Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“நான் அந்தக் காணொளியை பரிசோதிக்கவில்லை ஆனால் அப்படியான கொலைகள் நடந்திருக்கக் கூடும்” - பேராசிரியர். றோகான் குணரத்ன

Featured Replies

Sunday Leader Interview in Tamil.

பேராசிரியர். றோகான் குணரத்ன சர்வதேச பயங்கரவாதம் பற்றிய விடயத்தில் ஒரு புகழ்பெற்ற நிபுணராக பெயர் பெற்றுள்ளார். அல் - கைதா மற்றும் எல்.ரீ.ரீ.ஈ என்பன பற்றி பல புத்தகங்களை எழுதியுள்ளதுடன், சிங்கப்பூரில் உள்ள நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் உள்ள அரசியல் வன்முறைகள் மற்றும் பயங்கரவாதம் பற்றிய ஆராய்ச்சிகளுக்கான சர்வதேச நிலையத்தின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இந்த வாரம் அவர் கொழும்பில் பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்திருந்த “பயங்கரவாதத்தை தோற்கடித்ததில் ஸ்ரீலங்காவின் அனுபவங்கள் என்கிற தொனிப் பொருளிலமைந்த கருத்தரங்கில் கலந்து கொண்டிருந்தார். மே 31 முதல் ஜூன் 2 வரை கொழும்பில் நடைபெற்ற அந்தக் கருத்தரங்கில் பேராசிரியர். றோகான் குணரத்ன ஒரு முக்கிய பேச்சாளராகப் பங்கு வகித்தார். சண்டே லீடருடனான இந்த நேர்காணலில்; குணரத்ன ஐநா மனித உரிமைகள் குழு மற்றும் எல்.ரீ.ரீ.ஈ க்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெறப் பயன்பட்ட இராணுவ வினைத்திறன் என்பன பற்றிக் கருத்து தெரிவித்திருந்தார்.

அதன் தொகுப்பு:

கேள்வி:- உங்கள் பார்வையில் சனல் - 4ன் காணொளி எவ்வளவு தூரம் உத்தரவாதப் படுத்தக்கூடியது என நீங்கள் நம்புகிறீர்கள? அந்தக் காணொளியைப் பற்றி முழு அளவிலான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச சமூகம் பிரேரித்துள்ளது. அவ்வாறான ஒரு விசாரணை தொடங்கப்பட வேண்டுமென்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்:- ஒவ்வொரு யுத்தத்தின் போதும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஒரு மில்லியன் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இவைகளுடன் ஒப்பிடும்போது ஸ்ரீலங்காவில் மரணமடைந்தவர்களின் தொகை மிகவும் குறைவு. கொள்கைப்படி ஸ்ரீலங்காவின் இராணுவத்தினர் அமெரிக்கா செய்ததைப் போலவே பொதுமக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் பொதுமக்களை இலக்கு வைக்காத போதும், மோதல்; வலயத்தில் பொதுமக்கள் இறந்துள்ளார்கள். அங்கு சிலபேர் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்திருக்கிறார்கள். நான் அந்தக் காணொளியைப் பரீட்சித்துப் பார்க்கவில்லை, ஆனால் அங்கு அப்படியான கொலைகள் இடம்பெற்றிருக்கலாம் .எங்கெல்லாம் அப்படியான கொலைகள் நடந்துள்ளதாயின் அரசாங்கம் அதை விசாரணை செய்ய வேண்டும்

ஏனெனில் ஒரு பொதுமகனையோ ஏன் ஒரு போராளியைக்கூட கொல்வது தவறு. ஆனால் அங்கு விகிதாசாரமான ஒரு மனநிலை இருக்கவேண்டும். ஒரு நாட்டை அல்லது இயக்கத்தை நோக்கி விரல் சுண்டுவதாக நான் நினைக்கவில்லை. எந்த நாடும் அப்படியான விடயங்களை கட்டாயம் விசாரிக்க வேண்டும்.

கேள்வி:- அந்தக் காணொளியில் உள்ள காட்சிகள் புனையப்பட்டவை என அரசாங்கம் வலியுறுத்துகிறதே. நீங்கள் அதை நம்புகிறீர்களா?

பதில்:- எனக்குத் தெரியாது நான் அவைகளைப் பற்றிப் படிக்கவில்லை. ஆனால் அந்தக் காணொளியினைப்பற்றி நல்ல தொழில்நுட்ப பகுப்பாய்வை மேற்கொள்ளக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அதைப்பற்றிய விசாரணைகள் தொடர்கின்றன.

