Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அம்மா எப்ப வீட்டுக்கு வருவ....! -கனிமொழியைக் கலங்க வைத்த மகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

67550962.jpg

முன்னாள் முதல்வரின் மகள், மாநிலங்களவை உறுப்பினர் என்கிற எந்தப் பெயரையும், பதவியையும் பயன்படுத்த முடியாதபடி, திகார் பெண்கள் சிறையில் ஆறாம் எண் அறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் கனிமொழி.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது செய்யப்பட்டதுமே, கனிமொழியும் கைது செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியது. அத ன்படியே, கனிமொழியும் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஒரு வாரமாக சிறையில் கனிமொழியை வந்து சந்தித்துச் செல்லும் உறவினர்கள் மட்டுமே இப்போது அவ ருக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

கனிமொழி பிறக்கும்போது, கருணாநிதி, அண்ணா தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அதன்பிறகு ஐந்துமுறை தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்து விட்டார் கருணாநிதி. எனவே வசதிக்குக் குறைவில்லாமல் வளர்ந்து விட்ட கனிமொழிக்கு சிறைவாசம் என்பது நிச்சயம் ஜீரணிக்க த்தக்க விஷயமாக இருக்காது. ஆனால் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முன் கனிமொழியின் சிரமம் என்பது நாட்டு மக்களுக்கு பெரிய விஷயமல்ல!

01ac.jpg

கனிமொழியின் சிறைவாசம் எப்படி இருக்கிறது என டெல்லி சிறை வட்டாரத்தில் விசாரித்தோம். மே 20-ம் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் ஜாமீன் கிடைக்குமா, கிடைக்காதா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், கனிமொழிக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. அவர் நடந்து கொண்ட விதத்தில் இருந்து அதை அவர் ஏற்கெனவே எதிர்பார்த்திருந் தார் என்றுதான் சொல்ல முடிகிறது என்கிறார்கள்.

கணவர் அரவிந்தனிடம் கனிமொழி, ‘‘இதெல்லாம் நான் முன்கூட்டியே அறிந்ததுதான். மகன் ஆதித்யாவை கண்கலங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்று தைரியமூட்டி இருக்கிறார். கோர்ட்டில் கண்ணியமாக நடந்து கொண்டதற்காக கனிமொழியைப் பாராட்டிய நீதிபதி ஷைனி, கனிமொழிக்கு சில சிறப்பு சலுகைகளை கொடுப்பதாகவும் அறிவித்தார். அதன்படி சிறையில் தொலைக்காட்சி, மின்விசிறி ஆகிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தன.

கனிமொழி தரப்பில் தலையணை கேட்கப்பட்டது. ஆனால், இன்று வரை கொடுக்கப்படவில்லை. கோர்ட் நடைமுறை முடிந்த பின்பு 20-ம் தேதி தன்னிடமிருந்த தங்க நகைகளைக் கழட்டிக் கொடுத்துவிட்டு சிறையில் ஆறாம் எண் அறைக்குக் கொண்டு செல்லப்பட்டார் கனிமொழி. 30 அடி உயரத்தில் மின்விசிறி, டி.வி, ரிமோட், ஒரு சிமெண்ட் பெஞ்ச் இவை மட்டும்தான் அந்த அறைக்குள் இருந்தன. அறையை வெறித்தபடியே இருந்த கனிமொழி இரவில் சாப்பிட கொடுக்கப்பட்ட சப்பாதிகளை சாப்பிடவில்லையாம்.

01bb.jpg

கையோடு கொண்டு போயிருந்த புத்தகங்களை அவர் வெறுமனே புரட்டிக் கொண்டிருந்தார். அதைப் படிக்க முடியாதபடிக்கு, கண்களில் கண்ணீர் வந்து கொண்டிருந்தது. தான் சிறைக்குச் சென்றால் தனது மகனை அது பாதிக்குமே என்றும், அப்பாவின் வயதான காலத்தில் தன்னால் அவருக்கு இப்படி ஒரு சிரமம் வந்துவிட்டதே என்றும் சிறைக்குச் செல்வதற்கு முன்பே தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார் கனிமொழி.

