Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவின் ஆதரவு இல்லாமல் ஈழத்தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்கு தீர்வு காண முடியுமா?

Featured Replies

இன்று தாயக மக்களின் ஒரு முக்கிய குரலாக, பொருளாதார நண்பனாக, காவலனாக உள்ளவர்கள் புலம் பெயர் தமிழர்களும், தமிழீழ உறவுகளும்.

இவர்களை ஒடுக்கி விட்டால் எல்லாம் "முடிந்துவிடும்" என்பதே சிங்களத்தின் கணிப்பு. அன்று "less Tamils, less problems" என்று சொல்லி ஜெயவர்த்தனா காலத்தில் மகிழ்ந்தது சிங்களம். இன்று அவர்களுக்கும் ஒரு "முள்ளிவாய்க்கால்" அவலத்தை தர திட்டமிட்டு தோல்விகண்டுள்ளது.

புலம்பெயர் தமிழர்களின் உதவியோடு கேட்கப்பட்ட போர்குற்ற விசாரணைகள் இன்று பலம் மிக்க நாடுகளின், ஐ.நா.வின் அனுசரணையுடன் மகாவம்சத்தை மீண்டும் சில அத்தியாயங்கள் இணைக்கப்படவேண்டிய நிலையில் கொண்டு வந்து விட்டுள்ளது.

மே 2009 இலிருந்து சிங்கள தேசம் எவ்வாறு இந்தியாவை விட்டு சீனாவின் பக்கம் வேகமாக சாய்ந்து வந்தது என்பது சிங்களம் இந்தியாவின் எதிரி என்பது வெள்ளிடைமலை. மாறிவரும் உலக ஒழுங்கில் தமிழீழம் தான் இந்தியாவின் நீண்ட நிம்மதியான வாழ்வுக்கு ஆதரவாக இருக்கும்!!!

  • Replies 63
  • Views 4.8k
  • Created
  • Last Reply

உங்கள் விவாதங்களில் பணத்தின் தேவையே ஒரு இனத்தின் தேவை என்பதுபோல் எழுதப்படுகின்றது. இது ஏற்புடையதல்ல.

அப்படிப் பார்க்கும் பட்சத்தில், ஒரு பேச்சுக்கு, சிங்கள அரசு தமிழ்ப் பிரதேசங்கள் முழுவதையும் பொருளாதார ரீதியில் முன்னேற்றிவிட்டு தமிழ்மக்களை இரண்டாந்தரப் பிரசைகளாக நடத்தினால் அது ஏற்புடையது என்றாகிவிடும்.

ஒரு இடப்பெயர்வையோ, ஒரு மனித உரிமை மீறலையோ, ஒரு ஆபத்தான சூழ்நிலையையோ எதிர்நோக்காத ஒரு புலம்பெயர் தமிழன் இருக்க மாட்டான். புலப்பெயர்வுக்கு அத்தகைய ஒரு காரணமே போதுமானது. ஏனெனில் இறைமைபெற்ற ஒரு சுதந்திர அரசு தன் பிரசை ஒருவரைக் காக்கத் தவறியது என்றாகிவிடுகிறது. புலம்பெயர்ந்தபின் பணமீட்டுவது என்பது அவரவரைப் பொறுத்தது.

இதனைத்தொடர்ந்து சில கேள்விகளும் எழுகின்றன.

1) பெற்றோருடன் புலம்பெயர்ந்த ஒரு சிறுமியை எடுத்துக்கொள்ளுங்கள். அவர் புலம்பெயர்நாட்டில் படித்து வளர்ந்து சம்பாதித்து நல்ல நிலையில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்குள்ள குளிர், பனி, சுற்றியுள்ள இனமக்கள், இனத்துவேசங்களைக் கவனிக்கும்போது அவர் தாயக வாழ்வை, அங்குள்ள தன் நண்பிகளை, அயலவரை, உறவினர்களை நினைத்து மனமுடைவாராக இருந்தால், அந்தச் சிறுமியின் நிலை என்ன? இடப்பெயர்வு அவர் குற்றமல்லவே. அவருக்குத் தாயகத்தின் தீர்வில் ஏதாவது சொல்லும் உரிமை இப்போது உள்ளதா?

2) நான் அண்மையில் சுவிஸ் சென்றபோது சில குடும்பங்களைக் கண்டேன். கிட்டத்தட்ட ஒரு 20 ஆண்டுகளாக அவர்கள் சுவிசில் உள்ளார்கள். ஆனால் தொடர்ச்சியான பொருளாதார விருத்தியைக் காட்டமுடியாத காரணத்தினால் (தாயக உறவுகளைக் கவனித்தமை, அவர்களின் திருமணச் செலவுகள், சொந்த வியாபாரத்தில் நட்டம் போன்ற காரணங்கள்) அவர்களுக்கு சுவிஸ் புத்தகம் இல்லை. வெறு எங்கும் செல்லமுடியாத நிலை. அருகில் உள்ள லண்டனுக்குக்கூட செல்லமுடியாது. ஆனால் பணவசதி ஓரளவுக்கு இருக்கிறது. இவர்கள் நிலை என்ன? தாயகம் குறித்து இவர்களுக்கு ஏதாவது கருத்துக்கூறும் உரிமை உள்ளதா?

கருத்துக்கூறும் உரிமையை மறுதலிப்பது அல்ல எனது கருத்து. மீளவும் எனது கருத்தை சுட்டிக்காட்டுகின்றேன்.

தமிழீழம் வேண்டுமான இல்லை மாநிலங்களவை அதிகாரம் வேண்டுமான இல்லை அதனிலும் குறைவான ஏதோ ஒரு தீர்வு வேண்டுமா என்பதை தாயகத்தில் உள்ள மக்களே தீர்மானிப்பார்கள். தீர்மானிக்கவும் வேண்டும் புலத்தில் உள்ளவன் அல்ல. இந்தியா குறித்த நட்பு நிலையை தீர்மானிப்பதும் தாயகத்தில் உள்ள மக்களே அன்றி புலத்தில் இருப்பவன் அல்ல. தாயக மக்களின் விருப்பங்களுக்கு முடிந்தால் புலத்தில் உள்ளவன் ஆதரவாய் இருப்பது ஒன்றே நேர்மையானது தவிர அவர்களின் விருப்பங்கள் உரிமைகளை தீர்மானிப்பவனாக இருக்கமுடியாது. அதற்கான அதிகாரம் தாயகத்தை துறந்தவர்களுக்கு கிடையாது.

தாயக மக்கள் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவாக கருத்தை தெரிவியுங்கள், அதற்கான உரிமை தாராளமாக இருக்கின்றது. அவ்வளவுதான்.

