Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்தில் தமிழர் பகுதிகளில் சிங்கள மேலாதிக்கத்தை அகற்ற வேண்டியது அவசியம்.

சிங்கள இராணுவ மேலதிக்கத்தை எப்படி தமிழர் பகுதிகளில் இருந்து அகற்றுவது..?! 33 members have voted

  1. 1. சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை அகற்ற என்ன வழி..?!

    • மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் மூலம்
    • இந்தியாவிடம் சரணடைவதன் மூலம்
    • சீனாவை முதன்மைப் படுத்திய சர்வதேச இராஜதந்திர நகர்வுகள் மூலம்
    • மேற்குலகிடம் இரஞ்சி கேட்டுக் கொண்டிருப்பதன் மூலம்
    • ஐநா போர்க்குற்ற அறிக்கையை மையமாக வைத்து சரியான பிரச்சாரங்கள் மூலம்
    • நாடு கடந்த தமிழீழ அரசு என்ற கொள்கை அரசியலை பலப்படுத்துவதன் மூலம்
    • ஈபிடிபி போன்ற ஒட்டுக்குழுக்களுக்கு உதவுவதன் மூலம்
    • தமிழர் கட்சிகள், ஐநா, சர்வதேசம், இந்தியா சீனா என்று எல்லோரோடும் உறவாடி வளர்க்கும் இராஜதந்திரம் மூலம்
    • சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை எனி ஒன்றுமே செய்ய முடியாது. சிங்களவன் சொற்படி நடப்பதன் மூலம்
    • தமிழகத்தில் இருந்து ஈழப்போராட்டத்தை தீவிரமாக்குவதன் மூலம்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

மூன்று தெரிவு செய்தேன்

இப்போது எம்முன் இருக்கும் வாய்ப்பு ஐநாவின் போர்க்குற்ற அறிக்கை அதை ஆதராமாக வைத்து செயல்பாடுகளை சரியான பாதையில் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம். அதே நேரம் நாடு கடந்த தமிழீழ அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு கொடுப்பதும் காலத்தின் தேவையும் கூட... இவை இரண்டிற்கும் வலுச் சேர்ப்பது தமிழகத்தில் இருந்து எமக்காக ஒலிக்கும் குரல்களும் செயல்ப்பாடுகளும் .

மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் என்றும் போட நினைத்தேன், ஆனால் மனட்சாட்சி உடன்படவில்லை.

ஈபிடிபி போன்ற ஒட்டுக்குழுக்களுக்கு உதவுவதன் மூலமும்,

ஈழத்தில் தமிழர் பகுதியிலுள்ள, சிங்கள மேலாதிக்கத்தை அகற்றமுடியும் என்று ஒருவர் வாக்களித்துள்ளதை..... நினைத்து,

தலையை எங்கு கொண்டு போய்... முட்டுவது என்று தெரியவில்லை. e136.gif

:lol::Dplus_green.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றுக்கு மேற்பட்ட தெரிவுகள் இருக்கின்றன.இருப்பினும்

நாங்கள் இப்பொழது இருக்கின்ற சூழ் நிலையில் போர்க்குற்றம் தொடர்பான அறிக்கையை ஒரு நூலேணியாகப் பிடித்து எமது போராட்டத்தை தொடர்வதே சாத்தியமான வழிமுறையாகும்.இதனுடன் தமிழகத்தின் எழுச்சி வலிமையுடன் மேலெழுமாயின் எமக்கான விடுதலை சாத்தியமே.அத்துடன் புலம் பெயர்ந்த தமிழர்கள் மனித உரிமைகளை மதிக்கும் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் நாடுகளில் பரந்து வாழ்வதால் அந்த நாட்டு அரசியல்வாதிகளுக்கு எமதுபிரச்சனைகளை விரிவாக விளக்குவதன் மூலம் அந்த அந்த நாட்டின் சிறிலங்கா தொடர்பான மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்ய வைக்கலாம்;.அதற்கான சூழல் முன்பை விட இப்பொழுது சதாகமாகவே இருக்கின்றது.காரணம் அந்த அந்த நாடுகளின்மொழிகளில் நம் இளையோர்கள் பாண்டித்தியம் பெற்று வருதலும் அந்த அந்த நாட்டின் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்துவதுமாகும்.ஆக எமது இளைய தலைமுறைக்கு எமது தாயகம் பற்றிய செய்தி சரியாகக் கொண்டு போகப்பட வேண்டும்.அவர்களுக்கும் தங்களுக்கு என்று ஒரு தாயகம் இருந்தும் அதை உரிமை கொண்டாட முடியாத வெறுமை இருக்கிறது.ஆக இளையோர்களின் கைகளில் போராட்டம் ஒப்படைக்கப்பட வேண்டும்.பெருசுகள் விட்டுக் கொடுத்து ஆலோசனைகளும் ஊக்கமும் வழங்க வேண்டும்.எமது மொழியை எமது வருங்கால சந்ததிக்கு தொடர்ச்சியாக பயிற்றுவிக்க வேணடும்..எமக்குள் உள்ள போலித்தனமான பதவி ஆசைகள் பொறாமைகள் அனைததையும் களைந்து ஒற்றுமையாக செயற்பட்டால் விடிவு சாத்தியமே. இந்தியாவை நம்பி எந்தப்பயனும் கிடைக்கப்போவதில்லை.தமிழகத்தை நம் போராட்டத்தின்பால் முழுமையாக உள்வாங்கினால் இந்தியா இறங்கி வரத்தான் வேண்டும்.அல்லது இந்தியா இந்தியாவாக இருக்காது.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நான் எந்த தெரிவிற்கும் வாக்களிக்கவில்லை .

