Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பாகவும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் கொழும்பை விடவும் தில்லியே அதிக திகிலடைந்திருக்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பாகவும், இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் கொழும்பை விடவும் தில்லியே அதிக திகிலடைந்திருக்கிறது

2009 மேயில் இலங்கையில் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதன் முழுச் சூத்திரதாரி அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ என்றால் அது மிகையாகாது. இதில் மிகவும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு விடயம் என்னவென்றால் தனது ராஜதந்திரச் சூழ்ச்சியின் மூலம் தான் புரிந்துவந்த போர்ர்க்குற்றங்கள் தொடர்பாக இந்தியாவை மவுனிக்கச் செய்ததோடு முள்ளிவாய்க்கால் படுகொலைகள் தொடர்பாக இந்திய உளவு அமைப்பான ரோ சேகரித்து வைத்திருந்த ஆதாரங்களை நிரந்தரமாகவே பூட்டி வைக்கச் செய்ததும்தான்.

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் தில்லியின் பங்குபற்றிய விபரங்கள் இப்போது வெளிக்கிளம்ப ஆரம்பித்திருந்தாலும் கூட, இலங்கை புரிந்த போர்க்குற்றங்களுக்கெதிரான சர்வதேச மட்டத்தில் கொண்டுவரப்பட்ட விசாரணைகளை இந்தியா தடுத்தி நிறுத்தியிருக்கிறது. ஆனாலும் வேறு தரப்புக்களிலிருந்து வெளிவரும் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை நோக்கும் போது இந்தியாவினது போரை இலங்கை நடத்தியதாகவே தோன்றுகிறது.

நாராயணனும், சிவ் ஷங்கர் மேனனும் சொன்னதற்கேற்ப இலங்கை தனது இறுதிக்கால தாக்குதலை நடத்தியிருந்தாலும், முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் செய்மதிப் பட ஆதாரங்களைக் காட்டி இந்தியா இலங்கையை மிரட்டிய சம்பவத்தால் கோத்தபாய கடும் சீற்றமமடைந்தது விளங்கிக்கொள்ளக் கூடியதுதான். தனது செய்மதிப் படங்களின் மூலம் புலிகள் உயர்மட்டத் தலமைப் பீடம் பொதுமக்கள் செறிவாகத் தஞ்சமடைந்திருந்த முள்ளிவாய்க்கால் பகுதியில் நிலைகொண்டிருப்பதை அறிந்து கொண்ட ரோ, இதை நாராயனன் - சிவ் ஷங்கர் மேனன் கூட்டுக்குச் சொல்ல அவர்களும் பொதுமக்கள் தஞ்சமடைந்திருந்த முள்ளிவாய்கால் " பாதுகாப்புப் பிரதேசம்" மீதான இலங்கைப் படைகளின் இறுதியான தாக்குதலுக்கு உத்தரவிட்டனர். முள்ளிவாய்க்கால் எனும் பிரதேசம் முற்றாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதியென்பதால், அங்கு நடைபெறப்போகும் எந்தப் போர்க்குற்றங்களும் ஆதாரங்கள் இல்லாமல் மறைக்கப்பட முடியும் என்பது நாராயணன் அவர்களின் தனிப்பட்ட எண்ணகருவாகும். பெருமளவிலான பொதுமக்கள் இழப்புகலைத் தவிர்ர்கும் முகமாக தமது இறுதித் தாக்குதலை ஆகஸ்ட் மாதம் வரையிலும் இலங்கையின் ராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா தள்ளிப்போட்டிருந்தாலும்கூட, சோனியாவின் பொம்மைகளான நாராயணனும் - சிவ் ஷங்கர் மேனனுன் தாக்குதல் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்ததுடன், அமெரிக்கா தலமையில் முள்ளிவாய்க்காலில் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் பொதுமக்களையும், புலிகளின் தலமையையும் வெளியேற்றும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட முன்னர் அவர்கள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்றும் திடசங்கற்பம் பூண்டிருந்தனர். அதன் விளைவு ஒரு முற்றான இனப்படுகொலைக்கு முன்னுதாரணமாக காட்டக்கூடிய வகையில் தில்லி - கொழும்பு கூட்டுத் திகழ்ந்ததுடன் ஒரு போராட்டத்தை அதன் வேரோடு சாய்க்கும்போது அதனோடிணைந்து ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் அழிப்பையும் சரியென்று வாதிடும் ஒரு புதிய நடைமுறையையும் சொல்லியிருக்கிறது. இனக்கொலைக்கான மொத்தப் பொறுப்பும் கோத்தபாயவுக்குறியதல்ல, அவர் சோனியாவின் போரையே மறைமுகமாக இங்கே நடத்தியிருக்கிறார்.

தனது உளவு அமைப்பின் செய்மதிப் படங்களை ஆதாரமாக வைத்து முள்ளிவாய்க்காலில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டதியிட்டு இந்தியா பிழையான விதத்தில் இலங்கையைக் கேள்வி கேட்கத் தொடங்கியதிலிருந்து, நடந்தேறிய இனக்கொலையின் விபரங்கள் மெல்ல வெளிவரத் தொடங்கின. இதனால் கொதிப்படைந்த இலங்கை மேற்கொண்ட அதிரடி நகர்வு இந்தியாவை மவுனிக்கச் செய்ததுடன், போர்க்குற்ரங்கள் தொடர்பான அனைத்து விபரங்களையும் இந்தியா மறைக்கவும் நிர்ப்பந்திக்கப்பட்டது. இது இலங்கையால் இந்தியா மீது மிகவும் வெற்றிகரமாகப் பிரயோகிக்கப்பட்ட ஒரு ராஜதந்திர நகர்வு என்று கணிக்கப்படுகிறது.