கேள்வி:- இறுதிக்கட்ட யுத்தத்தின்போது ஸ்ரீலங்காவால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும்படி ஐநாவால் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பப்பட்டு வருகிறதே. சனல் - 4 ன் காணொளிகள் யுத்தக் குற்ற விசாரணைகளின் வேண்டுகோள்களுக்கு ஒரு முக்கிய பங்களிப்பினை வழங்கியுள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் என்ற வகையில் அரசாங்கத்துக்கு என்ன ஆலோசனைகளை நீங்கள் வழங்கவீர்கள் அல்லது இந்தக் கட்டத்தில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.

பதில்:- இந்த விடயத்தை கையாள்வதில் பிரதான முகவர்களாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர்(எல்.எல்.ஆர்.சி) இருப்பதாக ஐநா ஏற்கனவே அங்கீகரித்துள்ளது. றொபேட் பிளேக் ஸ்ரீலங்காவிற்கு வருகை தந்தபோது எல்.எல்.ஆர்.சி யின் விளைவு உள்நாட்டுப் பொறிமுறை என்றும் அதுதான் முன்னுரிமை பெறுகிறது என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதில் ஒரு சர்வதேச நடிகர் பங்கேற்பதற்கான தேவையின் காரணம் என்ன என்பதுதான் எனக்கு விளங்கவில்லை. எல்.எல்.ஆர்.சி தனது பணியினை திறம்பட மேற்கொள்ள வேண்டும். அது தோல்வியுற்றால்தான் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களுக்கு சர்வதேச சமூகம் ஒரு விசாரணையை நடத்தவேண்டும் என்று சொல்வதற்கான ஒரு வாய்ப்பு உருவாகும்.

எனது கருத்துப்படி எல்.எல்.ஆர்.சி மிகத் திறமையான முன்னேற்றத்தை எட்டியுள்ளது. நான் தனிப்பட்ட முறையில் எண்ணுவது ஸ்ரீலங்கா அரசாங்கம் தணடிக்கப் பட்டவர்களுடன் தொடர்பு கொள்ளவேண்டும் என்று. அவர்களுக்கான கேள்விகளுக்கு அவர்கள் பதில் பெறவேண்டும். அரசாங்கம் கட்டாயம் பதிலளிக்க வேண்டும். வெறுமே அறிக்கைக்கு நடவடிக்கை எடுத்தால் போதாது. உண்மையில் எல்லா முறைப்பாடுகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் கட்டாயம் பின்விளைவாக ஒரு பதில் கிட்ட வேண்டும்; - அந்தக் குற்றச்சாட்டுகள் கண்டுபிடிக்கப்பட முடியாதவையாக இருந்தாலும்கூட.

கேள்வி:-2009ல் ஒரு நேர்காணலில் நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள், கேபி எனப்படும் குமரன் பத்மநாதனை எல்.ரீ.ரீ.ஈக்கு அவர் ஆதரவு வழங்கியதற்காக ஸ்ரீலங்கா அரசாங்கம் அவரைக் கைது செய்யவேண்டும் என்று.அந்த விடயத்தில் இப்போது உங்கள் நிலை என்ன?

பதில்:- எந்தப் பயங்கரவாதியும் தனது தவறுக்கு வருத்தத்தை தெரிவித்தால் அவரைத் தண்டிக்கக் கூடாது. அவருக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு இரண்டாவது ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். கேபி எல்.ரீ.ரீ.ஈக்கு ஆயிரக்கணக்கான தொன்களில் ஆயுதங்களை அனுப்பியிருந்தார். ஆனால் அவர் அவற்றை எல்லாம் விட்டுவிட்டார். எனவே அவரைத் தண்டிப்பது நியாயமாகாது. எந்த நாடும் இந்த வழிகாட்டலையே பின்பற்றும். ஆட்களை சிறையில் அடைப்பதால் அது அவர்களின் எண்ணங்களை மாற்றிவிடாது. சிங்களக் கடும் போக்காளர்களுக்கு இதில் சற்று மனக்குறை இருப்பதை நான் அறிவேன். ஆனால் தேசிய நலன்களுக்காக நாம் சிலவற்றை தியாகம் செய்துதானாக வேண்டும். உருத்திரகுமானைக் கூட கட்டாயம் யாழ்ப்பாணத்துக்கு வரும்படி அழைத்து அரசியல் பிரதான நீரோட்டத்திற்கு அவரை வரவேற்க வேண்டும். அவர்கள் உண்மையான பிரஜைகளாக இருக்குமிடத்து குடிமக்களின் நன்மைக்கு வேண்டி அவர்கள் நிச்சயம் தேசிய அபிவிருத்தியில் பங்கேற்பார்கள்.

