Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகத் திட்டம்!

Featured Replies

இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகத் திட்டம்! - பாகிஸ்தான் ஊடகம் தகவல்

தென்னாசியப் பிராந்தியத்தில் தனது மேலாதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்வதற்காக இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகமாகத் திட்டமிட்டு வருவதாக பாகிஸ்தானின் த நேஷன் பத்திரிகை நேற்று (22.03.11) செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம் சீனாவை நோக்கி சார்ந்து வரும் நிலையில் அதற்குப் பாடம் கற்பிக்கும் நோக்கத்துடன் இந்தியா இவ்வாறு திட்டமிடுவதாக நம்பகரமாக தெரிய வருவதாக இப் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கையின் இனங்களுக்கு இடையில் பிரிவினைகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையைப் பிளவுபடுத்தும் புதுடில்லியின் திட்டங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் தகவல் குறிப்புக்களும் வெளிப்படுத்தியிருப்பதாக இப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் பத்திரிகையில் இவ் விவகாரம் குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

'இலங்கை விவகாரத்தில் மூன்று வகையான தந்திரோபாய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா திட்டமிட்டுள்ளது. மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்துதல், இந்தியாவுக்கு விசுவாசமான போராளிக் குழுக்களுக்கு ஆதரவளித்தல், போர்க்குற்றங்கள் தொடர்பாக கொழும்புக்கு அழுத்தம் கொடுக்குமாறு சர்வதேச சக்திகளை வலியுறுத்துதல் போன்ற தந்திரோபாய/>நுடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்திருப்பதாக இலங்கையைத் தளமாகக் கொண்ட பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தொலைபேசி மூலம் கூறியுள்ளார்.

2005ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி இடம்பெற்ற சிறிலங்காவின் தேர்தல் இந்தியா விழித்தெழுவதற்கான அழைப்பு என புதுடில்லி குறிப்பிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் தெரிவித்திருக்கிறது.

இலங்கையுடன் ஏற்கனவே கொண்டிருந்த நெருங்கிய நட்புறவைத் தொடரும் அதேசமயம், போர் நிறுத்தத்தை கடைப்பிடிப்பதற்கான முக்கியத்துவத்தை சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்யும் போது வலியுறுத்துவது என இந்தியா திட்டமிட்டிருந்ததாக விக்கிலீக்ஸ் குறிப்பிட்டுள்ளது.மகிந்த ராஜபக்சவின் கடும்போக்கான கருத்துகள், சமாதான நடவடிக்கைகள் தொடர்பாக இறுதியாக இருக்கும் நம்பிக்கையையும் நசுக்கிவிடக் கூடுமென டில்லியிலுள்ள அவதானிகள் கவலைப்பட்டதாக இத் தகவல் குஙறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் தேர்தலை பகிஷ்கரித்தமை தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச்செயலாளர் மோகன் குமார் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

மகிந்த ராஜபக்சவுக்குச் சாதகமாக ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவை அகற்றுவதற்கான பிரபாகரனின் செயற்பாட்டில் சாட்சியமாக தேர்தல் பகிஷ்கரிப்பு இருப்பதாக மோகன் குமார் கூறியிருக்கிறார். சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்வதற்காக பிரபாகரன் இதனைச் செய்ததாக மோகன் குமார் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் வெளிவிவகாரச் செயலாளர் சரணுக்கும் இந்தத் தீர்மானத்தை அவர் நேரடியாகத் தெரிவித்திருக்கிறார்.

அமெரிக்கா தொலைவிலுள்ளது. அமெரிக்க கப்பல்கள் இலங்கைக்கு வரப்போவதில்லை என்பது விடுதலைப் புலிகளுக்குத் தெரியும் என்று மோகன் குமார் கூறியுள்ளார். மறுபக்கத்தில் எந்தத் தருணத்திலும் இந்திய அரசாங்கம் படைகளைக் கொண்டுவர முடியும் என்பது தொடர்பான விடுதலைப் புலிகளின் கவலைகளிலிருந்து இந்தியா அனுகூலத்தைப் பெற்றது.

சமாதானமுமில்லாத, போருமில்லாத நிலைவரத்துக்கு மகிந்த ராஜபக்ச தன்னை மிதவாதத் தன்மையுடன் மாற்றிக் கொள்ளக்கூடிய சாத்தியம் இருப்பதாக மோகன் குமார் எதிர்வு கூறியுள்ளார்.

