Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாத் தமிழர்களே சிந்தியுங்கள்....

Featured Replies

இந்த முறை கன்சவேட்டிவ் கட்சியின் தலைமைத்துவமும் சரியில்லை. அக்கட்சியில் போட்டியிடும் தமிழ் வேட்பாளரும் திருப்திக்குரியவரல்ல. ஆகவே, கன்சவேட்டிவ் கட்சிக்கு ஆதரவு இல்லை. அதோடு, இத்தமிழருக்கு வாக்களிக்கக்கூடாதெனவும் நான் எனக்குத் தெரிந்தவர்களுக்கு சொல்லியிருக்கிறேன். வோட்டுகளுக்காக தனது அடையாளத்தையே தொலைக்க நினைப்பவர், தனது சுயநலத்திற்காக எதனையும் விற்கத் தயங்கமாட்டார். இன்று தனது பெயரையே மாற்ற நினைப்பவர் நாளைக்குத் தனது தந்தையின் பெயரைக்கூட மாற்றமாட்டார் என என்ன நிச்சயம்? இப்படிப் பட்டவருக்கு ஆதரவளிப்பதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இவரைப் பற்றி சொல்வதானால் அடுக்கிக் கொண்டே போகலாம். சுத்த சுயநலவாதி. தனது சுயநலத்திற்காக எந்தவிதமான வேலைகளையும் செய்யக்கூடியவர். மற்றவர்களை ஏணியாகப் பாவித்துவிட்டு, ஏறியதும் உதைத்துத் தள்ளிவிடுவதில் வல்லவர்.

தற்போது கட்சிகள் தமிழர்கள் குறித்து என்ன கருத்துநிலையில் இருக்கின்றது என்பது முக்கியமில்லை. தமிழர் எந்தக் கட்சியில் போட்டியிடுகின்றாரரோ அவருக்கு வாக்குகளை போடுங்கள். தமிழர்களிடம் இவ்வளவு வாக்குப்பலம் இருக்கின்றது என்பதை வக்களிப்பில் பங்களிப்பதன் மூலமும் தேர்தலில் நிற்கும் தமிழர்களை வெல்ல வைப்பதன் மூலமும் வெளிப்படுத்தினால் கட்சிகளின் தமிழர்கள் குறித்த கருத்துநிலை மாறும் அல்லது மாற்ற முடியும். தமிழர்கள் போட்டியிடாத தொகுதிகளிலும் வாக்களியுங்கள். நண்பர்கள் தெரிந்தவர்களையும் வாக்களிக்க ஊக்குவிய்யுங்கள்.

முதலில் எங்களிடம் இருக்கும் வாக்குகளை பயன்படுத்துவோம் என்பதை வெளிப்படுத்துதல் அவசியம். பெரும்பான்மையான தமிழர்கள் வாக்களிப்பதில் கலந்துகொள்வார்கள் என்பதை கட்சிகளுக்கு உணர்த்துதல் அவசியம். இதை செவ்வனே செய்யுமளவுக்கு தமிழர்களிடம் திறமை இருந்தால் அடுத்ததாக ஒரு கட்சியை குறிவைத்து வாக்களித்தல் என்ற இரண்டாவது கட்டத்திற்கு நகரமுடியும்.

