Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் தலைவன்?

Featured Replies

  • தொடங்கியவர்

கீதாச்சாரம்???? :blink: :blink: :blink:

  • Replies 99
  • Views 11.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் சொன்னதில் என்ன தவறு இருக்கின்றது? ............

ஓரே கொள்கையில் ஈழம் என்கின்ற ஒரே கொள்கையின் கிழ் அனைவரும் ஒன்று திரண்டால் எதுவும் சாத்தியமே!

தாங்கள் சொல்லுவதில் எதுவித தவறுமில்லை. எனினும் தற்போது தமிழர்களுக்கு ஒரு குடையில்லை, பல பல வர்ணங்களில், பல பல அளவுகளில் குடைகள் உள்ளன. சிலவற்றில் பொத்தல்களும் விழுந்துள்ளன. சிலர் வெறும் குடைக் கம்பிகளைக் காட்டி அதை மழையிலிருந்தும், வெயிலிருந்தும் பாதுகாக்கும் என்று வேறு சொல்லி, அதற்குக்கீழ் திரளுமாறு கூறுகின்றார்கள்.

ஈழம் என்று ஒரே கொள்கை என்று சொன்னாலும் ஒவ்வொருவரும் இந்தக்கொள்கைக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பித்து, கொள்கையை அடைய வெவ்வேறு பாதைகளைத் தெரிவு செய்து தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதில் எங்கே ஒற்றுமை? எங்கே முன்னேற்றம்?

"A pessimist sees the difficulty in every opportunity; an optimist sees the opportunity in every difficulty." -

-- Winston Churchill

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்ப நீங்கள் பகவத் கீதை ஸ்டைலில் சொல்லுறீயள்.....

எது நடந்ததோ அது நல்லாவே நடந்தது

எது நடக்க இருக்குதோ அதுவும் நல்லாவே நடக்கும்

எவ்வளவு அழகாக எங்கன்ட பகவான் கிருஸ்ணன் சொல்லியிருக்கிறார் பார்த்தியளோ :D

எது ராஜீவ் காந்தி கொலையை பற்றி சொல்லுறீங்களோ :lol: :lol: :lol: இப்ப என்ன சொல்லுறார் உங்கட பகவான்.

தாங்கள் சொல்லுவதில் எதுவித தவறுமில்லை. எனினும் தற்போது தமிழர்களுக்கு ஒரு குடையில்லை, பல பல வர்ணங்களில், பல பல அளவுகளில் குடைகள் உள்ளன. சிலவற்றில் பொத்தல்களும் விழுந்துள்ளன. சிலர் வெறும் குடைக் கம்பிகளைக் காட்டி அதை மழையிலிருந்தும், வெயிலிருந்தும் பாதுகாக்கும் என்று வேறு சொல்லி, அதற்குக்கீழ் திரளுமாறு கூறுகின்றார்கள்.

ஈழம் என்று ஒரே கொள்கை என்று சொன்னாலும் ஒவ்வொருவரும் இந்தக்கொள்கைக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பித்து, கொள்கையை அடைய வெவ்வேறு பாதைகளைத் தெரிவு செய்து தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதில் எங்கே ஒற்றுமை? எங்கே முன்னேற்றம்?

"A pessimist sees the difficulty in every opportunity; an optimist sees the opportunity in every difficulty." -

-- Winston Churchill

அடடா என்ன அற்புதமான வரிகள்....!

புலிகள் ஆயுதத்தை காட்டி அமத்திக்கொண்டு இருங்கோ நாங்கள் எங்களாலை முடிஞ்சதை தனியவே பாக்கிறம் எண்டு சொன்னது பிழை எண்டும் சொல்லுறீயள்..... ! சரி இதை தடுத்து நேர்ப்படுத்த என்ன செய்யலாம்...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடடா என்ன அற்புதமான வரிகள்....!

புலிகள் ஆயுதத்தை காட்டி அமத்திக்கொண்டு இருங்கோ நாங்கள் எங்களாலை முடிஞ்சதை தனியவே பாக்கிறம் எண்டு சொன்னது பிழை எண்டும் சொல்லுறீயள்..... ! சரி இதை தடுத்து நேர்ப்படுத்த என்ன செய்யலாம்...???

அதை மட்டும் கடைசிவரை சொல்லவே மாட்டோம், ஆனால் கடைசிவரை நொட்டை சொல்லிகொண்டே இருப்போம். :D :D :D

முடிஞ்சதைத் தனியவே பார்க்கிறம் என்று வெளிக்கிட்டு எல்லாம் முள்ளிவாய்க்காலில் முடிஞ்சுதுதானே. நேர்ப்படுத்த குழப்பம் இல்லாத, சுயநலம் இல்லாத, மக்களை வைத்துப் பணம் சம்பாதிக்காத அரசியல் தலைமை வேண்டும். அதற்கு முதல் மக்கள் ஓரளவு நிம்மதியாக இருக்க வழிவகைகள் செய்யப்படவேண்டும். இதெல்லாம் புலம்பெயர் நாடுகளில் இருந்து செய்யமுடியாது!