சிங்கள மக்களின் கருத்தொருமைப்பாட்டைப் பெற்றுக் கொள்ள சமாதானப் பேச்சுவார்த்யின் அனுசரணையாளராக நோர்வேயை மீண்டும் ஈடுபடுத்துவதே ஒரேவழியென மோகன்குமார் தெரிவித்திருக்கிறார். போர் நிறுத்தத்தை மீளாய்வு செய்வதற்கான மகிந்த ராஜபக்சவின் நோக்கங்களின் அடிப்படையில் அதனைப் பேணிப்பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்கு இந்தியா முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது மோகன் குமாரின் பரிந்துரையாக இருந்தது. இந்த விடயமானது அமெரிக்காவின் நோக்கங்களுடன் இணைந்தது என்பது உண்மையாகும்.

போர் நிறுத்த உடன்படிக்கை மீறப்பட்டுவிட்டது என்பது சகலருக்கும் தெரியும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால், வன்முறைகள் மீள ஏற்படாமல் தடுப்பதற்கு போர் நிறுத்தம் இருப்பது முக்கியமானதென அவர் தெரிவித்திருக்கிறார்' என இவ்வூடகம் மேலும் தெரிவித்துள்ளது.

http://www.ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={EBEF283E-F6B2-4D44-B7D3-93BF8DB4DD44}

  • தொடங்கியவர்

India desperately planning to divide Sri Lanka

LAHORE – In a desperate move to assert its hegemony in South Asia, India is covertly planning to divide Sri Lanka in order to teach a lesson to the well-educated island nation for looking towards China for leadership and guidance, it has been reliably learnt on Monday.

WikiLeaks cable also exposed New Delhi’s designs to divide Sri Lankan by creating ethnic and sectarian strife among its people.

“With reference to Sri Lanka, India has stepped up work on three-pronged strategy; divide the overall population, support militant groups which are loyal to India and urge international powers to press Colombo on war crimes,” a Sri Lanka-based defense analyst (not Sri Lankan) told this report by phone.

The WikiLeaks has reveled that, “the India called the Nov 17, 2005 Sri Lankan Elections a ‘wake-up call for India’ and planned to use the new President’s upcoming visit to Delhi to stress the importance of maintaining the Ceasefire Agreement while continuing India’s already close relationship with its southern neighbour. The cable added that the Sri Lanka watchers in Delhi were seriously concerned that Rajapakse’s hawkish views may squash the ‘last glimmer of hope’ for the peace process.

Mohan Kumar, the MEA Joint Secretary (Sri Lanka, Bangladesh, Burma), had commented that the LTTE boycott of the elections was evidence that Prabhakaran ‘dumped’ the United National Party’s (UNP) Ranil Wickremesinghe in favour of Rajapakse in order to avoid a return to the negotiating table. He attributed this decision directly to Prime Minister Singh and Foreign Secretary Saran, but went on to describe the complications they face in looking for an appropriate response. “The US has the luxury of distance and the LTTE knows that American Marines are not coming to Sri Lanka, he observed. On the other hand, India benefits from the LTTE’s concerns that the GOI could bring in troops at any time.

Despite the Sri Lankan Freedom Party candidate’s hardline campaign rhetoric, Kumar predicted that Rajapakse will moderate himself and the ‘no peace, no war’ situation is likely to hold in the near term, according to the released cable.

Further according to the “CONFIDENTIAL” cable Mohan Kumar predicted that President Rajapakse will moderate himself and the ‘no peace, no war’ situation is likely to hold in the near term. He suggested the only way forward is to bring Norway back into the process, look for a Sinhalese consensus and give the LTTE a ‘take it or leave it’ offer.

He finally suggested the GOI’s first post-election priority is ensuring that the ceasefire does not break down in light of Rajapakse’s intentions to ‘review’ the Ceasefire Agreement, and welcomed the fact that this converged with US objectives. ‘Everyone knows the CFA is flawed,’ he observed, ‘but its presence is crucial to preventing a return to violence.’

http://nation.com.pk/pakistan-news-newspaper-daily-english-online/Regional/Lahore/22-Mar-2011/India-desperately-planning-to-divide-Sri-Lanka/1

... உந்த இந்தியாவின் விடயங்களை விட்டுத்தள்ளுவோம்??? ... உவங்கள் எங்களை அழிக்க உதவியவர்கள்???? வரலாற்றில் இந்தியாதான் எம் முதல் எதிரி????? நாம் சிங்களத்துடன் கை கோர்த்தாலும் கோர்ப்பமே ஒழிய இந்தியாவிடம் அல்ல????? இந்தியா, இலங்கையை பிளவு படுத்தினால், நாம் இலங்கையுடன் இணைந்து அதற்கெதிராக போராடுவோம்????? ... நான் சொல்வது சரிதானே?????????????????

