Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ. நா. அறிக்கைக்கு எதிராக பாரிய நடவடிக்கை: அயல் நாடுகளுக்கு பறக்கும் சிறப்பு தூதுவர்கள்

Featured Replies

ஐ. நா. அறிக்கைக்கு எதிராக பாரிய நடவடிக்கை: அயல் நாடுகளுக்கு பறக்கும் சிறப்பு தூதுவர்கள்

வவுனியா நிருபர்

ஞாயிற்றுகிழமை, ஏப்ரல் 17, 2011

மஹிந்த இராஜபக்‌ஷ, கோத்தபாய இராஜபக்‌ஷ, பேராசிரியர் பீரிஸ் உட்பட பல முக்கிய புள்ளிகள் ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக மிகப்பெரும் முறியடிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இதன் படி முதலாவது சீனா, இரஸ்யா ஆகிய நாடுகளின் உதவியினை நேரடியாக உத்தியோக பூர்வமாக கேட்பது.

அடுத்ததாக நடு நிலை நாடுகளுக்கு விசேட சிறப்பு தூதுவர்களை உடனடியாக அனுப்புவது.

மூன்றாவதாக அணி சேரா நாடுகளுக்கு ஜனாதிபதியின் சிறப்பு தூதுவர்களை அனுப்பி ஐக்கிய நாடுகளுக்கு கண்டன கடிதங்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்வது. இதன்படி இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, ஈரான் உட்பட பல நாடுகளுக்கு விசேட தூத்டுவர்கள் பறக்கவுள்ளனர்.

மேலும் உள்ளூரில் போராட்டங்கலை தீவிரப்படுத்துவது.

இது இவ்வாறு இருக்க முன் நாள் வெளிவிவகார செயலர்களான பாலிகக்கார, நிகால் ரொட்ரிகோ, பேர்ணாட் குனதிலக ஆகியோரை உடனடியாக அழைத்து அவர்கலை அறிக்கையொன்று தயாரிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளது.

Eelanatham

இந்த இடத்தில், இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில், தமிழர்கள் (தாயகத்திலும் , புலம்பெயர் தேசத்திலும்) எவ்வாறு திட்டமிட்டு செயல்படுகின்றார்கள் என்பது எமது தலைவிதியை நிர்மாணிக்க கூடும்.

தாயக மக்களைபொறுத்தவரையில், அவர்களால் இரகசியமாகவும், தமது உயிரை பயணம் வைத்துதான் எதுவும் செய்ய முடியும். எனவே அவர்களிடம் இருந்து பெரிதாக ஒரு நடவடிக்கையையும் எதிர்பார்க்க முடியாது. கூட்டமைப்பை போன்றவர்கள் இந்த அறிக்கைக்கு எதிராக செயல்பட பணம் கொடுத்து இல்லை துப்பாக்கி முனையில் நிர்ப்பந்திக்கப்படலாம். அதேவேளை அவர்கள் வெளிநாட்டு இராசதந்திரிகளை சந்திக்கும்போது மக்களின் அன்றாட வாழ்வியல், படும் துன்பங்கள், மறுக்கப்படும் மனித உரிமைகள் /அரசியல் தீர்வு பற்றி கூறலாம்.

எனவே புலம்பெயர் மக்களே நடந்த பேரழிவின் விளைவை ஒரு அரசியல் வெற்றியாக மாற்றவேண்டிய பங்கை ஆற்றவேண்டும். முதலில் எல்லோரும், எல்லா அமைப்புக்களும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும், எல்லோருக்கும் தமது பங்குகளை ஆற்ற இடமுண்டு. எல்லோரும் அழிவுகளை, மக்களின் அவலங்களை, மாவீரர்களின் கொடைகளை நினைவில் கொண்டு செயல்படவேண்டும்.

