Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலககோப்பை துடுப்பாட்டம் 2011இல் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ள அணிகள் எவை? | நமது எதிர்பார்ப்பு / எதிர்வுகூறல்

Featured Replies

  • தொடங்கியவர்

மேலுள்ள பதிவில் சிறு தவறு உள்ளது. இலங்கை அணி குழு நிலையில் முன்னிலையில் வருவதற்கு பாகிஸ்தான் அணியிடம் அவுஸ்திரேலிய அணி தோல்வி அடையவேண்டும் அத்துடன் சிம்பாவே அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடையவேண்டும். அத்துடன் இலங்கை அணி சிம்பாவே, நியூசிலாந்து அணிகளுடனான போட்டிகளில் வெற்றியை ஈட்டுவதோடு மட்டுமல்லாது சராசரி ஓட்டவீதம் இதர அணிகளை விட அதிகமாக காணப்படவேண்டும். அதாவது, இலங்கை அணி முதலாம் நிலைக்கு வருவதற்கான சாத்தியம் மிகவும் குறைவாக உள்ளது. தற்போதைய நிலையில் குழு ஏயில் ஆரம்ப சுற்றின் இறுதியில் அவுஸ்திரேலிய அணி முன்னிலையில் வருவதற்கே அதிக சாத்தியம் உள்ளது.

ஆரம்ப சுற்றுப்போட்டியில் பல அணிகளின் முன்னணி வீரர்களிற்கு ஏற்பட்டுள்ள காயங்கள், தொடர்ந்து ஏற்படக்கூடிய காயங்கள் போட்டியின் திசையினை திசைதிருப்புவதற்கு ஏதுவாக அமையலாம்.

குழு ஏ, குழு பீ ஆகிய இரண்டு குழுக்களிலும் ஆரம்ப சுற்றின் இறுதியில் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை தீர்மானிப்பதில் சராசரி ஓட்டவீதம் முக்கிய பங்கை வகிக்கப்போகின்றது. ஏனெனில், இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணிகள் சமபுள்ளிகளை பெற்றுக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே எதிர்பார்க்கபப்பட்டது போலல்லாது தற்போதைய நிலையில் இந்தியா, தென் ஆபிரிக்கா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள், அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளில் எவை கால் இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிப்போட்டிக்கு செல்லும், அத்துடன் இறுதிப்போட்டியில் எவை விளையாடும், இறுதிப்போட்டியில் எவை வெல்லும் என்று கூறுவது கடினமாகியுள்ளது. காலநிலை தடையை ஏற்படுத்தாமல் இருக்கும் பட்சத்தில், அத்துடன் வீரர்களின் காயங்களும் தவிர்க்கப்படுமாயின் கடந்த தடவை நடைபெற்ற உலகக்கோப்பையைவிட இம்முறை போட்டி இன்னமும் சுவாரசியமானதாகவும், பரபரப்பானதாகவும் அமையும் எனவும் எதிர்பார்க்கலாம்.

  • Replies 70
  • Views 5.1k
  • Created
  • Last Reply

112838.jpg

http://www.espncricinfo.com/canada/content/player/307075.html

கனேடிய பயிற்சியாளரும் ஒரு சிங்களவர் என அறிந்தேன்.

தகவலுக்கு நன்றி நுணாவிலான்

  • தொடங்கியவர்

LBW மீள்பரிசீலனை வேண்டுகோள் இதுவரை உலககோப்பை போட்டிகளில் இடம்பெறாத தற்போதைய உலககோப்பையில் பரீட்சிக்கப்படும் புதியவிடயம். நடுவரின் தவறான LBW முடிவை மீள்பரிசீலனை செய்யும் வேண்டுகோள் அணிகளிற்கு சாதகமான அல்லது பாதகமான திருப்பத்தை போட்டியில் ஏற்படுத்தலாம். தற்போது ஓர் அணி ஓர் போட்டியில் இரு மீள்பரிசீலனை வேண்டுகோள்களை சமர்ப்பிப்பதற்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மீள்பரிசீலனை வேண்டுகோள் பல போட்டிகளில் திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், விவாதப்பொருளாகவும் உள்ளது. குறிப்பாக இங்கிலாந்து, இந்தியா அணிகளிடையே நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து வீரர் Ian Bellமீது LBW மீள்பரிசீலனை கையாளப்பட விதம் பற்றி இந்திய அணித்தலைவர் தனது கடுமையான அதிருப்தியை வெளியிட்டார். துடுப்பாடும் வீரர் விக்கெற்றில் இருந்து 2.5 மீற்றர்களிற்கு அப்பால் வெளியே நின்று விளையாடும்போது LBW மீள்பரிசீலனை கையாளப்படும் முறைக்கு இந்திய அணித்தலைவர் எதிர்ப்பை தெரிவித்தார். அதாவது 2.5 மீற்றர்களிற்கு அப்பால் நிற்கும்போது காணொளி மூலம் காண்பிக்கப்படும் பந்து விக்கெற்றை நோக்கி செல்கின்ற பாதை தவறானதாக அமையாலாம் என்று கூறப்படுவதால் அவ்வாறான நிலையில் இறுதி முடிவு ஆரம்ப தீர்ப்பை கூறிய நடுவரின் கைகளிலேயே ஒப்புவிக்கப்படுகின்றது.

