கப்பட்ட காமத்தின் ஆசைகளை பூர்த்தி செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக சுரண்டும் செய்ற்பாடுகளாகவே நித்தியானந்தரின் செய்கைகள் இருக்கின்றன. ஒருவரும் இந்தடிப்படையில் இவருக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைக்கமாட்டார்கள். ஏனனில் இவ்வாறன பெண்ணின் செயற்பாடுகள் ஆண் பெண் உறவுகளில் சர்வசாதாரணமான சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பழக்கவழக்கமாகவே பார்க்கப்படுகின்றது. இச் செயற்பாடுகள் எந்த ஒரு மனிதர்களுக்கும் குறிப்பாக ஆண்களுக்குப் பிரச்சனையானதல்ல. ஏனனில் இதுபோன்ற பாலியலுறவு முறைகளே சமூகத்தில் வாழும் ஆணாதிக்கத்திற்குட்பட்ட நம்மைப் போன்ற மனிதர்களால் வழமையாக பின்பற்றப்படுகின்றமையால் இவ்வாறன விடயங்கள் தவறானவைகளாக தெரிவதில்லை. ஆகவே நமது பிரக்ஞைக்கு பிழையாக தெரியாததால், அக்கறைக்கு அப்பாற்பட்டனவையாக இருக்கின்றன. ஆனால் பெண்ணிய பார்வையில் நித்தியானந்தம் இப் பெண்ணை தனது பாலியல் தேவைகளுக்காக சுரண்டுகின்றார் என்பதையே இப் பெண்ணின் செயற்பாடுகள் புலப்படுத்துகின்றன. சமூக அக்கறை உள்ள சஞ்சிகைகள் இவற்றை கேள்விக்கு உட்படுத்தியிருக்கவேண்டும் ஆனால் அவையும் அதைச் செய்யத் தவறிவிட்டன. இதனால்தான் பொதுமனிதர்களுக்கும் ஊடகங்களுக்கும் தமது அல்லது ஒரு சமயத்தை அவமதித்தது மட்டுமே முக்கியமான விடயமாக இருக்கின்றது. இதனடிப்படையிலையே நித்தியானந்தம் மீதான பிரதான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது. இதற்குக் பாலியல் பாலியலுறவு மற்றும் பெண்களை எவ்வாறு இந்த சமூகம் பார்க்கின்றது பயன்படுத்துகின்றது போன்றன தொடர்பான நமது அறிவின் எல்லையும் வறுமையுமே காணரம்.

மறுபுறம் நித்தியானந்தம் உறவு கொண்ட பெண் அவர் மீது எந்தவிதமான பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டையோ அல்லது பாலியல் மற்றும் அதிகாரத்துவ துஸ்பிரயோகம் போன்ற குற்றச்சாட்டுக்களையும் முன்வைக்வில்லை. ஆகவே அப் பெண்ணுடன் உறவாடியதை எந்தவிதமான கட்டுப்பாடுகளுமின்றி தமது செய்திக்கு ஆதாரமாக முழுமையாக ஒளிபரப்பியமை ஊடகங்களின் தனிமனித உரிமை மீறல் ஆகும். ஊடகங்கள் நித்தியானந்தம் மீதான குற்றச்சாட்டை மட்டும் நிரூபிக்க வேண்டுமாயின் அவரின் முகத்தை மட்டும் ஒளிபரப்பியருப்பதே நியாயமானதாக இருந்திருக்கும். குறிப்பிட்ட பெண்ணின் முகத்தை முழுமையாக மறைப்பது மட்டுமல்ல யாரென அடையாளப்படுத்தியுமிருக்கக் கூடாது. ஆனால் இந்த குற்றச் சாட்டுக்களுடன் எந்தவகையிலும் நேரடியாக தொடர்பற்ற ஆனால் தன் விருப்பத்துடன் ஒரு உறவில் ஈடுபட்ட ஒரு பெண்ணின் செயற்பாடுகளை ஒளிபரப்பியது மட்டுமல்லாமல் அதை மீள மீள ஒளிபரப்பியமை அப் பெண்ணின் தனிப்பட்ட வாழ்வில் தலையீடு செய்த அடிப்படை மனித உரிமை