Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எதற்காக புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்?

Featured Replies

எதற்காக புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்?

உங்களுக்கு என்னதான் வேண்டும்? எதற்காகப் புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்? எதற்காகத் தமிழ்த் தேசியத் தளத்தைக் குறி வைத்து நகர்கிறீர்கள்? என்ற கேள்வியே இப்போது எங்கள் எல்லோரையும் ஆக்கிரமித்துள்ளது.

மெல்ல மெல்ல உருவான உங்களின் தமிழ்த் தேசிய சிதைவு முயற்சி, தற்போது பகிரங்கமாக மேடை ஏறி வருவது எங்களுக்குத் திகிலான அநுபவங்களையே தருகின்றது. இப்போதெல்லாம், புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் சிங்கள எதிரியைப் பற்றிப் பேசுவது கிடையாது. அவலங்களே வாழ்வான எங்கள் உறவுகளை எண்ணிப்பார்க்க முடிவதில்லை. மொத்த மனத்தையும் அழுத்தும் பாரமாக, எதிர்காலத்திற்கான பாதைகளில் தடைக் கற்களாக விழுந்து எங்கள் விடுதலை நோக்கிய பயணத்தைத் திசைமாற்றும் புதிய குழுவாக உருவாக முயலும் உங்களைப்பற்றியே நாம் அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. இதுதான் எங்கள் எதிரிக்குத் தேவையானது. நீங்கள் செய்யும் இந்தக் காரியத்தைத்தான் தான் செய்யப்போவதாக சிங்களக் கொடுங்கோலர்கள் சூழுரைத்தார்கள். நீங்கள் எங்கள்மீது யுத்தத்தை ஆரம்பித்த பின்னர் கொழும்பு வாய் திறப்பதே இல்லை. அதுதான், அவர்களது பணியை நீங்கள் கச்சிதமாகச் செய்து வருகின்றீர்களே!

உங்களுக்கும், எங்களுக்கும் நன்றாகவே தெரியும் விடுதலைப் புலிகளைச் சொல்லாமல் தமிழீழத்தைச் சுவாசிக்கும் மக்கள் மத்தியில் பயணிக்க முடியாது என்பது. தலைவனின் மந்திரத்தை உச்சரிக்காமல் தமிழ்த் தேசியம் பற்றிக் கதைக்கவே முடியாது என்பது. அதனால், நீங்களும் 19 மாத மௌனத்தின் பின்னர் ‘விடுதலைப் புலிகளின் தடையை எடுக்கிறோம்’ என்ற கொட்டொலியுடன் களத்தில் இறங்கியுள்ளீர்கள்.

கருப்பொருள் நன்றாகவே உள்ளது. ஆனால், காரண – காரியங்கள்தான் உங்கள்மீதான சந்தேகத்தைப் பலப்படுத்தி வருகின்றது. அதனால், உங்களிடம் கேள்வி கேட்கவேண்டிய கட்டாயத்திலும், அவசியத்திலும் நீங்களே எங்களைத் தள்ளிவிட்டுள்ளீர்கள். முதலில், தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்துத் திசை எங்கும் கூக்குரல் இட்டீர்கள். உங்கள் தலைவர் கே.பி.யை எங்களுக்கும் தலைவராக்க முயற்சி செய்தீர்கள். முடியாமல் போனபோது, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் உங்களைப் புதைத்துக்கொண்டு 18 மாதங்கள் அஞ்ஞானவாசம் புரிந்தீர்கள். இப்போது ‘தமிழர் நடுவம்’ என்ற புதிய களத்தை அமைத்து, தமிழ்த் தேசிய விடுதலைத் தளம்மீது பகிரங்கப் போர் தொடுத்துள்ளீர்கள்.

எதற்காக இந்தத் தமிழ்த் தேசிய சிதைவுப் போராட்டம்? உங்களுக்கு என்னதான் வேண்டும்? எதற்காக எங்களையும் முள்ளிவாய்க்கால் நோக்கி அழைத்துச் செல்ல முயற்சிக்கிறீர்கள்? எதற்காக எங்கள் தமிழீழ மக்களின் வாழ்வோடும், உயிரோடும் விபரீத விளையாட்டு விளையாட முற்படுகிறீர்கள்?

முள்ளிவாய்க்கால் பேரவல காலத்திலும், அதன் பின்னரும் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களின் ஒழுங்குபடுத்தல்களோடு நாம் மேற்கொண்ட போராட்டங்கள் எதுவும் வீணாகிப் போகவில்லையே. நாங்கள் ஒன்றாகி எழுந்த காரணத்தால், ஐரோப்பிய ஒன்றியம் சிங்கள தேசத்திற்கான ஆடை ஏற்றுமதிச் சலுகையை இரத்துச் செய்தது. நாங்கள் ஒன்றாகக் குரல் கொடுத்த காரணத்தால், சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றம் குறித்த விசாரணைக்கு ஒரு குழுவை நியமித்தது ஐக்கிய நாடுகள் அவை. நாங்கள் ஒன்றாகப் போராடியதால், சிங்கள தேசம் மீதான போர்க் குற்ற விசாரணைக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுத்து வருகின்றது. எங்கள் புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட பிரச்சார நடவடிக்கை காரணமாக, சிங்கள தேசம் கிலி கொண்டு அலறுகின்றது. எங்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் பணியாளர்கள் மேற்கொண்ட மனிதநேயப் பணி காரணமாக புலம்பெயர் தமிழர்களது உதவிகள், அவர்கள் மூலமாகவே நேரடியாக, பாதிப்புக்குள்ளான உறவுகளுக்குப் போய் சேர்கின்றது.