காரணம் என்னுடைய ஒரே தெரிவு தமிழ் மக்களின் ஒன்றுபட்ட ஜனநாயக முறையிலான

எழுச்சிப் போராட்டம் தான் தமிழர்களுக்கு ஒரு தீர்வைப்பெற்றுத்தரும்.

ஈழத்தில் மக்கள் போராட்டம் வெடிக்காமல் ஈழம் மலரப்போவதில்லை.

இதற்கு உலகத்தமிழர்கள் அனைவரும் முதலில் அவர்களின் இலக்கை நோக்கி

ஒன்றாக அணி திரள வேண்டும்.

மக்கள் சக்தியே உலகில் பலம் மிக்க ஆயுதம்.

இது எப்போது எம்மிடையே உருவாகின்றதோ அப்போது தமிழீழம் தானாக மலரும்.

இந்தப் போராட்டத்தினை நிச்சயம் உலகம் ஆதரித்தே ஆகவேண்டும்.

அல்லது ஆதரிக்க வைக்க வேண்டும்.இதற்காக புலம்பெயர் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்

ஒற்றுமை ஒற்றுமை ஒற்றுமை இதுவே எனது ஆதங்கம்

வாத்தியார்

*********

உடுக்கை இழந்தவன் கைக்கு கிடைத்த மாதிரி தற்சமயம் கிடைத்துள்ள, ஐநா போர்க்குற்ற அறிக்கையையாவது பாவித்து ஒரு தீர்வுக்கு முனைய வேண்டும். அதனில் இருந்து அடுத்த கட்ட நகர்வை நோக்கி நகரலாம்.

சகல தரப்புகளையும் பாவித்து / பயன்படுத்திச் செல்லும் முற்றுமுழுதான இராஜதந்திர நடவடிக்கைகள் மூலமே ஏதும் சாத்தியமாகலாம்.

சுருங்கச் சொன்னால், வேறு ஒரு திரியில் சொன்ன மாதிரி 'தண்ணிக்கால நெருப்பைக் கொண்டு போக வேண்டும்' (இருக்கும் நிலையைப் பார்த்தால் தமிழன் எரிவாயுவின் ஊடாக நெருப்பை கடத்த வேண்டும் போல் உள்ளது.) . கிடைத்த சந்தர்ப்பங்கள் எல்லாம் தவறவிடப்பட்டுள்ளன.

ஈபிடிபி மற்றும் சிங்கள பேரினவாததத்தின் கீழ் இயங்கும் அமைப்புக்கள், சிங்கள பேரினவாதத்தின் நன்மை கருதியே செயல்பட முடியும்.

௦புலம் பெயர்ந்தவர்கள் ஆயுதம் ஏந்தி போராட புறப்பட்டாலே மீண்டும் ஆயுதப் போராட்டம் சாத்தியம். அது சாத்தியமாகப்படவில்லை. ஒரு பத்தாயிரம் போராளிகளை புலம்பெயர்ந்தவர்கள் 2007 , 2008 இற்கு முன் ஈழத்திற்கு அனுப்பியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

(புலம்பெயர்ந்தவர்களில் தான்தோன்றித்தனமாக ஊடகங்கள் - இணையங்கள் நடத்துபவர்கள், இராணுவ ஆய்வாளர்கள், கட்டுரையாளர்கள், கவிதை எழுதுபவர்கள் எல்லோரையும் சேர்த்தாலே இருபதநாயிரத்திற்கு மேல் சேரும்)

