Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் தமிழகத்தில் எழுச்சி அலை..!

Featured Replies

  • தொடங்கியவர்

சுட்டு பொட்டாலும் திட்டுறாங்கப்பா சொந்தமா போடதெரியாதானு எதுக்க வம்பு.. :cry: :cry:

சுண்டல்..இதுக்காக எல்லாம் வருத்தப்படலாமா.. சுடுங்க போடுங்க..அதுதான் சுண்டல்..! :wink: :P

  • Replies 56
  • Views 7.4k
  • Created
  • Last Reply

அப்பாடா இப்பத்தான் வேலயால வந்தனான். வந்த உடனையும் யாழை மீட்டு(மீட்டி) பார்ப்பம் எண்டு ஓடோடி வந்தால். இனிப்பான செய்தியொன்றோடு குருவிகள் பறப்பத கண்டு எந்தன் மனம் ஆர்பரிக்குதல்லோ. அதுதான் விசயம் தமிழ்நாட்டில் தங்களின் உறவுகளிற்காய் ஆர்ப்பரித்த அன்பு உள்ளங்கள் பற்றிய செய்தியை படித்து. ம்ம்ம்ம் இப்படி தமிழன் ஒற்றுமையாய் எப்போதும் எதிலும் இருந்தால் ஏன் எந்த ஓனாயாவது ஊளையிடப்போகுது, இல்லை கடித்து குதறப்போகுது. கண்கள் கலங்கி கண்ணீர் வருகுது. அன்பினைக் கொட்டுகின்றோம் இப்படியாவது எங்களைப்பற்றி எங்கள் உறவுகள் அன்புகாட்டுதற்கு தமிழ்நாட்டில் இடம் கிடைத்ததற்காய்.

113qv.jpg

காலம் பல கடந்தும்

எம்துயர் இன்னும் முடியவில்லை

நாளை ஒரு விடியலுக்காய்

நடை நடயாய் நடக்கின்றோம்.

நாங்கள் படும் துயரம்

நாய் கூட படுவதில்லை.

நாதியற்றார் என்றொம்மை

அழத்தவர்க்கு பதில் சொல்ல

நீதி கேட்கும் புலிகள் வந்தார்.

வாழ்ந்த வீட்டை விட்டு

விரட்டியடிக்கபொட்டோமையா.

என் கணகள் கலங்க சொல்லுகின்றேன்

என் தாய் காலடி மண்ணெடுத்து

நாம் கட்டிவைத்த வீட்டை பாராது

கடசி வரைக்கும் இந்த கட்டை வேகாது.

தமிழீழம் எங்கள் கைவந்து சேரும் வரை

எங்கள் விழிகள் இரண்டும் சோராது.

எமக்காய் துடிக்கின்ற தமிழ் உறவுகளே

தமிழ் கூறும் நல் பெரியோரே.

நீங்கள் ஒன்று சேர்ந்த சேதி கேட்டு

மனம் மகிழ்ந்தோம்.

எங்களுக்காய் நீதிகேட்கும்

உன்னத உறவுகள் நீங்களன்றோ.

என் உள்ளத்து உணர்வை வலிமையாக்கி

சொல்லுகின்றோம்.

உங்கள் இலட்சியங்கள் வெல்லட்டும்.

வெல்லவேண்டும் வெல்லும்.

உங்கள் கரம் பற்றி ஈழத்து செய் ஒருத்தி/ஒருவன்

153qd.jpg

113qv.jpg

காலம் பல கடந்தும்

எம்துயர் இன்னும் முடியவில்லை

நாளை ஒரு விடியலுக்காய்

நடை நடயாய் நடக்கின்றோம்.

நாங்கள் படும் துயரம்

நாய் கூட படுவதில்லை.

நாதியற்றார் என்றொம்மை

அழத்தவர்க்கு பதில் சொல்ல

நீதி கேட்கும் புலிகள் வந்தார்.

வாழ்ந்த வீட்டை விட்டு

விரட்டியடிக்கபொட்டோமையா.

என் கணகள் கலங்க சொல்லுகின்றேன்

என் தாய் காலடி மண்ணெடுத்து

நாம் கட்டிவைத்த வீட்டை பாராது

கடசி வரைக்கும் இந்த கட்டை வேகாது.

தமிழீழம் எங்கள் கைவந்து சேரும் வரை

எங்கள் விழிகள் இரண்டும் சோராது.

எமக்காய் துடிக்கின்ற தமிழ் உறவுகளே

தமிழ் கூறும் நல் பெரியோரே.

நீங்கள் ஒன்று சேர்ந்த சேதி கேட்டு

மனம் மகிழ்ந்தோம்.

எங்களுக்காய் நீதிகேட்கும்

உன்னத உறவுகள் நீங்களன்றோ.

என் உள்ளத்து உணர்வை வலிமையாக்கி

சொல்லுகின்றோம்.

உங்கள் இலட்சியங்கள் வெல்லட்டும்.

வெல்லவேண்டும் வெல்லும்.

உங்கள் கரம் பற்றி ஈழத்து செய் ஒருத்தி/ஒருவன்

153qd.jpg

படங்கள்: தென்சைற்

நன்றி

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தேசிய விடுதலையை விளங்கிக்கொள்ளவேண்டும்! அதனை அமெரிக்கா ஒரு சந்தைப் பொருளாகப் பார்க்கக்கூடாது - கவிஞர் இன்குலாப்

தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தினை அமெரிக்கா ஒரு சந்தைப் பொருளாகவே பார்க்கின்றது என மக்கள் கவிஞர் இன்குலாப் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அண்மையில் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ள கருத்துக்களைக் கண்டித்து நேற்று தமிழகத்தில் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழர்களின் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தை அதன் ஆழத்தையும். தாற்பரியகங்களையும் அறியாமல் அமெரிக்கா ஒரு சந்தைப் பொருளாக நினைக்கின்றது.

தேசிய இனவிடுதலை விழுமியங்களை அமெரிக்கா விழுங்கப்பார்க்கின்றது.

அமெரிக்காவின் பாதத்தின் கீழ் இருந்து லத்தீன் அமெரிக்க நாடுகள் கிளர்ந்தெழுந்துள்ளன.

அத்தோடு; உலகம் முழுவதும் விடுதலை விரும்பும் இனங்கள் ஒன்று திரண்டு நிற்கின்றன.

இதே வேளை உலகம் முழுவதும் விடுதலைப் போராட்டங்களை இடது சாரிகள் ஆதரிக்கின்றனர். இதனால் எமது தமிழர்களது போராட்டத்தினையும் இடது சாரிகள் ஆதரிக்கவேண்டும். இந்திய இடது சாரிகள் இங்கும் தமிழர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு, சிங்கள ரத்னா விருது பெற்ற இந்து ராமின் வழிமுறைகளைப் பின்பற்றக்கூடாது.

