Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராகவன் பரஞ்சோதி: ஓர் கனேடிய தமிழ் ஊடகத்துறை கலைஞர் பற்றிய எனது சில எண்ணக்கருக்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

இன்னமும்கூட ராதிகா, ராகவன் போட்டியிடும் தொகுதிகளின் முடிவுகளின் நிலமை அரைவாசியை கடக்கவில்லை. Conservative கட்சி பெருன்பான்மை அரசை அமைப்பது ஓரளவு முடிவாகியுள்ளது. கியூபெக்கில் தனிநாடு கோரும் BLOCஇன் படுதோல்வி, கனடாவில் லிபரலின் படுதோல்வி, கனடாவில் என்.டீ.பி கட்சியின் பெருவெற்றி கனேடிய அரசியலில் ஓர் புதிய அத்தியாயத்தை எழுதப்போகின்றது. எல்லாம் நன்மைக்கே என எதிர்பார்ப்போம்.

  • Replies 120
  • Views 12.5k
  • Created
  • Last Reply

கலைஞன்,

இந்த இரண்டு தொகுதிகளிலும் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் கிட்டத்தட்ட 50 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது என்னும் போது வாக்களித்தவர்களின் வாக்குகளில் 70- 80 சதவீதமான வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளதெனக் கருதலாம்.

  • தொடங்கியவர்

நீங்கள் கூறுவதும் சரிதான். தற்போதைய நிலமைகளின்படி ராகவனின் வெற்றி வாய்ப்பும் முன்பை விட அதிகமாகியுள்ளது.

Preliminary Results

Scarborough--Rouge River Last updated: 23:33 ET

Party Candidate Votes % Votes

Independent Mark Balack 298 0.8 0.8%

Conservative Marlene Gallyot 11,243 29.9 29.9%

Liberal Rana Sarkar 10,021 26.7 26.7%

Green Party George B. Singh 540 1.4 1.4%

NDP-New Democratic Party Rathika Sitsabaiesan 15,482 41.2 41.2%

Total number of valid votes: 37,584

Polls reporting: 180/211 Voter turnout: 37,584 of 83,285 registered electors (45.1%)

The number of registered electors shown in this table does not include electors who registered on election day.

Preliminary Results

Scarborough Southwest Last updated: 23:41 ET

Party Candidate Votes % Votes

Green Party Stefan Dixon 1,296 4.0 4.0%

NDP-New Democratic Party Dan Harris 11,268 34.7 34.7%

Conservative Gavan Paranchothy 10,503 32.4 32.4%

Liberal Michelle Simson 9,370 28.9 28.9%

Total number of valid votes: 32,437

Polls reporting: 162/198 Voter turnout: 32,437 of 68,122 registered electors (47.6%)

The number of registered electors shown in this table does not include electors who registered on election day.

  • தொடங்கியவர்

சீ.பி.சி வலைத்தளத்தின் தகவற்படி ராதிகா சிற்சபேசன் Scarborough Rouge River பகுதியில் இருந்து கனேடிய தேசிய பாராளுமன்ற உறுப்ப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வாழ்த்துகள்!

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்
18718356.png

புலம்பெயர் தமிழர்களின் அரசியல் களத்தில் புதிய திருப்பமாக வெற்றிக் கொடியை நட்டுள்ள சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

ராகவனின் தொகுதி முடிவுகள் இன்னமும் தொடர்கின்றன. ராதிகாவின் வெற்றி கனேடிய தமிழர்கள் மத்தியில் மட்டும் அல்ல உலக அளவில் தமிழர்களிற்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.

இம்முறை முதன்முதலாக கனடாவில் Green Partyக்கும் ஓர் ஆசனம் கிடைக்கவுள்ளது.

Edited by கலைஞன்

  • தொடங்கியவர்

Preliminary Results

Scarborough Southwest Last updated: 00:30 ET

Party Candidate Votes % Votes

Green Party Stefan Dixon 1,444 4.1 4.1%

NDP-New Democratic Party Dan Harris 12,291 34.7 34.7%

Conservative Gavan Paranchothy 11,386 32.1 32.1%

Liberal Michelle Simson 10,304 29.1 29.1%

Total number of valid votes: 35,425

Polls reporting: 175/198 Voter turnout: 35,425 of 68,122 registered electors (52.0%)

The number of registered electors shown in this table does not include electors who registered on election day.

  • தொடங்கியவர்

Gavan Paranchothy இற்கும் NDP வேட்பாளருக்கும் இடையில் வெறும் 700 சொச்ச வாக்குகள் தான் வித்தியாசம் !!... தமிழ் மக்கள் இன்னும் கொஞ்சம் Gavan இற்கு வாக்களித்து இருந்தால் முன்னணிக்கு கொண்டு வந்து இருக்கலாம்.

