Jump to content

விரால் மீன் குழம்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

விரால் மீன் குழம்பு

viLai+meen.jpg

தேவையான பொருட்கள்:

விரால் மீன் – அரை கிலோ

காய்ந்த மிளகாய் – 20 (வறுத்து அரைக்கவும்)

தனியா – 8 டீஸ்பூன் (வறுத்து அரைக்கவும்)

சோம்பு – 1 டீஸ்பூன் (வறுத்து அரைக்கவும்)

புளி – 100 கிராம்

பூண்டு – 10 பல்

சின்ன வெங்காயம் – 15

நாட்டுத் தக்காளி – 3

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த பிறகு கடுகு, வெந்தயம் தாளித்து பொடியாக வெட்டிய வெங்காயம், பூண்டு போட்டு நன்றாக வதக்கி தக்காளி சேர்த்து வதக்கவும். புளியை கரைத்து அதில் அரைத்த மிளகாய் விழுதை கலந்து உப்பு போட்டு கலந்து வைக்கவும். மீனை கழுவி சுத்தம் செய்து வைக்கவும். வதக்கிய தக்காளி, வெங்காயத்துடன், புளி கலவையை ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு மீனை போட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு மூடி விடவும். நன்றாக கொதித்த பிறகு மீன் வெந்த பிறகு இறக்கவும்.

https://chettinadcooking.wordpress.com/2009/08/18/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2/

டிஸ்கி:

samiayal+arai.JPG

விரால் மீன் ஏரி வகை மீனாகும் .. இதன் சுவையை ஒருமுறை சுவைத்து பார்த்தால் தான் தெரியும்.. இது மற்ற கெண்டை.. உளுவை... ஜிலேபி .. கெளுத்தி மீன்களை போல எளிதில் அகப்படாது.. மீன் பிடிக்கும் போது கைவைத்தால் சேற்றிலே மறைந்து செல்ல கூடிய வகையில் இருக்கும் .. அதன் உடலில் அந்த அளவுக்கு வழு வழுப்பு இருக்கும் எளிதில் கையில் அகப்படாது... ஆனா சுவையோ சூப்பர்.. ஈழ தோழர்கள் இந்த மீனை அங்கிட்டு உள்ள ஏரிகளில் பிடித்து (அ) வாங்கி செய்துபார்க்குக .. அதிலும் இன்று இரவு குழம்பு வைத்து விட்டு மறுநாள் பழைய சோற்றிலோ அல்லது தோசை .. இட்லிக்கு தொட்டு கொண்டு சாப்பிடுக...சுவைத்து மகிழுக.. :D

Posted

விரால் மீன் குழம்பு

டிஸ்கி:

விரால் மீன் ஏரி வகை மீனாகும் .. இதன் சுவையை ஒருமுறை சுவைத்து பார்த்தால் தான் தெரியும்.. இது மற்ற கெண்டை.. உளுவை... ஜிலேபி .. கெளுத்தி மீன்களை போல எளிதில் அகப்படாது.. மீன் பிடிக்கும் போது கைவைத்தால் சேற்றிலே மறைந்து செல்ல கூடிய வகையில் இருக்கும் .. அதன் உடலில் அந்த அளவுக்கு வழு வழுப்பு இருக்கும் எளிதில் கையில் அகப்படாது... ஆனா சுவையோ சூப்பர்.. ஈழ தோழர்கள் இந்த மீனை அங்கிட்டு உள்ள ஏரிகளில் பிடித்து (அ) வாங்கி செய்துபார்க்குக .. அதிலும் இன்று இரவு குழம்பு வைத்து விட்டு மறுநாள் பழைய சோற்றிலோ அல்லது தோசை .. இட்லிக்கு தொட்டு கொண்டு சாப்பிடுக...சுவைத்து மகிழுக.. :D

தோழர் இணைப்பிக்கு நன்றிகள்.

நீங்கள் குறிப்பிட்ட வகை மீன்கள் உடல் நலத்திற்கு நல்லது.

அதிலும் முக்கியமாக கெண்டை, ஏறு கெளுத்தி (மழைக்காலங்களில் குளம் மற்றும் ஏரிகளில் வழியும் நீரின் ஊடாக ஏறிவருவது) ஆண்களுக்கு நல்லதாம். :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோழர் இணைப்பிக்கு நன்றிகள்.

நீங்கள் குறிப்பிட்ட வகை மீன்கள் உடல் நலத்திற்கு நல்லது.

அதிலும் முக்கியமாக கெண்டை, ஏறு கெளுத்தி (மழைக்காலங்களில் குளம் மற்றும் ஏரிகளில் வழியும் நீரின் ஊடாக ஏறிவருவது) ஆண்களுக்கு நல்லதாம். :)

நன்றி தோழர் தப்பிலி.. :wub:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல அரைத்த மீன் குழம்பாகச் சொல்லியிருக்கிரிங்கள். அத்துடன் இன்று தங்களின் பிறந்தநாளுக்கு ஆக்கி ஒரு பிடி பிடிக்கவும். வாழ்த்துகள் புரட்சி! :D

தப்பிலி! இந்த மீனையா நாங்கள் யப்பான் மீன் என்று கூறுவது. தருமபுரம் பக்கம் குளத்தில் நிறையக் கிடைக்கும்! :)

Posted

தோழர் இணைப்பிக்கு நன்றிகள்.