கேள்வி:- இந்தக் கருத்தரங்கில் நீங்கள் முக்கியமான கருத்தை ஒலிக்கும் ஒரு பேச்சாளராக இருந்தீர்கள் அல்லவா. எல்.ரீ.ரீ.ஈக்கு எதிரான யுத்தத்தில் வெற்றிபெற இராணுவத்தினர் கையாண்ட தந்திரங்களில் எவைகளை நீங்கள் உதாரணமாகப் புகழ்ந்தீர்கள்?

பதில்:- முந்தைய சமயங்களைப் போலல்லாமல் ஸ்ரீலங்காவின் இராணுவம் தொகையில் அதிகரிக்கப் பட்டிருந்தது. 2006 முதல் 2009 வரை எண்ணிக்கையின் பலம் இரட்டிப்பாகியிருந்தது. 2006 ஆரம்பத்தில் இராணுவத்தில் 100,000 சற்று அதிகமானவர்களே இருந்தார்கள். மே 2009க்குள் அது 200,000 ஆக அதிகரித்திருந்தது. இது பலவகையான படையணிகளில் அடங்கியிருந்தது.

இரண்டாவதாக இராணுவ கட்டளைத் தளபதிகள் அதிக அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தார்கள். தங்கள் தொழில்நுட்பத்தையும் தந்திரத்தையும் பயன்படுத்தி தளபதிகள் தங்கள் திறமைகளை நிரூபித்தார்கள். அவர்கள் அமெரிக்கா, இந்தியா பாகிஸ்தான் போன்ற பாதுகாப்பு பயிற்சிக் கல்லூரிகளுக்கு சென்று பயிற்சி பெற்று வந்தார்கள். எனவே தளபதிகளின் தரம் நல்ல நிலையிலிருந்தது.

மூன்றாவதாக எல்.ரீ.ரீ.ஈ போராடத் தவறியிருந்தது. அவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் பலவந்தமாக ஆட்சேர்க்கப் பட்டவர்கள். இவர்கள் தங்கள் முழு மனதுடன் போராடவில்லை. சமாதான ஒப்பந்த காலம்கூட பிரபாகரனுக்கு தனது கனவை தொடர்ந்து முன்னகர்த்துவதைக் கடினமாக்கியது. போராளிகள் திருமணம் செய்தார்கள் மற்றும் காதல் வயப்பட்டார்கள். அவர்கள் தளபாடங்களையும் திரைச்சீலைகளையும் வாங்குவதற்காக கொழும்புக்கு வந்தார்கள். அவர்கள் வாழ்க்கை முறை மாற்றம் பெற்றது. எல்.ரீ.ரீ.ஈ நலிந்து பலமற்ற இயக்கமாகியது.ப hங்கொக்குக்கும் இங்கிலாந்துக்கும் போய்வந்த கருணா அம்மான் கூட “நான் ஏன் காட்டுக்குள் இருக்க வேண்டும்?” எனக் கேட்கத் தொடங்கினார்.அதனால்தான் அவர்கள் போராடி மரிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.அவர்கள் வாழ விரும்பினார்கள். அதனால்தான் 11,500க்கும் மேற்பட்டவர்கள் சரணடைந்து மறுவாழ்வு முகாம்களுக்கு அனுப்பப் பட்டார்கள்.

இராணுவத்தினர் பயன்படுத்திய தந்திரோபாயங்களும் மாறியிருந்தன. முன்னர் அவர்கள் பெருந்தொகையினராக சென்று போரிட்டார்கள். இந்தமுறை அவர்கள் சிறு குழுக்களாகப் பயன்படுத்தப் பட்டார்கள். சிறிய கெரில்லா படைப் பிரிவைப்போல். கமாண்டோக்களிலும் மற்றும் விசேட படைப்பிரிவில் உள்ள திறமையான முழு இராணுவமும் நீண்ட தொலைவில் மீளிணையக் கூடிய வகையில் ஆழமாகக் காட்டுக்குள் சென்று பின்னாலிருந்து எல்.ரீ.ரீ.ஈ யைத் தாக்கியது, அவர்களை அதிகமாக நிலைகுலையவைத்தது.அவாகளின் கணிப்பியல் தன்மையான வலையமைப்பு எங்கள் படைகள் அவர்களின் கப்பல்களைத் தாக்கியதால் சீர்குலைந்தது.