உணர்ச்சிவசப்படாமல் சற்று புத்திசாலித்தனமாக இயங்கி இருந்தால் ராதிகாவும், ராகவனுமாக இரு தமிழர்கள் வெற்றி அடைந்திருக்க முடியும். தற்போதைய நிலமையை பார்க்கும்போது ராகவனிற்கும் அவருக்கு முன் உள்ள என் டீ பி வேட்பாளருக்கும் உள்ள வித்தியாசம் குறைவாக காணப்பட்டாலும் வெற்றி வாய்ப்பு ராகவனுக்கு குறைவாகவே தென்படுகின்றது. கடைசியில் ஏதாவது அதிஸ்டம் நடந்தால் ஒழிய.. மற்றும்படி வெற்றி வாய்ப்பு ராகவனுக்கு குறைவாகவே உள்ளது.

Preliminary Results

Scarborough Southwest Last updated: 00:45 ET

Party Candidate Votes % Votes

Green Party Stefan Dixon 1,446 4.1 4.1%

NDP-New Democratic Party Dan Harris 12,370 34.7 34.7%

Conservative Gavan Paranchothy 11,403 32.0 32.0%

Liberal Michelle Simson 10,384 29.2 29.2%

Total number of valid votes: 35,603

Polls reporting: 176/198 Voter turnout: 35,603 of 68,122 registered electors (52.3%)

The number of registered electors shown in this table does not include electors who registered on election day.

  • தொடங்கியவர்

இம்முறை முதன்முதலாக கனடாவில் Green Partyக்கும் ஓர் ஆசனம் கிடைக்கவுள்ளது.

முதற்தடவையாக Green Party ஓர் ஆசனத்தை பெற்றுள்ளது. முதற்தடவையாக அதன் தலைவர் Elizabeth May பாராளுமன்றம் செல்கின்றார். Elizabeth May கனதியான ஓர் குரலை பாராளுமன்றத்தில் ஒலிப்பார் என எதிர்பார்க்கலாம்.

  • தொடங்கியவர்

டொரோண்டோ Scarborough Centre, ராகவன் போட்டியிடும் Scarborough Southwest முடிவுகளில் மட்டும் தாமதம் காண்பிக்கப்படுகின்றது.

Preliminary Results

Scarborough Centre Last updated: 01:45 ET

Party Candidate Votes % Votes

Liberal John Cannis 11,693 31.8 31.8%

NDP-New Democratic Party Natalie Hundt 10,980 29.9 29.9%

Conservative Roxanne James 13,066 35.6 35.6%

Green Party Ella Ng 974 2.7 2.7%

Total number of valid votes: 36,713

Polls reporting: 203/209 Voter turnout: 36,713 of 69,110 registered electors (53.1%)

The number of registered electors shown in this table does not include electors who registered on election day.

Preliminary Results

Scarborough Southwest Last updated: 00:58 ET

Party Candidate Votes % Votes

Green Party Stefan Dixon 1,461 4.0 4.0%

NDP-New Democratic Party Dan Harris 12,593 34.9 34.9%

Conservative Gavan Paranchothy 11,570 32.0 32.0%

Liberal Michelle Simson 10,509 29.1 29.1%

Total number of valid votes: 36,133

Polls reporting: 179/198 Voter turnout: 36,133 of 68,122 registered electors (53.0%)

The number of registered electors shown in this table does not include electors who registered on election day.

  • தொடங்கியவர்

Scarborough Centreஇல் Conservative கட்சி வேட்பாளர் Roxanne James வெற்றி பெற்றுள்ளார்.

ராகவன் தனது தொகுதியில் வெற்றி பெறவில்லை. Scarborough Southwestஇல் என்டிபி வேட்பாளர் Dan Harris வெற்றி பெற்றுள்ளார். இவர் The Globe & Mail, தமிழ் ஊடகங்களிற்கு மிகவும் நன்றிக்கடன் செலுத்தவேண்டும். ராகவன் பல்வேறு அவதூறுகளின் மத்தியிலும் மிகச்சிறப்பான பெறுபேறுகளை பெற்றுள்ளது பாராட்டத்தக்கது. இம்முறை தோற்றாலும் வருங்காலங்களில் சிறந்ததொரு அரசியல்வாதியாக கனடாவில் உருவாகுவதற்கு ராகவனிற்கு உளங்கனிந்த வாழ்த்துகள்!

44541172.png

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

இவரின் தோல்விக்கான காரணங்கள் என்னவாக இருக்கும்..??! அவற்றை வெளிப்படுத்தினால் அடுத்தமுறையாவது மக்கள் சிந்தித்து வாக்களிக்க தூண்டுவதுடன் சரியான வேட்பாளரை நிறுத்தவும் வழிவகுக்கும் அல்லவா..??!