  • கருத்துக்கள உறவுகள்

அதை மட்டும் கடைசிவரை சொல்லவே மாட்டோம், ஆனால் கடைசிவரை நொட்டை சொல்லிகொண்டே இருப்போம். :D :D :D

நொட்டை சொல்ல முதல் கொஞ்சம் இதையும் படித்துப் பார்க்கிறது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80357

நதிகள் பல இடங்களில் இருந்து பிறப்பெடுக்கின்றன. அவை போகும் வழியில் சில நினைத்துக்கொள்ளும் தனது பாதை இலகு என்று. சில நினைத்துக்கொள்ளும் சீச்சீ அதனது பாதை பிழை தனது பாதையே சரி என்று. இவ்வாறு ஓடும் நதிகள் கூட சில கடைசில் ஒன்று சேருகின்றன. சில பிரிந்தே செல்லுகின்றன. ஆனால் இரண்டும் சேர்வது கடலில் தான் என்பதனை மறந்து விடுகின்றன. இதேபோன்றுதான், பலர் பல வழிகளில் செல்லுகின்றார்கள். இதிலே உங்களுக்குப் பிடித்தமான, சரியான நேரிய வழியில் செல்லுங்கள். செல்லாதிருப்பதைக் காட்டிலும் சென்று ஈழம் என்கின்ற கடலில் ஒருமித்தோ, தனியாகவோ சந்திப்பீர்களானால் அது சிறந்ததே! எமக்குத் தேவை கடலில் சங்கமிக்க வேண்டும் என்பதே தவிர வீணாக அடைபட்டுக் குளமாக இருந்து வற்றிப்போவதல்ல. அடைபட்டுக் கிடக்கும் குளத்திலிருக்கும் நீர் கூட ஏதேனும் ஓர் தேவைக்காக பயன்படுமாயின் சிறந்ததே... அவ்வாறு அடைபட்டிருப்பவர்கள் எமது இனத்திற்கான உதவிகளைச் செய்தாற்கூட மீதம் இருப்பவர்கள் கடலிலே சங்கமிக்க வழிவகை செய்வார்கள்...

எது ராஜீவ் காந்தி கொலையை பற்றி சொல்லுறீங்களோ :lol: :lol: :lol: இப்ப என்ன சொல்லுறார் உங்கட பகவான்.

இதிலே உள்ள சூட்சுமங்களும், இந்தக் கொலையாளிகள் யாரென்பதும் புலப்படும்...

அடடா என்ன அற்புதமான வரிகள்....!

புலிகள் ஆயுதத்தை காட்டி அமத்திக்கொண்டு இருங்கோ நாங்கள் எங்களாலை முடிஞ்சதை தனியவே பாக்கிறம் எண்டு சொன்னது பிழை எண்டும் சொல்லுறீயள்..... ! சரி இதை தடுத்து நேர்ப்படுத்த என்ன செய்யலாம்...???

இப்போதுதான் அந்த ஆயுதம் என்பதில்லையே! பின்னர் ஏன் இல்லாத ஒன்றிற்காக வருந்தவேண்டும்?

அதை மட்டும் கடைசிவரை சொல்லவே மாட்டோம், ஆனால் கடைசிவரை நொட்டை சொல்லிகொண்டே இருப்போம். :D :D :D

கடைசிவரை ஒன்றே ஒன்றைச் சொல்லுகின்றேன்... மாறி மாறி எம் இனத்துக்குள்ளேயே நாம் குத்துண்டு கொண்டு இருக்காது, நான் என்ன என் இனத்திற்குச் செய்தேன்? நான் செய்தது என் இனத்திற்குப் போதுமா? என்பதை மட்டுமே சிந்தித்துச் செயற்படுதல் எமது இனத்திற்கான விடுதலைக்கு வழிவகுக்கும். அதை விடுத்து அவன் என்ன செய்தான்? இவன் என்ன செய்கின்றான் என்கின்ற ஆராய்ச்சி அவசியமற்றது.

முடிஞ்சதைத் தனியவே பார்க்கிறம் என்று வெளிக்கிட்டு எல்லாம் முள்ளிவாய்க்காலில் முடிஞ்சுதுதானே. நேர்ப்படுத்த குழப்பம் இல்லாத, சுயநலம் இல்லாத, மக்களை வைத்துப் பணம் சம்பாதிக்காத அரசியல் தலைமை வேண்டும். அதற்கு முதல் மக்கள் ஓரளவு நிம்மதியாக இருக்க வழிவகைகள் செய்யப்படவேண்டும். இதெல்லாம் புலம்பெயர் நாடுகளில் இருந்து செய்யமுடியாது!