மீறல் ஆகும். அதில் காண்பிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தனி மனித உரிமை மீறல் தொடர்பாகவும் கருத்துக்கள் பல வலைத்தளங்களில் வெளிவந்தமை மகிழ்ச்சியான விடயமே. ஆனால் பிரதான ஊடகங்கள் இந்தவிடயத்தில் எந்த பொறுப்பும் இல்லாமல் இவ்வாறு ஓளிபரப்பியமை அவர் ஒரு பெண்ணாகவும் மற்றும் பிரபல நடிகையாக இருந்தமையுமே காரணமாகும். ஏனனில் இதன் மூலம் ஊடகங்கள் இச் செய்தியை தமக்கு வருவாயை மட்டுமே பெருக்கிக்கொள்ளும் ஒரு பொருளாக பெரும் வியாபாரமாக்கியது. இது மட்டுமல்ல இவ்வாறு கேள்வியின்றி விமர்சனமின்றி ஓளிபரப்பியமை ஆணாதிக்க சமூக பழக்கவழக்கங்களை மேலும் வலுப்படுத்துகின்றன என்றால் மிகையல்ல. இந்த ஊடகங்கள் மீது அப் பெண் தனிமனித உரிமை மீறல் அடிப்படையில் மானநஸ்ட வழக்கு தாக்கல் செய்யவேண்டியது முக்கியமான ஒரு விடயமாகும்.

இதன் மூலம் ஊடகங்களின் வரையறை மட்டுமல்ல அவர்களின் சமூக பொறுப்பு என்ன என்பது தொடர்பாகவும் தெளிவான ஒரு பார்வை இனிவரும் காலங்களில் முன்வைக்கப்படவேண்டும். இன்றைய நவீன தொழில்நுட்ப வசதிகளினால் இதுபோன்ற தனி மனித உரிமைகளை மீறும் விடயங்களை இலகுவாக செய்துவிடலாம். ஆகவே தனி மனித உரிமை, சமூக அக்கறை மற்றும் பொறுப்பு தொடர்பான விடயங்களிலும் ஊடகங்களின் எல்லைகள் அல்லது அவர்கள் இவ்வாறான செய்திகளைத் தெரிவிப்பதிலுள்ள பொறுப்புணர்வு என்பவை தொடர்பான வரையறைகள் முன்வைக்கப்படவேண்டியது தவிர்க்கப்படமுடியாததாக எழுகின்றது. அல்லது 50 வருடங்களுக்கு முன்பு ஜோர்ஜ் ஒவல் (George Orwell) எழுதிய “1984” கதைபோன்று சிதைந்துபோன அல்லது சிதைக்கப்பட்ட அல்லது சிதைந்துபோவது தவிர்க்கப்பட முடியாத சோவியத்யூனியனுக்குள் இருந்த வாழ்வைப் போன்று நமது வாழ்வின் ஒவ்வொரு கணமும் இவ்வாறான நவீன தொழில்நுட்ப வசதிகள் மூலமாக கண்காணிப்பட்டு நமது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுவது தவிர்க்க முடியாதுபோய்விடும். இன்று இவ்வாறன விடயங்களில் மதவாதிகள் மட்டுமே அதிகமாக அகப்படுவதால் மனித உரிமைவாதிகளும் மற்றும் நாஸ்திகர்களான இடதுசாரிகளும் மகிழ்ச்சியடையலாம். ஆனால் நாளை ஒரு சமூக மாற்றத்திற்காக சுரண்டல்களுக்கு எதிராக உழைக்கும் மனிதர்கள் மீதும் அவர்களது செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்த இவ்வாறான விடயங்களை அதிகாரத்தில் உள்ள ஊடகங்கள் பயன்படுத்தப்படலாம் என்பதில் நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது கட்டாயமானதாகும். ஏனனில் இந்த வியாபார ஊடகங்களின் நோக்கம் இவ்வாறனா செய்திகளுடன் இலாபம் பெறுவது மட்டுமல்ல தொடர்ந்தும் பிற்போக்கு ஆணாதிக்க மற்றும் மூட மத சிந்தனைகளை சமூகத்தில் உறுதியாக நிலைநாட்டுவதற்கு இவ்வாறான செய்திகளைப் மீள மீள பிரசுரிப்பதும் ஒளிபரப்புவதுமாகும் ஒரு காரணமாகும்.

