Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து

Featured Replies

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாழ்த்து

தமிழக முதலமைச்சராக ஜெ.ஜெயலலிதா தெரிவுசெய்யப்பட்தையடுத்து தமிழ்த் தேசிய கூட்டமை வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது.

அந்த வாழ்த்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தாங்கள் மூன்றாவது முறையாக தமிழக முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்டதையிட்டு ஈழத் தமிழ் மக்களின் சார்பாக எமது உளங்கனிந்த பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துக்கொள்கின்றது.

ஈழத் தமிழ் மக்கள் பாரிய யுத்தம் ஒன்றிற்கு முகங்கொடுத்து, லட்சக்கணக்கான உயிர்களை இழந்தும், பல ஆயிரம் கோடி சொத்துக்களை இழந்தும், அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு எந்தத் தீர்வும் காண முடியாமல் இன்றும் அநாதரவான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

80,000க்கும் மேற்பட்ட தமிழ்ப் பெண்கள் விதவைகளாகியுள்ளனர். பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அங்கவீனமுற்றவர்களாக உள்ளனர். பலநூறு சிறுவர்கள் தாய் தந்தையற்ற அனாதைகளாகி இருக்கின்றார்கள். இவற்றிற்கெல்லாம் மேலாக ஆயிரமாயிரமானோர் தமது கணவன்மாரை, குழந்தைகளை, பெற்றோர்களைத் தேடியலைகின்றார்கள். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் எமது தாய்த் தமிழகத்து உறவுகள் உங்களுக்கு அமோக ஆதரவளித்து முதல்வராக்கியுள்ளார்கள்.

நீங்கள் வெற்றிபெற்றவுடன் ஈழத்து நிலை தொடர்பாக பத்திரிகைகளுக்குக் கொடுத்த செய்திகள் எமக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தருகின்றது.

ஈழத் தமிழ் மக்கள் தமது முழுமையான சுயாட்சியைப் பெற்று, சுய மரியாதை, சுய கௌரவம் உடையவர்களாக தமது சொந்த மண்ணில் வாழ்வதற்கு உங்களது பேராதரவை நாடி நிற்கின்றோம்.

மீண்டும் ஒருமுறை ஈழத்தமிழர்கள் சார்பாக எமது உளங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சுரேஷ்.பிரேமச்சந்திரன்,

நாடாளுமன்ற உறுப்பினர்,

ஊடக பேச்சாளர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/21348-2011-05-14-05-03-55.html

  • கருத்துக்கள உறவுகள்

இதே வேளையில் ஒரு முக்கியமான விடையம். மகிந்தவின் நண்பரும் தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரசது ஊழல்பணத்தின் சிறீலங்காவில் முதலீடு செய்வதற்கு தரகராக இருப்பவருமாகிய காங்கிரஸ் கசன்அலி மற்றும் ஈழத்தமிழரை வேரறுக்க கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்ட ஞானசேகரன் ஆகியோரது நிலை என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவின், கசின் அலி தோல்வி.

ஞானசேகரத்துக்கு கட்டுக் காசு கிடைத்ததோ தெரியாது. ஆளின்ரை "அட்ரசையே... " காணவில்லை.

தமிழ்தேசிய கூட்ட்மைப்பு சுயாட்சி அமைப்பு வரைபை முதலில் தமிழக உணர்வாளர்களுடன் சேர்ந்து தமிழக முதல்வர் யெயலலிதாவிடம் கையளிக்க வேண்டும். அதை மத்திய அரசின் உதவியுடன் செய்து தருமாறு அவரிடம் கேட்கலாம்.

சிறிலங்கா அரசுக்கு கொடுக்க முதல் இவரிடம் கொடுத்து, தமிழக அமைப்பு முறையை ஒத்ததான தீர்வு என தமிழக முதல்வருக்கு அறிய படுத்த வேண்டும்.