சில அணிகள் தமது இரண்டு பரிசீலனை வாய்ப்புக்களை சாதகமாக பயன்படுத்தி உள்ளார்கள். சில அணிகளை அவற்றை விரயம் செய்துள்ளார்கள். எதிர்காலத்தில் குறிப்பிட்ட மீள்பரிசீலனை வேண்டுகோளின் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம். அதாவது அணி ஒன்றிற்கு போட்டியில் ஓர் மீள்பரிசீலனை வேண்டுகோளிற்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தால் மீண்டும் மீள்பரிசீலனை வேண்டுகோளை வேறோர் சந்தர்ப்பத்தில் பயன்படுத்த வாய்ப்பு கொடுக்கப்படலாம். உதாரணமாக, இரண்டு மீள்பரிசீலனை வேண்டுகோள்களிற்கு ஓர் போட்டியில் சாதமான தீர்ப்பு கிடைத்தால் மீண்டும் இன்னோர் இரண்டு மீள்பரிசீலனை வேண்கோள்களிற்கான வாய்ப்பு கொடுக்கப்படக்கூடும்.

எனைய விளையாட்டுக்கள் போலல்லாது துடுப்பாட்டம் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணமாக, அவற்றின் பிரயோகங்கள் காரணமாக மாற்றம் பெற்று வருகின்றது.

  • தொடங்கியவர்

குழு ஏயில் இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளிற்கிடையிலான போட்டியில் தடங்கல் ஏற்பட்டு இரு அணிகளிற்கும் ஒவ்வோர் புள்ளிகள் வழங்கப்பட்டது, அத்துடன் குழு பீயில் இந்திய இங்கிலாந்து அணிகளிற்கிடையிலான போட்டி சமநிலையில் நிறைவுபெற்றது.. இவை காலிறுதிப் போட்டிகள், மற்றும் ஒட்டுமொத்த போட்டியின் திசையினை மாற்றியுள்ளது. தற்போது குழு ஏயை விட குழு பீயில் கால் இறுதிப்போட்டியில் வாய்ப்பு பெறுவதற்கு மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், இங்கிலாந்து அணிகளிடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் வெற்றி பெறாவிட்டால் கால் இறுதிப்போட்டிக்கு தெரிவாக முடியாத ஆபத்து மிகவும் அதிகமாக உள்ளது. காரணம் பங்களாதேஷ் அணி தென் ஆபிரிக்கா, மற்றும் நெதர்லாந்துடனான ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெறுமாயின் ஆறு புள்ளிகளை பெற்றுக்கொள்ள முடிகின்றது. இங்கிலாந்து அணிக்கு தற்போது ஐந்து புள்ளிகளே உள்ளன.

இவ்வாறே மேற்கிந்திய தீவுகள் அணி இங்கிலாந்து அணியிடமும், இந்திய அணியிடமும் தோல்வி அடையுமாயின் அத்துடன் பங்களாதேஷ் அணி இனி நடைபெறவுள்ள இரண்டு ஆரம்ப சுற்று போட்டிகளில் ஆகக்குறைந்தது ஒன்றில் வெற்றி பெற்று அத்துடன் சராசரி ஓட்டவீதம் அதிக அளவில் காணப்பட்டால் பங்களாதேஷ் அணி கால் இறுதிக்கு செல்ல அதேசமயம் மேற்கிந்திய தீவுகள் அணி போட்டியில் இருந்து நீக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.

குழு ஏயில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து அணிகளே கால் இறுதிப்போட்டியில் விளையாட அதிக வாய்ப்பு காணப்பட்டாலும், குழு பீயில் இந்தியா, தென் ஆபிரிகா தவிர இதர எவ்வணிகள் இடம்பெறும் என்பது ஐயத்துகுரியதாக உள்ளது.

இங்கிலாந்து அணி முன்னணி வீரர்கள் இருவர் காயங்கள் காரணமாக போட்டியிலிருந்து நீக்கப்பட்டது எதிர்வரும் போட்டிகளில் இங்கிலாந்து அணியின் வெற்றி வாய்ப்பை மிகவும் பாதித்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட அணின்ட மட்டை அடி நேற்று சூப்பர் மச்சான்..!

  • தொடங்கியவர்

கனடா அணியின் ஆட்டங்களை ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது களத்தடுப்பு நன்றாக செய்தார்கள், ஆனால்.. துடுப்பாடுவதில் சோபிக்கவில்லை. குறிப்பாக பாகிஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் 185 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்கின்ற நிலையில் கனடா அணியினரால் 138 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆரம்ப துடுப்பாட்ட சோடி சகல ஆட்டங்களிலும் மோசமாக ஆடியது. 19 வயது Ruvindu Gunasekera, மற்றும் 16 வயது Nitish Kumar இற்கு பதிலாக சற்று அனுபவம் மிக்க வீரர்களை தெரிவு செய்து இருந்தால் இன்னமும் சிறந்த பெறுபேறுகள் இம்முறை உலககோப்பை போட்டியில் கனடா அணிக்கு கிடைத்திருக்ககூடும்.