ஆணாதிக்க சமூகத்தால் ஒரு ஆணாக கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்பட்ட நான் முழுமையாக ஆணாதிக்க கருத்துக்களிலிருந்து விடுபட்டிருப்பேன் என உணரவோ நம்பவோ இல்லை. இருப்பினும் எம் மீதான ஆதிக்கங்களை கட்டுடைத்து நம்மை புதிதாக மீள் உருவாக்கம் செய்வது என்பது ஒர் தொடர்ச்சியான பயணம். இந்தவடிப்படையில் ஒரு ஆணாதிக்க சமூகத்தில் ஒரு பெண்ணைவிட ஒரு ஆண் பெண்ணியவாதியாக இருப்பது அவ்வளவு கஸ்டமானதல்ல. ஆனாலும் ஒரு நபருக்குள் நடைபெறும் மாபெரும் உள்போராட்டம் என்றால் மிகையல்ல. ஒரு புறம் ஆணாதிக்க சிந்தனைகளின் ஆதிக்கம். அதேவேளை எது ஆணாதிக்கம் என்றும் அல்லது எது இல்லை என்றும் புரியமுடியாத கையறுநிலை. இந்ந நிலையில் ஒரு ஆண் வழமையாக மேற்கொள்ளப்படும் மனித வாழ்விற்கு தேவையான செயற்பாடுகளை முன்னெடுக்கும் அதேவேளை அந்த ஆண் பெண்ணியவாதியாக இருந்து பெண்களையும் அவர்கள் உணர்வுகளையும் மதித்து அவர்களை சுரண்டாது பாலியலுறவு வன்புணர்வுகளிலோ பாலியல் துஸ்பிரயோகங்ளோ ஈடுபடாது ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக வாழ்வது என்பது மிகவும் சவலான ஒரு விடயம். இது நான் மட்டுமல்ல சமூக மாற்றத்தில் அக்கறை உள்ள ஒவ்வொரு மனிதரும் குறிப்பாக ஆணும் முகம் கொடுக்கவேண்டிய பிரச்சனை இது. இந்தவடிப்படையில்தான் மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் தோழர்.உ.ரா.வரதராசன் அவர்களது இறப்பும் மற்றும் அவர் குறிப்பிட்ட தனது அக வாழ்வுக்கும் புற அல்லது பொது வாழ்வுக்கும் இடையில் மட்டுமல்ல அவற்றுக்குள்ளான பிரச்சனைகளையும் பார்க்கவேண்டி உள்ளது. இவரது கட்சியும் இது தொடர்பான பிரச்சனையை பூசி மெழுகியுள்ளதாகவே தெரிகின்றது. இதற்கு காரணம் பாலியல் மற்றும் பாலுறவு தொடர்பாக இந்த இடதுசாரி கட்சிகளும் மரபாந்த சமூக கருத்துக்களையா கொண்டிருக்கின்றார்கள் என சந்தேகிக்க வேண்யுள்ளது. இது தொடர்பாக பொறுப்புணர்வுடன் ஆனால் வெளிப்படையான ஒரு கலந்துரையாடலை அவர்கள் நடாத்துவது இனிவரும் காலங்களில் இதுபோன்ற பிரச்சனைகளை முகம் கொடுப்பதற்கு சரியான ஒரு பார்வையைக் கொடுக்கலாம். ஆல்லது தொடர்ந்தும் நமது மனதில் ஆழப்பதிந்திருக்கும் பிற்போக்கான சமூக சிந்தனைகளுடன் பிரக்ஞையற்று சமரசம் செய்வதையே தொடர்ந்துகொண்டு இருப்போம்.