புலம்பெயர்ந்தவர்கள் தமது குடும்பங்களுக்கு உறவினர்களுக்கு உழைத்துப் பணத்தை அனுப்பி வருவாயை ஈட்டித்தருகின்றார்கள். புலம்பெயர்ந்தவர்களின் நிதியானது ஏக மக்களுக்கும் சரி சமனாக பகிர்ந்தளிக்கப்படுவது கிடையாது. வெளிநாட்டு உதவியற்ற மக்கள் பெரும்பான்மையானவர்கள். புலம்பெயர்ந்தவர்கள் நிதியானது புலத்திலிருந்து தேசநலன் என்ற அடிப்படையிலோ அல்லது பொதுநலன் என்ற அடிப்படையிலோ தாயகம் செல்லவில்லை. அவர்கள் தம் உறவுகளை பொருளாதரா ரீதியில் மேன்மைப்படுத்துகின்றார்கள். புதிய வர்க்கத்தை தோற்றுவிக்கின்றார்கள். இதற்கு அப்பால் தமது நிலங்களில் பயிர்செய்து தமது கடல்களில் தொழில்செய்து வாழவேண்டிய தேவையுள்ள மக்களும் இருக்கின்றார்கள். அவ்வாறான வாழ்வாதரத்தை பூர்வீக பூமியில் கொண்டிருப்பவனுக்கு முதலாளி வேலைபார்க்கும் நிலையைதான் புலம்பெயர் பணம் அவரவர் உறவுகளுக்குச் அனுப்பிவைக்கப்பட்டு பயன்படுகின்றது. இங்கிருந்து தத்தமது சொந்தக்காரனுக்கு பணத்தை அனுப்பிவிட்டு ஒட்டுமொத்த மக்களுக்குமாக அரசியல் முடிவெடுக்கும் தகுதி எமக்குத்தான் இருக்கின்றது நாம்தான் எடுப்போம் என்பது எவ்வகையிலும் நேர்மையாகாது.

தனியரசு என்று நாடுகடந்த அரசை நிறுவியதால் அவ் அமைப்பினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்ய முடியாது. சிங்களம் விடாது என்று நியாயம் கற்பிக்கும் அதே நேரம் ந க அரசை ஆதரிப்பவர்கள் தத்தம் சொந்தங்களுக்கு (கவனிக்க பாதிக்கப்பட்ட மக்களுக்கில்லை)பெருளாதரா உதவிகளை செய்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அவற்றில் கணிசமான வருவாயை இலங்கை அரசும் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இதில் என்ன நேர்மை இருக்கின்றது? இதில் என்ன தேசியம் இனப்பற்று இருக்கின்றது? இது அப்பட்டமான வர்க்க மேலாண்மைப்போக்கு.

முன்னர் புலிகள் காலத்தில் புலிகளுக்கு நிதி. அவர்கள் தமிழீழத்தை பெற்றுத்தரவேண்டும் என்பது வலியுறுத்து. ஆளணி உதவியில்லை. இந்தச் சிந்தனைமுறைக்கேற்ப பெரும்பான்மை வறுமைப்பட்டவர்கள் வாழ்வு சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டது. இன்றும் அதே பாணியில் சொந்தக்காரனுக்கு காசனுப்பிவிட்டு ஒட்டுமொத்த மக்களுக்குமாக அரசியல் அதிகாரம் மிக்கவுர்களாக தம்மை காண்பிப்பதது மேட்டுக்குடித்தனமல்லாது வேறென்ன?

புலத்தவன் அனுப்பும் பணம் தாயக மக்கள் அனைவருக்கும் பயன்படும்படி பெதுமைப்படுத்த முடியுமா? சொந்தக்காரனுக்கு அனுப்புவதற்குப்பதிலாக மக்களுக்கென்று பங்கிட முடியுமா? எமது உழைப்பு அங்கே ஒரு ஏற்றதாழ்வை உருவாவதை தடுப்பதாக அதே நேரம் போரால் பாதக்கப்பட்டவர்களும் தம்மை நிலைப்படுத்துவதற்காகவும் சமநிலைப்படுத்த முடியுமா?

எமக்கு புலியாலும் ஆபத்து சிங்களத்தாலும் ஆபத்து என்று வீசா கிடைத்தவுடன் புலிக்கொடியைதூக்கிக் கொண்டு ஊர்வலம்போவதுபோல் எமது ஒவ்வொரு செயற்பாட்டிலும் சுயநலம் மலையளவு கலந்துகிடக்கின்றது. வழிநடத்த முற்படுதலிலும் தலமைதாங்க முற்படுதலிலும் சமூக அந்தஸ்த்து தேடுதல் அடயாளம் தேடுதல் மலிந்துகிடக்கின்றது தவிர அர்பணிப்பு என்பதில்லை. இதனால் தான் நாளொரு வண்ணம் பல்வேறு அமைப்புகள் உருவாகிக்கொண்டிருக்கின்றது. ந கா அரசில் இருந்து ஜனநாயக கோமண அணி பிரிகின்றது. முள்ளிவாய்காலில் கடும் சண்டை நூற்றுக் கணக்கானவர்கள் பலி சுவையான உணவுக்கு பாபு கேட்டரிங் தர்மபுரத்தில் கடும் விமானக் குண்டுவீச்சு அனைத்துப் பொருட்களும் ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள சிறந்த இடம் என்று நாலுபேர் நடத்தும் தமிழ்த்தேசிய வானெலியில் இரண்டுபேர் பிரிந்து செல்வது. இதான் எங்கள் அரசியல் அடிப்படை.

சமூக விடுதலையானாலும் சரி இன விடுதலையானாலும் சரி அதற்கான புரட்சி அடித்தட்டு மக்களிடம் இருந்து உருவாகவேண்டும். இல்லையேல் விடுதலை சாத்தியமில்லை. மேற்தட்டில் இருந்து உருவாகும் புரட்சியானது என்னுமொரு சிங்களப்பேரினவாதத்துக்கு ஒப்பானது. மையவாதத்தில் இருந்து உருவான தேசியவாதத்தால் முள்ளிவாய்க்காலில் நடந்தேறியது இதுதான். வர்க்கரீதியாக வடிகட்டிக்கொண்டுவரப்பட்ட வறுமைப்பட்ட மக்கள் இனவிடுதலைக் கூலிகளாக தமிழ்த்தேசிவாதத்தால் பிழிந்தெடுக்கப்பட்டார்கள் சிங்களபேரினவாதத்தால் கொன்றெழிக்கப்பட்டார்கள். இது தொடரமுடியாது.

தாயக மக்களின் தேவை விருப்பு என்பது 1977 ஆண்டு வாக்கெடுப்பு மூலம் உலகிற்குச் சொல்லப்பட்டு விட்டது. அதன் பின்னரே மக்கள் புலம் பெயர இடம்பெயர நேரிட்டது.இதே தேவையை இன்று புலத்தில் வலியுறுத்தக் கூடிய சுதந்திரம் இருக்கிறது.அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.தாயகத்தில் உள்ள மக்களின் வாய்கள் ப+ட்டப்பட்டுள்ள நிலையில் அவர்களின் குரலாகவே புலத்து மக்களின் குரல் ஒலிக்கிறது.தாயகத்து மக்களின் விருப்பு என்ன என்று அறிய வேண்டுமாயின் இராணுவ நெருக்குவாரங்கள் அற்ற நிலையில் சர்வதேசத்தின் முன்னிலையில் ஒர் சர்வசன வாக்கெடுப்புக்கு விடுவதே ஏற்றுக்கொள்ளத் தக்கது.இதற்கு சுகன் தயாரா?

புற நிலை அரசு என்ற ஆரம்பக் கருத்தாடல் முதலே இவ்வாறான கருத்துக்களையே நான் எழுதிவருகின்றேன்.

