Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் கவனிப்பார் இவர்களை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யார் கவனிப்பார் இவர்களை?

சண்டே ரைம்ஸ் ஆங்கிலப் பத்திரிகைக்கு பொலநறுவை மாவட்டத்தின் தெற்குப் பகுதியிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து யஸ்மின் கவிரட்ண எழுதிய ஆக்கம் இது. குறிப்பாக இச்செய்திக் கட்டுரை பொலன்னறுவ மாவட்டத்தின் எல்லையிலுள்ள தமிழ்க் கிராமம் பற்றியே பேசுகின்றது.

இலங்கையில் அதிகமாக உள்ள வயது குறைந்த திருமணப் பெண்களில் அவளும் ஒருத்தி. 15 வயதில் திருமணம் செய்த இந்தப் பெண் தற்போது விவாகரத்துப் பெற விரும்புகிறாள். தற்போது அவளுக்கு வயது 16.15 வயதில் தான் திருமணம் செய்வதற்கு வறுமைதான் முக்கிய காரணம் எனப் பொலன்னறுவை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடைப்பட்ட எல்லைக் கிராமத்தினைச் சேர்ந்த செல்வராசா ஜெயராணி என்ற இந்தப் பெண் கூறுகிறாள்.

பாடசாலையிலிருந்து இடைவிலகிய ஜெயராணி தனது கணவனுடன் வாழ்ந்து வந்திருக்கிறாள். தனக்குத் திருமண வாழ்க்கை போதும் போதும் என்றாகி விட்டதால் தனக்கு மண முறிவைப் பெற்றுத் தருமாறு கோரி காவல் நிலையம் சென்றிருக்கிறாள். ஆனால் இவளது திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்படாததால் காவல்துறையினரும் கைவிரித்து விட்டனர். மிகவும் குறைந்த வயதில் திருமண பந்தத்திற்குள் நுழைந்த இலங்கையின் ஆயிரக்கணக்கான பெண்களில் ஜெயராணியும் ஒருத்தி. பொலன்னறுவை, அம்பாந்தோட்டை மற்றும் மொனறாகல ஆகிய மாவட்டங்களைப் பொறுத்தவரையில் இதுபோன்ற இளவயதுத் திருமணங்கள் ஒன்றும் ஆச்சரியத்துக்குரிய விடயமல்ல என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். விறகு சேகரித்தல், கிணற்றிலிருந்து நீர் அள்ளுதல், சமையல், வீட்டினைக் கூட்டிப் பெருக்குதல் மற்றும் துணி துவைத்தல் பேன்ற பணிகளில்தான் ஜெயராணியினது வாழ்க்கை தினமும் சுழல்கிறது. ஆனால் இந்தப் பணிகள் எவையும் அவளது பால்வடியும் பிஞ்சு முகத்திலிருந்து சிரிப்பை தட்டிப் பறித்துவிடவில்லை.

குடும்பத்தில் சிறியவள் இவள். தனது குடும்பம் சந்தித்து நின்ற வறுமை என்ற கொடும் துயரத்தினை இவள் நன்கறிவாள். இந்த நிலையில் தந்தையும் இறந்துவிட நிலைமை மேலும் மோசமாகியிருக்கிறது. ஆடவன் ஒருவனுடன் இவள் காதலில் விழுந்தபோது திருமணம்தான் தனக்குப் புதிய வாழ்க்கையினைப் பெற்றுத்தரும் என நம்பினாள். குறிப்பிட்ட இந்த ஆண்மகன் சீதனத்தினை எதிர்பார்க்காததால் அவனுடன் சென்று இணைந்து வாழ ஆரம்பித்தாள் ஜெயராணி.

