Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அஸாங்கே கைது

Featured Replies

லட்சக்கணக்கான ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவை பெரும் சிக்கலுக்கும் தலைகுனிவுக்கும் உள்ளாக்கியுள்ள விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜுலியன் அஸாங்கே கைது

Wikileaks founder Julian Assange arrested in London

The founder of the whistle-blowing website Wikileaks, Julian Assange, has been arrested by the Metropolitan Police.

The 39-year-old Australian denies allegations he sexually assaulted two women in Sweden.

Scotland Yard said Mr Assange was arrested on a European Arrest Warrant by appointment at a London police station at 0930 GMT.

He is due to appear at City of Westminster Magistrates' Court later.

Mr Assange is accused by the Swedish authorities of one count of unlawful coercion, two counts of sexual molestation and one count of rape, all alleged to have been committed in August 2010

bbc

  • கருத்துக்கள உறவுகள்

அட.... இவ்வளவு கெதியாய் கைது பண்ணிப் போட்டாங்களே.....

கொஞ்சம் ஒளிச்சுப் பிடிச்சு விளையாடியிருக்கலாம்.dog11.gif

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தப் பட்டது பெரிய இடம், அதுதான் உடனடி நடவடிக்கை!! :wub:

இன்னும் ஒரு குற்றங்களும் இவருக்கு எதிராக தாக்கல் செய்யப்படவில்லை - பி.பி.சி.

தான் கைது செய்யப்பட்டால் எல்லா தகவல்களும் வெளியிடப்படும் என்றார்.

ஒன்றில் மூன்று பங்கு மனித உரிமைகள் சம்பந்தமானது.

  • கருத்துக்கள உறவுகள்

கைது செய்யப்பட சொல்லப்பட்டுள்ள காரணங்கள் எதுவும் குறித்த இணையத்தளம் சம்பந்தப்பட்டதல்ல. அனைத்தும் பெண்களை கெடுத்தார்.. கற்பழித்தார் என்பது தான். அவர் ஒரு மேற்கத்தைய ஆண் என்பதால் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை அள்ளி வழங்குவது ஒன்றும் புதிதல்ல.

கிளிடன் மோனிக்காவோடு போனால் அது.. பணம் கொடுத்து சரிக்கட்டுற விடயம்.. விக்கிலீக் நடத்திறவர் அதையே செய்தால்.. (அவர் உண்மையாக நல்லவரா இருந்தாலும்.. நாலு விபச்சாரிகளுக்கு காசைக் கொடுத்து கெடுத்தது என்று சொல்ல வைப்பாங்கள்..!) அவருக்கு கைது வாறண்டு.

நல்லா இருக்கு அமெரிக்காவும் அதன் தலைமையில் உலகம் அனுபவிக்கும் மனித உரிமைகளும்.. ஜனநாயகமும்.

விக்கிலீக்கை இந்தக் கைது மூலம் அடக்கிடலாம் என்று நினைக்கினம் போல.. ஆனால் அது அடங்கிற மாதிரி தெரியல்ல. கைது செய்யப்பட வாய்ப்பிருந்தும்.. அவர் லண்டன் வந்திருக்கிறார் என்றால்.. கைது பற்றி அவர் கவலைப்படவில்லை என்பதுதான் உண்மை.

எதுஎப்படியோ.. அமெரிக்காவின் இரட்டை வேடத்தை உலகிற்கு ஆதாரங்களோடு வெளிக்காட்டிய உண்மை மனிதன் இவர்.

விக்கிலீக் நிறுவனர் கைது

ஜூலியன் அசான்ச்

ஜூலியன் அசான்ச்

விக்கி லீக் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசான்ச் லண்டனின் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வீடனில் பாலியல் வல்லுறவு தொடர்பான பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்ட ஐரோப்பிய பிடியாணையின்படி அசான்சே அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார். காவல் துறையினர் வந்து தன்னை கைது செய்ய அசான்ச் நேரம் தந்திருந்தார்.

விக்கிலீக் இணையத் தளம் வெளியிட்ட பல்வேறு கசிவுகள் அமெரிக்காவுக்கு கோபமூட்டியதுடன் அதற்கு தர்மசங்கடத்தையும் தந்துள்ளன.

தனது வழக்கு தொடர்பாக அசான்ச் பிரிட்டிஷ் போலீசாருடன் பேசத் தயாராக இருப்பதாக தெரிவித்த அசான்சின் வழக்கறிஞர், ஆனால் அவர் இது தொடர்பாக ஸ்வீடிஷ் சட்ட முறைகளை அசான்ச் நம்பவில்லை என்றும் தெரிவித்தார்.

விக்கி லீக் மேலும் பல ரகசிய ஆவணங்களை வெளியிடும் என்றும் அசான்சின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101207_wikileakarrested.shtml

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே சற்றுமுன் பிரித்தானிய பொலிஸாரால் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே சற்றுமுன் பிரித்தானிய பொலிஸாரால் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Wikileaks founder Julian Assange surrendered to police in London late last night New Zealand time.