மூன்றாம் தரப்பு கண்காணிப்பை ஏற்பாடு செய்யக்கோருவது

போர் குற்றத்துக்கு நீதியான விசாரணையை கோருவது

ஊடகங்களின் சுதந்திரமான அனுமதியை கோருவது

மக்கள் தமது சொந்த இடங்களுக்கு சென்று வாழ அனுமதி கோருவது

இராணுவ பிடியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோருவது

எமக்கும் எமது உறவுகளுக்குமான சுதந்திரமான உறவாடலை கோருவது

இவைகள் தற்போது அவசியமானது. இதுவே ஆரம்பமும் ஆகும். இவ்வாறான கோரிக்கைகளை நிராகரிக்க முடியாது. இந்தக் கோரிக்கைகளுக்காக நாம் முதலில் ஒன்றுபட வேண்டும். எமக்குரிய ஜனநாயக அத்திவாரம் இவ்வாறு தான் யாதார்த்த தேவைகளுடன் போடப்பட வேண்டும் அதன்மேலே தான் புறநிலை அரசு என்ற அமைப்பு கட்டி எழுப்பப்பட முடியும். இவ்வாறான கோரிக்கைகளும் அதற்கான இலங்கையின் நிராகரிப்புகளும் எமக்கு சாதகமான சூழலை உருவாக்கி தரவல்லது. இதுவே நான் முன்வைக்கும் கருத்து தவிர இந்த புறநிலை அரசுக்கான கருத்தை நிராகரிக்கவில்லை.

மேலும் எமது அடித்தளம் இவ்வளவு காலமும் போராடிய சக்திகள் சம்மந்தப்பட்டதாக இருக்கும் போதே முரண்பாடு நிறைந்த எமது இனத்தை ஒருமுகமாக வைத்ததிருக்க முடியும். இவ்வாறான ஒரு அவசியத்தை கருதி விரைவில் இதற்கொரு வழிகாட்டி வருவார் அல்லது சுட்டிக்காட்டப்படுவார் என்று நம்புகின்றேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=59188&st=40

ந க அரசுக்குப் பதிலாக மனித உரிமை அமைப்பை நிறுவுவதே சிறந்தது. அதனூடாக மேற்கண்ட வலியுறுத்தல்களை வலிமைப்படுத்த முடியும் என்ற கருத்துக்களை பலவிட்டத்தில் எழுதியுள்ளேன். இவற்றை எல்லாம் புறம்தள்ளிவிட்டு இப்போது ராணுவ நெருக்குவாரங்கள் அற்ற நிலையில் தாயக மக்களின் விருப்புக்கேட்டு வாக்கு எடுப்பதுக்கு தயாரா என்றால் என்ன அர்த்தம்? அவ்வாறான ஒரு வாக்கெடுப்புக்கான சு+ழ்நிலையை தகர்த்தெறிவது தவறு என்றுதான் எனது கருத்துக்கள் உள்ளது. நா க அரசை படிப்படியாக எட்டவேண்டும் என்பதே தொடர்ந்து வலியுறுத்திவரும் கருத்து. தாயக மக்களின் விருப்பை அலட்சியப்படுத்துவதும் அதற்கு ஒத்திசைவாக போக மறுப்பதுமே மேட்டுக்குடித்தனம் என்கிறன்.

Edited by sukan

தாயக மக்களின் கருத்துகள் தற்போதைய நிலையில் பல நிலைகளிலும் நசுக்கப்பட்ட குரலாகவேயுள்ளது. அது தமிழர் அரசியல் சக்திகளாயிருப்பினும் நிலை அத்தகையதுதான். இந்த நிலையைத்தான் இலங்கையரசும் இந்திய அரசும் பயன்படுத்திக் கொள்வதற்கு நினைக்கின்றன. புலிகளை அழித்துவிட்டோம், தமிழர்களை அவர்கள் பிடியிலிருந்து மீட்டுவிட்டோம் போன்ற நிலைப்பாடுகளின் பின் இப்போது மேலோங்கியொலிக்கும் போர்க்குற்றங்கள்தான் இவ்விரு நாடுகளையும் பதறச் செய்கின்றன.

பிராந்திய நலனை தனக்குச் சார்பானதாக மாற்றியமைக்க இந்தியா தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறது. இதில் குழறுபடி என்னவென்றால் இலங்கைக்குச் சார்பு வாதங்களை முன்வைத்த சீனா ரஷ்யா இப்போது மௌனமான அடக்கப்பட்ட கருத்துகளை வெளியிடுகின்றன. அவைகள் போர்க்குற்ற விசாரணைகளுக்கான முரண்பட்ட கருத்துக்களை முன்வைத்தபோது இந்தியா மௌனம் காத்தது. தற்போது மாறுபட்ட சூழ்நிலைக்குள் இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது. இந்தத் தவிப்பைத் தடுப்பதற்குத்தான் அமெரிக்கப் பிரதிநிதி தமிழர்களுக்கான தீர்வு பற்றி இலங்கை விஜயத்தின்போது குறிப்பிட்டிருந்தார்.

இதன் உள்நோக்கம் சரியாகத் தெரியாது. இந்தியாவை இதிலிருந்து தப்புவிப்பதற்கா? அல்லது மேலும் சிக்கலில் மாட்டிவிடுவதற்கா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

போர்க்குற்ற அறிக்கை வெளிவராதிருந்தால் தமிழருக்கான தீர்வு விடயத்தில் இந்தியா முயற்சிகள் எதனையும் மேற்கொள்ளாதிருந்திருக்கும். ஆகவே இந்தியாவின் ஆதரவு என்பது தற்போதைக்குத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக எடுத்த நகர்வுதான். புலம்பெயர் தமிழர்களின் நம்பிக்கைகளும் தாயகத் தமிழர்களின் எதிர்பார்ப்புகளும் வௌ;வேறாகத்தான் காணப்படுகிறது. இந்த தன்மையை இந்தியா பயன்படுத்திக் கொள்ளப்போகிறது.

தாயகத்திலிருக்கும் தமிழர் அரசியல் சக்திகளும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழர்களுக்கான ஒரு தீர்வைப் பெற்றுவிடத் துடிக்கின்றன. இவர்களையும் இந்தியா ஒருவகையில் அழுத்தங்களைக் கொடுத்து தன்பகுதிக்குள் ஈழுத்துவிடும். ஆனாலும் போர்க்குற்ற அறிக்கை மட்டுமே மேற்கத்தைய தேசம், புலம்பெயர் தமிழர், இலங்கை , இந்தியா, தாயகத் தமிழர் ஆகியோருக்கிடையிலான கட்டிப்போடும் சங்கிலியாகவுள்ளது. இந்தியா நினைத்தாலும் இத்தொடர் இலகுவில் அறுபட மாட்டாது.

இதில் எனது முடிவு என்னவென்றால் போர்க்குற்றம் சர்வதேசத்தால் விசாரிக்கப்படாதவரை இந்தியாவின் தயவில்லாமல் தமிழருக்குத் தீர்வில்லை.

