Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம்?

Featured Replies

படுகொலைகள் நிறைந்த பகுதியாக யாழ்ப்பாணம் மாற்றமடைந்துவிட்டது. ஒரு மாத காலத்தில் குமாநாட்டில் இடம்பெற்ற 3 படுகொலைகளும், ஆயுதபாணியிலான இளைஞர்களின் கொள்ளைகளும் குடாநாட்டில் பெரும் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் மக்களுடைய வாழ்க்கை நிச்சயமற்றதாகவே உள்ளது என்ற உணர்வையே இச்சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்தப் படுகொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும், குற்றவாழிகள் நீதியின் முன்பாக நிறுத்தப்படுவார் என அரசாங்கத் தரப்பிலும் இராணுவத் தரப்பிலும் சொல்லப்பட்டாலும் கூட, மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இந்த வாக்குறுதிகள் எதுவும் அமைந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். அதேவேளையில் இந்தப் படுகொலைகள் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் படையினர் சம்பந்தப்பட்டிருப்பதாகவே மக்கள் கருதுகின்றார்கள்.

சங்கானைப் பகுதியில் இடம்பெற்ற கோவில் குருக்களின்கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக வாசகர்கள் அறிந்திருப்பார்கள். கடந்த மூன்று வார காலமாக குடாநாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தைப் பின்தள்ளிவிடும் வகையில் மற்றும் இரண்டு படுகொலைச் சம்பவங்கள் இந்த வாரத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன.

ஒன்று - வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் மார்க்கண்டு சிவலிங்கத்தின் படுகொலை

இரண்டு - கப்பம் கோரிக் கடத்திச் செல்லப்பட்ட இளம் வர்த்தகரான மகேந்திரம் செல்வத்தின் படுகொலை.

இந்த இரண்டு படுகொலைச் சம்பவங்களும் பெரும் மர்மமானதாக அமைந்திருக்கின்ற போதிலும், இவை தொடர்பாக அரசாங்கம் உரிய முறையில் விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாழிகளைச் சட்டத்தின் முன்பாக நிறுத்தும் என்பதையிட்டு சந்தேகம் கொண்டவர்களாகவே மக்கள் உள்ளனர்.

இதில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவலிங்கத்தின் படுகொலை மர்மங்கள் நிறைந்ததாகவே உள்ளது. கொலையாளிகள் அவரது இல்லத்துக்குள் இரகசியமாகப் புகுந்து அவருக்காகக் காத்திருந்த ஒருவரே இந்தப் படுகொலையைச் செய்துவிட்டுத் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அந்த வகையில் இது நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு படுகொலை என்பது உறுதியாகியுள்ளது.

சிவலிங்கத்தின் கொலையையடுத்து அவரது மகள் அணிந்திருந்த நகைகளும் கொலையாளியால் அபகரித்துச் செல்லப்பட்ட போதிலும், கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் வந்தவர்களால் இந்தக் கொலை மேற்கொள்ளப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. அப்படியானால் இந்தக் கொலை எதற்காகச் செய்யப்பட்டது என்ற கேள்விக்கான பதில்தான் இன்று வேண்டப்படுகின்றது.

சிவலிங்கத்தைப் பொறுத்தவரையில் அவர் தனது கடமையை மிகவும் பொறுப்புடன் முன்னெடுத்த ஒருவர் என்பதுடன், அனைவருடனும் மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் பழகும் சுபாவத்தையும் கொண்டவர். அவரது வாழ்க்கை பலருக்கும் முன்னுதாரணமான ஒன்றாகவே இருந்துள்ளது. அவருக்கு எதிரிகள் என்று யாரும் இல்லை. அப்படியானால் அவரது வீட்டுக்குள் இரகசியமாக நுளைந்து அவரைத் தீர்த்துக்கட்டுவதற்காகக் காத்திருந்தவர்கள் யார்?