ஒரு கட்சியோ அல்லது தலைவரோ தமிழர்களை அலட்சியம் செய்வதாக உணரமுடிகின்றது என்றால் அதற்கு தமிழர்கள் இடமளித்துள்ளார்கள் என்ற உண்மையை புரிந்துகொள்ளுதல் அவசியமானது. அலட்சியப்படுத்துதல் குறித்து ஆத்திரப்படுவதற்கான தகுதியை நாம் அடைதல் அவசியமானது. எம்மிடம் இருக்கும் கருத்துநிலை பூனை கண்ணை மூடிக்கொண்டு பால்குடிப்பதற்கு ஒப்பானது. தேசிய உணர்ச்சி மேலோங்கிய நிலையில் தமிழர் என்ற பொதுத்தன்மை பூரணமானதாக பெருமைக்குரியதாக தெரியும் ஆனால் யதார்த்தம் அவ்வாறு இல்லை. தமிழர் பிளவுபட்டும் சிதைவுபட்டும் கருத்துநிலையில் பெதுத்தன்மையற்றும் இலக்குகள் குறித்த தெளிவுமற்றும் இருப்பவர்கள். எங்கோ ஒரு சந்தர்ப்பம் அரிதாக அமைவதுபோல் சிதைவுபட்ட ஒவ்வொருவரிடமும் ஒரு வாக்குச் சீட்டு உள்ளது. அதை எம்மை ஒருங்கிணைப்பதற்கான சந்தர்ப்பமாகவும் பயன்படுத்துதல் அவசியமானது. முதலில் ஆட்டை அறுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா நாடுகளிலும் நாங்கள் இப்போ.. சிறுபான்மையினக் கூட்டம். எங்கள் சில இலட்சம் வாக்குகள்... நாடு நாடா .. கட்சி கட்சியா பிரிஞ்சு கிடக்குது. அதுகளை தேர்தல் மீது அக்கறையில்லாமல் வாழும் வெள்ளைகளின் வாக்கை சரிக்கட்ட வெள்ளை அரசியல் வாதிகள் பெற முற்படுகின்றனர். நாமும்.. சிந்தியுங்கடா.. போடுங்கடா என்று முழங்கிக் கொண்டுதான் இருக்கிறம். இவற்றால் எம்மால் எதுவும் உருப்படியா செய்ய முடியும் என்ற நிலை இல்லை..! தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பின்.. மீண்டும்.. கோவில் திருவிழா நடத்த அனுமதியும்.. அதற்கு பொன்னாடை போர்க்கவும் ஒருத்தரை கொண்டு வந்து நிறுத்தவுமே.. இவை உதவும்.

நான் நினைக்கல்ல.. கனடாவிலோ.. பிரித்தானியாவிலோ.. தமிழ் வாக்களர்கள் வாக்குப் போட்டு அந்தந்த நாடுகளில் பெரும் அரசியல் செல்வாக்கை செய்ய முடியும் என்று. சில தொகுதிகளில் வாக்கு நிரப்பிகளாக தமிழர்கள் இருக்க முடியுமே அன்றி.. சிறுபான்மையினராக இருந்து கொண்டு.. எதனையும் உருப்படியாக சாதிக்க முடியாது. இதுதான் யதார்த்தம். தமிழர்கள் நிமிர்ந்து நின்று சிந்தித்தாலும் சரி.. குப்புறக் கிடந்து சிந்தித்தாலும் சரி... கவுண்டு கிடந்து சிந்தித்தாலும் சரி அவர்களின் தலைவிதியை அவர்களாலேயே மாற்ற முடியாது.

Edited by nedukkalapoovan

தற்போது கட்சிகள் தமிழர்கள் குறித்து என்ன கருத்துநிலையில் இருக்கின்றது என்பது முக்கியமில்லை. தமிழர் எந்தக் கட்சியில் போட்டியிடுகின்றாரரோ அவருக்கு வாக்குகளை போடுங்கள். தமிழர்களிடம் இவ்வளவு வாக்குப்பலம் இருக்கின்றது என்பதை வக்களிப்பில் பங்களிப்பதன் மூலமும் தேர்தலில் நிற்கும் தமிழர்களை வெல்ல வைப்பதன் மூலமும் வெளிப்படுத்தினால் கட்சிகளின் தமிழர்கள் குறித்த கருத்துநிலை மாறும் அல்லது மாற்ற முடியும். தமிழர்கள் போட்டியிடாத தொகுதிகளிலும் வாக்களியுங்கள். நண்பர்கள் தெரிந்தவர்களையும் வாக்களிக்க ஊக்குவிய்யுங்கள்.

முதலில் எங்களிடம் இருக்கும் வாக்குகளை பயன்படுத்துவோம் என்பதை வெளிப்படுத்துதல் அவசியம். பெரும்பான்மையான தமிழர்கள் வாக்களிப்பதில் கலந்துகொள்வார்கள் என்பதை கட்சிகளுக்கு உணர்த்துதல் அவசியம். இதை செவ்வனே செய்யுமளவுக்கு தமிழர்களிடம் திறமை இருந்தால் அடுத்ததாக ஒரு கட்சியை குறிவைத்து வாக்களித்தல் என்ற இரண்டாவது கட்டத்திற்கு நகரமுடியும்.