அவா மீண்டும் புலிகள்,ஈழம் என்று மரம் ஏற முந்தி இதை செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்தேசிய கூட்ட்மைப்பு சுயாட்சி அமைப்பு வரைபை முதலில் தமிழக உணர்வாளர்களுடன் சேர்ந்து தமிழக முதல்வர் யெயலலிதாவிடம் கையளிக்க வேண்டும். அதை மத்திய அரசின் உதவியுடன் செய்து தருமாறு அவரிடம் கேட்கலாம்.

சிறிலங்கா அரசுக்கு கொடுக்க முதல் இவரிடம் கொடுத்து, தமிழக அமைப்பு முறையை ஒத்ததான தீர்வு என தமிழக முதல்வருக்கு அறிய படுத்த வேண்டும்.

அவா மீண்டும் புலிகள்,ஈழம் என்று மரம் ஏற முந்தி இதை செய்ய வேண்டும்.

கூட்டமைப்பில்.... உழுத்துப் போன சம்பந்தனை தூக்கி மூலையில் வைத்து விட்டு,

இளைய, நல்ல, அறிவு உள்ள....! ஆட்கள் தான்... இனிமேல் பேச்சுவார்தைக்கு போகவேணும்.

சும்மா... போய்... ஆக்களோடை, நிண்டு.....பொன்னாடை போத்திப் போட்டு வரக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக சட்டமன்றத் தேர்தலை புலம்பெயர் தமிழர்களும் புலத்துத் தமிழர்களும் மிகவும் கரிசனையுடன் கவனித்து வந்ததை வரும் செய்திகள்மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது, அதேவேளை இலங்கைத்தீவில் சிங்களத்தால் நடாத்தப்படும் தமிழீழப்பிரதேசங்களுக்கான அண்மைக்காலத் தேர்தல்களில் மக்கள் எவ்வித கரிசனையும் காட்டவில்லை. மேலும் தமிழக முதல்வருடன் இணைந்து நாம் ஏதாவது புலத்து உறவுகட்கு உதவிபுரியமுடியுமா என்பதை ஆராய்தல் வேண்டும் நிரந்தரமான விடுதலை நோக்கிய நெடும்பயணம் எமக்கு முக்கியம் அதேவேளை புலத்து உறவுகளது இளைப்பறுதலும் முக்கியம் ஆகவே ஒன்றுக்கொன்று சமாந்தரமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்செல்வது முக்கியம். இந்திய அரசியல் என்பது மிகவும் ஆபத்தான வழிமுறைகளைக் கையாள்வோரால் ஒருங்கமைக்கப்பட்ட அரசியலாகும் இதில் முக்கியமானது தேசியக்கட்சி எனத்தன்னை கூறிக்கொள்ளும் காங்கிரஸ் எனும் அதிபயங்கரவாதிகளது முகாமாகும். பணபலம் பதவிபலம் சட்டங்களைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் புலனாய்வுத்துறை அடியாட்கள் பலம் ஆகியவை ஒன்னுசேர்ந்த ஒரு கூடாரமாகும் இக்கூடாரத்தின் ஒரு பகுதியில் தீப்பிடிக்கவைப்பதென்பது தனே தனக்குத் தீ மூட்டிக்கொள்வது போன்றது ஆனால் தமிழ்நாட்டிலிருந்து ஒருத்தன் என் தேசத்தின் மீட்புக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த ஆயிரமாயிரம் வேங்கைகள் விழுப்புண்னேற்று வீரமரணமடைந்து வித்தாகிப்போகும்போது அவர்கள் ஏந்திய புலிச்சின்னத்தை மண்ணில் விழாது ஏந்தி தன்கையியெடுத்து காங்கரசை எதிர்த்து அக்கொலைஞர்கள் கூடாரத்தில் தீவைத்தானே சீமான் அவனுக்கே எல்லாப் புகழும். ஆகவே நாம் எதிர்காலத்தில் முனனெடுக்கப்போரும் எந்தவித நடவடிக்கையும் தமிழ்நாட்டை தீயசக்கிகளிடமிருந்து மீட்கும் செயலில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடாது.