இந்திய உளவுப் பிரிவான ரோவின் தென்பகுதி மைய்யமான சவுத் புளொக்கில் இருந்த அதிகாரிகள் செய்மதிப்படங்களின் மூலம் புலிகளின் நகர்வுகளை அவதானித்து போர்முனையிலிருந்த இலங்கை - இந்தியக் கூட்டுபடைகளுக்கு தகவல் வழங்கியதன் மூலம் தமிழ்ப் போராளிகள் மீதான இலங்கைப் படைகளின் வெற்றிக்கு வழிவகுத்தனர். முள்ளிவாய்க்காளில் நடைபெற்ற போர் அழிவுகளின் முழுமையான ஆதாரங்களை செய்மதிமூலம் சேகரிக்கும் நிலமையில் ரோ அன்று இருந்தது. ரோவினால் எடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனக்கொலையின் செய்மதிப் படங்கள் இலங்கைக்கு பாரிய சங்கடத்தை ஏற்படுத்தும் என்று இந்தியா கருதியதால், புலிகளுக்குப் பின்னான காலங்களில் இலங்கையை தம் வழிக்குக் கொண்டுவர அவை உதவக்கூடும் என்று நம்பியது. ஆனால் அதன் எதிர்பார்ப்பிற்கு முற்றும் எதிராகவே அனைத்தும் நடந்தன.

இந்தியாவின் இந்த நகர்வினால் கொதிப்படைந்த கோத்தபாய அவர்கள் இலங்கை போர்ர்க்குற்றங்களுக்காக விசாரிக்கப்படும் பட்சத்தில் இனக்கொலையில் சவுத் புளொக்கின் ஊடாக இந்தியா வகித்த பங்கு அம்பலமாக்கப்படும் என்று எச்சரித்ததன் மூலம் இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்தார். கோத்தபாயவின் திடீர் அச்சுறுத்தலினால் கலங்கிப்போன இந்தியா அதிரடித் திருப்பமாக இலங்கையசி சாந்தப்படுத்தும் நோக்கில், அதற்கெதிராக மே 2009 இல் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் அமைப்பினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முன்னின்று எதிர்த்து நிர்மூலமாக்கியது. இந்தியாவை நீண்ட காலத்திற்கு தனது கட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய பயங்கரமான துரும்புச் சீட்டு இன்று இலங்கையிடம் இருக்கிறது.

பரவலான தமிழகத்துத் தமிழர்களின் கோபத்திற்கு மத்தியிலும்கூட, தில்லியை முற்றான மவுனத்திற்குள் வைத்திருந்ததன் மூலம், இலங்கைத் தொடர்ந்தும் தனது இனவழிப்பில் ஆக்ரோஷமாகச் செயற்படவும், இனச் சுத்திகரிப்பை வெற்றிகரமாகத் தொடர்ந்து நடத்தவும் வழிசமைத்துக்கொடுத்ததன் மூலம் சவுத் புளொக் தமிழ் நாட்டுத் தமிழரை மேலும் அந்நியப்படுத்தியது. தனது மத்திய அரசின் பங்காளியான தி. மு. கா வை தனது தமிழின எதிர்ப்பு - சிங்கள ஆதரவுக் கொள்கைகளுக்கு ஆதரவளிக்க நிர்ப்பந்தித்தன் மூலம் தில்லியானது " தமிழினக் காவலாளி" எனும் தி.மு. க வின் பட்டத்தை சிறுகச் சிறுக அழித்தது. அதுமட்டுமில்லாமல் சி. பி. ஐ ஊடாக ஸ்பெக்ட்ரம் ஊழலைக் கிளரியதன் மூலம் தி. மு. கவை அது மேலும் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.

இந்தியாவுக்கெதிரான பலமான துரும்புச் சீட்டை இலங்கை வைத்திருந்ததன் மூலம் மேலும் தீவிரப் படுத்தப்பட்ட பன்முக இனவழிப்பிற்கெதிராக இந்தியாவை மவுனிக்கச் செய்தது மட்டுமல்லாமல் வடக்கில் தமிழரின் வாழ்விடங்களிலிருந்து அவர்களை விரட்டியும், கொடுமைப்படுத்தியும் தான் நடத்திவரும் முற்றான ராணுவ மயமாக்கலுக்குத் தேவையான நிதியையும் அது தில்லியிடமிருந்து பெற்றுக்கொண்டது. இந்துத்துவ இந்தியாவின் தலைவியான சோனியா காந்தியின் ஆசீருடன் இலங்கையின் வடக்குக் கிழக்கில் இந்துக்கோவில்களில் மணியடிக்கக் கூடாது என்று சிங்களப் படைகள் போட்ட கட்டளையை இந்தியாவின் இந்துக்களும் தமிழர்களும் எப்படி நோக்குகிறார்கள் ?

இலங்கை புரிந்த போர்க்குற்றங்களுக்கெதிராக சர்வதேசம் செயற்படத் தொடங்கும்போது இனவழிப்பில் இலங்கையின் பங்காளியான இந்தியா செய்த மாபெறும் அரக்கத்தனம் சர்வதேச ரீதியில் அதன் தார்மிக நம்பகத்தனமையை உயர்த்துவதற்கு எந்தவகையிலும் உதவப்போவதில்லை. ஐ. நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தைப் பெறத் துடிக்கும் ஒரு நாடு, இனவழிப்பில் பெயர்போன காட்டுமிராண்டி அரசாங்கத்தோடு சேர்ந்திருப்பதும், அது செய்த இனவழிப்பிற்கான செய்மதி ஆதாரங்களை மறைத்துவைத்து, இனக்கொலை நடந்தேறியபோது மவுனித்திருந்ததும் எப்படி சாத்தியம்? இந்தியாவின் இந்தச் செய்கை குற்றத்தின்பாலானது. உலகின் ஏனைய மனித உரிமை மீறல்களைப் புரியும் நாடுகளின் செயலினை ஒத்தது. இனவழிப்பின்போது மவுனமாயிருந்ததன் மூலம் "தனது அயல் நாடுகளில் இடம்பெறும் மனிதவுரிமை மீறல்களில் இந்தியா கவனமெடுப்பதில்லை" என்கிற ஒபாமாவின் குற்றச்சாட்டுக்கும் அது ஆளானது.