ஒரு கட்சியோ அல்லது தலைவரோ தமிழர்களை அலட்சியம் செய்வதாக உணரமுடிகின்றது என்றால் அதற்கு தமிழர்கள் இடமளித்துள்ளார்கள் என்ற உண்மையை புரிந்துகொள்ளுதல் அவசியமானது. அலட்சியப்படுத்துதல் குறித்து ஆத்திரப்படுவதற்கான தகுதியை நாம் அடைதல் அவசியமானது. எம்மிடம் இருக்கும் கருத்துநிலை பூனை கண்ணை மூடிக்கொண்டு பால்குடிப்பதற்கு ஒப்பானது. தேசிய உணர்ச்சி மேலோங்கிய நிலையில் தமிழர் என்ற பொதுத்தன்மை பூரணமானதாக பெருமைக்குரியதாக தெரியும் ஆனால் யதார்த்தம் அவ்வாறு இல்லை. தமிழர் பிளவுபட்டும் சிதைவுபட்டும் கருத்துநிலையில் பெதுத்தன்மையற்றும் இலக்குகள் குறித்த தெளிவுமற்றும் இருப்பவர்கள். எங்கோ ஒரு சந்தர்ப்பம் அரிதாக அமைவதுபோல் சிதைவுபட்ட ஒவ்வொருவரிடமும் ஒரு வாக்குச் சீட்டு உள்ளது. அதை எம்மை ஒருங்கிணைப்பதற்கான சந்தர்ப்பமாகவும் பயன்படுத்துதல் அவசியமானது. முதலில் ஆட்டை அறுப்போம்.

கன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிடுபவரின் குளோப் அண்ட் மெயிலில் போனகிழமை வந்த பேட்டி.

அதன் தமிழாக்கங்கள் செய்தியாக

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ராகவன் அப்படிச் சொன்னார் என்பது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் தந்த குளோபல் மெயில் தொடுப்பு வேலை செய்யவில்லை. புலிகளைப் பற்றி நேரு சில நாட்களுக்கு முன்பு சொன்னது சர்ச்சையாகப் போனது... இப்போது இவர்.

யாருக்காவது ராகவன், குளோபல் மெயிலில் எழுதியது தொடர்பாக சந்தேகங்களைக் கேட்க விரும்பினால், இது தான் அவரின் பேஸ்புக் தொடுப்பு... கேட்டுத் தெரி;நது கொள்ளுங்கள்!

http://www.facebook.com/vikadan

நீங்கள் குளோப் அண்ட் மெயிலில் போய்த் தேடினாலே கிடைக்குமே. நேரு அவர்கள் கருத்துக் கூறிய கட்டுரையிலேயே ராகவனும் விடுதலைப் புலிகள், தமிழீழம் ஆகியவற்றுக்கான தனது ஆதரவற்ற தன்மையை வெளிப்படுத்தியிருந்தார். அக்கட்டுரையின் தாக்கத்தின் பின்னர்தான், தனது பெயரை மாற்றினார்.

இவரைப் பற்றி இன்னுமா உங்களுக்குத் தெரியவில்லை. எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்? நாடுகடந்த அரசைச் சிதைத்தவர்கள்தான் இவர் பின் நின்று வேலை செய்கிறார்கள் என்பதுகூடவா உங்களுக்குத் தெரியவில்லை.

Edited by தமிழச்சி

  • கருத்துக்கள உறவுகள்

இதற்காக வேறு என்ன வழி இருக்கு என்கின்றீர்கள். ராகவனைத் தோற்கடிப்பதன் மூலம் என்ன வெற்றியை நாங்கள் பெற முடியும்?? அல்லது என்ன அனுகூலம்... ராகவனுக்கு வெல்வதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு தான். அதனால் வெற்றி பற்றி அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் தமிழ் சமூகத்தினுள் அடிப்பேன், வெட்டுவேன், குத்துவேன் என்கின்ற செயற்பாட்டினை மேற்கொள்ளுவதால் என்ன லாபம்??

20 வருடங்களுக்கு மேலாக எங்களுடன் இருந்த கருணாவையே, சிங்கள அரசு தனக்குச் சாதமாக உபயோகிக்கின்றான். ஆனால் எங்களால் சின்ன விடயத்தைக் கூட இலகுவாகக் கையாள முடியவில்லை. எத்தனைபேர் இது பற்றி ராகவனுக்கு வருத்தத்தையோ, பண்பான முறையில் கோபத்தையோ வெளிப்படுத்தி புரிந்துணர்வை வளர்க்க முடியவில்லை.

கனடாவில் இவ்வாறு பல அமைப்பக்களாக உடைந்து நிற்பதற்கும், ஒரு நிலையான முடிவை எடுக்க முடியாமைக்கும், புரிந்துணர்வின்மையும், பேச்சுவார்த்தை நடத்தத் தயாரின்மையுமாகும். திடீரென்று புத்தனாகவில்லை... எங்காவது ஒரு விடயத்தில் ஏதாவது வெளிச்சம் தெரியாதா என்ற நப்பாசை...

