Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் - சிங்கள அரசு போர் பற்றிய 'செங்கடல்' திரைப் படத்தக்குத் தடை!

Featured Replies

விடுதலைப் புலிகளக்கும், இலங்கை அரச படைகளுக்கும் இடையிலான போரின் கொடுமைகளைக் கூறும் வகையில் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட 'செங்கடல்' என்ற திரைப்படத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரசுக்கும் இடையே 2009 பிப்ரவரி முதல் மே மாதம் வரை உச்சக்கட்ட போர் நடந்தது. அப்போது கூட்டம், கூட்டமாக அகதிகள் தனுஷ்கோடி வந்தனர். அவர்களையும், தனுஷ் கோடியில் வசித்த மீனவர்களையும் இணைத்து 'செங்கடல்' என்ற பெயரில் இந்தப் படம் தயாராகியுள்ளது.

லீனா மணிமேகலை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விடுதலைப் புலிகளை அழிக்க யுத்தம் நடத்தும் சிங்கள அரசை அகதிகள் விமர்சிப்பது போன்ற வசனங்கள் உள்ளன. தமிழக அரசுக்கு எதிரான வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து 'செங்கடல்' படத்தை வெளியிட தணிக்கை குழு தடை விதித்து அனுமதி மறுத்துள்ளது.

இதுபற்றி டைரக்டர் லீனா மணிமேகலை கூறியதாவது:

"செங்கடல் படத்தில் தனுஷ்கோடி மீனவர்களையும் இலங்கையில் யுத்தம் நடந்தபோது தமிழகம் வந்த அகதிகளையும் நடிக்க வைத்தோம். அவர்கள் பேசும் வசனங்கள் யதார்த்தமாக அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிங்கள அரசையும், இங்குள்ள அரசையும் அவர்கள் விமர்சிப்பதை ஏற்க முடியாது என தணிக்கை குழுவினர் அனுமதி மறுத்தனர். வசனங்களை நீக்க சொன்னார்கள். பேச்சுரிமையை நசுக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. தணிக்கை குழு தடையை எதிர்த்து புதுடில்லி டிரிபியூனல் கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறோம்.

இந்திய தணிக்கைக் குழுவின் கெடுபிடிகள், கட்டுத் திட்டங்களைப் பார்க்கையில் நாம் வாழ்வது சுதந்திர நாட்டிலா, காலணி ஆதிக்கத்திலா என்றே தெரியவில்லை. அரசுக்கு எதிரான விமர்சனமே இருக்கக் கூடாதாம்... அதுவும் இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாது என்று நிபந்தனையே விதிக்கும் அளவுக்கு மோசமான நிலைமைக்குள் படைப்பாளிகளை சிறைப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு."

இவ்வாறு கூறுகின்றார் மணிமேகலை.

துயரத்தில் தவிக்கும் இலங்கை தமிழர், இந்திய தமிழ் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை, இந்திய, தமிழக அரசுகளின் நிலைப்பாட்டை விமர்சிப்பதால் செங்கடல் படத்துக்கு தடை விதித்துள்ளது சென்னை தணிக்கைக் குழு. இப்போது படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பும் முடிவில் உள்ளார் லீனா.

படங்களைப் பார்க்க கீழ் உள்ள லிங்கைச் சொடுக்கவும்

http://www.pooraayam.com/prathanaalias/305-2011-01-11-16-57-27.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படத்தில் சோபா சக்தியும் நடிப்பதினால் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துக்களும் சிலவேளை இருக்கலாம்.

இப்படி உலகத்தின் அதிக மக்கள் கூடிய, சமத்துவ கொள்கை கொண்ட சீனாவில் இது நடந்தால் உலகம் தானாக கண்டுகொள்ளும், கண்டிக்கும். உலகத்தின் மிகப்பெரிய மக்களாட்சி நடாத்தும் காந்தி தேசத்தில் நடக்கும் இந்த உரிமை மீறல்களை நாம் தான் உலகத்தின் கண்களுக்கு கொண்டுவரல் வேண்டும். டெல்லியின் தமிழின விரோதப்போக்கு, அதன் நீதியற்ற கொள்கை மாற்றப்படல் வேண்டும்.

உலகத்தமிழின வாழ்வும் சாவும் புதுடில்லியில் தான் அதிகம் தங்கி உள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லீனா மனிமேகலையும், சோபாசக்தியும் விடுதலை புலிகளுக்கு எதிரானவர்கள், படத்தில் முழுதும் புலிகள்தான் மக்களை கொலை செய்கிறார்கள் என்றும், சிங்கள ரானுவம் தமிழ்மக்களை மீட்டு உதவி செய்கிறது என்றும், மனிதாபிமான முறையில் மக்களை விடுதலை செய்யவே போர் நடத்தியதாகவும் கதை போகிறது, இதை பலமாதங்களின் முன்னர், சம்பள பாக்கி கொடுக்காததால், எடுக்கபட்ட காட்சிகளுடன் உதவி இயக்குனர் ஒருவர் சென்னைக்கு வந்து விட்டார், லீனா மணிமேகலையும், சோபாசக்தியும் இவ் ஆத்திரத்தில் தண்ணியை போட்டு விட்டு வந்து அவருக்கு சாத்து சாத்து என்று சாத்தி இருக்கிறார்கள், இதானல் இது இப்போது போலிஸ் கேஸ் ஆகி இருக்கிறது, இதனால் ஆத்திரம் கொண்டு கதையின் கருவை உதவி இயக்குனர், வெளியில் சொல்லிவிட்டார், அதாவது கதையின் கரு சிங்களரானுவத்தை நல்லவர்களாகவும், நடந்த வற்றுக்கு புலிகள்தான் காரணம் என்பதாக்குவதுமே இத்திரை படத்தின் நோக்கமாக இருக்கிறது, இந்த நிலையில் இருக்கும் படம் தமிழகத்தில் ஓடுமா? அதற்காக றோவின் கூட்டாளி சோபாசக்தியின் ஏற்பாட்டில் நடக்கும் நாடகமே இந்த தடை, சென்சார் எல்லாம். அப்படத்தின் மீது சிம்பத்தியை ஏற்படுத்தி அதை ஓடவைக்கவே இந்த நாடகம், அது ஓடுதோ இல்லையோ அதிகமான பேரை பார்க்க வைப்பதே இதன் நோக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.