அல்லது

சிங்கள இராணுவ மேலாதிக்கத்தை எனி ஒன்றுமே செய்ய முடியாது

இத்தனை அழிவுகளுக்கும் பிறகும், இத்தனை உயிரிழப்புகளுக்கும் பிறகும் தாயகத்தில் போராட்டம் நடக்கும் போது சேர்ந்து போராடாமல் அல்லது எம் பிள்ளைகளைத் தானும் போருக்கு அனுப்பாமல் வெளிநாடு வந்த எம்மில் பலர் மீண்டும் ஆயுதப் போராட்டம் தான் நீண்டகாலத்தில் பயனளிக்கும் என்று சொல்வதை பார்க்க என்ன சொல்வதென்று தெரியவில்லை

புலிகள் விட்ட பிழைகளில் ஒன்று வெளிநாடுகளில் 'குடும்பத்திற்கு ஒருவர்' என ஆயுதப் போருக்கு ஆட்களைச் சேர்க்காதது. வெறும் சமயத்திற்காகவே வெள்ளை இனத்தவர்களும் அல்கைடாவில் சேர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு போராடச் சென்றார்கள். தமிழனுக்கு மாத்திரம் மற்றவன் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதல்லை எங்கடை சனத்துக்குள்ளை ஒற்றுமை வேணும்..அதை பாகுபாடில்லாமல் எல்லாரும் எல்லாரையும் ஒருங்கிணைக்கோணும்?

எந்த விசயத்திலையும் எந்த விதண்டாவாதத்திலையும் விட்டுக்கொடுத்து பழகோணும்.

அப்பத்தான் பலதையும் பத்தையும் மறந்து ஒருங்கிணையலாம்.

முன்னுக்கு நிக்கிறவை எல்லா புலம்பெயர்தமிழர்களையும் ஒண்டு சேர்ப்பினமாயிருந்தால்???????

ஒரு கேள்விக்கு அறுபத்தெட்டு பதில் தேவையில்லை <_<

முதல்லை எங்கடை சனத்துக்குள்ளை ஒற்றுமை வேணும்..அதை பாகுபாடில்லாமல் எல்லாரும் எல்லாரையும் ஒருங்கிணைக்கோணும்?

எந்த விசயத்திலையும் எந்த விதண்டாவாதத்திலையும் விட்டுக்கொடுத்து பழகோணும்.

அப்பத்தான் பலதையும் பத்தையும் மறந்து ஒருங்கிணையலாம்.

முன்னுக்கு நிக்கிறவை எல்லா புலம்பெயர்தமிழர்களையும் ஒண்டு சேர்ப்பினமாயிருந்தால்???????

ஒரு கேள்விக்கு அறுபத்தெட்டு பதில் தேவையில்லை <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகள் விட்ட பிழைகளில் ஒன்று வெளிநாடுகளில் 'குடும்பத்திற்கு ஒருவர்' என ஆயுதப் போருக்கு ஆட்களைச் சேர்க்காதது. வெறும் சமயத்திற்காகவே வெள்ளை இனத்தவர்களும் அல்கைடாவில் சேர்ந்து ஆப்கானிஸ்தானுக்கு போராடச் சென்றார்கள். தமிழனுக்கு மாத்திரம் மற்றவன் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டும்.

மன்னிக்கவும்.

இன்றைய சர்வதேச அரசியல் போக்குகளை ஒருகணம் சிந்தியுங்கள்?

ஒரு முயற்சி தோல்வியடைந்தால்...... அதற்கு வேறொரு வகையில் விடைகாண்பதுதான் புத்திசாலித்தனம்.

இதில் நான் எந்த தெரிவிற்கும் வாக்களிக்கவில்லை .

காரணம் என்னுடைய ஒரே தெரிவு தமிழ் மக்களின் ஒன்றுபட்ட ஜனநாயக முறையிலான

எழுச்சிப் போராட்டம் தான் தமிழர்களுக்கு ஒரு தீர்வைப்பெற்றுத்தரும்.

ஈழத்தில் மக்கள் போராட்டம் வெடிக்காமல் ஈழம் மலரப்போவதில்லை.

இதற்கு உலகத்தமிழர்கள் அனைவரும் முதலில் அவர்களின் இலக்கை நோக்கி

ஒன்றாக அணி திரள வேண்டும்.

மக்கள் சக்தியே உலகில் பலம் மிக்க ஆயுதம்.

இது எப்போது எம்மிடையே உருவாகின்றதோ அப்போது தமிழீழம் தானாக மலரும்.

இந்தப் போராட்டத்தினை நிச்சயம் உலகம் ஆதரித்தே ஆகவேண்டும்.

அல்லது ஆதரிக்க வைக்க வேண்டும்.இதற்காக புலம்பெயர் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்

ஒற்றுமை ஒற்றுமை ஒற்றுமை இதுவே எனது ஆதங்கம்

வாத்தியார்

*********

வாத்தியார் உங்களது முற்பகுதிவாதம் எனக்கு ஏற்புடையதுதான். ஆனால் பிற்பகுதி ஒற்றுமை ஒற்றுமை என்பது சற்று உதைக்கிறது. ஒற்றுமையின்னை என்பதை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு போராட முடியாதுதான். அதற்கும் முந்திய ஒரு பிரச்சனையென்று ஒன்றுள்ளது.