ராகவன் எக்கேடு கெட்டாவது போகட்டும். ஆனால், நாங்களாக அவரைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எவ்வித உடன்பாடுமில்லை

இல்லை. தெரியாமல்தான் கேட்கிறேன். குளோபல் அண்ட் மெயிலில் நேரு அவர்களின் பேட்டி வந்தபோதே எத்தனைவிதக் குழப்பங்கள் வந்தது என்று ராகவனுக்குத் தெரியாமல்தான் இவ்வாறான ஒரு பேட்டியைக் கொடுத்தாரா? நேரு அவர்களின் கருத்து வந்த கட்டுரையில் இவரது கருத்துக்களும் வந்திருந்தது என்பதை ஒரு மாதத்திற்குள் மறந்து போய்விட்டாரா? அல்லது தனது இந்தக் கருத்தால் தமிழ் மக்களுக்குள் குழப்பம் வராது என்று தெரியாதா அவருக்கு? கனடாவின் முன்னணித் தமிழ் தொலைக்காட்சியில் பல வருடங்களாக முக்கிய பொறுப்பில் இருந்தவருக்கு மீடியாக்களுக்கு எவ்வாறு பேட்டி கொடுப்பது, அது எத்தகைய தாக்கத்தைக் கொண்டு வரும் என்பது கூடவா தெரியாது?

நான் மேலே குறிப்பிட்ட இருவரைப் பற்றியும் உங்களுக்கு மிக நன்றாகவே தெரியும். இவர்கள் இருவரும் இப்படிப் பேசக்கூடியவர்கள் என்று என்றாவது உங்களால் சிந்தித்துப் பார்த்திருக்க முடியுமா?

அவர் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்பதுதான் எனது எண்ணமும். அவரால் முடிந்தளவு வாக்குகளை அவர் பெறட்டும். அவருக்காக வக்காலத்து வாங்காதீர்கள் என்பதுதான் எனது கருத்தும். தமிழர் என்பதற்காக மட்டுமே வாக்களிக்காதீர்கள் என்பதுதான் எனது கருத்து. ஒரு வேட்பாளரால் வரக்கூடிய நன்மை தீமையை யோசித்து வாக்களியுங்கள் என்றே கூறுகிறேன்.

புரிந்துணர்வு இருந்திருந்தால் நம்மினம் ஏன் இப்படிச் சீரழியப் போகிறது? இத்தனை அவலத்திற்குப் பிறகும் புரிந்துணர்வைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?

வாக்களிக்கும் தகுதி பெற்ற கனேடிய தமிழர்கள் அனைவரும் வாக்களிப்பது முக்கியம். வாக்களிப்பதன் மூலம் எமது அரசியல் பலத்தை சொல்ல முடியும். சிறி லங்கா வை போல் இல்லது கனடாவில் உள்ள வாக்களிப்பு முறையில் அதிக வாக்கு பெற்றவருக்கு அதாவது ஒரு கட்சி உறுப்பினர் 12000 வைக்கும் மறு கட்சி உறுப்பினர் 12010 வாக்கும் பெற்றால் 12010 வாக்கு பெற்றவரே வெற்றியாளர். எனவே தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழர்களது வாக்கு நிச்சயம் யார் மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

என்னை பொறுத்தவரை யாருக்கு அல்லது எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்பதை அவரவர் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் தமிழர் ஒருவர் போட்டியிட்டால் பிரிந்து நின்று மல்லுகட்டுவதிலும் போட்டியிடும் தமிழருக்கு ஒருமித்து வாக்களித்து இம்முறை எமது வாக்கு பலத்தை நிருபித்தால், (தற்போது எமக்கு போட்டியிடுபவர் பற்றி சில விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் ) எதிர்காலத்தில் ஏனைய கட்சிகளும் தமிழர் ஒருவரை தேர்தலில் நிறுத்த முன்வருவார்கள். அதன் மூலம் துரநோக்கில் எமக்கு, எமது சமூகத்தின் நலன்களையும் பிரதி பலிக்கும் ஒரு வேட்பாளர் கிடைக்க சந்தர்ப்பம் இருக்கும். ஆனால் கனடாவில் கனடாவின் அரசியல், பொருளாதார நலன், கனேடிய வெளிநாட்டு கொள்கை என்பவை தான் எப்போதும் முதல் இடத்தில் இருக்கும். எந்த கனேடிய அரசியல் கட்சியும் ஈழப் பிரச்சினையை முன்னுக்கு வைத்து தமிழரை அணுகும் என எதிர்பார்த்தால் அது பகல் கனவாக தான் முடியும். ஆனால் எம்முடைய வாக்குகளும் வேட்பாளர்களை தீர்மானிக்க தேவை என நிருபித்தால் குறைந்தது சிறி லங்கா அரசுக்கும், அதன் வேண்டுகோளுக்கும் ஆமாம் போட முதல் சற்று சிந்திப்பார்கள்.