இ.கவின் ஓர் கோணத்துடன் எனக்கும் உடன்பாடு உள்ளது. அதாவது, வெளிநாடுகளில் உள்ளவர்களில் பலர் பொருளாதார ரீதியாக தம்மை வளப்படுத்தினாலும்... பலருக்கு குடியுரிமையோ அல்லது நிரந்தரவதிவுடமையோ இல்லை. அவர்கள் எந்நேரமும் ஊருக்கு ஏற்றி அனுப்பப்படும் அபாயம் உள்ளது. அத்துடன், வெளிநாட்டு குடியுரிமை உள்ளவர்கள் பலருக்கும் வெளிநாட்டு வாழ்க்கை எவ்வளவு காலம் தாக்குப்பிடிக்கக்கூடியதாக அமையும் என்பதும் கேள்விக்குறி. வெளிநாடுகளில் பல தமிழ்க் குடும்பங்கள் சீரழிகின்றன, பிணக்குப்பாடுகளில் உள்ளன. தவிர ஊரில் எதிர்கொள்ளாத வேறு வகையான பேராபத்துக்கள், சவால்களையும் வெளிநாடுகளில் நம்மவர்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. எனவே, வெளிநாட்டில் உள்ள நம்மவர்கள் தாயகத்தின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் தாயக மக்களிற்கு நிகரான உரிமைகளை கொண்டிருக்கவில்லை எனும் வாதம் ஏற்புடையதாக இல்லை. எனினும்..

வேறோர் கோணமும் இங்கு அலசிப்பார்க்கப்பட வேண்டும். அதாவது...

வெளிநாட்டில் உள்ள நம்மவர்கள் தாயக மக்களின் வாழ்வை ஆபத்துக்களில் கொண்டுசென்று மாட்டிவிடும் வேலையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செய்வது பற்றியும் சிந்திக்கவேண்டும். உதாரணமாக..

தாயகத்தில் போரை ஊக்குவித்தால்.. அல்லது ஆயுதரீதியான போராட்டங்களிற்கு ஆதரவுகொடுத்தால்.. அங்கு தாயகத்தில் உள்ளவர்களே இன்னோர் முள்ளிவாய்க்காலை எதிர்கொள்ளவேண்டும். அங்கு தாயகத்தில் உள்ளவர்களே ஆயுதம் ஏந்திப்போராடி செத்துமடியவேண்டும். இங்குள்ளவர்களின் பணம் மற்றும் தார்மீக ஆதரவை அங்குள்ள உயிர், உடமை இழப்புகளிற்கு நிகராக எடைபோட முடியாது. முடிவாக..

ஓர் நேர்கோட்டின் வெவ்வேறு முனைகளில் உள்ள சுகனின் வாதத்தினதும், அதன் எதிர்வாதங்களினதும் சிந்தனைகளில் விட்டுக்கொடுப்புக்கள் ஏற்பட்டு அனைவரும் பாதுகாப்பாக கரையேரக்கூடிய வழிமுறைகள் கண்டறியப்படுவதே சிறப்பானது.

நடைமுறைச்சிக்கல்கள் எப்போதும் காணப்படும், அதற்காக அடிப்படைச் சிந்தனைகளையே அகோரமாக அமைக்க முடியாது.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

தமிழீழம் வேண்டுமான இல்லை மாநிலங்களவை அதிகாரம் வேண்டுமான இல்லை அதனிலும் குறைவான ஏதோ ஒரு தீர்வு வேண்டுமா என்பதை தாயகத்தில் உள்ள மக்களே தீர்மானிப்பார்கள். தீர்மானிக்கவும் வேண்டும் புலத்தில் உள்ளவன் அல்ல. இந்தியா குறித்த நட்பு நிலையை தீர்மானிப்பதும் தாயகத்தில் உள்ள மக்களே அன்றி புலத்தில் இருப்பவன் அல்ல. தாயக மக்களின் விருப்பங்களுக்கு முடிந்தால் புலத்தில் உள்ளவன் ஆதரவாய் இருப்பது ஒன்றே நேர்மையானது தவிர அவர்களின் விருப்பங்கள் உரிமைகளை தீர்மானிப்பவனாக இருக்கமுடியாது. அதற்கான அதிகாரம் தாயகத்தை துறந்தவர்களுக்கு கிடையாது.

வட்டுகோட்டை தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த்வர்கள் ஈழத்தில்வாழும் மக்கள், அவர்களை ஆத்ரித்து நிற்பவர்கள் புலம்பெயர் மக்கள். :lol::lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:(தாயக மக்கள்தான் எமது இனத்தின் முடிவைத் தீர்மானிக்க வேண்டுமென்பதில் மறைந்திருக்கும் நோக்கத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தாயக மக்களின் இன்றைய நிலை என்னவென்று நன்றாகவே தெரிந்துகொண்டுதான் இந்த "புத்திசீவிகள்" கதை சொல்கிறார்கள்.

சரி, தாயக மக்களின் இன்றைய நிலை என்னவென்று பார்த்தால், "அ.நா செயலாளர் நாயகத்தின் குழு தயாரித்த போர்க்குற்ற விசாரணைக்கான முன்னோடி விசாரணைகளை முற்றாக மறுதலிப்பது", "மகிந்த ராசபக்சவை நாம் எமக்கு விடிவைத்தருபவராகப் பார்க்கிறோம் என்பது", "வடக்கிலும் கிழக்கிலும் ஐ.நா மற்றும் அதன் போர்க்குற்ற விசாரணைக்கெதிராக மக்கள் போராட்டங்களை செய்வது"..................ஆக இவ்வாறான கருத்துக்கள்தான் தாயக மக்களின் இன்றைய கருத்துக்கள் என்று சொல்கிறார்களா அல்லது அதுதான் உண்மை என்கிறார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால் எதற்கெடுத்தாலும் திறந்த வெளிச்சிறையில் வாய் பூட்டுப் போடப்பட்டு தொடர்ச்சியான அரச பயங்கரவாதத்தாலும், ஆக்கிரமிப்ப்னுள்ளௌம் வஞ்சிக்கப்பட்டு வரும் ஒரு சமூகத்திடம் இருந்துதான் எமக்கான அரசியல் தீர்வுபற்றிய வேண்டுகோள் வரவேண்டும் என்று அடம்பிடிப்பதைப் பார்த்தால், "நான் அவர்களின் வாய்களைக் கட்டியிருக்கிறேன், நீங்கள் சொல்வதை என்னால் ஏற்கமுடியாது, அவர்கள் சொல்லுவதைத்தான் ஏற்கமுடியும், ஆனால் நான் அவர்களின் வாய்களைக் கட்டியிருக்கிறேன்" என்னுமாப்போல் உள்ளது.

சரி தாயக மக்களின் விருப்பம் தாயக மக்களின் விருப்பம் என்று ஓநாய்கள் மாதிரி அழுபவர்கள் அவர்களின் விருப்பம் என்னவென்பதை எப்போதாவது அறிய ஆசைப்பட்டீர்களா?? அவர்களுக்குத்தேவை, தனிநாடா, இந்திய அதிகார்த்தினை ஒத்த மாநில ஆட்சியா , மாகாணசபையா, மாவட்டசபையா அல்லது கிராமசபையா என்பதைக்கூட அறிவதற்கு என்னவகையான நடவடிக்கைகளையோ அல்லது, ஏற்பாடுகளையோ செய்திருக்கிறீர்கள்?? அல்லது சிங்களத்தை அப்படியொரு ஏற்பட்டினைச் செய்யும்படியாவது கேட்டிருக்கிறீர்களா?? அல்லது அதுதான் அப்படியொன்றைச் செய்ய விடுமா??