"ஆனால், திருமணம் முடித்த பின்னர் அவர் என்னிடம் சீதனத்தைக் கேட்டு வாக்குவாதப்பட்டார். நான் சீதனம் எதுவும் கொடுக்கவில்லை என என்னிடம் கோபப்பட்டார். அவரது குடும்பம் என்னுடைய குடும்பத்தினைப் போல் வறுமையான நிலையில் இருக்கவில்லை'' என்கிறார் ஜெயராணி. தாங்கள் திருமணம் செய்தவுடன் திருமணப் பதிவினை மேற்கொள்ளாதமையினால் விவாகரத்துக்கோரி சட்ட நடவடிக்கை எடுக்கமுடியாத நிலைக்குத்தான் தள்ளப்பட்டிருப்பதை அவள் எங்களிடம் விவரித்தாள். கிழக்கு மாகாணத்தில் பொலன்னறுவைக்கும் மட்டக்களப்புக்கும் இடைப்பட்ட எல்லைப் பகுதியிலிருக்கும் சோரிவில என்ற இந்தக் கிராமத்தில் விவசாயம்தான் முக்கிய தொழில். கிராமத்தில் ஆண்கள் பெரும்பாலும் விவசாயிகளாகவே இருக்கிறார்கள். பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் இளைஞர்கள் தந்தையர்க்கு உதவி புரிய வயலுக்குச் சென்றுவிடுகிறார்கள். பெண்களே வீட்டில் தாய்மாருக்கு ஒத்தாசையாக இருக்கிறார்கள். இங்கு இவர்கள் வீடு என அழைப்பது மண் சுவர்களைக் கொண்ட ஓலைக் குடில்களையே. சில சமயம் இந்தக் குடில்களுக்குச் சுவர்களும் இருக்காது. கிடுகுகளால் அடைக்கப்பட்டிருக்கும். வீட்டிலுள்ள ஏனையவர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிட குடிசையிலேயே தங்கியிருக்கும் இளம் பெண்களுக்கு இந்தக் குடிசைகள் போதிய பாதுகாப்பினைத் தருபவையாக இல்லை. தரிசு நிலங்கள் எங்கும் பரந்து காணப்படுகின்றன. அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமைக்கான அறிகுறிகள் எதுவும் அங்கில்லை.கிழக்கின் உதயம் அல்லது வடக்கின் வசந்தம் போன்ற அரச திட்டங்களின் கீழ் இந்தக் கிராமங்களும் கிராம மக்களும் மறக்கப்பட்டுவிட்டார்கள். இவர்கள் தினமும் வாழ்வுக்காகப் போராடுகிறார்கள். இந்தக் கிராமமும் கொடிய போருக்கு உட்பட்டிருக்கிறது. பயங்கரவாதம் என்பது இன்று முடிந்த கதையாகிவிட்டது. கருணா அணியினது அல்லது விடுதலைப் புலிகளின் கட்டாய ஆள்திரட்டலுக்கு உட்படாமல் தவிர்ப்பதற்கான ஒரு கருவியாக ஒரு காலத்தில் இங்கு திருமணம் இருந்திருக்கிறது. இவர்களது கட்டாய ஆள்திரட்டலில் இருந்து தப்புவதற்காக இளம் வயதிலேயே இவர்கள் திருமண பந்தத்துக்குள் நுழையும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

கட்டாய ஆள்திரட்டலிலிருந்து தப்புவதற்காக நதீசா தனது 16ஆவது வயதில் திருமணம் செய்தாள். இவளுக்குத் தற்போது 20 வயது. 17ஆவது வயதில் ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த நதீசா, தனது 19ஆவது வயதில் அந்தக் குழந்தையையும் பறிகொடுத்தாள். தொடர் காய்ச்சல் இவளது ஒன்றரை வயது மகனின் உயிரைக் குடித்தது.

