Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

25 சர்வதேச புலிகள் இயக்க பிரமுகர்கள் பற்றி கனேடியப் பொலிஸ் இலங்கை அரசுக்கு தகவல்

Featured Replies

25 சர்வதேச புலிகள் இயக்க பிரமுகர்கள் பற்றி கனேடியப் பொலிஸ் இலங்கை அரசுக்கு தகவல்

கனடா மற்றும் நாடுகளில் இயங்கும் முக்கிய புலிகள் இயக்கத்தலைவர்கள் 25 பேரின் பெயர் விபரங்களை கனடா இரகசியப் பொலிஸ் பிரிவு ஸ்ரீலங்கா பாதுகாப்புத் துறைமற்றும் புலனாய்வுத்துறைக்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு குறித்த கனடா புலிகள் இயக்கப் பிரமுகர்கள் கடந்தகாலங்களிலும் தற்போதும் நேரடியாகவும் வேறு அமைப்புகளின் பெயரில் மறைமுகமாகவும் மேற்கொண்டு வரும் நிதிசேகரிப்புகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய பல்வேறு தகவல்களை கனடிய இரகசியப் பொலிஸ் பிரிவினர் அண்மைக்காலங்களில் எடுத்த தீவிர புலனாய்வுகள் மூலம் பெற்றுள்ளதாக கனடிய இரகசிய பொலிஸ்துறை தகவலிலிருந்து தெரியவந்துள்ளது.

இதுபற்றி கனடிய இரகசியப்பொலிஸ் பிரிவு புலனாய்வு அறிக்கையை கனடிய பாதுகாப்புத்துறைக்கு சமர்ப்பித்துள்ளதுடன், ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் கனடாவில் செயற்பட்டுவரும் புலிகளின் பெயர்கள், செயற்பாடுகள் பற்றிய தகவல் அறிக்கையை அனுப்பிவைத்துள்ளதாக குறிப்பிட்ட தகவல் வட்டாரங்களில் தெரிவித்துள்ளன. இதில் புலிகள் இயக்கத்தின் சர்வதேச நிதிசேகரிப்பு மற்றும் நிதிப்பரிமாறல்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் இந்தவகையில் கடந்த காலங்களில் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு வருடாந்தம் சுமார் 7 இலட்சம் டொலர் தொகை கனடாவிலுள்ள புலிகள் இயக்கச் செயற்பாட்டாளர்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இலங்கை ரூபாவில் சுமார் 700 மில்லியன் பெறுமதியான இந்தப் பெரிய தொகையை கனடா புலிகள் இயக்க நிதிப்பொறுப்பாளர்கள் வருடாந்தம் பிரபாகரனுக்கு அனுப்பிவைத்துள்ளதுடன் அதன் பன்மடங்கான பணம் ஆயுதக் கொள்வனவுகள் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்காக வருடாந்தம் செலவு செய்யப்பட்டிருக்கலாம் என புலனாய்வுத்துறை தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

கனடா இரகசிய பொலிஸ் பிரிவால் மேலும் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப இவ்வாறு கடந்தகாலங்களில் புலிகள் இயக்கத்தலைவரின் ஆயுதக்கொள்வனவுகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கனடாவிலிருந்து நிதி வழங்கப்பட்டது சம்பந்தமாக 84 கடிதக்கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் இவ்வாறு பிரபாகரனுக்கு கனடாவிலிருந்து நிதி வழங்கும் செயற்பாட்டில் முக்கிய நபர் முரளிதரன் துரைரத்தினம் எனப்படும் பிரபல புலிகள் இயக்கப் பிரமுகரே என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் புலிகளின் சர்வதேச நிதிசேகரிப்பு மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக புலிகள் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகக் கூறப்படும் கனடா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து, பிரிட்டன், ஜேர்மனி, நோர்வே, ஐக்கிய அமெரிக்கா முதலாக சுமார் இருபது நாடுகளில் குறிப்பாக சுவிற்சர்லாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் அந்த நாடுகளின் புலனாய்வுத்துறையினர் விசேட விசாரணைகள், தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.இந்த வகையில் கனடா பாதுகாப்புத் துறையும் புலனாய்வுத் துறையும் அந்நாட்டிலும் சர்வதேச நாடுகளிலும் புலிகள் இயக்கத்தினரின் செயற்பாடுகள் பற்றி கூடுதல் அக்கறையுடன் செயற்பட்டு வந்துள்ளன. சட்டவிரோதமாக கப்பல்களில் கனடாவுக்கு வரும் தமிழர்கள் மற்றும் புலிகள் இயக்க உறுப்பினர்களின் தொடர்ச்சியான படையெடுப்புகளே இவ்வாறு கனடா பாதுகாப்புத் துறையும் புலனாய்வுத் துறையும் தீவிரமாகச் செயற்பட்டு வருவதற்கான உடனடியான காரணங்கள் எனக் கருதப்படலாம்.இந்த வகையில் புலிகள் தொடர்ந்தும் மறைமுகமானதும் நேரடியானதுமான சட்டவிரோத நிதிசேகரிப்புகள்,கப்பம் மற்றும் வன்முறைகளிலும் சர்வதேச நாடுகளில் குறிப்பாகக் கனடாவில் அவர்களுக்கு எதிராக கனடிய அரசு ஒப்பீட்டளவில் கூடுதலானதும் தீவிரமானதுமான புலனாய்வு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது எனலாம். கனடாவுக்கு கப்பல்களில் சட்டவிரோதமாக வருவோர் சம்பந்தமாக புலிகளுக்கு எதிராக கனடாவுடன் இணைந்து தாய்லாந்து,இந்தோனேசிய அரச பொலிஸ் துறையினரும் செயற்பட்டு வருகின்றனர்.