தற்போது குழு ஏயில் இலங்கை, நியூசிலாந்து, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகளும் கால் இறுதிப்போட்டிக்கு செல்வது உறுதியாகிவிட்டது. முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை தீர்மானிப்பதில் இலங்கை எதிர் நியூசிலாந்து, அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான் போட்டிகள் அமையவுள்ளன.

ஏற்கனவே தெரிவாகியுள்ள இந்தியா, வாய்ப்பு ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட தென் ஆபிரிக்கா அணிகள் தவிர குழு பீயில் மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளில் எவ்வணிகள் கால் இறுதிப் போட்டிக்கு தெரிவாகும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • தொடங்கியவர்

Hussey மீண்டும் அவுஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அயர்லாந்துடனான போட்டியில் தனது மீள்வருகையின் போது 54 ஓட்டங்களை பெற்றார். பாகிஸ்தானுடனான போட்டியின்போது அவுஸ்திரேலிய அணியின் உண்மையான பலத்தை அறியக்கூடியதாக அமையும்.

தென் ஆபிரிக்க வீரர்கள் de Villiers, Imran Tahir ஆகியோரின் உடல் பாதைகள் பூரண சுகம் அடையாவிட்டால் தொடர்ந்து வரும் போட்டிகளில் தென் ஆபிரிக்க அணி மிகுந்த சிரமம் அடையக்கூடும்.

குழு ஏயை விட குழுபீயின் ஆரம்ப சுற்று போட்டிகளே மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. குழு ஏயின் முக்கிய நான்கு அணிகளான இலங்கை, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் தவிர குழு ஏயில் இடம்பெறும் இதர அணிகளான கனடா, கென்யா, சிம்பாவே அணிகளை விட குழு பீயில் உள்ள இதர மூன்று அணிகளான பங்களாதேஷ், அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள் நன்றாக விளையாடுவதே இதற்கான காரணமாக உள்ளது.

இந்தியா எதிர் இங்கிலாந்து போட்டி சமநிலையில் முடிவுற்றமை, அத்துடன் இலங்கை எதிர் அவுஸ்திரேலியா போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டமை உலககோப்பை போட்டியின் போக்கினை மாற்றியுள்ளது. வருகின்ற சனிக்கிழமை கொழும்பு பிரேமதாச மைதானத்தின் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா எதிர் பாகிஸ்தான் ஆட்டத்தின்போதும் மழை பெய்து போட்டி கைவிடக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிகின்றது. குறிப்பிட்ட ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டு இரண்டு அணிகளிற்கும் தலா ஒவ்வோர் புள்ளிகள் கிடைக்குமாயின் குழு ஏயில் அவுஸ்திரேலிய அணியே முதலாவதாக வருவதற்கு அதிகளவு வாய்ப்பு உள்ளது.

தற்போதைக்கு கால் இறுதிப்போட்டிகளிற்கு தெரிவு செய்யப்படுவதே சகல அணிகளிற்கும் முதலாவது பிரதான நோக்கமாக காணப்பட்டாலும்... குழு நிலையில் முதலாவதாக வரும் அணிகளிற்கு கால் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு ஒப்பீட்டளவில் அதிகளவில் காணப்படுவதால்.. அப்படியானதோர் வாய்ப்பை அணிகள் விரும்பவே செய்யும்.

  • கருத்துக்கள உறவுகள்

Hussey மீண்டும் அவுஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அயர்லாந்துடனான போட்டியில் தனது மீள்வருகையின் போது 54 ஓட்டங்களை பெற்றார். பாகிஸ்தானுடனான போட்டியின்போது அவுஸ்திரேலிய அணியின் உண்மையான பலத்தை அறியக்கூடியதாக அமையும்.

அது கென்னியா கூட விளையாடி 54 ஒட்டம் எடுத்தவர்.. நெதர்லாந் கூட இல்லை

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலியா, கென்யா போட்டி, எழுதும் போது தவறு ஏற்பட்டுவிட்டது.

+++

நாளை இங்கிலாந்து எதிர் மேற்கிந்திய தீவுகள். இங்கிலாந்து அணி கட்டாயமாக வெற்றி பெறவேண்டிய ஆட்டம் இது. இதில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கால் இறுதிப்போட்டியில் இடம்பெறுவதற்கு தொடர்ந்தும் அதிக வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால், இங்கிலாந்து நாளை தோல்வி அடைந்தால் இந்தியா, தென் ஆபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகளே கால் இறுதிப்போட்டியில் விளையாடும். எனவே, மிகவும் விறுவிறுப்பான ஒர் ஆட்டத்தை நாங்கள் நாளை பார்க்கக்கூடியதாக அமையும்.

