Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மஹிந்தரின் அமெரிக்க விஜயத்துக்கு புதிய காரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தரின் அமெரிக்க விஜயத்துக்கு புதிய காரணம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒரு வகையான நோயால் பீடிக்கப்பட்டு உள்ளார் என்று லங்கா ஈ நியூஸ் இணையத்தளம் அதற்கு கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு செய்தி பிரசுரித்து உள்ளது.

நோயின் கொடுமையை தாங்க முடியாத நிலையில் சிகிச்சை பெறுகின்றமைக்காகதான் அமெரிக்காவுக்கு தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு சென்று உள்ளார் என்றும் இச்செய்தி கூறுகின்றது.

அங்கு புற்று நோய் வைத்தியசாலை ஒன்றில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார் என்றும் இச்செய்தி தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டில் கடந்த இரு மாதங்களாக வைத்தியர்களின் மருத்துவ ஆலோசனைப் பெற்று வந்திருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதியின் உடல் நிலை மோசமாக இல்லை என்றும் எதிர்வரும் 04 ஆம் திகதிக்கு முன் நாடு திரும்புவார் என்று நம்பப்படுகின்றது என்றும் இச்செய்தியில் உள்ளது.Share 0

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=17876&Itemid=676

நூற்றுக்கணக்கில் தமிழர்களை வைத்தியசாலையில் கொல்வதற்கு காரணமாக இருந்தவர் இந்த போர்குற்றவாளி.

இன்று தனக்கு மருத்துவ உதவி உலகின் தலை சிறந்த வைத்தியசாலைகளில் பெற அமேரிக்கா வந்துள்ளார், (சீனாவோ இந்தியாவோ அல்ல). இவரை அமேரிக்கா இவர் செய்த மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு நாட்டை விட்டு வெளியேறாமல் நீதிக்கு முன் நிறத்தவேண்டும்.

இல்லாவிடில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூற்றுக்கணக்கில் தமிழர்களை வைத்தியசாலையில் கொல்வதற்கு காரணமாக இருந்தவர் இந்த போர்குற்றவாளி.

இன்று தனக்கு மருத்துவ உதவி உலகின் தலை சிறந்த வைத்தியசாலைகளில் பெற அமேரிக்கா வந்துள்ளார், (சீனாவோ இந்தியாவோ அல்ல). இவரை அமேரிக்கா இவர் செய்த மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு நாட்டை விட்டு வெளியேறாமல் நீதிக்கு முன் நிறத்தவேண்டும்.

இல்லாவிடில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்.

எனக்கு தெரிந்த கரீபியனில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் சிலர் இந்த மருத்துவ மனையில் பயிற்ச்சி எடுத்தவர்கள். அவர்களுக்கு தெரிந்தவர்களை தொடர்பு கொண்டதில் ஸ்ரீ லங்கா சர்வதிகாரி மூல கான்சர் பகுதியில் மெனக்கட்டதாக தெரிகிறது.

ஒரு இலட்சம் அப்பாவி தமிழ் உயிர்கள் உண்மையாகவே ஜெனோசைட் மாமன்னனுக்கு 'ஆப்படித்துவிட்டார்களா'?

இவன் சாவதுக்கு முன் அந்த ஒவ்வொரு உயிரையும் பாத்துட்டு தான் போகோணும். மூலத்தில வேற கான்சர் என்றால் வேதனைக்கு கரண்டி.

இந்த செய்தியை வெளியே மிஞ்சி போனால் ஒரு வருடத்துக்கு தான் ஸ்ரீ லங்கா சொட்டைத்தலை பெரிசுகளும், ரம்முக்குள்ள அதிகாரிகளும் பொத்தி வைத்திருக்கலாம்.

தமிழர் கொடிகளுடன் விழா எடுக்க கிழம்ப தயார் ஆகலாம். நாங்களும் ஆயிரம் அன்னதானம் கொடுக்கலாம்.

எனக்கு கொஞ்ச நாளைக்கு பிறகு கேட்டதில மிகவும் நல்ல செய்தி. அப்பாவும் யோசிச்சனான், அப்பு என் ரிஸ்க் எடுத்து இப்ப அமேரிக்கா போறார் என்று.

Edited by KuLavi

மகிந்தரின் அமெரிக்க பிரயாணத்திற்கு பலவேறு காரணங்கள் தெரிவிக்கப்படும் போதிலும்,

இந்த "புரஸ்டேட்" புற்றுநோய் ஓரளவு இலகுவில் தீர்க்கப்படக்கூடியது. ஆனால், அதிகம் வளராமல் இல்லை பரவாமல் இருந்திருக்க வேண்டும். அண்மையில் டொராண்டோவின் ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளர் மரணமடைந்திருந்தார் "புரஸ்டேட்" புற்றுநோய் அதிகம் பரவியதால்(Dailey survived prostate cancer but announced on September 9, 2010, on his 11 o'clock newscast, that he had been diagnosed with kidney cancer. The cancer spread to his lungs, and he died on December 6, 2010 at Sunnybrook Health Sciences Centre. http://www.citytv.com/toronto/citynews/news/local/article/104074--citytv-says-collective-goodbye-to-mark-dailey).