உங்களது பங்குபற்றல்கள் இல்லாமலேயே இத்தனையும் நிகழ்ந்தது. இன்னமும் எங்கள் போராட்டம் முனைப்புப் பெறும். எங்கள் மண்ணும், எங்கள் மக்களும் விடுதலை பெறும்வரை எங்கள் கால்களும், குரல்களும் ஓயாது. ஆனாலும், எங்களது விடுதலைக் கட்டமைப்பு நோக்கி நீங்கள் கற்களை வீசுகின்றீர்கள். எங்கள் தேசிய விடுதலைக் கட்டமைப்புகளுக்குக் கல்லறை கட்டுவதாய்ச் சபதம் செய்கிறீர்கள்.

நாங்கள் எதிர்பார்த்தோம், எங்கள்மீது தாக்குதல் நடக்கும் என்று. நாங்கள் எதிர்பார்த்தோம், எங்கள் விடுதலைக் கட்டமைப்புக்களைச் சிதைக்கும் முயற்சிகள் இடம்பெறும் என்று. நாங்கள் எதிர்பார்த்தோம், ஒன்றாய் எழும் எங்கள் பலத்தைப் பிளப்பதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன என்று. ஆனால், சத்தியமாகவே நாங்கள் எதிர்பார்க்கவில்லை உங்கள் வடிவில் இதுவெல்லாம் நிகழ்த்தப்படும் என்று. சிங்களத்தின் சதி வலையை அறுத்தெறியக் காத்திருந்த எங்கள்மீது உங்களின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உங்களது இந்த தமிழ்த் தேசிய சிதைவு முயற்சியில் தமிழீழமோ, தமிழீழ மக்களோ அல்ல, சிங்கள தேசமே மகிழ்சியும், பெருமிதமும் அடைகின்றது. சிங்கள தேசம் தனது வியூகம் சிறப்பாகவே நடைபெறுகின்றது என்ற நம்பிக்கையுடன் நிம்மதியாகத் துயில் கொள்கின்றது. கடந்த 19 மாதங்களாக நீங்கள் ஓய்வான பொழுதுகளைக் கழித்த போது, நாங்கள் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்தோம். நீங்கள் துயில் கலைந்து கொடி தூக்கியபோது, அதில் வாள் பிடித்த சிங்கத்தின் வாடை வீசுகின்றது.

போதும், நாங்களும், எங்கள் மக்களும் விலை போனவர்களால் அழிந்தது போதும். எங்களை விட்டுவிடுங்கள். எங்கள் உயிர் பிரியும் வரையினிலும் எங்கள் தலைவனின் பாதையில் பயணிக்கும் களத்தையும் இழக்கச் சபிக்காதீர்கள்!

- இசைப்பிரியா

URL simplifié: http://www.eutamil.com/?p=12774

பதவியும் அதிகாரமும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பு நீலமேகம்

இணைப்புக்கு நன்றி

எதற்காக புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்?

விழிப்புணர்வையும் செயற்திறனையும் வினவும் வினாக்கள்:

1. உங்களுக்கு என்னதான் வேண்டும்?

2. எதற்காகப் புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்?

3. எதற்காகத் தமிழ்த் தேசியத் தளத்தைக் குறி வைத்து நகர்கிறீர்கள்?

4. எதற்காக இந்தத் தமிழ்த் தேசிய சிதைவுப் போராட்டம்? உங்களுக்கு என்னதான் வேண்டும்?

5. எதற்காக எங்களையும் முள்ளிவாய்க்கால் நோக்கி அழைத்துச் செல்ல முயற்சிக்கிறீர்கள்?

6. எதற்காக எங்கள் தமிழீழ மக்களின் வாழ்வோடும், உயிரோடும் விபரீத விளையாட்டு விளையாட முற்படுகிறீர்கள்?

கட்டுரையாளரே கீழ்வரும் பதில்களையும் தந்துள்ளார், ஆனால், நாம் ஒற்றுமையாக ஒன்றுபட்டு இன்னும் சாதிக்கவேண்டியன பல உள்ளன.

a) நாங்கள் ஒன்றாகி எழுந்த காரணத்தால், ஐரோப்பிய ஒன்றியம் சிங்கள தேசத்திற்கான ஆடை ஏற்றுமதிச் சலுகையை இரத்துச் செய்தது. ( அமெரிக்காவின் ஜி.எஸ்.பி சலுகை நிற்பாட்டபடல் வேண்டும்)

b) நாங்கள் ஒன்றாகக் குரல் கொடுத்த காரணத்தால், சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றம் குறித்த விசாரணைக்கு ஒரு குழுவை நியமித்தது ஐக்கிய நாடுகள் அவை.