பணம் என்கின்ற ஒன்றினை பெரும் ஆயுதமாக ஏன் தூக்குகின்றீர்கள்? நீங்கள் ஒரு போராட்டத்திற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள். உதாரணமாக, ஒரு வீதி மறியற் போராட்டம் நடக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள், அங்கே துண்டுப்பிரசுரம் அச்சடிக்க வேண்டிய தேவை இருந்தால், நீங்கள் முன்வந்து ஏற்பாட்டாளர்களை அணுகி நீங்கள் எடுத்துச் செய்யுங்களேன்...

நொட்டை சொல்ல முதல் கொஞ்சம் இதையும் படித்துப் பார்க்கிறது

http://www.yarl.com/forum3/index.php?showtopic=80357

நன்றி கிருபன்

முடிஞ்சதைத் தனியவே பார்க்கிறம் என்று வெளிக்கிட்டு எல்லாம் முள்ளிவாய்க்காலில் முடிஞ்சுதுதானே. நேர்ப்படுத்த குழப்பம் இல்லாத, சுயநலம் இல்லாத, மக்களை வைத்துப் பணம் சம்பாதிக்காத அரசியல் தலைமை வேண்டும். அதற்கு முதல் மக்கள் ஓரளவு நிம்மதியாக இருக்க வழிவகைகள் செய்யப்படவேண்டும். இதெல்லாம் புலம்பெயர் நாடுகளில் இருந்து செய்யமுடியாது!

உங்களாலை ஒண்று படுத்த முடியாது ... சரி தனிய முயண்று பார்க்கவும் முடியாது பிழைச்சு போச்சுது... அப்ப என்ன தான் செய்ய போறியள்....?? புலம் பெயர் நாட்டிலை சும்மா கூச்சல்கள் மட்டும் போட்டுக்கொண்டு இருந்துவிடலாம் எண்டுறீயளோ....?? அது தான் இப்ப இலங்கை அரசுக்கும் தேவையாக இருக்கு... !

உங்கட காசுகளை மட்டும் பணயக்கைதிகளாக இருக்கும் மக்களுக்கு கெடுதல் செய்யாமல் இருக்க இலங்கைக்கு குடுத்து போட்டு நாங்கள் அமத்திக்கொண்டு இருக்கலாம்...

புலிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளை ஆதரிக்க முடியாத நீங்கள் இலங்கை அரசின் எதேச்சாரிகார செயலுக்காக அடங்கி போகலாம் எண்டுறீயள்.... ஆக பிரச்சினை இலங்கை அரசு இல்லை புலிகள் தான்...

இப்போதுதான் அந்த ஆயுதம் என்பதில்லையே! பின்னர் ஏன் இல்லாத ஒன்றிற்காக வருந்தவேண்டும்?

புலிகள் ஆயுதத்தோடை இருந்து இருந்தால் இங்கை கனபேருக்கு இப்பவும் கரும்பு சாப்பிடுற மாதிரி இருந்து இருக்கும்.... ஆனால் ஆயுதம் இல்லாமல் மக்களை இன்னும் கையுக்கை வச்சு இருக்கிறது இங்கை கனபேருக்கு புதிசு புதிசா காரணங்களையும் குற்றச்சாட்டுகளையும் தேட வேண்டி இருக்கு...

இவ்வளவுகாலமும் புலிக்கு மேலை பாசிச புலிகள் எண்டு பாஞ்சு திரிஞ்சவை.. இப்ப ஜனநாயக அமைப்புக்கள் மீது பாய்கிறார்கள்... புலிசார் அமைப்புக்கள் எண்டு பெயரை மாத்திக்கொண்டு... பிரச்சினை இப்பவும் அவர்களுக்கு புலி மீது மட்டும் தான்...

சிங்களவன் என்ன செய்தாலும் பறவாய் இல்லை.... ஆனால் ஒண்டுமே செய்யாமல் இருந்து வெறும் வெட்டி அரசியல் கதைக்கிற தங்கட பெயரை பிரபல்யமாக்க விடாத புலிகள் மீது கனபேருக்கு காய்ச்சல்...