இவ்வாறு கனடா இரகசிய பொலிஸார் மேற்படி புலிகளின் சர்வதேச சட்டவிரோத நிதி சேகரிப்பு ஆயுதக் கொள்வனவுகள் பற்றிய தகவல்கள் அடங்கிய 84 கடிதக் கோப்புகளை கனடாவில் கைப்பற்றியதைத் தொடர்ந்தே புலிகள் சர்வதேச நிதிசேகரிப்பு மற்றும் ஆயுதக்கொள்வனவு வலையமைப்புடன் சம்பந்தப்பட்ட 25 சர்வதேச புலிகள் இயக்கத் தலைவர்கள் பற்றி விபரங்களையும் வருடாந்தம் புலிகள் இயக்கத் தலைவருக்கு கனடாவிலிருந்தும் மற்றும் நாடுகளிலிருந்தும் அனுப்பப்பட்டு வந்த நிதி விபரங்களும் சிக்கியுள்ளன. கனடிய இரகசிய பொலிஸ் தரப்பில் மேலும் அறிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப இவ்வாறு பிரபாகரனுக்கு வருடாந்தம் பெரும் தொகை நிதியைப் பரிமாறி வந்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பற்றிய விபரங்களும் ஸ்ரீலங்கா அரசுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவ்வாறு முக்கியமாக சிங்கப்பூரிலுள்ள அரடேன்ஸ் சர்வதேச பணப்பரிமாற்ற நிறுவனம் மூலம் யுனைரெட் ஓவர்சீஸ் வங்கி மூலமுமே பிரபாகரனுக்கு மேற்படி கனடாவில் வசிக்கும் முரளிதரன் துரைரெத்தினம் முதலாக சர்வதேச புலிகள் இயக்கப் பிரமுகர்கள் பெருந்தொகையான நிதியை வருடாந்தம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கனடிய இரகசியப் பொலிஸ் பிரிவு ஸ்ரீலங்கா அரசுக்கு மேற்படி முக்கிய தகவல்களைத் தெரிவித்திருப்பதைத் தொடர்ந்தும் சர்வதேச புலிகள் இயக்கச் செயற்பாட்டாளர்கள் 25 பேரின் தகவல்கள் கிடைத்திருப்பதைத் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பாதுகாப்புத் துறையும் புலனாய்வுத் துறையும் கனடா, பிரான்ஸ்,சுவிற்ஸர்லாந்து, ஜேர்மனி, நோர்வே, சுவீடன், பிரிட்டன், ஐக்கிய அமெரிக்கா, தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய புலிகள் தீவிரமாகச் செயற்பட்டு வருவதாகக் கருதப்படும் அனைத்து நாடுகளிலும் புலனாய்வு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாகவும் இதனடிப்படையில் அந்த நாடுகளின் பொலிஸ் துறைகளுடன் இணைந்து நுட்பமாகச் செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் புலிகளின் சர்வதேச பலத்தை பெருமளவில் முடக்க முடியும் எனவும் பாதுகாப்பு விமர்சனங்கள் தெரிவித்துள்ளன.

திவயின

தகவலும் விமர்சனமும்

30.01.2011

- தினக்குரல் -

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் அப்படி எதுவுமில்லை

நேரத்தை வீணடிக்கப்போகிறார்கள் :(

மீண்டும் ஒருமுறை சிங்களத்தின் உளவியல் பரப்புரைக்கு தமிழர் ஊடகங்கள் ஏமாந்துவிட்டனவா என எண்ணத்தோன்றுகின்றது

இப்படியான செய்தி "தியாவின"வில் வரும் என்றால் கட்டாயம் இந்த கனடா பத்திரிகையிலும் வந்திருக்கும். தேடினேன், இல்லை.

http://www.nationalpost.com/search/index.html?q=Tamil

Edited by akootha

  • தொடங்கியவர்

பிரான்சில் அப்படி எதுவுமில்லை

நேரத்தை வீணடிக்கப்போகிறார்கள் :(

:D :D

நானும் ரவுடிதான்..நானும் ரவுடிதான்..என்னையும் ஜெயிலுக்கு கூட்டிட்டுப்போங்கப்பா.....