  • தொடங்கியவர்

முதலாவதுவிடயம் ராதிகாவின் வெற்றி வாய்ப்புக்கள் பற்றி பார்த்தால்...

1. என் டி பி கட்சிக்கு கடந்த இரண்டு கிழமைகளில் திடீரென கனடாவில் கிடைத்த பேராதரவு.

2. குறிப்பிட்ட தொகுதியில் போட்டியிட்டவர்கள் அனைவரும் புதியவர்கள்.

3. குறிப்பிட்ட தொகுதி தமிழர் உட்பட தென்னாசியர்கள் செரிந்தபகுதி.

4. கடைசி நேரத்தில் என்டிபி தலைவர் ஜக் லேட்டன் குறிப்பிட்ட தொகுதிக்கு விஜயம் செய்தமை.

5. எல்லாவற்றுக்கும் மேலாக எதுவித அவதூறும் இவர்பற்றி கனேடிய ஊடகங்களில் வரவில்லை என்பதோடு, நமது ஊடகங்கள் அனைத்தும் ஒத்த குரலில் ராதிகாவிற்காக ஆதரவு தேடின (கனேடிய ஊடகங்கள் ராதிகா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்றே நினைக்கின்றேன். இல்லாவிட்டால் தமிழர் என்பதால் நிச்சயம் அவதூறு செய்து பிரச்சாரம் செய்திருப்பார்கள். இப்படியானதொரு விளைவு இனிவரும் தேர்தலில் சுமார் நான்கு வருடங்களின் பின் இவருக்கு வருவதற்கு சாத்தியம் உள்ளது.)

ராகவனின் தோல்வி பற்றி பார்த்தால்..

1. கனேடிய ஊடகங்கள் ராகவனை அவதூறு செய்து பிரச்சாரம் செய்தமை. தமிழ் ஊடகங்களும் அதன் பொறிவலையில் வீழ்ந்து ராகவனுக்கு எதிராக பிரச்சாரம் செய்தமை.

2. மும்முனைப்போட்டி. கடந்தமுறை தெரிவாகிய லிபரல் நாடாளுமன்ற உறுப்பினருடன் ராகவனும், என்டிபி வேட்பாளரும் மிகவும் இறுக்கமான போட்டியை சந்தித்தனர். முதல் மூன்று வேட்பாளர்களிற்கும் உள்ள வாக்கு வீதங்களை பார்த்தால் இது புரியும்.

ஒட்டுமொத்தமாக கூட்டிக்கழித்து பார்க்கும்போது ராதிகாவிற்கு அதிர்ஸ்டம் நன்றாக வேலை செய்துள்ளது. அதேவகையில் ராகவனின் நிலமையை கூட்டிக்கழித்து பார்க்கும்போது ராகவன் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாவிட்டாலும் ஆளும் பெருன்பான்மை Conservative கட்சி சார்பில் அவதூறுகளின் மத்தியில் போட்டியிட்டு இப்படியான முடிவை பெற்றுள்ளது பாராட்டத்தக்கது என்பது மட்டும் அல்லாது... முடிவுகளை பார்க்கும்போது நிச்சயம் ஸ் ரீபன் காப்பரின் கட்சியில் ராகவனுக்கு நல்லோர் ஒளிமயமான எதிர்காலம் உள்ளது என்பதையும் ஊகிக்க முடிகின்றது. டொரோண்டோ பெரும்பாகத்தில் Conservative சார்பாக பல புதியவர்கள் நிறுத்தப்பட்டார்கள். ஆயினும், குறிப்பிட்ட இந்தத்தொகுதியில் ராகவன் இப்படியான ஓர் பெறுபேற்றை பெற்றுள்ளது Conservative கட்சிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

நடந்ததெல்லாம் நன்றாகவே நடந்துள்ளது.

1.கொன்சவேட்டிவ் பெரும்பான்மை.

2.ராதிகா வெற்றி

3.கெவென் தோல்வி.

கலைஞன் எழுதிய காரணங்களுடன் எனக்கு உடன்பாடில்லை.தனிப்பட யாரிலும் எங்களுக்கு கோவமில்லை.

சுயலாபம் தேடுபவர்கள்,குத்துக்கரணம் அடிப்பவர்களை ஆரம்பத்திலிலேயே இனம் காணப்படவேண்டும்.நடந்து முடிந்தபின் தலையில் கைவைப்பதிலோ,தூற்றிக்கொண்டு திரிவதிலோ எதுவித பிரயொசனமுமில்லை.

தமிழர்களுக்கான கனேடிய மையநீரோட்ட அரசியல் ராதிகா போன்று எதுவித கறைகளும் இல்லாதவர்களால் கொண்டுசெல்லப்படவேண்டும்.

