Jump to content

தரிசனம் கிடைக்காதா


Recommended Posts

பதியப்பட்டது

தரிசனம் கிடைக்காதா?

ஓவ்வொரு வருசமும் முத்துமரி அம்மன் கோவில் திருவிழா இருபத்தைந்து நாட்களும் புத்தக விற்பனை நடப்பது வழக்கம்.அவ்வாறே 2000ம் ஆண்டும் புத்தக விற்பனைப் பிரிவுக்கு அருகில் உள்ள இரண்டு பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் அழைக்கப்பட்டு ஒவ்வொரு செயற்திட்டங்கள் வழங்கப்பட்டது.காலை ஆறு மணியிலிருந்து மத்தியானம் இரண்டு மணிவரைக்குமான காசுப்பொறுப்பாளர்கள் சயிந்தினியக்காவும் ராஜேஷண்ணாவும் மற்ற மற்ற பொறுப்புகளுக்குமாக மொத்தமாக எட்டு பேர் இருப்பார்கள்.அதில நான் விற்க வேண்டியது மு.வரதனாரின் புத்தகங்கள் ("தம்பிக்கு" "தங்கைக்கு" அப்பிடிதான் அவருடைய புத்தகங்களின் தலைப்புக்கள் இருந்நதாக ஞாபகம் ).இருபத்தைந்து நாட்கள் சந்திக்கிற இரண்டு பாடசாலை மாணவர்களுக்கும் இடையே நிறைய காதல் பூ பூக்கிறதும் நடக்கிறது.

நான் படிச்ச பள்ளிக்கூடத்தில திடீர் இராணுவ நடவடிக்கை மாதிரி எங்களை எல்லாம் பிறேயருக்கு அனுப்பிட்டு சில ரீச்சர்ஸ்மாரும் மாணவர் தலைவிகளும் சேர்ந்து எங்கட உடமைகள் அத்தனையும் ஆராய்வார்கள்..அதில யாராவது வைத்திருந்த நடிகர்களின்ர படம் லவ் லெற்றர்ஸ் ஏதாவது அகப்பட்டா அதோ கதிதான...அம்மா அப்பா வந்துதான் பிரின்ஸிட்ட போய் அதெல்லாம் வாங்கவேணும் …..அதுமட்டுமா இத்தின cm ல்தான் சட்டை collar இருக்கவேணும் அதில button இருக்கவேணும் சங்கிலி போடக்கூடாது மோதிரம் போடக்கூடாது ஒருநாள் கூட தலை பின்னி றிபன் கட்டாம வந்தி;ட்டா அவளவுதான் வாழைநாரால பின்னிக் கட்டி விடவெண்டே இருக்குது ஒரு குறூப்.இப்பிடியெல்லாம் செய்யிற அக்காமார் தப்பித்தவறி எங்கட அண்ணாமாருக்கு லைன் போடுறதா தெரிஞ்சது அம்புட்டுத்தான் அவங்க காதலுக்குச் சமாதிதான்.நிறைய பாவம் பண்ணிட்டன் போல இருக்கு. .என்னத்தையோ சொல்ல வந்து எங்கயோ போயிட்டன்.

சயிந்தினயக்காவும் எங்களுக்குப் பிடிக்காத ஒரு மாணவ தலைவிதான்.ராஜேஷண்ணாட்ட நாங்கள் ரியுசனுக்குப் போறனாங்கள்.அவருக்கு சயிந்தியக்காவில விருப்பம் அவா நல்ல வடிவு கெட்டிக்காரியும் கூட.அவேன்ர A/L ரியூசன் முடிய இன்னும் கொஞ்சநாள் தான் இருந்தது அதான் அவர் திருவிழாவிலேயே தன்ர காதலைச் சொல்லப் போறன் எண்டு சொல்லிட்டு வைரமுத்ததுவின் கவிதைப் புத்தகம் ஒன்றையும் வாங்கி வைச்சிருந்தவர்.எங்களிட்ட சொன்னவர் நான் சயிந்திட்டச் சொல்லப் போறன் என்று நாங்களும் குட் லக் சொல்லிட்டுச் சாப்பிட போட்டம்.சாப்பிட்டு வந்தால் சயிந்தியக்கா இல்லை ராஜேஷண்ணா தனிய கோபத்தில இருந்தார்.என்னாச்சு எண்டு கேட்டதுதான் தாமதம் சும்மா ஆமிக்காரன் கெலியிலிருந்து நெருப்புப்பொறி பொரிஞ்ச மாதரி வார்த்தைகள் வந்து விழுந்தன ... " பெடியங்கள் அப்பவே சொன்னவங்கள் டேய் சயிந்தியைப் பற்றி உனக்குத் தெரியாது.. வேண்டாம் என்று...நான்தான் நம்பாமால் ...இருந்தாலும் இந்தத்திமிர் கூடாது. பிடிக்கல என்றால் சொல்ல வேண்டியது தானே அத விட்டிட்டு நான் குடுத்த புத்தகம் சொக்லட் இரண்டையும் இங்க இந்தக் கால்வாயில போட்டிட்டுப் போட்டாள்.அழகு அறிவோட சேர்த்து மற்றவையை எப்பிடி நோகடிக்கலாம் என்றும் தெரிஞ்சு வைச்சிருக்கிறா."

