Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 தொலைக்காட்சியின் கானொளி குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு!

Featured Replies

ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சனல் 4 தொலைக்காட்சியின் கானொளி குறித்த அறிக்கை சமர்ப்பிப்பு!

வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் போராளிகள் சுட்டுக் கொல்லப்படுவது தொடர்பான சனல் 4 தொலைக்காட்சியின் கானொளி குறித்த அறிக்கை ஜெனிவாவில் நாளை (30.05.11) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சர்வதேச போர் நியமங்களுக்கு எதிரான நீதிக்குப் புறம்பான வகையில் இடம்பெற்ற இப்படுகொலைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கை ஒன்றிலேயே இந்தக் கானொளிப் பதிவு தொடர்பான விபரங்கள் உள்ளடக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த சிறப்பு சட்ட வல்லுனர் Christof Heyns மனிதவுரிமைகள் ஆணைக்குழுவிடம் இவ்வறிக்கையை கையளிக்கவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் குறித்த சிறப்பு சட்ட வல்லுனராக Christof Heyns கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட பின்னர் சமர்ப்பிக்கப்படும் இலங்கை மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான முதலாவது அறிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முயற்சித்த போது சிறிலங்கா அரசாங்கம் அவருக்கு அனுமதி மறுத்திருந்தது.

அதேவேளை, வன்னியில் இடம்பெற்ற போரின் போது சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்களை சனல் 4 தொலைக்காட்சி கடந்த வருடம் மேமாத நடுப்பகுதியில் வெளியிட்டிருந்தது. வன்னிப் போரின் இறுதிக் கட்டத்தில் சிறிலங்கா அரசாங்கத் தரப்பின் உயர்மட்ட கட்டளைகளுக்கு அமையவே தமிழ் மக்கள் கண்மூடித்தனமாகப் படுகொலை செய்யப்பட்டதாக சனல் 4 தொலைக்காட்சியின் வெளிநாட்டுச் செய்தியாளர் ஜொனாதன் மில்லர் ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதுகுறித்து சிறிலங்கா படைத்தரப்பின் சிரேஸ்ட படையதிகாரி ஒருவரும், களமுனையில் நின்ற படைச்சிப்பாய் ஒருவரும் தமக்குக் கூறியதாக சனல் 4 தொலைக்காட்சி ஆதாரபூர்வமாக செய்தி வெளியிட்டிருந்தது. 2009ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட கானொளி ஆதாரத்தில் சிறிலங்கா படைத்தரப்பின் சீருடை அணிந்திருந்த படையினரால் விடுதலைப் புலிகளின் போராளிகள் பலர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு படுகொலை செய்யப்படுவது குறித்து எடுத்துக் காட்டப்பட்டிருந்தது.

இக்கானொளி போலியானது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், இக்கானொளியை ஆய்வு செய்த ஐக்கிய நாடுகள் அதன் உண்மைத் தன்மையை ஏற்றுக் கொண்டிருந்தது.

இந்நிலையில், சிறிலங்கா படைத்தரப்பின் சிரேஸ்ட படையதிகாரி ஒருவரும், களமுனையில் நின்ற படைச்சிப்பாய் ஒருவரும் இத்தகைய படுகொலைகள் சிறிலங்கா அரசாங்கத் தரப்பின் உயர்மட்ட கட்டளைகளுக்கு அமையவே மேற்கொள்ளப்பட்டதாக கடந்த வருடம் மேமாத நடுப்பகுதியில் சனல் 4 தொலைக்காட்சிக்குக் கூறியிருந்தனர். எதிரில் தெரிகின்ற ஒவ்வொருவரையும் சுட்டுக் கொல்லும்படி தங்களுடைய தளபதிகள் தங்களுக்கு கட்டளையிட்டதாக குறிப்பிடும் களமுனையில் நின்ற படைச்சிப்பாய், இக்கட்டளையின் பிரகாரம் தாங்கள் எதிரில் தெரிகின்ற ஒவ்வொருவரையும் கொலை செய்ததாகவும் கூறியிருந்தார்.

இதேபோன்று, இக் கட்டளை மிக உயர் மட்டத்திலிருந்தே தங்களுக்குக் கிடைத்ததாக குறிப்பிட்டுள்ள சிறிலங்கா படைத்தரப்பின் சிரேஸ்ட படையதிகாரி, இக்கட்டளை ஒவ்வொருவரையும் கொலை செய்து தடயங்களை அழித்துவிடச் சொன்னதாக தெரிவித்துள்ளார். வன்னி இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட காணொளியை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி, இவ்வாறு சிறிலங்காப் படையினரால் கைது செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளதுடன், இப்புகைப்படங்கள் சிறிலங்கா படைச்சிப்பாய் ஒருவரினால் எடுக்கப்பட்டவை என்றும் தெரிவித்திருந்தது.