அதிலையும் புலிகள் அதை செய்து இருக்க வேண்டும் இதை செய்து இருக்க வேணும் எண்டு இலவசமாய் அறிவுரை சொல்ல எண்டா நல்ல விருப்பம்... அத்திவாரம் அறுதியாய் போட்டு கட்டிடத்தை எழுப்பி யாராவது வைச்சு இருந்தால் அதுக்கை வந்து ஜன்னல் சரியில்லை கதவு சரியில்லை எண்டு சொல்லுற கூட்டம் போல தான்... சொந்தமாக கட்டிடம் கட்ட எந்த அர்ப்பணிப்பும் இல்லாத கூட்டம் அதை மட்டும் தானே செய்யும்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களாலை ஒண்று படுத்த முடியாது ... சரி தனிய முயண்று பார்க்கவும் முடியாது பிழைச்சு போச்சுது... அப்ப என்ன தான் செய்ய போறியள்....?? புலம் பெயர் நாட்டிலை சும்மா கூச்சல்கள் மட்டும் போட்டுக்கொண்டு இருந்துவிடலாம் எண்டுறீயளோ....?? அது தான் இப்ப இலங்கை அரசுக்கும் தேவையாக இருக்கு... !

உங்கட காசுகளை மட்டும் பணயக்கைதிகளாக இருக்கும் மக்களுக்கு கெடுதல் செய்யாமல் இருக்க இலங்கைக்கு குடுத்து போட்டு நாங்கள் அமத்திக்கொண்டு இருக்கலாம்...

புலிகளின் தன்னிச்சையான செயற்பாடுகளை ஆதரிக்க முடியாத நீங்கள் இலங்கை அரசின் எதேச்சாரிகார செயலுக்காக அடங்கி போகலாம் எண்டுறீயள்.... ஆக பிரச்சினை இலங்கை அரசு இல்லை புலிகள் தான்...

என்னுடைய கருத்துக்களாக நீங்கள் எழுதியதெல்லாம் உங்கள் கருத்துக்கள்தான் என்பதை நினைவூட்ட விரும்புகின்றேன் :D

  • கருத்துக்கள உறவுகள்

பரிதாபமான விடயம் என்னவென்றால் தோல்வியடந்த கொள்கைகளை விட்டு ஒருவர் நகர மறுப்பது புதிய கொள்கைகளை/சிந்தனைகளை ஏற்கமறுப்பதனால் மட்டுமல்ல. இப்படியானவர்கள் பல வருடங்கள் (பத்து இருபது வருடங்கள்) தாங்கள் வரித்துக் கொண்ட கொள்கையை/சிந்தனையை தற்போது கைவிட்டால் தங்களுடைய பல வருட வாழ்வும் பாழான/அர்த்தம் இல்லாத வாழ்வாகி விடுமென்று பயப்படுவதால்தான் தொடர்ந்தும் தோல்வியடந்த கொள்கைகளை இறுக்கிப் பிடித்துள்ளார்கள். இதுவும் ஒருவகையில் சுயநலம்தான்.

கோவிக்கவேண்டாம் உண்மையாகத்தான் கேட்கின்றேன் யாழ்நிலவன் நீர் பிறீச்சராக வேலை பார்க்கின்றீரா?.உமது எழுத்துக்கள் அப்படித்தான் இருக்கின்றன,

நல்வழி சொல்வதும் நல்லதுதானே?

தயா அன்றுதொட்டு இன்றுவரை தனக்கென ஒரு தியரி வைத்திருக்கின்றார்.

புலி செய்தசில பிழைகளை நாங்கள் எழுதினால் அரசாங்கம் செய்வது சரி என்று சொல்லுகின்றோமாம்.அது என்ன லொஜிகென்று விளங்கவில்லை.மற்றவ்ர்களை துரோகியாக்க புலி கொண்ட தந்திரம் இது.கிளிப்பிள்ளைகள் போல் அவர்கள் சொன்னதை ஏதோ வேதவாக்குமாதிரி நம்பியதின் விளைவு இது.

புலி தனக்கு பிடிக்காத ஒருவனைகொல்கின்றது அதை நாங்கள் பிழையென்றால் நான் கைக்கூலியாம்.புலிசெய்த கொலைக்கும் எமது விமர்சனத்திற்கும் சரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்.

அதைவிட புலி இல்லைதானே இனி நீங்கள் என்னத்தையாவது புடுங்குங்கோவன் என கேட்கின்றார்கள்.இது என்ன கிளித்தட்டா ஆட்டம் சொல்லி திருப்பி விளையாட?எல்லாவற்றையும் கொண்டுவந்து முள்ளிவாய்க்காலில் முடித்துவிட்டு இனி நீங்கள் செய்யுங்கோ என்றால் போராட்டத்தை பற்றிய அறிவு உங்களுக்கு அவ்வளவுதான் 83 காலகட்டத்தையும் 2010 காலகட்டத்தையும் ஒருக்கா யோசிச்சு பாருங்கோ விளங்கும்.

தமிழன் தன் நிலை உணராவிட்டால் ஒருவிடிவும் இல்லை.