இவ்வாறான பிரச்சனைகளைப் பார்ப்பதற்கு நமது அறிவு தொடர்பான விளக்கத்தையும் தெளிவாக்கி செல்வது நன்மையளிக்கும். இன்றைய காலத்தில் குறிப்பாக தென்னாசிய சமூகங்களில் வாழும் மனிதர்களின் அறிவை, அவர்கள் மீதான சமூக ஆதிக்கமானது ஆகக் குறைந்தது இரு வழிகளிலாவது கட்டுப்படுத்துகின்றது. முதலாவது மேலைத்தேய சிந்தனைக்கான முக்கியத்துவத்தை அளிப்பதன் மூலம். இரண்டாவது சமயங்களில் மீதான நம்பிக்கையும் அது ஏற்படுத்திய கட்டுப்பாடுகளையும் கட்டாயமாகவும் விமர்சனமின்றியும் பின்பற்ற நிர்ப்பந்திப்பதன் மூலம். லவ்லொக்(lovelock) என்ற சூழலியல் அறிஞர் கூறுகின்றார் இன்றைய மேற்கத்தைய விஞ்ஞான அறிவை உற்பத்தி செய்யும் சமூக அரசியல் விஞ்ஞான நிறுவனங்கள் கலிலியோ காலத்து சமய நிறுவனம் போலவே செயற்படுகின்றன. ஏனனில் அன்று கலிலியோ ஏற்படுத்திய அறிவுப் புரட்சியை எப்படி சமய நிறுவனங்கள் நிராகரித்தார்களோ அதேபோல் இன்று உருவாக்கப்படும் புதிய அறிவுப் புரட்சிகளை இன்றைய மேற்கத்தைய விஞ்ஞான அறிவை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் நிராகரிக்கின்றன அல்லது அடக்குகின்றன என்கின்றார். மறுபுறம் தென்னாசியாவில் இருக்கின்ற சமய நிறுவனங்கள் இப் பிரதேசங்களில் உருவாகிய கடந்தகால அறிவையும் அதற்கான தேடல்களையும் சமய அறிவாக மாற்றி அதனை ஒரு சடங்காக மட்டுப்படுத்தி தம் மதத்துடன் இணைத்து பொது மனிதர்களைக் கட்டிப்போடுதவற்கும் கேள்வியின்றி அவர்கள் பின்பற்றுவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். மறுபுறம் சமயங்களுக்கு எதிரானவர்கள் அல்லது இவ்வாறான கீழைத்தேய அறிவை விஞ்ஞான அறிவல்ல என வாதிடும் ஐரோப்பிய சிந்தனைக்கு அடிமைப்பட்ட அறிஞர்கள் தென் பூகோளம் (Global South- இது வட அமெரிக்க மற்றும் மேற்குலகையும் மற்றும் வட பகுதி தவிர்ந்த பிரதேசங்களை குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது) உருவாக்கிய அறிவையும் அதன் உண்மையான பயன்பாட்டையும் புரிந்துகொள்ள தவறுகின்றனர். இயற்கையான வழிகள் மூலம் இந்த மன நோய்களை எவ்வாறு குணப்படுத்தலாம் என்பதைபற்றிய அக்கறையும் ஆர்வமும் நமக்கு வேண்டும். ஆனால் பிரச்சனை என்னவெனில், இயற்கையான வழிகளான தியானம் மூச்சுப் பயிற்சி மற்றும் யோகா, தந்திரா போன்ற ஆசிய பிரதேசங்களில் உருவான அறிவுகளை அங்கு ஆதிக்கத்திலிருக்கும் சமயங்களும் அதன் சாமியார்களும் ஆட்கொள்வதால் அந்த அறிவின் முக்கியத்துவம் பொது மனிதர்களுக்கு பயனில்லாமல் போகின்றது. மறுபுறம் இந்த சமயங்களும் சாமியார்களும் தம் பிரதேசங்களில் உருவான அறிவை மனிதர்ளை சுரண்டுவதற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். இப் பிரதேசங்களில் உருவான இவ்வாறன அறிவுகள் மனிதர்களின் காமம் பாலியலுறவு மனித உறவு மற்றும் உளவியல் என்பவற்றை மேம்படுத்த நன்றாகவே பயன்படுத்தப்படக் கூடியன. ஆனால் இந்த அறிவுகள் இப் பிரதேசங்களின் பிரதான ஆதிக்க அறிவுத் தளங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளமை மிகவும் துயரமானது.