கேள்வி:- “பயங்கரவாதத்தை தோற்கடித்ததில் ஸ்ரீலங்காவின் அனுபவங்கள்” எனும் கருத்தரங்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?

பதில்:- இராணுவம் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதைப் பற்றிய தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டது. அப்படிப் பகிhந்த கொண்டதில் முக்கியமான விடயம் போரின் இறுதிக்கட்டம் முடிவுற்றபோது பொதுமக்களைக் காப்பாற்றுவதில் இராணுவம் எவ்வளவு கவனமெடுத்துக் கொண்டது என்பதுதான்.

இராணுவ வைத்தியசாலையில் கடமையாற்றும் கட்டளைத் தர அதிகாரி ஒருவர் எவ்வாறு இராணுவ வைத்தியர்கள் மற்றும் தாதியர் ஓரே மாதிரியான வைத்திய சேவையை இராணுவத்தினருக்கும், பொதுமக்களுக்கும்,மற்றும் எல்.ரீ.ரீ.ஈ போராளிகளுக்கும் எவ்வாறு சமமாக வழங்கினார்கள் என்பதை வரைபடம் மூலமாக விளக்கினார்.

மறுவாழ்வு ஆணையாளர் நாயகம் எவ்வாறு விடுதலையான 11,000 சிறார்கள் தங்கள் கல்வியை தொடர்ந்து நிறைவு செய்து சிலர் பல்கலைக் கழகங்களுக்கும் மேலும் சிலர் மருத்துவக் கல்லூரிகளுக்கும் தெரிவானார்கள் என்பதை எடுத்து விளக்கினார். பெணகளும் வயதான போராளிகளும் விடுவிக்கப் பட்டுள்ளனர்,மறுவாழ்வுத் திட்டம் தொடர்கிறது. வழமையான தண்டனை வழங்கும் முறையை அணுகாமல் இந்தப் போராளிகளை நல்வழிப் படுத்தி அவர்களுக்கு இரண்டாவது ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் இராணுவத்தின் மனிதாபிமான முயற்சி வெளிநாட்டுப் பங்களிப்பாளர்களுக்கு எடுத்துக் காட்டப்பட்டது.

கேள்வி:- எல்.ரீ.ரீ.ஈ யைப் போன்ற ஒரு பயங்கரவாத அமைப்பு மீண்டும் எழுச்சி பெறும் அல்லது பெறக்கூடும் என நீங்கள் எண்ணுகிறீதுகளா?

பதில்:- அந்த இருண்ட காலத்துக்குள் நாங்கள் திரும்பவும் போவோம் என நான் நம்பவில்லை. நான் போராளிகளுடன் பேசியபோது அவர்கள் தெரிவித்தார்கள். எல்லா தாங்கிகள் மற்றும் ஏவுகணைகளைக் கொண்டும் பிரபாகரனால் தான் விரும்பியதை அடைய முடியாமற் போய்விட்டது என்று. எனவே எல்.ரீ.ரீ.ஈக்கு உள்ளேகூட போராளிகள் சமாதானப் பாதையை முன்னெடுப்பதையே தொடர விரும்புகிறார்கள்.

