Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை விடயத்தில் மேற்குலகம் ஒதுங்கியது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விடயத்தில் மேற்குலகம் ஒதுங்கியது ஏன்?

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தும் வகையில் அனைத்துலக சமூகம் தன்னாலான அழுத்தத்தைப் பிரயோகித்தது. ஆனால் புலிகள் அமைப்பு மற்றொரு முறை மீண்டெழுவதை விரும்பாத இலங்கை ஜனாதிபதி அந்த அழுத்தங்களுக்கு அடிபணியாததால்தான் இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ள மேற்குலகம் தயங்கியுள்ளதாம்.

தாய்லாந்திலுள்ள இலங்கைத் தூதரகத்தில் இராஜதந்திரியாகப் பணியாற்றும் நெவில் டி சில்வா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம்.

இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் வாழும் தமிழர்களின் மனங்களில் கோபம் அல்லது ஏமாற்றம் அதிகரித்துக் காணப்படுகிறது. சுதந்திரத் தமிழ்த் தாயகமாம் ஈழம் என்ற தங்கள் கனவை மேற்கு நாடுகள் ஆதரித்து நிற்கும் எனத் தமிழர்கள் கருதியிருந்தனர். இந்த நிலையில் அந்த நாடுகள் போரின் இறுதியில் தமிழர்களுக்குத் தோள் கொடுக்காமல் வெறுமனே பார்த்துக் கொண்டிருந்தன.

தமிழர்களுக்கான உதவி மறுப்பு

லிபியப் போராளிகளுக்கு வழங்கிவரும் அதே உதவிகளை மேற்குலகம் தமிழர்களுக்கு மறுத்திருந்தது.

இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள் செயலிழந்துபோன நிலையில், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடிக்க வேண்டும் என்ற முடிவை நான்கு ஆண்டுகளுக்கும் முன்னர் இலங்கை அரசு உறுதியுடன் எடுத்திருந்தது. இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிடப்பட்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் காப்பதற்கு மேற்கு நாடுகள் அல்லது ஐ.நா. தலையிடும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் அதிகம் இருந்திருக்கிறது. படையினரின் தொடர் நடவடிக்கையைத் தொடர்ந்து, நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு மூலையில் முடக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமது துயர் துடைக்கும் வகையில் அனைத்துலக சமூகம் தலையிடப் போகிறது என்ற எண்ணம் 2009 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் தமிழர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டது.

போராட்டங்களால் நன்மை கிடைக்கவில்லை

புலம்பெயர் தமிழர்கள் செறிந்து வாழும் மேற்கு நாடுகளது நகரங்களில் அவர்கள் தொடரான போராட்டங்களை நடத்தினர்.அத்துடன் தமிழர்களின் வாக்குகளில் தங்கியிருக்கும் மேற்கு நாடுகளைச் சேர்ந்த அரசியல் வாதிகளின் ஊடாகவும் அவர்கள் தமக்கான ஆதரவைத் தேடினர். இதனால் எந்த நன்மையும் இந்தத் தமிழர்களுக்குக் கிட்டிவிடவில்லை. இந்த நிலையில் ஐ.நாவில் கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்துக்கு அமைய லிபியாவின் கடாபி மீது மேற்கு நாடுகள் தாக்குதலைத் தொடுத்திருக்கும் அதேநேரம், லிபியக் கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் ஒரு நிலைமையைத் தற்போது புலம்பெயர் தமிழர்கள் காண்கின்றனர்.போரின் இறுதி நாள்களில் இலங்கையின் பிரச்சினையில் மேற்குலகம் தலையிட வேண்டுமெனக் கோரி பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் தொடரான, அளவில் பெரிய மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள்.

