Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களில் 325 பேர் முக்கிய போராளிகள்

Featured Replies

தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களில், 325 பேர் முக்கிய போராளிகளென சிங்கள ஏடு ஒன்று தெரிவிக்கிறது

இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தும் முகாம்களில் கைது செய்யப்பட்டும் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் இயக்க சந்தேக நபர்களில், 325 பேர் முக்கிய உறுபினர்களென இனம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வு காவல்துறையினரை மேற்கோள்காட்டி கொழும்பில் இன்று வெளியான லங்கா தீப சிங்கள நாளேடு தலைப்பு செய்தியில் தெரிவிக்கிறது.

அந்த 325 பேரில் பலர் மூத்த தளபதிகளெனவும், ஆனையிறவு, பூநகரி, முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய தளபதிகள், பிரதேச பொறுப்பாளர்கள் பலர் உள்ளதாகவும் லங்கா தீப குறிப்பிடுகிறது.

விசாரணகளின்போது இனம் காணப்பட்ட இந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் தற்போது வேறு தனியான முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனைய மூவாயிரத்தி அறுநூற்றி 75 போராளிகள் மீதும் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாகவும் புலானய்வுத்துறையினரை மேற்கோள்காட்டி லங்கா தீப தெரிவிக்கிறது.

விடுதலை புலிகளின் மூத்த போராளிகளில் பலர் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்து வருகிறது. சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை இதுவரை இலங்கை அரசு வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://www.cmr.fm/thamilfm/NewClients/NewsDetail.aspx?ID=6489

  • தொடங்கியவர்

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி, பொதுவாழ்வு நீரோட்டத்தில் கலந்து திருமணமானவர்களின் கைது கிழக்கில் அதிகரிப்பு

Police arrest resettled ex-LTTE cadres in Batticaloa

[TamilNet, Tuesday, 15 February 2011, 00:29 GMT]

Tamil youths who are reported to have left the LTTE and returned to normal life after marriage are being arrested by the Sri Lanka Police in the Batticaloa district. Such arrests are said to be on the increase in Paduvaangkarai region. Tamil residents are not coming forward to make complaints to higher authorities due to fear and reprisals, civil sources said.

The SL Police and its intelligence unit are said to be collecting information about Tamil youths who have left the LTTE and leading normal life in the district. This has caused fear among the Tamil population of the district.

http://tamilnet.com/art.html?catid=13&artid=33549

  • கருத்துக்கள உறவுகள்

பெயர்களை வெளியிடாமை ஏன்?

பெயர் குறிப்பிட்டால் மிகுதி சரணடைந்தவர்களை கொலை செய்ததாகவே கருத முடியும் என்ற படியால் பெயரை வெளியிடாமல் இருக்கக்கூடும்.

  • கருத்துக்கள உறவுகள்

:unsure: பெயர் வெளியிடப்படாமைக்கு ரெண்டு காரணங்கள் இருக்கலாம்.

முதலாவது, இதுவரை கொல்லப்பட்டவர்கள் பற்றிய விபரம் தெரிந்து விடும்.

ரெண்டாவது, இனிமேல் கொல்வது கடிணமாக இருக்கும்.

325 பேர் சிங்களவருகளுக்கு முக்கியமான போராளிகள்... தமிழர்களுக்கு அனைத்து போராளிகளும் முக்கியமானவர்கள்... !

முக்கிய போராளிகளை கொலை, சாதாரண போராளிகளை கொலை எண்டு எல்லாம் வகைப்படுத்து நாங்களே என்களை கேவலப்படுத்திக்கொள்ள முடியாது...

Edited by தயா

  • தொடங்கியவர்

அண்மையில் சிங்களம் ஒருவித உடன்படிக்கைக்கு தமிழர் தரப்புடன் வர சம்மத்தித்துள்ளதாகவும் அதன்படி

  1. தமிழர் தரப்பு போர்குற்ற நீதி கேட்பினை கைவிடல் வேண்டும் என்றும்
  2. சிங்களம் அதிகார பகிர்வுக்கு உடன்படும் என்றும்
    சொல்லப்படிருந்தது.

எனவே, முடிந்தால் பெரும்பான்மை தமிழர் ஏற்கக்கூடிய ஒரு கௌரவமான அதிகார பகிர்வை முதலில் ஏற்றுக்கொள்ளலாம். மக்களையும், எமது பொருளாதாரம் - சர்வதேச அரசியல் உறவுகள் பலப்படுத்தி பின்னர் சரியான நேரம் வரும்பொழுது மீண்டும் போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணைக்கு வழி செய்யலாம்.

Edited by akootha

அண்மையில் சிங்களம் ஒருவித உடன்படிக்கைக்கு தமிழர் தரப்புடன் வர சம்மத்தித்துள்ளதாகவும் அதன்படி

  1. தமிழர் தரப்பு போர்குற்ற நீதி கேட்பினை கைவிடல் வேண்டும் என்றும்
  2. சிங்களம் அதிகார பகிர்வுக்கு உடன்படும் என்றும்
    சொல்லப்படிருந்தது.

எனவே, முடிந்தால் பெரும்பான்மை தமிழர் ஏற்கக்கூடிய ஒரு கௌரவமான ஒரு அதிகார பகிர்வை முதலில் ஏற்றுக்கொள்ளலாம். மக்களையும், எமது பொருளாதாரம் - சர்வதேச அரசியல் உறவுகள் பலப்படுத்தப்புத்தி பின்னர் சரியான நேரம் வரும்பொழுது மீண்டும் போர்க்குற்றங்கள் பற்றி சர்வதேச விசாரணைக்கு வழி செய்யலாம்.

நல்ல ஒரு கருத்து.

இதை ராஜதந்திரம் என்று சொல்லாம்.

ஆனால் எமது அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள்?

இல்லை என்று அடம்பிடித்து அழிந்து போவார்கள், அல்லது ஓம் என்று ஒப்பந்தத்தில் கைஎழுத்தை போட்டுவிட்டு காலப்போக்கில் உண்மையாகவே மன்னித்து மறந்துவிடுவார்கள்.

உள்ளே அந்த பழிவாங்கும் வெறி இருக்கவேண்டும்,

ஒரெ வேளை சிங்களவன் வேற நாட்டின் உதவியுடனும் அதிகாரத்துடனும் போர்க் குற்றத்தில் இருந்து தப்பிவிட்டான் என்றால் தீர்வும் இல்லை தண்டனையும் இல்லை.

இது ஒரு ஒப்சி மட்டும் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விசாரணை என்பது தமிழ்மக்களை மட்டும் பொறுத்தது அல்ல. உலக ஒழுங்குக்கு இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுவது சர்வதேச நாடுகளுக்கு அவசியமானது.

ஆகையால் நாம் முதலில் ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் (அவன் கொடுப்பானாக இருந்தால்). இது எமது தாயக உறவுகளை மீட்டெடுக்க உதவும்.

:unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பல தீர்வுபொதிகளை தமிழ் மக்கள் கண்டுள்ளார்கள்.சிங்களவன் தனக்கு ஏதாவது பிரச்சனை என வரும்போது தீர்வுபொதியை கையிலெடுத்து விடுவான்.இவை தான் கடந்த காலங்களில் நடந்தவை.

எமது உறவுகளை எது செய்தாவது வெளியில் எடுப்பதற்கு சிங்களவனின் தந்திர வலையில் அகப்படாமல் விட்டால் சரி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.