Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆதாரம் இல்லாத அவதூறுகளைத் தமிமர் மீது சுமத்தும் கனடா லிபரல் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பதா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதாரம் இல்லாத அவதூறுகளைத் தமிமர் மீது சுமத்தும் கனடா லிபரல் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பதா?

லிபரல் கட்சி தமிழர்களுக்கு அதரவுக் கட்சி என்று தமிழர்கள் லிபரலுக்கு வாக்கு அளிக்கின்றது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இவர்கள் தமிழர் வாக்குகளை கொள்ளையடிக்கப் பாசாங்கு செய்யும் கூட்டம் தான் என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள லிபரல் கட்சித்தலைவர் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத்தருகின்றோம். தரக்குறைவான, ஆதாரப+ர்வமற்ற குற்றச்சாட்டுக்களை நாலாந்தர மனிதர்களின் பாணியில் அவரது புத்தகத்தில் எமுதியிருப்பது ஒரு அருவருக்கத்தக்க செயவாகும். இதே போல பலவிடயங்கள் இருக்கின்றன.

தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடியபோதெல்லாம் எவரும் இக்கட்சியிலிருந்து வந்து தமிழர்களை மனிதர்களாக மதித்து ஆறுதல் கூற முன்வரவில்லை. இவர்களா தமிழர்களின் நண்பர்கள். தமிழ் மக்கள் ஜிம் கரிஜியானிஸ் இடம் சென்றபோது ஏசிக் கலைத்தார். ஜோன் மக்கே இலங்கைத்தூதரகத்தில் மாசி 9ம் திகதி 2011ஆம் ஆண்டு இலங்கைச்சுதந்திரதினம் கொண்டாடினார். டெறிக் லீ யிடம் சென்றபோது தமிழர் வாக்குகளில் நான் தங்கியிலுக்கவில்லை. உங்கள் இடத்திற்கு நான் வரமாட்டேன் என்று விரட்டியடித்தவர். தமிழரது கௌரவமும், தலைநிமிர்தலும் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக எடுக்கும் முடிவிலேயே உள்ளது. திருமதி ஜோசெப் பரராசசிங்கத்தைக் கனடாவிற்கும், கப்பலில் வந்த தமிழரை கனடாவிற்குள் அனுமதிதத்ததும் கொன்சசேற்றிவ் கட்சிதான். எனவே தமிழர்கள் ஆகிய நாங்கள் என்டீபிக்கோ அல்லது கொன்சவேற்றிவ் கட்சிக்குத்தான் வாக்களிக்வேண்டும். தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டிய தொகுதியாகிய டெறிக் லீயின் தொகுதியை தமிழருக்கு எதிரான இந்திய வம்சாவழி வந்த பிரம்ரன் வாழ் இந்திய உளவு துறை சார்ந்த சாண் சாக்கருக்கு இட்ம் கொடுத்தது லிபரல் கட்சி.

கொன்சவேற்றிவ் தமிழர் வந்த கப்பலை விளம்பரமாகப்பாவித்தாலும் அது தமிழருக்கு எதிரானதாக எடுத்துக்கொள்ளமுடியாது, அதாவது அது இப்படியாக நுழையும் குடிவரவுhளர்களைத் தடுக்க வேண்டிய சட்டம் தேவை என்றதைத்தான் சொல்லுகின்றதே தவிர அது தமிழருக்கு எதிராகப்பாவிக்கப்பட்டதல்ல. தமிழர் என்றால் உலகம் நடுங்கும் அளவிற்குத் தமிழர்கள் உலகிற்கு என்ன செய்தார்கள்? சிந்தியுங்கள் செயல்படுங்கள்.post-6713-0-09098100-1302920168_thumb.gi

கொன்சவேற்றிவ் தமிழர் வந்த கப்பலை விளம்பரமாகப்பாவித்தாலும் அது தமிழருக்கு எதிரானதாக எடுத்துக்கொள்ளமுடியாது, அதாவது அது இப்படியாக நுழையும் குடிவரவுhளர்களைத் தடுக்க வேண்டிய சட்டம் தேவை என்றதைத்தான் சொல்லுகின்றதே தவிர அது தமிழருக்கு எதிராகப்பாவிக்கப்பட்டதல்ல.

உதத் தான் இன்னொரு திரியில் சொல்லிக் கொண்டு இருக்கின்றேன். கார்பர் மனதில் என்ன இருக்கு என்று கண்டு கொள்வது இலகு. லிபரல் கள்ளம் பறையும் கட்சி. NDP இன்னும் இடது சாரி கொள்கை சரி என்று கனவு காணும் ஒரு கானல் கட்சி.