c) நாங்கள் ஒன்றாகப் போராடியதால், சிங்கள தேசம் மீதான போர்க் குற்ற விசாரணைக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுத்து வருகின்றது. ( நிரந்தர விசாரணைக்குழு அமைக்கப்படல் வேண்டும்)

d) எங்கள் புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட பிரச்சார நடவடிக்கை காரணமாக, சிங்கள தேசம் கிலி கொண்டு அலறுகின்றது. ( ஒரு பொருளாதார தடை சிங்களத்திற்கு எதிராக கொண்டுவரப்படல் வேண்டும் )

e) எங்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் பணியாளர்கள் மேற்கொண்ட மனிதநேயப் பணி காரணமாக புலம்பெயர் தமிழர்களது உதவிகள், அவர்கள் மூலமாகவே நேரடியாக, பாதிப்புக்குள்ளான உறவுகளுக்குப் போய் சேர்கின்றது. ( ஒரு களஉறவு முன்னர் குறிப்பிட்டது போல 40000 -50000 புலம் பெயர் குடும்பங்களும் மனம் வைத்து உதவ வேண்டும் )

புலிகள் இயக்கம் – ஒழுங்கமைக்கும் நடவடிக்கையில் போராளிகள்

திகதி:29.12.2010

இது வரை உள்வட்டாரங்களில் மட்டுமே அறியப்பட்டிருந்த பரபரப்பு மிகுந்த செய்தி ஒன்றை இம் முறை நடந்த மாவீரர் நாள் நிகழ்வு மக்கள் அரங்கத்திற்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.

விடயம் பரபரப்பு மிகுந்தது மட்டும் அல்ல, பாரதூரமானதும் கூட என்றும் இல்லாதபடி வழமைக்கு மாறான வகையில் இம்முறை இரண்டு மாவீரர் நாள் அறிக்கைகள் வெளியாகின. ஒரு அறிக்கை வழமையைப் போன்று விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்தின் பெயரில் நவம்பர் 27 அன்று வெளியிடப்பட்டிருந்தது.

மற்றைய அறிக்கை விடுதலைப் புலிகளின் மரபுக்கு முரணாக அனைத்துலகப் பணியகத்தின் பெயரில் நவம்பர் 26 அன்றே வெளியிடப்பட்டிருந்தது. சில நாடுகளில் தலைமைச் செயலகத்தின் மாவீரர் நாள் அறிக்கை வாசிக்கப்பட்டது. சில நாடுகளில் அனைத்துலகப் பணியகத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைக்கின்ற தலைமைச் செயலகத்திற்கு விடுதலைப் புலிகளின் துறைகள் ஒன்றின் உப பிரிவான அனைத்துலகப் பணியகம் கட்டுப்பட மறுப்பதோடு தலைமைக்கு சவாலும் விடுகிறது என்கின்ற பாரதூரமான செய்தியை இந்த நிகழ்வுகள் அம்பலப்படுத்தின.

இந்த இடத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் பற்றி கூறியாக வேண்டும். மே 2009 வரை தேசியத் தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் தமிழீழத் தாயகத்தில் விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் இயங்கி வந்தது. முள்ளிவாய்க்கால் அனர்த்தத்திற்கு பின்பு தேசியத் தலைவரின் நேரடி வழிநடத்தலை இழந்த தலைமைச் செயலகம் குறிப்பிட்ட காலத்திற்கு தன்னுடைய செயற்பாட்டையும் இழந்து போயிருந்தது.

ஆயினும் சிறிலங்காப் படைகளின் முற்றுகையை உடைத்து வெளியேறிய போராளிகள் மீண்டும் தலைமைச் செயலகத்தை புறநிலை நாடுகளில் இருந்து செயற்பட வைத்தார்கள். பல மூத்த தளபதிகள் போரில் கொல்லப்பட்டு விட்டாலும், ஆளுமை மிக்க சில தளபதிகள், இரண்டாம் கட்டத் தலைவர்கள் எனக் குறிப்பிடத்தக்க சிலர் தப்பி வந்து இந்த தலைமைச் செயலகத்தை மீள உருவாக்கி, விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீளக் கட்டியமைக்கும் பணியில் இறங்கினார்கள். ஆனால் இந்தப் பணியில் இவர்களுக்கு ஒரு பெரும் சவால் காத்திருந்தது. தலைமைச் செயலகத்தை உருவாக்கிய போராளிகள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குள் நன்கு அறிமுகமானவர்களாகவே இருந்தார்கள். வெளிநாட்டுக் கிளைகளின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கும் ஏற்கனவே அறிமுகமானவர்கள்தான் அவர்கள். ஆனால் புலம்பெயர் வாழ் மக்களுடன் அவர்களுக்கு அறிமுகம் இருந்திருக்கவில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் புலம்பெயர் வாழ் மக்களிற்கும் பாலமாக செயற்பட்டு வந்த அனைத்துலகப் பணியகம் சிலருடைய தவறான வழிநடத்தலால் குளறுபடியாக நடக்கத் தொடங்கியது. புலம்பெயர் மக்களுடன் தமக்கு இருக்கும் நேரடித் தொடர்பை தமது பலமாக கருதிய குறிப்பிட்ட நபர்கள் சில விடயங்களில் தான் தோன்றித்தனமாக நடக்கத் தொடங்கினார்கள்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தரவுகள் சிலவற்றை செயற்படுத்தவும் இவர்கள் மறுத்தார்கள்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அனைத்துலகப் பணியகத்தின் செல்வாக்கில் செயற்படுகின்ற ஊடகங்களாகிய பதிவு, ஈழமுரசு, கருப்பு போன்றவற்றில் விடுதலைச் செயற்பாட்டாளர்களை கொச்சைப்படுத்துகின்ற “திறந்த மடல்”, கட்டுரைகள், கேலிச் சித்திரங்கள் வெளிவரத் தொடங்கிய பொழுது, அவைகளை நிறுத்தும்படி கண்டிப்பான உத்தரவு விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து சென்றது. ஆனால் அவற்றை நிறுத்துவதற்குப் பதிலாக போராளிகளைக் காட்டிக் கொடுக்கின்ற கைங்கர்யத்தில் இந்த ஊடகங்கள் இறங்கின. ரகசியமாக செயற்பட்டு வந்த போராளிகள் சிலரின் பெயர்களையும் இருப்பிடங்களையும் வெளியிட்டு கட்டுரை வரைந்து பெரும் துரோகச் செயலை இந்த ஊடகங்கள் செய்தன. இந்தக் காட்டிக்கொடுப்பின் காரணமாக சில நெருக்கடிகளையும் போராளிகள் சந்திக்க நேர்ந்தது.