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களின் மேல் இனித் தனது போரை ஆரம்பிக்கப்போவதாக இலங்கை வெளிப்படையாக அறிவித்திருப்பதானது அந்நாடுகளின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் தலையிடியைக் கொடுத்திருக்கிறது. புலம்பெயர் நாடுகளில் தனது தூதுவராலயங்களில் புலநாய்வு அதிகாரிகளை அமர்த்தியிருப்பதன் மூலம், புலம்பெயர் தமிழர்க்கெதிரான புலநாய்வுப் போரையும் அது முடுக்கி விட்டிருக்கிறது. இலங்கையில் விஜயத்தை மேற்கொள்ளும் புலம்பெயர் தமிழர்களும் அவர்கலது தாயகத்து உறவுகளும் இந்த புலநாய்வுத் தகவல்களினடிப்படையில் கைதுசெய்யப்பட்டுக் காணாமல்ப் போவதும், கப்பம் கேட்டுக் கடத்தப்படுவதும், சிலவேளைகளில் கொல்லப்படுவதும் நடக்கிறது. அரச ஆதரவு வெள்ளை வான் கும்பல்கள் இந்த கைங்கரியத்தை நடத்தி வருகின்றன. ஊக்கம்பெற்றுவரும் புலம்பெயர் தமிழர்களின் போர்க்குற்ற விசாரனைகளுக்கான அழைப்பானது இனிமேல்த் தடுக்கமுடியாமல்ப் போகப் போகிறது. உலகிற்கு நண்மை பயக்க வேண்டுமானால் மனித குலத்திற்கெதிரான குற்றங்கலைப் புரிந்த இந்தக் கயவர்கள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்படுவதோடு, இனிமேல் இவ்வாறான சிறுபான்மையினருக்கெதிரான இனவழிப்புகள் உலகில் வேறெங்கிலும் நடைபெறாவண்ணம் செயல்த்திட்டங்கள் வகுப்பதும் அவசியம்.

தில்லி தலமையிலான மனிதவுரிமை மீறல்க் குற்றவாளிகள் 2009 இல் ஐ. நா மனிதவுரிமைக் கவுன்சிலின் இலங்கைப் போர்க்குற்றம் தொடர்பான செயற்பாடுகளை முடக்கியிருந்தாலும்கூட, உலகில் மனிதவுரிமையப் பேணும் பல்வேறு நாடுகள் தம் மக்களில் எவர்க்காவது மனிதவுரிமை மீறல்கள் நடந்திருப்பின் அவற்றை விசாரிக்க ஆவன செய்வது மனதிற்கு அமைதியளிக்கிறது. அக்குற்றங்கள் அந்நாடுகளில் அல்லாது வேறெங்கு நடந்திருப்பினும் கூட அந்நாட்டுச் சட்டங்கள் விசாரணைகளை நடத்துவதற்கு ஆவன செய்கின்றன. அணமையில் மகிந்தவின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழக் உரை ரத்துச் செய்யப்பட்டதும், அவருடன் பயணம் செய்த போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ராணுவ அதிகாரியொருவர் தனி விமானத்தில் தப்பி ஓடியதும் குற்றங்களைப் புரிந்த அரசுகளின் தலைவர்கள் எதிர்நோக்கிவரும் சிக்கல்களைக் காட்டுகிறது. இவை அனைத்தும் தன்னலமின்றிச் செயற்பட்டுவரும் புலம்பெயர் தமிழர்களின் முயற்சியினால் கிடைத்த பலாபலன்களே அன்றி வேறில்லை. இவர்களின் இந்தச் செயற்பாடுகள் இனவழிப்பிற்கு ஆளான தமது சமூகத்திற்கு நீதி தேடுவதுடன் வேறு சமூகங்களுக்கும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் முன்மாதிரியாக அமைகிறது.

சிங்கள இனக்கொலையாளர்கள் தாம் போகுமிடங்களில் எதிர்நோக்கும் அசவுகரியம் அந்நாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் தமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு நீதி கேட்கும் செயற்பாடுகளின் தீவிரத்தைக் காட்டுகிறது. " கொடிதாங்கிய ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களைப் புலிகளால் இனிப் புலம்பெயர் நாடுகளில் திரட்ட முடியுமா? அந்தக் காலம் மலையேறிவிட்டது" என்று டி.பி.எஸ் ஜெயராஜ் எழுதிய கட்டுரையின் மை காயுமுன்னரே இங்கிலாந்தில் 50,000 தமிழர்கள் உணர்வுடன் ஒன்றிணைந்து இனக்கொலையாலர்களை கைதுசெய்யும்படி உரக் கூவியது நடந்து முடிந்திருக்கிறது. அருவருக்கத்தக்க டி. பி. எஸ். ஜெஅயாரிஜின் கட்டுரைக்கும் , பிரஸ்ஸல்ஸில் இருக்கும் இலங்கைத் தூதுவரான ரவினாத் ஆரியசிங்க எழுதிய "புலிகளின் பிரச்சாரத்தை முறியடித்தல்" என்ற "டெயிலி நியூஸ்" கட்டுரைக்கும் அதிக வேறுபாடில்லை. இவை இரண்டுமே இலங்கைப் புலநாய்வுப் பிரிவின் அலுவலகத்திலிருந்தே தயாரிக்கப்படுகின்றன.