புலம்பெயர் மக்கள் மத்தியில் ஏமாற்றம்

ஆனால், இன்று குறித்த இந்த இரண்டு நாடுகளும்தான் லிபியத் தலைவர் கடாபி மீதான மேற்குலகினது படை நடவடிக்கையை முன்னின்று நடத்துகிறார்கள். இது புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. புலம்பெயர் தமிழர்களுடன் நட்புடன் இருக்கும் மேற்கு ஊடகங்கள் வாயிலாக இலங்கையில் கட்டுக்கடங்காத வகையில் பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும் மனிதப் படுகொலை நிகழ்த்தப்படுவதாகவும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்ட போது இலங்கை தண்டிக்கப்படலாம் என்று அனைத்துலக நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் கருதினர். ஆனால், நிச்சயமற்ற இந்தக் குற்றச்சாட்டுக்கள் புறம்தள்ளப்பட்டன. இருப்பினும் மேற்கு நாடுகள் ஐ.நாவிடம் ஓடிச் சென்று என்ன செய்வது எனக் கேட்கும் அளவுக்கு இலங்கையில் பொதுமக்கள் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது என்று வாதிடப்பட்டது. இலங்கையின் வடகிழக்குக் கரையோரத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழிருந்த குறுகிய நிலப்பரப்பில் கடற்கரையோரமாக அமைந்திருந்த தற்காலிக மருத்துவமனையில் கால் கைகளை இழந்தவர்கள் ஆங்காங்கே சிதறிக் கிடப்பதை லண்டனிருந்து கொண்டே ஊடகவியலாளர்கள் கண்டார்களாம். இலங்கை அரச படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களால் அல்லது வான்வழித் தாக்குதல்களின் விளைவுதானாம் இது என்று லண்டனிலுள்ள ஊடகவியலாளர்கள் கூறினர். நாற்பதாயிரம் பொதுமக்கள்வரை கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. அதிகாரிகள் சிலர் கதை விட்டனர். ஆனால் பின்னர் இந்தத் தொகையை ஐ.நாவே மறுத்திருந்தமை வேறுகதை. இதுபோல் பெருந்தொகையில் மக்கள் கொல்லப்பட்டார்கள் எனக் கூறுவதுதான் இலங்கை தனது படை நடவடிக்கையை இடை நிறுத்துவதற்கு அல்லது மேற்கு தலையிடும் நிலைமையை ஏற்படுத்துவதற்குத் தேவையானது என்று இவர்கள் கருதினர்.

மேற்குலகு விடயத்தில் தவறான முடிவு

இந்த நிலையில் இலங்கை விடயத்தில் மேற்குலகம் தலையிடும் என்று விடுதலைப் புலிகளும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழர்களும் தவறாக முடிவெடுத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான படை நடவடிக்கையை அரச படையினர் தீவிரப்படுத்தியிருந்த நிலையில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த அரசுக்கு எதிராக அனைத்துலக ரீதியில் ஏகப்பட்ட குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இருந்த போதும் ஏன் மேற்குலகம் அமைதியுடன் இருந்தது என்பதை விளக்குவதற்கு அவதானிப்பாளர்கள் வேறு பல விளக்கங்களைத் தருகிறார்கள். பிரித்தானியப் நாடாளுமன்றில் இருக்கும் தமிழர் ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பரப்புரையில் தங்களுக்கே நம்பிக்கை இருக்கவில்லையாம்.

பிரித்தானியாவினது வெளிவிவகாரச் செயலர் டேவிற் மில்லிபாண்டினது இலங்கை தொடர்பான கரிசனைகள் உள்நாட்டு அரசியலில் பால் அமைந்ததேயன்றி வேறெதுவும் இல்லை என்று லண்டனிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பிய இரகசியச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.

தமிழர்களின் வாக்குகளில் தங்கியுள்ள நிலைமை

பிரித்தானியாவில் அடுத்த பொதுத் தேர்தலுக்காகத் தயாராகி வரும் தொழிற்கட்சி தோல்வியிலிருந்து தப்புவதற்கு அங்கு வாழும் தமிழர்களின் வாக்குகளிலேயே அதிகம் தங்கியிருக்கிறது. அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் மீதான மேற்குலகின் தலையீடு அவர்களது சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டதே என அவதானிகள் கூறுகிறார்கள்.