பேச்சுக்களின் மூலம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அதுவரை சிலரிடம் இருந்த நம்பிக்கையின் மீது இந்தச் சம்பவம் கல்லைத் தூக்கிப் போட்டது. அனைத்துலப் பணியகம் நவம்பர் 26 அன்று மாவீரர் நாள் அறிக்கை விட்டு செய்த மலிவான அரசியல் நிலைமையை மேலும் மோசமாக்கி விட்டது.

இன்றைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. தலைமைச் செயலகம் சார்பில் குறிப்பிட்ட நாடுகளுக்கு போராளிகள் அனுப்பப்பட்டு நிர்வாக மாற்றங்களுக்கான வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் தமது ஊடக பலத்தை பயன்படுத்தி போராளிகளை “மர்ம நபர்கள்”, “கேபியின் ஆட்கள்” என்று பரப்புரை மேற்கொள்ளவும், எதிரியிடம் காட்டிக் கொடுக்கவும் தயங்காத கூட்டத்தை கையாள்வது விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உண்மையிலேயே சவாலான விடயமாகவே இருக்கப் போகிறது. ஆயினும் தலைமைச் செயலகத்தில் செயற்படுகின்ற போராளிகள் புலிகளுக்கே உரிய உறுதியோடு இருக்கிறார்கள். நிலைமையை ஒழுங்குபடுத்தி புலிகள் இயக்கத்தை துடிப்போடு செயற்பட வைப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

வரும் வாரங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமைச் செயலகம் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகளில் பல மட்டங்களில் பலவிதமாக விளங்கிக் கொள்ளப்படும். குழப்பங்களுக்கு இடம் அளிக்காது மக்களும் விடுதலைச் செயற்பாட்டாளர்களும் தெளிவாக இருக்க வேண்டியது இந்த இடத்தில் மிக முக்கியமானதாகும்

சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காது, சொந்த மூளையைக் கொண்டு சிந்தித்து முடிவுகளை எடுக்கவேண்டியது மிகவும் அவசியம். சில பொய்ப் பரப்புரைகளுக்கு பலியானால் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீள் எழுச்சியை இல்லாமல் செய்வதிலேயே போய் முடியும்.

ஆகவே வரும் வாரங்களில் புலம்பெயர் ஊடகங்களின் வெளிவர இருக்கின்ற செய்திகள் குறித்து மிகவும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள். புலம்பெயர் நாடுகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை தீர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் செயற்திறன் மிக்க ஒரு இயக்கமாக மீண்டும் உருவெடுக்க இருக்கின்ற ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிற்கின்றோம் என்பதை உணர்ந்து அனைவரும் செயற்பட வேண்டும்.

முக்கிய குறிப்பு: இக் கட்டுரையில் பல விடயங்கள் சுயதணிக்கை செய்யப்பட்டுள்ளன. அனைத்தையும் விரிவாக பேச முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் காலத்தின் தேவை கருதி தவிர்க்கப்பட்டுள்ளன. நிலைமை அனுமதித்தால் முழு விபரங்களோடு விரிவான கட்டுரை வெளிவரும்.

- வி.சபேசன் B.A.Pol.Sci

எதற்காக புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்?

உங்களுக்கு என்னதான் வேண்டும்? எதற்காகப் புலம்பெயர் தமிழீழ மக்களான எங்கள்மீது போர் தொடுக்கிறீர்கள்? எதற்காகத் தமிழ்த் தேசியத் தளத்தைக் குறி வைத்து நகர்கிறீர்கள்? என்ற கேள்வியே இப்போது எங்கள் எல்லோரையும் ஆக்கிரமித்துள்ளது.

