Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன செய்யலாம் இதற்காக?” வெளியீட்டு விழாவில் அண்ணன் சீமான் ஆற்றிய உணர்ச்சி உரை

Featured Replies

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம்”என்ன செய்யலாம் இதற்காக?” வெளியீட்டு விழாவில் அண்ணன் சீமான் ஆற்றிய உணர்ச்சி உரை.ஆவண படங்களின் தாக்கத்தால் அவரது பேச்சில் அனல் தெரித்தது .காணொளி

--

தமிழ் நாட்டிலிருந்து தமிழ் தேவன் (நாம் தமிழர்)

9940024227

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ்.. திமுக.. அதிமுக மட்டும் பார்க்க வேண்டிய ஆவணம் மட்டுமல்ல..

ஈழத்து... மாற்றுக் கருத்து என்ற பார்வையில் ஜனாநாயகம் என்ற போர்வையில் இனத்துரோக்கம் செய்யும் இழி பிறப்புக்களும் இதைப் பார்க்க வேண்டும். சுய நலப் புகழுக்காக... சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு என்ற பெயரில் சிங்களத்து கொடுமையாளர்க்கு பாவ மன்னிப்பளிக்கும் "புனிதர்கள்" பார்க்க வேண்டும்.

தங்கள் இனப்பற்று முன் தலை சாய்க்கிற்றோம் சீமான் அண்ணன். நாங்கள் மறந்ததை கூட நீங்கள் செய்கிறீர்கள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து சீமான் அண்ணனின் இந்த உண்மைப் பேச்சை உணர்ச்சிப் பேச்சாக காட்டாதீர்கள். அவர் பேசுவது உண்மையையே.. அவர் உணர்ச்சியில் உளறுவது அல்ல இந்தப் பேச்சு.

  • தொடங்கியவர்

சீமானை முடக்க நினைக்கும் மூடர்களே......புரிந்துகொள்ளுங்கள்..எரிமலையை எடுத்து உங்கள் உள்ளங்கைகளால் மூடி முடக்க நினைத்தீர்களானால் எரிந்து சாமபலாகிவிடுவீர்கள்.சீமான் ஒரு எரிமலை. விடுதலையை சுவாசித்து வீச்சுடன் எரிகின்ற எரிமலை.அஞ்சா நெஞ்சன்...அடங்காத்தமிழன்...ஆயுதம் ஏந்தாப்போராளி..விடுதலைப்பரணி பாடும் வீரத்தமிழன். உன் பரணியிலே விழித்தெழட்டும் தமிழ்நாடு. அஞ்சி அஞ்சி அடங்கி மூலையிலே முடங்கிய தமிழினத்தின் தலை நிமித்திய தலைவனின் பாசமிகு தம்பி நீ.மறப்போமா உனை எம் விடுதலை வரலாற்றில்.எத்தனை தடைகள் போட்டார்கள்...எத்தனை இடர்கள் கொடுத்தார்கள். .எத்தனை தடவை ஜெயிலில் அடைத்தார்கள்.நெருப்பு அணந்ததா..?இல்லையே..இன்னும் இன்னும் வீச்சுடன் அல்லவா எரிகிறது...ஏனெனில் இது விடுதலைத்தீ..எத்தனை எத்தனை ஆயிரம் வேங்கைகள் ரத்தம் கொடுத்து வளர்த்த தீ..இது அணையாது.அணையவே அணையாது..ஒன்றுபோக ஒன்று என ஓயாது கிளம்பும் விடுதலை நெருப்பு இது..கத்தியை தீட்டி உன் கவட்டிலே வைத்து விட்டாய் கருவாயா...இனி நீ தப்பிக்கவே முடியாது..சினங்கொண்ட சிறுத்தையை நீ சீண்டி விட்டாய்...விடமுண்ட மீனைப்போல் நீ கலங்கப்போகிறாய்..கடிதமெழுதி..கடிதமெழுதியே காலத்தை கடத்திய கல் நெஞ்சனே..கரிவாயனே..உன் பொய்த்தோல உரிச்சு..உன் முகத்திரையை கிழிப்பார்கள் திடங்கொண்ட என் தமிழனின் தம்பிகள். பொறுத்திருந்து பார்..தமிழன் பொங்கினால் என்னாகுமென்று..

Edited by நெருப்பு நீலமேகம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு என நிரூபிக்கவேண்டும். அதற்கு தமிழகத்தின் பங்குதான் முக்கியம். ஏனெனில்உலகத்தமிழினத்தின் 90 வீதத்தை தன்னுடன் அது கொண்டுள்ளது.