He was denied bail and remanded in custody ahead of a court appearance later on Tuesday UK time/early Wednesday.

Interpol launched an international hunt for Mr Assange after he failed to front to Swedish authorities for questioning about a rape allegation, and a warrant was issued for his arrest.

Although he is wanted for questioning by the Swedes, Mr Assange has not been charged in relation to the rape allegation, which he has denied.

Sweden has placed an extradition request, Mr Assange's UK lawyer Mark Stephens said.

Mr Assange - an Australian citizen - said he went into hiding because he feared for his safety after Wikileaks published a portion of more than 250,000 US diplomatic cables.

Meanwhile, Visa, which supplied the online system through which people could donate to Wikileaks - the whistleblowing site's primary source of income - has suspended payments.

Visa said it was awaiting the outcome of an investigation into Wikileak's business practices.

அமெரிக்காவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியமைக்காக ஜூலியன் அசான்ச் நியாயமின்றி நடத்தப்படுகிறார் என்ற உணர்வு ஆஸ்திரேலியாவில் பலரிடையே மேலோங்கிவருவதாகத் தெரிகிறது.

"அசான்ச் அல்ல; அமெரிக்காதான் பொறுப்பு"

ரகசிய ராஜீயத் தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டமைக்கு சட்ட ரீதியில் பதில் சொல்ல வேண்டியது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தோற்றுநர் ஜூலியன் அசான்ச் அல்ல அமெரிக்காதான் என ஆஸ்திரேலிய அரசாங்கம் பழிசுமத்தியுள்ளது.

இதற்கு முன்பு வரை ஆஸ்திரேலிய அரசாங்கம் தமது நாட்டின் குவீன்ஸ்லாந்து மாகாணத்தில் பிறந்தவரான விக்கிலீக்ஸின் தோற்றுநர் ஜூலியன் அசான்ச்சை இவ்விவகாரம் தொடர்பில் அதிகம் விமர்சித்தே வந்துள்ளது. அவர் கொஞ்சமும் பொறுப்பில்லாமல் செயல்பட்டுள்ளார் என்று நாட்டின் தற்போதையப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் ஜூலியாவுக்கு முன்பாக இவ்வாண்டின் முற்பகுதி வரையில் பிரதமராக இருந்தவரான தற்போதைய வெளியுறவு அமைச்சர் கெவின் ரட், அசான்ச்சுக்கு ஆதரவான ஒரு கருத்தாகத் தோன்றும் ஒரு விஷயத்தை தற்போது சொல்லியிருக்கின்றார்.

ராய்டர்ஸ் நிறுவனத்துக்கு ரட் அளித்துள்ள ஒரு பேட்டியில், அமெரிக்க ராஜீய தகவல்கள் வலையமைப்பிலிருந்து ரகசிய தகவல்கள் அனுமதியின்றி கசிந்தமைக்கு விக்கிலீக்ஸ் தோற்றுநர் பொறுப்பல்ல அமெரிக்கர்கள்தான் அதற்கு பொறுப்பாவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தில் இப்படியான ரகசியத் தகவல்களைப் பேணுவதில் உள்ள பாதுகாப்பு போதுமானதுதானா என்று அவர் கேள்வியெழுப்பினார்.

இப்படியான ரகசியத் தகவல்களைப் பார்க்க நெடுங்காலமாக யார் யாருக்கெல்லலாம் அனுமதி இருந்து வந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

தகவல்கள் வெளியானமைக்கு சட்டரீதியில் பொறுப்பேற்க வேண்டியவர் அசான்ச் அல்ல மாறாக முதலில் இந்த ஆவணங்களைக் கசியவிட்டவர்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கேன்பர்ராவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதங்களில் இடம்பெற்றிருந்த ரகசியத் தகவல்கள் வெளியான அதே நாளில் ரட் இவ்வாறு கருத்து கூறியுள்ளார்.

ரட் அவர்களை "அடிக்கடி பிழைகள் செய்யும் - எல்லோரையும் அடக்கி ஆள நினைக்கும் குணமுடையவர்" அதிலும் குறிப்பாக தான் கவனம் செலுத்தும் வெளியுறவு விவகாரங்களில் ரட் இவ்வாறு நடந்துகொள்ளக்கூடியவர் என்று கசிந்துள்ள தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தூற்றுதல் பற்றியெல்லாம் தான் கொஞ்சமும் கவலைப்படவில்லை என்று ரட் பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் அசான்ச்சுக்கு வெளிநாட்டிலுள்ள ஆஸ்திரேலியர் என்ற முறையில் தூதரக அடிப்படையிலான சட்ட உதவிகளை தாம் வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறுகிறது.

அமெரிக்காவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியமைக்காக ஜூலியன் அசான்ச் நியாயமின்றி நடத்தப்படுகிறார் என்ற உணர்வு ஆஸ்திரேலியாவில் பலரிடையே மேலோங்கிவருவதாகத் தெரிகிறது.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/12/101208_assangerudd.shtml

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.