மெல்ல மெல்ல உருவான உங்களின் தமிழ்த் தேசிய சிதைவு முயற்சி, தற்போது பகிரங்கமாக மேடை ஏறி வருவது எங்களுக்குத் திகிலான அநுபவங்களையே தருகின்றது. இப்போதெல்லாம், புலம்பெயர் தமிழர்களாகிய நாங்கள் சிங்கள எதிரியைப் பற்றிப் பேசுவது கிடையாது. அவலங்களே வாழ்வான எங்கள் உறவுகளை எண்ணிப்பார்க்க முடிவதில்லை. மொத்த மனத்தையும் அழுத்தும் பாரமாக, எதிர்காலத்திற்கான பாதைகளில் தடைக் கற்களாக விழுந்து எங்கள் விடுதலை நோக்கிய பயணத்தைத் திசைமாற்றும் புதிய குழுவாக உருவாக முயலும் உங்களைப்பற்றியே நாம் அச்சம் கொள்ள வேண்டியுள்ளது. இதுதான் எங்கள் எதிரிக்குத் தேவையானது. நீங்கள் செய்யும் இந்தக் காரியத்தைத்தான் தான் செய்யப்போவதாக சிங்களக் கொடுங்கோலர்கள் சூழுரைத்தார்கள். நீங்கள் எங்கள்மீது யுத்தத்தை ஆரம்பித்த பின்னர் கொழும்பு வாய் திறப்பதே இல்லை. அதுதான், அவர்களது பணியை நீங்கள் கச்சிதமாகச் செய்து வருகின்றீர்களே!

உங்களுக்கும், எங்களுக்கும் நன்றாகவே தெரியும் விடுதலைப் புலிகளைச் சொல்லாமல் தமிழீழத்தைச் சுவாசிக்கும் மக்கள் மத்தியில் பயணிக்க முடியாது என்பது. தலைவனின் மந்திரத்தை உச்சரிக்காமல் தமிழ்த் தேசியம் பற்றிக் கதைக்கவே முடியாது என்பது. அதனால், நீங்களும் 19 மாத மௌனத்தின் பின்னர் ‘விடுதலைப் புலிகளின் தடையை எடுக்கிறோம்’ என்ற கொட்டொலியுடன் களத்தில் இறங்கியுள்ளீர்கள்.

கருப்பொருள் நன்றாகவே உள்ளது. ஆனால், காரண – காரியங்கள்தான் உங்கள்மீதான சந்தேகத்தைப் பலப்படுத்தி வருகின்றது. அதனால், உங்களிடம் கேள்வி கேட்கவேண்டிய கட்டாயத்திலும், அவசியத்திலும் நீங்களே எங்களைத் தள்ளிவிட்டுள்ளீர்கள். முதலில், தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்துத் திசை எங்கும் கூக்குரல் இட்டீர்கள். உங்கள் தலைவர் கே.பி.யை எங்களுக்கும் தலைவராக்க முயற்சி செய்தீர்கள். முடியாமல் போனபோது, அடுத்த கட்ட நகர்வுக்கான ஆயத்தங்களில் உங்களைப் புதைத்துக்கொண்டு 18 மாதங்கள் அஞ்ஞானவாசம் புரிந்தீர்கள். இப்போது ‘தமிழர் நடுவம்’ என்ற புதிய களத்தை அமைத்து, தமிழ்த் தேசிய விடுதலைத் தளம்மீது பகிரங்கப் போர் தொடுத்துள்ளீர்கள்.

எதற்காக இந்தத் தமிழ்த் தேசிய சிதைவுப் போராட்டம்? உங்களுக்கு என்னதான் வேண்டும்? எதற்காக எங்களையும் முள்ளிவாய்க்கால் நோக்கி அழைத்துச் செல்ல முயற்சிக்கிறீர்கள்? எதற்காக எங்கள் தமிழீழ மக்களின் வாழ்வோடும், உயிரோடும் விபரீத விளையாட்டு விளையாட முற்படுகிறீர்கள்?

முள்ளிவாய்க்கால் பேரவல காலத்திலும், அதன் பின்னரும் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களின் ஒழுங்குபடுத்தல்களோடு நாம் மேற்கொண்ட போராட்டங்கள் எதுவும் வீணாகிப் போகவில்லையே. நாங்கள் ஒன்றாகி எழுந்த காரணத்தால், ஐரோப்பிய ஒன்றியம் சிங்கள தேசத்திற்கான ஆடை ஏற்றுமதிச் சலுகையை இரத்துச் செய்தது. நாங்கள் ஒன்றாகக் குரல் கொடுத்த காரணத்தால், சிங்கள அரசால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றம் குறித்த விசாரணைக்கு ஒரு குழுவை நியமித்தது ஐக்கிய நாடுகள் அவை. நாங்கள் ஒன்றாகப் போராடியதால், சிங்கள தேசம் மீதான போர்க் குற்ற விசாரணைக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுத்து வருகின்றது. எங்கள் புலம்பெயர் தமிழ்த் தேசிய கட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் மேற்கொண்ட பிரச்சார நடவடிக்கை காரணமாக, சிங்கள தேசம் கிலி கொண்டு அலறுகின்றது. எங்கள் தமிழ்த் தேசிய விடுதலைப் பணியாளர்கள் மேற்கொண்ட மனிதநேயப் பணி காரணமாக புலம்பெயர் தமிழர்களது உதவிகள், அவர்கள் மூலமாகவே நேரடியாக, பாதிப்புக்குள்ளான உறவுகளுக்குப் போய் சேர்கின்றது.

