Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு வேற்று கிரக வாசிகள் வருகிறார்கள் போகிறார்கள்: இலண்டன் டெயிலி மெயில் தகவல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வேற்று கிரக வாசிகள் வருகிறார்கள் போகிறார்கள்: இலண்டன் டெயிலி மெயில் தகவல்.

[Thursday, 2011-03-03 17:29:57]

இலங்கைக்கு வேற்றுக்கிரக வாசிகளின் நடமாட்டம் இருப்பதாக இங்கிலாந்து விமானபடை அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி டெயிலி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் தெரிவித்திருப்பதாவது,

இலங்கைக்கு வேற்றுகிரகவாசிகள் வந்து செல்வதற்கான ஆதாரங்கள் பல வருடங்களுக்கு முன்பே கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற இங்கிலாந்து விமானப்படை அதிகாரியொருவரே குறித்த தகவலை தெரிவித்ததுடன் அதற்கு ஆதாரமாக 2004ம் ஆண்டில் அவர் இலங்கையில் எடுத்த புகைப்படமொன்றை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறித்த புகைப்படத்தில் வட்டவடிவிலான பறக்கும் தட்டொன்று தென்படுவதுடன், இளஞ்சிவப்பு, வெள்ளை மற்றும் கிறீம் வர்ணங்களைக் கொண்டதாக அது தென்படுகின்றது. அதன் மேற்புறப்பரப்பு இளஞ்சிவப்பு வர்ணத்தில் பளபளத்ததாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தனது சேவை முடிந்து இங்கிலாந்து திரும்பிய பின் தான் எடுத்திருந்த பறக்கும் தட்டின் புகைப்படத்தை தனது முன்னைய விமானப்படை அதிகாரிகளுக்கு அனுப்பியிருப்பதாக இங்கிலாந்தின் டெயிலி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

seithy.com

What was UFO sighting in Sri Lanka?

Classified files released by the National Archives have revealed an RAF officer had a close encounter while on holiday in Sri Lanka.

The man took images of the UFO which were found in declassified papers held by the Ministry of Defence.

Dr David Clarke, author of The UFO Files and senior lecturer in journalism from Sheffield Hallam University, said more UFO sightings happen when Hollywood films are made about aliens.

http://www.bbc.co.uk/news/science-environment-12631970

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வேற்று கிரக வாசிகள் வருகிறார்கள் போகிறார்கள்: இலண்டன் டெயிலி மெயில் தகவல்

ஒரு விளம்பரம் ?? ^_^

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதானே.........

இந்தியாவிலிருந்து குரங்குகள் அடிக்கடி வந்து போகின்றனவே...... :lol::D:D

seithy.com

சுத்த விளம்பரம்ய்யா!

காசுக்காக..... தானும் தன்டபாடுமாய் இருந்த அப்பாவி குடும்பங்களைநேபாம் குண்டுகள் போட்டு கூண்டோடு எரித்தவர் சொல்லுறார் கேளுங்கோ.....

நாளைக்கு எங்கட சோறுகளின்ட வெப்சைட்டுகளில் கண்னும் காதும் வைத்து தலையங்கமாக வரும் பாருங்கோ...

Edited by Panangkai

இதைச் சாட்டாக வைத்தே இலங்கையில் நடந்த உயிர் இழப்புகளுக்கு முக்கிய காரணம் வேற்றுக்கிரகவாசிகளின் தலையீடே... அதனால் போற்குற்ற விசாரணைகளை கைவிடுங்கள் என்று மஹிந்த & கோ சொன்னாலும் ஆச்சரியப்பட இல்லை :rolleyes:

---

http://www.metro.co.uk/news/857076-ufos-alien-invaders-and-a-student-prank-revealed-in-new-mod-files

Edited by குட்டி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைக்கு வேற்று கிரக வாசிகள் வருகிறார்கள் போகிறார்கள்: இலண்டன் டெயிலி மெயில் தகவல்.

சைனாக்காரன் சோத்துக்கோப்பையோடை நுள்ளான்மாதிரி அங்கையங்கை திரிஞ்சிருப்பங்கள் அதை வைச்சு கதைவிடுது அவிச்ச றால்

அதுசரி?????? சிலோனிலை உந்த வெள்ளை என்ன வேலைசெய்தது?

மகிந்தனை கூட்டிக் கொண்டு போவதற்கு வட்டமடிக்கிறார்களோ தெரியாது. :D

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு வேற்றுக்கிரக வாசிகளின் நடமாட்டம் இருப்பதாக இங்கிலாந்து விமானபடை அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி டெயிலி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஊரிலை இருக்கிறவனே.... வேற்று கிரக வாசிகளை காணவில்லை. லண்டனிலை இருந்து போன இவருடைய கண்ணுக்கு உடனே தெரிஞ்சிட்டுதாம்.

2004ம் ஆண்டிலை எடுத்த புகைப்படத்தை 2011ம் ஆண்டு மட்டும் ஏன் பொத்தி வைத்திருந்தவராம். றீல்... விடுறதுக்கு அளவே இல்லாமல் போச்சுது.

  • கருத்துக்கள உறவுகள்

ஊரிலை இருக்கிறவனே.... வேற்று கிரக வாசிகளை காணவில்லை. லண்டனிலை இருந்து போன இவருடைய கண்ணுக்கு உடனே தெரிஞ்சிட்டுதாம்.

2004ம் ஆண்டிலை எடுத்த புகைப்படத்தை 2011ம் ஆண்டு மட்டும் ஏன் பொத்தி வைத்திருந்தவராம். றீல்... விடுறதுக்கு அளவே இல்லாமல் போச்சுது.

2004 இல் தமிழன் பலமாக இருந்தான். இந்த பூச்சாண்டியெல்லாம் செல்லாது அப்போது.

2011 இல் எதைக்கேட்டாலும் ஆஆஆ......... ஓஓஓ................ என்று வாயைப்பிழந்து கேட்கின்றான். ரீல் விடுகிறார்கள். அவர்கள் மட்டுமா ரீல் விடுகிறார்கள். எம்மிடையிலேயே எத்தனைபேர் ரீல் விடுகிறார்கள். அவர்களை குற்றம் சொல்லி பிரயோசனமில்லை. தமிழனின் தற்போதைய நிலை இதுதான்.

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.