நண்பரே! நான் ஒன்றும் பாதிரியாருமல்ல, பார்த்திருக்கக் கோமாளியுமல்ல. எமது விடுதலையின் வேள்வித்தீ என்னுள் கடந்த 40 ஆண்டுகளாகக் கனன்றுகொண்டிருக்கின்றது. பல இன்னல்களின் போதும், பல இழப்புக்களின்போதும் கூடவே இருந்து வந்த வலியது. எரியும் கனலாக என்னுள் உழன்றுகொண்டிருக்கின்றது. எனது எழுத்துக்கள் மூலமாவது பிரிந்திருக்கும் மக்களை ஒன்று சேர்க்கவேண்டும், அதன் மூலம் எம்முள் விடுபட்டுக்கிடக்கும் பிரிந்திருக்கும் எல்லா உறவுகளையும் ஒன்றிணைக்க வேண்டும். எமக்கான நீதியினை சர்வதேச அரங்கில் கொண்டுசெல்லவேண்டும். இதுதான் எனது ஆசை கனவு. சர்வதேச சமூகம் எமக்கான ஓர் தீர்வினை வழங்க முன்வரவேண்டும். வயோதிபத்தினால் ஒருவேளை என் மரணம் நிகழ்தாற்கூட, எனது பெயரில் வளர்க்கப்பட்ட ஓர் இளம் எழுத்தாளன் கையில் அனைத்துப் பணிகளும் ஒப்படைக்கப்படும்... எமது எண்ணங்கள் ஈடேறும்

பரிதாபமான விடயம் என்னவென்றால் தோல்வியடந்த கொள்கைகளை விட்டு ஒருவர் நகர மறுப்பது புதிய கொள்கைகளை/சிந்தனைகளை ஏற்கமறுப்பதனால் மட்டுமல்ல. இப்படியானவர்கள் பல வருடங்கள் (பத்து இருபது வருடங்கள்) தாங்கள் வரித்துக் கொண்ட கொள்கையை/சிந்தனையை தற்போது கைவிட்டால் தங்களுடைய பல வருட வாழ்வும் பாழான/அர்த்தம் இல்லாத வாழ்வாகி விடுமென்று பயப்படுவதால்தான் தொடர்ந்தும் தோல்வியடந்த கொள்கைகளை இறுக்கிப் பிடித்துள்ளார்கள். இதுவும் ஒருவகையில் சுயநலம்தான்.

சத்தியமாய் அண்ணை நீங்கள் சொன்னது என்ர அறிவுக்கண்ணை திறந்திட்டுது... இண்டையிலை இருந்து நான் நீங்கள் சொல்லும் வளியை கேட்டு பின் தொடர்ந்து தமிழ் மக்களை காப்பாத்த முழு நடவடிக்கையும் எடுக்க தயாராக இருக்கிறன்...

சொல்லுங்கோ நான் இப்ப என்ன செய்ய வேணும்....??

தாங்கள் சொல்லுவதில் எதுவித தவறுமில்லை. எனினும் தற்போது தமிழர்களுக்கு ஒரு குடையில்லை, பல பல வர்ணங்களில், பல பல அளவுகளில் குடைகள் உள்ளன. சிலவற்றில் பொத்தல்களும் விழுந்துள்ளன. சிலர் வெறும் குடைக் கம்பிகளைக் காட்டி அதை மழையிலிருந்தும், வெயிலிருந்தும் பாதுகாக்கும் என்று வேறு சொல்லி, அதற்குக்கீழ் திரளுமாறு கூறுகின்றார்கள்.

ஈழம் என்று ஒரே கொள்கை என்று சொன்னாலும் ஒவ்வொருவரும் இந்தக்கொள்கைக்கு வெவ்வேறு அர்த்தங்கள் கற்பித்து, கொள்கையை அடைய வெவ்வேறு பாதைகளைத் தெரிவு செய்து தங்களுக்குள் முரண்பட்டுக் கொண்டிருப்பார்கள். இதில் எங்கே ஒற்றுமை? எங்கே முன்னேற்றம்?

"A pessimist sees the difficulty in every opportunity; an optimist sees the opportunity in every difficulty." -

-- Winston Churchill

சரி அண்ணை காசு வாங்க வேண்டாம் ஊரிலை சேவை செய்வம்... ஊரிலை வீடு வீடாய் போய் சோத்து பாசல் வாங்கி சாப்பிட்டு செய்வம்... சைக்கிள் வாங்க கூட காசு வேணும் ஆகவே அது வேண்டாம்... நடந்து திரிஞ்சு செய்வம்... எப்படி மற்றதுகளை செய்ய வேணும் எங்கை இருந்து ஆரம்பிக்க வேணும், என்ன செய்ய வேணும் எண்டுதான் தெரிய இல்லை... சொல்லுங்கோ அதை எப்படி செய்யுறது எண்டு... நான் கேட்டு அப்படியே செய்யிறன்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கே ஒருசிலருக்கு அன்று தொடக்கம் குறைசொல்லிச்சொல்லியே பழகிவிட்டது?