நதீசாவின் கணவன் ஒரு விவசாயி. வீட்டு வேலைகளைக் கவனிப்பதிலேயே அவளது பொழுது கழிகிறது. மீதமிருக்கும் நேரங்களில் அயலவர்களுடன் அரட்டையடிக்கிறாள். சட்ட ரீதியிலான திருமண வயதினை அடைய முன்னரே திருமணம் செய்துகொண்ட பல பெண்கள்தான் இவளது அயலவர்கள். இந்தக் கிராமத்தின் ஜெயராணி மற்றும் நதீசா போன்ற பல பெண்கள் தங்கள் திருமணத்தினை இன்னமும் பதியவில்லை. சட்ட ரீதியான திருமண வயதினை அடைய முன்னர் இவர்கள் திருணம பந்தத்திற்குள் நுழைந்ததுதான் காரணம். இந்தக் கிராமத்தவர்களில் பலருக்கு பிறப்பு சான்றிதழ்களே இல்லாத நிலையில், இவர்கள் தேசிய அடையாள அட்டைக்குக்கூட விண்ணப்பிக்க முடியாது பின்தங்கிக் காணப்படுகின்றனர்.இவர்கள் தங்களது குழந்தையினது பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காகச் செல்லும்போது அங்கு அதிகாரிகள் இவர்களது திருமணச் சான்றிதழையும், பிறப்பு சான்றிதழையும் கோருகிறார்கள். அப்போதுதான் இவர்களுக்கு ஆவணங்களின் முக்கியத்துவம் புரிகிறது. முறையான திருமணப் பதிவினைக் கொண்டிருக்காமையினால் இவர்களது குழந்தைகளுக்கும் பிறப்புச் சான்றிதழ்கள் கிடைக்கப் போவதில்லை. இந்தக் கிராமத்தில் வாழ்பவர்கள் அனைவரும் இந்துக்களே. எனவே இவர்கள் தங்களது பிள்ளைகள் திருமண வயதினை அடைய முன்னரே அவர்களுக்குச் சமய வழக்கப்படி திருணம்செய்து வைத்துவிடுகிறார்கள். திருமண வயது தொடர்பான, சட்டப் பார்வைகள் இந்தக் கிராமத்தவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தக் கிராமத்தில் தங்களது மதம்சார் வழக்கப்படி இளம் வயதில் திருமணம் செய்த சிலர் தாங்கள் 18 வயதினை அடைந்தபோது திருமணப் பதிவினை மேற்கொண்டிருக்கிறார்கள். நளினி குமாரி, ராதிகா, சாரதா மற்றும் கவிதா ஆகிய இந்தப் பெண்கள் அருகருகே வசிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் தங்களது 16வது மற்றும் 17வது வயதுகளில் திருமணம் செய்திருக்கிறார்கள். இந்தக் குழுவில் நளினிதான் அருகிலுள்ள மன்னப்பட்டி மகாவித்தியாலத்தில் 10ஆம் ஆண்டு வரை படித்திருக்கிறாள். எனவே இவளை கல்வியறிவு பெற்ற ஒரு பெண்ணாகவே இவளது கூட்டாளிகள் கருதுகிறார்கள். குளத்தில் மீன்பிடித்துக் கருவாடாக்கும் தொழிலினைச் செய்யும் ஒருவரைத்தான் நளினி மணந்துகொண்டாள். இவர்களுக்குத் தற்போது றேகா, பனசிறி ஆகிய நான்கு மற்றும் ஒரு வயதுப் பிள்ளைகள் இருக்கிறார்கள். பாடசாலையில் போதிய ஆசிரியர்கள் இல்லாமையினாலும் அங்கு போதிய வளங்கள் இல்லாமையினாலும் தாங்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியதாக இந்த இளம் மனைவியர்கள் கூறுகிறார்கள். சோரிவில தமிழ் மகாவித்தியாலயத்தில் ஒருசில ஆசிரியர்களே இருக்கிறார்கள். தரம் ஐந்து வரைக்கும்தான் இந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கப்படுகிறது. யாராவது தொடர்ந்து கல்விகற்க விரும்பினால் அருகிலுள்ள மன்னம்பிட்டிப் பாடசாலைக்குத்தான் இவர்கள் செல்லவேண்டும். தங்களது கிராமப் பாடசாலையினை விட மன்னப்பிட்டி மகாவித்தியாலயம் அதிக வசதிகளைக் கொண்டிருப்பதாகவும் கிராமத்து இளைஞர்கள் கூறுகிறார்கள். க.பொ.த சாதாரண தரம் வரைக்கும் இவர்கள் கல்வியினைத் தொடர்ந்தாலும் கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் கிராமத்து மாணவர்கள் அதிக புள்ளிகளைப் பெறுவதில்லை. குறிப்பாக இதுபோன்ற முக்கியமான பாடநெறிகளுக்குப் போதிய ஆசிரியர்கள் இன்மையே இதற்குக் காரணம்.

தன்னிடம் திருமணப் பதிவுக்காக வரும் இளம் குடும்பங்களிடம் அவர்களது தேசிய அடையாள அட்டை மற்றும் பிறப்புச் சான்றிதழ்களை மன்னம்பட்டிப் பகுதியிலுள்ள நந்தினி குணசிங்க என்ற திருமணப் பதிவாளர் கோருகிறார்.