உண்மையில் ஒரு நாட்டில் குறைவாக வாழும் மக்கள் மீது தான் அமெரிக்கா போன்றோரின் அக்கறை காணப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே வேளை ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க தூதுவரின் அச்சுறுத்தும் உரைக்கு அதீத கண்டனம் தெரிவித்தும் அதேவேளை ஈழப்போராட்டத்திற்கு நாம் எப்போதும் ஆதரவாக பின்புலத்தில் இருப்போம் என்றும் அங்கு வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன.

சர்வதேச இடது சாரி சக்திகளுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் நேசக்கரம் என்ற தலைப்பில் புலிகளின் குரலில் அரசியல் ஆய்வரங்கத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்துவடிவமும், கியுூபாவும் தமிழீழமும் என்ற தலைப்பில் தமிழகத்தில் கியுூபா ஆதரவு மாநாட்டினை நடத்தும் இடது சாரி கட்சிகள், கியுூபாவுக்கு நேசக்கரம் நீட்டும் தமிழீழம் குறித்து அக்கறை காட்டவேண்டும் என்று துண்டுப்பிரசுரமும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் இந்தக் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்டன.

இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முப்பதிற்கும் மேற்பட்ட இயங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கு கொண்டு தமிழீழ விடுதலைக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாகவும், அதே நேரம் ஈழத்தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாற்றிய சிறீ சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்தும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

இத்தகைய ஆர்ப்பாட்டங்கள், தஞ்சையில் தமிழ்த்தேச பொதுவுடமைக்கட்சியின் பொதுச்செயலாளர். பே.மணியரசன் தலைமையிலும், மதுரையஙில் தமிழர் தேசிய இணக்க பொதுச்செயலாளர் பரந்தாமன் தலைமையிலும், கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கோவை. கு, இராமகிஸ்ணன் தலைமையிலும் நடைபெற்றன.

எதிர்வரும் 30 ஆம் நாள் அன்று சேலத்தில் தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் சிறீ லங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரின் உரையினைக்கண்டித்து கண்டன அர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.

புலிகளை அச்சுறுத்தும் விதத்தில் அமெரிக்க தூதர் உரையாற்றியதை கண்டித்து தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம்

எவர் அச்சுறுத்தினாலும் வாலை நறுக்கும் ஆற்றல் தமிழ் இனத்துக்கு இருப்பதாக முழக்கம்

விடுதலைப் புலிகளை அச்சுறுத்தும் வகையில் கொழும்பில் உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து தமிழகத்தில் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சென்னை மதுரை தஞ்சை கோவை ஆகிய நகரங்களில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தலைமை வகித்தார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆனூர் ஜெகதீசன் பொதுச் செயலாளர் விடுதலை க.இராசேந்திரன் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் மார்க்சிய பெரியார் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் வே.ஆனைமுத்து தமிழ் தமிழர் இயக்கப் பொதுச் செயலாளர் தியாகு மக்கள் கவிஞர் இன்குலாப் புரட்சிகர இளைஞர் முன்னணியின் நிர்வாகி தமிழ்மணி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சியின் கி.வெங்கட்ராமன் தமிழ்த் தேசிய மார்க்சிய கட்சியின் இராசேந்திர சோழன் ஓவியர் புகழேந்தி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட இயக்கத்தின் நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றினர்.

அமெரிக்கத் தூதுவரின் அச்சுறுத்தும் உரை மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான அமெரிக்க இந்திய உதவிகள் ஆகியவற்றைக் கண்டித்து கூட்டத்தில் உரையாற்றியவர்கள் பேசினர்.

விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையேயான யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துகள் எதனையுமே குறிப்பாக ஆயுதக் குழுக்கள் களைவுஅதிக உயர் பாதுகாப்பு வலயம் அகற்றல் மீன்பிடித் தடை உள்ளிட்ட தமிழர் தொழில் செயற்பாடுகளுக்கான சுதந்திரம் ஆகியவற்றை 4 ஆண்டு காலமாகியும் இலங்கை அரசாங்கம் செயற்படுத்தவில்லை என்பதால் தமிழ் மக்கள் நம்பிக்கையிழந்து நிற்கின்றனர் என்று தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் தனது உரையில் தெரிவித்தார்.

தென் அமெரிக்க நாடுகளில் சோசலிச அரசாங்கங்கள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் விடுதலைப் புலிகளும் அந்த அரசாங்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருவதையும் விடுதலை க. இராசேந்திரன் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா உள்ளிட்ட எந்த நாடுகள் அச்சுறுத்தினாலும் அதன் வாலை ஒட்ட நறுக்கும் ஆற்றல் விடுதலைப் புலிகளுக்கும் தமிழினத்துக்கும் உண்டு என்று விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

அமெரிக்காவின் கீழ் உள்ள தென் அமெரிக்க நாடுகளில் பொலிவியா உள்ளிட்ட தேசங்களில் சோசலிச அரசுகள் கோலோச்சுகின்ற போது ஈழத் தமிழர்களை அமெரிக்கா எதிர்க்கிறது எனில் தமிழீழத்தையும் சோசலிச நாடுகளின் அணியில் தான் அமெரிக்கா கருதுகிறது என்று தமிழ் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு தெரிவித்தார்.

இந்திய அரசாங்கம் கடந்த ஓராண்டாக இலங்கை இராணுவத்துக்கு பயிற்சி அளித்து வருகிறது என்றும் இன்று கூட சென்னை தாம்பரம் விமானப்படை பயிற்சி நிலையத்தில் சிங்கள இராணுவத்தினருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன என்றும் மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தலைவர் வே. ஆனைமுத்து குற்றம்சாட்டினார்.

தேசிய இன விடுதலைப் போராட்டத்தை ஒரு சந்தைப் பொருளாக அமெரிக்கா பார்க்கிறது. தேசிய இன விடுதலை விழுமியத்தை அமெரிக்கா விழுங்கப் பார்க்கிறது. அமெரிக்காவின் பாதத்துக்குக் கீழ் இலத்தீன் அமெரிக்க நாடுகள் கிளர்ந்து எழுந்துள்ளன. உலகம் முழுவதும் விடுதலை விரும்பும் நாடுகள் ஒன்றுபட்டு நிற்கின்றன.

உலகம் முழுவதும் விடுதலைப் போராட்டத்தை இடதுசாரிகள் ஆதரிக்கின்றன. ஆனால்இ ஈழத்தையும் இடதுசாரிகள் ஆதரிக்க வேண்டும். தமிழக இடதுசாரிகள் சிங்கள ரத்னா விருது பெற்ற இந்து'ராமின் அணுகு முறையைப் பின்பற்றக் கூடாது. இந்த நாட்டில் குறைவான எண்ணிக்கையில் இருப்போருக்கான நலன் தான் அவரது அணுகு முறைதான் என்றார் மக்கள் கவிஞர் இன்குலாப்.