மேற்குறித்த இந்த நாடுகளில் ஜனநாயகத்தை நிலை நாட்டுதல் என்பதற்கு அப்பால் தமக்கான மசகு எண்ணெய் விநியோகம் தங்கு தடையற்ற வகையில் நியாய விலையில் கிடைப்பதையே இந்த மேற்கு நாடுகள் விரும்புகின்றன.

மத்திய கிழக்கில் உள்ள குறிப்பிட்ட சில நாடுகளுடன் மேற்குலகம் கொண்டிருக்கும் உறவின் தன்மை மேற்குறித்த உண்மையை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. இலங்கையிடம் எண்ணெய் வளம் இல்லை. ஈராக்கிலும் லிபியாவிலும் உள்ளதைப் போன்று எந்த வளமும் இல்லை. மேற்கு நாடுகள் ஈராக் மற்றும் லிபியாவில் தலையிடுவதற்கான காரணம் வேறு எதுவுமில்லை, அங்குள்ள குறையாத எண்ணெய் வளம்தான். இந்த நாடுகள் மீதான தலையீட்டை நியாயப்படுத்தும்வகையில் ஐ.நாவின் பாதுகாப்புச் சபை ஊடாக அதற்கான அங்கீகாரத்தைப் பெற முனைந்திருந்தால் ஒன்று அல்லது இரண்டு நிரந்தர உறுப்பு நாடுகள் லிபியா மீதான தாக்குதல் தீர்மானத்தை எதிர்த்திருக்கும். ஐ.நாவின் பாதுகாப்புச் சபை பிளவடைந்து இருப்பதைக் காட்டும் நிலையை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தை எதிர்கொள்வதற்கு இவர்கள் தயாராக இருக்கவில்லை.

இந்தியாவின் உடன்பாடு இன்றிச் சாத்தியமில்லை

இந்தியாவின் உடன்பாடின்றி மேற்கு நாடுகள் எந்த வகையான செயற்பாட்டிலும் இறங்காது என்று ஆய்வாளர்கள் வாதிடுகிறார்கள். இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா முதன்மையான ஒரு சக்தியாகத் திகழ்கிறது. இந்திரா காந்தியிசக் கோட்பாடு என அறியப்பட்ட கொள்கையின் அடிப்படையில் இலங்கை தனது செல்வாக்குக்கு உட்பட்ட பிராந்தியம் என்றே இந்தியா கருதுகிறது. 1987 ஆம் ஆண்டு இலங்கையில் நேரடித் தலையீட்டை மேற்கொண்ட இந்தியா தனது விரலைத் தானே சுட்டுக்கொண்டது எனலாம்.விடுதலைப் புலிகள் தோல்வியின் விளிம்பில் இருந்த தருணத்தில் இந்தியா தலையிட்டு நிலைமையை மாற்றியது. பின்னொரு நாளில் சமரிடுவதற்காக இந்தியா பிரபாகரனைக் காத்தது எனலாம்.ஈற்றில் இந்திய இராணுவத்துக்கு எதிராகவே திரும்பிய பிரபாகரன் 1200 இந்தியப் படையினரைக் கொலை செய்ததோடு மூவாயிரத்திற்கும் அதிகமானோரைக் காயப்படுத்தியிருந்தார். இது இடம்பெற்ற ஒரு சில ஆண்டுகளின் பின்னர் விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி இலக்கானார். விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்கான இலங்கை மீதான இந்தியத் தலையீட்டுக்குக் கட்டளை இட்டவர் ராஜீவ்காந்திதான்.