இவ்வாறான தெருப் பத்திரிக்கையாளர்களின் கட்டுரைகள் வாசகர்களின் சரியான பதிலைப் பெறவும் தவறுவதில்லை. இப்படியான சிங்கலப் பத்தி எழுத்தாலர்களின் ஆக்கங்கள் சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனங்களுக்கும் நகைப்பிற்கும் உள்ளாவதோடு, சவதேச புகழ்பெற்ற பத்திரிக்கையாளர்களின் கடுமையான கண்டணங்களையும் சம்பாதித்துக்கொள்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியப் புலநாய்வு மற்றும் சர்வதேச விவகார மட்டத்தில் அண்மையில் சில நம்பிக்கை தரக்கூடிய விடயங்கள் நடந்திருக்கிறது. கடந்த நவம்பர் 17 இல் சென்னையில் நடந்து முடிந்த இந்த அமர்வு ஈழத்தைப் பொறுத்தவரையிலும் எந்தவித முன்னேற்றத்தையும் கொண்டிராதபோதும், சில அதிகாரிகல் ஈழத்தில் நடந்தேறிய இனக்கொலைக்கு தென்னிந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த குறிப்பிட்ட இரு சமூகங்கள் இந்திய வெளியுறவுக்கொள்கையில் கொன்டிருக்கும் செல்வாக்கே காரனம் என்று கருதுகின்றனர். தமது தவறான வழிநடத்தலின் மூலம் சீனாவைத் தமது புறக்கதவு வரை அழைத்து வந்திருக்கும் இவர்கள் இப்போது என்ன செய்யலாம் என்று சிந்திக்கின்றனர். தமது தவறுகளை மரைப்பதற்கு இன்னும் ஏதாவது தமிழர்களுக்கெதிரான செயற்பாடுகளின் மூலம் இலங்கையை தம்பக்கம் இழுக்கலாமா என்று பார்க்கின்றனர். இந்தியா ஒருபோது ஐ,நா தலையீட்டை விரும்பப்போவதில்லை. யுத்தக்குற்ற விசார்ணைகளை நடத்தவும் விடப்போவதில்லை.. இந்தியா காஷ்மீரில் எதிர்கொள்வதும் இதே குற்றச்சாட்டுக்களைத்தான்.

காஷ்மீரில் தானும் இதேவைகையான குற்றச்சாட்டை எதிர்கொள்வதனால்த்தான் இலங்கை புரிந்த இனக்கொலைக்கு தனது ஆதரவை இந்தியா வழங்கியது என்பது தர்க்கரீதியில் சாத்தியமானதா?? அப்படியானல் முள்ளிவாய்க்காலில் சிங்கள் கொன்றுதள்ளிய ஆயிரமாயிரம் மக்களைப் போல இந்தியாவும் காஷ்மீரில் இனக்கொலை புரிகிறது என்பதை அது ஏற்றுக்கொள்கிறதா? இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் இந்த நியாயப்படுத்தல் நகைப்பிற்கிடமானது. கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களில் பிராமா செல்லனியைத் தவிர மற்ற் அனைவருமே எதிர்மரையான கருத்துக்கலைக் கொண்டவர்கள். " சிறிலங்காவின் ரத்தக் குளியலுக்குப் பின்னல்" என்கிற தலைப்பில் அவர் கடந்த அக்டோபர் 24 இல் மெயின்ஸ்ட்ரீம் வீக்ல்ய்" எனும் பத்திரிக்கையில் அருமையான கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார். ஆனால் அவர் இன்று அங்கம் வகிக்கும் இந்திய அதிகாரவர்க்கம்தான் இலங்கைக்கு ஆயுத மற்றும் தார்மீக உதவி வழங்கி தமிழர்களைக் கொன்று குவித்தது என்பதும் உண்மை. ஆனாலும் அது இறுதியில் இலங்கையிடம் தனது கட்டுப்பாட்டை இழந்து பிடிகொடுத்து மாட்டுப்பட்டதுதான் நடந்தது.

1987 இல் இருந்து இந்திய வெளியுறவுக் கொள்கையென்பது நீண்டகால நலன்களின் அடிப்படையிலன்றி அவ்வப்போது ஆட்சிக்கு வரும் தலைவர்களின் விருப்பு வெறுப்புகளிலேயே தங்கியிருக்கிறது. அதில் முக்கியமானது 2004 இல் ஆட்சிக்கு வந்த கட்சித்தலமை ஒரு பழிவாங்கல் நடவடிக்கைக்காக பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிரைப் பறித்தது. இது அதுவரையிலும் இருந்துவந்த போலியான "தலையிடாக் கொள்கை" என்பதிலிருந்து முற்றாக விலகி முற்றான ஈடுபாட்டுடன் நடந்தேறிய இனக்கொலை என்றால் அது மிகையாகாது.

அண்மையில் நடந்து முடிந்த பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகள் சோனியா - ராகுல் கூட்டின் பலவீனத்தைக் காட்டுவதோடு விரைவில் இவர்களின் எதோச்சதிகாரம் தில்லியிலிருந்து அகற்றப்பட்டு தமிழர்கள் அனைவரும் விரும்பி எதிர்பார்க்கும் 2004 இற்கு முன்னரான காலத்தை ஒத்த சூழ்நிலை உருவாகி தமிழர்களுக்கு நீதிவழங்குவதற்கு இன்றிருக்கும் பெரும் தடைக்கல் அகலும் என்றும் எதிர்பார்க்கலாம்.

கிறவுண்ட் ரிப்போட்டிற்காக வி. எஸ். சுப்ரமணியம்

தமிழில் ரகுனாதன்

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் தில்லியின் பங்குபற்றிய விபரங்கள் இப்போது வெளிக்கிளம்ப ஆரம்பித்திருந்தாலும் கூட, இலங்கை புரிந்த போர்க்குற்றங்களுக்கெதிரான சர்வதேச மட்டத்தில் கொண்டுவரப்பட்ட விசாரணைகளை இந்தியா தடுத்தி நிறுத்தியிருக்கிறது.

ஈழத் தமிழர்களை கொன்று குவிப்பதற்கு துணை நின்றதில், இந்தியாவிற்குப் பெரும் பங்குண்டு.

உலக அரங்கில், இந்தியாவின் முகத்திரை கிழிக்கப் படவேண்டும்.