தென்னாசிய மனிதர்கள் அறிவை மதிக்கும் அல்லது பெற்றுக்கொள்ளும் முறைகளில் இருக்கும் முரண்பாடுகள் கவனத்திற்கு உரிய விடயம். மேற்குலகில் அறிவு தொடர்பான விடயங்கள் சமய நிறுவனங்களிலிருந்தும் அச் சமூகம் சார்ந்த காலாசார பாதிப்புகளிலிருந்தும் ஒரளவாவது விடுதலை பெற்று சுதந்திரமாக இருப்பதுதான் என்றால் மிகையல்ல. ஆனால் இந்த நிலை இன்னும தென்னாசிய சமூகங்களில் ஏற்படவில்லை. அகவே இச் சமூகங்களில் அறிவு என்பது அதன் சமய கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலை பெற்று சுதந்திரமாக இயங்க வேண்டிய தேவை உள்ளது. மனித நலன்களுக்கும் வளர்ச்சிக்கும் மற்றும் சுற்று சூழலைப் பாதுகாப்பதற்குமான அக்கறையும் அது தொடர்பான அறிவுத்தேடலும் சமூக சமய முதலாளித்துவ ஆதிக்க நிறுவனங்களுக்கு அப்பாற்பட்டு சுதந்திரமாக அதேவேளை அடக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்து ஆனால் சுதந்திரமாக வளர்ந்தும் வந்திருக்கின்றன. இந்த அறிவுகள் பிரபஞ்சத்தையும் அதில் வாழும் மனிதர்களையும் எவ்வாறு சமநிலையில் வைத்திருப்பது என்பது தொடர்பான அக்கறை கொண்டவை. ஆனால் சமூக சமய ஆதிக்க நிறுவனங்களால் அவை உள்வாங்கப்ட்டோ அல்லது அழிக்கப்பட்டடோ அடக்கப்பட்டோ வந்திருக்கின்றன. இதன் ஆதிக்கங்களிலிருந்து இந்த அறிவைப் பிரித்து சுதந்திரமாக்க முடியுமானால் அதைப் பொது அறிவாக்க முடியுமானால் இந்த சமய நிறுவனங்களும் சாமியார்களும் மதகுருமார்களும் மற்றும் முதலாளித்துவ மருந்து நிறுவனங்களும் மனிதர்களை தொடர்ந்தும் சுரண்டுவதிலிருந்தும் ஏமாற்றுவதிலிருந்தும் விடுவிக்கலாம். மேலும் காமம் காதல் மற்றும் தியானம் என்பனவும் அவைபோன்ற மனித வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையான பல விடயங்கள் சமூக விஞ்ஞான தத்துவார்த்த அடிப்படையில் நோக்கப்பட்டுவந்திருக்கின்றன. குறிப்பாக மேலைத்தேய நாடுகளில் இவை ஒரு புறம் சமயங்கள் சார்ந்தும் மறுபுறம் மேற்கத்தைய விஞ்ஞானம் சார்ந்தும் மற்றும் இவை இரண்டுக்கும் அப்பாற்பட்டு சுதந்திரமாகவும் இதற்கான தேடல்கள் முயற்சிகள் நடைபெற்றுவந்திருக்கின்றன. ஆனால் குறிப்பாக தென்னாசிய சமூகங்களில் இவ்வாறன ஒரு சூழல் இன்னும் உருவாகவில்லை. அனைத்தும் மதங்களுக்குடாகவே பார்க்கப்படுன்றன. மத நிறுவனங்களின் கட்டுப்பாடுகளை மீறி கூறப்படுகின்றனவைக்கு மதிப்பு இல்லை. இந்த நிலை மாறப்படவேண்டும். அப்பொழுதே மனிதரின் பிரக்ஞை, மூச்சு, காம சக்தி மற்றும் தியானம் தொடர்பான சுயாதினமான சுதந்திரமான கருத்துக்கள் அறிவுகள் பரவலாக்கப்டும் சாத்தியம் ஏற்படும். ஆகவே பிரக்ஞை, மூச்சு, காம சக்தி மற்றும் தியானம் என்பன சமய நிறுவனங்களில் இருந்து விடுதலை பெற்று பொதுவான பாடங்களாக அனைவருக்கும் கற்பிக்கப்படவேண்டும். ஏனனில் இவை