நாங்கள் எட்டி கால்வாயைப் பார்த்தா சாமி தீர்த்தம் ஆடிட்டுப் போன மஞ்சள் குங்குமம நீரெல்லாம் வடிஞ்சு வந்து கவிதைப் புத்தகம் நனைஞ்சு சிதைஞ்சு கொண்டிருந்தது ராஜேஷண்ணான்ர மனசைப்போல.

-சினேகிதி-

  • Replies 63
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாய் கொன்ஞ்ஞம் அழகா இருக்கிற பொண்ணுங'களே இப்பிடி தான்ப்பா திமிர் ஜாஸ்த்தி....என்னமோ பெரிய நினைப்புல திரிவினம்..

Posted

சுண்டல் அதுக்குள்ள வாசிச்சிட்டீரோ...அவை பெரிய நினைப்பில திரிஞ்சா நீர் சின்ன நினைப்பில திரியுமன் யார் வேண்டாமெண்டது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ke ke ke என்ன நக்கலா? :evil: :evil: ஆண்களுக்கு எப்பவுமே சின்ன மனசு சின்ன நினைப்புப்பா...

நீங்க தான் சும்மாரா இருந்தா கூட ஜஸ்வர்யா ராய் ரேன்ஜ்கு திரிவிங்க......... :lol::lol::lol:

Posted

இங்க சண்டை வேண்டாம் சமாதானம போயிடுவம்.ஐஸ்வர்யா பழசு கண்ணா பழசு இப்ப புதுசு கண்ணா புதுசு Nataly!

Posted

நான் படிச்ச பள்ளிக்கூடத்தில திடீர் இராணுவ நடவடிக்கை மாதிரி எங்களை எல்லாம் பிறேயருக்கு அனுப்பிட்டு சில ரீச்சர்ஸ்மாரும் மாணவர் தலைவிகளும் சேர்ந்து எங்கட உடமைகள் அத்தனையும் ஆராய்வார்கள்..அதில யாராவது வைத்திருந்த நடிகர்களின்ர படம் லவ் லெற்றர்ஸ் ஏதாவது அகப்பட்டா அதோ கதிதான...அம்மா அப்பா வந்துதான் பிரின்ஸிட்ட போய் அதெல்லாம் வாங்கவேணும் …..அதுமட்டுமா இத்தின cm ல்தான் சட்டை collar இருக்கவேணும் அதில button இருக்கவேணும் சங்கிலி போடக்கூடாது மோதிரம் போடக்கூடாது

நான் படிச்ச பள்ளியிலும் இப்பிடி இருந்திச்சு. :lol::lol:

Posted

அப்பிடியா அருவி??நிறைய பள்ளியில இப்பிடி நடந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடப்பாவி!!

*****வில் ஏதும் மாட்டுப்பட்டியா? பல பேர் குப்பை வாளிக்குள் ஒளித்து வைப்பதைப் பார்த்திருக்கின்றேன் :wink: :lol:

Posted

ம்ம் சிநேகிதி பாடசாலை வாழ்க்கை நினைக்கவே சந்தோசம் தான். எங்கள் பாடசாலையில் சட்டைக்கு ஊசி குத்தியிருந்தால் கூட 25 சதம் கொடுக்கணும். ஆசிரியார்களை விட மாணவத்தலைவர்களுக்கு பயப்பிட்ட காலம் தான் கூட.

நல்லாயிருக்கு... நன்றி இங்கு இனைத்தமைக்கு

Posted

நான் படிச்ச பள்ளிக்கூடத்தில திடீர் இராணுவ நடவடிக்கை மாதிரி எங்களை எல்லாம் பிறேயருக்கு அனுப்பிட்டு சில ரீச்சர்ஸ்மாரும் மாணவர் தலைவிகளும் சேர்ந்து எங்கட உடமைகள் அத்தனையும் ஆராய்வார்கள்..அதில யாராவது வைத்திருந்த நடிகர்களின்ர படம் லவ் லெற்றர்ஸ் ஏதாவது அகப்பட்டா அதோ கதிதான...அம்மா அப்பா வந்துதான் பிரின்ஸிட்ட போய் அதெல்லாம் வாங்கவேணும் …..அதுமட்டுமா இத்தின cm ல்தான் சட்டை collar இருக்கவேணும் அதில button இருக்கவேணும் சங்கிலி போடக்கூடாது மோதிரம் போடக்கூடாது

ம்ம் நம்ம பள்ளியிலும் இப்பிடித்தான்..பொல்லாத ஆக்கள்..என்ன நமக்கு அண்ணா, அக்காமார் இருந்தால்..(அதே கிளசில) அவைக்காக (சில வேளை ரூட் ஏதும் விட்டல் :P ) தப்பிக்க வழி இருக்கு..இல்லையா..சரி வீட்டு கோவத்தை எல்லாம் விடியக்காத்தால நம்ம கிட்ட தான் காட்டுவாங்க :evil: :evil: :evil: :evil: :evil:

அதுசரி சுண்டல்..ஏன் இந்த சின்ன விசயத்துக்கெல்லாம்..டென்சன் ஆகி..பெரீசா கதை விடுறீங்கள்? எனி ப்ரொப்ளம்? :roll: :wink:

Posted

தூயவன் என்னத்த குப்பைக்குள்ள ஒளிச்சு வைக்கிறவை?