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்தவரையில் இங்குள்ள எந்தக்கட்சியும் தமிழர்கள் பற்றிய நிலைப்பாட்டில் தமிழ்மக்களுக்கான அடிப்படைப்பிரச்சனையை முழுமையாகத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளவே இல்லை. இங்குள்ள நம்மவர்கள் விழாக்களுக்கு வருகை தந்தாலும் மிக அவதானமாக எங்களின் முக்கிய பிரச்சனைகளை பேசுவதை தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் லிபரல், கொன்சவெட்றிவ், என்டிபி ஆகிய பிராதான கட்சிகளில் நம்முடையவர்கள் பரவலாக ஆதரவு வேலைகளில் ஈடுபட்டிருந்ததாலும் இதுவரை காலமும் எங்களை அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லை என்பதை அனைவரும் அறிவோம். இப்போதுகூட நாம் யாரைத் தெரிவு செய்தாலும் பெரிதாக எம்மினத்திற்கான குரலை இவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது, இருப்பினும் இம்முறை நாம் அளிக்கப்போகும் வாக்குகள் அடுத்த முறை தேர்தலில் போட்டியிடக்கூடிய அனைத்து கட்சிகளின் கவனத்தையும் கவரவேண்டும். காலம் முழுக்க சிதறுதேங்காய் அடித்தே சின்னாபின்னப்பட்டுப்போயிருக்கிறோம். இந்த முறை சிதறுதேங்காய் அடிக்கும் நிலையைக் கைவிடுவோம். மற்றது கனெடிய அரசாங்கத்தைப் பொறுத்தவரை கனடாவிற்கு வெளியே உள்ள விடயங்கள் தொடர்பில் எந்தவித ஆரோக்கியமான நிலைப்பாடுகளை அதாவது தமிழர் விடயத்தில் செயற்படுத்த முடியாது. ஆனால் கனடாவிற்குள்ளே வாழும் தமிழர் தொடர்பாக ஒரு பலப்பான நிலையைத் தோற்றுவிக்கலாம் அவ்வளவே. தமிழர்களாகிய நம் குரல் பூர்வீக பூமியை பற்றியதாக இருக்குமானால் அதை இங்கு எவரும் சட்டை செய்யப்போவதில்லை. நாமும் அந்த எதிர்பார்ப்பை வைத்து இந்தத் தேர்தலில் வாக்களித்தால் நிச்சயம் ஏமாற்றமடைவோம். ஆதலால் இவர்கள் அது செய்வார்கள் இது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு அப்பால் பலமான அரசியல் அத்திவாரத்திற்குரிய வாக்குப்பலத்தை உடையவர்களாக நம்மை வைத்திருந்தாலே கால ஓட்டத்தில் இந்த நிலைப்பாட்டிலிருந்து சிறிது சிறிதாக மாற்றத்தை உருவாக்க முடியும். அதற்கு இன்றைய நாளில் நாம் செய்ய வேண்டியது தேர்தலில் போட்டியிடும் நம்மவர்களுக்கு சிதறாத நம்முடைய வாக்குகளைப் பதிவு செய்வது மிக முக்கியமான ஒன்று நம் எல்லோருடைய வாக்குகளும் நம்மவர்களைச் சென்றடையும்போது போட்டியிடும் நம்மவர்களுக்கு வெகுவான பலம் ஏற்படும் அந்தப்பலந்தான் எதிர்கால மாற்றத்திற்கான ஆரம்ப நிலையாக இருக்கும்

நான் அறிந்தவரையில் இங்குள்ள எந்தக்கட்சியும் தமிழர்கள் பற்றிய நிலைப்பாட்டில் தமிழ்மக்களுக்கான ஆனால் கனடாவிற்குள்ளே வாழும் தமிழர் தொடர்பாக ஒரு பலப்பான நிலையைத் தோற்றுவிக்கலாம் அவ்வளவே. தமிழர்களாகிய நம் குரல் பூர்வீக பூமியை பற்றியதாக இருக்குமானால் அதை இங்கு எவரும் சட்டை செய்யப்போவதில்லை. நாமும் அந்த எதிர்பார்ப்பை வைத்து இந்தத் தேர்தலில் வாக்களித்தால் நிச்சயம் ஏமாற்றமடைவோம். ஆதலால் இவர்கள் அது செய்வார்கள் இது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புக்கு அப்பால் பலமான அரசியல் அத்திவாரத்திற்குரிய வாக்குப்பலத்தை உடையவர்களாக நம்மை வைத்திருந்தாலே கால ஓட்டத்தில் இந்த நிலைப்பாட்டிலிருந்து சிறிது சிறிதாக மாற்றத்தை உருவாக்க முடியும். அந்தப்பலந்தான் எதிர்கால மாற்றத்திற்கான ஆரம்ப நிலையாக இருக்கும்

புலம் பெயர்நாட்டில் உள்ள சகலரும் இந்த கருத்தை கவனத்தில் எடுக்க வேண்டும்....