விடுதலைப்புலிகளை எப்போதும் குறைசொல்லிபழக்கப்பட்டவர்களே?

இங்கே இப்போது என்ன செய்கின்றீர்கள்?

உடனடியாக சிறிலங்காவுக்கு போய் ஆக வேண்டியதை பார்க்கலாம் தானே?

தயா அன்றுதொட்டு இன்றுவரை தனக்கென ஒரு தியரி வைத்திருக்கின்றார்.

புலி செய்தசில பிழைகளை நாங்கள் எழுதினால் அரசாங்கம் செய்வது சரி என்று சொல்லுகின்றோமாம்.அது என்ன லொஜிகென்று விளங்கவில்லை.மற்றவ்ர்களை துரோகியாக்க புலி கொண்ட தந்திரம் இது.கிளிப்பிள்ளைகள் போல் அவர்கள் சொன்னதை ஏதோ வேதவாக்குமாதிரி நம்பியதின் விளைவு இது.

புலி பிழையாய் செய்தது எண்டு உங்களாலை யாரையாவது நம்ப வைக்க முடிந்ததா....? குறைந்தது உங்களால் அதை தாண்டி எதை சாதிக்க முடிஞ்சது அண்ணை...?? இந்தளவு காலமும் புலி பிழை எண்டுறதிலை தானே காலத்தை கழிக்கிறீயள்.... இல்லை நாங்கள் சாதிக்க முயண்றனாங்கள் ஆனால் புலி விட இல்லை எண்ட போறியளோ...??

அப்படி நீங்கள் சொல்ல மாட்டியள் எண்டு இல்லை ஏன் எண்டால் உங்களுக்கு புழுகிறதை விட வேறை என்ன தெரியும்....??

சரி தியறி எண்ட ஒரு விசயத்தை பற்றி கதைச்சியள்... தியறி எங்களிட்டை இருக்கிறது உண்மை... அப்படி ஒரு சாமான் உங்களிட்டை இருந்ததோ....??

நீங்கள் செய்ய வெளிக்கிட்டது எல்லாம் புலிகள் உங்களுக்கு பாதுகாப்பு தர அந்த பிரதேசங்களில் இருந்து அரசியல் செய்யலாம் எண்டது தானே...??? புலிகள் உங்களை கலைக்கும் போது அப்படி ஒரு நிலைதானே இருந்தது இப்ப என்னவோ நீங்கள் கட்டுப்பாட்டுக்கை வச்சு இருந்த இடத்தை புலிகள் அடிச்சு பிடிச்ச மாதிரி கதை விடுகிறீயள்...

சரி நீங்கள் ஆயுதத்தை நம்பவில்லை... அப்படி எண்டால் மக்களை எப்படி காப்பாத்தலாம் எண்டு நினைச்சனீங்கள்....?? உள்ளூரிலை உடும்பு பிடிக்க முடியாமல் PLO வுக்கும் CIA க்கும் பிறகு இந்தியாவுக்கு நக்கிறது தான் தமிழருக்கு விடிவை தரும் எண்டு சொல்ல வாறியளோ....??

கப்பலிலை பணியாரம் வருகுது ஒரே அடியா பிடிக்கலாம் எண்டு சனத்தை உசுப்பேத்தி சோத்துப்பாசல் வாங்கின கதையளை விடுங்கோ...

புலிகள் எந்த பிரதேசத்தையும் கட்டுக்கை கொண்டு வர இல்லை எண்டால் நீங்கள் உட்பட எல்லாரும் எப்பவோ பரலோகம் போய் இருப்பியள்... இவ்வளவு காலமும் நீங்கள் வேலை வெட்டி இல்லாமல் காட்டு கத்து கத்திறீயள் எண்டால் அது புலிகள் உங்களுக்கு தந்த பாதுகாப்பு தான் காரணம்...

உங்கட பழைய ஆக்களை விசாரிச்சு பாருங்கோ... கோட்டையிலை புலிகள் பாதுகாப்பு தர யாழ் நகருக்கை சங்கு வைச்சு ஊதினதுகளை ஒருக்கா யோசிச்சு பாருங்கோ... ! பொபி தாசை ஆஸ்பத்திரி வீதியில் போட்டு தள்ளின சத்தம் கேட்டு ஆமி வந்திட்டான் எண்டு ஓடி உங்கட ஆக்கள் ஓடி ஒழிஞ்சதுகள் எல்லாம் சரித்திரம் அண்ணை...

புலி தனக்கு பிடிக்காத ஒருவனைகொல்கின்றது அதை நாங்கள் பிழையென்றால் நான் கைக்கூலியாம்.புலிசெய்த கொலைக்கும் எமது விமர்சனத்திற்கும் சரசாங்கத்திற்கும் என்ன சம்பந்தம்.

