Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடாபியை விசாரிக்கும் சர்வதேச போர்குற்ற நீதிமன்றம்.. ராஜபக்சவை விசாரிக்காதது ஏன்..?!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த மாதத்தில் இருந்து லிபியாவில் ஆட்சிமாற்றம் வேண்டி நிகழ்ந்து வரும் புரட்சியின் போது கடாபி சில நூறு பொதுமக்களை படுகொலை செய்தார் என்பதற்காக அவர் மீது குற்றவியல் விசாரணை நடத்தப் போவதாக சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்று அறிவித்துள்ளது.

ஐ நா கணிப்பீட்டின் படி 7000 க்கும் அதிகம் பொதுமக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் நடந்த போர் குற்றம் பற்றி ராசபக்ச மற்றும் அவரின் உறவினர்கள் மற்றும் படை தளபதிகள் மீது சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்தும் அதே சர்வதேச போர் குற்ற நீதிமன்றும் சர்வதேச சமூகமும் உடனடி விசாரணை நடத்தாமல் இழுத்தடிப்பதும் ஏன்..??!

தமிழர் தரப்பில் ஒரு பகுதியினர் இவற்றை தொடர்ந்து சுட்டிக்காட்டிய போதும் கடாபி விடயத்தில் இவ்வளவு துரிதம் காட்டும் சர்வதேசம் தமிழர்கள் விடயத்தில் மெத்தனப் போக்கை கடைப்பிடிப்பதும் ஏன்.

லிபியாவில்.. கிளர்ச்சிக்காரர்கள் சர்வதேச ஆதரவை வேண்டி நிற்கின்ற போதும் சர்வதேசப் படைகளின் உதவியை வேண்டாத போதும்.. அவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்ற போதும் அதை அரசுக்கு எதிரான கிளர்ச்சி என்று காண்பதோடு பயங்கரவாதம் என்று அடையாளப்படுத்தாத உலகம்... தமிழர்களின் அரசுக்கு எதிரான கிளர்ச்சியை மட்டும் பயங்கரவாதமாக காட்டியதும் ஏன்..????!

கடாபி போன்ற போர் குற்றவாளிகளின் நேரடி உதவியோடு ராஜபக்ச மேற்கொண்ட மனிதப் படுகொலைகள் தொடர்பில் வெளிப்படையான ஆதாரங்கள் இருந்தும் அவற்றை சர்வதேச நீதிமன்றம் கருத்தில் எடுக்காதது ஏன்..???!

சர்வதேச சமூகமும் அதன் நீதித்துறையும் எனியாவது பாரபட்சம் காட்டாமல்.. தமிழர்களுக்கும் நீதி கிடைக்க.. சிறீலங்கா அரசை உடனடியாக போர் குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தமிழர்கள் தாம் விரும்பும் வடிவில் சுதந்திரமான வாழ உதவி அளிக்க வேண்டும். தமிழர்கள் சர்வதேசத்தின் எந்த வகையான உதவிகளையும் பெற தயாராக இருப்பதோடு பூரண ஒத்துழைப்பையும் அதற்கு அளிப்பார்கள்.

இதனை தமிழ் மக்களும் உறுதி செய்து சர்வதேசத்துக்கு சொல்வதோடு சர்வதேசத்திடம் நீதி கேட்டு சிறீலங்கா மீது போர் குற்ற விசாரணையை வலியுறுத்தி லிபிய மற்றும் இதர ஆட்சிமாற்றம் விரும்பும் மக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டங்களை சர்வதேச தலைநகரங்களில் முன்னெடுக்க வேண்டும். தமிழர்களின் பிரச்சனை விருப்பை.. சர்வதேசத்துக்கு தெளிவாகவும் உறுதியாகவும் இனங்காட்டும் போதே சர்வதேசதும் ஆணித்தரமான முடிவுகளை எடுக்க முடியும்.

தமிழா நீ எனியும் தூங்கிக் கிடந்தால்.. விடிவு என்பது உனக்கு என்றும் இல்லாததாகி விடும். இழப்புக்களே மிச்சமாகி இருக்கும். சிங்களவனோடு ஒன்றி வாழலாம் என்ற கனவை தகர்த்து உறக்கத்தில் இருந்து எழுந்து வாருங்கள் தமிழர்களே.