கடந்த காலங்களில் லிபரலாக இருந்து பின் கடைசி நேரத்தில் என்,டி,பீ யாக மாறிய நீதனோ,கவனோ தமிழ் அரசியலுக்குத்தான் லாயகானவர்கள்.அதே பாணியில் தான் இங்கு அரசியல் வேறு செய்ய நினைத்தார்கள்.

எமக்கு நேர்மையான திறமையானவர்களே தமிழன் இன்று இருக்கும் நிலையில் தேவை,மூன்றாம் தர அரசியல்வாதிகளல்ல.

வாழ்த்துக்கள் ராதிகா.

  • தொடங்கியவர்

ராகவனை நீதனுடன் ஒப்பிடுவது தவறு. நீதன் கல்வி, தொழில்சார் புலமை மிக்கவர் ஆனால் நீங்கள் கூறிய தமிழ் அரசியல் செய்தது அவர்தான், ராகவன் அல்ல. ராதிகா ஓர் கனேடிய தமிழராக பாராளுமன்றம் தெரிவுசெய்யப்பட்டமை மகிழ்ச்சி தருகின்றது. மற்றும்படி நீங்கள் நினைப்பதுபோல் தமிழர்களிற்காக மையநீரோட்ட அரசியல் எல்லாம் அவர் செய்யவெளிக்கிட்டால் கனேடிய அரசியலின் சுனாமியில் அகப்பட்டு அவர் காணாமல் போய்விடுவார். எவ்வாறு கனேடிய ஊடகங்களின் பொறியில் அகப்பட்டு தமிழ் ஊடகங்கள் ராகவனுக்கெதிரான அவதூறில் ஈடுபட்டனவோ... இப்படியான தவறு ராதிகா விடயத்தில் எதிர்காலத்தில் நடைபெறாமல் பார்த்துக்கொள்வதே நல்லது. அளவுக்கு மிஞ்சிய கற்பனையையும், எதிர்பார்ப்பையும் ராதிகா மீது சுமத்தி அவரது ஆசனத்திற்கு ஆப்பு வைக்காமல் இருப்பதே நம்மவர்கள் ராதிகாவிற்கு மீண்டும் செய்யக்கூடிய பெரியதொரு உதவி.

தமிழர் தமது வடிகட்டிய முட்டாள்புத்தியையும், குருட்டு அரசியல் ஞானத்தையும் தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றார்கள். ராகவனை கனேடிய நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் மையநீரோட்ட கனேடிய அரசியலில் தமிழர்கள் பெறக்கூடிய அனுகூலங்களை ராதிகா மூலம் பெறமுடியாது என்பதே எனது கணிப்பு.

Edited by கலைஞன்

ராதிகா போட்டியிட்ட ஸ்காபரோ ரூச் றிவர் தொகுதியில் வழமைக்கு மாறாக இம்முறை தமிழர்கள் பெருமளவில் வாக்களித்துள்ளனர். இதற்கு தேர்தல் காலத்தில் ராதிகாவின் செயற்பாடுகளும் ஒரு முக்கிய காரணம்.

வீடு வீடாகச் சென்று தமிழ் மக்களைச் சந்தித்து தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிப்பதன் அவசியம் பற்றி தானே சென்று பேசியது தமிழ் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது.

லிபரல் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட இந்தத் தொகுதியில் லிபரல் கட்சியின் வேட்பாளரை மூன்றாம் இடத்திற்கு தள்ளியதற்கு இதுவும் ஒரு காரணம்.

பெரும்பாலான தமிழர்கள் இந்தத் தொகுதியில் லிபரலுக்கே வழமையாக வாக்களித்து வந்துள்ளனர்.

ஆனால் கவன் போட்டியிட்ட ஸ்காபரோ மத்தி தொகுதியில் தமிழர்கள் பெருமளவில் கவனுக்கு வாக்களிக்கவில்லை. இதற்கு ஊடகங்களை மட்டும் குறை சொல்ல முடியாது. தமிழ் மக்களிடம் சென்று போதிய அளவில் தன் கருத்துக்களை சொல்வதற்கு கவன் தவறி விட்டார்.

குறிப்பாக தமிழ் மற்றும் சீன சமூகங்களால் நடத்தப்பட்ட வேட்பாளர்களுக்கான கருத்தரங்கு நிகழ்விலும் சொற்ப நேரத்தில் வெளியேறிச் சென்றதன் மூலம் மக்களின் அதிருப்திக்குள்ளானார்.

இதற்கு தனது கட்சியையும் சமாளித்து தமிழ் மக்களிடம் கருத்துக்களைச் சொல்வதில் கவனுக்கு சங்கடம் இருந்தது என்று கூறலாம். ஆனால்அரசியல் களத்தில் நுளையும் ஒருவர் இத்தகைய சவால்களை எதிர்பார்த்தே இருக்க வேண்டும்.