தொடர்பான அறிவு மனிதர்களின் ஆரோக்கியமான வாழ்விற்கு தேவையானவையும் முக்கியமானதுமாகும். இது தொடர்பாக ஞானி அவர்களும்; தனது குமுதத்தற்கான பத்தியிலும் வலைப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளார். மேலும் 70 ஆண்டு கால் சோவியத் யூனியன் வரலாற்றில் அதாவது பல தலைமுறைகளை கண்ட நாட்டில் 90களின் பின் ஏற்பட்ட மாற்றம் அதவாது முதலாளித்துவ ஐனநாயக சூழல் மனிதர்களை மீண்டும் மதங்களை நோக்கி மிக இலகுவாக இழுத்துள்ளது. இது எதனால்? இது போன்று ஆசிய நாடுகளில் பல சாமி மனிதர்கள் பொது மனிதர்களை தொடர்ந்தும் ஏமாற்றிய பொழுதும் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு சாமியாரிடம் பொது மனிதர்கள் அடைக்கலமாகின்றார்கள். இவ்வாறு நடைபெறுவதற்கான மனித தேவையையும் அதற்கான உளவியல் காரணத்தையும் சமூக மாற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் ஒவ்வொருவரும் அறிய வேண்டியது மிக முக்கியமானதும் அவசியமானதுமான ஒன்று. இதைப் புறக்கணிப்பதானது உண்மையான முழுமையான சமூக மாற்றம் என்பது தொடர்ந்தும் குறைபாடு கொண்டதாக மட்டுமல்ல பாரிய தவறொன்றை தொடர்ந்தும் சமூக மாற்றத்திற்காக செயற்படுகின்றவர்கள் விடுவதாகவே இருக்கும்.

காதல் என்பது காமத்தைப் போன்றோ பிரம்மச்சாரியத்தை போன்றோ மனித வாழ்வில் இடையில் உருவாகி இடையில் இல்லாமல் போகும் ஒரு விடயமல்ல. ஒரு மனிதர் உருவாவதில் இருந்து இற்ப்பதுவரை அவரது வாழ்வில் ஒன்றாக பயணிக்கும் ஒரு முக்கியமான உந்து சக்தி. ஆனால் காமத்தையே இன்னும் கடக்காத நாம் (அல்லது நான்) காதல் தொடர்பாக எழுதுவது அர்த்தமற்றது. ஏனனில் எனது பிரக்ஞையற்ற நிலையின் காரணமாக நான் எழுதும் விடயங்கள் ஆணாதிக்க கருத்தியலாகவும் மற்றும் காம மற்றும் பாலியல் அடக்குமுறையின் வெளிப்பாடாக எக் கணத்திலும் வந்துவிடலாம். ஏனனில் அந்தளவிற்கு இவ்வாறான கருத்தாக்கங்கள் நமக்குள் பல்லாயிரம் ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. இந்த நிலையில் நமது காம உணர்வையும் மற்றும் பாலியல் உறவுக்கான தேவையையும் நாம் விரும்புகின்றவர்களிடம் எவ்விதமான பயமுமின்றி தயக்கமுமின்றி நாகரிகமாக வெளிப்படுத்தும் கலாசாரமும் அதேநேரம் மற்றவர் மறுக்கும் சமயத்தில் அதை ஏற்கும் பண்பும் கொண்ட ஒரு சமூகம் உருவாக்கப்படவேண்டும். அப்பொழுதுதான் பாலியல் சுரண்டல்கள் வன்புணர்வுகள் துஸ்பிரயோகங்கள் என்பவற்றிலிருந்து நாம் ஒவ்வொருவரும் விடுபட முடியும். இதற்கு முதலடிப்படையானது காமம் மற்றும் பாலியல் உறவுகள் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் விவாதங்கள் பரவலாக தயக்கமின்றி வெளிப்படையாக தமிழ் எழுத்து சூழலில் நடைபெறவேண்டும். இரண்டாவது தியானம் மற்றும் பிரக்ஞை