தாயக மக்கள் சுதந்திரமாக தமது கருத்தினைச் சொல்வதற்கு இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை(இறுதியாகக் கிடைத்தது 1977 இல், ஆனால் அதையும் இந்தப் புத்தி ச்சிவிகள் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை), இனிமேலும் வழங்கப்படப்போவதில்லை, அப்படியிருக்க "தாயக மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்" என்று அடம்பிடிப்பது யாரைத் திருப்திப்படுத்த?? சரி ஒரு கதைக்கு, தாயக மக்கள் தனிநாடுதான் வேண்டுமென்று கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோமே, அப்போது உங்களில் எத்தனை புத்திசீவிகள் அதனை ஏற்றுக்கொள்வீர்கள்??

உங்கள் நோக்கம் அதுவல்ல, எந்தத் தாயக மக்களின் குரலைக் கேட்கவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அதே தாயக மக்களைத் தொடர்ந்தும் சிங்களத்தின் இரும்பிப்பிடிக்குள் வைத்திருக்கவேண்டுமென்று ஆசைப்படுவதும் நீங்கள்தான். அதன்மூலம் அவர்களின் பேச்சுரிமை மறுக்கப்பட்டு அவர்கள் ஒருபோதுமே தமது உண்மையான விருப்பத்தினைத் தெரிவித்து விடக்கூடாது என்பதே உங்கள் விருப்பம்.

சரி, இனிப் புலம்பெயர் தமிழரின் பக்கம் திரும்புவோம். எமது உரிமைகளையோ அல்லது எமக்கான தீர்வையோ நாம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது ?? ஏன் நாம் அதைக் கேட்கக் கூடாது?? தாயக மக்கள் தாயக மக்கள் என்று கூக்குரலிடும் நீங்கள் தாயகத்திலிருந்துதான் புலிகளும் தனிநாடு கேட்டுப் போராடினார்கள், அதையாவது ஏற்றுக்கொண்டீர்களா?? அல்லது தனிநாடு கேட்டது புலிகள் மட்டும்தான், சனத்திற்கு அது தேவையாக இருக்கவில்லை என்று சிங்களம் கூறிவருவதைத்தான் நீங்களும் வழிமொழிகிறீர்களா?? நீங்கள் தாயகத்திலிருந்து 2009 இற்கு முன்னர் மக்களால் தெரிவிக்கப்பட்ட விருப்பினை வேண்டுமென்றே கேட்காமலிருந்துவிட்டு, இன்று அதே மக்கள் கூட்டத்தின் குரல்வளையில் ஏறி மிதித்துக்கொண்டு. "தாயக மக்கள்தான் பேசமுடியும்" என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள். ஆக உங்கள் பிரச்சனை என்னவென்றால், தாயக மக்கள் ஒருபோதுமே பெச்சிவிடக்கூடாது, அதற்கான செயல்ப்பாடுத்தான் புலத்திலுள்ளவன் பேசக்கூடாதென்கிற வாதம்.

"ஊரி சிங்களவனுக்குக் கீழே அடிபடுபவன் அங்குள்ளவந்தான், ஆகவே அவனுக்குத்தான் தெரியும் எது தேவை, எது தேவையில்லை என்று" என்றொரு அதிபுத்திசாலித்தனமான கருத்தினை முன்வைத்துச் சேவகம் செய்யும் நீங்கள், புலத்தில் இருப்பவனின் முயறிச்யால்த்தான் இன்றுவரை சிங்களம் போர்க்குற்ற விசார்ணைகளையோ அல்லது மனித குலத்திற்கெதிரான குற்றங்களின் விசாரணைகளையோ எதிர்நோக்குகிறது. நீங்கள் எதிர்பார்ப்பதுபோலவும், விரும்புவது போலவும் புலத்தான் வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தால், தாயக மக்களின் "ஐ.நா விற்கெதிரான உணர்சீகரமான போராட்டங்களை வடக்குக் கிழக்கில் நடத்தி போர்க்குற்ரமே நடைஉபெறவில்லை" என்று சிங்களம் கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்திருக்கும். அதன்பிறகு மனிதாபிமானப்போரில் ஒரு தமிழனும் கொல்லப்படவில்லை என்று நீங்கள் வழிமொழிவதையேதான் சர்வதேசமும் சொல்லியிருக்கும். ஆனால் நல்ல வேளை, புலத்தான், "தாயகத்தான் எக்கேட்டு கெட்டாலும் பரவாயில்லை, நாம் எமது பொருளாதாரத்தை எப்படிக் கூட்டலாம்" என்று பார்த்திராமல் நடந்துகொண்டதன் விளைவு இன்று சிங்களம் எதிர்நோக்கும் நெருக்கடிகள். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், புலத்தானின் முயற்சியால் சர்வதேசம் சிங்களத்தின் மீது கொடுக்கும் அழுத்தங்களைக் கூட நீங்கள் முதலைக் கண்ணீர் வடிக்கும் அதே "தாயகத்து தமிழனை" வைத்தே thaduththum வருகிறீர்கள்.

புலம்பெயர்வதால் மட்டுமே ஒருவன் எப்படித் தனது தாயகத்தின் மீதான் உரிமையை இழக்கிறான் என்பதை இந்தப் புத்திசீவிகள் சொன்னால் நல்லது. சுயநிர்ணய உரிமையென்பது எங்கிருக்கிறோம் என்று பார்க்கப்படுவதில்லை, எங்கிருந்து வந்தோம் என்பதைத்தான் பார்க்கிறது. உங்கள் கருத்துப்படி பார்த்தால் இன்றைக்கு யூத நாடும் இருக்கமுடியாது, தென் சூடானும் இருக்கமுடியாது, எரித்திரியாவோ அல்லது புதிதாக உருவான எந்த நாடுகளுமோ இருக்கமுடியாது. தாயத்து மனிதனைப்போலவே புலத்திலிருப்பவனும் அதேயளவு பங்களிப்புடன் தனது தாயக் விடுதலை நோக்கியோ அல்லது தனது விருப்பினை நோக்கியோ செயற்படமுடியும், 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் படித்துப்பார்த்தால் "தமிழன் எங்கிருப்பினும், அவன் ஈழத்தில் பிறந்தவானாக இருக்கும் பட்சத்தின் தனித் தமிழீழ நாட்டிற்கான உருவாக்கத்தில் தன்னாலான முயறிச்கள் அனைத்தையும் செய்வதற்குக் கடமையுடையவன்" என்று தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக, "தாயகத் தமிழன் மட்டுமே பேச முடியும்" என்று சொல்வதன் மூலம் அதே தாயகத் தமிழன் உற்பட்ட அனைத்துத் தமிழனினதும் முற்றான இருப்பையே கேள்விக்குறியாக்கி சிங்களத்திற்கு சேவகம் செய்யும் கைங்கரியம்தான் இங்கு தெளிவாகத் தெரிகிறது.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:(தாயக மக்கள்தான் எமது இனத்தின் முடிவைத் தீர்மானிக்க வேண்டுமென்பதில் மறைந்திருக்கும் நோக்கத்தை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தாயக மக்களின் இன்றைய நிலை என்னவென்று நன்றாகவே தெரிந்துகொண்டுதான் இந்த "புத்திசீவிகள்" கதை சொல்கிறார்கள்.