இரவில் சிமெண்ட் பெஞ்சில் படுத்திருக்கிறார். பெட்ஷீட்டை தலையணையாக மாற்றிப் படுத்தவர், கொசுக்கடி தாங்க முடியாமல் கையையே தலையணையாக மாற்றிக் கொண்டு பெட்ஷீட்டை போர்த்திக் கொண்டு படுத்திருக்கிறார். இரவு வெகுநேரம் வரை அவர் அழுது கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள்.

மறுநாள் காலையில் (21-ம் தேதி) கனிமொழி கோர்ட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். கனிமொழி கைது செய்யப்பட்ட தகவல் கேட்டு முதல்நாள் இரவே டெல்லி வந்த ராஜாத்தி அம்மாள் கோர்ட்டில் கனிமொழிக்காக காத்திருந்தார். முதல்நாள் அணிந்த அதே சுடிதாருடன் கனிமொழி வந்ததைப் பார்த்ததும் கண்கலங்கினார் ராசாத்தி. கனிமொழியை கட்டியணைத்த ராஜாத்தி நெற்றியில் முத்தமிட்டு, ‘‘என் தங்கத்தை நானே கஷ்டப்பட வைத்து விட்டேனே’’ என கதறி அழுதிருக்கிறார்.

கனிமொழிக்கு கண்ணீர் வந்தாலும், அதை அடக்கிக் கொண்டார். அப்போது அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவை அழைத்து வர, மகனை அணைத்துக் கொண்டு முத்தமிட்டார் கனிமொழி. ‘‘அம்மா நீ எப்ப வீட்டுக்கு வருவே?’’ என ஆதித்யா கேட்க, ‘‘ஸாரிடா. அம்மா சீக்கிரம் வந்து விடுவேன். அப்பா சொல்றதைக் கே ட்டு இரு’’ என்று கண்கலங்கியிருக்கிறார். பிறகு கோர்ட் நடைமுறை முடிந்து சிறைக்குச் சென்றார் கனிமொழி.

சிறைக்குள் சென்றதும் ரிமோட் எடுத்து சேனல்களை மாற்றிக் கொண்டே வந்தவர், எந்த நிகழ்ச்சியையும் பார்க்கப் பிடிக்காமல் புத்தகம் எடுத்துப் படிக்கத் தொடங்கினார். இரவு உணவு வந்து சேர அதைச் சாப்பிட்டார். கொசுக்கடிக்கு மத்தியில் கரப்பான் பூச்சித் தொல்லைகளும் இருக்க, படுத்திருந்தவர் எழுந்து அமைதியாக உட்கார்ந்து விட்டாராம்.

22-ம் தேதி ஞாயிறு முழுவதும் சிறையிலேயே இருந்தார். மூன்று வேளையும் சிறை உணவுதான். மதிய உணவு முன்னாள் அமைச்சர் ஆ.ராசா வீட்டிலிருந்து கனிமொழிக்கும் சேர்த்தே கொண்டு வரப்படுகிறது. வெறுமனே அறையை வெறித்து பார்த்தபடியும், புத்தகங்களைப் புரட்டியபடியும் அன்றைய பொழுது கழிந்திருக்கிறது. மறுநாள் கோர்ட்டுக்கு வந்தபோது, அழகிரியின் மனைவி காந்தி, மகள் கயல்விழி, மகன் துரை தயாநிதி, மருமகன் வெங்கடேஷ் ஆகியோர் கனிமொழிக்காக காத்திருந்தனர். கனிமொழி வந்ததும் அவரைக் கட்டிப் பிடித்துக் கதறியழுதார் காந்தி. கனிமொழியும் கண்கலங்கி இருக்கிறார். அப்போது சிறையில் உள்ள அசவுகரியங்களைப் பற்றி காந்தி கேட்டிருக்கிறார்.

மீண்டும் கனிமொழி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டதும், மாலையில் திகார் சிறைக்கே சென்று மகளைப் பார்த்தார் கருணாநிதி. சிறையில் சிறப்பு அனுமதியோடு ராசாத்தி, மருமகன் அரவிந்தன், பேரன் ஆதித்யா ஆகியோரும் உடனிருந்தனர்.