இந்தியாவின் வெளிவிகார கொள்கையில் எவ்வாறு எமது தரப்பின் பக்கம், எமக்கு சார்பாக மாற்றங்களை கொண்டு வரலாம் என அரசியல் ரீதியாக ஆராய்வதே இன்றைய தேவை.

தொடரும் சிங்களத்தின் சீன உறவு,

தொடரும் பாகிஸ்தானுடனான உறவு,

லக்ஸர் ஈ தொய்பா உடனான தொடர்பு,

அது ஒரு நாளும் இந்தியாவின் ஐ. நா. நிரந்தர உறுப்பினர் பதவிக்கு ஆதரவு அளிக்காது என்ற உண்மை,

இவற்றை நாம் முன்னிலை படுத்தி எமது அரசியலை தொடரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

பெருமளவிலான பொதுமக்கள் இழப்புகலைத் தவிர்ர்கும் முகமாக தமது இறுதித் தாக்குதலை ஆகஸ்ட் மாதம் வரையிலும் இலங்கையின் ராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா தள்ளிப்போட்டிருந்தாலும்கூட, சோனியாவின் பொம்மைகளான நாராயணனும் - சிவ் ஷங்கர் மேனனுன் தாக்குதல் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்ததுடன், அமெரிக்கா தலமையில் முள்ளிவாய்க்காலில் முற்றுகைக்குள்ளாகியிருக்கும் பொதுமக்களையும், புலிகளின் தலமையையும் வெளியேற்றும் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட முன்னர் அவர்கள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்றும் திடசங்கற்பம் பூண்டிருந்தனர்.

இது ரொம்ப ஓவர்.. இந்தியன் திருடன் என்பதில் சந்தேகமில்லை..! ஆனால், ஏதோ முள்ளிவாய்க்காலில் மட்டும் தான் பெருமளவு அவலம் நடந்தமாதிரி எழுதுப்பட்டிருக்கு..! விசுவமடு, புதுக்குடியிருப்பு எண்டு நூற்றுக்கணக்கில மக்களைக் கொன்றதெல்லாம் யாராம்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாக்கத்தின் ஆங்கிலப் பிரதியை எங்கே பெறலாம். இந்தியா சன நாயக நாடு என்று பீத்திக் கொண்டிருக்கும் என்னோடு வேலை செய்யும் வட இந்தியருக்கு ஆங்கிலப் பிரதியை அனுப்பவுள்ளேன்.

உங்களுக்கு தனிமடல் அனுப்ப முடியாமல் இருக்கிறது. தேவையற்ற பழைய மடல்களை அழித்து விட்டீர்கள் என்றால் இலகுவாக என்னால் அனுப்ப முடியும்.

இவ்வாக்கத்தின் ஆங்கிலப் பிரதியை எங்கே பெறலாம். இந்தியா சன நாயக நாடு என்று பீத்திக் கொண்டிருக்கும் என்னோடு வேலை செய்யும் வட இந்தியருக்கு ஆங்கிலப் பிரதியை அனுப்பவுள்ளேன்.

உங்களுக்கு தனிமடல் அனுப்ப முடியாமல் இருக்கிறது. தேவையற்ற பழைய மடல்களை அழித்து விட்டீர்கள் என்றால் இலகுவாக என்னால் அனுப்ப முடியும்.

DELHI MORE ALARMED THAN COLOMBO OVER THE MULLIVAYKAL MASSACRES AND SRI LANKA (SL) WAR CRIMES

http://www.groundreport.com/Business/DELHI-MORE-ALARMED-THAN-COLOMBO-OVER-THE-MULLIVAYK_1/2931768

சில உண்மைகளும் பல புனைவுகளும் இருக்கின்றது. இந்தியாவின் பங்களிப்பை வைத்து கோத்தபாயவின் வெருட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது. அதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்காது. இந்திய சீனப் பங்கு இதில் மிகவும் முக்கியமாகவுள்ளது.

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் வேண்டுமானதை சிறிலங்கா செய்து கொடுத்துவிட்டது. அதனால் அவர்கள் சிறிலங்காவிற்கு ஆதரவாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அப்படித்தான் நான் கருதுகின்றேன்.

இந்தியாவின் வாயைத் திறப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. சிறிலங்காவிற்கு எதிரான போர்க்குற்ற விசாரணைகளுக்கு அது மிக முக்கியம். அல்லது இந்தியாவை தம்பக்கம் இழுப்பதன் மூலம் சிறிலங்காவையும் தமது பக்கம் இழுத்து சீன ஆதிக்கத்தைக் குறைக்கலாம் என்பது மேற்கு ஐரோப்பிய, அமெரிக்காவின் எண்ணங்களாகவும் இருக்கலாம்.

சிறிலங்கா படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் இராஜதந்திர நகர்வுகள் தான் அந் நாட்டின் போர்க்குற்ற விவகாரங்களில் இந்தியாவை மௌனமாக்கி வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு Ground Report என்னும் இணையத்தளத்தில் கடந்த 5ஆம் திகதி தான் எழுதியுள்ள அரசியல் ஆய்வில் Vssubramaniam குறிப்பிட்டுள்ளார். இவ்வாய்வில் வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை இந்தியப் புலனாய்வு அமைப்பான 'றோ' வைத்திருக்கின்ற போதிலும், இந்திய அரசாங்கம் இந்த ஆதாரங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இப் போரில் சர்வதேச போர் நியமங்களுக்கு எதிரான வகையில் சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்கள் அந் நாட்டுக்கு எதிரான சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முனைப்புக்களை புதுடில்லி தடுத்து நிறுத்தியதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான விடயங்களை இங்கே தொகுத்துத் தருகின்றோம்.