என்பனவற்றின் முக்கியத்துவமும் தேவையும் வரலாற்றில் பல்வேறு வழிகளில் தேடலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கின்றன. துரதிர்ஸ்டவசமாக சமய நிறுவனங்களின் ஆதிக்கத்தினால் இது அவர்களுக்குரியதாக மட்டும் பார்க்கப்படுவது துர்ப்பாக்கியமானது. அவற்றிலிருந்து அவை விடுதலை செய்யப்பட்டு மனித வளர்ச்சிக்கும் நல்வாழ்விற்கும் சமய நிறுவனங்கள் சாராத அறிவாக பயன்படுத்தப்படவேண்டும். அப்பொழுதே மத நிறுவனங்களிலிருந்தும் அதை பிரதிநிதித்துவப்படுத்தும் சாமியார்கள் மற்றும் மதபோதகர்களிலிருந்தும் நாம் விடுதலையடைவது மட்டுமல்ல அவர்கள் நம்மை ஏமாற்றாமலும் சுரண்டாமலும் இருப்பதிலிருந்து விடுபடுவோம்.

இக் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் பொழுது கனடாவில் ஒன்றாரியோ மாகாண முதல்வர் மூன்றாம் வகுப்பிலிருந்து பால், பாலியல் மற்றும் பாலியலுறவு கல்வியை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கட்டுரை எழுதிமுடியும் தறுவாயில் தனது முடிவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த முடிவானது பாலியல் சுதந்திரம் இருக்கின்றதாக கூறப்படுகின்ற மேலைத்தேய நாடுகளின் கூட பாலியல் மற்றும் அது தொடர்பான கல்வியை கற்பிப்பதற்கு எவ்வளவு தடைகள் இருக்கின்றன என்பதை காண்பிக்கின்றது. ஆனாலும் பாலியல் கல்வி போன்ற செயற்பாடானது கனடாவில் மட்டுமல்ல அனைத்து நாடுகளுக்கும் விரைவாக பரவலாக்கப்படவேண்டிய அவசரமான தேவை உள்ளது. இதன் மூலம் சமூகத்தில் நடைபெறும் பாலியல் பாலியலுறவு மற்றும் வன்புணர்வு துஸ்பிரயோகங்கள் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரளவாவது தீர்வு ஒன்றைக் காணலாம். ஆரோக்கியமான ஒரு மனித சமூகம் ஒன்று தொடர்ந்தும் இந்த பூமியில் உயிர் வாழவேண்டுமாயின் இவ்வாறன ஒரு கல்வித்திட்டம் முன்நிபந்தனiயானது என்றால் மிகையல்ல.

-முற்றும்-

http://meerabharathy.wordpress.com/2010/08/10/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE-2/

கட்டுரையில் கொஞ்சம் செய்முறை செயல்முறையையும் பற்றி கொஞ்சம் விளக்கமாக எழுதி இருக்கலாம். <_<

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது தியானம் மற்றும் பிரக்ஞை என்பனவற்றின் முக்கியத்துவமும் தேவையும் வரலாற்றில் பல்வேறு வழிகளில் தேடலுக்கு உள்ளாக்கப்பட்டு வந்திருக்கின்றன. துரதிர்ஸ்டவசமாக சமய நிறுவனங்களின் ஆதிக்கத்தினால்

தியானம் இதை வைச்சுத்தானே இந்த சாமியார் கூட்டங்கள் விளையாட்டு காட்டுறாங்கள்......கண்ணை மூடு சாமி தெரியும் என்று போட்டு.....சாமியைகாட்டமல் வேறு என்னதையோ காட்டுறாங்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி கிருபன்! நல்ல கட்டுரை!! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.