  • Currently in the United States, only 3% of patients succumb to the disease.
  • Prognosis and treatment is based on a grading system, generally the Gleason system which allots grades from 1-10 based on how much the cells in the cancerous tissue resemble normal prostate tissue.
  • A score of 2-4 is considered as low grade, 5-7 as intermediate grade and 8-10 as high grade.
  • Higher the grade, the more quickly the cancer will spread.

http://ezinearticles.com/?Prostate-Cancer-Survival-Rates&id=1722879

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் இப்படியான செய்தி வர வேறு காரணமாக இருக்கலாம். எமக்கு எதிரானவர் மகிந்த மட்டுமல்ல, சிறிலங்கா அரசு என்பதுமாகும்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் ஐ.தே.க. சந்தேகம் எழுப்புகிறது

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷவின் அமெரிக்க விஜயத்தின் இரகசியத்தை நாட்டு மக்களுக்குத் தெரிவிக்குமாறு ஐக்கியதேசியக்கட்சி அரசைக் கேட்டுள்ளது.அமைச்சரவையையும் அரச அதிகாரிகளையும் உள்ளடக்கிய 20 பேர் கொண்ட குழு ஜனாதிபதியுடன் சென்றிருக்கின்றது என்றும் அது தனிப்பட்ட விஜயமல்ல என்றும் அக்கட்சி மேலும் கூறியுள்ளது.எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பியுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு:

அது தனிப்பட்ட விஜயம் என அரச தரப்பில் கூறப்படுகின்றது. ஆனால், ஊடகங்களில் இந்த விஜயம் தொடர்பாகப் பல்வேறு விதமாகக் கூறப்படுகின்றது.அமைச்சரும் அரச அதிகாரிகளும் உள்ளிட்ட 20 பேர் அரச செலவில் ஜனாதிபதியுடன் சென்றுள்ளனர். அப்படியாயின் இந்த விஜயத்தை எப்படி தனிப்பட்ட விஜயம் என்று எடுத்துக்கொள்வது?இந்த மாதம் 19 ஆம் திகதி அமெரிக்கா சென்ற ஜனாதிபதி இன்னும் அங்கேயே இருக்கின்றார். அங்கு என்ன நடக்கிறதென்று தெரியவில்லை. அரசு இந்த விஜயத்தை தனிப்பட்ட விஜயம் என்று கூறி உண்மையை மறைக்கப் பார்க்கின்றது.இது தொடர்பில் இந்நாட்டு மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த விஜயத்தின் உண்மையை அறிய அவர்கள் விரும்புகின்றனர். ஆகவே, அரசு ஜனாதிபதி விஜயத்தின் இரகசியத்தை இந்நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும் என்றார்.

http://onlineuthayan.com/News_More.php?id=154

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த கரீபியனில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் சிலர் இந்த மருத்துவ மனையில் பயிற்ச்சி எடுத்தவர்கள். அவர்களுக்கு தெரிந்தவர்களை தொடர்பு கொண்டதில் ஸ்ரீ லங்கா சர்வதிகாரி மூல கான்சர் பகுதியில் மெனக்கட்டதாக தெரிகிறது.

------

மகிந்தரின் அமெரிக்க பிரயாணத்திற்கு பலவேறு காரணங்கள் தெரிவிக்கப்படும் போதிலும்,

இந்த "புரஸ்டேட்" புற்றுநோய் ஓரளவு இலகுவில் தீர்க்கப்படக்கூடியது. ஆனால், அதிகம் வளராமல் இல்லை பரவாமல் இருந்திருக்க வேண்டும். அண்மையில் டொராண்டோவின் ஒரு தொலைக்காட்சி அறிவிப்பாளர் மரணமடைந்திருந்தார் "புரஸ்டேட்" புற்றுநோய் அதிகம் பரவியதால்

மகிந்தவுக்கு வாற வருத்தம் எல்லாம்.... கோவணம் கட்டுற இடத்திலை தான்.. வருகுது.

வெளியிலை, தெரியிற இடமாய் இருந்தால்... நாங்கள் கண்ணாலை பார்த்தே... கண்டு பிடிக்கலாம். :rolleyes::D

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா! இன்னுமா இப்படி எல்லாம் ஆராய்ச்சி செய்கிறீர்கள்?

கேவலமாக இருக்கின்றது. அதாவது, மகிந்தர் வருத்தம் வந்து கூட சாகமாட்டாரா என்கிற ஆராய்ச்சி எல்லாம் செய்கிறீர்கள்.

எவ்வளவு கீழ்நிலையான சிந்தனைகள் இவை.

அது சரி, இனி குண்டு அனுப்பிக் கொலை செய்ய புலி இல்லைத்தானே!. உங்களைப் போன்றவர்கள் இடுகின்ற சாபங்களால்தான் சிங்கள அரசைச் சேர்ந்தவர்கள் சாகவேண்டும் என நினைக்கின்றீர்கள் போல் இருக்கின்றது.

ஏதோ நடக்கட்டும், நடக்கடும்.

Edited by nirmalan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.