வன்னியில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் காத்திரமான பங்களிப்பை வழங்கிய பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு சர்வதேச மன்னிப்புச் சபையால் வருடம் தோறும் வழங்கப்படும் 2011ஆம் ஆண்டுக்கான சிறந்த தொலைக்காட்சி செய்திகளுக்கான விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={68E4ED2A-51B3-4624-BE0D-C8451752C3E0}

  • கருத்துக்கள உறவுகள்
:( சனல் 4 இம்மாத நடுப்பகுதியில் ஒளிபரப்ப இருந்த போர்க்குற்ற ஒளிப்பதிவுகளுக்கு என்னவாயிற்று?? ஏன் அவை இதுவரை வெளிவரவில்லை?? யாராவது கேட்டீர்களா??
  • தொடங்கியவர்

:( சனல் 4 இம்மாத நடுப்பகுதியில் ஒளிபரப்ப இருந்த போர்க்குற்ற ஒளிப்பதிவுகளுக்கு என்னவாயிற்று?? ஏன் அவை இதுவரை வெளிவரவில்லை?? யாராவது கேட்டீர்களா??

ஒன்றில் அந்த செய்தி பொய்யானதாக இருக்கலாம், இல்லை.

சிங்களம் தடுத்தி நிறுத்தி இருக்கலாம் ( அது சாத்தியம் என நினைக்கவில்லை), இல்லை,

மீண்டும் ஒரு சரியான தருணத்திற்கு சனல் 4 காத்திருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றில் அந்த செய்தி பொய்யானதாக இருக்கலாம், இல்லை.

சிங்களம் தடுத்தி நிறுத்தி இருக்கலாம் ( அது சாத்தியம் என நினைக்கவில்லை), இல்லை,

மீண்டும் ஒரு சரியான தருணத்திற்கு சனல் 4 காத்திருக்கலாம்.

மீண்டும், ஒரு சரியான தருணத்திற்கு காத்திருக்கலாம் என்றே நினைக்கின்றேன்.

தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கலாம் என்றே கருத வேண்டியுள்ளது. ஏனெனில் இவ்விடயத்தால் சிங்களம் மட்டுமல்ல இந்தியாவும் சில சங்கடங்களை எதிர்நோக்கித்தானுள்ளது. இலங்கையைப் பணியவைப்பதிலுள்ள சிக்கல் இந்தியாவைப் பாதிப்பது வெளிப்படையானது. இது தவிர போர்க் குற்ற நடவடிக்கையில் இந்தியாவின் பங்கு எப்படியிருந்தது என்பது இலங்கைக்கு மட்டுமே ஆதரத்துடன் தெரியும்.

  • தொடங்கியவர்

ஐ.நா.வில் புதிய ஒரு மணித்தியால போர்குற்ற ஆவண படம் திரையிடப்படுகின்றது

UN premiere for Sri Lanka war crimes film

Channel 4 is to screen Sri Lanka's Killing Fields, a special one-hour investigation which features devastating new video evidence of war crimes and crimes against humanity committed by Sri Lankan government forces and the Tamil Tigers at the UN this Friday 3 June.

The film will be screened on the margins of the UN Human Rights Council session. It will air on Channel 4 on 14 June.

http://www.channel4.com/info/press/news/un-premiere-for-sri-lanka-war-crimes-film

  • கருத்துக்கள உறவுகள்

வரும் 14ம் திகதி இரவு 11.05 க்கு காண்பிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Srilanka: If this isn't GENOCIDE, WAR CRIME, Then What on Earth is?

http://www.change.org/petitions/view/srilanka_if_this_isnt_genocide_war_crime_then_what_on_earth_is

Stop the Genocide and Free the Tamils from Internment Camps (IDP's) in Sri Lanka

http://www.change.org/petitions/stop-the-genocide-and-free-the-tamils-from-internment-camps-idps-in-sri-lanka

Release the special UN report on Sr Lanka immediately

http://www.srilankacampaign.org/takeaction.htm

http://amnesty.org/en/appeals-for-action/dear-un-secretary-general-tell-us-what-you-know-sri-lanka

Pls. Register your comments here

Grisly Photos Reveal Genocide by Sri Lankan Government Against Tamil People

http://www.salem-news.com/articles/august072010/srilanka-violence-mv.php

Sri Lanka Shocking Execution Video: New War Crimes Claims

http://www.salem-news.com/articles/december062010/sri-lanka-violence.php

World Ignores Genocide of Sri Lanka's Tamil Population

http://www.salem-news.com/articles/april222011/sri-lanka-genocide-tk.php

Sri Lanka Tamil Genocide: Killing the Messenger

http://www.salem-news.com/articles/may212011/tamil-genocide-tk.php

New Song 'Depression' - Graphic Truth of Sri Lanka Tamil Genocide

http://www.salem-news.com/articles/may272011/tamil-genocide-tk.php

If we don't speak up who will? -Confronting the Tamil Genocide in Sri Lanka

http://www.salem-news.com/articles/may302011/sri-lanka-video-tk.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.