01c.jpg

உருக்கமாக நடந்த இந்த சந்திப்பில், ‘‘என்னால் உன்னை விட்டு இருக்க முடியாதும்மா? நான் டெல்லியிலேயே இருந்துடுறேன்’’ என கருணாநிதி கலங்கியிருக்கிறார். ‘‘வயசான காலத்துல உங்களை கஷ்டப்படுத்திட்டேன். என்னை மன்னிச்சிடுங்க’’ என கருணாநிதியிடம் கனிமொழி அழுதிருக்கிறார். மகளுக்கு தைரியமூட்டி விட்டு சில புத்தகங்களைக் கொடுத்து, ‘‘உனக்குத் தோன்றும் கவிதைகளை எழுது.. அமைதியாக இரு’’ என ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

இதையடுத்து, மறுநாள் கனிமொழியை ஸ்டாலின் சென்று பார்த்தார். 25-ம் தேதி கருணாநிதியின் மகள் செல்வி, மு.க.தமிழரசு, அவரது மனைவி மோகனா, மல்லிகா மாறன் ஆகியோர் சென்று ஆறுதல் கூறி வந்தனர். குடும்பத்தினர் வந்து தன்னைச் சந்திப்பது கனிமொழிக்கு ஒருவேளை ஆறுதலாக இருக்கலாம்.

01df.jpg

திராவிட அரசியலில் சிறை செல்வது என்பது புதிதல்ல. கருணாநிதியும் பலமுறை சிறை சென்றவர் தான். நெருக்கடிநிலை காலத்தில் ஸ்டாலினும் சிறை சென்றிருக்கிறார். அதற்கெல்லாம் ஒரு போராட்டப் பின்னணி இருக்கிறது. ஆனால் நாட்டின் ஒரு பெரும் ஊழலில் சம்பந்தப்பட்டவர் என முத்திரை குத்தப்பட்டு இன்று சிறையில் இ ருக்கிறார் கனிமொழி. கருணாநிதியின் அரசியல் வாழ்க்கையில் இது பெரும் சறுக்கல்தான்!

இரா.முருகேசன்

- குமுதம் ரிப்போட்டர்

  • கருத்துக்கள உறவுகள்

உருக்கமாக நடந்த இந்த சந்திப்பில், ‘‘என்னால் உன்னை விட்டு இருக்க முடியாதும்மா? நான் டெல்லியிலேயே இருந்துடுறேன்’’ என கருணாநிதி கலங்கியிருக்கிறார்.

evil_smiley.JPG

  • கருத்துக்கள உறவுகள்

டாப் 10 ஊழல் (இந்தியாவில்)

எல்லாவற்றிலேயும் டாப் 10 பார்த்தாச்சு.....ஊழல் செய்வதிலும் பார்த்துவிடுவோம்.......

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1.2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி:(தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா)

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

1.சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:

இவ்வளவுதான் ஊழல் நடந்தது? என்று இன்னும் கூட உறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

1.எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

1.ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி):

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம். அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர். 2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

1.ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி):

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

1.வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி):

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

1.தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி):

தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.

1.கேதன் மேத்தா (ரூ 1000 கோடி):

ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

1.உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி):

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

1.ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி):

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!

நான் படித்து மலைத்து போய்விட்டேன்....நீங்களும் மலைக்க வேண்டாமா......அதற்காகத்தான் இதை பகிர்ந்துள்ளேன்........

நன்றி - குணசேகரன்

http://akbarfarji.blogspot.com/

இனி வருங்காலங்களில் எந்த ஒரு அரசியல்வாதியும் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசிப்பார் என எதிர்பார்க்கலாம் என எண்ண முடியாமல் உள்ளது, காரணம் ஊழல் எல்லா இடங்களிலும் புரையோடிவிட்ட ஒன்று.

  • கருத்துக்கள உறவுகள்

மத்தியில் சேர்ந்து சுருட்டுவோம்!

மாநிலங்களில் தனித்துச் சுருட்டுவோம்!!!

இது தான் எப்போதுமே இந்திய அரசியல் வாதிகளின் தாரக மந்திரம்!!!

சிறையில் இருக்கும் மகளுக்கு "மனத்தை தளரவிடாமல் அடுத்து எங்கு கை வைக்கலாம் என சிந்திக்கும்படி" கருணாநிதி ஆலோசனை.

-யாழ்லீக்ஸ்

  • கருத்துக்கள உறவுகள்

கனிமொழியும் தனது தந்தையாரைப் போல ஒரு புடம்போட்ட அரசியல்வாதியாக வெளிவருவார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்..! :wub: கழகக் கண்மணிகளுக்கு ஒரே கொண்டாட்டம்தான்..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.