ஜெயலலிதா ஒரு நல்ல பண்டமல்ல வைகோ வெளியேறியதிலிருந்தே நாம் இதனை அறிந்துகொள்ளவோண்டும். காட்சிக்குக் காட்சி அலங்காரமிட்டு நடிக்கும் சினிமாவிலிருந்து வந்தவர். அதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். தேவையேற்படும் பட்சத்தில் ஈழத்தமிழன் எனும் தோழில் கிடக்கும் துண்டு காங்கிரசது அடுப்பங்கரையைத் துடைக்கவும் போய்விடும். ஆனால் எமது செயல்களின் மூலம் அத்துண்டினை "புலிகள் கழுத்தில் தொங்கும் சயனைட் குப்பிக்குச்" சமமாகக்கருத வைக்கமுடியும். காங்கிரசது அடுப்பங்கரைக்கோ அன்றேல் வேறெங்கிலாகுதலோ ஈழத்தமிழர்களது நலன் வீணாக்கப்படுமாகவிருந்தால், அது ஆலகால நஞசாக மாறும் எனும் பயத்தினை எனது சகோதரன் (இப்போது நiளையைப்பற்றிச் சொல்லமாட்டேன்) சீமானாலேயே முடியும். ஜெயலலிதாவது தேர்தலுக்குப் பின்பான ஈழத்தமிழர் சார்பான அறிக்கைகள் சீமானைப் புறந்தள்ளுவதற்காக இருக்கலாம். இந்த அறிக்கைகள் சீமானது அரசியல் வரவினை மழுங்கடிக்கலாம். இது ஒரு கோட்டினில் எந்தவிதமாற்றங்களும் செய்யாது அக்கோட்டினை சின்னதாக்குவதாகவிருந்தால் அதற்குப்பக்கத்தில் அதைவிடப் பெரியதான கோட்டினை வரைவதைப்போன்ற இருகோட்டுத்தத்துவம். தற்போதைய ஐரோப்பியத் தலைவர்கள் வெளிநாட்டுக் குடிவரவாளர்க்கெதிராகக் கடைப்பிடிக்கும் கொள்கை. ஆகவே தமிழா கவனம் ஆரியம் மாயைகளைத் தந்து எமை மழுக்கடித்துவிடும்.

சீமானோ,வைகோவோ,நெடுமாறனோ தனித்து தேர்தலில் நின்று 10 சீட்கள் கூட வெல்வது கஸ்டம்.இது அவர்களுக்கும் தெரிந்த உண்மை.மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் யாராயினும் அவர்கள் தான் வெளிநாட்டுகொள்கைகளை வரையறுக்கின்றார்கள்.முடிந்தவரை தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்களின் அனுசரணையுடன் மத்திய ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து ஒரு தீர்வை சர்வதேச அங்கீரத்துடன் எடுக்கவேண்டும்.

பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கோவணம் போகும் நிலை இனியும்வேண்டாம்.எழுத, வாசிக்க, கேட்க சந்தோசமாகத்தான் இருக்கும் நடைமுறைக்கு சாத்தியமேயில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிவுகளின்படி அசன் அலியும், ஞானசேகரனும் தோல்வியுற்றனர்.

சீமானோ,வைகோவோ,நெடுமாறனோ தனித்து தேர்தலில் நின்று 10 சீட்கள் கூட வெல்வது கஸ்டம்.இது அவர்களுக்கும் தெரிந்த உண்மை.மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் யாராயினும் அவர்கள் தான் வெளிநாட்டுகொள்கைகளை வரையறுக்கின்றார்கள்.முடிந்தவரை தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்களின் அனுசரணையுடன் மத்திய ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்து ஒரு தீர்வை சர்வதேச அங்கீரத்துடன் எடுக்கவேண்டும்.

பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு கோவணம் போகும் நிலை இனியும்வேண்டாம்.எழுத, வாசிக்க, கேட்க சந்தோசமாகத்தான் இருக்கும் நடைமுறைக்கு சாத்தியமேயில்லை.

பட்டு வேட்டி வேணும் என்று கேட்டால் தான் கடைசியில் கோவணமாவது கிடைக்கும் என்பது தங்களுக்கு தெரியாதா ??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.