ஊடகவியலாளர் என்ற முறையில் சொல்லாடல் திறமையும் விசய ஞானமும் கவனுக்கு இருந்திருக்கும். ஆனாலும் ஏதோ காரணங்களால் அவர் இந்தச் சந்திப்புக்களைத் தவிர்த்ததும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து வாக்களிப்பதைத் தடுத்து விட்டது.

  • தொடங்கியவர்

ராதிகாவின் வெற்றிக்கு தனியே தமிழர்களின் வாக்குகளே காரணம் என்று கூறுவது சரியானது என நான் நினைக்கவில்லை. கனடாவில் திடீரென அதிகரித்த என் டி பி அலையே ராதிகாவின் வெற்றியில் அதிக செல்வாக்கை செலுத்தியுள்ளதாக கருதுகின்றேன். கீழே குறிப்பிட்ட தொகுதியில் சனப்பரம்பல் சம்பந்தமான புள்ளிவிபரங்கள் உள்ளன. ராதிகாவிற்கு 16,000 சொச்சம் வாக்குகள் கிடைத்துள்ளன. ஆனால், குறிப்பிட்ட தொகுதியில் வாக்களிக்கும் தகுதியுள்ள கனேடிய தமிழர்களின் எண்ணிக்கையை ஊகித்தால் உங்களுக்கு மிகுதி விளங்கும்: http://www.toronto.ca/wards2000/ward42.htm

Edited by கலைஞன்

நிச்சயமாக கலைஞன்.

ராதிகாவின் வெற்றியென்பது வெறுமனே தமிழ் வாக்குகளால் கிடைத்ததல்ல. ஆனால் தமிழ் வாக்குகள் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது.

மொத்தம் 82 ஆயிரம் வாக்குகளில் சுமார் 18 ஆயிரம் தமிழ் வாக்குகள் உள்ள தொகுதி இது.

இதில் நிலையான கட்சி வாக்குகள் என ஒருபகுதி போக லிபரல் வாக்குகளில் கணிசமான அளவு இம்முறை NDPயை நோக்கித் திரும்பியிருந்தது. இதற்கு தேசிய ரீதியாக எழுந்த அலையும் ஒரு காரணம்.

ஆனாலும் ஸ்காபரோ ரூச் தேர்தல் அலுவலக தகவல்களின் படி வழமையாக 2000 தொடக்கம் 3000 வரையிலான தமிழர்களே வாக்களிப்பார்கள் என்ற நிலை மாறி இம்முறை கிட்டத்தட்ட 7000 - 8000 வரையான தமிழ் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

இதற்கு தமிழ் சகோதரி ஒருவரின் வெற்றியை இந்த மக்கள் எதிர்பார்த்ததே காரணம்.

அடுத்ததாக ஏனைய கட்சிகளின் சார்பில் தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடாமையும் ஒரு முக்கிய காரணம். லிபரல் கட்சியின் வெற்றிக்காக பல தமிழ் பிரமுகர்கள் செயற்பட்ட போதிலும் மக்களில் பலரும் லிபரலுக்கும் பதிலாக NDP யை தெரிவு செய்திருந்தனர்.

எதிர்வரும் தேர்தல் களங்களில் ஒரேயொரு தமிழர் போட்டியிடும் பட்சத்தில் ஸ்காபரோ மற்றும் மார்க்கம் பகுதிகளில் மேலும் சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.

  • தொடங்கியவர்

என்னமோ இவ்வளவு காலமும் விட்ட தவறுகள், காழ்ப்புணர்வுகளை எதிர்காலத்தில் நம்மவர்கள் தவிர்த்தால் நல்ல நிலைக்கு வரமுடியும். தனியே லிபரல் கட்சி விசுவாசிகளாக இல்லாது எல்லா கட்சிகளிலும் நம்மவர்கள் இணைந்து செயற்படவேண்டும். அத்துடன், தேர்தலில் வேட்பாளர்களாக நிற்க விரும்புவர்கள் கடைசிநேரத்தில் வந்து தரிசனம் தராமல் தாம் போட்டியிடுகின்ற தொகுதியில் நன்கு அறியப்படும் வகையில் தொண்டுகள் செய்யவேண்டும், இதற்காக நீண்டகால நோக்கில் செயற்படவேண்டும்.

எகிப்தில் சமூக வலைத்தளங்கள் மூலம் எப்படிப்பட்டதோர் புரட்சியை எல்லாம் செய்கின்றார்கள் என்றால்.. வசதியும், வாய்ப்பும், கல்வி அறிவும் படைத்த நம்மவர்கள் கனேடிய அரசியலில் இன்னமும் நல்ல நிலமைக்கு வரமுடியும், உயர் பதவிகளையும் அடையமுடியும்.

