Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கழுகார் பதில்கள்

ஊரார் எதுவும் சொல்லட்டும்இ கழுகார் கணிப்பு என்ன?

- சி.முரளிதரன்இ குரோம்பேட்டை

'வெற்றிக் களியாட்டம் போடும் அளவுக்கு ஜெயலலிதா வென்றுவிடவும் மாட்டார். மூலையில் முடங்கும் அளவுக்கு கலைஞர் தோற்றுவிடவும் மாட்டார்!’ - என்றுதான் வாக்குப்

பதிவுக்கு முந்தைய நாள் வரைக்கும் நினைத்தேன். ஆனால்இ மக்கள் வாக்களிக்க வந்த வேகத்தைப் பார்த்தால்... ஆளும் கட்சி மீதான வெறுப்பு இன்னும் தூக்கலாகவே தெரிகிறது!

அன்னா ஹசாரே?

- கே.சீனிவாசன்இ வில்லிவாக்கம்

அன்னா ஹசாரே சொன்ன ஒரு விஷயத்தை நினைவில் கொள்வோம். ''என் நீண்ட அனுபவத்தின் பின்னணியில் சிந்தித்தபோதுஇ நாட்டின் வளர்ச்சியையும் ஊழல் ஒழிப்பையும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகக் கண்டேன். ஒரு நாட்டுக்கு வளர்ச்சி மட்டும் போதாது; ஊழலையும் ஒழித்தால்தான் வளமான எதிர்காலம் உண்டு.

ஊழல்வாதிகள் நம்மை ஒழித்துக்கட்டவும் அவமானப்படுத்தவும் எதையும் செய்வார்கள். நான் எத்தனை உழைத்தாலும் என் வாழ்நாளில் ஊழலை ஒழித்துவிட முடியும் என்ற அதீத நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால்இ எனக்கு உள்ள சமூகத் தார்மீகக் கடமையை நான் செய்தாக வேண்டும்!'' என்கிறார்.

அன்னா வழியில் அயராது உழைப்போம்!

காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஏன் வளர முடியவில்லை. அவர்கள் எதனால் ஆட்சியை இழந்தார்கள்?

- கணி.பூங்குன்றன்இ பழநி

யேல் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற பேரறிஞர் அண்ணாவிடம் அங்கு இருந்த மாணவர்கள் இதே கேள்வியைக் கேட்டார்கள். ''நீண்ட நாட்களாகப் பதவியில் இருந்ததால்இ காங்கிரஸ் ஆட்சியை இழந்தது. எந்தக் கட்சியும் 10 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்கக் கூடாது. யாரும் நீண்ட நாள் பதவியில் இருந்தால்இ அதிகார போதை வந்துவிடும்!'' என்றார் அண்ணா.

நாம் பழகும்இ பார்க்கும் மனிதர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லையே?

- எஸ்.சத்யகுமார்இ திருச்சி

உலகில் நான்கு வகையான மனிதர்கள்​தான் இருக்கிறார்கள் என்கிறது அரபு இலக்கியம்.

1. ஒருவனுக்கு ஒன்றும் தெரியாதுஇ தனக்கு ஒன்றும் தெரியாது என்பதுகூட அவனுக்குத் தெரியாது. அவன் முட்டாள். அவனைவிட்டு விலகிவிடு!

2. ஒருவனுக்கு ஒன்றும் தெரியாதுஇ தனக்கு ஒன்றும் தெரியாது என்பது மட்டும் அவனுக்குத் தெரியும். அவன் எளியவன். அவனுக்கு கற்றுக்கொடு!

3. ஒருவனுக்கு எல்லாம் தெரியும். தனக்கு யாவும் தெரியும் என்பது மட்டும் அவனுக்குத் தெரியாது. அவன் தூங்குகிறான். அவனை எழுப்பிவிடு!

4. ஒருவனுக்கு எல்லாம் தெரியும். தனக்கு எல்லாம் தெரியும் என்பதும் அவனுக்குத் தெரியும். அவன்தான் அறிவில் சிறந்தவன். அவனைப் பின்தொடர்ந்து செல்!

புத்தகமா... அதை எழுதியவரா? யாரைப் பிடிக்கும் உமக்கு?

என்.சுகந்திஇ கும்பகோணம்

'புத்தகங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின் தொடராதீர்கள்’ என்கிறார் கண்ணதாசன். அனுபவஸ்தர் சொல்வதைக் கேளுங்கள்!

பிரபாகரன்?

- ஆர்.சுந்தரம்இ கெங்குவள்ளி

ஈழத் தமிழர் ஒருவரை சந்தித்தேன். அவர் சொல்கிறார். 'மே 15-ம் தேதிதான் நான் நந்திக் கடல் பகுதியில் இருந்து தப்பித்தேன். என்னால் முடிந்தது... அண்ணனால் முடியாதா?’ என்றார்!

புலிகளுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர் ஒருவரைக் கைது செய்ததாம் இலங்கை ராணுவம். 'பிரபாகரனை நீங்கள் கடைசியாக எப்போது பார்த்தீர்கள்?’ என்று அவரிடம் கேட்டார்களாம். செத்துப்போனதாய் ஒரு உடலைக் காட்டியவர்களேஇ பிரபாகரனை கடைசியாக எப்போது பார்த்தீர்கள் என்று ஏன் கேட்க வேண்டும்?

இப்படி அரசல் புரசலாகச் சில செய்திகள் காற்றில் மிதந்து வருகின்றன. இந்திய அரசாங்கம் தயங்குவதையும் இலங்கை அரசாங்கம் பதுங்குவதையும் வைத்துப் பார்த்தால்... சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்தபடியே இருக்கிறது!

பதவி நாற்காலிக்கு மேலே எப்போதும் ஒரு கத்தி தொங்குகிறது என்கிறார்களே... எதனால்?

- தமிழ் அமுதம்இ துறையூர்

சிசிலித் தீவுஇ இத்தாலியின் தென் முனையில் இருக்கிறது. அதை டயனாசியஸ் என்ற அரசன் ஆண்டு வந்தான். அந்த சமயத்தில் டெமாக்கிள்ஸ் என்ற அறிஞன் ஒருவனும் அந்த நாட்டில் இருந்தான். அரசனின் ராஜபோக வாழ்க்கையைப் பற்றிக் குத்தலாகப் பேசுவது அந்த அறிஞனின் வழக்கம். இது காதில் விழுந்து எரிச்சலான மன்னன்இ டெமாக்கிள்ஸுக்கு பாடம் கற்பிக்க நினைத்தான். 'நீங்கள் அரண்மனைக்கு வர வேண்டும். மன்னர் உங்களுக்கு விருந்து வைப்பார். அன்று ஒரு நாள் மட்டும் நீங்கள் இந்த நாட்டின் மன்னராக இருக்கலாம்’ என்று அழைப்பு வந்தது.

குறிப்பிட்ட நாளில் டெமாக்கிள்ஸ் வந்தார். சொன்னபடியே ராஜ மரியாதைதான். மன்னருக்கான உடைகள் அணிவிக்கப் பட்டன. அரச மண்டபத்தில் டயனாசியஸுக்கு சமமாக டெமாக்கிள்ஸ் உட்காரவைக்கப்பட்டார். தனக்குத் தரப்பட்ட மரியாதையில் நெகிழ்ந்து பொங்கிப் போனார். தான் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தார். திடீரென மேலே பார்த்தார். தலைக்கு மேலே பெரிய கத்தி ஒன்று தொங்கிக்கொண்டு இருந்ததுஇ எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில்! குதிரையின் வாலில் இருந்து எடுக்கப்பட்ட ஒற்றை முடியில் அது ஊசலாடிக்கொண்டு இருந்தது.

அதற்குப் பிறகு சாப்பாடுஇ சந்தோஷம் எதுவும் உள்ளே போகவில்லை டெமாக்கிள்ஸுக்கு. மன்னன் எப்போதும்போல உற்சாகமாகவே இருந்தார். டெமாக்கிள்ஸின் நினைப்பெல்லாம் தலைக்கு மேல் தொங்கும் வாள் மீதே! மன்னரிடம் கவனம் செலுத்திப் பேசக்கூட முடியவில்லை.

கடைசியாக மன்னன் சொன்னான்... 'அதிகாரம் என்பது நீங்கள் எட்டி நின்று பார்க்கிற மாதிரி சுகமானது அல்ல. எந்த நேரமும் எதுவும் நடக்கும்... கண்ணுக்குத் தெரியாத ஒரு கத்தி தொங்கிக்கொண்டே இருக்கும். நிம்மதிக்கே வழி இல்லை!’

'டெமாக்கிள்ஸ் ஸ்வார்டு' என்ற வார்த்தையே இந்தக் கதையில் இருந்துதான் பிரபலம் ஆனது!

ஏப்ரல் மாதம் நடக்கும் தேர்தலுக்கு மே மாதம் ரிசல்ட் வருவது டூ லேட் இல்லையா?

- சி.ஆல்ட்ரின்இ நாகர்கோவில்

அடப் போங்க சார்! சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வேல்துரையின் வெற்றி செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. வேல்துரை வெற்றி பெற்றது 2006 சட்டமன்றத் தேர்தலில். தீர்ப்பு வந்தது 2011 சட்டமன்றத் தேர்தல் தேதியான ஏப்ரல் 13. அது டூ லேட் என்றால்இ இது?

ஏதோ ஒரு காலகட்டத்தில் உருவான பழமொழிகள் இன்றைய சூழலுக்குப் பொருத்தமானவையா?