இங்கிலாந்து அணியில் முக்கிய இரண்டு வீரர்கள்: தென் ஆபிரிக்காவுடனான போட்டியில் குறைந்த ஓட்டங்களுடன் நான்கு விக்கெற்றுக்களை கைப்பற்றிய Broad, மற்றைய முக்கிய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Kevin Pietersen ஆகியோர் உடல் உபாதைகள் காரணமாக போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அத்துடன் இன்னோர் முக்கிய சகலதுறை வீரர் Collingwood பூரணமாக சுகம் அடையாத நிலையில்.. நாளைய போட்டியில் அவர் விளையாடினாலும்.. மேற்கிந்திய தீவுகளை வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு அதிகமாக உள்ளதா என்பது கேள்விக்குறி.

  • தொடங்கியவர்

இன்று இங்கிலாந்து அணியில் Collingwoodம் விளையாடாத நிலையில் மூன்று முக்கிய வீரர்கள் இல்லாத நிலையில் அதிர்ட்ட வசமாக இங்கிலாந்து அணி கால் இறுதி ஆட்டத்தில் விளையாடக்கூடிய வாய்ப்பினை ஏறக்குறைய முழுமையாக பெற்றுள்ளது. இன்றைய போட்டி போலவே இந்திய அணி எதிர் மேற்கிந்திய தீவுகள் போட்டி மற்றும் தென் ஆபிரிக்கா எதிர் பங்களாதேஷ் அணிகளின் போட்டிகளும் மிகவும் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கலாம்.

தற்செயலாக மேற்கிந்திய தீவுகள் எதிர் இந்திய அணிகள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றும், அவ்வாறே பங்களாதேஷ் எதிர் தென் ஆபிரிக்கா அணிகள் போட்டியில் பங்களாதேஷ் வெற்றி பெற்றால்... சராசரி ஓட்டவீதத்தின் அடிப்படையில் இந்திய அணியே இங்கிலாந்து அணியை விட கால் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கு உறுதிப்படுத்தப்பட்ட நிலை அதிகளவில் உள்ளது.

தற்போதுள்ள நிலையில்... குழு நிலையில் குழு பீயில் கால் இறுதிபோட்டியில் விளையாடுவதற்கு தென் ஆபிரிக்கா, இந்தியா, இங்கிலாந்து அணிகளின் இடங்கள் ஏறக்குறைய முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டன. நான்காவது அணியாக இடம் பிடிப்பதில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலேயே போட்டி ஏற்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தமது இறுதி ஆட்டங்களில் இவ்விரு அணிகளும் தோல்வி அடையுமாயின் கூடிய சராரசரி ஓட்டவீத அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கே பங்களாதேஷ் அணியை விட கால் இறுதிப்போட்டியில் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

நாளை மும்பாயில் இடம்பெறவுள்ள இலங்கை எதிர் நியூசிலாந்து ஆட்டமும் பலமானதோர் போட்டியாக அமையும்.

கனேடிய அணியை பற்றி எழுதியிருந்தீர்கள் நன்றி.

கனேடிய டீமில் இடம்பெற்ற முதல் இலங்கையர் கே.எம்.சாந்திக்குமார் என நினைக்கின்றேன்.யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்.இவர் இலங்கை டீமிலும் (76 களில்) விளையாடியதாக ஞாபகம்.பின்னர் சஞ்சயன்,பஸ்டியாம் பிள்ளை முதலியோர் விளையாடினார்கள்.ஏன் பஸ்டியாம்பிள்ளையை உலகக் கோப்பைக்கு தெரிவுசெய்யவில்லை என தெரியவில்லை.போன வருடம் கூட விளையாடியதாக ஞாபகம்.

டொரொன்டோவில் முதன் முதலாக 80 களின் இறுதியில் தமிழர்களால் சென்சூரியன் அணி உருவானது.அப்போது 3 வது டிவிசனில் தொடங்கிய அவர்கள் தொடர்ந்து முதலிடத்திற்கு வந்து பிரிமியர் டிவிசனுக்கு வந்துவிட்டார்கள்.பின்னர் அதை தக்கவைக்க இந்தியாவில்,இங்கிலாந்தில் இருந்து எல்லாம் விளயாட்டுவீரர்களை வரவழைத்தார்கள்.இப்போ மல்டிகல்சரல் டீமாக மாறிவிட்டது.