உங்களது பங்குபற்றல்கள் இல்லாமலேயே இத்தனையும் நிகழ்ந்தது. இன்னமும் எங்கள் போராட்டம் முனைப்புப் பெறும். எங்கள் மண்ணும், எங்கள் மக்களும் விடுதலை பெறும்வரை எங்கள் கால்களும், குரல்களும் ஓயாது. ஆனாலும், எங்களது விடுதலைக் கட்டமைப்பு நோக்கி நீங்கள் கற்களை வீசுகின்றீர்கள். எங்கள் தேசிய விடுதலைக் கட்டமைப்புகளுக்குக் கல்லறை கட்டுவதாய்ச் சபதம் செய்கிறீர்கள்.

நாங்கள் எதிர்பார்த்தோம், எங்கள்மீது தாக்குதல் நடக்கும் என்று. நாங்கள் எதிர்பார்த்தோம், எங்கள் விடுதலைக் கட்டமைப்புக்களைச் சிதைக்கும் முயற்சிகள் இடம்பெறும் என்று. நாங்கள் எதிர்பார்த்தோம், ஒன்றாய் எழும் எங்கள் பலத்தைப் பிளப்பதற்கான சூழ்ச்சிகள் இடம்பெறுகின்றன என்று. ஆனால், சத்தியமாகவே நாங்கள் எதிர்பார்க்கவில்லை உங்கள் வடிவில் இதுவெல்லாம் நிகழ்த்தப்படும் என்று. சிங்களத்தின் சதி வலையை அறுத்தெறியக் காத்திருந்த எங்கள்மீது உங்களின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உங்களது இந்த தமிழ்த் தேசிய சிதைவு முயற்சியில் தமிழீழமோ, தமிழீழ மக்களோ அல்ல, சிங்கள தேசமே மகிழ்சியும், பெருமிதமும் அடைகின்றது. சிங்கள தேசம் தனது வியூகம் சிறப்பாகவே நடைபெறுகின்றது என்ற நம்பிக்கையுடன் நிம்மதியாகத் துயில் கொள்கின்றது. கடந்த 19 மாதங்களாக நீங்கள் ஓய்வான பொழுதுகளைக் கழித்த போது, நாங்கள் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருந்தோம். நீங்கள் துயில் கலைந்து கொடி தூக்கியபோது, அதில் வாள் பிடித்த சிங்கத்தின் வாடை வீசுகின்றது.

போதும், நாங்களும், எங்கள் மக்களும் விலை போனவர்களால் அழிந்தது போதும். எங்களை விட்டுவிடுங்கள். எங்கள் உயிர் பிரியும் வரையினிலும் எங்கள் தலைவனின் பாதையில் பயணிக்கும் களத்தையும் இழக்கச் சபிக்காதீர்கள்!

- இசைப்பிரியா

URL simplifié: http://www.eutamil.com/?p=12774

புலத்தில் விடுதலைச் செயற்பாடுகளைக் குறிவைக்கும் கே.பி.யின் ஆட்கள்’ என்னும் விசமப் பிரச்சாரம்!!

திகதி:23.12.2010

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தகர்ப்பிற்குப் பின், உலகஅரங்கில் கடும் தொனியில் எதிரொலித்த ‘பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற முழக்கத்தில் உண்மையான பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதோ இல்லையோ, பல தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள், நசிந்தும், மெலிந்தும், உயிர்பிரிந்தும் போயுள்ளன.

சிங்கள இனவாத அரசும், இந்தப் பொதுப்பதத்தை தன் கையில் கெட்டியாகப் பிடித்தே, பல நாடுகளின் ஆதரவைப் பெற்று தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான மூர்க்கத்தனமான, கோழைத்தனமான பெரும் போரை நடத்தி முடித்திருக்கின்றது.

தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், பெரும் இழப்புக்களைச் சந்தித்து, முள்ளிவாய்க்காலில், ஆயுதங்கள் மௌனித்தபோதும், தமிழரின் விடுதலைப் போராட்டம் புலத்தில் அரசியல் ராஜதந்திரத் தளங்களில் தன் அடுத்த கட்ட நகர்வுகளில் முனைப்புக் கொண்டுள்ளது.

இத்தகு வீரியமிகு முனைப்புக்களை, முளையிலேயே கிள்ளியெறியும் செயற்பாடுகளும் கூடவே முனைப்புப் பெற்றுள்ளன.

இதற்கு அவர்கள் பாவிக்கும் பதம் ‘கே.பி.யின் ஆட்கள்.| என்பதாகும்.

கே.பி. சிங்களச் சிறையில் இருக்கும் ஒரு கைதி. சிறீலங்காவின் வரலாற்றில் அதிகூடிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட ஒருவர். அவர், தற்போது, சிங்கள அரசின் சொற்படி பேசுகின்ற, கைப்பொம்மையாக செயற்படுகின்ற ஒருவர் என்பது, அறிவுக் குறைச்சலான ஒருவருக்குக் கூட நன்கு புரிந்துவிடும்.