இது தொடர்பாக தெளிவான தகவல்கள் இல்லாத போதிலும், அண்மைக்காலத்தில் அரசியலிலும், கல்வித்துறையிலும் சலசலப்பை ஏற்படுத்திய தேசிய கீதம்தான் இவரது படுகொலைக்குக் காரணமாக இருக்க வேண்டும் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கள மொழியில் மட்டும்தான் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் பிந்திய நிலைப்பாட்டை இவர் விமர்சித்திருந்தார். அத்துடன் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலமாகவே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார்.

குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்புத் தின நிகழ்வுகளில் பிரதமர் டி.எம்.ஜயரட்ண கலந்துகொண்டிருந்த போது பாடசாலை மாணவர்களால் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டது. இருந்த போதிலும் இதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் முக்கிய ஒருவராக சிவலிங்கம் இருந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்ட அதே தினம் இரவில் சிவலிங்கம் கொல்லப்பட்டிருப்பதன் பின்னணியில் முக்கிய செய்திகள் பொதிந்திருப்பதாக யாழ். மக்கள் கருதுகின்றார்கள்.

இந்த நிலையில்தான் இந்தப் படுகொலையின் பின்னணி தொடர்பாக விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என யாழ். கல்வித்துறையைச் சார்ந்தவர்கள் வலியுறுத்தியிருக்கின்றார்கள்.

உரும்பிராயிலுள்ள அவரது வீட்டில்வைத்தே சிவலிங்கம் இரவு 10.00 மணியளவில் கொல்லப்பட்டிருக்கின்றார். இரவு வேளையில் படையினரின் பாதுகாப்பு அதிகமாகவுள்ள பகுதியில் துப்பாக்கியுடன் வந்தவர்களால் இவ்வாறான கொலை ஒன்றைச் செய்துவிட்டு எவ்வாறு சுதந்திரமாகத் தப்பிச் செல்ல முடிந்துள்ளது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.

வீட்டுக்குள் புகுந்து துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் சென்றவர் ஒருவராக இருந்தாலும், அவருக்கு உதவியாக வெளியே அல்லது அந்தப் பகுதியில் மேலும் சிலர் மறைந்திருந்திருப்பார்கள் என்பது நிச்சயம்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடனான ஆயுதக்குழு ஒன்று இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றது என ஜே.வி.பி. ஏற்கனவே தெரிவித்திருந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்துவதாகவே இச்சம்பவம் உள்ளது. யாழ்ப்பாணத்துக்கு இரண்டு மாத காலத்துக்கு முன்னர் விஜயம் செய்திருந்த ஜே.வி.பி. உறுப்பினர்கள் மீது ஆயுதக்குழு ஒன்று கடுமையான தாக்குதலை நடத்தியிருந்தது. இச்சம்பவத்தையடுத்தே குடாநாட்டில் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஆதரவுடனான ஆயுதக் குழு ஒன்று செயற்படுவதாக ஜே.வி.பி. தெரிவித்திருந்தது.

சிவலிங்கம் கொல்லப்பட்டுள்ள பாணி இந்தச் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது. இது தொடர்பில் அரசாங்கம் நடத்தப்போகும் விசாரணைகள் இது தொடர்பான உண்மை நிலையை மேலும் புலப்படுத்துவதாக அமையலாம்.

இந்தப் படுகொலையின் அதிர்ச்சியிலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாகவே மற்றொரு படுகொலைச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருக்கின்றது.

