Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முகநூலில் (Facebook) படம் போட்டவர் யாழில் படுகொலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் (Facebook) படம் போட்டவர் யாழில் படுகொலை

ஜன 1, 2011

வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தின் குடத்தனை கிழக்கில் வீடு புகுந்து ஆயுததாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் குடத்தனை கிழக்கில் உள்ள இவரது வீட்டிற்குள் புகுந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் அவரது கணனியை காண்பிக்குமாறு கேட்டுள்ளனர். அதற்கிணங்க வீட்டினுள் அழைத்துச் சென்றபோது ஆயுததாரிகள் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இவரது மனைவி ஆயுததாரிகளை கட்டிப்பிடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆயுததாரிகள் அவரை இழுத்து வெளியில் எறிந்து விட்டு மீளவும் உள்ளே போய் சரமாரியாக சுட்டிருக்கின்றனர். இதில் படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்டவர் பருத்தித்துறை தபாலக ஊழியரான தவராசா கேதீஸ்வரன் (வயது 27) என்பவரேயாவார். தனது முகநூல் (Facebook) பகுதியில் சிறீலங்கா இராணுவம் மற்றும் துணைக் குழுக்களின் ஆதரவுடன் யாழ். மணித்தலைப் பகுதியில் மணல் அள்ளப்படுவதால் கடல் நீர் உட்புகுந்துள்ளதற்கான ஆதாரபூர்வமான படங்களையும், கார்த்திகைப் பூவை கையில் வைத்தபடி நிற்கும் படங்களையும் பதிவு செய்து வைத்திருந்தார். இதனாலேயே இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்குடாவில் மீண்டும் தமிழினப் படுகொலைகள் அதிகரித்துள்ளன. கடந்த ஓரிரு வாரங்களுக்குள் ஆயுததாரிகளால் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மகிந்தவின் கடந்த ஆட்சியில் இடம்பெற்றதைப்போன்ற தொடர் படுகொலைகளும், வெள்ளைவான் கடத்தல்களும் மீண்டும் அதிகரித்துள்ளன. இதனால் முழுமையான இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வாழும் யாழ்குடா மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

sangathie

Edited by கறுப்பி

யாழில் படுகொலை

யாழ்ப்பாணம் அந்த மாதிரி இருக்கு என்று 10 நாள் விசிட் பண்ணி போட்டு புலத்தில் வந்து புலம்பும் புண்ணியாவாங்களே இதையும் படியுன்கோ

போட்டு வந்து கட்டுரை எழுதுற புண்ணியவான்களை விட்டு போட்டியள்....???

இப்படி ஒரு விடுதலையை தான் புலிகளிடம் இருந்து கனபேர் கேட்டவை....

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

போட்டு வந்து கட்டுரை எழுதுற புண்ணியவான்களை விட்டு போட்டியள்....???

இப்படி ஒரு விடுதலையை தான் புலிகளிடம் இருந்து கனபேர் கேட்டவை....

போயிட்டுச் சுகமாக வாறவை புண்ணியவான்கள்தானே..

1. வருடம் பிறந்ததும் ஒரு படுகொலை அரங்கேறியுள்ளது. இது, தமிழர் வாழ்க்கை இந்த வருடம் மேலும் ஒரு இருண்ட காலத்துக்குள்ளே பிரவேசிக்க உள்ளதை சொல்லுகின்றது.

2. இவர் ஒரு சூழல் பாதுகாப்பாளர் என சொல்லப்படுகின்றது. இந்த அரச பயங்கரவாதம் சீனாவிலோ இல்லை ஈரானிலோ நடந்திருந்தால் ஒரு பரபரப்பான செய்தியாக உலக நாடுகளில் பேசப்பட்டிருக்கும். ஏன் உலகம் இவர் படுகொலை பற்றி கதைக்கவில்லை? நாம் என்ன செய்யலாம்?

3. தவராசா கேதீஸ்வரன் ஒரு உண்மையான நாட்டுப்பற்றாளர். தனது தேசவளத்தை பாதுகாக்க போராடியவர்.

http://tamilnet.com/pic.html?path=/img/publish/2011/01/Thevarajah_Facebook_5.jpg&width=728&height=787&caption=

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று இந்தச் செய்தியை வாசித்தவுடன், இரவு முழுக்க அந்த இளைஞனின் ஞாபகமாகவே இருந்தது.

தன்னுடை ஊரைக்காப்பாற்ற வெளிக்கிட்டவருக்கு கிடைத்த பரிசு. இனி ஊரில் எந்த விடயத்துக்கும் வாய் திறக்க முடியாதநிலையை சிங்களம் கொண்டுவந்துவிட்டது. இதற்கு காரணமான ஒட்டுக்குழுக்கள் தான் பதில் சொல்ல வேண்டும். :)

மடமைத்தனம் அந்த இடத்தில் இருந்து கொண்டு கார்த்திகை பூ எல்லாம் கையில் வைத்திருந்து முகம் காட்டி போட்டோ போட்டால் உயிர் வாழலாமா?

அநியாயமாக தனது உயிருக்கு ஆபத்தை தேடி கொண்டார்.

நேற்று ஒரு குரங்கு சிரிலன்காவுக்கு போட்டு வந்து சொல்லுது இலன்டனில நடந்த ஆர்ப்பாட்டத்தில கலந்து கொண்டவை எல்லாம் விசா இல்லாத வெறும் ஆட்கள் தானாம்.

பிரிட்டிஸ் பாஸ்போட் காரருக்கு அங்கே நல்ல மரியாதையாம்,அங்க ஒன்டும் கேட்கேல்லையாம்.

