Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரில் தப்பி சென்றவர்களுக்கு நோர்வே இரகசிய உதவி செய்ததாக குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலி உறுப்பினர்கள் தப்பிச் செல்ல நோர்வே உதவியது என்கிறது அந்நாட்டுப் பத்திரிகை!

Posted by admin On May 13th, 2011 at 8:21 pm

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் பலர் இலங்கையை விட்டுவெளியேறுவதற்கு கொழும்பிலுள்ள நோர்வே தூதரக அதிகாரிகள் இரகசியமாக உதவியளித்தாகவும் அவர்களுக்கு அரசியல் தஞ்சமளித்ததாகவும் நோர்வேயிலிருந்து வெளியாகும் அவ்டன்போஸ்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நோர்வே தூதரக அதிகாரிகள், இவ்வாறு சுமார் 12 பேருக்கு குறுகிய காலத்தில் விஸா வழங்கியதுடன் விமான டிக்கெட்டுகளை வழங்கி, அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது வழக்கத்துக்கு மாறான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள நோர்வே எதிர்க்கட்சி, இந்நடவடிக்கையினால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் பாதிப்படையலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளது.

நோர்வேயின் சர்வதேச விவகார நிறுவகத்தின் ஆராய்ச்சி பிரிவுத் தலைவர் ஐவர் பி நியூமன் இது தொடர்பாக கூறுகையில், இது இறைமையை மீறும் செயல் எனவும் அடிப்படை சர்வதேச கொள்கைகளுக்கு முரணானது எனவும் தெரிவித்துள்ளார்.

இது நோர்வேயின் நலன்கைளயும் பாதிக்கிறது. ஏனெனில் நோர்வே போன்ற சிறிய நாடு இந்த விடயம் கையாளப்பட்டதை விட வெளிப்படைத் தன்மை மூலம் நன்மையடைகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இந்நடவடிக்கையை ஆதரித்துள்ளார். ஆபத்திலுள்ள மக்களுக்கு உதவுவது நோர்வேயில் நீண்டகால சம்பிரதாயம் என அவர் கூறியுள்ளார்.

saritham.com

இந்த தலைப்பில்தான் நோர்வே பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் சிங்கள ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. இந்த தலைப்பை பார்த்தவுடன் நோர்வே ஏதோ புலிகளுக்கு இரகசியமாக உதவி செய்ததாக தமிழ் மக்களுக்கு சிந்திக்க தோன்றும்.

12 தமிழர்களுக்கு நோர்வே வெளியுறவு அதிகாரிகள் சில நாடுகளில் வைத்து வீசா வழங்கியதுடன் விமான டிக்கட்டுக்களும் போட்டுக்கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இந்த விசயத்தில் நோர்வே நாடு தமிழர்களுக்கு பெரிதாக எதனையும் செய்யவில்லை. ஏனென்றால் சிங்கள ஊடகவியலளர் மற்றும் அரச எதிர்ப்பாளர்களுக்கு அதிகமாகவே செய்துள்ளது.

ஆகவே தமிழர்களுக்கு ஏதோ 12 பேருக்கு உதவி செய்ததனை இப்போ ஏன் கசிய விடவேண்டும்?

போரில் தப்பிய இயக்க உறுப்பினர்கள், வைத்தியர்கள்,போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிங்கள அரசால் தீவிரமாக தேடப்பட்டோர்கள் எவ்வளவோ பேர் பல ஆசிய நாடுகளில் இருந்த வண்ணம் உதவி செய்யுமாறு கேட்டிருந்தனர். ஆனால் நோர்வே மறுத்து விட்டது. காலம் செல்லச்செல்ல பண உதவி கிடைத்தவர்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர் ஆனால் ஏனையோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

ஆனால் நோர்வே முள்ளிவாய்க்காலிற்கு முன்னரே அங்கிருந்து வெளியேறிய சிலருக்கு வீசா கொடுத்தது.

மீண்டும் சில ஈழ ஆதரவாளர்களால் நோர்வேய்க்கு கஸ்டம் என்றால் தென்னாபிரிக்கா அல்லது சுவிஸ் போன்ற அல்லது ஏதாவது ஒரு நாட்டில் ஏற்பாட்டை செய்து தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டும் நோர்வே செவி மடுக்கவில்லை.

