Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும் வைகோ ஐரோப்பாவில் முழக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

[Thursday, 2011-06-02 10:56:54]

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி பசுமைக் கட்சிகள், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகம் ஆகியவை இணைந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் கட்டடத்தில், நடந்த இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள், இடதுசாரி பசுமைக் கட்சிகள், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகம் ஆகியவை இணைந்து ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை குறித்த கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருந்தன. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றக் கட்டடத்தில், நடந்த இந்த கூட்டத்தில் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது வைகோ கூறியதாவது:

ஐரோப்பாவில் வசந்த காலத்தை இப்போது அனுபவித்தீர்கள். அதுபோல, ஈழத்தமிழ் மக்களுக்கும் வசந்தம் விடியட்டும். உலகின் ஜனநாயக நாடுகள் அதற்கு வழிகாட்டட்டும். ஈழத்தமிழரின் கண்ணீரை, உலக நாடுகள், பல ஆண்டுகள் கண்டு கொள்ளவில்லை. ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக, நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஈழத்தமிழர்கள்தான், இலங்கைத் தீவின் வடக்குகிழக்கு பகுதிகளின் பூர்வீகக் குடிமக்கள். சுதந்திர அரசு அமைத்து, தனித்துவமான நாகரிகத்தோடு வாழ்ந்தனர். அவர்கள்தான் பூர்வீகக்குடி மக்கள் என்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, இந்திய பாராளுமன்றத்தில் ஆற்றிய தன் கடைசி உரையில் குறிப்பிட்டார். போர்த்துகீசியர் படை எடுத்தனர். 1619 ல் தமிழர்கள் தங்கள் அரசை இழந்தனர். 1638 ல் டச்சுக்காரர்கள் தமிழ் ஈழத்தைக் கைப்பற்றினர்.

பின்னர், 1796 ல் பிரித்தானியர்கள் வந்தனர். நிர்வாக வசதிக்காக, தமிழர்களையும், சிங்களவர்களையும் தங்கள் காலனி ஆட்சியின் கீழ் ஒன்றாக்கினர். 1948 பிப்ரவரி 4 ல் பிரித்தானியர்கள் இலங்கைக்கு சுதந்திரம் தந்தபோது, அதிகாரத்தை சிங்களவர்களிடம் ஒப்படைத்தனர்.

இலங்கை சுதந்திரம் பெற்றது. ஆனால், ஈழத்தமிழர்கள் அடிமைகள் ஆனார்கள். ஆயுதப் போராட்டத்தை, பிரபாகரன் தலைமையில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் முன்னெடுத்தனர். போர்க்களத்தில் வெற்றிகளைக் குவித்தனர். யுத்தகள அதிசயமாக யானை இறவைக் கைப்பற்றினர். தங்கள் பலத்தை நிரூபித்த நிலையில், விடுதலைப்புலிகள்தான் போர் நிறுத்தத்தைத் தாங்களாக அறிவித்தனர்.

2001 ம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள், 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், அதன் பின்னர் மேலும் 30 நாள்களுக்கான போர் நிறுத்தத்தையும், விடுதலைப்புலிகள் பிரகடனம் செய்தனர். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில், நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தைகளையும் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பாழாக்கினார். 2005 ல் மஹிந்த ராஜபக்ஷ் ஜனாதிபதி ஆனார்.

ஈழத்தமிழர் படுகொலை தீவிரம் ஆயிற்று. ஏழு வல்லரசுகளின் இராணுவ உதவியோடு, இலங்கை அரசு, கொடூரமாக தமிழ் மக்களைக் கொன்று குவித்தது. தமிழ் நாட்டில் முத்துக்குமார் உள்ளிட்ட 17 பேர் தீக்குளித்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் போரை நிறுத்தச் சொல்லியும், இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை.

கடந்த வாரத்தில் செர்பிய முஸ்லிம்கள் 8 ஆயிரம் பேரை 95 ல் படுகொலை செய்தான் என்று போஸ்னி யாவின் தளபதி ராட்கோ மிலாடிக்கைக் கைது செய்து விட்டார்களே? ஏன் இலங்கை ஜனாதிபதியை கூண்டில் எற்றக் கூடாது அவரது சகோதரர்களையும் கொலைகாரக் கூட்டாளிகளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.

யாராவது ஒரு சிங்களப் பெண்ணை, விடுதலைப்புலிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக இலங்கை கூட்டம் கூடச் சொன்னது இல்லையே? அப்படி அவர்கள் நடந்து கொண்டதாக யாராவது நிரூபித்தால், நான் தமிழ் ஈழத்தை ஆதரித்துப் பேசுவதை விட்டு விடுகிறேன். தமிழ் ஈழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து நாடுகளின் பார்வை யாளர்களின் கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களும், அந்தந்த நாடுகளிலேயே பங்கேற்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

இலங்கையில் தமிழர் பகுதிகளில் இருந்து இராணுவமும், காவல்துறையும் உடனடியாக அகற்றப்பட வேண்டும். என் உரையை முடிக்கும் போது, என் மனதில், என் உள்ளத்தில் தாக்கமாகி உள்ள ஒரு கவிதையைச் சொல்லுகிறேன.