நன்றி தம்பி சீமான்

தொடரட்டும் தங்கள் வீச்சு.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரோடு விதைப்பவர்கள் கௌரவத்தோடு அறுப்பார்கள்!

நன்றி ஐயா!

அம்மாவுக்கு முன்னால் போய் கைகட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இதே போல் தான் திருமாவையும் தூக்கிபிடிச்சீங்கள்.அவரின் பதவி ஆசை அவரை ராஜபக்சாவுக்கும் சலாம் போடப்பண்ணியது.

யாரையும் உசுப்பேத்தி இருப்பவைகளையும் நாம் இழக்காமல் எமதுகாலில் நடப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கு முன்னால் போய் கைகட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இதே போல் தான் திருமாவையும் தூக்கிபிடிச்சீங்கள்.அவரின் பதவி ஆசை அவரை ராஜபக்சாவுக்கும் சலாம் போடப்பண்ணியது.

யாரையும் உசுப்பேத்தி இருப்பவைகளையும் நாம் இழக்காமல் எமதுகாலில் நடப்போம்.

ஐயோ அண்ணா

நீங்கள் எந்தக்காலில் நிற்கிறீர்கள் அதைத்தானே கடந்த 3 வருடமாக கேட்கின்றோம்.

பதிலே இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அம்மாவுக்கு முன்னால் போய் கைகட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இதே போல் தான் திருமாவையும் தூக்கிபிடிச்சீங்கள்.அவரின் பதவி ஆசை அவரை ராஜபக்சாவுக்கும் சலாம் போடப்பண்ணியது.

யாரையும் உசுப்பேத்தி இருப்பவைகளையும் நாம் இழக்காமல் எமதுகாலில் நடப்போம்.

பிரபாகரன்களையே, அசிங்கம் பண்ணிய, அசிங்கங்கள் நாம்! எம்முன்னால் சீமான்கள் எல்லாம் எம்மாத்திரம்?

  • தொடங்கியவர்

அம்மாவுக்கு முன்னால் போய் கைகட்டும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

இதே போல் தான் திருமாவையும் தூக்கிபிடிச்சீங்கள்.அவரின் பதவி ஆசை அவரை ராஜபக்சாவுக்கும் சலாம் போடப்பண்ணியது.

யாரையும் உசுப்பேத்தி இருப்பவைகளையும் நாம் இழக்காமல் எமதுகாலில் நடப்போம்.

'இலை மலர்ந்தால் ஈழம் மலரும்!’ என நான் சொன்னது சிலரால் விமர்சிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸை எதிர்த்து அ.தி.மு.க-தான் போட்டியிட்டது. அப்படியிருக்க, 'நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன். நீங்க யாருக்கோ போடுங்க...’ என என்னால் குடுகுடுப்பை அடிக்க முடியாது.

களத்தில் நிற்கும் காங்கிரஸ்தான் என் எதிரி. எதிரியைக் கொல்லக் கையில் கிடைப்பது களைகொத்தோ... மண்வெட்டியோ... எதுவாக இருந்தாலும் எடுத்து அடிப்பதுதானே சரியாக இருக்கும். அந்த நேரத்தில் என் கையில் கிடைத்தது இரட்டை இலை என்கிற ஆயுதம். அதனால்தான் அதை எடுத்து அடித்தேன். இலைக்கு வாக்குக் கேட்டதை வம்பாக மாற்றியவர்கள் பம்பரத்துக்கும், மாம்பழத்துக்கும், சுத்தியல் நட்சத்திரத்துக்கும் நான் ஓட்டுக் கேட்டதை நயமாக மறந்து விட்டார்கள்.

ஏதாவது ஒரு குற்றச்சாட்டைக் கிளப்பி, என்னைக் களங்கப்படுத்தி விடலாம் என நினைப்பவர்களுக்குச் சொல்கிறேன்... இந்தத் தேர்தலிலும் காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிடும் கட்சி அ.தி.மு.க-வாக இருந்தால், இந்த சீமானின் குரல் இரட்டை இலைக்குத்தான் பரப்புரை செய்யும். இதை வைத்தே, 'அம்மையார் அள்ளிக் கொடுத்துவிட்டார்’ எனக் கிளப்பிவிடத் துடிக்கும் அரைகுறைகளே... உங்களுக்குச் சொல்கிறேன்...

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் இந்த சீமான் இருக்கப்போவது சிறைச்சாலையில்தான்!

http://www.youtube.com/watch?v=4j52PAGoQ8I

தமிழருவி மணியன் அவர்களின் உரை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.