26 வயதான இளம் வர்த்தகர் மகேந்திரம் செல்வம் தென்மராட்சிப் பகுதியில் கடத்திச் செல்லப்பட்ட நிலையில் புதன்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது சடலம் கனகம்புளியடிச் சந்திக்கு அருகாமையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. கடத்திச் செல்லப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் 80 லட்சம் ரூபாவை கப்பமாக வழங்குமாறு இனந்தெரியாத குழு ஒன்று இவரது குடும்பத்தினரை அச்சுறுத்தியிருக்கின்றது. ஆனால், தொலைபேசி அச்சுறுத்தல் வந்த மறுநாளே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஒரு மாத காலப்பகுதியில் இடம்பெற்ற இரண்டாவது படுகொலைச் சம்பவமாக இரு அமைந்திருக்கும் அதேவேளையில் தென்மராட்சிப் பகுதியில் இவ்வருடத்தில் இடம்பெற்ற இரண்டாவது படுகொலைச் சம்பவமாகவும் இது உள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஏப்ரலில் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில் பாடசாலை மாணவர் ஒருவர் கொல்லப்பட்டமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். இச்சம்பவத்தில் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவரே சம்பந்தப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பின்னர் விசாரகைள் கைவிடப்பட்டுவிட்டன.

இந்த நிலையில் தென்மராட்சியில் இவ்வருடத்தில் இரண்டாவது சம்பவமாக செல்வம் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் கோரப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்.

தென்மராட்சி ஆயுதப் படைகள் மிகவும் செறிவாக நிலைகொண்டுள்ள ஒரு பகுதியாகும். பல பகுதிகள் இன்னும் உயர் பாதுகாப்பு வலயமாகவே இருக்கின்றது. அத்ததுடன் சந்திக்குச் சந்தி இராணுவக் காவலரண்கள் முழத்துக்கு முழம் ரோந்து செல்லும் படையினர் என இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளான ஒரு பகுதியாகவே தென்மராட்சி உள்ளது.

இந்த நிலையில் இந்தப் படுகொலைகளுக்கான பொறுப்பை இராணுவம் இலகுவாகத் தட்டிக்கழித்துவிட முடியாது!

http://pooraayam.com/news-analysis/1824-2010-12-30-23-24-42.html

- பூராயத்துக்காக யாழ்ப்பாணத்திலிருந்து அபிமாறன்.

தமிழீழ மக்கள் தனித்து விடப்பட்ட மக்களாக உலகில் இல்லை. அவர்கள் வாழும் கொடிய சிங்கள குகைக்குள் நடக்கும் உண்மைகளை உலகிற்கு சொல்லவேண்டியது எமது கடமை.

இன்றும் சர்வதேசம், சிங்களம் ஒரு மக்களாட்சி "நிறைந்த" நாடாகவும், ஓரளவுக்கு மக்களுக்கு "உரிமைகளையும்", "தனி மனித சுதந்திரத்தையும்" வழங்கி வரும் நாடாகவும் நம்பவைக்கப்படுகின்றது.

இந்த விடயத்தில் தமிழர்கள் தொடர்ந்தும் உண்மைகளை கொண்டுவர பலவழிகளில் முயற்சிக்க வேண்டும். எந்த அணுகுமுறைகள் பயன் தந்துள்ளனவோ அவற்றை இனம்கண்டு மேலும் அந்த வழிகளில் கூடிய கவனம் செலுத்தவேண்டும். எந்த விடயங்களில் சிங்களம் பலமாக நிற்கிறதோ அவற்றுக்கு எதிராக எவ்வாறு நாம் உண்மைகளை கொண்டுவரலாம் என வழிவகைகளை ஆராயவேண்டும்.

வட கொரிய, ஈரான், ஐவரி கோஸ்ட் மக்களை காப்பற்ற விரும்பும் உலகின் பட்டியலில் ஈழமக்களையும் இணைப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கூட்டம் தொடக்க காலத்தில் இருந்து தமிழ் மக்களை ஏதோ வகையில் துன்புறுத்தியும்,கொலை, வன்புணர்வு செய்தல் , காட்டிக்கொடுத்தல்,மக்களின் வீடுகளில் கொள்ளையடித்தல், பின்னர் பயங்கரவாத அரசுடன் சேர்ந்து தேர்த்தலில் கள்ள வாக்கு மூலம் வந்து மீண்டும் மீண்டும் மக்களை வதைத்தபடியே உள்ளார்கள். இங்கு சிலர் அவர்களை முன்னாள் போராளிகள் என விழிக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.