  • தொடங்கியவர்

தமது கழகங்கள் வெற்றி பெறுவதற்கு வெளியாரை அழைப்பது உள்ளூரிலேயே வழமையாக நடைபெறும் விடயம். இதனால் சிலவேளைகளில் உள்ளூர் கழகங்களிற்கிடையிலான சுற்றுப்போட்டிகளில் வாக்குவாதங்கள், பிணக்குகள் ஏற்படுவது உண்டு. இந்தவகையில் சற்று எல்லை தாண்டி - நாடு கடந்து - வீரர்களை அழைப்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

+++

இன்று நியூசிலாந்து இலங்கை போட்டியில் Vettori, Mills ஆகியோர் உடல் உபாதைகள் காரணமாக விளையாடவில்லை. முக்கியமாக சகலதுறை வீரரான Vettoriஇன் பிரசன்னமின்மை போட்டியின் விறுவிறுப்பை நன்றாக குறைத்துள்ளது. தவிர, Nathan McCullum அவர்கள் மகேல ஜெயவர்த்தன அவர்களை பிடி மூலம் ஆட்டம் இழக்கச்செய்தமை மூன்றாவது நடுவர் மூலம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. நியூசிலாந்து அணியின் பதில் துடுப்பாட்டத்தின்போது மகேல ஜெயவர்த்தன அவர்கள் Nathan McCullumஐ பிடி மூலம் ஆட்டம் இழக்கச்செய்தபோதும் மூன்றாவது நடுவரின் தீர்ப்பு நாடப்பட்டமை, இதன் தொடர்ச்சியாக இவை பற்றி அணித்தலைவர்களின் கருத்துக்கள் தொடர்ந்தன. சிலவேளைகளில் மகேல அவர்கள் Nathan McCullumஅவர்களின் பிடி சரியானதாக அமைந்து ஆட்டம் இழந்தவராக கருதப்படின் இன்று போட்டியின் திசை மாற்றி நியூசிலாந்து அணி வெற்றி பெற்று இருக்கவும் வாய்ப்பு காணப்பட்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களின் பலம் போதுமானதாக தெரியவில்லை. நியூசிலாந்துடனான போட்டியில் மிகவும் சிரமப்பட்டு உள்ளார்கள். இலங்கை அணியின் பந்துவீச்சாளர் மலிங்கவின் பந்துப்பரிமாற்றமும் திருப்திகரமாக அமையவில்லை. மேற்கண்ட குறைகள் தொடருமாயின் இலங்கை அணி கால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றாலும் அரையிறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் கடினமாக அமையலாம்.

தற்போதுள்ள நிலமையில்..

ஏற்கனவே எதிர்வு கூறியதுபோல் துல்லியமாக கள நிலமைகள் அமையாவிட்டாலும்..

போட்டி இலக்கங்கள், ஆடுகளங்கள் வேறுபட்டாலும்.. அரையிறுதிப்போட்டிகளின் ஒன்றில் தென் ஆபிரிக்கா அணி இலங்கை அணியை எதிர்கொள்ளவும், இவ்வாறே மற்றைய அரையிறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியா அணி இந்திய அணியை எதிர்கொள்ளவும் அதிக வாய்ப்பு உள்ளது. இங்கு மாறுபாடாக அமையக்கூடிய விடயம் தென் ஆபிர்க்கா இலங்கை அரையிறுதிப்போட்டி இலங்கையில் அல்லாது இந்தியாவிலும், அவுஸ்திரேலியா எதிர் இந்தியா அரையிறுதிப்போட்டி இந்தியாவில் அல்லாது இலங்கையிலும் விளையாடப்பட அதிக சாத்தியம் உள்ளது.

130175.jpg

தரவு மூலம்: cricinfo.com, நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய அணியை பற்றி எழுதியிருந்தீர்கள் நன்றி.

கனேடிய டீமில் இடம்பெற்ற முதல் இலங்கையர் கே.எம்.சாந்திக்குமார் என நினைக்கின்றேன்.யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்.இவர் இலங்கை டீமிலும் (76 களில்) விளையாடியதாக ஞாபகம்.பின்னர் சஞ்சயன்,பஸ்டியாம் பிள்ளை முதலியோர் விளையாடினார்கள்.ஏன் பஸ்டியாம்பிள்ளையை உலகக் கோப்பைக்கு தெரிவுசெய்யவில்லை என தெரியவில்லை.போன வருடம் கூட விளையாடியதாக ஞாபகம்.

டொரொன்டோவில் முதன் முதலாக 80 களின் இறுதியில் தமிழர்களால் சென்சூரியன் அணி உருவானது.அப்போது 3 வது டிவிசனில் தொடங்கிய அவர்கள் தொடர்ந்து முதலிடத்திற்கு வந்து பிரிமியர் டிவிசனுக்கு வந்துவிட்டார்கள்.பின்னர் அதை தக்கவைக்க இந்தியாவில்,இங்கிலாந்தில் இருந்து எல்லாம் விளயாட்டுவீரர்களை வரவழைத்தார்கள்.இப்போ மல்டிகல்சரல் டீமாக மாறிவிட்டது.

சாந்திக்குமார் யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனின்.... துடுப்பாட்டப் போட்டியை பற்றிய விமர்சனமும், எதிர்வு கூறலும் நன்றாக உள்ளது. தொடருங்கள்..... :)

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

நமக்கு தெரியாமல் பல தமிழர்கள் கனேடிய துடுப்பாட்ட அணியின் வளர்சிக்கு பங்களித்தும், பங்களித்துக்கொண்டும் இருக்கலாம். இலங்கையில் பிறந்து வளர்ந்து துடுப்பாடிய வீரர்களிற்கு கனேடிய அணியில் விளையாடுவதற்கு கனடாவில் பிறந்தவர்களை விட வாய்ப்பு அதிகமாக உள்ளதுபோல் தெரிகின்றது.