கேள்வி:- சில பாராளுமன்ற அங்கத்தவர்கள் உட்பட்ட அநேக தமிழர்கள் தங்களுக்கு இன்னமும் சம உரிமை என்கிற பதத்தில் கூறப்படுவது வழங்கப்படவில்லை எனக்கூறுகிறார்கள். இதை நீங்கள் எற்றுக் கொள்கிறீர்களா? இது மீண்டும் நடைபெறாதவாறு உத்தரவாதம் வழங்கப் படுவதற்கு செய்ய வேண்டியது என்ன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்:- நான் நினைக்கிறேன் வடக்கில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்று. ஒரு சில அரசியல்வாதிகள் வடக்கு மற்றம் கிழக்கு அபிவிருத்திகளில் பங்கெடுப்பதில்லை என நான் நினைக்கிறேன். அவர்கள் மக்களின் உரிமைகளில் அக்கறைப் படுவார்களானால் அவர்கள் நிச்சயம் வைத்தியசாலைகளையும் பாடசாலைகளையும் புனரமைப்புச் செய்யவேண்டும் அல்லது வடக்கிற்குப் போய் அங்கு என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் அதைவிடுத்து வெறும் பிரச்சாரங்களை நம்பி ஒரு முடிவுக்கு வரக்கூடாது. அரசியல் முன்னிலைப் படுத்தப்பட்ட விடயங்களை விட்டு சிங்களவர்களும் தமிழர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். அரசியற் தலைவர்கள் சிங்கள அல்லது தமிழ் தேசியம் என்பதை விடுத்து ஸ்ரீலங்காவின் அடையாளத்தையும் மற்றும் தேசியத்தையும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். அதற்காக மூன்று சவால்களைச் சந்திக்கவேண்டியுள்ளது.

முதலாவது ஜனாதிபதி தமிழ் அரசியல் தலைமைத்துவத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம். தமிழ் தலைமைத்துவம் வெட்டி முண்டமாக்கப்பட்டு இன்னலுக்கு ஆளாகியுள்ளது. மேற்குடனான ஸ்ரீலங்காவின் உறவுகளும் இன்னலுக்கு உட்பட்டுள்ளது. மிகவும் முக்கியமாக ஸ்ரீலங்கா, இந்தியாவுடனான தனது உறவினை நன்கு பராமரிக்க வேண்டும். சீனாவுடனான எங்கள் உறவும் முக்கியம்தான் ஆனால் இந்தியா மிக மிக முக்கியமானது. எனவே நாங்கள் தொழிற் திறமை மிக்க வெளிநாட்டுச் சேவையை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகிறது. வெளி விவகார அமைச்சு அடித்தள யதார்த்தத்தை உணர்த்துவதில் மிக மோசமாகத் தவறியுள்ளது. எங்களுக்கு இப்போது அவசியமானது அரசியல் நண்பர்கள், குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களை தூதரகங்களுக்கு அனுப்பாத தொழிற் திறமை மிக்க வெளிநாட்டுச் சேவையே.

அத்தோடு; நாங்கள் அடித்தள யதார்த்தத்தை மக்களுக்கு கற்பிக்க வேண்டியதும் அவசியம். தமிழ்நெற் போன்ற சாதாரண பத்திரிகைகள் கூட சிறுபகுதி அரச சார்பற்ற நிறுவனங்களை அங்கு அதிகளவு மரணங்கள் இடம் பெற்றதாக ஏற்றுக் கொள்ள வைத்திருக்கின்றன. ஆனால் அப்படி ஒருபோதும் நடைபெறவில்லை.

கேள்வி:-இந்த யுத்தத்தின் பின்னான காலகட்டத்தில் படைகள் வகிக்க வேண்டிய பாத்திரம் என்னவென்று நீங்கள் எண்ணுகிறீர்கள்? படைச் சேவைக்கு இன்னும் அதிகளவு ஆட்சேர்ப்பு அவசியமா?

பதில்:- இராணுவமானது யுத்தப் போராட்டத்திலிருந்து தேசத்தின் சமாதானத்தை கட்டியெழுப்பும் பாதுகாவலனாக மாறியுள்ளது. எங்களுக்கு அதிகளவான காவல்துறையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தேவையாக உள்ளனர். இதற்காக பெரும்பாலான ஆட்சேர்ப்பாளர்கள் தமிழர்களும் முஸ்லிம்களுமாக இருக்க வேண்டியது அவசியம். சிறுபான்மையினர் படையில் கட்டாயமாகப் பிரதிநிதித்துவம் வகிக்க வேண்டும். விசேடமாக வடக்கு கிழக்கு பகுதிகளில். இராணுவம் (விசேட படைகள் மற்றம் அதிரடிப் படைகள்) நாட்டை கட்டியெழுப்புவதற்கு முன்னிலை வகிக்க வேண்டும். அவர்கள் ஏற்கனவே மறுவாழ்வு, மீள்குடியேற்றம், மீள் ஒருங்கிணைவு மற்றும் மீள்கட்டமைப்பு என்பனவற்றில் சுமார் 8 மில்லியன் ரூபாக்களை செலவிட்டுள்ளார்கள். எந்த வரவு செலவுத் திட்டத்திலும் இது மிக முக்கிய விகதமாகும்.