புலி தன்னிச்சையாக கொலை செய்த அந்த அப்பாவி யார் அண்ணை... ஒரு பெயரை முன் மொழியுங்கோ கேப்பம்... ???

புலி மாற்று இயங்கங்கள் எண்டு TEA எனப்படும் தம்பாவின் அமைப்பு, ஈரோஸ் எண்டு யாரையும் சுடவில்லையே ஏனாம்....???

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

புலி மாற்று இயங்கங்கள் எண்டு TEA எனப்படும் தம்பாவின் அமைப்பு, ஈரோஸ் எண்டு யாரையும் சுடவில்லையே ஏனாம்....???

ஏனெண்டால் அவையளும் பாசிசக் கொள்கை உள்ள ஆக்கள்..! :wub:

நன்றி உமை,

புலிகளை வெருட்டினார்கள் என்பதற்கு அப்பால், அந்த இடத்தில் அவர்கள் சொன்ன கருத்தின் உள்ளடக்கம், இதுதான், அதாவது சர்வதேச ஒழுங்கில் வல்லரசுநாடுகள் ஒன்று சேர்ந்து நிற்கும் சந்தர்ப்பத்தில் தனி ஓர் இனமாக நின்று வல்லரசுகளை எதிர்க்கமுடியாது என்பது திட்டவட்டமாகத் தெரிந்த ஓர் விடயமாகியது. இதனால் கொள்கை வகுப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. மேற்கொண்டு நோர்வேயின் வெருட்டல்களையும், அவர்களின் செயற்பாடுகளையும் இங்கே இப்போது அலசுவது தருணமல்ல என நினைக்கின்றேன். மிகுதி விடயங்களின் தொகுப்புக்கள் கால தேவையின் போது எழுதுவேன்...

நீங்கள் எல்லாம் இருக்குறீங்கள் எண்டுதாண்டாப்பா நானும் இருக்குறன். கடைசியில கவுத்து விட்டுடாதைக்கோடாப்பா....

புலிகளுக்கு நோர்வே அப்படி வெருட்டித்தான் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. 2002 பேச்சுவார்த்தைக்கு வெளிக்கிடும்போது புதுக்குடியிருப்பில் கிலோ வண் முகாமில் தேசியத்தலைவர் எமது பேச்சுவார்த்தை குழுவினை சந்தித்தார். அதில் அவர் சொன்ன விடயம் இதுதான்.

`நாங்கள் அனைத்துலகத்துடன் சண்டைபிடிக்கப்போகின்றோம்`

மன்னிக்க வேண்டும் தலைவர் கொள்கையில் மாற்றத்தினை ஏற்படுத்தவில்லை. ஒஸ்லோ உடன்பாட்டினை நோர்வே பாலா அண்ணையூடாக திணித்தபோது தலைவர் சொன்னவை. இது எனக்கு சரிவராது வேணும் உவங்கள் எங்கேயோ கொண்டுபோய் எங்கள் விடுதலைப்போராட்டத்தை மாட்டப்போகின்றார்கள்.

னோர்வேயின் கைங்கரியங்களை வெளியிடும் காலம் இப்போதுதான் சரியாக இருக்கும். உங்களுக்கு தெரியுமோ தெரியாது இப்போ மீண்டும் நோர்வே தனது நரிவேலையினை ஆரம்பித்து இருக்கின்றது.

புலம்பெயர் மக்களின் போராட்டத்தினை எம்மால் மட்டுப்படுத்த முடியும் ஆனால் நீங்கள் அதற்காக தமிழர்க்கு என்ன செய்வீர்கள்? அத்துடன் மேற்கின் சில விடயங்களையும் பூர்த்திசெய்யவேண்டும் என்ற பேச்சுவார்த்தையில் சொல்கெய்ம் இறங்கியுள்ளார்.

இது தொடர்பான சில இரகசிய சந்திப்புக்கள் நோர்வே வெளிவிவகார அமைச்சில் நடந்துவருகின்றது. விரைவில் இது தொடர்பான தகவல்களை வெளியிடுவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீதாச்சாரம்???? :blink: :blink: :blink:

உது என்ன சாரம், கிப்ஸ், சங்குமார் மாதிரி புது சாரம் வந்து இருக்கோ??

உது என்ன சாரம், கிப்ஸ், சங்குமார் மாதிரி புது சாரம் வந்து இருக்கோ??