எதிர்காலத்திலாயினும் ஏணியில் ஏறுபவன் கால்களை எமது தனிப்பட்ட விரோதங்கள்/வெறுப்புக்கள் காரணமாக இழுத்து விழுத்தாமல் அவனை தூக்கிவிடுவோம்.

Edited by கலைஞன்

ராகவன் நிற்கும் தொகுதி லிபரலின் தொகுதி. தோற்கும் என்று தெரிந்தே பழமைவாதக் கட்சி இவரை நிறுத்துகின்றது. வென்றபின் இவரை ஒதுக்கிவைக்கும் என்ற நோக்கிலான பல்வேறுவிதமான கருத்துக்கள் பொய்த்துப்போனது.

சில பத்திரிகைகள் இவர்மீது புலிச்சாயம் பூசியது. புலி ஆதரவாளர்கள் துரோகிப்பட்டம் கட்டினார்கள்.

அப்பட்டமான முதலாளித்துவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அடயாளத்தேடலுக்காகவும் பிழைப்புக்காகவும் பொதுவுடமைச் சித்தாந்தம் பேசும் தமிழ் புத்திஜீவிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்ற கருத்துக்களை முன்வைத்தது.

வழமையான தமிழர்களின் குடுமிச் சண்டை.

இவ்வாறான காரணங்களின் அடிப்படையில் ஆழும் கட்சியில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஆயிரத்தி சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் அங்கம் வகிக்க முடியாமல் போகின்றது. உலகில் யூதர்களுக்கு அடுத்தபடியான வலிமை மிக்க இனமும் புத்திசாலித்தனமான இனமுமான தமிழர்களுக்கு இது மாபெரும் ராஜதந்திர வெற்றியாகத்தான் இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ராகவன் நிற்கும் தொகுதி லிபரலின் தொகுதி. தோற்கும் என்று தெரிந்தே பழமைவாதக் கட்சி இவரை நிறுத்துகின்றது. வென்றபின் இவரை ஒதுக்கிவைக்கும் என்ற நோக்கிலான பல்வேறுவிதமான கருத்துக்கள் பொய்த்துப்போனது.

சில பத்திரிகைகள் இவர்மீது புலிச்சாயம் பூசியது. புலி ஆதரவாளர்கள் துரோகிப்பட்டம் கட்டினார்கள்.

அப்பட்டமான முதலாளித்துவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டு அடயாளத்தேடலுக்காகவும் பிழைப்புக்காகவும் பொதுவுடமைச் சித்தாந்தம் பேசும் தமிழ் புத்திஜீவிகள் என்று கூறிக்கொள்ளும் சிலர் பழமைவாதக் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது என்ற கருத்துக்களை முன்வைத்தது.

வழமையான தமிழர்களின் குடுமிச் சண்டை.

இவ்வாறான காரணங்களின் அடிப்படையில் ஆழும் கட்சியில் ஒரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஆயிரத்தி சொச்ச வாக்குகள் வித்தியாசத்தில் அங்கம் வகிக்க முடியாமல் போகின்றது. உலகில் யூதர்களுக்கு அடுத்தபடியான வலிமை மிக்க இனமும் புத்திசாலித்தனமான இனமுமான தமிழர்களுக்கு இது மாபெரும் ராஜதந்திர வெற்றியாகத்தான் இருக்கின்றது.

கனடாவுக்குள் கனடிய தேசிய பாராளுமன்றத்துக்கு தெரிவாக இருக்கும் ஒருவர் எதற்கு விடுதலைப் புலிகளை மையப்படுத்தி கருத்துக்களை பிரச்சாரங்களை முன் வைக்கிறீர்கள் என்பது விளங்கிக் கொள்ள முடியவில்லை. கனடா வாழ் குடியேற்றத் தமிழர்களுக்காக விடுதலைப்புலிகள் கனடாவில் போராட்டம் நடத்தவில்லை. ஈழத் தாயகத்தில் பூர்வீகக் குடிகளாக வாழும் தமிழர்களின் விடுதலையை மையப்படுத்தியே தான் விடுதலைப்புலிகளின் போராட்டம் இருந்தது... எனியும் இருக்கும்.

கனடா வாழ் குடியேற்றக்கார தமிழர்கள் பலர் ஈழத் தாயகப் பூர்வீகத்தைக் கொண்டிருப்பதால் அவர்களின் ஈழத் தாயகப் போராட்டம் மீதான தார்மீக ஆதரவு என்பது கனடிய தேசிய பாராளுமன்றத்தில் எந்தளவுக்கு செல்வாக்குச் செய்யும். நிச்சயமாக அது கனடியர்களுக்கு எள்ளளவும் உதவப் போவதில்லை.