தென்னாபிரிக்கா பெயரளவிற்காகவாவது ஒத்துக்கொண்டாலும் பின்னர் கைவிட்டது. அதன் பின்னரே தப்பி வந்த ஒவ்வொருவரும் தாமாகவே முடிந்தவரை அகதியாக தப்பி சென்றார்கள்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபை, பல்வேறு மனித உரிமை அமைப்புக்களிடமும் தப்பி வந்தவர்களை ஏதாவது நாடுகளுக்கு எடுக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் கூட போராளிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் ஆகவே சட்டத்தின் படி தம்மால் உதவ முடியாது என மறுத்து விட்டனர்.

இப்போ விடயம் என்னவென்றால் நோர்வே இப்படியான தகவல்களை கசிய விடுவதற்கான காரணம் என்ன? தாம் தமிழர்களுக்கு உதவி செய்திருக்கின்றோம் என காட்டி இழந்துபோன தமது இடத்தை மீண்டும் தமிழ் மக்கள் மனதில் பிடிக்கவா?

அல்லது வேறு ஏதேனும் திட்டங்கள் உள்ளனவா?

http://www.eelanatham.net/story/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81

ஏரிக்சொல்கைம் எல்லாம் அறிந்தவர்.

அவர் அதல் சொல்லி உள்ளார், ஒரு இனம் இன்னொரு இனத்தை அடித்து அடக்கி ஆளுகையில் சில தேவைகள் வரம்பு மீறி செய்ய தான் வேண்டும் என்று.

நோர்வே மூலம் எங்களது சுயாட்சி உரிமையை ஏற்று தீர்வு பெற்று தர அவர்களை வற்புறுத்த வேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசு கூட தங்களை சனநாயக ரீதியில் அங்கீகரிக்கும் படி கோரலாம்.

தலைமைஅமைச்சர் நோர்வேக்கு பரிச்சயமானவர். பேச்ச்சு வார்த்தையில் பங்கு பற்றியவர்.

ஈழ மக்களின் இன்றைய அவல நிலையை கருத்தில் கொண்டு தற்காலிக தீர்வாக சுயாட்சி முறையை ஏற்படுத்தி தருமாறு நோர்வேயிடம்

நா.க.அரசு கேட்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும் சில சிரேஷ்ட தலைவர்களும் இலங்கையை விட்டுவெளியேறுவதற்கு கொழும்பிலுள்ள நோர்வே தூதரக அதிகாரிகள் இரகசிய உதவி?

அதிர்வு இணையம், Aftenposten பத்திரிகையை மேற்கோள் காட்டி, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும் சில சிரேஷ்ட தலைவர்களும் இலங்கையை விட்டுவெளியேறுவதற்கு கொழும்பிலுள்ள நோர்வே தூதரக அதிகாரிகள் இரகசியமாக உதவியளித்ததாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

ஆனால் அதிர்வு இணையம் தெரிவித்ததுபோன்று விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களுக்கோ, அல்லது அதன் சிரேஸ்ட தலைவர்களுக்கோ நோர்வே தூதரக அதிகாரிகள் இரகசியமாக உதவியளித்தாகவோ அல்லது அவர்களுக்கு அரசியல் தஞ்சமளித்ததாகவோ அப்பத்திரிகை (Aftenposten.no) தெரிவிக்கவில்லை.

மாறாக, அகதிகள் என்ற வார்த்தைப்பிரயோகமே பயன்படுத்தப்பட்டுள்ளது. 12 வரையானோருக்கு நோர்வே உதவி புரிந்ததாகவும் இன்னும் அதேபோன்று பல பேர் வரிசையில் காத்திருப்பதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

தவறுதலாக ஏற்பட்ட மொழிபெயர்ப்பால் அகதிமுகாம்களை விட்டு வெளியேற காத்திருக்கும் நம் தமிழ் உறவுகளுக்கு, இச்செய்தி மேலும் சிக்கலையே ஏற்படுத்தும்.

4 more news: ஈழம் செய்திகள்

எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர்களுக்கு உதவியதாக வெளியான செய்திக்கு நோர்வே தூதரகம் மறுப்பு

விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்கள் 12 பேர் இரகசியமாக இலங்கை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பிலுள்ள நேர்வே தூதரகம் உதவியதாக வெளியான செய்தியை கொழும்பிலுள்ள நேர்வே தூதரகம் மறுத்துள்ளது.