+++

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகள் நியூசிலாந்துடனான போட்டியில் வெற்றி பெற்றன. ஆனால், பாகிஸ்தானுடனான போட்டியில் தோல்வி அடைந்துள்ளன. எனினும், பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அனியிடம் 110 ஓட்டங்களினால் தோல்வி அடைந்தது. அதாவது பாகிஸ்தான் அணியின் பலம் கேள்விக்குறியாகவே உள்ளது. குழு நிலையில் முதலாவதாக வந்தாலும் குழு ஏயில் உள்ள ஏனைய மூன்று அணிகளை விட பாகிஸ்தான் அணி பலமானது என்று கூறுவதற்கு இல்லை. இன்று அவுஸ்திரேலியாவுடனான போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவி இருந்தால் குழு ஏயில் நான்காம் இடத்தையே பெற்று இருக்கமுடியும்.

அவுஸ்திரேலிய அணித்தலைவர் Pontingன் இடதுகைவிரலில் காயம் ஏற்பட்டு இன்னமும் பூரண சுகம் அடையவில்லை. இது அவரது அண்மைய ஆட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானுடனான இன்றைய போட்டியில் ஏற்பட்ட தோல்வி அவுஸ்திரேலிய அணி கால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுமா என்பதில் சந்தேகத்தை தருகின்றது.

இங்கிலாந்து அணி குழு பீயின் பிரதான அணிகளான தென் ஆபிரிக்கா, மேற்கு இந்திய தீவுகளை வெற்றி கொண்டது. இந்தியாவுடனான போட்டியில் அது சமநிலை அடைந்தது. ஆனால், அயர்லாந்து, பங்களாதேஷ் அணிகளிடம் தோல்வி அடைந்தது. அதாவது, கால் இறுதிப்போட்டியில் பெரும்பாலும் இலங்கை அணியை எதிர்கொண்டாலும் இலங்கை அணியினால் இங்கிலாந்து அணியை இலகுவாக வெற்றி கொள்ளக்கூடியதாக அமையும் என்று கூறுவதற்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இந்தியா மேற்கிந்திய தீவை வெற்றி கொண்டால் காலிறுதியில் அவுஸ்திரேலியாவுடன் மோத வேண்டும்.. இந்தியா மேற்கிந்தியதீவுடன் தோற்குமிடத்து காலிறுதியில் இலங்கையுடன் இந்தியாவில் மோத வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாப்ஸ் உங்கள் விமர்சனம் ஆக்கபூர்வமாக உள்ளது.தொடருங்கள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய பாகிஸ்தான் வெற்றியில் உள்ள பெரிய சந்தோசம் ஒன்றில் இந்திய வீட்டை போகும் --ஆஸ் விளையாடுவர்ர்கள் என்று நம்புவோம், இல்லாட்டி எங்க சிங்கள அண்ணைமார் போவினம்..ஓரள் கட்டாயம்...

சாந்திக்குமார் மத்தியகல்லூரி.எனது நண்பரும் கூட.இவரும் யாழ் இந்து பழைய மாணவராகிய ரூபன் சிவனடியானும் கோஸ்டா ரிக்காவில் நடைபெறும் ஒரு 6 நாடுகளுக்கிடையிலான போட்டிகளுக்கு மத்தியஸ்தம் வகிக்க போகின்றார்கள்.அதைவிட கனேடிய செலக்சன் கொமிட்டியில் சஞ்சஜன் இருக்கின்றார்.நிர்வாக அமைப்பில் கோபு இருக்கின்றார்.கனடாவந்த புதிதில் இவர்கள் அனைவருடனும் நானும் கிரிக்கெட் ஆடினேன்.

இப்போது கனேடிய அணியில் ஒரு தமிழரும் இல்லை ஆனால் பெண்கள் அணியில் மொன்றியலை சேர்ந்த ஒரு தமிழ்பென் இருக்கின்றார்.பெயர் தர்மினியாக இருக்கவேண்டும்.

இன்று இந்தியா மேற்கு இந்திய தீவுகளை வெல்ல,

இலங்கை இங்கிலாந்துடனும்,இந்தியா அவுஸ்திரேலியாவுடனும்,பாகிஸ்தான் மேற்கிந்திய தீவுகளுடனும்,சவுத் ஆபிரிக்கா நியுசீலந்துடனும் மோதும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் நீங்கள் சொல்லுபவரை (சாத்திகுமார்) தெரியும் என்று நினைக்கிறன்..மெல்லிய "சிவலை" ஆள்..70 - 75 விளையாடி இருப்பார் என்று நினைக்கிறன். அவருக்கு ஒரு தமையனும் இருக்க வேண்டும் 1970 கப்டன் பண்ணி இருக்க வேண்டும்..இல்லாட்டி இவர்தான் அவரோ தெரியாது. மற்றும்படி சென்ரல் சென்ஜோன்சுடன் oneday மேட்ச் இல் தோத்துப்போட்டுதாம்.. பாவம் தானே எல்லா நேரமும் நாங்கள் வெல்ல ஏலாது தானே..தொடர்ந்து தோத்தால் வாரமுறை வரமாட்டாங்கள்..:(..... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கிந்தியாத்தீ தோல்விக்கு காரனம்