'வன்னிப் போரின் இறுதிக்கட்டத்தில் இந்தியாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சிறிலங்கா அரசாங்கம் செயற்பட்டிருந்தது. ஆயினும், இந்தியப் புலனாய்வு அமைப்பான 'றோ' தற்போது வைத்திருக்கின்ற தமிழினப் படுகொலை தொடர்பான ஆதாரங்களைக் காட்டி சிறிலங்கா அரசாங்கத்தை புதுடில்லி அச்சுறுத்துவது கோத்தபாய ராஜபக்சவை சீற்றம் கொள்ள வைத்துள்ளது.

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் பகுதியின் குறுகிய நிலப்பரப்பில் செறிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் மத்தியில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பதுங்கியிருந்த இடங்களை றோ சரியாக சுட்டிக்காட்டி இருந்தது.

போர் அற்ற பிரதேசமாக சிறிலங்கா அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்ட முள்ளிவாய்க்காலில் மக்கள் செறிவாக இருந்த பகுதிக்குள் இறுதித் தாக்குதலை மேற்கொள்ளுமாறு கோத்தபாய ராஜபக்சவுக்கு எம்,கே.நாராயணனும், சிவசங்கர் மேனனும் அறிவுரை வழங்கியிருந்தனர்.

சிறிலங்காவின் அப்போதைய படைத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவின் முடிவின் பிரகாரம் ஓகஸ்ட் மாதம் அளவிலேயே இறுதித் தாக்குதலை நடாத்துவது எனத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதேவேளை, தமீழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை அழித்தொழிக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் செயற்பட்ட எம்,கே.நாராயணனும், சிவசங்கர் மேனனும், இப் போர் நீடிக்கப்பட்டுச் செல்லுமாயின் விடுதலைப் புலிகளின் தலைவர்களையும், பொது மக்களையும் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு அமெரிக்கா வழிவகை செய்து விடுமென அச்சம் கொண்டிருந்தனர்.

இதன் காரணமாகவே கொழும்பும், புதுடில்லியும் கூட்டாக மேற்கொண்ட முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை. இதனால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் இழப்பை தவிர்க்க முடியாத இழப்பு என தெரிவிக்கின்றார்கள்.

இப் படுகொலைக்கான பின்னணியில் நாராயணன் மற்றும் சிவசங்கர் மேனன் ஆகியோரின் மறைமுகமான கையாளாக கோத்தபாய ராஜபக்ச செயற்பட்டுள்ளார்.

இந் நிலையில், இப் படுகொலை தொடர்பாக றோவிடம் இருக்கின்ற ஆதாரங்களைக் காட்டி பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் இழப்பு ஏற்பட்டமைக்கு கொழும்பு தான் முழுமையான பொறுப்பு என இந்தியா குற்றம் சாட்டியைத் தொடர்ந்து இப் படுகொலை தொடர்பான விபரங்களும், ஆதாரங்களும் வேகமாக வெளிவர ஆரம்பித்தன.

இதனையடுத்து இராஜதந்திர நகர்வுகளை மேற்கொண்ட சிறிலங்கா அரசாங்கம் இப் போர்க்குற்றங்கள் குறித்து புதுடில்லி மௌனமாக இருக்க வேண்டும் என்ற கொழும்பின் கோரிக்கைக்கு விட்டுக் கொடுக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்காப் படைத்தரப்பினரும், இந்தியாவின் இரகசியப் படைப்பிரிவும் கூட்டாக மேற்கொண்ட வலிந்த தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்பான புலனாய்வுத் தகவல்களைப் பெறுமாறு மதிதிய அரசின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் றோவைக் கேட்டிருந்தனர். இதனடிப்படையில் வன்னிப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்ற ஆதாரங்களை றோ திரட்டியது.

இந் நிலையில், விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கான ஒரு ஆயுதமாகவே புதுடில்லியும், றோவும் இந்த ஆதாரங்களைப் பார்த்தார்கள். ஆனால், இந்த அழுத்தங்களுக்கு அடிபணியாத சிறிலங்கா அரசாங்கம்  நேர் எதிரான நிலைப்பாட்டை எடுத்தது.

இத்தகையதொரு நிலையிலேயே சிறிலங்காவின் படைத்துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புத்தி சாதுரியமாகச் செயற்பட்டார். போற்றச்சாட்டுக்களை தாம் எதிர்கொள்ள நேரிட்டால், அதற்கு இந்தியாவுடம் உடந்தையாக இருந்தது என்பதை வெளிப்படுத்தும் வகையில் நாராயணன் மற்றும் சிவசங்கர் மேனன் ஆகியோருடனான உரையாடல் பதிவுகளை கையில் எடுக்க இந்தியா மெனமாகியது.

இதனையடுத்து நிதானமாகச் செயற்பட்ட இந்தியா, 2009ஆம் ஆண்டு மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்காவுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது.

இதன் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்தின் மீதான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்களை விசாரணை செய்வதற்கு மேற்கத்தைய நாடுகள் சில மேற்கொண்ட முயற்சிகளை முறியடித்து, இந்தியா கொழும்பைத திருப்திப்படுத்தியது.

இந் நிலையிலேயே, தமிழினச் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற போதிலும், இவ் விகாரம் குறித்து இந்தியா மௌனமாக இருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்தியாவின் இப் போக்குக் குறித்து தமிழ்நாடு கோபம் கொண்டுள்ள போதிலும், புதுடில்லியால் எதுவுமே செய்ய முடியாத நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.

இப் பின்னணியிலேயே ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தனது நிலைப்பாடு தொடர்பில் தமிழ்நாட்டு அரசின் ஆதரவைப் பெறுவதற்கு ஸ்பெக்ரும் ஊழல் விவகாரத்தை புதுடில்லி கையில் எடுத்தது.

ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக எல்லா வகையிலும் மகிந்தா அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், ள்ளப்பட்டு வருகின்ற இந்தியா தொடர்ந்தும் மௌனமாக இருப்பதற்கு புதுடில்லி தொடர்பில் கொழும்பு கொண்டுள்ள பலமான பிடி தான் காரணம்.