இந்தியா பெற்றுக்கொண்ட கசப்பான அனுபவங்கள்

இலங்கையில் இந்தியா பெற்றுக் கொண்ட இந்தக் கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் அது தகுந்த பாடத்தைக் கற்றிருந்தது. நிலைமையைச் சமாளிக்கும் வகையில் இலங்கை மீதான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் இலங்கையுடனான இருதரப்பு இராஜதந்திரச் செயற்பாடுகளை அதிகரிக்குமாறும் இந்தியா கூறியிருந்ததாக புதுடில்லியிலிருந்து அமெரிக்க இராசாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட இன்னொரு இரகசியச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகள் தொடர்ந்த பயங்கரவாத நடவடிக்கைகளின் விளைவாக அனைத்து இனங்களையும் சேர்ந்த ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர்.இந்த நிலையில் காந்தியின் அந்த மூன்று குரங்குகளைப் போல் ல்லதைப் பார், நல்லதைக் கேள், நல்லதைப் பேசு என்ற வகையில் அனைத்துலக சமூகம் செயற்பட்டது. போரை நிறுத்தும் வகையில் தன்னாலான அழுத்தத்தைப் பிரயோகித்தது. ஆனால் விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் ஒரு முறை மீண்டெழுவதை ஜனாதிபதி ராஜபக்ஷ விரும்பவில்லை. ஜனாதிபதி ராஜபக்ஷ மேற்கின் அழுத்தத்துக்கு அடிபணியாமல் செயலாற்றியமைதான் மேற்கு இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ளத் தயங்கியதற்கான காரணம்.

நன்றி: புதினப்பலகை

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ராஜபக்ஷ மேற்கின் அழுத்தத்துக்கு அடிபணியாமல் செயலாற்றியமைதான் மேற்கு இலங்கையில் தலையீடுகளை மேற்கொள்ளத் தயங்கியதற்கான காரணம்.

மேற்குலகு அழுத்தமே கொடுக்கவில்லை.பிறகு எப்படி மகிந்த மேற்குலகின் அழுத்தத்துக்கு அடி பணியவில்லை என எழுத்தாளர் சப்பை கட்டு கட்டுகிறார்?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை விடயத்தில் மேற்குலகம் ஒதுங்கியது ஏன்?

அடுத்தவனை சொறிந்தால் அவன் அவனுடைய முதுகை நன்றாக சொறியப்பா என்றுதான் காட்டுவான்...

டிஸ்கி:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=73541

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெவில் டி சில்வா ஒரு லூசன். அவன் தண்ட அப்பன்ட பேரை வைச்சு வேலை வாங்கி இருக்கிறான். சந்திரிக்கா இருக்கும்போது லண்டனில இருந்து எழுதி பெரிய படம் காட்டினவன். மகிந்த வந்தவுடன் ஓடிப்போய் ஒட்டி தாய் லாந்தில வேலை வாங்கிட்டான். புழுகிரவன் எல்லாம் ஏனோ தாய் லாந்துக்கு போறாங்கள். ஏற்கனவே ஒரு தமிழ் பேசும் முதுகு குத்தி அங்கிருந்து கொண்டு கதை அழந்து காசு பாக்குது.

மேற்கு உதவாமல் இந்திய பார்சி காங்கிரஸ் தடுத்தது என்று இவனுக்கு தெரியாதாக்கும்? அப்படி இருந்தும் கடைசி நேரத்தில் மேற்கு உதவியது பல தமிழீழ ஆதரவாளர்களுக்கே தெரியாது!

இப்போது மேற்கு எதிர்ப்பு நிலை எடுத்திருக்கும் இராயபக்ச இனவெறி அரசு தனது கை கூலி ஆங்கில பீட்டருகளை வைத்து தமிழரை ஏமாற்ற பார்க்கிறது.

இந்த பப்பு எல்லாம்... எங்கட ஸ்ரீ லங்கா தமிழரிடம் தான் வேகும்.

இந்த வெருளியிண்ட பிதற்றலை மெனக்கெட்டு மொழி பெயர்த்து இருக்க தேவை இல்லை.

மேற்குலகு அழுத்தமே கொடுக்கவில்லை.பிறகு எப்படி மகிந்த மேற்குலகின் அழுத்தத்துக்கு அடி பணியவில்லை என எழுத்தாளர் சப்பை கட்டு கட்டுகிறார்?