1995, 1996 மற்றும் 1997ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் திருமணப் பதிவுக்காக வருகிறார்கள். ஆனால் நான் அவர்களைத் திருப்பி அனுப்பவிடுகிறேன் என இந்தத் திருமணப் பதிவாளர் கூறுகிறார். சிலர் போலியான ஆவணங்களைக் காட்டித் திருமணப் பதிவுகளை மேற்கொள்ளும் அதேநேரம் ஏனைய சில இளம் குடும்பங்கள் திருமணப் பதிவினை மேற்கொள்ளாமல் இருந்து விடுகின்றன என வெலிக்கந்தை பிரதேச உதவி அரச அதிபர் அனுரா பிறேம்லால் கூறுகிறார். பெண்கள் பருவமடைந்தவுடன் அவர்களுக்குத் திருமணத்தினைச் செய்து கொடுத்துவிடவேண்டும் என இன்னமும் நம்பும் சில முதியவர்களைக் கொண்ட தமிழ்க் கிராமங்கள் தனது உதவி அரச அதிபர் பிரிவின் கீழ் இருப்பதாக இந்த அதிகாரி தொடர்ந்து தெரிவித்தார். குறிப்பிட்ட இந்தத் தமிழ் கிராமங்கள் உள்ள பகுதிகளில் அவர்கள் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகளை மேற்கொள்வதற்கு வசதியாக நடமாடும் சேவை நடத்தப்பட்டதாகவும் திருமண வயது தொடர்பாகவும் திருமணங்களை முறையாகப் பதியவேண்டிய தேவைகள் தொடர்பாகவும் கிராமத்தவர்களுக்கு எடுத்து விளக்கப்பட்டதாகவும் இந்த உதவி அரச அதிபர் கூறுகிறார். சட்டத்துக்குப் புறம்பான வகையில் திருமண பந்தத்தில் இணைந்து ஒன்றாக வாழ்ந்த 75 தம்பதிகள் குறிப்பிட்ட இந்த நடமாடும் சேவையின் ஊடாகத் தங்களது திருமணப் பதிவினை மேற்கொண்டனர் என்று இந்த அதிகாரி தொடர்ந்து தெரிவித்தார்.

திருமணம் தொடர்பாகச் சிறிலங்காவின் சட்டம் என்ன கூறுகிறது:

16 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவதற்குச் சட்டம் அனுமதிக்கிறது. எவ்வாறிருப்பினும், பெற்றோர்கள் அனுமதித்திருந்தாலும் இளம் வயதினர் 18 வயதினை அடையும் வரைக்கும் திருமணம் செய்யமுடியாது.

18 வயது முடிந்து அவர்கள் 19 வயதிற்குள் நுழையும் போதுதான் இவர்கள் சட்டப்படி திருமணம் செய்யலாம்.

திருமணம் தொடர்பாக அதிகாரிகள் கூறுவது என்ன:

பொலன்னறுவை மாவட்டத்தில் மாத்திரமல்லாது மொனறாகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இளவயதுத் திருமணங்கள் இடம்பெறுகிறன. எனினும் இளவயதுத் திருமணங்கள் தொடர்பான உத்தியோகபூர்வப் புள்ளி விவரங்கள் எதுவும் இல்லை என மொனறாகலை மாவட்டச்செயலாளர் எம்.குலசூரிய கூறுகிறார். சிலசமயம் காவல்துறையினரிடம் இளவயதுத் திருமணங்கள் தொடர்பான விவரங்கள் இருக்கக்கூடும். ஆனால் அதுவும் முழுமையான விவரமாக இருக்காது என அவர் தொடர்ந்து தெரிவித்தார். தனது மாவட்டத்திலுள்ள பதிவாளர்கள் ஊடாக அனைத்துத் திருமணங்களையும் பதியும் முனைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது திருமணப் பதிவுக்கு வருபவர்கள் தங்களது பிறப்பு சான்றிதழ் மற்றும் தேசிய அடையாள அட்டையினைக் கொண்டுவருமாறு பணிக்கப்பட்டனர் எனவும் திரு. குலசூரிய தொடர்ந்து தெரிவித்தார். இளவயதுத் திருமணங்களினால் ஏற்படும் சட்டம் சார் சிக்கல்களை எதிர்கொள்வது குறித்து மக்களுக்குத் தெளிவினை ஏற்படுத்தும் வகையில் கிராம அலுவலர் மட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது என மொனறாகலை மாவட்ட அரச அதிபர் தொடர்ந்தார்.