நாடு கடந்த அரசு போன்ற அமைப்பு மற்றும் தமிழக, புலம்பெயர் அமைப்புக்கள்.. இது விடயத்தில் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கக் கூடாது. காலத்தின் மாற்றங்களோடு சர்வதேசத்தின் புதிய அணுகுமுறைகளோடு எம்மை இணைத்துக் கொள்ளத்தக்க வகையில் நாம் செயற்படாமல் கிடப்பின் நாமே நமக்கு புதைகுழிகளை தோண்டுவதாக அமைந்து விடும். குறிப்பாக இளையோர் அமைப்புக்கள் இது விடயத்தில் கவனமெடுத்து இதர பல்கலைக்கழக மாணவர்களின் விருப்போடு எமது விருப்பையும் ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னெடுத்து சர்வதேத்தை வலியுறுத்தி நிற்பதோடு அவர்கள் நடவடிக்கைகள் எடுக்க உதவியும் கோரி நிற்க முடியும்.

Libya revolt: Gaddafi in crimes against humanity probe

Muammar Gaddafi - 2 March Col Gaddafi has said he will fight to the death

Continue reading the main story.

The chief prosecutor of the International Criminal Court has said he will investigate Libyan leader Muammar Gaddafi, his sons and senior aides for crimes against humanity.

Luis Moreno-Ocampo said no-one had the right to massacre civilians.

Thousands of people are thought to have died in the violence after security forces targeted protesters in unrest which began on 17 February.

Col Gaddafi vowed to fight on despite losing control of much of the country.

http://www.bbc.co.uk/news/world-africa-12636798

Edited by nedukkalapoovan

எமக்கு முன்னால் உள்ள தெரிவும், தேவையும், பதிலும் ஒன்றே ஒன்றாகத்தான் இருக்கமுடியும்: சர்வதேச மாற்றங்களை எமது இன விடிவுக்காக ஒற்றுமையாக பயன்படுத்தி வெற்றிகாண்பது.

லிபியா ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) அங்கத்துவ நாடு அல்ல, இலங்கை போன்று. அதையும் மீறி சர்வதேசம் விரைவாக இந்த நடவடிக்கை எடுப்பதற்கு ஒரே காரணம்: லிபிய இரத்தத்தில் மசகு எண்ணெயும் உள்ளது.

இந்த உலக அணுகுமுறையில் குறைகளை விட சாதக மாற்றங்களையே நாம் கவனத்தில் எடுத்தல் வேண்டும். அமெரிக்கா இன்று பாராளுமன்றம் (காங்கிரஸ்). செனட் என பல வழிகளிலும் சிங்களம் மீது அழுத்தத்தினை பிரயோக்கின்றது. தமிழர் தரப்பும் இந்தியா, சீனா போன்ற சிங்கள ஆதரவு நாடுகளையும் எமது பக்கம் திருப்பி அதன் மூலம் ஒரு விடிவை காண்பதே இன்றைய வரலாற்று தேவை ( தென் சூடான் போன்று ஒரு கணக்கெடுப்போ இல்லை கனடா போன்று ஒரு மாநில சுயாட்சியோ பெற்றால் அதுவே வெற்றியாக அமையும்)

Edited by akootha

சர்வதேசத்தின் கேள்வி:

எந்த இனம் படுபாதகமாக படுகொலை செய்யப்பட்டதோ அந்த தமிழினத் தலைவன் கருணாநிதி, ராஜபக்சேவை ஒரு போர்க்குற்றவாளியாக அறிவிக்காதது ஏன்? இந்தியா இலங்கை இந்த இரு நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளின் ஒட்டுமொத்த கேள்வியும் இது தானே....?

ஈவு இரக்கமின்றி பாலியல் வல்லுறவு, கடத்தல்கள், படுகொலைகள் செய்து தமிழர்களை அழித்ததோடு ஒழுக்கம் நிறைந்த கட்டுக்கோப்பான புலனாய்வு ராணுவ கட்டமைப்புக்களை கொண்ட உலகின் பலம் வாய்ந்த மாபெரும் விடுதலை இயக்கத்தையே நயவஞ்சகர்களின் துணை கொண்டு களத்திலே ராஜபக்ஷே தோற்கடித்தான் என்றால் அவன் எவ்வளவு பெரிய அசுர பலம் வாய்ந்த ஒரு சிங்கள பௌத்த மூர்க்கத் தனமான முரட்டுத் தனமான ஒரு இனவெறித் தலைவனாக இருக்க வேண்டும்.....என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் தேவையில்லை..... சில பலம் வாய்ந்த கேப்மாரிகள் இந்த அசிங்கமான ராஜபக்ஷேவை தாங்கி பிடிக்கின்றன....யானையை விழுத்துவது கடினம் தான் விழுந்தால் எழுவதும் கடினம் தான்.....

ஒரு முடிச்சை அவிழ்த்தால் பல முடிச்சுக்கள் தானாக அவிழும்....அந்த முடிச்சு தமிழனுக்கான அரசியல் பலத்திலே உள்ளது...தமிழனுக்கான அந்த அரசியல் மாற்றம் தமிழகத்தில் இருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும், அதுவே சாத்தியமும் கூட....நாம் விரும்பும் மாற்றம் எவ்வளவு விரைவில் என்பதைப் பொறுத்தே நாம் விரும்பும் வெற்றியும்....