அமெரிக்க தூதுவரின் அச்சுறுத்தும் உரையைக் கண்டித்தும் ஈழத் தமிழர்களின் விடுதலைக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்போம் என்பதையும் வலியுறுத்தி ஆர்ப்பாட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

"சர்வதேச இடதுசாரி சக்திகளுக்கு விடுதலைப் புலிகள் நேசக்கரம்" என்ற தலைப்பில் புலிகளின் குரல் அரசியல் ஆய்வரங்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் ஆற்றிய உரையின் எழுத்து வடிவமாக புதினம்' இணயத்தளத்தில் வெளியிடப்பட்டதையும் கியூபாவும் தமிழீழமும் என்ற தலைப்பில் தமிழகத்தில் கியூபா ஆதரவு மாநாட்டை நடத்துகிற இடதுசாரி சக்திகள் கியூபாவுக்கு நேசக்கரம் நீட்டும் தமிழீழம் குறித்து அக்கறை கொள்ள வேண்டும் என்ற துண்டுப் பிரசுரமும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரால் இந்த கூட்டத்தில் விநியோகிக்கப்பட்டன.

2 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 30 க்கும் மேற்பட்ட இயக்கங்களின் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று தமிழீழ விடுதலைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஆதரவாகவும் ஈழத் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் உரையாற்றிய அமெரிக்க தூதுவரைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை உரத்த குரலில் எழுப்பினர்.

இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தலைமையிலும்இ மதுரையில் தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் பரந்தாமன். தலைமையிலும் கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணன் தலைமையிலும் நடைபெற்றன.

நாளை 30 ஆம் திகதி சேலத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது

thinakkural

http://www.thinakkural.com/New%20web%20sit...Important-4.htm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து சேலத்தில் இன்று எழுச்சிமிக்க பேரணி- கண்டன ஆர்ப்பாட்டம்!!

[திங்கட்கிழமை, 30 சனவரி 2006, 19:46 ஈழம்] [புதினம் நிருபர்]

ஈழத் தமிழரை மிரட்டும் வகையில் உரையாற்றிய சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து தமிழகத்தின் சேலம் நகரில் இன்று திங்கட்கிழமை எழுச்சிமிக்க பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் நடத்தப்பட்ட இந்த பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்துக்குத் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமை வகித்தார்.

சேலம் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு "ஈழத் தமிழரை மிரட்டும் அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து" பேரணி தொடங்கியது. நகரின் முக்கிய வீதிகளுடாகச் சென்ற பேரணி சேலம் போஸ் மைதானத்தை வந்தடைந்தது.

அமெரிக்கத் தூதுவரைக் கண்டித்து இந்தப் பேரணியில் முழக்கங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவரின் மிரட்டல் உரையை தமிழக மக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் தமிழக நாளிதழ்களில் வெளியான அமெரிக்கத் தூதுவரின் உரையையும்

லத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாகி வரும் சோசலிச அரசுகளுடன் விடுதலைப் புலிகள் நேசக்கரம் நீட்டுவதை விளக்கி இந்திய இடதுசாரிகளும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களும் பேரணியூடாக வீதிகள் தோறும் வழங்கப்பட்டு வந்தன.

சர்வதேச சமூகம் கூறிவருகிற "பயங்கரவாதம்" என்பதற்கான வரையறைகள் என்ன? என்று கடந்த மாவீரர் நாள் உரையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியதையும் துண்டுப் பிரசுரமாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் வழங்கினர்

சேலம் நகர முக்கிய வீதிகளுடாக நகர்ந்த இந்தப் பேரணி 2 மணித்தியாலங்கள் கழித்து போஸ் மைதானத்தை வந்தடைந்தது.

போஸ் மைதானத்தில் பெருந்திரளாகக் கூடியிருந்த தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள், அமெரிக்கத் தூதுவரின் அச்சுறுத்தும் உரைக்குக் கண்டனம் தெரிவித்தும், தமிழீழ விடுதலைக்கு தமிழகத் தமிழர்களின் ஆதரவை வெளிப்படுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.

இந்த பேரணியில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்:

எங்கள் இரத்தம் எங்கள் இரத்தம்

ஈழத் தமிழர் எங்கள் இரத்தம்!

வாழ்க வாழ்க வாழியவே!

எங்கள் தலைவர் பிரபாகரன் வாழியவே!

வெல்லட்டும் வெல்லட்டும்

விடுதலைப் புலிப் படை வெல்லட்டும்!

புலியே! புலியே! விளையாடு

சிங்களவன் தலையை பந்தாடு!!

மலரட்டும் மலரட்டும்

தமிழீழம் மலரட்டும்!

இந்திய தேசியம் பேசும் அண்ணாச்சியே!

பாலஸ்தீனம் இனிக்குது

வங்கதேசம் இனிக்குது

ஈழம் மட்டும் கசக்குதா?

அமெரிக்க அரசே! அமெரிக்க அரசே!

ஈழச் சிக்கலில் தலையிடாதே!!

இந்திய அரசே! இந்திய அரசே!

பயிற்சி கொடு பயிற்சி கொடு

தமிழக மீனவர்களுக்கு

ஆயுதப் பயிற்சி கொடு!

ஆகிய முழக்கங்களை பேரணியிலும் ஆர்ப்பாட்டத்திலும் திரண்டிருந்த நூற்றுக்கணக்கானோர் உரத்த குரலில் முழக்கம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டம் 1 மணித்தியாலம் நடைபெற்றது.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, தமிழின உணர்வாளர் புதுக்கோட்டை பாவாணன், ராஜீவ் வழக்கில் சிறையில் வாடும் பேரறிவாளவனின் தாயார் அற்புதம் குயில்தான் அம்மையார், தமிழின உணர்வாளர் மு.அந்தாலனார், விடுதலைச் சிறுத்தைகளின் சேலம் மாவட்டச் செயலாளர் தமிழன், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சேலம் மாவட்டத் தலைவர் முல்லைவேந்தன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் ஆனையப்பன், தமிழ்ச் சான்றோர் பேரவையின் பாவலர் எழுஞாயிறு, தமிழ் தமிழர் இயக்கத்தின் ஆறுமுகம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இயக்கங்களின் பிரதிநிதிகளும் தமிழின உணர்வாளர்களும் போஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரை நிகழ்த்தினர்.

நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி பேசியதாவது:

இலங்கை யுத்த நிறுத்த ஒப்பந்த சரத்துகள் எதனையுமே சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை. இப்போது பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பேச்சுவார்த்தைக்குப் போகிற சிறிலங்கா அரசாங்கம், யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயல்படுத்தித்தான் ஆக வேண்டும். அப்படி யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்தா நிலை ஏற்பட்டால் சர்வதேசத்துக்கு ஒரு உண்மையும் தெரிய வரும். சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் சிறிலங்கா இராணுவம் இருக்கிறதா? அல்லது சிங்களப் பேரினவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? என்கிற அந்த உண்மை வரத்தான் போகிறது.

தமிழகத்திலிருந்து ஈழத் தமிழர்களுக்காக ஆதரவாகக் குரல் கொத்துக் கொண்டிருப்பதில் எதுவித பொருளும் இல்லை. தமிழகத்திலும் உரிமை பெற்ற தமிழர்களுக்கான தனியரசு அமைகின்ற போதுதான் ஈழத் தமிழர்களுக்கான நமது குரல் அர்த்தமுடையதாக இருக்கும் என்றார் கொளத்தூர் தா.செ. மணி.

puthinam.com

எழுச்சி நிகழ்வுப் படங்களைப் பார்க்க http://www.eelampage.com/?cn=23847

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டில் எமக்காகக் வெயிலும் ஊர்வலமாக சென்று குரல் கொடுக்கும் இந்தியத்தமிழர்களுக்கு நன்றி. ஆனால் ஒஸ்ரேலியாவில் உள்ள ஈழத்தில் பிறந்த சில கேடு கெட்ட ஜென்மங்கள் ஈழப்போராட்டத்தினைக் கேவலப்படுத்துவதை நினைக்க வேதனையாக இருக்கிறது.

நன்றி - இருவரதும் இணைப்புக்கு-! 8)

இந்தியத் தமிழர்கள் என்ன தான் உங்களுக்காக குரல் கொடுத்தாலும், நீங்கள் உங்கள் அநியாய இந்திய எதிர்ப்பு கருத்துக்களை நிறுத்தப் போவதில்லை.....

இன்னா செய்தாரை........

  • கருத்துக்கள உறவுகள்

பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் எமக்குத் தெரியும்!

யார்யார் நமக்கு ஆதரவானவர்கள் என்று தெரியும்.

ஆகவே பொத்........... :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக்கு, இப்பகுதியில் நான் ஒஸ்திரேலியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் சிலரைப்பற்றியே குறைகூறினேன். இந்தியாத்தமிழர்களுக்கு நன்றி செலுத்தினேன். இந்தியாவில் உள்ள சிலரைத்தான் இங்குள்ளவர்கள் எதிர்க்கிறார்கள். எல்லோரயும் அல்ல. அது போல ஈழத்தில் உள்ள துரோகிகளையும் எதிர்க்கிறோம். தேவையில்லாமல் பிரச்சனைகள் படமால் நட்புடன் பழகுவோம்.

தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும். போரட்டம் வெல்ல வாழ்த்துவோம்.

சதுரங்கன்

பாலுக்கும் கள்ளுக்கும் வித்தியாசம் எமக்குத் தெரியும்!

யார்யார் நமக்கு ஆதரவானவர்கள் என்று தெரியும்.

ஆகவே பொத்........... :evil: :evil:

அதாவது இழுத்துச்சாத்தும் எண்டுறீர் ம் ம் சொல்லுறதில நியாயமிருக்கு

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

coolcatonmotorcyclesmnwm5ir.gif

அதாவது இழுத்துச்சாத்தும் எண்டுறீர் ம் ம் சொல்லுறதில நியாயமிருக்கு

:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

coolcatonmotorcyclesmnwm5ir.gif

அதாவது அமுக்கிவாசிக்கோணும் என்று சொல்றார்
  • 2 weeks later...

"புங்குடுதீவு தர்சினியை" அவதூறாக பேசிய சிறிலங்கா அமைச்சருக்குக் கண்டனம்: சென்னையில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்! சிறிலங்கா கடற்படையால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு தர்சினையை சென்னையில் அவதூறாகப் பேசிய சிறிலங்கா அமைச்சர் திஸ்ஸ விதாரனவைக் கண்டித்து சென்னையில் இன்று வியாழக்கிழமை பெண்கள் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை விக்டோரியா நினைவு மண்டபம் எதிரே இன்று மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு பெண்கள் இயக்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

அண்மையில் சென்னையில் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் பேசிய சிறிலங்கா அமைச்சர் திஸ்ஸ விதாரன, புங்குடுதீவில் படுகொலை செய்யப்பட்ட தர்சினி ஒரு பாலியல் தொழிலாளி என்றும் இராணுவத்துக்குச் சேவையாற்றுபவர் என்றும் கூறியிருந்தார்.

சிறிலங்கா அமைச்சரின் இந்த அவதூறைக் கண்டித்து தமிழகப் பெண்கள் எழுச்சி அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அன்னையர் முன்னணியின் தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளருமான பேராசிரியர் சரஸ்வதி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில்,

வீரவணக்கம்! வீரவணக்கம்!

மனித உரிமைப் போர்க்களத்தில்

பெண் உரிமைப் போர்க்களத்தில்

இன்னுயிர் நீத்த

போராளிகளுக்கு வீரவணக்கம்!

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!

தமிழ் பெண் தர்சினியை

பாலியல் பலாத்காரம்

செய்திட்ட சிங்கள இராணுவத்தைக் கண்டிக்கிறோம்!

கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!

பாலியல் வெறியாட்டத்தை மூடி மறைத்த

சிங்கள அமைச்சர்

திஸ்ஸ விதாரனவைக் கண்டிக்கிறோம்!

இந்திய அரசே! இந்திய அரசே!

தட்டிக்கேள்! தட்டிக்கேள்!

சிங்கள அரசின்

மனித உரிமை மீறல்களைத் தட்டிக்கேள்!

தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!

இந்தியக் கூட்டணி அரசே!

இந்தியக் கூட்டணி அரசே!

இலங்கை வாழும் தமிழர்களை

இலங்கை வாழும் தமிழச்சிகளை

இனக்கொலை செய்து வெறியாட்டம் போடும்

சிங்களப் பேரினவாதிகளை தடுத்து நிறுத்து!

ஈழ விடுதலைப் போரில் உயிர்நீத்த

எங்கள் தமிழர்களுக்கு

வீரவணக்கம்! வீரவணக்கம்!!

எங்கள் உடலும் உயிரும்

இராணுவ வெறியாட்டத்துக்கு தீனியாகும் பண்டமல்ல!

அனுமதியோம்! அனுமதியோம்!

இந்தக் கொடுமையை அனுமதியோம்!

மக்களைக் காப்பாற்ற இராணுவமா?

மக்களைக் கொல்ல இராணுவமா?

பதில் சொல்! பதில் சொல்!

சிங்கள அரசே பதில் சொல்!!

