Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாமென இலங்கை கடற்படையினரிடம் பிரணாப் கோரிக்கை

Featured Replies

இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாமென இலங்கை கடற்படையினரிடம் பிரணாப் கோரிக்கை :

23 ஜனவரி 2011

Bookmark and Share

ஏதேனும் தவறுகளை இழைக்கும் மீனவர்களை கைது செய்யுமாறு ..

இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாமென இலங்கை கடற்படையினரிடம் பிரணாப் கோரிக்கை :

தமது நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாம் எனவும், அவர்களை கைது செய்யுமாறும் இலங்கை கடற்படையினரிடம் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜீ கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்து மீறி மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். ஏதேனும் தவறுகளை இழைக்கும் மீனவர்களை கைது செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியுடன் சென்னையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக பிரணாப் முகர்ஜீ, முதலமைச்சர் கருணாநிதிக்கு உத்தரவதமளித்துள்ளார்.

இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களை தடுத்து நிறுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த நடவடிக்கை எடுக்க்பபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த பத்து தினங்களில் இரண்டு தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/56942/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

:(:(

  • கருத்துக்கள உறவுகள்

தமது நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாம் எனவும், அவர்களை கைது செய்யுமாறும் இலங்கை கடற்படையினரிடம் இந்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜீ கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்து மீறி மீன் பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார். ஏதேனும் தவறுகளை இழைக்கும் மீனவர்களை கைது செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்

இலங்கை வல்லரசைப் பார்த்து சுண்டங்காய் பிரணாப் என்ன கேள்வி கேட்டு விட்டாய்(ர்)? :D:D

Edited by nunavilan

இந்தியன் : நீ ஒரு இந்தியன்...

தமிழன்: ஆம் நான் இந்தியன்..

.

இந்தியன் : தமிழில் பேசலாம்.. கேள்வி கேட்ககூடாது...."

தமிழன்: சரி.....

இந்தியன் : நதி உனக்கு, நீர்மட்டும் அவர்களுக்கு..."

தமிழன் : பின் எப்படி நான் பயிர்செய்வது...

இந்தியன் : உன் நல்ல மனதிற்கு கடவுள் மழை தருவார்...

இனி கேள்வி கேட்க்ககூடாது..."

தமிழன் : ஓ... மறந்துபோனேன்..இனி கேட்கமாட்டேன்..

தமிழன் : ஐயோ என் சொந்தங்களை அடிக்கிறார்களாம்

அண்டை மாநிலத்திலே...

இந்தியன் :அடிப்பவனும் உன் சகோதரன் தான்...

தமிழன் : யார் சொன்னது...

இந்தியன் :நீதான் சொன்னாய் இந்தியர்கள் உன் சகோதரர்கள் என்று...

தமிழன் : ஓ...அப்படியானால் சரி...

இந்தியன் : தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள்....!

தமிழன்: எங்கே?

இந்தியன் : காஷ்மிரிலே...

நம் மண்ணை கேட்கிரார்கள் மாபாவிகள்..

தரலாமா ஒரு பிடிமண்ணும் மாற்றானுக்கு...

தமிழன் : பின் எதற்கு கொடுத்தீர்கள் கச்சதீவை?

இந்தியன் : ம்ம்... ம்... வாயை மூடடா"...

தமிழன் : மலேசியாவில் அடிக்கிரார்களாம் இந்தியனை...

இலங்கை கடற்படை சுடுகிறது இந்தியனை...

இந்தியன் : யார் சொன்னது அவர்கள் இந்தியனென்று....??

தமிழன் தானே...? ஸூத்திரன்"..

இந்திய மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டாமென இலங்கை கடற்படையினரிடம் பிரணாப் கோரிக்கை :

ஏதேனும் தவறுகளை இழைக்கும் மீனவர்களை கைது செய்யுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதில் அர்த்தமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஓ, பிரணாப் ஐயா நல்லா ஐடியா குடுத்தார். சுடாமல் கழுத்த நல்லா நெரியுங்கோ எண்டா?.

இதுக்கு இந்த வயதான காலத்தில முறைப்பாடு எழுதி ஈமெயிலிலயோ, புறாவிண்ட காலில தொங்கவிட்டோ டில்லிக்கு அனுப்புற கருணாநிதி ஐய்யாவ குறைசொல்லி என்ன பிரயோசனம்? வாய்க்கு ருசிக்கு மீன்கறி சாப்பிடேக்க எண்டாலும் மீன்பிடிக்கப்போய் சிங்களவண்ட கையில சாகிறவனுக்காக கொஞ்சமெண்டாலும் கெம்ப வேண்டாமோ?

தேர்தல் முடியும்வரை இப்படியான "பாச அறிக்கைகள்" புது டெல்லியில் இருந்து வரும்.

அது முடிந்த பின் "பழைய வேதாளம் முருக்கை மரத்தில்" ஏறிய கதைதான் தமிழனுக்கு.

பிரணாப் மன்றாட்டமாகக் கேட்டாலும் அது நடக்குமோ தெரியாது. :(:(

கடிதம் எழுதிய கொலைஞர் கருணாநிதி, பின்னர் தந்தி அனுப்பினார்.

அந்தாளுக்கு ஈமெயில், தொலைநகல் போன்றவையும் உண்டென சொல்ல ஒருவரும் இல்லையோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.