முடிந்தால்.. விடுதலைப்புலிகளை உச்சரிக்க விருப்பமில்லை என்றால்.. விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை வைத்து எனியும் மக்கள் மீது சவாரி செய்வதை நிறுத்துக்கள். உங்களுக்கு கனடா வாழ் குடியேற்றக்கார தமிழர்களின் ஆதரவு... வாக்கு அவசியம் என்றால் அங்குள்ள பிரச்சனையை அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தேவைகளை மையப்படுத்தி கொள்கை வகுத்துச் செயற்படுங்கள். வாக்குச் சேகரியுங்கள். புலி ஆதரவு.. எதிர்ப்பு .. தமிழ் தேசிய ஆதரவு எதிர்ப்பு போன்ற கோசங்களை காட்டி தோல்விகளுக்கும் வெற்றிகளுக்கு சப்பை கட்டு கட்டுவதை நிறுத்துவது ஈழத்தில் கஸ்டப்படும் மக்களின் நலன் காக்கும்.

தமிழ் தேசி இனம் சார்ந்ததற்காக கனடா வாழ் குடியேற்றக் கார தமிழர்கள் தமிழீழ தமிழ் மக்களுக்கு அளிக்கும் தார்மீக ஆதரவை விடுதலைப்புலிகளின் பெயரால் அலங்கரித்து.. அதன் மூலம் உங்கள் வாக்குகளை... செல்வாக்குகளை.. எதிர்ப்புணர்வுகளை கனடாவுக்குள் காட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அதுதான் கனடிய தேசிய ஜனநாயகத்துக்கும் உங்களுக்கும் அழகு..! ஏதாவது ஒரு தேசிய ஜனநாயக நீரோட்டத்திலாவது தெளிவோடு இணைந்திருங்கோ. அங்கும் இங்கும் கலந்தடிச்சு.. எல்லோர் மீதும் சவாரி செய்வதை.. விடுதலைப்புலிகள் மீதும்.. தமிழ் மக்களின் போராட்டம் மீதும் உங்களை தேவைக்கு ஏற்ப சேறடிப்பதும் வெள்ளை அடிப்பதும் வேலையைக் கைவிடுங்கள். அப்படி செய்யாவிட்டால் அது ஜனநாயகம் ஆகாது.

Edited by nedukkalapoovan

என்னா அல்லாரும சூடாக இருக்கீங்க...இன்னைக்கு எலக்சன் இல்லீங்களா ..அதைப்பற்றி சொல்லுங்க சார்... அந்த பொண்ணு ஒன்று எலக்சனிலை நிக்கதுங்களல்லா ..அந்த பொண்ணு வெல்ல சான்ஸ் இருக்குமா...கவர்ன்ட் அமைக்க சான்ஸ் இல்லாட்டியும் என்டிபி அலை அடிக்கிற மாதிரி தோணுது.. ஏதாவது கூட்ட அரசாங்கத்துக்கு சான்ஸ் இருக்குங்களா? ...உங்கை டாலர் கொடுத்து வெல்ல சான்ஸ் இல்லைங்களா..நிரம்ப பணக்கார தமிழங்க கனடாவிலை இருக்கீங்கள் .. சும்மா சண்டை பிடிக்காமால் ...ஏதோ கூட குறையபார்த்து அந்த பெண்ணை வெல்லை வைக்க பாருங்க சார் ...கனடா எலக்சன் நீயூஸ் லவ்வாய் யாரும் சொல்லுங்க சார்... :lol: :lol:

கனடிய தமிழ் மக்களுக்கு ...வாழ்த்துக்கள் ..ராதிகா மெடத்துக்கும் வாழ்த்துக்கள்.................... சும்மா சொல்ல கூடாதுங்க .....நானு சொன்னதை கேட்டு நடந்து இருக்காங்க ..அச்சா பிள்ளைங்க,, :lol: :lol: :lol:

கீழுள்ள படத்தில் ஆற்றல்மிக்க ஓர் தமிழ் ஊடகவியலாளருக்கு எப்படியான மரியாதை கொடுக்கப்படுகின்றது என்பதை பாருங்கள். இதை நீலப்பறவை யாழில் இணைத்த ஓர் செய்தியின் இணைப்பு மூலத்தில் கண்ணுற்றேன்.

ragavanposter.jpg

கனடாவுக்குள் கனடிய தேசிய பாராளுமன்றத்துக்கு தெரிவாக இருக்கும் ஒருவர் எதற்கு விடுதலைப் புலிகளை மையப்படுத்தி கருத்துக்களை பிரச்சாரங்களை முன் வைக்கிறீர்கள் என்பது விளங்கிக் கொள்ள முடியவில்லை. கனடா வாழ் குடியேற்றத் தமிழர்களுக்காக விடுதலைப்புலிகள் கனடாவில் போராட்டம் நடத்தவில்லை. ஈழத் தாயகத்தில் பூர்வீகக் குடிகளாக வாழும் தமிழர்களின் விடுதலையை மையப்படுத்தியே தான் விடுதலைப்புலிகளின் போராட்டம் இருந்தது... எனியும் இருக்கும்.

