Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நாவின் நடவடிக்கையை விரைவுபடுத்த கோரி பிரித்தானிய மேதின ஊர்வலத்தில் ஈழத்தமிழர்கள்! (காணொளி இணைப்பு)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவின் நடவடிக்கையை விரைவுபடுத்த கோரி பிரித்தானிய மேதின ஊர்வலத்தில் ஈழத்தமிழர்கள்! (காணொளி இணைப்பு)

Posted by uknews On May 1st, 2011 at 9:48 pm / No Comments

பிரித்தானியாவில் இன்று பிரித்தானிய தொழிற்சங்கள் ஏற்பாட்டில் மேதின ஊர்வலம் நடைபெற்றது. பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களுக்கு விடுத்த குறுகிய கால அழைப்பை அடுத்து பெருமளவான தமிழ் மக்கள் மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இன்று மதியம் 1.00 மணியளவில் மத்திய லண்டனிலுள்ள பரிங்டன் நிலக்கிழ் தொடரூந்து நிலையத்தில் ஆரம்பமான மேதின ஊர்வலம் மதியம் 3.45 மணியளவில் ரவல்ஸ்குவயர் பகுதியை சென்றடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஈழத்தமிழ் மக்கள் மகிந்த அரசின் போர் குற்றங்களிற்கு எதிராகவும், தமிழினப் படுகொலைக்கு ஐ.நா வை உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும் ஆவேசத்துடன் கோஷமிட்டனர்.

saritham.com

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியா வாழ் தமிழுறவுகளுக்குப் பாராட்டுகளை தெரவிப்பதோடு இன்றைய நாளைச் சரியாகப் பயன்படுத்தியமை சிறப்பாகும். ஆனால் நாம் வாழும் நாட்டில் .................. வீதியிலிறங்கி நீதியைக் கேட்க அனைவரும் இணைய வேண்டிய காலத்தில்....

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

சந்தர்ப்பத்தை சாணக்கியமான முறையில் பயன்படுத்திக்கொண்ட பிரித்தானிய தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றிகள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் காலம் அறிந்து செயற்படும் செயற்பாட்டில் கலந்து கொண்ட உறவுகளுக்கு நன்றிகள். கடந்த காலத்திலும் மகிந்தவின் பின்கதவு ஓட்டம் புலம்பெயர் உறவுகளின் போராட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட முன்நோக்கி ஓடிய ஒரு மைல்கல். இப்போது அந்தவழியில் நீங்களே முன்னணியில் நிற்கிறீர்கள். தலை வணங்குகின்றோம் தமிழ் உறவுகளே.

மீண்டும் சில இளையோர்களை கண்டேன், மிக்க மகிழ்ச்சி... முள்ளிவாய்க்கல்களுக்கு பின்!! ... தயவு செய்து அவர்களை சரியாக/தொடர்ச்சியாக வழி நடத்துங்க்ள்! ... அவர்களால் முடியாதது ஒன்றுமில்லை!!!

இப்பேரணியில்

“போர்க்குற்றங்களை அம்பலப்படுத்திய சனல்4, அல்ஜசீரா, ரைம்ஸ் ஊடகங்களுக்கு நன்றி”

“போர்க்குற்றவாளிகளை கைது செய்”

“ஈழத்தமிழர்களுக்கு நீதி வழ்ங்கு”

“தமிழர்கள் மீதான இன அழிப்பை நிறுத்து”

“தமிழ் மக்கள் சுதந்திரத்தை நேசிக்கும் மக்கள்”

“ஐ.நாவே சிறீலங்காவின் போர்க்குற்றங்களை தாமதமின்றி விசாரணை செய்”

போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகள், பனர்கள் என்பவற்றை தாங்கியவாறுபேரணியில் பெருந்திரளான தமிழர்கள் கலந்து கொண்டிருந்தமையை காணக்கூடியதாக இருந்தது.

சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றில் சிறீலங்கா அரசின் போர்க்குற்றவாளிகளை நிறுத்த உதவுமாறும், சிறீலங்காவில் நடைபெற்ற இன அழிப்புதொடர்பாக விசாரணைசெய்ய சர்வதேச பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறும் கோரும் மனுவிற்கு ஆதரவு தெரிவித்து பல்லின மக்களிடமும் கையொப்பம் பெறும் நடவடிக்கையில் நாடுகடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் ஈடுபட்டிருந்தமையை காணமுடிந்தது.

பிரித்தானியத் தமிழர்களின் இந்த முயற்சி வேற்றின மக்களை கவர்ந்தது மட்டுமன்றி பல ஊடகங்களும் தமது புகைப்பட மற்றும்ஒளிப்படக்கருவிகளுக்குள் உள்வாங்கிச்சென்றதை காணமுடிந்தது.

http://rste.org/2011/05/01/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA/

Edited by akootha

நோர்வேயில் பெரும் எழுச்சியாக நடைபெற்ற மே தின பேரணி

மே தினப் பேரணி நோர்வேயில் மிக எழுச்சியாகவும் உணர்வுப்பூர்வமாகவும் நடைபெற்றது.மகிந்தின் உருவப்படத்தை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி ஊர்வளமாக எடுத்திச் சென்றது அனைத்து தரப்ப மக்களையும் பெரிதும் கவர்ந்தது. மீண்டும் பெரும் எழுச்சி பெற்று வரும் விடுதலை உணவர்வையே எடுத்துக்காட்டுகின்றது.

http://rste.org/2011/05/01/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய புலம் பெயர் உறவுகளுக்கு நன்றிகள்!

உங்கள் முன்னெடுப்பு எங்களுக்கு ஒரு உந்துசக்தியாக இருக்கும்!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.