இந்த எனும் Vote mob அமைப்பு கனேடிய இளம் வாக்களர்களை வாக்களிக்க தூண்டும் வேலையை செய்கிறது.

http://www.cbc.ca/news/canada/prince-edward-island/story/2011/04/16/ns-vote-mob-halifax-market.html

இதேபோல தமிழர்களையும் வாக்களிக்க ஊக்குவிக்க முடிந்தால் நல்லது. இந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டும் அல்ல எதிர்வரும் ஒன்ராறியோ மாகாண தேர்தலிலும் மக்களை வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்.

Edited by KULAKADDAN

  • கருத்துக்கள உறவுகள்

Tory candidate in 'no way' a Tamil sympathizer: Conservatives

By Althia Raj,

paramsoothi.jpg

The Conservative party insisted Thursday their candidate in Scarborough Southwest, Ragavan Paranchothy, seen here with Stephen Harper, has no ties to the Tamil Tigers.

Photograph by: Handout photo, Candidate's websiteThe Conservative party insisted Thursday their candidate in Scarborough Southwest, Ragavan Paranchothy, has no ties to the Tamil Tigers.

Dimitri Soudas, spokesman for Conservative leader Stephen Harper, told reporters Thursday that prior to becoming a candidate for the Conservative Party of Canada, Paranchothy was asked and "confirmed" that "he in no way, shape or form was a sympathizer or supporter of the Tamil Tigers."

"If that had been the case . . . he would not have been a candidate for the Conservative party," Soudas said. "This candidate's position is that he does not in any way, shape or form support — or is a sympathizer of — the Tamil Tigers."

After Paranchothy was nominated as the Conservative candidate in the Toronto-area riding of Scarborough Southwest about a month ago, he changed his name and background to Gavan Paranchothy, the Globe and Mail reported Thursday.

The newspaper suggested Paranchothy, a broadcaster with Tamil Vision International, which devoted much of its coverage to the civil war in Sri Lanka, was trying to hide his Tamil roots.

In media reports, Paranchothy was often quoted commenting on alleged atrocities committed against Tamils.

"Sri Lanka is carrying out a systematic genocide of innocent Tamils who are seeking shelter under trees. They are being lured into so-called safe zones which are then being bombed by Sri Lankan forces," Paranchothy once told The Tamil Eelam News Services.

The Globe and Mail said Paranchothy is part of a group of Toronto-area Tamils, some of whom have links "to a Tamil Tigers remnant organization, who recently forged political ties with the federal Tories and the Ontario Progressive Conservatives."

The newspaper said Paranchothy last fall hosted a televised commemoration service for dead Tiger fighters, who the Globe quote him describing as "strong and faithful people who stood guard for the Tamils, fought for freedom and peace."

In a March article from InsideToronto.com, Paranchothy was quoted as saying that if people watching his coverage of the civil war believed he was sympathetic to the Tamil Tigers, they would be wrong.

"That's unfortunate, because that's not the case," he said.

Paranchothy also said that despite being quoted as an organizer for large Toronto street protests he was only a journalist covering the events

Meanwhile, the Conservative leader refused to say Thursday whether he believed his candidate was sympathetic to the Tamil Tigers or whether the party was looking into his background to ensure he had no connection to a group that the federal government listed in 2006 as a terrorist organization.

"We've taken a strong position against the Tamil Tigers. We've made them a banned group under the act; our position is clear," Harper said. "This is the party that listed the Tamil Tigers — previous governments have refused to do so. And our position on that is not going to change and we expect that to be everyone's position."

Paranchothy was not immediately available for comment but was expected to appear at a news conference Thursday afternoon at his riding office.

araj@postmedia.com

Twitter.com/althiaraj

Read more: http://www.canada.com/news/decision-canada/Tory+candidate+Tamil+sympathizer+Conservatives/4616384/story.html#ixzz1JvWtCUW8

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.