அதனால் மட்டுமே சிங்களத்தின் குற்றங்களை நிரூபித்து, எம்மை இவர்களுடன் வாழ கேட்பது எவ்வாறு? என யதார்த்தை முன்வைத்து, ஒரு சுயாதீன மக்கள் வாக்கெடுப்பு மூலம், ஐ.நா. உதவியுடன் பிரிந்து போகும் நிலையை எட்டவேண்டும்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகு வேண்டும்: ஐ.நா. நிபுணர் அறிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு சர்வதேச கண்காணிப்பிலான அதிகார அலகொன்று வழங்கப்பட வேண்டும் என்று ஐ.நா. நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உட்பட முறையற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் அதிகார சமப்பகிர்வின்மையே காரணம் என்பதைக் கண்டறிந்துள்ள ஐ.நா. நிபுணர் குழு அதனை எதிர்காலத்திலும் தொடரவிடாமல் தடுக்கும் வகையில் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

அதில் முக்கியமானது தமிழ் மக்களுக்குத் திருப்திப்படத்தக்க வகையில் அதிகாரப் பகிர்வொன்றை வழங்கி, தமிழ் மக்கள் உள்ளடங்கும் அதிகார அலகு தொடர்பில் சர்வதேசத்தின் கண்காணிப்பு அவசியம் என்று அது பரிந்துரைத்துள்ளது.

அதன் பிரகாரம வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு கணிசமான அதிகாரங்களுடன் கூடிய அதிகார அலகொன்று வழங்கப்படுவதுடன், அதன் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தை விட சர்வதேசத்தின் கண்காணிப்புக்குழுவொன்றுக்கு தலையிடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பது நிபுணர் குழுவின் பரிந்துரையின் சாராம்சமாகும்.

அத்துடன் அங்கு அமையும் உருவாக்கப்படும் அதிகாரப் பிரிவு (மாகாண சபை அல்லது சமஷ்டி அரசாங்கம்) சர்வதேசத்துக்குப் பொறுப்புக் கூறுவதாக அமைந்திருக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நேரத்தில், தமிழர்கள் (தாயகத்திலும் , புலம்பெயர் தேசத்திலும்) எவ்வாறு திட்டமிட்டு செயல்படுகின்றார்கள் என்பது எமது தலைவிதியை நிர்மாணிக்க கூடும்.

Edited by hari

Boyle reacts to UN report: "Creating Tamil Eelam, the only remedy"

[TamilNet, Saturday, 16 April 2011, 23:25 GMT]

Reacting to the contents of the UN expert panel's report on Sri Lanka's war-crimes, Professor Boyle, expert in International Law, and Professor at the University of Illinois College of Law, told TamilNet, "there is absolutely no way the GOSL [Government of Sri L anka] is going to implement any of them [panel's recommendations], and the GOSL has already rejected all of them, according to published reports. Therefore, under these circumstances of longstanding and ongoing genocide against them [the Tamils], the only effective remedy the Tamil People now have is to create the State of Tamil Eelam and move to have the International Community recognize it."

Professor Boyle added:

These excerpts support the worst conclusions that many of us drew during the course of the GOSL genocide against the Tamils in Vanni, which continues even today.

All Tamils must support Recommendation 1 (B) (ii) of the Report, that the U.N. Secretary General set up an International Commission of Inquiry on Sri Lanka to investigate GOSL war crimes, crimes against humanity, and genocide against the Tamils, by reference to and in accordance with the Statute of the International Criminal Court.

The U.N. Human Rights Council just recently established such a Commission on Libya. But given the Council’s notorious bias in favor of Sri Lanka and against the Tamils, as recognized by this Report, the Council is not a viable mechanism for the establishment of that GOSL Commission.

The U.N. Secretary General must do it himself on behalf of the United Nations Organization itself. As for the rest of these Recommendations, there is absolutely no way the GOSL is going to implement any of them, and the GOSL has already rejected all of them, according to published reports.

Therefore, under these circumstances of longstanding and ongoing genocide against them, the only effective remedy the Tamil People now have is to create the State of Tamil Eelam and move to have the International Community recognize it. CREATE THE STATE OF TAMIL EELAM!

In Recommendations 4(A) the report states: The [uN] Human Rights Council should be invited to reconsider its May 2009 Special Session Resolution (A/HRC/8-11/L. 1/Rev. 2) regarding Sri Lanka, in light of this report.

Boyle had earlier commented on the resolution: This is one of the most unprincipled and shameless resolutions ever adopted by any body of the United Nations in the history of that now benighted Organization. It would be as if the U.N. Human Rights Council had congratulated the Nazi government for the "liberation" of the Jews in Poland after its illegal and genocidal invasion of that country in 1939."