கல்லறைகள் திறந்து கொண்டன.

மடிந்தவர்கள் வருகிறார்கள்

மாவீரர்களின் ஆவிகள் யுத்தத்துக்கு எழுந்து விட்டன

புகழ் மலர்களோடும், உருவிய வாளோடும் வருகிறார்கள்

இதயத்தில் ஈழத்தின் விடுதலையை ஏந்தி வருகிறார்கள்

ஈழ விடுதலை முரசம் ஒலிக்கட்டும்

ஈழம் உதயமாகட்டும்

சுதந்திர ஈழக் கொடி பட்டொளி வீசிப்பறக்கட்டும்

ஆம், ஐ.நா. சபைக்கு முன் சுதந்திர தேசங்களின் கொடிகளோடு

எங்கள் தமிழ் ஈழ தேசக் கொடியும் பறக்கட்டும். இவ்வாறு வைகோ உரை ஆற்றினார்.

source:seithy.

Edited by tamil arasu

தமிழீழம் சுதந்திர தேசமாக வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: பெல்ஜியம் கூட்டத்தில் வைகோ உரை

அனைத்து நாடுகளின் பார்வையாளர்களின் கண்காணிப்பில், தமிழீழம் சுதந்திர தேசமாவதற்கு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெல்ஜியம் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், முக்கியமாக இடதுசாரி பசுமைக் கட்சிகளும், தமிழ் ஈழ மக்கள் அவைகளின் அனைத்து உலகச் செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த ஈழத்தமிழர்களின் தேசிய இனப்பிரச்னை குறித்த கருத்து அரங்கம், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் கட்டடத்தில், ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் துணைக்குழு கூடுகின்ற அரங்கில், ஜூன் 1 புதன்கிழமை பிற்பகல் இரண்டு மணிக்குத் தொடங்கி, மாலை 7 மணி வரை நடைபெற்றது.

இதில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களும், பல நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பால் மர்பி முக்கியப் பங்கு ஆற்றினார். தொடக்க உரையும் ஆற்றினார்.

இந்த அமர்வில் ஒவ்வொருவருக்கும் தலா 5 நிமிடங்கள், அதிகபட்சமாக 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தன. ஆனால், வைகோவுக்கு மட்டும் 15 நிமிடங்கள் என நிகழ்ச்சி நிரலிலேயே நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இரண்டாவதாக நடைபெற்ற அமர்வுக்கு, இடதுசாரி பசுமை இயக்கத்தின் ஒரு முக்கிய நிர்வாகியான டாஞ்சா நீமர் தலைமை தாங்கினார். மாலை 5.30 மணிக்குத் தன் உரையைத் தொடங்கிய வைகோ, 18 நிமிடங்கள் உரை ஆற்றினார். இந்த உரைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அவர் உரை ஆற்றும்போதும், உரையை முடிக்கும்போதும், கைதட்டல் அடங்க நீண்ட நேரம் ஆயிற்று.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இலங்கைக்கு வரிவிலக்கை ரத்து செய்வது தொடர்பான முடிவை மேற்கொண்ட இந்த அரங்கத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் ஆற்றிய உரைகளை, அருகில் உள்ள கண்ணாடி அறைகளில் இருந்து, ஆங்கிலம், இத்தாலி, பிரெஞ்சு, ஸ்பானிஷ், போர்த்துகீசிய, ஜெர்மானிய மொழிகளில் மொழிபெயர்த்துக் கொண்டு இருந்தனர்.

வைகோ உரையின் சுருக்கம்...

http://new.vikatan.com/news.php?nid=2205

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றுச்சான்றுதலுடன் எம்மினத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளியில்சொல்ல வை.கோ அவர்கள் மிகவும் பொருத்தமானவர்.

இது பேச்சு....

வரலாற்றுச்சான்றுதலுடன் எம்மினத்துக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை வெளியில்சொல்ல வை.கோ அவர்கள் மிகவும் பொருத்தமானவர்.
உண்மை வை கோ அவர்களின் ஐரோப்பிய வரவும் அவர் இம்மா நாட்டில் உரையாற்றும் விடயமும் மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாய் இருக்கின்றது
இது பேச்சு....
ஆனால் யார் பேசுகிறார்கள்......எங்கே பேசுகிறார்கள் எதைப்பற்றிப்பேசுகிறார்கள், என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.