... இங்கை ஒருவர், சில நல்லலென்ன சமிக்கைகளை காட்டவோ/மன உணர்வுகளை அறியவோ/சம்பிரதாயத்துக்கோ/... போய்ச் சந்தித்தார், நாம் அவருக்கு இப்ப "துரோகி" பட்டம் அழித்து கவிரவித்து விட்டோம்!!!!!!!!!!!!!

... உந்த இந்தியா என்ன, எம்மை அழிக்க சிங்களத்துக்கு உதவிய அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், ....ஏறக்குறைய உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் எதிராக போர்ப் பிரகடனம் செய்யவுள்ளோம்????????? <_<

Edited by Nellaiyan

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசம் ஒரு முள்ளந்தண்டு இல்லாத தேசம்.இது மீனுக்குத் தலையையும், பாம்புக்கு வாலையும் காட்டும் 'விலாங்கு' வகை மீனை ஒத்தது.மனிதகுலத்தின் நாகரீகத்தின் தொட்டிலேனத் தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் இந்த நாட்டில் தான் ஆயிரமாயிரம் பெண்குழந்தைகள் பிறந்தவுடனேயே கொல்லப்படுகின்றன அல்லது கருவிலேயே சிதைக்கப்படுகின்றன.ஆயிரக் கணக்கான குழந்தைகள், அடிப்படைக் கல்வி கூடக் கற்க வாய்ப்பற்று 'குழந்தைத்தொழில்' களின் ஈடு படுத்தப்படுகின்றன.புலம் பெயர்ந்த நாடுகளில் அண்மைக்காலமாக அதிகளவில் வந்து இவர்கள் செய்யும் அட்டகாசம் எழுத்தில் அடங்காதது. இல்லாத 'கல்வித்தகுதி' களையும், இல்லாத 'தொழில் தகுதி' களையும் காட்டி ஒருவாறு ஒரு வேலைதத்தலத்தின் உள்ளே நுழைந்து விடுவார்கள். பின்பு அங்கிருந்து மற்றவர்களை மெது மெதுவாக வெளியேற்ற ஆரம்பிப்பார்கள். இவர்களின் அட்டகாசத்தால் தொழில்களை இழந்த பலரை நான் அறிவேன்.நாங்கள் பிறந்த நாட்டில் மட்டுமல்ல, புகுந்த நாடுகளிலும் இவர்கள் தொல்லை தாங்க முடியாது.இவர்களால் எமக்கு எந்த விதமான தீர்வோ அல்லது நன்மையோ ஒருநாளும் கிடைக்காது.

நாங்கள் அழியும் வரை, எங்களுக்கு 'நிலா' காட்டிக்கொண்டிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை பிளவுபடுத்த இந்தியா மறைமுகத் திட்டம்! - பாகிஸ்தான் ஊடகம் தகவல்

அவன் எழுதிட்டான் அப்படி என்று நீங்க சந்தோசபடலாகாது உள்ளுக்குள்ளா ஆயிரம் பாலிடிக்ஸ் இருக்கம்.

டிஸ்கி:

பால் தாக்ரே vs முஸ்ராப் சண்டையினால் தானை தலைவர் பிரபாகரனை இந்து மத தீவிரவாதி என்றது அறிவீர்கள் தானே.. நீங்க லென்சு வைத்து பார்த்தாலும் பாம்பினுடைய கால் பாம்புக்குதான் தெரியும் ...எவனையும் நம்புதல் கூடாது.. <_<

  • கருத்துக்கள உறவுகள்

அவன் எழுதிட்டான் அப்படி என்று நீங்க சந்தோசபடலாகாது உள்ளுக்குள்ளா ஆயிரம் பாலிடிக்ஸ் இருக்கம்.

டிஸ்கி:

பால் தாக்ரே vs முஸ்ராப் சண்டையினால் தானை தலைவர் பிரபாகரனை இந்து மத தீவிரவாதி என்றது அறிவீர்கள் தானே.. நீங்க லென்சு வைத்து பார்த்தாலும் பாம்பினுடைய கால் பாம்புக்குதான் தெரியும் ...எவனையும் நம்புதல் கூடாது.. <_<

போர்குற்றற வழக்கிற்கு சர்வதேசத்திற்கு அழுத்தும் கொடுப்பது...................?

கூடிநின்று நஞ்சுகுண்டுகளை கொட்டியதே இந்தியாதானே? இதிலே இனி இலங்கைக்கு விசாரணை என்றால்............?

அம்புக்கு வழக்கென்றல்? எய்தவனுக்கு என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.