இளவயதுத் திருமணங்கள் தொடர்பாக அகில இலங்கை திருமணப் பதிவாளர் சங்கத்தின் தலைவர் தலைவி கிறீதா விக்கிரமரத்தின இப்படிக் கூறுகிறார்:

2006ஆம் ஆண்டு வரைக்குமான காலப் பகுதியில் தங்களது பெற்றோரின் முழுமையான அனுமதியுடன் 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் திருமணம் செய்ய முடியும் என்ற நிலைமை இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் ஒருவர் 18 வயதினை அடைந்த பின்னர்தான் சட்டரீதியில் திருமணம் செய்யமுடியும்.இருப்பினும் குறிப்பிட்ட சில சம்பவங்களின் போது 18 வயதிலும் குறைந்த சில பெண்கள் சட்டத்திற்குப் புறம்பாகத் திருமணம் செய்து கருவுற்ற நிலையில் அவர்களைப் பொலிஸார் பதிவாளர்களிடம் அனுப்புகிறார்கள். கடந்த வாரம்கூட 18 வயதிற்கும் குறைவான பெண்ணொருவர் கருவுற்ற நிலையில் என்னிடம் வந்து திருமணப் பதிவினை மேற்கொள்ளுமாறு கோரினார். இந்த ஆண்டு டிசம்பரில்தான் இவளுக்குப் 18 வயது நிறை வடைகிறது என்றார்.

நன்றி - உதயன் இணையம்

ஒரு இனம் உரிமைக்காக குரல் கொடுத்தால் அதை அடக்க உலகம்(மற்றும் புலம் பெயர் நாம்) எவ்வளவு பணமும் என்றாலும் கொடுக்கும்

ஒரு கிராமம் உணவுக்காக குரல் கொடுத்தால் கூட அதை கண்டு கொள்ளவே மாட்டாது

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனம் உரிமைக்காக குரல் கொடுத்தால் அதை அடக்க உலகம்(மற்றும் புலம் பெயர் நாம்) எவ்வளவு பணமும் என்றாலும் கொடுக்கும்

ஒரு கிராமம் உணவுக்காக குரல் கொடுத்தால் கூட அதை கண்டு கொள்ளவே மாட்டாது

சத்தியமான வரிகள் ஜில்.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நொச்சி!

பிறக்கும் போதே பசியும் கூடவே பிறந்து விடுகிறது. அறிவு தாமதமாகத்தான் பிறக்கின்றது, சில சமயம் அது வளருவதே இல்லை. :unsure:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனம் உரிமைக்காக குரல் கொடுத்தால் அதை அடக்க உலகம்(மற்றும் புலம் பெயர் நாம்) எவ்வளவு பணமும் என்றாலும் கொடுக்கும்

ஒரு கிராமம் உணவுக்காக குரல் கொடுத்தால் கூட அதை கண்டு கொள்ளவே மாட்டாது

ஜில் அவர்களே உண்மையான வரிகள்.

தமிழினம் பல்வேறு வழிகளிலும் சிதைவுற்று வருவதையே இக்கட்டுரை உணர்த்துகின்றது. தாயகத்தை விடுவோம். அங்கு இப்போது எங்கும் பௌத்த சிந்தனாவுக்கமையப் பௌத்த சிங்களவருக்கு மட்டுமே உரிமைகளும் நியாயங்களும். ஆனால் மேற்கிலே தளம் கொண்டு பெருமையடிக்கும் தமிழினம் சார்ந்த பெண்ணிலைவாத அமைப்புகள்கூட இவற்றைக் கண்டுகொள்ளாதிருப்பது வருத்தத்திற்குரியதாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

.....

Edited by valvaizagara

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

.....

கரவு வஞ்சகம் பாக்காமல் உங்களுக்கு ஒரு பச்சைப்புள்ளி.

  • கருத்துக்கள உறவுகள்

கரவு வஞ்சகம் பாக்காமல் உங்களுக்கு ஒரு பச்சைப்புள்ளி.

நீங்கள் உண்மையிலேயே வள்ளல்தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

கரவு வஞ்சகம் பாக்காமல் உங்களுக்கு ஒரு பச்சைப்புள்ளி.

இப்படி ஒரு வஞ்சனை இல்லாத வக்கணையை இப்பத்தான் பார்க்கிறேன் கு.சா அண்ணே. :D

Edited by valvaizagara

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.