சரி, தாயக மக்களின் இன்றைய நிலை என்னவென்று பார்த்தால், "அ.நா செயலாளர் நாயகத்தின் குழு தயாரித்த போர்க்குற்ற விசாரணைக்கான முன்னோடி விசாரணைகளை முற்றாக மறுதலிப்பது", "மகிந்த ராசபக்சவை நாம் எமக்கு விடிவைத்தருபவராகப் பார்க்கிறோம் என்பது", "வடக்கிலும் கிழக்கிலும் ஐ.நா மற்றும் அதன் போர்க்குற்ற விசாரணைக்கெதிராக மக்கள் போராட்டங்களை செய்வது"..................ஆக இவ்வாறான கருத்துக்கள்தான் தாயக மக்களின் இன்றைய கருத்துக்கள் என்று சொல்கிறார்களா அல்லது அதுதான் உண்மை என்கிறார்களா என்று தெரியவில்லை. ஏனென்றால் எதற்கெடுத்தாலும் திறந்த வெளிச்சிறையில் வாய் பூட்டுப் போடப்பட்டு தொடர்ச்சியான அரச பயங்கரவாதத்தாலும், ஆக்கிரமிப்ப்னுள்ளௌம் வஞ்சிக்கப்பட்டு வரும் ஒரு சமூகத்திடம் இருந்துதான் எமக்கான அரசியல் தீர்வுபற்றிய வேண்டுகோள் வரவேண்டும் என்று அடம்பிடிப்பதைப் பார்த்தால், "நான் அவர்களின் வாய்களைக் கட்டியிருக்கிறேன், நீங்கள் சொல்வதை என்னால் ஏற்கமுடியாது, அவர்கள் சொல்லுவதைத்தான் ஏற்கமுடியும், ஆனால் நான் அவர்களின் வாய்களைக் கட்டியிருக்கிறேன்" என்னுமாப்போல் உள்ளது.

சரி தாயக மக்களின் விருப்பம் தாயக மக்களின் விருப்பம் என்று ஓநாய்கள் மாதிரி அழுபவர்கள் அவர்களின் விருப்பம் என்னவென்பதை எப்போதாவது அறிய ஆசைப்பட்டீர்களா?? அவர்களுக்குத்தேவை, தனிநாடா, இந்திய அதிகார்த்தினை ஒத்த மாநில ஆட்சியா , மாகாணசபையா, மாவட்டசபையா அல்லது கிராமசபையா என்பதைக்கூட அறிவதற்கு என்னவகையான நடவடிக்கைகளையோ அல்லது, ஏற்பாடுகளையோ செய்திருக்கிறீர்கள்?? அல்லது சிங்களத்தை அப்படியொரு ஏற்பட்டினைச் செய்யும்படியாவது கேட்டிருக்கிறீர்களா?? அல்லது அதுதான் அப்படியொன்றைச் செய்ய விடுமா??

தாயக மக்கள் சுதந்திரமாக தமது கருத்தினைச் சொல்வதற்கு இதுவரை சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை(இறுதியாகக் கிடைத்தது 1977 இல், ஆனால் அதையும் இந்தப் புத்தி ச்சிவிகள் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை), இனிமேலும் வழங்கப்படப்போவதில்லை, அப்படியிருக்க "தாயக மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்" என்று அடம்பிடிப்பது யாரைத் திருப்திப்படுத்த?? சரி ஒரு கதைக்கு, தாயக மக்கள் தனிநாடுதான் வேண்டுமென்று கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோமே, அப்போது உங்களில் எத்தனை புத்திசீவிகள் அதனை ஏற்றுக்கொள்வீர்கள்??

உங்கள் நோக்கம் அதுவல்ல, எந்தத் தாயக மக்களின் குரலைக் கேட்கவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அதே தாயக மக்களைத் தொடர்ந்தும் சிங்களத்தின் இரும்பிப்பிடிக்குள் வைத்திருக்கவேண்டுமென்று ஆசைப்படுவதும் நீங்கள்தான். அதன்மூலம் அவர்களின் பேச்சுரிமை மறுக்கப்பட்டு அவர்கள் ஒருபோதுமே தமது உண்மையான விருப்பத்தினைத் தெரிவித்து விடக்கூடாது என்பதே உங்கள் விருப்பம்.

சரி, இனிப் புலம்பெயர் தமிழரின் பக்கம் திரும்புவோம். எமது உரிமைகளையோ அல்லது எமக்கான தீர்வையோ நாம் கேட்பதில் என்ன தவறு இருக்கிறது ?? ஏன் நாம் அதைக் கேட்கக் கூடாது?? தாயக மக்கள் தாயக மக்கள் என்று கூக்குரலிடும் நீங்கள் தாயகத்திலிருந்துதான் புலிகளும் தனிநாடு கேட்டுப் போராடினார்கள், அதையாவது ஏற்றுக்கொண்டீர்களா?? அல்லது தனிநாடு கேட்டது புலிகள் மட்டும்தான், சனத்திற்கு அது தேவையாக இருக்கவில்லை என்று சிங்களம் கூறிவருவதைத்தான் நீங்களும் வழிமொழிகிறீர்களா?? நீங்கள் தாயகத்திலிருந்து 2009 இற்கு முன்னர் மக்களால் தெரிவிக்கப்பட்ட விருப்பினை வேண்டுமென்றே கேட்காமலிருந்துவிட்டு, இன்று அதே மக்கள் கூட்டத்தின் குரல்வளையில் ஏறி மிதித்துக்கொண்டு. "தாயக மக்கள்தான் பேசமுடியும்" என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறீர்கள். ஆக உங்கள் பிரச்சனை என்னவென்றால், தாயக மக்கள் ஒருபோதுமே பெச்சிவிடக்கூடாது, அதற்கான செயல்ப்பாடுத்தான் புலத்திலுள்ளவன் பேசக்கூடாதென்கிற வாதம்.

"ஊரி சிங்களவனுக்குக் கீழே அடிபடுபவன் அங்குள்ளவந்தான், ஆகவே அவனுக்குத்தான் தெரியும் எது தேவை, எது தேவையில்லை என்று" என்றொரு அதிபுத்திசாலித்தனமான கருத்தினை முன்வைத்துச் சேவகம் செய்யும் நீங்கள், புலத்தில் இருப்பவனின் முயறிச்யால்த்தான் இன்றுவரை சிங்களம் போர்க்குற்ற விசார்ணைகளையோ அல்லது மனித குலத்திற்கெதிரான குற்றங்களின் விசாரணைகளையோ எதிர்நோக்குகிறது. நீங்கள் எதிர்பார்ப்பதுபோலவும், விரும்புவது போலவும் புலத்தான் வாயை மூடிக்கொண்டு இருந்திருந்தால், தாயக மக்களின் "ஐ.நா விற்கெதிரான உணர்சீகரமான போராட்டங்களை வடக்குக் கிழக்கில் நடத்தி போர்க்குற்ரமே நடைஉபெறவில்லை" என்று சிங்களம் கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்திருக்கும். அதன்பிறகு மனிதாபிமானப்போரில் ஒரு தமிழனும் கொல்லப்படவில்லை என்று நீங்கள் வழிமொழிவதையேதான் சர்வதேசமும் சொல்லியிருக்கும். ஆனால் நல்ல வேளை, புலத்தான், "தாயகத்தான் எக்கேட்டு கெட்டாலும் பரவாயில்லை, நாம் எமது பொருளாதாரத்தை எப்படிக் கூட்டலாம்" என்று பார்த்திராமல் நடந்துகொண்டதன் விளைவு இன்று சிங்களம் எதிர்நோக்கும் நெருக்கடிகள். ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், புலத்தானின் முயற்சியால் சர்வதேசம் சிங்களத்தின் மீது கொடுக்கும் அழுத்தங்களைக் கூட நீங்கள் முதலைக் கண்ணீர் வடிக்கும் அதே "தாயகத்து தமிழனை" வைத்தே செய்தும் வருகிறீர்கள்.