நுணா அண்ணா மில்லிபன்டு எல்லாம் அந்த நேரம் கொழும்பு பக்கம் ஓடி தெரிஞ்சவங்கள்.

என்ன அழுத்தம் கொடுத்தாங்களோ என்னத்த புடுங்கினன்களோ தெரியாது ஆனால் மகிந்தவும்

கொத்தாவும் அவங்களை கணக்கே எடுக்கவில்லை. இந்தியாவும் சீனாவும் இருந்த தைரியத்தில

மேற்குலகை மஹிந்த அன்கோ கணக்கே எடுக்கவில்லை என்பதே உண்மை.

நெவில் டி சில்வா ஒரு லூசன். அவன் தண்ட அப்பன்ட பேரை வைச்சு வேலை வாங்கி இருக்கிறான். சந்திரிக்கா இருக்கும்போது லண்டனில இருந்து எழுதி பெரிய படம் காட்டினவன். மகிந்த வந்தவுடன் ஓடிப்போய் ஒட்டி தாய் லாந்தில வேலை வாங்கிட்டான். புழுகிரவன் எல்லாம் ஏனோ தாய் லாந்துக்கு போறாங்கள். ஏற்கனவே ஒரு தமிழ் பேசும் முதுகு குத்தி அங்கிருந்து கொண்டு கதை அழந்து காசு பாக்குது.

மேற்கு உதவாமல் இந்திய பார்சி காங்கிரஸ் தடுத்தது என்று இவனுக்கு தெரியாதாக்கும்? அப்படி இருந்தும் கடைசி நேரத்தில் மேற்கு உதவியது பல தமிழீழ ஆதரவாளர்களுக்கே தெரியாது! இப்போது மேற்கு எதிர்ப்பு நிலை எடுத்திருக்கும் இராயபக்ச இனவெறி அரசு தனது கை கூலி ஆங்கில பீட்டருகளை வைத்து தமிழரை ஏமாற்ற பார்க்கிறது.

இந்த பப்பு எல்லாம்... எங்கட ஸ்ரீ லங்கா தமிழரிடம் தான் வேகும்.

இந்த வெருளியிண்ட பிதற்றலை மெனக்கெட்டு மொழி பெயர்த்து இருக்க தேவை இல்லை.

கடைசி நேரத்தில மேற்குலகு உதவியது தமிழீழ ஆதரவாளர்களுக்கே தெரியாது என்று எதை சொல்ல வருகிறீர்கள்?

தலைவர் பாதுகாக்க பட்டதற்கு மேற்குலகம் உதவியது என சொல்லவருகிறீர்களா? தலைவரின் பாதுகாப்பிற்கு புலிகள்

எவரையும் நம்பியிருக்கமாட்டார்கள். எமது போராட்டத்தின் இருப்பிற்கும் இயங்கு நிலைக்கும் தலைவரின் இருப்பு பாதுகாப்பு

மிகவும் முக்கியமானது என்பது எல்லோருக்குமே மிகவும் தெளிவாக தெரிந்த ஒரு விடயம். தலைவரின் பாதுகாப்பு போரின் ஆரம்ப

கட்டங்களிலேயே உறுதிபடுத்தபட்டுவிட்டது. எதையும் முன்கூட்டியே அனுமானிக்கும் நுண்ணறிவும் எதிர்காலம் பற்றிய தெளிவான தீர்க்கதரிசன பார்வையும் கொண்ட எங்கள் தலைவன் முள்ளிவைக்களின் கடைசி ஒருசில கிலோமீட்டர் நிலபரப்பில் சுற்றிவளைக்கப்பட்டு

நந்திகடலில் ஒரு அநாதை போல செத்துபோவதட்கு தலைவர் ஒன்றும் கேணை கிறுக்கன் இல்லை.

தலைவர் இறந்து விட்டார் என்று சில கிறுக்கன்கள் பிதற்றி திரிய அதை நம்புவதற்கு தமிழனாக பிறந்த எவனும் கேணை கிறுக்கன் கிடையாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.