  • கருத்துக்கள உறவுகள்

:( நாடுகடந்த அரசாகட்டும் அல்லது பேரவையாகட்டும் அல்லது நெடியவன் குழுவாகட்டும், இதுபற்றி என்ன செய்வதாக உத்தேசம்?? எமக்குச் சார்பாகத் திரும்பியிருக்கும் இந்த சூழ்நிலையை எப்படி எமக்கான இறுத்தித் தீர்வை நோக்கித் தள்ளப்போகிறோம்??

போர்க்குற்ற விசாரணைகளின் வெற்றியென்பது எமக்கான அரசியல் தீர்வொன்றின் உருவாக்கத்தில்த்தான் தங்கியிருக்கிறதென்பதை நாம் மறந்துவிடக்கூடாது. விசாரணை நடந்ததா, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? எமது வேலையும் முடிந்துவிட்டதென்று இருப்போமானால் எமது சரித்திரத்திலேயே எமக்கான சந்தர்ப்பத்தை நிரந்தரமாகவே தொலைத்தவர்களாகிவிடுவோம்.

. தீர்வினை நோக்கியல்லாத எந்த போர்க்குற்ற விசாரணைகளும் வெறும் காற்றடைத்த பைய்யாகத்தான் இருக்க முடியும்.

தற்போதைய தமிழினத்தின் அரசியல் தலமைகள் என்று உரிமை கோருபவர்கள் இதச் சந்தர்ப்பத்தை கெட்டியாகப் பிடித்துகொள்வதோடு மக்களை ஒன்றிணைத்து ஒரு முழுமையான போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். 2009 இல் போரை நிறுத்தவும் மக்கள் பாதுகாப்பிற்குமாக முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு நிகராக இவை அமைய வேண்டும். அதேவேளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர் அந்தந்த நாட்டுச் சட்டங்களை மீறாத வகையிலும், ராசதந்திர முறையிலும் தமது அழுத்தத்தினைப் பிரியோகிக்க வேன்டும். ஐ. நா குழுவின் அறிக்கையால் கிடைத்திருக்கும் நம்பகத்தன்மையையும், அங்கீகாரத்தையும் நாம் இப்போது எமது பக்க நியாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

செய்வார்களா??

:(நாடுகடந்த அரசாகட்டும் அல்லது பேரவையாகட்டும் அல்லது நெடியவன் குழுவாகட்டும், இதுபற்றி என்ன செய்வதாக உத்தேசம்?? எமக்குச் சார்பாகத் திரும்பியிருக்கும் இந்த சூழ்நிலையை எப்படி எமக்கான இறுத்தித் தீர்வை நோக்கித் தள்ளப்போகிறோம்??

போர்க்குற்ற விசாரணைகளின் வெற்றியென்பது எமக்கான அரசியல் தீர்வொன்றின் உருவாக்கத்தில்த்தான் தங்கியிருக்கிறதென்பதை நாம் மறந்துவிடக்கூடாது. விசாரணை நடந்ததா, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? எமது வேலையும் முடிந்துவிட்டதென்று இருப்போமானால் எமது சரித்திரத்திலேயே எமக்கான சந்தர்ப்பத்தை நிரந்தரமாகவே தொலைத்தவர்களாகிவிடுவோம்.

. தீர்வினை நோக்கியல்லாத எந்த போர்க்குற்ற விசாரணைகளும் வெறும் காற்றடைத்த பைய்யாகத்தான் இருக்க முடியும்.

தற்போதைய தமிழினத்தின் அரசியல் தலமைகள் என்று உரிமை கோருபவர்கள் இதச் சந்தர்ப்பத்தை கெட்டியாகப் பிடித்துகொள்வதோடு மக்களை ஒன்றிணைத்து ஒரு முழுமையான போராட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். 2009 இல் போரை நிறுத்தவும் மக்கள் பாதுகாப்பிற்குமாக முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டங்களுக்கு நிகராக இவை அமைய வேண்டும். அதேவேளை புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர் அந்தந்த நாட்டுச் சட்டங்களை மீறாத வகையிலும், ராசதந்திர முறையிலும் தமது அழுத்தத்தினைப் பிரியோகிக்க வேன்டும். ஐ. நா குழுவின் அறிக்கையால் கிடைத்திருக்கும் நம்பகத்தன்மையையும், அங்கீகாரத்தையும் நாம் இப்போது எமது பக்க நியாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

செய்வார்களா??