எனக்கு சொல்லப்பட்டது இராணுவ வரவு செலவுத் திட்ட மொத்த தொகை 120 பில்லியன் ரூபா எனவும் அதில் 90 மில்லியன்வih அவர்களின் சம்பளத்துக்கு தேவைப் படுகிறது என்று.

எனவே முக்கியமானது இராணுவத்தை 50விகிதமாக குறைக்க வேண்டும். இவர்கள் குறிப்பிடத்தக்க சேவையை ஆற்றியுள்ளார்கள் - மக்களை ஏற்றிச் செல்வது, அவர்களுக்க உணவளிப்பது மற்றும் இல்லிடமமைப்பது போன்றவை.

எனவே இந்த மனிதாபிமான யுத்தத்துக்கு பின்னான கட்டம் மிகத் திறமையான ஒரு உருமாற்றம் என நான் நினைக்கிறேன். உலகிலுள்ள மற்றைய நாடுகள் இதை ஒரு முன்மாதிரியாகப் பயன்படுத்தலாம்.சில வீரர்களை பொதுசனத் தொடர்பில் பயிற்றுவிப்பது நலம் பயக்கும் என நான் எண்ணுகிறேன்.நாங்கள் போரில் வெற்றியடைந்ததையிட்டு கோபமுற்றிருப்பவர்களால் ஸ்ரீலங்காவின் மதிப்பு பாதிக்கப் பட்டிருக்கிறது. அதனால் நாங்கள் பொதுசனத் தொடர்புப் பகுதியில் கனிட்ட அதிகாரிகளாகக்கூட சில வீரர்களை பயிற்றுவிக்கலாம்.

From www.Sundayleader.lk

www.thenee.com தமிழில் எஸ்:குமார்

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், ......, ……

  • தொடங்கியவர்

பௌத்த சிங்களவர், அவன் வால்கள் = பொய்யர், காட்டுமிராண்டிகள், தமிழன் உழைத்துச் சேர்த்த சொத்துக்களை – நிலங்களை - ... - .... பறித்து / அழித்து வாழும் கேவலமானவர்கள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், பயங்கரவாதிகள், போர்க் குற்றவாளிகள், ஏமாற்றிகள், ………….., சிங்களவர் வந்தேறு குடிகள், போலி வரலாறுகளை தயாரித்து மகா பொய்வம்சத்தை உருவாக்கி வருபவர்கள், ......, ……

அவன்றை ஆக்களே சொல்லுறான்கள் சனல் 4 கொலைகள் உண்மையாக இருக்கலாம் என்று அதற்க ஏன் சார் இப்படி அழுது புரளுறீங்கள்?

அவன்றை ஆக்களே சொல்லுறான்கள் சனல் 4 கொலைகள் உண்மையாக இருக்கலாம் என்று அதற்க ஏன் சார் இப்படி அழுது புரளுறீங்கள்?

மொட்டையாகப் படித்துவிட்டு உளறுதல் கூடாது.

சிங்கப்பூரில் ஊடுருவியிருக்கும் இந்த மிக மோசமான சிங்கள பயங்கரவாதியை, அவனது உள்நோக்கங்களை உணராமல், புரியாமல் உளறக் கூடாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காணொளி உண்மையா இல்லையா என்று பார்க்க ஜநா வை ஒருக்கா விசாரிக்க விட்டால் அனைத்து உண்மைகளும் வெளிவரும்.

  • தொடங்கியவர்

மொட்டையாகப் படித்துவிட்டு உளறுதல் கூடாது.

சிங்கப்பூரில் ஊடுருவியிருக்கும் இந்த மிக மோசமான சிங்கள பயங்கரவாதியை, அவனது உள்நோக்கங்களை உணராமல், புரியாமல் உளறக் கூடாது.

அவன் சிங்கப்பூரிலை ஊடுருவி என்ன புடங்கிறது? நாங்கள் இப்பிடி அவங்கடை பக்கத்திலை எங்களுக்க கொஞ்சம் அதரவா வாறதை சமயோசிதமாக பாவிக்க மறுப்பதால்தான் இன்டைக்கு இப்படி நிக்கறம் சார்! முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்...

ஈழத்தமிழ் அரசியற் போராட்டத்தில் உபாயமும் அதிகாரமும்

பொங்குதமிழ் :

..............