அப்படியிருக்க, கே.பி.யோடு தொடர்புபடுத்தி, தமிழர்களின் நியாயமான விடுதலைச் செயற்பாடுகளை, முடக்க இவர்கள் ஏன் முயற்சிக்கின்றார்கள்?

நாடுகடந்த தமிழீழ அரசு மீதும், பிரான்சில் அண்மையில் உதயமான தமிழர் நடுவம் மீதும், தாயகவிடுதலைக்கு அர்ப்பணிப்போடு உழைத்தவர்கள் மீதும் இதே வசவுகள் முன்வைக்கப்பட்டன. இது தொடரவே செய்யும்.

ஊடகப் பணியில் பிரதான பணியாக இத்தகைய சேறடிப்புக்களை மாத்திரமே கொண்டிருக்கும் குறிப்பிட்ட சில ஊடகங்கள். பிரான்ஸ் தமிழர் நடுவத்தின் மீது மேற்கொண்ட வன்மம் மிக்க, பொய்யும் புனைகதையுமாக சோடித்து வெளியிட்ட செய்திகளுக்கு பதில் சொல்வதைத் தவிர்க்கவே, விரும்புகின்றோம். இவர்களுடன் உரசி, எம்மை அழுக்குப் படுத்திக்கொள்ள விரும்பவில்லை. நாம் மக்கள் மீதான கரிசனையின் பேரில், தூய நோக்குடன் பயணப்படுகின்றோம்.

நாங்கள் விரும்பாத, வெறுக்கின்ற, அசிங்கமான தளம் ஒன்றில், எம்மை நோக்கி விரிக்கப்படுகின்ற சதிவலையில் சிக்கிக்கொள்ள நாம் விரும்பவில்லை.

இருந்தபோதும், இச்சந்தர்ப்பத்தில், எம்மக்களுக்கு எம்மைப் பற்றி எடுத்துக்கூறும் சந்தர்ப்பமாக இதனைக் கருதிக்கொள்கின்றோம்.

நாம் எதனையும் அழிக்கப்புறப்பட்டவர்கள் அல்ல. ஆக்கப் புறப்பட்டவர்கள். பொறுப்பற்ற, சிறுபிள்ளைத்தனமான நடவடிக்கைகளால், தேசியத் தலைவர் சிறிகச் சிறுகக் கட்டியமைத்த பெருங்கோட்டை சிதைந்தழிந்து போய்விடுமோ என்ற பதைபதைப்பில், உந்துதலில், கைகோர்த்தவர்கள்.

உலகத் தமிழர்கள் அனைவரும் ஓரணியில் வரவேண்டும் என்று வலியுறுத்துபவர்கள், தேசியத் தலைவரின் பேரில் உண்மையான பற்றும் பாசமும், அவர் காட்டிய பாதையில் உறுதியான ஈடுபாடும் கொண்ட யாவரும், இதனைத் தான் வலியுறுத்துவர். சிறு குழுக்களாகப் பிரிந்துபோக யாரையும் அனுமதிக்கமாட்டார். சிதைவுகளை ஏற்படுத்தவும் முனைய மாட்டார்கள்.

பொது இலக்கு நோக்கி, ஒத்திசைவாக நகருவதே பலம். திசைக்கொன்றாய் தான்தோன்றித்தனமாக செயற்படுவது வெற்றிக்கு இட்டுச்செல்லாது.

சில ஊடகங்களும், சில தனிநபர்களும், இந்தச் சிதைவு முயச்சிகளையே தீவிரமாய் மேற்கொள்ளுகின்றனர். தேசிய தலைவர் கட்டிவளர்த்த பலத்தைச் சிதைத்தல், செயற்பாடுகள் அற்ற தன்மையை உருவாக்குதல், இதன்மூலம் சிங்கள அரசின் விருப்பத்திற்கு ஏற்ப, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முற்றாக அழித்தல் என்ற, திட்டமிடலுடன்தான் இவர்கள் இயங்குகின்றார்களா? அல்லது, தங்களது சொந்த நலன்கள் பாதிக்கப்பட்டுவிடும் என்ற, கீழ்த்தரமான சுயநல அச்சமா?

இவர்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அவதானிக்கும் யாவரும், தெளிவான முடிவுக்கு வரமுடியும். விமர்சனங்கள், வசைபாடல்கள், பொய்யான குற்றச்சாட்டுக்களின் ஊடாக, போராட்டத்தின் ஆதரவாளர்களை, அனுதாபிகளை, பங்காளிகளை எதிரிகளாகக் காண்பிப்பது. தூண்களாய் நின்ற தேசாபிமானிகளை தேசத் துரோகிகளாகப் பிரச்சாரப்படுத்துவது.

தேசியத்தலைவரை தமது சூரியத் தேவனாய் வரித்துக்கொண்டவர்களையே, தலைவருக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்துவது.