இலங்கையைவிட்டு அகதிகள் வெளியேற நோர்வே உதவுகிறது என என்ற தலைப்பில் அவ்டன் போஸ்டன் எனும் நோர்வே பத்திரிகையில் வெளியான செய்தியை இலங்கையிலுள்ள பல ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.  உள்ளூர் ஊடகங்களில் வெயிhன இச்செய்தியின் மொழிபெயர்ப்பில், அகதிகள் என்பதை எல்.ரி.ரி.ஈ.யினர் என குறிப்பிட்டதைப் போன்று பல தவறுகள் காணப்படுகின்றன என நேர்வே தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தனிப்பட்டவர்கள் சம்பந்தமான விடயங்கள் குறித்து பேசுவதற்கு நோர்வே தூதரகத்திற்கு அதிகாரமில்லை. எனினும் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட வேண்டும்.

நோர்வேயில் புகலிடம் கோருவோருக்கான விண்ணப்பங்கள் மிக இறுக்கமான விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அவரகள் அகதி அந்தஸ்து தொடர்பான ஐ.நா. தீர்மானங்களுக்கு தகுதியுடையவர்களாக என்பது கவனமாக ஆராயப்படுகிறது.

இலங்கை ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டதைப் போல் எல்.ரி.ரி.ஈ. அங்கத்தவர்கள் 12 பேர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நோர்வே உதவியது என்பதில் உண்மையில்லை.

இந்த நடவடிக்கை நேர்வே நாட்டு சட்டத்திற்கினங்க நேர்வே நீதியமைச்சின் பங்ளிப்புடன் இடம்பெற்றது.

ஆரசியல் புகலிம் மற்றும் ஏனைய வதிவிட அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தவர்களின் சிலரின் விண்ணப்பங்களை செயன்முறைப்படுத்தியதன் மூலம் மட்டப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோருக்கு நோர்வே உதவியது என்பதே உண்மை.

இது சர்வதேச சட்டங்கள் மற்றும் நோர்வேயின் சட்டங்கக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்டன.

இவர்களுக்கு தேவையான டிக்கெட்டுக்ளை தூதுவராலயம் கொள்வனவு செய்யவில்லை. விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு நோர்வே ராஜதர ஊழியர்கள் உதவவுமில்லை.

எமக்குத் தெரிந்த வகையில் எந்தவொரு விடுதலை புலிகள் இயக்க உறுப்பினருக்கும் கொழும்பிலுள்ள நேர்வே தூதுவராலய அதிகாரிகள் உதவில்லை.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/21404-2011-05-15-07-28-14.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தடுப்பு முகாம்களிலிருந்து அகதிகள் தப்பிச் செல்ல கொழும்பில் உள்ள நோர்வே தூதரக அதிகாரிகள் உதவியதாக வெளியான செய்தியை அடுத்து நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் இராஜதந்திர மோதல் உருவாகியுள்ளதாக Aftenposten நாளேடு தகவல்.

தடுப்பு முகாம்களிலிருந்து அகதிகள் தப்பிச் செல்ல கொழும்பில் உள்ள நோர்வே தூதரக அதிகாரிகள் உதவியதாக வெளியான செய்தியை அடுத்து நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையில் மீண்டும் இராஜதந்திர மோதல் உருவாகியுள்ளதாக Aftenposten நாளேடு தகவல்.

இலங்கையைச் சேர்ந்த 12 பேருக்கு நோர்வே அடைக்கலம் வழங்கியதாக Aftenposten நாளேட்டில் செய்தி வெளியாகியிருந்தது. இது குறித்து கருத்து வெளியிட்ட நோர்வே அமைச்சர் Erik Solheim, ஆபத்தில் உள்ளவர்களுக்கு அடைக்கலம் வழங்குவது நோர்வேயின் நீண்டகால பாரம்பரியம் என்று கூறியிருந்தார்.

இது இலங்கைக்கு கடும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்களன்று வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட கொழும்பிலுள்ள நோர்வே தூதுவர் Hilde Haraldstad இடம் இது தொடர்பாக இலங்கை தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதலாக மீண்டும் உருவெடுத்துள்ளது.

அதேவேளை மேலும் 25 பேர் இலங்கையில் தமக்கு பாதுகாப்பு இல்லை என்று அடைக்கலம் வழங்குமாறு நோர்வேயிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

aftenpostenno.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.