புலம்பெயர்வதால் மட்டுமே ஒருவன் எப்படித் தனது தாயகத்தின் மீதான் உரிமையை இழக்கிறான் என்பதை இந்தப் புத்திசீவிகள் சொன்னால் நல்லது. சுயநிர்ணய உரிமையென்பது எங்கிருக்கிறோம் என்று பார்க்கப்படுவதில்லை, எங்கிருந்து வந்தோம் என்பதைத்தான் பார்க்கிறது. உங்கள் கருத்துப்படி பார்த்தால் இன்றைக்கு யூத நாடும் இருக்கமுடியாது, தென் சூடானும் இருக்கமுடியாது, எரித்திரியாவோ அல்லது புதிதாக உருவான எந்த நாடுகளுமோ இருக்கமுடியாது. தாயத்து மனிதனைப்போலவே புலத்திலிருப்பவனும் அதேயளவு பங்களிப்புடன் தனது தாயக் விடுதலை நோக்கியோ அல்லது தனது விருப்பினை நோக்கியோ செயற்படமுடியும், 1977 ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தைப் படித்துப்பார்த்தால் "தமிழன் எங்கிருப்பினும், அவன் ஈழத்தில் பிறந்தவானாக இருக்கும் பட்சத்தின் தனித் தமிழீழ நாட்டிற்கான உருவாக்கத்தில் தன்னாலான முயறிச்கள் அனைத்தையும் செய்வதற்குக் கடமையுடையவன்" என்று தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இறுதியாக, "தாயகத் தமிழன் மட்டுமே பேச முடியும்" என்று சொல்வதன் மூலம் அதே தாயகத் தமிழன் உற்பட்ட அனைத்துத் தமிழனினதும் முற்றான இருப்பையே கேள்விக்குறியாக்கி சிங்களத்திற்கு சேவகம் செய்யும் கைங்கரியம்தான் இங்கு தெளிவாகத் தெரிகிறது.

கூலிகள் அப்படித்தான் பேசுவார்கள், அப்படித்தான் பேச வேண்டும், அப்பத்தான் அவர்கள் உண்மையான கூலிகள், இதற்காக நாம் உணர்சி வசப்பட கூடாது, உணர்சிவசப்படுவதால் பீபீ கூடி உடல் நிலை பாதிக்க படும், உடல் நிலையை எப்போதும் புலம்பெயர் தமிழன் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும், ஈழத்தமிழனுக்கு கிடைத்திருக்கும் ஒரேஒரு ஆதாரத்துணை புலம்பெயர் தமிழன் மட்டுமே, ஈழத்தமிழன் விடுதலை பெறும்வரை புலம்பெயர் தமிழனே போராடியாக வேண்டும் அதுவே அவனது கடமையும் கூட.

Edited by சித்தன்

  • கருத்துக்கள உறவுகள்

புலத்திலுள்ளவன் செயற்படுவதே இன்னொரு முள்ளிவாய்க்கால் முடிவிற்காக அல்லது, இன்னொரு ஆயுதப்போரிற்காக என்று அடம்பிடிப்பதன் நோக்கமென்ன??

இப்போது புலத்தில் நடந்துவரும் செயற்பாடுகள் எந்தவிதத்தில் தாயகத்தில் இன்னுமொரு ஆயுதப் போராட்டத்தை உருவாக்குகிறது என்று இங்கு கவலைப்படும் புத்தி சீவிகளினால் கூறமுடியுமா?? நாடுகடந்த அரசானாலும் சரி, தமிழர் பேரவைகளானாலும் சரி, அல்லது வேறெந்த அமைப்பானாலும் சரி எந்தவிதத்தில் இன்னொரு போருக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதைச் சொல்லமுடியுமா>? புலம்பெயர் நாடுகளிலிருந்து ஒரு படையெடுத்து சிங்களத்தை மண்டியிட வைக்கப்போகிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களா?? அல்லது அப்படியொரு தோற்றப்பட்டை நீங்களே வலிந்து உருவாக்குகிறீர்களா?? அல்லது சிங்களத்துக்கு இன்னொரு போருக்கான தயாரிப்பில் புலம்பெயர் தமிழன் ஈடுபட்டுள்ளான், ஆகவே இப்பவே உசாராகி விடுங்கள் என்று சமிக்ஞை அனுப்புகிறீர்களா??

போர்க்குற்ற விசாரணைகளை செய்யும்படி சர்வதேசத்தைக் கேட்பதும், வதைமுகாம்களிலும், சிறைகளிலும் வாடும் தாயகத்துத் தமிழனை விடுதலை செய்யும்படி கேட்பதும், தமிழ்த்தாயகத்தின் மீதான சிங்களத்தின் திட்டமிட்ட ஆக்கிரமிப்பினை சர்வ்தேசத்தில் எடுத்துச் சொல்வதும் எப்படி இன்னொரு ஆயுதப்போருக்கான நடவடிக்கை என்று உங்களால் நோக்கப்படுகிறது?

தாயகத்திலுள்ளவனாலும் பேச முடியவில்லை அல்லது அவனைப் பேச விடப்போவதில்லை, அதேவேளை புலத்திலுள்ளவனும் பேசக்கூடாது, ஏனென்றால் அது தாயகத்துத் தமிழனைப் பாதிக்குமென்றால், சிங்களத்தின் ஆக்கிரமிப்பையும், பயங்கரவாதத்தையும் யார்த்தான் வெளிக்கொணர்வது?? சரி, நீங்கள் விரும்புவதுபோலவே புலத்தான் தனது சகல நடவடிக்கைகளையும் நிறுத்திக்கொள்கிறான் என்றே வைத்துக்கொள்வோமே. அப்போதுமட்டும் சிங்களம் தமிழரை நீதியாக நடத்துமா என்ன?? அல்லது அவர்களின் மீதான ஆக்கிரமிப்போ, பயங்கரவாதமோ நின்றுவிடப்போகிறதா??

நாம் இங்கு பேசினாலென்ன, பேசா விட்டாலென்ன தாயகத் தமிழனின் மீதான சிங்களத்தின் இனவழிப்பென்பது தொடர்ந்தும் நடக்கத்தானே போகிறது?? உங்கள் செல்வாக்கினைப் பாவித்து மகிந்தவினை தாயகத்தில் இருக்கும் தமிழனின் மேல் இன்று நடந்துவரும் பயங்கரவாதத்தினை ஒரு நாளைக்காவது தடுத்து நிறுத்த முடியுமா உங்களால்??