வன்னிப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகளை சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது.</p>

இந் நிலையில், மனித குலத்திற்கு எதிரான இப் போர்க்குற்றங்களில் புதுடில்லிக்கும் பங்கிருப்பது சர்வதேச ரீதியில் இந்தியா தொடர்பில் கேள்விகளை எழும்புகின்றது.</p>

இத்தகைய பின்னணியிலேயே இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் புதுடில்லி மௌனமாக இருப்பதானது, மனிதவுரிமை மீறல்களில் ஈடுபடுபவர்கள் எவரோ அவர்கள் மீது இந்தியா வெளிப்படையாகக் குற்றம் சுமத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறுவதற்கு வழிசெய்துள்ளது.

அதேவேளை, மேற்கத்தைய நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் முன்னெடுத்து வருகின்ற சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிரான போர்க்குற்றப் பரப்புரைகள் சர்வதேச ரீதியில் பலத்த ஆதரவைப் பெற்றுள்ளது.

இவ் விவகாரம் குறித்து புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகள் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மேற்கத்தைய நாடுகளுக்கு விஜயம் செய்யும் போது நிம்மதியற்ற நிலையிலேயே&nbsp; அங்கு செல்வார்கள்.

இது நீதிக்கான தேடலில் இறங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் திறனை வெளிப்படுத்துவதாக அமைகின்றது' என Ground Report என்னும் இணையத்தளத்தில் தான் எழுதியுள்ள அரசியல் ஆய்வில் Vssubramaniam தெரிவித்துள்ளார

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={CF01470E-A89A-43C8-B882-CF8CA0BC4D08}

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் இப் போக்குக் குறித்து தமிழ்நாடு கோபம் கொண்டுள்ள போதிலும், புதுடில்லியால் எதுவுமே செய்ய முடியாத நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது.

இப் பின்னணியிலேயே ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தனது நிலைப்பாடு தொடர்பில் தமிழ்நாட்டு அரசின் ஆதரவைப் பெறுவதற்கு ஸ்பெக்ரும் ஊழல் விவகாரத்தை புதுடில்லி கையில் எடுத்தது.

sheep_1.jpg

ஏனப்பா ஆய்வாளர்களின்ட கற்பனைக்கு ஒரு எல்லையே இல்லாம போச்சுது... ராஜவுக்கும் ராணிக்கும் இடையிலான கனெக்சனில் ( ஏனோ எனக்கு மார்கழி மாச நாய்கள்தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது ) டில்லிக்காரன் ஆப்பு சொருவுகிறான் .. கொள்ளையிட்ட பணத்த்தில் தங்களுக்கும் பங்கு இல்லியே என்று... அத உங்களுக்கு சார்ப்பு என நினைத்து கொண்டால் எப்புடி??? போக தமிழ்நாடு கோபமா... இதெல்லாம் ரொம்ப ஓவர்.. எனக்கு தெரிந்து மே மாதம் கொஞ்சம் உணர்வோடு இருந்தார்கள் என்பது உண்மை...

பிறகு அவனவன் அவனவன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.. ஈழமா.. பசியால் கஸ்டபடுகிறார்களா... அய்யோ பாவம்.. அரிசி பருப்பு ஏதாவது அனுப்ப வழி இருந்தா சொல்லுங்க ... அத்தோடு நின்றுவிடுகிறார்கள்... அத்தோடு இங்கு பெரும்பாலோர் கணிப்பு அவர்கள் கணிப்பு அவர்கள் சிக்கலை இன்னும் அவர்களே தீர்த்துவிடுவார்கள் என்பதுதான்... அட அவர்கள் புலிகுட்டிகளப்பா ... அவர்கள் மகிந்தாவை கொன்று போடுவார்கள்...

எவனுக்கும் உண்மை நிலமை தெரியல ஏதோ சினிமா கீரோ போல தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனும் அவரது ஆட்கள் (படைகள்) ஏதோ சினிமா பாணியில் இருப்பதாக நினைத்து கொள்ளுகின்ற்னர்.. (ஏன்டா இங்க என்ன சினிமா நடக்குதா? அல்லது டிராமா காட்டுறாங்களா ) நேரில் பார்க்காதவர்களை இங்கு நாம் குற்றம் சொல்ல முடியாது.. ஊடகங்களவது சரியாக செய்யலாம்... அவனவன் கட்சிக்காரன் ஆளுக்கொரு ஊடகம் நடத்துகிறான்...

அரசியல் கட்சிகளின்ட தேர்தல் அறிக்கையில் பொய் புளுக்காவது ஈழம் எனும் வார்த்தை இன்று வரை வந்திருப்பது கொஞ்சம் மகிழ்ச்சி. .. ஆனால் அவரை கொடி உறவுகளிடம் போக வேண்டிய தூரம் மற்ற நாட்டினரை காட்டிலும் அதிகம் உள்ளது என்பதே உண்மை... தமிழீழ ஆதரவு கட்சிகளுக்கு தனியாக ஊடகம் ..

தொலைகாட்சி.. என நேரடியாக உதவி செய்தால் மட்டுமே விரைபடுத்துதல் சாத்தியமாகும்.கருணாவினட தொல்லை காட்சி(சன் .. கோஸ்டிகள்) முழு நீள புகழ்பாடுதலை செய்துகொண்டு இருக்கும் போது தமிழன் வின் தொலைக்காட்சியில் 2 ஸ்லாட்டு வாங்கி பேசவேண்டியதை ரத்தின சுருக்கமாக பேசவேண்டிய நிலைமையில் வைக்கோ போன்ற ஈழ ஆதரவு தலைவர்கல் உள்ளார்கள்.மற்றும் படி கிந்தியாவில் பணத்தால் சாதிக்க முடியாது என்று ஒன்றும் இல்லை... சட்ட ரீதியான சிக்கல்களை எதிர் கொண்டு இப்ப சீமான் வெளிவந்தது போல வக்கீலுக்கு பீஸ் கொடுத்தால் ..