- பி.கண்ணதாசன்இ கள்ளக்குறிச்சி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்தில் உள்ள சில கிராமங்களில் வாக்களிக்க தி.மு.க-வினர் பணம் சப்ளை செய்துள்ளனர். இந்தப் பணத்தைச் சிலர் வாங்க மறுத்துள்ளனர். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி. வாங்க மறுத்த பணத்தை அவர்கள் வீட்டுக் கூரையில் செருகிவிட்டுச் சென்றுள்ளனர் கில்லாடி தி.மு.க-வினர். 'கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிச்சுக்கிட்டு கொடுக்கும்’ என்கிற பழமொழியை நீங்கள் நம்பத்தானே வேண்டும்?''

நன்றி-விகடன்

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிகளா! அந்தப் போராளி சாதாரணமானவனாக இருந்திருப்பான். அதாவது, அவன் மக்களோடு மக்களாக சென்று தப்பித்து வெளிவந்து இருப்பான்.

பிரபாகரன் அப்படி தப்பிக்க முடியுமோ? ஜூனியர் விகடன்தான் யோசிக்காமல் பதில் எழுதுகின்றது என்றால் இங்கே கொண்டு வந்து போடும் புலவருக்கு யோசிப்பதற்கு நேரம் இல்லையோ? (புலம்பெயர் நாடுகளில் பலருக்கு நேரம் இருப்பதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றார்கள்)

பிரபாகரன் வருவார் என்று காலத்தினை வீணடிப்பதிலும் பார்க்க அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என யோசித்துச் செயற்படலாமே? (இப்படி நான் இங்கே எழுதியவுடன் பலர் வருவார்கள். ஐசே, உமக்கு என்ன தெரியும். நாம் எம்புட்டு வேலைத் திட்டங்கள் செய்து கொண்டிருக்கின்றோம் என்று கேட்டு எழுதித் தள்ளுவார்கள்.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடப் பாவிகளா! அந்தப் போராளி சாதாரணமானவனாக இருந்திருப்பான். அதாவது, அவன் மக்களோடு மக்களாக சென்று தப்பித்து வெளிவந்து இருப்பான்.

பிரபாகரன் அப்படி தப்பிக்க முடியுமோ? ஜூனியர் விகடன்தான் யோசிக்காமல் பதில் எழுதுகின்றது என்றால் இங்கே கொண்டு வந்து போடும் புலவருக்கு யோசிப்பதற்கு நேரம் இல்லையோ? (புலம்பெயர் நாடுகளில் பலருக்கு நேரம் இருப்பதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றார்கள்)

பிரபாகரன் வருவார் என்று காலத்தினை வீணடிப்பதிலும் பார்க்க அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என யோசித்துச் செயற்படலாமே? (இப்படி நான் இங்கே எழுதியவுடன் பலர் வருவார்கள். ஐசே, உமக்கு என்ன தெரியும். நாம் எம்புட்டு வேலைத் திட்டங்கள் செய்து கொண்டிருக்கின்றோம் என்று கேட்டு எழுதித் தள்ளுவார்கள்.)

nirmalan

உங்களை ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு உண்மையாகப் பதில் எழுதுங்கள், உங்கள் பதிலைக் கண்டு நீங்கள் மேலே எழுதியதற்கு கருத்து எழுதுகிறேன்.......உங்கள் பதிலையும் அனுமானித்து வைத்திருக்கிறேன் என் கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில்...... உங்களுக்கும் சரியான பதில் கிடைக்கும்.

கேள்வி: நீங்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவரா இல்லையா?

Edited by ilankavi

  • கருத்துக்கள உறவுகள்

நான் கடவுள் நம்பிக்கையற்றவனே.

கழுகாருக்கு இன்னொரு பெயர் மதன்; விகடன் கார்டூனிஸ்ட் மதன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதலில் சுபா சுந்தரம் மற்றும் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதித்த போது, அடுத்தது நீ என் வன்னிப் பக்கம் பார்த்து தலைவர் பக்கம் விரல் காட்டி 2003 களில் கார்டூன் வரைந்த மேதை இவர். போலி இந்திய தேசியத்தை தன் பதில்களில் உயர்த்தி உணர்ச்சிவசப்பட்டு பதில் கொடுக்கும் ஒரு இந்திய தேசிய வாதி

கழுகாருக்கு இன்னொரு பெயர் மதன்; விகடன் கார்டூனிஸ்ட் மதன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முதலில் சுபா சுந்தரம் மற்றும் அனைவருக்கும் தூக்கு தண்டனை விதித்த போது, அடுத்தது நீ என் வன்னிப் பக்கம் பார்த்து தலைவர் பக்கம் விரல் காட்டி 2003 களில் கார்டூன் வரைந்த மேதை இவர். போலி இந்திய தேசியத்தை தன் பதில்களில் உயர்த்தி உணர்ச்சிவசப்பட்டு பதில் கொடுக்கும் ஒரு இந்திய தேசிய வாதி

ஒரு புத்திசாலியால் தான் பலரை முட்டாள் ஆக்க முடியும். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.