:( நாடுகடந்த அரசாகட்டும் அல்லது பேரவையாகட்டும் அல்லது நெடியவன் குழுவாகட்டும், இதுபற்றி என்ன செய்வதாக உத்தேசம்?? எமக்குச் சார்பாகத் திரும்பியிருக்கும் இந்த சூழ்நிலையை எப்படி எமக்கான இறுத்தித் தீர்வை நோக்கித் தள்ளப்போகிறோம்??

போர்க்குற்ற விசாரணைகளின் வெற்றியென்பது எமக்கான அரசியல் தீர்வொன்றின் உருவாக்கத்தில்த்தான் தங்கியிருக்கிறதென்பதை நாம் மறந்துவிடக்கூடாது. விசாரணை நடந்ததா, குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டார்களா? எமது வேலையும் முடிந்துவிட்டதென்று இருப்போமானால் எமது சரித்திரத்திலேயே எமக்கான சந்தர்ப்பத்தை நிரந்தரமாகவே தொலைத்தவர்களாகிவிடுவோம்.

எமது இலக்கு ஒரு சுதந்திரமான அரசியல் தீர்வே. அதற்கு இந்த விசாரணை ஒரு பெரும் பாலமாக, அடுத்த பயணப்பாதையாக அமையவேண்டும்.

நாடுகடந்த அரசு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் சம்பந்தப்படவர்களை நிறுத்தசொல்லி கேட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=84124

ஒவ்வொரு பிரச்சனையும் தனித்தன்மை வாய்ந்தது. ஆனால், நாம் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து சர்வதேசம் தரக்கூடியதற்கு மேலாக கேட்டால்தான் வெற்றியாகும். அதேவளை இந்த பிரச்சனையை வைத்து சிங்களத்தின் ஒற்றுமையையும் சிதைக்கவேண்டும்.

... இந்நேரத்தில் இவர்களின் செயல்கள்.நடவடிக்கைகள் ... குறிப்பாக சர்வதேச சமூகத்தின் பார்வையை நோக்கிய ... தான் மக்கள் மத்தியில் இவர்களை நிலைக்க வைக்கும் ...

.... அதை விடுத்து இவர்கள் ஒருவருக்கு நாம் எங்கள் குரல்களை/ஆதரவை கொடுக்க, அவர்கள் அதனை பிழையாக புரிந்து மற்றைய அமைப்புகளை தாக்குவதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர்!!!!!

... உருத்திரகுமார்கள் ஆகட்டும், நெடியவன்கள் ஆகட்டும் இல்லை இமானுவேல் அடிகளார்கள் ஆகட்டும் ... உங்களை தேர்வு செய்தோ அல்லது அமைப்புக்களை எமது பிரதிநிதிகள் என நாம் அங்கீகரித்தாகி விட்டது ... இனி உங்களின் செயல்கள் தான் எமக்குத்தேவை ... மாறாக ஏமாற்றும் அறிக்கைளோ, வாய்ச்சவடால்களோ அல்ல!!!

... புரியுங்கள் ... இயலாது விடில் ஒதுங்குங்கள்!! ஏமாற்ற முற்படின் தூக்கி எறியத்தயங்க மாட்டோம்!!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எமக்குள்ளே இருக்கின்ற அமைப்புக்கள் புரிந்து கொள்ளக்கூடியது என்னவெனில், நீங்கள் ஏதாவது உருப்படியாகச் செய்தாலே மக்கள் ஆதரவு உங்களுக்குக் கிடை;ககும். மற்றவரிதைத் தூற்றி உங்களை உயர்த்திக் கொட்டலாம் என்ற நினைப்பில் இருந்தால் நிச்சயம், காலப்போக்கில், உங்களின் அடையாளம் தொலைந்து போகும்.... ஏதாவது செய்யுங்கள். எம் மக்களுக்காக.....

  • தொடங்கியவர்

1.ஒற்றுமையாகவும், உறுதி குலையாமலும் எல்லா தமிழ் அமைப்புக்களும் இருக்க வேண்டும்.

2.சிங்களம் தான் தப்புவதற்காக தமிழர்களையோ அல்லது தமிழ் அமைப்புக்களையோ கட்டாயம் பாவிக்க முற்படும் நாம் எல்லோரும் சேர்ந்து அதனை முறியடிக்க வேண்டும்.