Posted

ஆமா றமாக்கா ஆங்கிலப்பாட நேரம் தமிழ்ல கதைச்சாலும் ஒவ்வொரு சொல்லுக்கும் 25 சதம் குடுக்கோணும்.

Posted

சகி விடிய வெள்ளன நல்லாத்தான் அக்காமாரல பாதிக்கப்பட்டிருக்கிறியள் போல...அது ஒரு கனாக்காலமா 8)

Posted

ம் ஓவர் ஆக்ட் பண்ணாமல் பிடிக்கவில்லை என்று அந்த புத்தகத்தை திருப்பி கொடுத்திருக்கலாம். கால்வாய்க்குள் போடுறது மனசை நோகடிக்கிறது போல தானே

Posted

சாய் கொன்ஞ்ஞம் அழகா இருக்கிற பொண்ணுங'களே இப்பிடி தான்ப்பா திமிர் ஜாஸ்த்தி....என்னமோ பெரிய நினைப்புல திரிவினம்..

சுண்டல் என்ன இதுதான் சான்ஸ் எண்டு எல்லாரையும் குற்றம் சாட்டுறீர் :P

Posted

அடப்பாவி!!

*****வில் ஏதும் மாட்டுப்பட்டியா? பல பேர் குப்பை வாளிக்குள் ஒளித்து வைப்பதைப் பார்த்திருக்கின்றேன் :wink: :lol:

மாட்டுப்படலைப்பா எடுத்திருக்கன். :P

(ஒருகாலத்தில மாட்டுப்பட்டிருக்கன், அது ஒரு சின்னவிடயம் இதப்போல இல்ல. :wink: )

  • 2 weeks later...
Posted

மதன் கொஞ்சம் ஓவர் அக்றிங்தான் ஆனால் ஏன் அவா அப்பிடி செய்தாவோ அவாக்குத்தான் தெரியும்.இனிம சந்திக்கிற வாய்ப்புக் கிடைச்சா கேக்கோணும்.

Posted

அருவியும் தூயவனும் என்ன குப்பைவாழியைக் கிண்டினம்??எனக்கு சத்தியமா விளங்கேல்ல.

Posted

அருவியும் தூயவனும் என்ன குப்பைவாழியைக் கிண்டினம்??எனக்கு சத்தியமா விளங்கேல்ல.

அந்த வாளியை நீங்களும் கிளறிப்பாருங்க சிலவேளை அப்போதாவது ஏதாவது விளங்கும்.

Posted

ம்ம்ம் என்ன நீங்கள் செய்வது காணாது என்று சிநேகிதியையும் இழுக்கிறீங்களா? :roll: உங்களுக்கு விளங்கினப்புறம் சொல்லுங்கோ..நான் வந்து தேடுறன் ஓகே :P

ம் ஓவர் ஆக்ட் பண்ணாமல் பிடிக்கவில்லை என்று அந்த புத்தகத்தை திருப்பி கொடுத்திருக்கலாம். கால்வாய்க்குள் போடுறது மனசை நோகடிக்கிறது போல தானே

ஓம் என்ன..நானும் சொல்ல நினைத்தேன். பட் அவாக்கு என்ன பிரச்சனையோ...வேறு கோவத்தையும் இதில் காட்டி இருப்பாவோ எண்டு நெச்சன்..அதை விட சொன்னால்..சுண்டல் இன்னும் டென்சன் ஆவாரோ எண்டும் கொஞ்சம் நெச்சன்... :roll: :P

Posted

இதில சுண்டல் எங்க வந்தவர் சகி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அப்பாடா... இப்பத்தான்

வாசிக்க நேரம் கிடைச்சிது :lol:

ச்சே ...பாவம் அந்த அண்ணா

அவக்கு கனக்கத் திமிர்

எனக்கு ஒரு சந்தேகம்

ஏன் காதலைச் சொல்லக் கவிதைப் புத்தகம்

லஞ்சமா? :wink:

Posted

புத்தகக் கடையில வேலை செய்துகொண்டெல்லோ இருந்தவை 2 பேரும்...வைரமுத்துவின் கவிதைகள் அந்தக்காக்கு விருப்பம்.லஞ்சமா ??????????????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

சரி சரி டென்சன்

ஆகாதேங்கோ சும்மா

ஒரு பம்பலுக்குக் கேட்டனான் :wink:

Posted

பம்பலா...அதுசரி நீங்கள் Hello சொல்லிப்போட்டு எங்க போய் விழுறீங்கள்??

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.