கீதா எண்ட பெயர் வைச்சால் கிழுகிப்பிலை இடுப்பிலை நிக்காது எண்டு பயப்படுகிறீயளோ....?? <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கீதா எண்ட பெயர் வைச்சால் கிழுகிப்பிலை இடுப்பிலை நிக்காது எண்டு பயப்படுகிறீயளோ....?? <_<

நதியா கிளிப்பு, அமலா கிளிப்புமாதிரி, கீதா எண்ட பேரிலை ஆரும் நடிகை இருக்கினமோ, இல்லாட்டி கீதா கட்டின பழைய சறத்தை ஏலம் போடுறங்களோ??

உலகமே புலி பிழை செய்ததென்று சொல்லுது நீங்கள் யாரையாவது நம்பவைக்க முடிந்ததா எனக் கேட்கின்றீர்கள்.

என்னையும் உம்மையும் நம்பவைப்பது முக்கியமில்லை.முழு உலகமும் பயங்கரவாதிகள் என சொன்னது எதற்காக.சும்மா காத்தான் பூத்தான் கதை இங்கு செல்லாது.எந்த ஒரு நாடு புலிகளை விடுதலை போராளிகள் என்று சொன்னது.நீங்கள் நாலு பேர் சுயபுராணம் பாடுவதற்காகவா எமது போராட்டம்.கடைசி இனியாவது உண்மைகளை ஒப்புக்கொண்டு தமிழனின் விடிவிற்கு பாடு படுங்கோ புலிகளின் இருப்பிற்கு அல்ல.

கியூமன் ரைட்ஸ் அறிக்கைகளையும் கொஞ்சம் அப்பப்போ புரட்டிப்பாருங்கோ

உலகமே புலி பிழை செய்ததென்று சொல்லுது நீங்கள் யாரையாவது நம்பவைக்க முடிந்ததா எனக் கேட்கின்றீர்கள்.

.

கியூமன் ரைட்ஸ் அறிக்கைகளையும் கொஞ்சம் அப்பப்போ புரட்டிப்பாருங்கோ

மாவோ,ஸ்டாலின்,செகுவாரா,பெடல் கஸ்ரோ ஆகியோரையும் உலகம் பிழை என்றுதான் சொன்னது ...அதற்காக எங்களை மாதிரி முற்போக்குவாதிகள் அவர்களை ஒதுக்கவில்லைதானே.

முதலாளித்துவ உலகம் புலிகளை அப்படித்தான் சொல்லும் அதற்காக நாங்களும் அப்படி சொல்ல ஏலுமோ? :D:D

Edited by Jil

உலக நாடுகள் விடுதலைப்புலிகளை தேவைக்கேற்ற பாவித்திருக்கின்ரனர். குறிப்பாக Fighters, Rebels,Terrorist, Territory, Rebel leader, LTTE carder இவ்வாறுதான் பாவித்துள்ளனர். கூடுதலாக LTTE or Rebel என்றுதான் பாவித்துள்ளனர்.

சூடான் விடுதலை இயக்கம் முதற்கொண்டு அனைத்தினையும் இப்படித்தான் மேற்கத்தைய உலகம் அழைக்கின்றது.

இன்னும் குறிப்பாக ஒசாமாவின் நடவடிக்கைகளுக்கு பின்னர்தான் விடுதலைப்புலிகள் போன்ற இயக்கங்களை இந்தளவு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற வரையறைக்குள் உட்படுத்தப்பட்டது.

இன்று தனி நாடு அமைக்கப்போகும் சூடான் விடுதலை இராணுவமும் தனது கட்ட்டமைப்பில் உள்ள தலைவரில் இருந்து அனைத்து பொறுப்புக்களையும் இராணுவ பட்டங்கள் கொண்டுதான் அழைக்கப்படுகின்றனர்.

இந்த அமைப்பினையும் மனித உரிமை அமைப்புக்கள், சுடான் விடுதலைக்கு எதிரான நாடுகள் எல்லாம் பயங்கரவாதிகள், ஆட்களை கடத்துகின்ரார்கள், தம் மக்களையே பட்டிணிபோட்டு கொல்கின்றனர். கட்டாய ஆட்சேர்ப்பு, சிறுவர் ஆட்சேர்ப்பு, எல்லாவற்றிற்கும் மேலாக தம் பெண்களையே பாலியல் வல்லுறவு செய்தல் இவ்வாறு குற்றசாட்டுக்களை முன்வைத்தன.

ஒரு முள்ளீவாய்க்கால் போல் பல முள்ளிவைக்கால்கள் மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அமெரிக்காவோ மேற்கைத்தைய சமூகமோ சூடான் விடுதலை இயக்கம் மக்களை பணைய கைதிகளாக வைத்திருந்தது என குற்றம் சாட்டவில்லையே

அல்லது போர்க்குற்ற விசாரணையினை செய்யவில்லையே..

காரணம் மேற்கு முடிவெடுத்துவிட்டது. சூடான் பிரிக்கப்படவேண்டும் என.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.