3 ஒரு வேளை விடுதலைப்புலிகளையும் விசாரிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை வேண்டின் அதற்கும் வெளி நாடுகளில் இருக்கின்ற சிலர் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்க வேண்டும். நாட்டு நலன் கருதி இதனை செய்யவேண்டும்.

4. சிங்களத்துடன் ஐகிய நாடுகள் சபை ஏதும் வியாபாரம் செய்ய முற்பட்டால் நாம் அனைத்து வழிகளிலும் நீதி வேண்டி போராட தயாராக இருக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டமோ, உண்ணா நோன்போ எதுவாக இருந்தாலும் தயாராக இருக்க வேண்டும்.

5. இந்த நேரத்தில் முந்திரி கொட்டைபோல ஒவ்வொருவரும் அலுவல் பார்க்கின்றோம் என விலாசம் காட்டாது. நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் மட்டும் செயற்படுவதற்கு அனைத்து கட்டமைப்புக்களையும் சில புத்திஜீவிகளையும் சேர்த்து ஒரு சிறப்பு குழு அமைப்பது நல்லது.

6. அதாவது நாடு கடந்த அரசு, உலக தமிழர் பேரவை மற்றும் நாடுவாரியாக செயற்படும் முக்கிய கட்டமைப்புக்கள் ஆகியவற்றில் இருந்து தேர்வு செய்வது நல்லது.

7. இதில் பிரச்சினை என்னவென்றால் பூனைக்கு மணி கட்டுவது யார்?

உருட்திரகுமாரன் சார் கூப்பிட்டால் மற்றவர்கள் வரமாட்டார்கள். மற்றவர்கள் கூப்பிட்டால் நாடு கடந்தது வருமோ தெரியாது.

8. அல்லது போனால் நாடு கடந்த அரசின் ஆலோசனைக்குழு மற்றும் பேச்சுவார்த்தையின் போது இருந்த ஆலோசனைக்குழு ஆகியன இந்த பணியை செய்யவேண்டும். அதில் பாதர் இம்மானுவல் அவர்கலையும் சேர்க்கலாம்.

9. போர்க்குற்றத்தில் இயக்கமும் உள்ளடக்கபப்ட்டு ( உண்மையோ, பொய்யோ வேறு விடயம்) இருப்பதால் இயக்க சாயம் பூசாமல் இருப்பதே நல்லது.

போராட்டம் மற்றும் கீழ் நிலை பணிகளில் பணி புரிவதற்கு நான் முழு நேரமாக பணி செய்வேன் ( சாப்பாடு தரவேண்டும், உண்ணா நோன்பு என்றால் அதுவும் தேவை இல்லை ^_^ )

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

... இந்நேரத்தில் இவர்களின் செயல்கள்.நடவடிக்கைகள் ... குறிப்பாக சர்வதேச சமூகத்தின் பார்வையை நோக்கிய ... தான் மக்கள் மத்தியில் இவர்களை நிலைக்க வைக்கும் ...

.... அதை விடுத்து இவர்கள் ஒருவருக்கு நாம் எங்கள் குரல்களை/ஆதரவை கொடுக்க, அவர்கள் அதனை பிழையாக புரிந்து மற்றைய அமைப்புகளை தாக்குவதிலேயே காலத்தைக் கழிக்கின்றனர்!!!!!

... உருத்திரகுமார்கள் ஆகட்டும், நெடியவன்கள் ஆகட்டும் இல்லை இமானுவேல் அடிகளார்கள் ஆகட்டும் ... உங்களை தேர்வு செய்தோ அல்லது அமைப்புக்களை எமது பிரதிநிதிகள் என நாம் அங்கீகரித்தாகி விட்டது ... இனி உங்களின் செயல்கள் தான் எமக்குத்தேவை ... மாறாக ஏமாற்றும் அறிக்கைளோ, வாய்ச்சவடால்களோ அல்ல!!!

... புரியுங்கள் ... இயலாது விடில் ஒதுங்குங்கள்!! ஏமாற்ற முற்படின் தூக்கி எறியத்தயங்க மாட்டோம்!!

நல்ல கருத்து நெல்லையன். உரியவர்களுக்கு உறைக்கட்டும்.

இவ்வளவு தூரம் வந்து விட்டோம்! இன்னும் போக வேண்டியது கொஞ்சத் தூரம் தான் உறவுகளே!!!

சீமானின் ராமேஸ்வரப் பேச்சில் இருந்து

Edited by Punkayooran

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.