கனடா வாழ் குடியேற்றக்கார தமிழர்கள் பலர் ஈழத் தாயகப் பூர்வீகத்தைக் கொண்டிருப்பதால் அவர்களின் ஈழத் தாயகப் போராட்டம் மீதான தார்மீக ஆதரவு என்பது கனடிய தேசிய பாராளுமன்றத்தில் எந்தளவுக்கு செல்வாக்குச் செய்யும். நிச்சயமாக அது கனடியர்களுக்கு எள்ளளவும் உதவப் போவதில்லை.

முடிந்தால்.. விடுதலைப்புலிகளை உச்சரிக்க விருப்பமில்லை என்றால்.. விடுதலைப்புலிகள் அமைப்பின் பெயரை வைத்து எனியும் மக்கள் மீது சவாரி செய்வதை நிறுத்துக்கள். உங்களுக்கு கனடா வாழ் குடியேற்றக்கார தமிழர்களின் ஆதரவு... வாக்கு அவசியம் என்றால் அங்குள்ள பிரச்சனையை அங்கு அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தேவைகளை மையப்படுத்தி கொள்கை வகுத்துச் செயற்படுங்கள். வாக்குச் சேகரியுங்கள். புலி ஆதரவு.. எதிர்ப்பு .. தமிழ் தேசிய ஆதரவு எதிர்ப்பு போன்ற கோசங்களை காட்டி தோல்விகளுக்கும் வெற்றிகளுக்கு சப்பை கட்டு கட்டுவதை நிறுத்துவது ஈழத்தில் கஸ்டப்படும் மக்களின் நலன் காக்கும்.

தமிழ் தேசி இனம் சார்ந்ததற்காக கனடா வாழ் குடியேற்றக் கார தமிழர்கள் தமிழீழ தமிழ் மக்களுக்கு அளிக்கும் தார்மீக ஆதரவை விடுதலைப்புலிகளின் பெயரால் அலங்கரித்து.. அதன் மூலம் உங்கள் வாக்குகளை... செல்வாக்குகளை.. எதிர்ப்புணர்வுகளை கனடாவுக்குள் காட்டுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். அதுதான் கனடிய தேசிய ஜனநாயகத்துக்கும் உங்களுக்கும் அழகு..! ஏதாவது ஒரு தேசிய ஜனநாயக நீரோட்டத்திலாவது தெளிவோடு இணைந்திருங்கோ. அங்கும் இங்கும் கலந்தடிச்சு.. எல்லோர் மீதும் சவாரி செய்வதை.. விடுதலைப்புலிகள் மீதும்.. தமிழ் மக்களின் போராட்டம் மீதும் உங்களை தேவைக்கு ஏற்ப சேறடிப்பதும் வெள்ளை அடிப்பதும் வேலையைக் கைவிடுங்கள். அப்படி செய்யாவிட்டால் அது ஜனநாயகம் ஆகாது.

இந்த திரியில் இருக்கும் பதாகையும் அதில் எழுதப்பட்டுள்ள வாசகமும் தான் கனடாவின் தமிழ்த்தேசிய அறிவின் எல்லை.

காப்பர் அரசு புலிகளை தடைசெய்ததால் அவருக்கு எதிரான கட்சிகளுக்கு வாக்களித்து பதிலடிகொடுக்க முடியும் என்று தேசியவாதிகளின் புத்திசாலித்தனம் உள்ளது. இந்தப் புத்திசாலித்தனத்தை தான் யூதர்களின் புத்திக் கூர்மையுடனும் இன உணர்வுடனும் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.

புலிகளை மையப்படுத்தி தலையில் மண்ணள்ளிப்போடுவது பிழைப்பாகிவிட்டது அடுத்த தேர்தல்களில் இந்த நிலை இருக்காது என்றே நம்புகின்றேன்.

  • தொடங்கியவர்

அலைவரும்போதே தலைமுழுகு என்று கூறுவார்கள். அருமையான ஓர் வாய்ப்பை காழ்ப்புணர்வுகளின் நிமித்தம் தவறவிட்டுள்ளார்கள். இவ்வருடம் ஒன்ராரியோ மாகாண தேர்தலும் வருகின்றது. அதிலும் யாராவது கனேடிய தமிழர் வேட்பாளராக நின்றால் துரோகி, சுயநலவாதி பட்டங்கள் கொடுத்து நம்மவர்களே உதைத்து தள்ளுவார்களா அல்லது இல்லையா என்று பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.