Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லெண்ண தூதுவராக செயல்பட அருகதை அற்றவர் நோர்வேயின் சொல்ஹெய்ம்! பிரதமர் டி.எம் ஆவேசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நல்லெண்ண தூதுவராக செயல்பட அருகதை அற்றவர் நோர்வேயின் சொல்ஹெய்ம்! பிரதமர் டி.எம் ஆவேசம்

வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழ் சமூகத்துக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் நல்லெண்ணத்தை கட்டி எழுப்ப வல்ல தூதுவராக செயல்பட நோர்வே நாட்டின் எரிக் சொல்ஹெய்மை ஒரு போதும் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்து உள்ளார் பிரதமர் டி.எம்.ஜயரட்ண.

அரசு - தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகியோருக்கு இடையில் நோர்வேயின் சமாதான தூதுவராக செயல்பட்டவர் சொல்ஹெய்ம். நோர்வே நாட்டின் சுற்றாடல் துறை அமைச்சராக தற்போது உள்ளார். போருக்கு பிந்திய இலங்கையில் அரசு-புலம்பெயர் தமிழ் சமூகம் ஆகியவற்றுக்கு இடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த வல்ல தூதுவராக செயல்பட பெருவிருப்பம் கொண்டு உள்ளார் என்று அடிக்கடி வெளிப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையிலேயே நோர்வேயினதோ, நோர்வேயின் சமாதான தூதுவராக இருந்த சொல்கெய்மினதோ சேவை இனி மேல் ஒரு போதும் தேவை இல்லை என்று பிரதமர் கூறி உள்ளார்.

சொல்ஹெய்ம் ஒரு வெற்றிகரமான சமாதான தூதுவர் அல்லர் என்றும் பக்கச் சார்பானவராக செயல்பட்டு இருந்தார் என்றும் சுய இலாபம் கருதியே அரசு- புலம்பெயர் தமிழ் சமூகம் ஆகியவற்றுக்கு இடையில் நல்லெண்ணத்தை ஏற்படுத்த வல்ல நல்லெண்ண தூதுவராக செயல்பட சொல்ஹெய்ம் ஆசைப்படுகின்றார் என்றும் பிரதமர் குறிப்பிட்டு உள்ளார்.

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=18137&Itemid=410

ஆகவே சொல்கைம் தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டவர் எண்டுறீங்கள்....! வளமையாக வரலாற்றுகளை மறந்தவைக்கு இது புதுசான செய்தி... எப்படி எல்லாம் தமிழ் மக்களுக்கு எதிராக உளவியல் யுத்தம் செய்கிறார்கள் எண்டதுக்கு இது நல்ல உதாரணம்....!

Edited by தயா

.

தன் கையில் இருக்கும் இரத்தம் காரணமாக சொல்ஹெய்ம் குற்ற உணர்வுடன் தான் இருப்பார். மீண்டும் ஒருமுறை தமிழர் இவரை அணுகிப் பார்ப்பதில் தப்பில்லை. இம்முறையாவது தமிழர்க்கு நன்மை செய்ய நினைக்கக்கூடும்.

.

தன் கையில் இருக்கும் இரத்தம் காரணமாக சொல்ஹெய்ம் குற்ற உணர்வுடன் தான் இருப்பார். மீண்டும் ஒருமுறை தமிழர் இவரை அணுகிப் பார்ப்பதில் தப்பில்லை. இம்முறையாவது தமிழர்க்கு நன்மை செய்ய நினைக்கக்கூடும்.

மீண்டும் ஒருமுறை மன்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமோ?

நாம் ஓற்றுமையாக இணைந்து பலமாக போய் பேசினால் ஏதாவது வழி கிடைக்கும் ஆனால் எரிக் சொல்கையும் நம்ப்பினால் நம்மை பிரிக்க தான் உதவுவார்.

மீண்டும் ஒருமுறை மன்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமோ?

நாம் ஓற்றுமையாக இணைந்து பலமாக போய் பேசினால் ஏதாவது வழி கிடைக்கும் ஆனால் எரிக் சொல்கையும் நம்ப்பினால் நம்மை பிரிக்க தான் உதவுவார்.

அவரை நம்பத்தேவையில்லை.

அவரை நாம் பயன் படுத்தப் பார்ப்போம்.

ஏனென்றால் புலம் "அவர்களுடைய" தளம்.

எமெக்கிருக்கும் வ‌ழிகளை மூடக்கூடாது.

அவர்களுடன் வைத்திருக்கும் நட்பு, உறவு என்பவற்றின் மூலம் எம்மை வளர்த்துக் கொள்வதற்குரிய சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிங்களவர்கள் சொல்வது சரியானதே. தங்கள் (அமெரிக்காவின்) நலன்களை இலங்கையில் நிலைநாட்டத்தான் சமாதானப்பேச்சு வார்த்தை தொடங்கி புலிகள் சற்றும் இணங்கி வராமையால் தான் புலிகளை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி இலங்கையுடனும் இந்தியாவுடனும் சேர்ந்து ஆயுதங்களும் வழங்கி, வெளிநாட்டுகளின் அனுசரணைகளையும் இலங்கைக்குப் பெற்றுக்கொடுத்து முனைப்புடன் தமிழர் போராட்டத்தை அழித்ததில் இவர்களுக்கு பெரிய பங்குண்டு. மீண்டும் இலங்கை அரசுடன் தொடர்பு வைத்து இலங்கையில் தங்கள் சர்வதேச நலன்களை நிலைநாட்ட முயலும் எரிக் நல்லவன் போன்ற நல்லவன் அல்லாதவன். இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த நுழைவுக்கு ஒரு வழியை உருவாக்கும் ஒரு கபடநாடகம் தான் எரிக்கின் முயற்சி. இதில் தமிழர் நலன் ஒரு கால்பந்து தான். இதில் தமிழர்களும் மிகவும் கவனமாகச் செயல்படவேண்டும். மீண்டும் தமிழர்கள் இந்த மண்குதிரையில் ஏறக்கூடாது. சி;ங்களவன் சரியாகச்சிந்திக்கின்றான். தமிழர்கள் ஆத்திரத்தில் முட்டாள்தனமான வேலைகளைச் செய்யக்கூடாது.

சரியான வழியில் சென்று அது சரிவரவில்லையெனில் தலைகீழாகச் செல்லுதல். என்ற தத்துவம் தான் தமிழர் விடுதலைக்கு இனிஆமல் ஒத்துப்போகக்கூடிய பாதை. இதற்கு விளக்கம் இதில் கூறமுடியாது. அதற்கும் தமிழரின் ஒற்றுமை மிகவும் அவசியம். சிங்களவரின் விழிப்புணர்வும், அவர்கள் கற்றுக்கொண்ட பாடங்களையும் சரியாகப் பயன்படுத்துகின்றார்கள். தமிழர்கள் எரிக்கை தொட்டுப்பார்க்கக்குடாது. இவர்கள் தங்களுக்கு அடிபணியும் கூட்டத்திற்குத்தான் ஒத்துழைப்பார்கள். இவர்கள் மூலம் எதையும் பெறமுடியாது. உள்ளதையும் இழக்க நேரிடும் நேரிட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.