நாம் செயற்பட்டாலென்ன, இல்லவிட்டலென்ன தாயகத் தமிழன் மீதான பயங்கரவாதம் தொடர்ந்தும் நடைபெறத்தான் போகிறது. ஆனால் வேறுபாடு என்னவென்றால் நாம் பேசுவதால் அது சர்வதேசத்திற்கு தெரிவிக்கப்படுகிறது, பேசாவிட்டால், மனிதாபிமான நடவடிக்கையில் ஒரு தமிழனும் கொல்லப்படவில்லை என்றுதான் சர்வதேசமும் சொல்லிக்கொண்டிருக்கப்போகிறது.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்
:( 1980 களின் ஆரம்ப காலத்தில் தமிழர்களின் அரசியல் விருப்பத்தை அறிந்துகொள்ள அவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இணைந்த வடக்குக் கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவதென்று சில சர்வதேச நாடுகளால் ஒரு யோசனை சமர்ப்பிக்கப்பட்டதாம். உசாரடைந்த சிங்களம், வடக்குக் கிழக்கினைப் பிரிப்பதன் மூலம் அங்கு குடிசனப் பரம்பலை தமிழருக்கு சாதகமற்ற வகையில் மாற்றுவதன் மூலம், அவ்வாறான அபிப்பிராய வாக்கெடுப்பு நடக்கும் பட்சத்தில் அதிகளாவான சிங்கள் மற்றும் முஸ்லீம்களின் எதிர் வாக்குகளால் அந்த சர்வஜன் வாக்கெடுப்பை தோற்கடித்துவிட வேண்டுமென்று விடாப்பிடியாகத் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது. இன்றைக்கு யாழ்ப்பாணம் மாவட்டம் அடங்கலாக குடியேற்றம் நடந்து வருகிறது. இதன் நோக்கம் புரிந்துகொண்டும்தான் இந்தப் புத்திசீவிகள் இன்றைக்குப் புலம்பெயர் தமிழன் பேசக்கூடாது என்று கதையளக்கிறார்கள்.

- சிங்கள நாட்டின் தலைவர்களால் தமிழ் - முஸ்லீம் மக்களின் பிரச்னையை தீர்க்ககூடிய தீர்க்கதரிசனமும், அரசியல் பக்குவமும் கிடையாது என்பது வரலாறு.

- நாடு கடந்த அரசு உட்பட்ட பல புலம்பெயர் அமைப்புக்களில் மனித உரிமை குழுவும், எந்த ஒரு அரசு போன்று, உள்ளது. அதேவேளை சிங்கள ஊடகவியலார்கள் உட்பட பலரும் அங்கு அடிப்படை சுதந்திரம் இல்லை என கூறி வருகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் வேண்டுமான இல்லை மாநிலங்களவை அதிகாரம் வேண்டுமான இல்லை அதனிலும் குறைவான ஏதோ ஒரு தீர்வு வேண்டுமா என்பதை தாயகத்தில் உள்ள மக்களே தீர்மானிப்பார்கள். தீர்மானிக்கவும் வேண்டும் புலத்தில் உள்ளவன் அல்ல. இந்தியா குறித்த நட்பு நிலையை தீர்மானிப்பதும் தாயகத்தில் உள்ள மக்களே அன்றி புலத்தில் இருப்பவன் அல்ல. தாயக மக்களின் விருப்பங்களுக்கு முடிந்தால் புலத்தில் உள்ளவன் ஆதரவாய் இருப்பது ஒன்றே நேர்மையானது தவிர அவர்களின் விருப்பங்கள் உரிமைகளை தீர்மானிப்பவனாக இருக்கமுடியாது. அதற்கான அதிகாரம் தாயகத்தை துறந்தவர்களுக்கு கிடையாது.

தவறு!

ஒரு குட்டிக்கதை. :D

சகோதரர்களிடையே சொத்து பிரிப்பதில் தகராறு. அண்ணன் எல்லா சொத்துக்களையும் அமுக்கிவிட்டான், ஒரு வீட்டைத் தவிர. தம்பி அந்த வீடு மட்டுமாவது தனக்கு வேண்டும் என்கிறான். உறவினர்களில் பாதி அண்ணனுக்கு ஆதரவு; மீதிப்பேர் தம்பிக்கு ஆதரவு. இப்போது அண்ணன் தனக்கு ஆதரவான உறவினர்களைக் கொண்டு தம்பிக்கு ஆதரவானவர்களை அடித்து விரட்டி வீட்டைத் தன்வசம் எடுத்துக் கொள்கிறான். :rolleyes:

ஓடிப்போன உறவினர்கள் சில காலத்தின்பின் திரும்பிவந்து தம்பிக்கு வீட்டைக்கொடு என்கிறார்கள். அண்ணனின் உறவுக்காரர்கள் சொல்கிறார்கள் ஓடிப்போன உங்களுக்கு இப்பிரச்சினையில் தலையிட உரிமை கிடையாது. நாங்கள் தம்பியிடம் மட்டும் பேசிக்கொள்வோம் என்று. :D

தம்பி வீட்டின் ஒரு அறையில் அடைபட்டு இருக்கிறார். :wub:

... புலம்பெயர் தமிழர்கள் வேற்றுக்கிரகத்திலிருந்தா வந்தனாங்கள்????????? ....... எங்களுக்கு அங்கு உறவுகள் என்று ஒன்றுமில்லை??? என்ன தொடர்புகள் கூட இல்லவே இல்லை????? ... அதுதான் அவர்கள் என்ன இந்த மாகமாக்களை கொண்டு எமக்கு சொல்லுவிக்கிறார்கள்!!!!!!

... ஆனால் என்ன இந்த புலம்பெயர் தமிழர்களாகிய மாற்றுக்கிரகவாசிகளின் பணம் மட்டும் தேவைப்படுகிறது ... சிங்களத்துக்கு மட்டுமல்லாது இந்த மாகமாக்களுக்கும்!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:

தவறு!

ஒரு குட்டிக்கதை. :D

சகோதரர்களிடையே சொத்து பிரிப்பதில் தகராறு. அண்ணன் எல்லா சொத்துக்களையும் அமுக்கிவிட்டான், ஒரு வீட்டைத் தவிர. தம்பி அந்த வீடு மட்டுமாவது தனக்கு வேண்டும் என்கிறான். உறவினர்களில் பாதி அண்ணனுக்கு ஆதரவு; மீதிப்பேர் தம்பிக்கு ஆதரவு. இப்போது அண்ணன் தனக்கு ஆதரவான உறவினர்களைக் கொண்டு தம்பிக்கு ஆதரவானவர்களை அடித்து விரட்டி வீட்டைத் தன்வசம் எடுத்துக் கொள்கிறான். :rolleyes:

ஓடிப்போன உறவினர்கள் சில காலத்தின்பின் திரும்பிவந்து தம்பிக்கு வீட்டைக்கொடு என்கிறார்கள். அண்ணனின் உறவுக்காரர்கள் சொல்கிறார்கள் ஓடிப்போன உங்களுக்கு இப்பிரச்சினையில் தலையிட உரிமை கிடையாது. நாங்கள் தம்பியிடம் மட்டும் பேசிக்கொள்வோம் என்று. :D

தம்பி வீட்டின் ஒரு அறையில் அடைபட்டு இருக்கிறார். :wub:

:wub::D :D :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.