  • கருத்துக்கள உறவுகள்

கடாபியை விசாரிக்கும் சர்வதேச போர்குற்ற நீதிமன்றம்.. ராஜபக்சவை விசாரிக்காதது ஏன்..?!

யாரும் விஜய நம்பியாருக்கு எதிரா கேஸ் போடற மாதிரி தெரியல?? :(

sad.jpg

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப்பார்த்தால்

தற்போது லிபியாவில் நடப்பதற்கும் முள்ளிவாய்க்காலுக்கும் ஒரு தொடர்பைக்காணலாம்.

தற்போது லிபியாவில் மக்கள் அழிவைத்தடுக்க விரையும் அமெரிக்காவும் பிரித்தானியாவும் முள்ளிவாய்க்காலிலும் இதுபோல் செய்ய வெளிக்கிட்டது நாம் அறிந்ததே. ஆனால் இவர்களை சமாளித்து தாததப்படுத்தியபடி சிங்களவனுக்கு ஊக்கம் கொடுத்து அழிவைச்செய்ய அவசரப்படுத்தியது இந்தியா என்பது புலப்படும்.

அன்று முள்ளிவாய்க்காலில் நடந்த அவலம் நிறைவுபெற்று இன்னும் இரண்டு வருடங்கள் பூத்தியாகவில்லை. அதற்குள் இன்று லிபியாவில் நடக்கும் நிகழ்வுகள் மூலம்;

மீண்டும் எமது மக்கள் மீதான அரச படுகொலைகளை நினைவுபடுத்தவும்;

ஒரு சுயாதீன முழுமையான விசாரணையை சர்வதேசம் ஏற்படுத்தவும்;

குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றததில் நிறுத்தவும்;

வழிகள் அமைத்து தரப்படும் சந்தர்ப்பங்கள் தரப்பட்டுள்ளன.

இவற்றை பயன்படுத்தி இன்றைய தலைமுறை ஒரு விடுதலையை எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முயற்சிக்கவேண்டும். தவறினால், அடுத்த தலைமுறை எம்மை நிச்சயம் கோவித்துக்கொள்ளும்.

லிபியாவில் எண்ணெயிருக்கு, சிறிலங்காவில் என்னயிருக்கு?

  • கருத்துக்கள உறவுகள்

லிபியா விடயத்தில் இந்தியா சீனா உட்பட இலங்கையின் நட்பு நாடுகள் மௌம் சாதிப்பது கிளற வெளிக்கிட்டால் தாங்களும் சிறிலங்காவின் போர்க் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது வெளிப்படும் என்பாதல்தான்.நாடு கடந்த அரசுக்கும் புலம் பெயர்ந்த அமைப்புக்களும் செயற்பட வேண்டிய அருமையான தருணம் இது.ஒன்று பட்ட சர்வ தேசத்திற்கு அழுத்தம் கொடுக்க உலகத் தமிழினத்திற்கு அழைப்பு விடுங்கள். தென் இந்தியாவில் தேர்தல்கள் நடைபெறவிருப்பதால் அதுவே போராட்டத்திற்கு சரியான தருணம்.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தின் கேள்வி:

எந்த இனம் படுபாதகமாக படுகொலை செய்யப்பட்டதோ அந்த தமிழினத் தலைவன் கருணாநிதி, ராஜபக்சேவை ஒரு போர்க்குற்றவாளியாக அறிவிக்காதது ஏன்? இந்தியா இலங்கை இந்த இரு நாடுகளைத் தவிர அனைத்து நாடுகளின் ஒட்டுமொத்த கேள்வியும் இது தானே....?

---------

தமிழினத் தலைவன் கருணாநிதி என்று நீங்கள் தான் சொல்கிறீர்கள்.

அவரின் ஆட்சியிலுள்ள அமைச்சர் பாலு, மகள் கனிமொழி எல்லோரும் கொழும்பிற்கு வந்து மகிந்த ராஜபக்ஸவிற்கு பொன்னாடை போர்த்தியதையும். யாழ் நூலகத்தில் நடந்த கூட்டத்தில் கேள்விகள் கேட்ட பல்கலைக்கழக மாண்வர்களை கடிந்து கொண்டதையும், போன மாதம் பாலுவிற்கு சொந்தமான படகுகளில் வடபகுதி வரை வந்து யாழ் மீனவர்களின் மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்தையும் பார்க்க... இவர்கள் தமிழின விரோதிகள் என்பது புரியும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.