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி ஜோசெப் பரராசசிங்கத்தைக் கனடாவிற்கும்

அவரது அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்போவதும் தற்போதைய கொன்சவேற்றிவ் கட்சிதான். :wub:

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி ஜோசெப் பரராசசிங்கத்தைக் கனடாவிற்கும், கப்பலில் வந்த தமிழரை கனடாவிற்குள் அனுமதிதத்ததும் கொன்சசேற்றிவ் கட்சிதான்
.

கொன்சவேல்வ் கட்சிக்கு நீங்கள் வேலை செய்கின்றீர்களா?? தவறு என்று சொல்லவில்லை. அடிப்படைப் பிரச்சாரம் என்பதைத் தமிழர் என்ற நிலையில் இருந்து வைக்கலாமே?? உங்களுக்கே தெரியும், பிரதமர் பதிவுக்குப் போட்டியிடுவரின் தனிப்பட்ட கருத்து, ஆட்சியில் அமரும்போது பாதிக்காது என்பது. அது இந்தியா, சிறிலங்கா அரசுகளில் நடக்கின்ற சம்பவமே அன்றி, இங்கில்லை.

எமக்கு ஒரு உயர்நிலை அடையும்வரை, எந்தக் கட்சி சார்ந்த அரசியலையும் சண்டையாக மாற்றுவதைத் தவிர்ப்பது நன்று. நிறையத் தமிழர்கள் மட்டுமல்லாமல், நிறையச் சீன உறவுகளும் தேர்தலில் போட்டி போடுவர்களுக்காக வேலை செய்கின்றார்கள். அவர்கள் எங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கலாம் என்பது வேறு விடயம். ஆனால் ஒரு தொடர்புக்கான அத்திவாரமாக இது இருக்கின்றது.

தொடர்ச்சியான உறவைப் பேணுதல் என்பது பிற்பட்ட காலப்பகுதியில் எமக்கு சமூகத்திற்கான தேவையாகவும் இருக்கின்றது. வெறுமனே இதனோடு நின்றுவிடாமல், தொடர்ச்சியான நட்புப் பாராட்டுதலையும் மேற்கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் தான் தமிழ்க் காங்கிரஸ் ஒழுங்கு செய்கின்ற பொங்கல் நிகழ்வுமாகும்.

எனக்குத் தெரிந்து பல நண்பர்கள் ஒவ்வொரு நேரத்தை ஒதுக்கி அனைத்துக் கட்சியினனருக்கும் வெவ்வேறான இடங்களில் தொண்டாற்றுகின்றனார்கள்

எத்தனை பேர் ஓய்வான நேரத்தில் இவர்களின் அரசியல் பிரச்சாரத்தில் பங்கெடுக்கப் போகின்றீர்கள்.என்ன பயன் என்று கேட்கலாம்.... சும்மா இருந்து கனவு காண்பதை விட, இப்படி ஏதாவது சந்தர்ப்பங்களைத் தேடுவது எவ்வளவோ மேல்!!

ஆதாரம் இல்லாத அவதூறுகளைத் தமிமர் மீது சுமத்தும் கனடா லிபரல் கட்சிக்கு தமிழர்கள் வாக்களிப்பதா?

லிபரல் கட்சி தமிழர்களுக்கு அதரவுக் கட்சி என்று தமிழர்கள் லிபரலுக்கு வாக்கு அளிக்கின்றது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். இவர்கள் தமிழர் வாக்குகளை கொள்ளையடிக்கப் பாசாங்கு செய்யும் கூட்டம் தான் என்பதைத் தமிழர்கள் உணரவேண்டும். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள லிபரல் கட்சித்தலைவர் எழுதிய புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைத்தருகின்றோம். தரக்குறைவான, ஆதாரப+ர்வமற்ற குற்றச்சாட்டுக்களை நாலாந்தர மனிதர்களின் பாணியில் அவரது புத்தகத்தில் எமுதியிருப்பது ஒரு அருவருக்கத்தக்க செயவாகும். இதே போல பலவிடயங்கள் இருக்கின்றன.