சிங்களவனுக்கு தெரியுமாம் யார் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று.

இப்ப்டி நாமே நம்மை அழித்தோம்.

Edited by நேசன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த மாற்றுக்கருத்து குஞ்சுகளே மாணிக்கங்களே.. இது என்ன கலாசாரம். புலிகள் தான் துப்பாக்கி கலாசாரம் பயங்கரவாதம் வளர்க்கினம் எண்டு புலம்பினீங்க.. இப்ப நீங்கள் என்னத்தை வளர்க்கிறீங்க சிங்களவனோடு இணக்க அரசியல் செய்தபடி...??!

எமது இனத்தின் அழிவுக்கு உள்ள காரணங்கள் பலவற்றில்.. எமது இனத்தின் துன்பத்தை சரியான வடிவில் வெளி உலகுக்கு உடனுக்குடன் கொண்டு வரக் கூடிய ஒரு வசதி இன்மையும் ஒரு காரணம் ஆகும். இன்றைய நவீன சற்றலைட் தொழில்நுட்ப உலகிலும் நாம் எமக்கு நேரும் கொடுமைகளை ஆதாரங்களோடு இனங்காட்ட முடியாது இருக்கிறோம் அல்லது தவிக்கிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்தப் படுகொலைகளை இட்டு அறிக்கைகளோ அல்லது ஆதாரங்களையோ சர்வதேச பத்திரியாளர் மாநாட்டை கூட்டி காட்டுவதில்லை. அது சோந்து படுத்துக்கிடந்து புடுங்குப்படு அரசியலும்.. படுகொலையாளர்களான டக்கிளஸ் தேவானந்தாவோடும்... கருணாவோடும் இணக்க அரசியலும் செய்ய முனைகிறது.

சிவில் அதிகாரிகளான அரச அதிபர்.. அரசாங்க கட்சியின் அதிபராக இராணுவத்தின் முதன்மை தலைவராக செயற்படுகிறார். நான் உலகில் எங்கும் காணேல்ல.. சிவில் அதிகாரிகள்.. அரசாங்க கட்சிக்கு ஆதரவாகவும்.. இராணுவத்துக்கு வேலை செய்பவர்களாகவும் இருப்பதை. அவர்களின் தொழில் மக்களை நிர்வகிப்பது. அதுவும் அரசியல் இராணுவ நிலவரங்களுக்கு அப்பால்.

அரசாங்க அதிபரும் பொலிஸும் தான் இந்தக் கொலைகளை இட்டு செய்திகளை பத்திரிகைகளுக்கு சர்வதேச நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் சிங்கள பொலிஸ் அரசியல் சார்ந்தது அது இதைச் செய்யாது.

குறைந்தது மனித உரிமை ஆர்வலர்களாவது வாரம் ஒரு தடவை வடக்குக் கிழக்கு பற்றிய செய்திகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு வர ஒரு நியாயமான செய்தி அமைப்பினை உருவாக்கிச் செயற்பட வேண்டும். அது எமது மக்களின் உயிர்களை காப்பதோடு மட்டுமன்றி சிங்கள அரசின் ஆக்கிரமிப்பில் எமது மக்கள் படும் அவலங்களை வெளி உலகம் காண அதற்கு பரிகாரம் தேட அவர்களை தூண்ட முடியும். இதன் மூலமும் நாம் சர்வதேச அரங்கில் எமது போராட்டத்திற்கான நியாயத்தை மேலும் வலுப்படுத்த முடியும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமாவது மறைமுகமாகவாவது இதைச் செய்ய முன் வரனும். ஐ சி ஆர் சி போன்ற சர்வதேச தொண்டர் அமைப்புக்களை வெளியேற்றிவிட்டு சிங்களம் மீண்டும் தமிழ் கூலிகளையும் சிங்களக் காடையர்களையும் கொண்டு படுகொலைகளை அரங்கேற்றி வருவதை நாமும் மறைத்து அல்லது எமக்குள் செய்தியாக பகிர்ந்து கொண்டிருந்தோமானால் அது எமது இனத்தை அழிவின் விளிம்பில் கொண்டு போய் நிறுத்துவதை எவராலும் தடுக்க முடியாது.

1989,90 களில் இந்தியப் படைகளோடு சேர்ந்தும் இவ்வாறான படுகொலைகளை தமிழ் கூலிக்குழுக்கள் செய்து கொண்டிருந்தன என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. அவர்களின் செயற்பாடுகளை புலிகளின் மீள் வருகை கட்டுப்படுத்தியது. ஆனால் இன்று பயங்கரவாத முலாம் பூசப்பட்டு புலிகள் செயலிழக்கச் செய்யப்பட்டு மிகவும் திட்டமிட்ட முறையில் சிங்களம் எம் இனத்தை கருவழிக்கும் செயலை செய்து வருகிறது.

இதனை எனியும் அனுமதிப்பது.. அல்லது இவற்றை வைத்து வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துவாங்கலாம் என்று எண்ணி இருப்போமானால்.. எம்மைப் போன்ற ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் உலகில் இருப்பது அவசியமில்லை என்றாகிவிடும். சிந்தியுங்கோ மக்களே.

Edited by nedukkalapoovan

ஊரில் மண் அகழ்வால் ஏற்பட்டுள்ள விபரீதத்தை எடுத்துக்காட்டி, சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக உழைத்த ஒருவருக்கு சிங்கள அரச பயங்கரவாதிகளால் வழங்கப்பட்ட மரண தண்டனை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.