போராட்டம் என்ற ஒன்றிற்குத் தயாராய் இருப்பவர்கள் மிகக் குறைவானவர்கள்தான். தயாரில்லாத நிலையில் ஒற்றுமையால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. பெரும்பான்மையான தமிழர்கள் போராடுவதற்கும் எழுச்சி கொள்வதற்கும் தயாராகவிருப்பின் ஒற்றுமை என்பது தானே உருவாகிவிடும். ஒற்றுமை என்ற போர்வைக்குள் நிறையவே மறைக்கப்படும் விடயங்களில் தயாராதல் என்பது முக்கியமானது.

தமிழகத்தின் வலிமையும் ,எழுச்சியும் தான் எங்களை காப்பாற்றும். இந்தியனை உடைத்து வருவதென்றால் தமிழகம் எழ வேண்டும்.

நடந்த தேர்தல் ஒரு உதாரனம்.

தீர்வு அங்கு தான் உள்ளது. இத்தனை போராட்ட காலத்திலும் தமிழகத்தை புறக்கணிக்க வில்லை. ஆனால் சரியான முறையில் அரசியல் படுத்த விடாமல் திராவிடம் பேசி தடுத்து விட்டார்கள்.

புலம் பெயர் தமிழர் நாங்கள் ஒரு அமைப்பு ,தமிழ்கம் சேர்ந்து தான் இனி ஒரு விதி செய்வோம்.

தீர்வு இந்தியாவுக்குள் அதுவும் வடஇந்தியன் கையில் உள்ளது., அதை உடைக்க வேண்டிய பொறுப்பு தமிழக தமிழர் தான் செய்ய வேண்டும். ஈழத்திற்காக இல்லை. ஒரு தமிழ் இனம் என்பதற்காக.

இனம் ,இனம் சர்ந்து தான் செயற்படும் .இல்லையேல் எப்படி ஒரு இனம் என்று சொல்வது.

நிச்சயம் நடக்கும்.

இப்போ அவர்கள் எழுப்புகின்ற முள்ளிவாய்க்கால் நினவுத்தூபி எல்லாம் ஒரு எடுத்துகாட்டு. வரலாறு பதியப்படும்.

நிச்சயம் நாம் வெல்வோம்

புலிகள் இல்லாத வேளையிலும், சர்வதேச ஆதரவு என்பது இந்தியாவைத் தவிர்த்து எந்தப்பிரச்சனைக்கும் தீர்வைக் காண்பதற்கு முன்வராது. இந்தப்பிரச்சனையில் இந்தியாவை உள்ளிளுக்கக் கூடிய தமிழர் சக்தியாக இருக்கும் ஒரே காரணி தமிழகம் மட்டுமே. இங்கு பலர் ஐ நா அறிக்கைகளை முன் மொழிவதும், சர்வதேசத் தலையீட்டில் இந்தியாவை ஒதுக்குவதும் ஏற்புடையதாகாது.

ஒரு வேளை தமிழர்களுக்கெதிரான இராணுவ மேலாதிக்கத்தைக் குறைப்பதற்கோ அல்லது அகற்றுவதற்கோ இன்னொரு இராணுவ வலிமை பயன்படுத்தப்படுமாயின் அது இந்திய இராணுவமாகத்தானிருக்கும். சிங்கள இராணுவ மேலாதிக்கம் அகற்றப்படுமேயாலால் சிங்கள மேலாதிக்கம் ஓரளவிற்குப் பின்தள்ளப்படும். அதன் பிற்பாடுதான் சிங்கள மேலாதிக்கத்தின் திணிப்புகள் நீங்குவதற்கான வழிபிறக்கும்.

இலங்கைப் பாராளுமன்றம் மட்டுமே ஒரேயொரு ஆட்சியலகாக இருப்பதினால் தமிழர் பிரச்சனைகள் எதுவும் அங்கு எப்படிக் கூக்குரலிட்டாலும் எடுபடுவதில்லை. ஜனநாயகப் போர்வையை ஆட்சியாளர்கள் தம்மீது உடுத்திக் கொண்டு பெரும்பான்மை மக்களின் முடிவு என்ற சிங்கள மேலாதிக்கத்திற்குள் தமிழர்களின் குரல்களை மறைத்துவிடுகின்றனர். அதற்காக தமிழரின் பெரும்பான்மைக் குரல்கள் தமிழகத்தையும் இணைந்ததாகத்தான் இருக்க வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.