ஆகிய முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிகழ்வில் பங்கேற்ற மனித உரிமைச் செயற்பாட்டாளர் ரி.எஸ்.எஸ். மணி,

கூட்டாட்சி முறையை ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் ஒற்றையாட்சியின் கீழ்தான் தீர்வு என்று கூறுகிற மகிந்த ராஜபக்ச சிறிலங்கா அரச தலைவராகப் பொறுப்பேற்றார்.

அதன் பின்னர்தான் தமிழ்ப் பகுதிகளில் வன்முறைகள் வெடித்தன. இத்தகைய பாலியல் வல்லுறவுகள் நடைபெற்றன.

மனித உரிமை மீறல்கள் உலகின் எந்தப் பகுதிகளில் நடந்தாலும் அதைக் கண்டிக்க வேண்டியது நம் கடமை என்றார்.

வழக்கறிஞர் மணிராஜ் பேசுகையில்,

சர்வதேச நாடுகளின் மனித உரிமை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம், அதைச் செயற்படுத்த இந்திய அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசியதாவது:

திருகோணமலையில் 5 தமிழ் மாணவர்களை இராணுவம் படுகொலை செய்துவிட்டு குண்டுத் தாக்குதல் நடத்தியவர்கள் என்று முதலில் கூறியது. ஆனால் துப்பாக்கிக் குண்டுகளால்தான் மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர் என்று மருத்துவ பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பின்னர் விசாரணை நடத்துகிறோம் என்று மறு அறிவிப்பு வெளியிட்டது.

ஜெனீவாவில் பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் ஒப்புக்கொண்டு நல்லெண்ண நடவடிக்கையாக தங்கள் காவலில் இருந்த சிங்கள காவல்துறையைச் சேர்ந்த ஒருவரை விடுதலைப் புலிகள் விடுதலை செய்த 24 மணிநேரத்தில் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு மேஜர் கபிலன் என்கிற போராளி படுகொலை செய்யப்பட்டார்.

ஜெனீவாப் பேச்சுக்களுக்கான நாட்கள் குறிக்கப்பட்டிருக்கும் நிலையில் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகிற தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் 10 பேர் சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியில் கடத்தப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா அரச தலைவராக மகிந்த ராஜபக்ச பொறுப்பேற்ற பின்னர் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் தர்சினியை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிப் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து தொடர்ந்து சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வன்முறைகள் நடைபெற்று வருகின்றன. அதனால் தமிழகத்துக்கு அகதிகளின் வரும் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

தமிழகத்துக்கு வருகை தரும் அகதிகள் அனைவருமே சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்தை, பாலியல் வல்லுறவுக் கொடுமைகளைச் சொல்லி வருகின்றனர் என்றார்.

ஆர்ப்பாட்டத்துக்குத் தலைமை வகித்த பேராசிரியர் சரஸ்வதி பேசியதாவது:

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இளம் பெண் தர்சினி சிங்களக் கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மாதிரியான விடயங்கள் நடப்பது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.இதே மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க வேண்டும்.

அன்புடன்

மாலு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுவையில் பெப்ரவரி 18-ல் ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு

இந்தியாவின் புதுவை மாநிலத்தில் பெப்ரவரி 18 ஆம் நாள் ஈழத்தமிழர் பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.

புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் இந்த மாநாடு நடத்தப்பட உள்ளது.

புதுவை மாநில தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவரும் தமிழீழ விடுதலை ஆதரவாளருமான லோகு. அய்யப்பன் மாநாட்டுக்குத் தலைமை வகிக்கிறார்.

இந்த மாநாட்டில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு செயல் களத்தில் ஆதரவு தெரிவித்து சிறையேகிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தமிழ்நாட்டுத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி, பொதுச் செயலாளர்களில் ஒருவரான கோவை கு.இராமகிருட்டிணன் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்ட பரப்புரையாளர்களில் ஒருவரான விடுதலை க.இராசேந்திரன், அரச பயங்கரவாதத்துக்கு எதிராக நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்து செயற்பட்டமைக்காக தூக்குத் தண்டனையை எதிர்நோக்கி விடுதலையான முன்னை நாள் திலீபன் மன்ற நிறுவனரும் தமிழ் தமிழர் இயக்கத்தின் பொதுச் செயலாளருமான தோழர் தியாகு, மனித உரிமைச் செயற்பாட்டாளர் சுகுமாரன், தமிழர் தேசிய இயக்கத்தின் நிர்வாகி அழகிரி மற்றும் மீனவர், ஒடுக்கப்பட்டோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறியது யார்? என்பதை விவரிக்கும் விடுதலை க. ராசேந்திரனின் விளக்க நூலும் இந்த மாநாட்டில் வெளியிடப்பட உள்ளது என்று எமது புதுவை செய்தியாளர் தெரிவிக்கிறார்

தகவல் மூலம்- புதினம்.கொம்

புலம்பெயர் வானொலில அதுவும் அப்துல் ஜபார் ஜயா சொல்லியிருந்தாரா? நம்புறமய்யா.. நம்புறம்..

:P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

னக்குனா. குசுமாறா!

உன்கலிற்கும், என்கலிற்கும் "ரா" சென்னா மட்டும் நம்புவேம்! "ரா"விற்கு ஒறு "றோ"கறா போடுவேமா????????

புலம்பெயர் வானொலில அதுவும் அப்துல் ஜபார் ஜயா சொல்லியிருந்தாரா? நம்புறமய்யா.. நம்புறம்..

:P

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங்

சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் சிஞ்சாங் :P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

சிவராம் படுகொலையில் இந்திய பேரரசுக்குத் தொடர்பு: தொல்.திருமாவளவன் பகிரங்கக் குற்றச்சாட்டு!

[புதன்கிழமை, 15 பெப்ரவரி 2006, 06:02 ஈழம்] [புதினம் நிருபர்]

மாமனிதர் ஊடகவியலாளர் சிவராம் தராக்கி படுகொலையில் இந்தியப் பேரரசுக்குத் தொடர்பிருப்பதாக தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச்செயலாளர் தொல்.திருமாவளவன் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் நடத்தப்பட்ட ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் தொல். திருமாவளவன் ஆற்றிய நிறைவுரை:

ஜெனீவாவில் பேச்சு நடைபெற உள்ளது. ஜெனீவா பேச்சுக்களுக்கு முன்பாக என்ன நிலைமை இருந்தது?

ஆசியாவில்தான் பேச்சு நடக்க வேண்டும். ஐரோப்பாவில் பேச்சு நடத்த நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். ஒருபோதும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று மகிந்த ராஜபக்ச பிடிவாதம் செய்தார்.