தேவாங்கு(நிழல்) தான் உண்மை . உண்மை போலி என்று வாதித்திட்டு சாத்தித்து காட்டுவார்கள்... அதனால் மத்திய அரசு மாநில அரசு என்று கவலைபட தேவையில்லை .. 8 கொலை பண்ணியவர்களே இங்க டாட்டோ சுமோவில் சுத்தி கொண்டு திரிகிறான்.. அது போகட்டும்.. ஈழம் என்றால் நானும் ஆதரவு தருகிறேன் என்று ஆளாளுக்கு கச்சையை கட்டி கொண்டு வாய் வீச்சு வீசுகின்றனர் .. அதனால் மந்தைகளுக்கு குழப்பமே ஏற்படுகிறது.. (ஆட்டு மந்தைகள் வரிசையாக சென்று கொண்டு இருக்கும் போது ஒரு ஆடு துள்ளிகுத்தால் .. பின்வரும் ஆடுகள் என்ன ஏது என்று தெரியாமலே அந்த இடம் வந்த உடன் துள்ளி குதிக்குமாம்)

மந்தைகளை கவர் செய்ய 2 வழிகள்

1) நேர்மையான வழி (புரட்சி வழி)

இதுகளெல்லாம் குருவிக்காரன் சுட்டாலே வீட்டின் கதவை சாத்துகிற ஆட்கள் போக ப்ழக்கமுமும் இல்லை.. குறைந்தபட்சம் தெலுங்கானா போல பஸ் ரயில் மீது கல்லெறிய தெரியணும்.. போலீஸ்காரன் லாடம் கட்டத்தான் செய்வான்.. அதெல்லாம் ஈழம் என்று உணர்வோடு வாங்கணும் .. இதெல்லாம் இப்பொதைக்கு சாத்தியமில்லை.. ஏதோ சிலோனில் தமிழர்கள் இருக்கிறார்கள் .. மலேசிய சிங்கபூர் போல என நினைத்து கொள்ளுகிறார்கள்.. அவர்களிடம் போய் கிஸ்டரி ஜாகரபி என விரிவாக எடுத்துரைக்கணும்.. அப்படியே துண்டு சீட்டுகளை விளக்கமாக எழுதி குடுத்திட்டாலும் இவர்களுக்கு பெரும்பானை கிரமத்தாருக்கு எழுத படிக்கவே தெரியாது..

2)அரசியல் வழி ( உள்குத்து வழி)

என்னுடைய கணிப்பின் படி ஈழ தலைவர்களை மூன்று வழிகளில் வெற்றி பெற வைக்கலாம்.

1) கடைசி நேர செண்டிமெண்ட்

ஆயிரம்தான் பணம் கொடுத்தாலும் தமிழக மாக்களை ஈசியாக கவர் செய்யலாம்.குமரி மாவட்ட எம்.எல்.ஏ நின்ற ஒருவர்.. கடைசி நாள் இரவு அன்று தனக்கு வாக்குவிழாது என்று தெரிந்த பகுதிகளில் கைக்குழந்தை மனைவியோடு சென்று சாப்பாட்டுக்கே பிச்சையெடுக்கிறம் ஒங்க ஓட்டு மூலமாக கிடைக்கும் எம்.எல்.ஏ சம்பளத்தில் எங்க குடும்பமே பிழைக்கும் என கூறி வாக்களிக்க வைத்து ஜெயித்து விட்டு சுற்றி கொண்டிருப்பதோ இப்ப டாட்டா சபாரியில்..

இந்த டேக்டீசு ஈழ ஆதரவு தலைவர்களுக்கு தெரியாமல் இல்லை .. ஆனா இந்த அளவுக்கு கீழ இறங்கி வர முடியவில்லை என்பதே உண்மை.. சேத்து பட்டில் கடைசி நாளன்று அன்பழகனுக்காக வைக்கோ வீடு வீடாக கதவை தட்டி எழுப்பினார் வாக்கு கேட்டார் .. ஆனா நடந்துது என்ன ? அவரோ கட்சிதலைவோட பதவியோட சிம்ம குரலுக்குத்தான் சொந்தம்.. ராமதாசு கடைசி நேர அஸ்திரமாக ஈழ போர்காட்சிகளை மக்கள் தொலைக்காட்சியில் போட்டு காட்டினார்.. அவருக்கும் மேல சாணக்கிய நிதி ... அன்று சென்னை பூராம் கரண்டு கட்செய்து போட்ட்டார்....

2) கவர்ச்சி வழி அரசியல்

இதிலும் கொஞ்சம் கான்சன்ரேட் செய்தால் அதாவது ரசிகர் மன்ற கைத்தடிகள் .. எவன் அவன் தலைனோ அவன் சொன்னால் கோவணத்தினை கூட விற்று பாலபிசேகம் செய்யும் இடத்தில் அவரின்ட தலைவரிடமே ஈழ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து கூற்வைத்து அக்க போர்களை ஆரம்பிக்க செய்யணும்

3) அண்டார்டிக்கா வழி(அனைவருக்கும் பொதுவானது கடை பிடிக்க எளிமையானது)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=78631

டிஸ்கி:

இங்க உள்ள நிலமையை தெளிவாக விளக்கி அதற்கேற்ற போல் திட்டங்களை ஈழ தோழர்கள் வகுக்க வேண்டி இந்த பதிவு...ரொம்ப எழுதிட்டன் போல தெரியுது.. தனி பதிவாக பதவி செய்ய போறன்...ரைட்டு :rolleyes:

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இந்த வீடியோ சொல்லும் செய்திகள் பல.... கற்பூரங்கள் கப் எண்டு பத்திக்கொள்ளும்... மற்றதுகளுக்கு இது அவசியமே இல்லை...

http://www.youtube.com/watch?v=QLnyUswWhYk&NR=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.