நீங்கள் குறிப்பிட்ட வகை மீன்கள் உடல் நலத்திற்கு நல்லது.

அதிலும் முக்கியமாக கெண்டை, ஏறு கெளுத்தி (மழைக்காலங்களில் குளம் மற்றும் ஏரிகளில் வழியும் நீரின் ஊடாக ஏறிவருவது) ஆண்களுக்கு நல்லதாம். :)

ஓ.. :unsure:

சிறுத்தை.. அவசியம் சமைத்துச் சாப்பிடவும்..! :lol:

Posted

ஓ.. :unsure:

சிறுத்தை.. அவசியம் சமைத்துச் சாப்பிடவும்..! :lol:

அந்த மீன்களைச் சாப்பிட்டு சிறுத்தை புலியாக மாறினால் பெரிய களேபரம்தான் ஏற்படும். :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்ல அரைத்த மீன் குழம்பாகச் சொல்லியிருக்கிரிங்கள். அத்துடன் இன்று தங்களின் பிறந்தநாளுக்கு ஆக்கி ஒரு பிடி பிடிக்கவும். வாழ்த்துகள் புரட்சி! :D

தப்பிலி! இந்த மீனையா நாங்கள் யப்பான் மீன் என்று கூறுவது. தருமபுரம் பக்கம் குளத்தில் நிறையக் கிடைக்கும்! :)

யப்பான்மீன் வேறை விரால்மீன் வேறை.

யப்பான்மீன் இனியில்லையெண்ட வெடுக்கு கூடுதலாய் அங்கை ஒருத்தரும் சாப்பிடுறேல்லை(உவாக்)

விரால்மீன் நல்ல ரேஸ்ற் :wub: உந்தமீனை இஞ்சை ஒருடமும் வாங்கேலாது.அங்கை ஊரிலையே வாங்கிறதெண்டாலே சரியானகஸ்ரம் :)

Posted

தப்பிலி! இந்த மீனையா நாங்கள் யப்பான் மீன் என்று கூறுவது. தருமபுரம் பக்கம் குளத்தில் நிறையக் கிடைக்கும்! :)

ஜப்பான் மீன் (செல்வன் மீன்) வேறு. சரியான மலிவு.

நான் சொன்ன வகை மீன்கள் குறைவாகத்தான் பிடிபடும். உடனடியாக வாங்கிவிடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆ இது ஜப்பான்.. அண்டார்டிக்கா மீன் எல்லாம் கிடையாது தோழர் .. எங்கட கிணறுகளிலே(கேணி) நிறைய வளரும் :wub:

டிஸ்கி:

விரால் மீன் படம்

http://www.indg.in/agriculture/fisheries/bb5bbfbb0bbebb2bcd-bb5bb3bb0bcdbaabcdbaabc1/

  • 6 years later...
Posted

அருமையான விரால் மீன் குழம்புஅ-அ+

தோசை, இட்லி, சாதம், பழைய சாதத்திற்கு தொட்டுகொள்ள இந்த விரால் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். இன்று இந்த மீன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
அருமையான விரால் மீன் குழம்பு
 
தேவையான பொருட்கள் :

விரால் மீன் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 50 கிராம்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
 மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
பூண்டுப் பல் - 10
தக்காளி - 2
வெந்தயம் - அரை டீஸ்பூன் (வறுத்துப் பொடித்தது)
மஞ்சள் தூள்
- சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தேங்காய்ப் பால் - கால் கப்

தாளிக்க :

நல்லெண்ணெய் - தேவையான அளவு
வெந்தயம் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

201802181508246746_1_viralfishkulambu._L_styvpf.jpg

செய்முறை :

மீனை நன்றாக கழுவிக்கொள்ளுங்கள்.

புளியைக் கரைத்துக்கொள்ளுங்கள்.

வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் வெந்தயம், கறிவேப்பிலை போட்டுத் தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தைச் சேர்த்து நிறம் மாறும்வரை நன்றாக வதக்குங்கள்.

அடுத்து அதில் நசுக்கிய பூண்டை அதில் சேர்த்து, சிறிது நேரம் வதக்குங்கள்.

பிறகு தக்காளியைச் சேர்த்துத் தக்காளி கரையும்வரை வதக்குங்கள்.

அதனுடன்  மிளகாய்த் தூள்,  மல்லித் தூள்,  மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி புளிக் கரைசல், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும்வரை குழம்பைக் கொதிக்கவிடுங்கள்.

குழம்பு நன்றாக கொதித்து பச்சை வாசனை போனவுடன் மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்கவிடுங்கள்.

பிறகு தேங்காய்ப் பாலைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும்
வெந்தயப் பொடி, கொத்தமல்லித் தழை தூவி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான விரால் மீன் குழம்பு ரெடி.

https://www.maalaimalar.com/

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.