தமிழர்கள் வீதியில் இறங்கிப் போராடியபோதெல்லாம் எவரும் இக்கட்சியிலிருந்து வந்து தமிழர்களை மனிதர்களாக மதித்து ஆறுதல் கூற முன்வரவில்லை. இவர்களா தமிழர்களின் நண்பர்கள். தமிழ் மக்கள் ஜிம் கரிஜியானிஸ் இடம் சென்றபோது ஏசிக் கலைத்தார். ஜோன் மக்கே இலங்கைத்தூதரகத்தில் மாசி 9ம் திகதி 2011ஆம் ஆண்டு இலங்கைச்சுதந்திரதினம் கொண்டாடினார். டெறிக் லீ யிடம் சென்றபோது தமிழர் வாக்குகளில் நான் தங்கியிலுக்கவில்லை. உங்கள் இடத்திற்கு நான் வரமாட்டேன் என்று விரட்டியடித்தவர். தமிழரது கௌரவமும், தலைநிமிர்தலும் தமிழர்கள் ஒட்டு மொத்தமாக எடுக்கும் முடிவிலேயே உள்ளது. திருமதி ஜோசெப் பரராசசிங்கத்தைக் கனடாவிற்கும், கப்பலில் வந்த தமிழரை கனடாவிற்குள் அனுமதிதத்ததும் கொன்சசேற்றிவ் கட்சிதான். எனவே தமிழர்கள் ஆகிய நாங்கள் என்டீபிக்கோ அல்லது கொன்சவேற்றிவ் கட்சிக்குத்தான் வாக்களிக்வேண்டும். தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டிய தொகுதியாகிய டெறிக் லீயின் தொகுதியை தமிழருக்கு எதிரான இந்திய வம்சாவழி வந்த பிரம்ரன் வாழ் இந்திய உளவு துறை சார்ந்த சாண் சாக்கருக்கு இட்ம் கொடுத்தது லிபரல் கட்சி.

கொன்சவேற்றிவ் தமிழர் வந்த கப்பலை விளம்பரமாகப்பாவித்தாலும் அது தமிழருக்கு எதிரானதாக எடுத்துக்கொள்ளமுடியாது, அதாவது அது இப்படியாக நுழையும் குடிவரவுhளர்களைத் தடுக்க வேண்டிய சட்டம் தேவை என்றதைத்தான் சொல்லுகின்றதே தவிர அது தமிழருக்கு எதிராகப்பாவிக்கப்பட்டதல்ல. தமிழர் என்றால் உலகம் நடுங்கும் அளவிற்குத் தமிழர்கள் உலகிற்கு என்ன செய்தார்கள்? சிந்தியுங்கள் செயல்படுங்கள்.post-6713-0-09098100-1302920168_thumb.gi

கன்சவேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிடும் தமிழ் வேட்பாளரின் குளோப் அண்ட் மெயிலில் போனகிழமை வந்த பேட்டி.

அதன் தமிழாக்கங்கள் செய்தியாக

நிச்சயம் தமிழர்கள் கனேடிய அரசியலுக்குள் நுழையவேண்டும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், தரமானவர்கள் நுழைகிறார்களா என்பதை வைத்தே நாம் அவர்களுக்கு வாக்குப்போட முடியும். இந்த முறை நாம் எமது வாக்குப் பலத்தை நிரூபிக்கவே முடியாது. அடுத்த தேர்தலிலாவது தரமான தமிழர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கு வழி ஏற்படுத்திக் கொடுப்பதே சிறந்தது. அதைவிடுத்து, இந்த தவறானவர்களை ஊக்குவிப்பதன் மூலம், தரமான தமிழர்கள் எதிர்காலத்தில் போட்டியிடுவதைத் தடுக்கவே முனைகிறோம். நாடுகடந்த அரசாங்கத்திலும் தவறானவர்கள் போட்டியிட்டு வென்றதன் பலனை நாம் நன்கறிவோம். அதே பிழையை நாம் மீண்டும் இந்தக் குறுகிய காலத்திற்குள் செய்கிறோம் என்றால், எமது சிந்தனைத் திறன் எப்படிப்பட்டது என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள். தமிழன், எந்த முட்டாளை தேர்தலில் நிறுத்தினாலும் வாக்குப் போடுவான் என்று நிரூபிக்காதீர்கள். கடந்த காலங்களில் விட்ட தவறுகளைத் திருத்தப் பாருங்கள். நன்றாகச் சிந்தித்து உங்கள் வாக்குகளைப் போடுங்கள்.

இனிவரும் காலங்களில், தேர்தலில் நிற்கும் தமிழ் வேட்பாளர்களைப் பொறுத்தே, நான் தமிழச்சியாக வாக்களிப்பதா அல்லது கனேடியனாக வாக்களிப்பதா என்பதை முடிவெடுப்பேன். இந்த முறை, கனேடியனாக மட்டுமே வாக்களிக்கப்போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த தேர்தல் வரை தமிழ்மக்களுக்குள் ஒரு இனம் சார்ந்த கட்டுமானம் இருக்குமா என்பது சந்தேகத்துக்குரியது. இந்த இரண்டு வருட காலப்பகுதியில் நாம் கொண்டிருக்கின்ற மாற்றங்கள், எதிர்ப்புணர்வுகள் அடுத்த தேர்தலுக்குள் எம்மை உருப்படியில்லாத சமூகமாகத் தான் உருவெடுக்க வைக்கும். பாருங்கள்... அடுத்தமுறை.. தாமுண்டு. தம்வேலை உண்டு என்று தான் இருப்போம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.