எதிரியும், அதனைத்தான் கூறுகின்றான். இவர்களும் அதனைத்தான் செய்கின்றார்கள்.உண்மையில், இவர்கள், போராட்டத்திற்கு மிகப்பெரும் கேடு விளைவிக்கின்றனர்.

தேசியத் தலைவருக்கு வரலாறு மன்னிக்காத பெரும் துரோகத்தைப் புரிகின்றனர்.

‘நாம் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் அல்ல’

‘கறையான் புற்றெடுக்க குடிகொண்ட பாம்புகளும் அல்ல நாம்’

விடுதலைப் போராட்டம் ஓங்கி வளர்ந்து பெரு விருட்சமான வரலாற்றின் பக்கங்களில், தமிழர் நடுவத்தின் பிரதிநிதிகளின், வேர்வையும், உழைப்பும், நாட்டில் போராடி, தொடர் அறாமல் இங்கு சளைக்காமல் உழைத்தவரின் பங்களிப்பும், கரிசனையும், உயிர்த்துடிப்புள்ள அர்ப்பணிப்பும் விரவிக்கிடக்கிறது.

குருட்டுத்தனமான விமர்சனத்தை விட்டுவிட்டு, அறிவுக் கண்கொண்டு உண்மையை தேடிப்பாருங்கள். பெற்று வளர்த்த பெற்ரோருக்குத்தான் குழந்தையின் அருமை தெரியும். ஆதை வெளியில் இருந்து பாத்தவர்களுக்கு குழந்தையின் அருமை தெரியா. தமிழர் நடுவத்தின் பிரதிநிதிகளின் தகமை என்ன? தகுதி என்ன? என்பது குறித்து, யார் எவர் அறிந்துவைத்திருக்கவேண்டுமோ அவர்கள் அறிந்தும் தெரிந்தும் வைத்திருக்கின்றனர்.

கடந்த ஒன்றரை வருடகாலமாக பொறுப்பில் இருந்தவர்கள் பொறுப்பற்ற முறையிலும,; சிறுபிள்ளைத் தனமாகவும் செயற்பட்டதனாலேயே இந்த தமிழர் நடுவத்தை உருவாக்கும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டோம். இடையில் வந்தவர்களின் விமர்சனங்கள் குறித்து நாங்கள்; அக்கறைப்படவுமில்லை, அலட்டிக்கொள்ளவும் இல்லை.

எமது செயற்பாடுகளே எம்மை மக்களுக்கு அடையாளப்படுத்தட்டும்.

அன்பான மக்களே!

தேசிய விடுதலைப் போராட்டத்தை புலத்தில், சிதைப்பதற்கான பொறுப்பையும், தேசியத் தலைவர் புலத் தமிழனிடம் எதனை எதிர்பார்த்தாரோ அதனை முற்றாகத் தகர்க்கின்ற நாசத்திட்டத்தையும் கையிலெடுத்திருப்பவர்கள் குறித்து உங்களுடையே பெரும் கேள்விகள் நிட்சயமாய் எழும்.

ஊகங்களின் அடிப்படையிலான புனைகதைளையும் ஆய்வுகளையும் பரபரப்பு செய்திகளையும் புனையும், திட்டமிட்டுப் பரப்பும், இவர்கள் யார்? இவர்களின் பின்னணி என்ன? இவர்களின் நோக்கம்தான் என்ன? ஏன் இப்படி நடந்துகொள்ளுகின்றனர்.? என்பன போன்ற பல கேள்விகள் உங்களிடம் ஏற்படக்கூடும்.

அதற்கான விடையை, அறிவின் துணைகொண்டு கண்டறியும் பொறுப்பையும் உங்களிடமே விட்டுவிடுகின்றோம்.

‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’

கடகடவென புதிசு புதிசாக...... புதிசு புதிசாக ..

ஏன் அவச்ரப்படுவான்.. மக்கள் என்றுமே முட்டாள்கள் அல்ல. .. யாராவது நல்ல திட்டங்களை செய்யப்போகினம் என்றால் அவையளப்பிடிச்சு விளக்கம் கேட்கவேண்டும்.. அந்த அளவிற்கு அறிவில்லையா.. நல்ல திட்டம் என்றால் தட்டிக்கொடுக்க வேணும்.. சாத்தியம் இல்லையென்றால் அதற்கான கருத்துக்களை முன்வைத்து தூக்கி எறிவதே பொருத்தமானது.

எனக்கு தெரிந்த ஒருவர் பிரித்தானியாவின் முன்னணி அமைப்பு உறுப்பினர் ஒருவரிடம் கேட்டார் இயக்கத்தின் தடையை நீக்குவது பற்றி ஏதும் திட்டம் இருக்கா என்று. அதற்கு அவர் சொன்ன பதில் இனி அது ஏன்? அதுக்கு இனி அவசியம் இல்லைத்தானே என்று..

ஆகவே இயக்க தடையினை நீக்க ஒரு அணி வேலை செய்யபோகுது என்றால் அதனை செய்யட்டும்.. நல்ல விடயம் தானே

அதைவிட்டிட்டு ஒப்பாரி பாடுவதும்.. ஒருவரை ஒருவர் தாக்குவதையும் எப்பொழுதுதான் நிறுத்தப்போகின்றோம்.

Edited by உமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.