ஆனால் விடுதலைப் புலிகளோ ஆசியாவில் நடத்த ஒருபோதும் ஒப்புக்கொள்ளமாட்டோம். ஐரோப்பிய மண்ணில் எந்த தேசத்திலும் நடக்கட்டும். நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றார்கள். இரண்டு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட சிக்கலில் இறுதியாக விடுதலைப் புலிகள்தான் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

ராஜபக்ச விரும்பியபடி ஆசியாவில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஆசியாவில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று சொன்னால் அது இந்தியாவிலே நடக்கட்டும். இந்தியாவிலே நடந்தால் சிங்கள பேரினவாத அரசுக்கு இந்தியா ஆதரவைப் பெற வேண்டும். இந்தியா ஆதரவாக இருப்பதாகக் காட்டிக்கொள்ள வேண்டும்.

இந்தியா ஆதரவாக இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம்.

இந்தியா தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மகிந்த ராஜபக்ச விரும்பினார். இன்று இந்தியப் பேரரசு சிங்களப் பேரினவாத அரசுக்கு உறுதுணையாக இருக்கிறது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

எல்லா வகையிலும் அப்படி ஆதரவு நிலையை இந்திய அரசு எடுக்கிற காரணத்தால்தான் விடுதலைச் சிறுத்தைகள் உடனடியாகத் தலையிட்டு பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தது.

ஈழத்திலே போருக்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு டில்லிக்கு வருகிற மகிந்த ராஜபக்சவை தமிழ்நாட்டுக்கு வர அனுமதிக்கமாட்டோம் என்று விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்தது. விமான நிலையத்திலேயே கறுப்புக் கொடி விரட்டியடிப்போம் என்ற தீர்மானத்தை விடுதலைச் சிறுத்தைகள் எடுத்தது.

அதன் அடையாளமாக ஆர்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்தோம். அதனைத் தொடர்ந்து பெரியார் திடலிலே திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி தலைமையில் மாபெரும் கருத்தரங்கு நடைபெற்றது. ஆங்காங்கே தமிழ்த் தேசிய சக்திகளால் எழுச்சி உருவானது.

நம்முடைய இந்த எதிர்ப்பெல்லாம் ஒட்டுமொத்தமாக முதல்வரின் கவனத்துக்குச் சென்ற காரணத்தினால், ராஜபக்ச தமிழ்நாட்டுக்கு வந்து இங்குள்ள அமைதிச் சூழலை நான் கெடுக்க விரும்பவில்லை. ஆகையால் அவர் வந்தால் வரவேற்கமாட்டேன் என்று தகவல் சொன்னதால் ராஜபக்ச கேரளாவுக்குப் போய் பாயாசம் குடித்துவிட்டுப் போனார்.

இந்த மாநாடு ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாடு என்று போடப்பட்டிருந்தாலும் ஈழத்திலே இருக்கிற தமிழர்களைப் பாதுகாக்கிற வலிமை நம்மிடம் இல்லை. அது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனிடத்தில் இருக்கிறது. அந்த ஆற்றல் அவருக்கு இருக்கிறது. ஆனாலும் தமிழர்கள் என்ற முறையிலே நமக்கென்று சில கடமைகள் இருக்கின்றன.

நாம் இந்திய எல்லைக்குள் வாழ்கிற குடிமக்கள். நம்முடைய இந்திய அரசு எடுக்கிற முன்முயற்சிகள் நம்முடைய தேசிய இனத்துக்கு எதிரானதாக அமையுமேயானால் அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.

இன்று தாம்பரம் பக்கத்தில் இருக்கிற இராணுவ பயிற்சிக் கல்லூரியில் சிங்கள இராணுவத்தைச் சார்ந்த பலருக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக செய்திகள் கூறுகின்றன. விடுதலைப் புலிகள் இப்போது வான்படை அமைத்துவிட்டார்கள். வான்படையால் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்கிற வலிமை சிங்களப் படைகளுக்கு இல்லை என்பதால் அந்தப் பயிற்சியை இந்தியப் பேரரசு தந்து கொண்டிருக்கிறது.

அதைப்போல் பல தாக்குதல்களில் விடுதலைப் புலிகள் கப்பல்களை இழந்திருந்தாலும் இன்று விடுதலைப் புலிகள் கப்பற்படையை வலுப்படுத்தியிருப்பதாக செய்திகள் வருகின்றன. தற்போது போர்க்களத்திலே 23 கப்பல்களை விடுதலைப் புலிகள் தயாராக வைத்திருக்கிறார்கள் என்கிற உறுதியான செய்திகள் பரவிக்கொண்டிருக்கின்றன.

இப்படிப்பட்ட நிலையில் சிங்களப் படைகளுக்கு இந்தியப் பேரரசு நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பணிகளைச் செய்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இந்த நாட்டின் குடிமக்கள் என்ற கடமையில் அதைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது.

இந்தியப் பேரரசே! ஈழத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கைவிடுங்கள்! சிங்களப் பேரினவாத அரசுக்கு உறுதுணையாக இருக்கும் போக்கைக் கைவிடுங்கள் என்று எச்சரிக்கை வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கும் இருக்கிறது.

அதைவிட வேதனையான செய்தி.

ஊடகவியலாளர்களின் ஆராய்ச்சியிலே நம்மால் காண முடிகிற செய்தி.

சிவராம் தராக்கி என்ற சிறந்த ஊடகவியலாளர்- இராணுவ களத்திலே நின்று ஆய்வு செய்யக் கூடிய சிறந்த ஆய்வாளர்- திடீரென்று படுகொலை செய்யப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இந்தியப் பேரரசும் இருக்கிறது என்ற செய்தி வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இந்தியாவின் 'றோ' வுக்கு அதிலே தொடர்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையெல்லாம் உண்மையாக இருக்கக் கூடாது என்று எதிர்பார்க்கிறோம். அப்படி உண்மை இருக்குமானால் இந்த இனம் விடுதலைக்கு மேலும் பல பின்னடைவுகளைச் சந்திக்க நேரும்.

ஆகவே இந்தியப் பேரரசே!

ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குகிற போக்கை-

தமிழ்த் தேசிய எழுச்சியை நசுக்குகிற போக்கை கைவிடுங்கள் என்று கேட்டுக்கொள்ளக் கூடிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.

சுடரொளி என்ற ஊடக அலுவலகம் மீது தாக்குதல் நடந்திருக்கிறது. தமிழ்த் தேசியத்துக்கு உறுதுணையாக இருக்கிற ஊடகதளங்கள் இந்தியப் பேரரசால் குறிவைக்கப்படுகிற என்கிற செய்தியைக் கேட்கின்றபோது நாங்கள் அதிர்ச்சியடைகிறோம். வேதனைப்படுகிறோம்.

ஆகவே இந்தியப் பேரரசை வற்புறுத்தக் கூடிய கடமையும் பொறுப்பும் தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு இருப்பதால்தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம்.