மேற்கிந்தியாத்தீ கடைசி நேரத்தில் பரிதாவமாய் தோல்வி அடையிது..வெற்றிக்கு கிட்டப் போய் பிறக்கு தோல்வியை சந்திக்கிது.. :(

இப்படி பாக்கிஸ்தான் கூட விளையாடனும் , இவைக்கு தோல்வி தான்.. :rolleyes::unsure:

பிண்னனி மட்டையடி வீரர்கள் அணியை வெற்றி அடைய செய்ய தவரிட்டினம்.. <_<

கூட இந்த தோல்விக்கு முக்கிய காரனம் மேற்கிந்தியாத்தீ விக்கேட் கீப்பர் தான்.. :rolleyes:

இவர் இந்த உலக்க கோப்பையில் 20 ஒட்டத்தை கூட தான்ட வில்லை அவர் விளையாடின 6விளையாட்டில் :( இதுவும் அவேன்ட தோல்விக்கு ஒரு காரனம்...

  • தொடங்கியவர்

குழு ஏயில் மோதி கால் இறுதிக்கு தெரிவான அணிகளான அவுஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் கால் இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்றும், இவ்வாறே இலங்கையும் நியூசிலாந்தும் வெற்றி பெற்றும் மீண்டும் அரையிறுதிப்போட்டியில் ஒன்றை ஒன்று எதிர்கொண்டால் மிகவும் சுவாரசியமாக அமையும்.

அதாவது..

அரையிறுதி ஒன்று: பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

அரையிறுதி இரண்டு: இலங்கை எதிர் நியூசிலாந்து

இவ்வாறே குழு பீயில் மோதி கால் இறுதிக்கு தெரிவான அணிகளான இந்தியாவும், மேற்கிந்திய தீவுகளும் கால் இறுதியில் வெற்றி பெற்றும்.. இவ்வாறே இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் வெற்றி பெற்றும் மீண்டும் அரையிறுதிப்போட்டியில் ஒன்றை ஒன்று எதிர்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதாவது..

அரையிறுதி ஒன்று: மேற்கிந்திய தீவுகள் எதிரி இந்தியா

அரையிறுதி இரண்டு: தென் ஆபிரிக்கா எதிர் இங்கிலாந்து

கால் இறுதிப்போட்டிகளின் முடிவில் அரையிறுதிக்கு தெரிவாகும் அணிகளில் எத்தனை குழு ஏயை சேர்ந்தவை, எத்தனை குழு பீயை சேர்ந்தவை எனும் அடிப்படையில் உண்மையில் பலத்தின் அடிப்படையில் குழு ஏ, குழு பீ அணிகள் உலக கோப்பை போட்டியில் சரியாக வகுக்கப்பட்டு உள்ளனவா எனவும் ஊகம் செய்யக்கூடியதாக அமையும். மேலோட்டமாக பார்க்கும் போது குழு ஏ குழு பீயை விட வலுவான அணிகள்போல் தெரிகின்றது.

மேற்கிந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடினால் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு அதிகம் என்று நினைக்கின்றேன். பாகிஸ்தான் அணித்தலைவரின் பந்துவீச்சு இம்முறை பாகிஸ்தான் அணியின் வெற்றிகளில் பாரிய பங்கு வகித்துள்ளது. இவ்வாறே சகலதுறை ஆட்டக்காரர்களான இலங்கை டில்சான், மத்தியூஸ் இந்தியா யுவராஜ், நியூசிலாந்து அணியின் NL McCullum, அவுஸ்திரேலியா Watson, தென் ஆபிரிக்கா Kallis ஆகியோரின் பங்கு அந்தந்த நாடுகளின் அணிகளின் வெற்றிக்கு அளப்பரியது.

இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் உலக கோப்பை துடுப்பாட்டம் 2011 புள்ளிவிபரம்:

16290518.png

தரவு மூலம்: cricinfo.com

93932793.png

தரவு மூலம்: cricinfo.com

குழு ஏயில் மோதி கால் இறுதிக்கு தெரிவான அணிகளான அவுஸ்திரேலியாவும், பாகிஸ்தானும் கால் இறுதிப்போட்டிகளில் வெற்றி பெற்றும், இவ்வாறே இலங்கையும் நியூசிலாந்தும் வெற்றி பெற்றும் மீண்டும் அரையிறுதிப்போட்டியில் ஒன்றை ஒன்று எதிர்கொண்டால் மிகவும் சுவாரசியமாக அமையும்.

அதாவது..