இலங்கை சிங்களவன் தமிழனுக்கு சொல்கிறான் கனடியன் தங்களுக்கு ஆதரவாம் எண்டு ஆகவே சோந்து போய் முடங்கி கிடக்கிறது தான் நல்லது எண்டு... !

எப்ப சிங்களவனில் செய்தியை காவுகிற எங்கட ஊடகங்கள் திருந்த போகின்றனவோ...???

Edited by தயா

நிறுவனம் மூலம் யுனைரெட் ஓவர்சீஸ் வங்கி மூலமுமே பிரபாகரனுக்கு மேற்படி கனடாவில் வசிக்கும் முரளிதரன் துரைரெத்தினம் முதலாக சர்வதேச புலிகள் இயக்கப் பிரமுகர்கள் பெருந்தொகையான நிதியை வருடாந்தம் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது

இல்லை சும்மாதான் கேட்கிறன் புலிகளுக்கு புலம்பெயர் தமிழன் பணம் கொடுத்துதான் இப்படி வளர்ந்தார்களா?நானே ஒரு 500 டொலர் கொடுப்பதற்கு இரண்டு வருசம் பேய்காட்டி கடைசியில ஒரு மாதிரி திட்டி திட்டித்தான் கொடுத்தனான்...இப்படி எத்தனை பேர் செய்திருப்பினம்,...சிலர் கொடுத்து இருக்கக் கூடும் ஆனால் அது ஒரு சிறு இராணுவ முகாமைதாக்குவதற்க்கும் போதுமான பணமாக இருந்திருக்குமோ தெரியவில்லை......

கனடிய போலிஸ் திணைக்களம் சிங்கள பயங்கரவாதிகளின் மது, மாது, பொன், மண், முடிச்சு வலையில் நன்றாக சிக்கிவிட்டது என்பது உறுதியாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை சும்மாதான் கேட்கிறன் புலிகளுக்கு புலம்பெயர் தமிழன் பணம் கொடுத்துதான் இப்படி வளர்ந்தார்களா? நானே ஒரு 500 டொலர் கொடுப்பதற்கு இரண்டு வருசம் பேய்காட்டி கடைசியில ஒரு மாதிரி திட்டி திட்டித்தான் கொடுத்தனான்...இப்படி எத்தனை பேர் செய்திருப்பினம்,...சிலர் கொடுத்து இருக்கக் கூடும் ஆனால் அது ஒரு சிறு இராணுவ முகாமைதாக்குவதற்க்கும் போதுமான பணமாக இருந்திருக்குமோ தெரியவில்லை......

நான் நியமாக பதில் சொல்கின்றேன்

அங்கிருந்து ஒரு தொகை கோரப்படும். அது இங்குள்ள ஒவ்வொரு நாட்டின்மக்கள்தொகை மற்றும் அபிமானிகள் தொகையைப்பொறுத்து பிரித்துக்கொடுக்கப்படும். அதை எப்படி சேகரிப்பது என்று ஆராய்ந்து அவரவருக்கு (ஏரியாக்கள்) குறிப்பிட்ட இலக்கு வைத்து தொகை பிரித்து கொடுக்கப்படும். அவர்களும் அந்த தொiயை இலக்குவைத்து எழுதத்தொடங்கினால் எழுத்தில் வருவதே அரைவாசிதான். அதில் வாங்கிமுடிப்பது....? ஆனால் தொகையில்ஒரு தொகுதி சிலவேளைகளில் முன் கூட்டியே அனுப்பவேண்டிவரும். அத்தொகை முக்கிய அபிமானிகளிடமிருந்தும் அது போதாதவிடத்து கடனடிப்படையிலும் வங்கிகளில் மாறுவதனூடகவும் பெறப்படும். (இன்று சுவிசில் உள்ள சிக்கல் இப்படி வந்ததுதான்). எழுதியவர்கள் நீங்கள் குறிப்பிட்டதுபோல் ஒழித்ததும் உண்டு. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட வீதத்தினர்அங்கிருந்து கேட்கப்பட்ட தொகையை கொடுக்க முழுவதுமாக உழைத்தார்கள். அதற்காக தங்களால் முடிந்ததுக்கும் அதிகமாக கொடுத்தார்கள் என்பதும் உண்மை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.