அமெரிக்கப் பேரரசைப் பற்றி இங்கே சொன்னார்கள். அமெரிக்கா என்பது உலக நாடுகளுக்கு எல்லாம் தானே தாதாவாக இருந்து கட்டப் பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்கிற வெறித்தனமான காலித்தனமான போக்குகளைக் கடைபிடித்து வருகிறது.

அதனால்தான் ஒவ்வொரு முறையும் மூக்கறுக்கப்பட்டு, வால் நறுக்கப்பட்டு அது அலங்கோலமாக, அகோரமாக நின்றாலும்கூட அதன் ஆணவம் இன்னமும் அடங்கவில்லை.

அதனால்தான் ஈரான் விவகாரத்தில் அமெரிக்கா நிலைப்பாட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டும்..இல்லையேல்...என்று எச்சரிக்கை விடுக்கக் கூடிய அளவுக்கு ஆணவம் தலைதூக்கி நிற்கிறது.

ஈழப் பிரச்சனையிலும் இதர பிரச்சனைகளிலும் அமெரிக்கா வீம்புக்கு மூக்கை நுழைக்கிற போது இந்தியப் பேரரசு அமைதி காத்ததுதான் காரணம். அப்படி அன்று அமைதி காத்ததன் விளைவால் மூன்றாம் உலக நாடுகளிலேயே வல்லரசாக வளர்ந்துவருகிற இந்தியப் பேரரசை அமெரிக்க வல்லரசு அச்சுறுத்துகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கும் எச்சரிக்கை விடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் இருப்பதால் இந்த மாநாட்டை நாம் நடத்துகிறோம்.

ஆனானப்பட்ட அமெரிக்க வல்லரசை ஆனையிறவு மீட்சிப் போரிலே அதன் வாலை விடுதலைப் புலிகள் ஒட்ட நறுக்கி விரட்டியத்த வரலாறு உண்டு.

சிங்களப் படையினரால் விடுதலைப் புலிகளை எதிர்கொள்ள முடியவில்லை என்று திணறிய போது களத்திலேயே நின்று சிங்களப் படைகளுக்கு உத்திகளைக் கற்றுத்தந்தது அமெரிக்கப் படை. பல தந்திரங்களை கற்றுத் தந்தது அமெரிக்கப் படை. ஆனாலும் அந்த உத்திகளை விடுதலைப் புலிகள் முறியடித்தார்கள். தந்திரங்களை முறியடித்தார்கள். ஆனையிறவை மீட்டெடுத்தார்கள்.

சிங்களப் படைகளும் அவர்களுக்கு உத்திகளை வகுத்துத் தந்த அமெரிக்கப் படைகளும் பின்னங்கால் பிடரியிலே படக்கூடிய வகையில் ஓடி ஒளிந்தது. இது வரலாறு.

இன்று அமெரிக்காவின் இராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் எல்லாம் புலிகளின் போர் உத்திகளை வகுப்பாகப் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கே தெரியாத உத்தியை இவர்கள் எப்படி புதிது புதிதாகக் கையாள்கிறார்கள்? ஒருமுறை கையாள்கிற உத்தியை மறுமுறை கையாளுவதில்லையே.. யூகம் செய்யக் கூடிய வகையிலேயே உத்திகளைக் கையாள்வதில்லையே? எங்கே கற்றார் பிரபாகரன் இந்த இராணுவ தந்திரங்களை? என்று வியப்பு மேலிட பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்க வல்லரசு.

அமெரிக்காவுக்கு நாமெல்லாம் எச்சரிக்கை விடுக்க வேண்டிய அவசியமில்லை.

வியட்நாமிலே அதன் வால் நறுக்கப்பட்டது போல, கியூபாவிலே மூக்கறுப்பட்டதைப் போல, இன்னும் சுண்டைக்காய் நாடுகள் என்ன என்னவெல்லாம் இருக்கிறதோ அந்த நாடுகளில் எல்லாம் அவமானப்பட்டதைப் போல தமிழீழத்திலும் அமெரிக்க வல்லரசு மூக்கறுபடும். அது நடக்கும். அந்த வல்லமை விடுதலைப் புலிகளுக்கு உண்டு.

ஆனாலும் தமிழர்கள் என்ற கடமை உணர்ச்சி நமக்கு இருக்கிறது.

அமெரிக்க வல்லரசே!

உன் காடைத்தனத்தை,

உன் காலித்தனத்தை,

உன் பொறுக்கித்தனத்தை

ஒரு எல்லையோடு நிறுத்திக் கொள்!

சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருப்பதைக் கைவிடு!

சிங்களப் பேரினவாத சக்திகள் எவ்வளவு பெரிய சேதத்தைச் சந்தித்த பின்னரும் விடுதலைக்கு இடம்கொடுக்கவில்லை என்று சொன்னால் அதற்கு சிங்களப் பேரினவாத அரசுகூட காரணமில்லை தோழர்களே!

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால்

அமெரிக்கா, இந்தியா போன்ற வல்லரசுகள்தான் ஈழ விடுதலைக்கு முட்டுக்கட்டை போடுகிற சக்திகள்.

சிங்களவர்கள் எப்போதோ தோற்கடிக்கப்பட்டுவிட்டார்க

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசமே- தமிழீழத்தை உடனடியாக அங்கீகரி! விடுதலைச் சிறுத்தைகளின் பேரெழுச்சியான சென்னை மாநாட்டில் தீர்மானம்!!

[புதன்கிழமை, 15 பெப்ரவரி 2006, 01:58 ஈழம்] [ம.சேரமான்]

தமிழீழத்தை இந்தியப் பேரரசும், சர்வதேச ஜனநாயக சக்திகளும் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகளின் சென்னை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விடுதலைச் சிறுத்தைகள் இயக்கப் பொதுச்செயலாளர் தொல். திருமாவளவன் தலைமையிலும் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஈழத் தமிழர் பாதுகாப்பு மாநாட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

சென்னை அமைந்தகரை புல்லாரெட்டி நிழற்சாலையில் நள்ளிரவு வரை நடைபெற்ற இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:

- கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நிறுத்த ஒப்பந்தங்களையும் மீறி அப்பாவித் தமிழ் மக்கள் மீது இராணுவ அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வெறியாட்டம் போடும் சிங்களப் பேரினவாத அரசின் இனவெறிக்கு அண்மையில் பலியான கல்லுரி மாணவி தர்சினி, திருகோணமலை பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் உள்ளிட்ட ஈழத் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் இம்மாநாட்டின் மூலமாக விடுதலைச் சிறுத்தைகள் வீரவணக்கம் செலுத்துகிறது.

- கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, தொடரும் சிங்களப் பேரினவாத அரசின் இனவெறி அடக்குமுறைகளால் கணக்கிலடங்கா உயிர்ச் சேதங்களுக்கும், உடைமைச் சேதங்களுக்கும் ஆளாக்கப்பட்டு, இலட்சக்கணக்கான தமிழர்கள் உலக நாடுகளெங்கும் அகதிகளாய் புலம்பெயர்ந்து வாழும் கேடான நிலையில் மென்மேலும், ஈழத்தில் தலைவிரித்தாடும் சிங்கள இராணுவ வெறியாட்டத்தால் அண்மைக் காலமாக நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழகத்தை நோக்கி அகதிகளாக வெளியேறும் கொடுமைகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், ஈழத் தமிழ் மக்களின் மறுவாழ்வுக்கு 'தமிழ் ஈழமே தீர்வு' என்னும் அடிப்படையில் இந்தியப் பேரரசும் சர்வதேச சனநாயக சக்திகளும் தமிழ் ஈழத்தை உடனடியாக அங்கீகரிக்க வேண்டுமென இம்மாநாடு தமிழ்ப் பெருங்குடி மக்களின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறது.

- கடந்த 1983 ஆம் ஆண்டிலிருந்து சிங்கள இனவெறிக் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் அகதிகளாக தமிழ்நாடு மற்றும் இந்திய மாநிலங்களில் பரவலாகக் குடியேறியுள்ளனர். அவர்களை ஆங்காங்கே 'அகதிகள் முகாம்' என்னும் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைத்து வைத்து அடிப்படை உரிமைகள் மற்றும் பிற மனித உரிமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலையில் நடத்தப்படும் போக்கு நிலவுகிறது. உலக நாடுகளெங்கும் இவ்வாறான அகதிகளைப் பாதுகாப்பதற்கு, அய்க்கிய நாடுகள் பேரவையின் அங்கமான 'அகதிகள் மறுவாழ்வு அமைப்பின்' விதிகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. ஆனால், இந்தியப் பேரரசு ஐ.நா. பேரவையின் விதிகளுக்குக் கட்டுப்படாமல் தொடர்ந்து புறக்கணித்துவருவது மிகவும் வேதனைக்குரியது. எனவே இந்திய மாநிலங்களில் குடியேறியுள்ள ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து அகதிகளின் வாழ்வுரிமைகளைப் பாதுகாத்திட ஐ.நா. பேரவையின் அகதிகள் மறுவாழ்வு விதிகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வற்புறுத்துகிறது.

- ஈழத் தமிழ் மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்கும் எதிரான வகையில், தொடர்ந்து சிங்கள இனவெறி ஆட்சியாளர்களுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அனைத்து வகையிலும் உறுதுணையாக நிற்கும் அமெரிக்க வல்லரசின் மக்கள் விரோதக் காலித்தனத்தை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது. அத்துடன் தமிழீழச் சிக்கல்களில் தொடர்ச்சியாக வீம்புக்கு மூக்கை நுழைத்து, தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிராகச் செயல்படும் வல்லாதிக்கப் போக்கைக் கைவிட வேண்டும் எனவும் அமெரிக்க வல்லரசை இம்மாநாடு எச்சரிக்கிறது.

- கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் எல்லைதாண்டி வந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை 400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்து கடத்தியுள்ளனர். தமிழக மீனவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. அவர்கள் பிடித்த மீன்களும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டிய இந்திய கடற்படை வேடிக்கை பார்க்கிறது. இந்தியக் கடல் எல்லைக்குள்ளாகவே வந்து நமது மீனவர்களைத் தாக்கி வரும் சிங்களக் கடற்படையினர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையையும் இந்தியக் கடற்படை எடுக்கவில்லை என்பதை இம்மாநாடு சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவிக்கிறது. தமிழக மீனவர்களைக் கொண்ட 'கடல் பாதுகாப்புப் படை' உருவாக்கி அவர்களுக்குப் பயிற்சியும், ஆயுதமும் வழங்குவதன் மூலமே சிங்களக் கடற்படைத் தாக்குதல்களிலிருந்து தமிழக மீனவர்களைப் பாதுகாக்க முடியும் என இம்மாநாடு கருதுவதோடு அதற்கான முயற்சிகளைத் தொடங்குமாறு மாநில- மத்திய அரசுகளை வற்புறுத்துகிறது.

- நோர்வே அரசின் சமரச முயற்சியோடு விடுதலைப் புலிகளும் சிங்கள அரசும் பேச்சு நடத்துவதற்கு முழுமையான ஆதரவை இந்திய அரசு தெரிவித்துள்ள அதேவேளையில் சிங்களக் கடற்படை வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது, இந்தியப் படைத் தளபதிகள் அடிக்கடி இலங்கை சென்று சிங்களப் படை அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவது, யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி இராணுவ விமான தளத்தைப் புதுப்பித்துத் தருவது போன்ற நடவடிக்கைகள் சிங்கள அரசுக்குச் சார்பாக இந்திய அரசு செயல்படுவதை வெளிப்படுத்தியுள்ளன. நடுநிலை பிறழ்ந்து இந்திய அரசு செயல்படுவதற்கு இம்மாநாடு கடுங்கண்டனம் தெரிவிக்கிறது. உடனடியாக இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்த வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இம்மாநாட்டின் தொடக்கத்தில் சிறிலங்கா கடற்படையினரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவு தர்சினி, தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்ட மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம், திருகோணமலையில் சிறிலங்கா இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு அக வணக்கம் செலுத்தும் வகையில் ஒரு நிமிட நேரம் மெளனம் கடைபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் வீரவணக்க முழக்கங்களை உணர்ச்சிமிக்க உரத்த குரலில் தொல். திருமாவளவன் எழுப்ப கூட்டத்தில் திரண்டியிருந்த பல்லாயிரக்கணக்கானோரும் வீரவணக்க முழக்கங்களை எழுப்பினர்.

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தமிழ் தமிழர் இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, பாவலர் அறிவுமதி, இயக்குநர்கள் வா.செ.குகநாதன் தங்கர்பச்சான், ஓவியர்கள் வீரசந்தானம், புகழேந்தி உள்ளிட்ட பலர் சிறப்புரையாற்றினர்.

முன்னதாக பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பாவின் இன முழக்க எழுச்சி இசை நிகழ்வு நடைபெற்றது.

ஈழத் தமிழர் உரிமைகளைப் பாதுகாக்கும் முழக்கங்கள், அமெரிக்காவின் வல்லாதிக்க தலையீடு மற்றும் இந்திய அரசின் கபடத் தனங்களைத் தெரிவிக்கிற பதாகைகளை மாநாட்டில் பங்கேற்றோர் உயர்த்திப்பிடித்திருந்தனர்.

http://www.eelampage.com/?cn=24212

-புதினம்

625ym.jpg
  • கருத்துக்கள உறவுகள்

மேலதிகபடங்களினை இங்கே பார்க்கவும்.

http://www.tamilnaatham.com/photos/20060214/TAMILNADU/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.