அரையிறுதி ஒன்று: பாகிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா

அரையிறுதி இரண்டு: இலங்கை எதிர் நியூசிலாந்து

இவ்வாறே குழு பீயில் மோதி கால் இறுதிக்கு தெரிவான அணிகளான இந்தியாவும், மேற்கிந்திய தீவுகளும் கால் இறுதியில் வெற்றி பெற்றும்.. இவ்வாறே இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் வெற்றி பெற்றும் மீண்டும் அரையிறுதிப்போட்டியில் ஒன்றை ஒன்று எதிர்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதாவது..

அரையிறுதி ஒன்று: மேற்கிந்திய தீவுகள் எதிரி இந்தியா

அரையிறுதி இரண்டு: தென் ஆபிரிக்கா எதிர் இங்கிலாந்து

கால் இறுதிப்போட்டிகளின் முடிவில் அரையிறுதிக்கு தெரிவாகும் அணிகளில் எத்தனை குழு ஏயை சேர்ந்தவை, எத்தனை குழு பீயை சேர்ந்தவை எனும் அடிப்படையில் உண்மையில் பலத்தின் அடிப்படையில் குழு ஏ, குழு பீ அணிகள் உலக கோப்பை போட்டியில் சரியாக வகுக்கப்பட்டு உள்ளனவா எனவும் ஊகம் செய்யக்கூடியதாக அமையும். மேலோட்டமாக பார்க்கும் போது குழு ஏ குழு பீயை விட வலுவான அணிகள்போல் தெரிகின்றது.

1996 உலகக் கிண்ணப் போட்டியில் இவ்வாறு தான் ஒரே அணியில் இருந்த இந்தியா, இலங்கை, அவுஸ்திரெலியா, மேற்கிந்தியா தீவுகள் காலிறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு சென்றன.

  • தொடங்கியவர்

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள இலங்கை எதிர் இங்கிலாந்து கால் இறுதிப்போட்டியில் மழை பெய்வதற்கு சாத்தியம் உள்ளதாக தெரிகின்றது. குறிப்பிட்ட போட்டி தற்செயலாக மழை காரணமாக கைவிடப்பட்டால், போட்டி சரத்துக்களின் பிரகாரம் குழு நிலையில் இரண்டாவதாக முன்னிலையில் உள்ள இலங்கை அணியே குழு நிலையில் மூன்றாவதாக உள்ள இங்கிலாந்து அணியை நீக்கம் செய்து அரையிறுதிப்போட்டியில் விளையாடும். இலங்கை அணி கால் இறுதியில் வெற்றி பெற்றால் அரையிறுதிப்போட்டியையும் பிரேமதாச மைதானத்திலேயே விளையாடும்.

இவ்வாறே, பங்களாதேஷில் நடைபெறவுள்ள தென் ஆபிரிக்கா எதிர் நியூசிலாந்து கால் இறுதிப்போட்டியில் தற்செயலாக மழை காரணமாக ஆட்டம் முடிவின்றி கைவிடப்பட்டால் குழு நிலையில் முதலாவதாக உள்ள தென் ஆபிரிக்க அணியே கொழும்பு பிரேமதாச அரங்கில் நடைபெறும் அரையிறுதிப்போட்டியில் இலங்கை அல்லது இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடும்.

பல முன்னணி வீரர்களிற்கு இந்த 2011 உலகக்கோப்பையே கடைசி உலக கோப்பையாக அமையவுள்ளது. ஒருசிலர் தவிர ஏனையோர் உத்தியோகபூர்வமாக அறிவிக்காவிட்டாலும்.. உடல் உபாதைகள் காரணமாக பல முன்னணி வீரர்கள் தொடர்ந்து விளையாடக்கூடியதாக அமையப்போவதில்லை.

அடுத்துவரும் 2015ம் ஆண்டு 50ஓவர் துடுப்பாட்ட உலககோப்பை போட்டியில் விளையாடும் அணிகளில் தற்போது இளையவர்களை அதிகளவில் கொண்ட அணிகளின் வீரர்கள் மீண்டும் விளையாட வாய்ப்பு உள்ளது. அதாவது, அதிகளவு இளையவர்களை கொண்ட பங்களாதேஷ் அணி அடுத்த உலககோப்பையில் மிக நன்றாக விளையாடும் என எதிர்பார்க்கலாம்.

2015ம் ஆண்டு துடுப்பாட்ட உலககோப்பை அவுஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் நடைபெறவுள்ளதாக தெரிகின்றது. இங்கு 14 அணிகளிற்கு பதிலாக பத்து அணிகளே இடம்பெறவுள்ளன. இம்முறை பங்குபற்றிய நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, கென்யா ஆகிய நாடுகள் 2015ம் ஆண்டு துடுப்பாட்ட உலககோப்பையில் விளையாடும் வாய்ப்பை இழக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

உலக கோப்பை அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நான்கு முறை (1992, 96, 99, 2003) மோதியுள்ளன. இவற்றில் இந்தியா எல்லாமுறையும் பாகிஸ்தானை வென்றுள்ளது. இம்முறையும் இவ்விரு அணியும் அரை இறுதியில் சந்திக்க வாய்ப்பு நிறையவே உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.