சிங்களத் தரப்பில் உபாயங்களே பிரதான அரசியல் வழிமுறையாக கையாளப்படுகின்றன. உள்நாட்டு நெருக்கடிகளாலும் வெளி அழுத்தங்களாலும் இலங்கை அரசு பல சந்தர்ப்பங்களில் சிக்கித் திணறியிருக்கிறது. ஆனால்இ அதையெல்லாம் சிங்களத்தரப்பின் உபாயங்களே முறியடித்திருக்கின்றன. குறிப்பாக 1987 இல் இந்திய நெருக்கடி இலங்கையைப் பெரும் சிக்கலுக்குரியதாக்கியது. ஆனால் பின்னர் புலிகளை முறியடிக்கும் பெரும் போருக்கு இந்தியா இலங்கைக்கு உதவியது. அந்த அளவுக்கு இலங்கையின் – உபாயம் – இராசதந்திரம் பெறுமதிமிக்கது.

இதைப்போல புலிகளுக்கு எதிரான தடைக்காகவும் போருக்காகவும் உலகத்தின் பெரும்பாலான சக்திமிக்க நாடுகளை எல்லாம் இலங்கை வென்றெடுத்திருந்தது. இதைஇ இந்த வென்றெடுப்பை அது பரகசியமாகச் செய்யவில்லை. காதும் காதும் வைத்ததைத் போல மிக இரகசியமாகச் செய்து தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொண்டது.

இலங்கை மட்டுமல்ல அனைத்து நாடுகளும் உபாயங்களையே தமது அரசியல் வழிமுறையில் கையாள்கின்றன. இல்லையெனில் உலகத்தில் பெரிய நாடுகளே எப்போதும் ஆதிக்கத்துடன் இருக்க முடியும். சிறிய நாடுகளின் கதை அதோகதியாவே மாறியிருக்க வேணும். ஆனால் சிறிய நாடுகளே உலகத்தில் அதிகமாக இருக்கின்றன. இந்தச் சிறிய நாடுகள் பெரிய நாடுகளுக்குச் சமதையாகவும் பெரிய நாடுகளிடமிருந்து பாதுகாப்பாகவும் இருக்கின்றன என்றால் அது எப்படிச் சாத்தியமாகிறது? இந்தச் சமநிலையைக் கொடுப்பது உபாயங்களே!

இதைப்போல பெரும்பான்மைச் சமூகங்களிடமிருந்து சிறுபான்மைச் சமூகங்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கின்றன என்பதையும் நாம் பார்க்க வேண்டும். பெரிய பாறாங்கல்லை சிறு நெம்புகோலைக் கொண்டு அசைத்து விடுகிறோம். இது எப்படி நடக்கிறது? இங்கே பயன்படுத்தப்படும் நெம்பு கோல் என்பது ஒரு உபாயமே. பல சந்தர்ப்பங்களிலும் நாம் கோலியாத்தின் கதையைச் சொல்லிக் கொள்கிறோம். ஆனால் ஒரு சிறுவன் எப்படி பென்னாம் பெரிய வீரனை – தாவீதை – வென்றான். அவன் கைக்கொண்ட உபாயமே அவனுக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது.

ஆகவே உபாயங்களில்லாத எந்த விசயமும் வெற்றிகரமாக அமைவதில்லை. உபாயங்களைக் கைக்கொண்டால் வெற்றியும் இலகுவாகக் கிடைத்துவிடும். சிரமங்களும் அதிகமாக இருக்கப் போவதில்லை. தமிழர்கள் தங்கள் பாரம்பரிய அரசியல் வழிமுறையைக் கைவிட்டுப் புதிய உபாயங்கள் நிறைந்த அரசியல் வழிமுறைக்குச் செல்ல வேண்டும். இந்த உலகத்தில் வாய்ப்புகள் தாராளமாகக் கிடக்கின்றன. அந்த வாய்ப்புகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அவற்றைப் பயன்படுத்துவதிலுமே எங்களின் பெறுமதியும் எங்களுக்கான எதிர்காலமும் தங்கியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பதில்:- எனக்குத் தெரியாது நான் அவைகளைப் பற்றிப் படிக்கவில்லை. ஆனால் அந்தக் காணொளியினைப்பற்றி நல்ல தொழில்நுட்ப பகுப்பாய்வை மேற்கொள்ளக் கூடியவர்கள் இருக்கிறார்கள். அதைப்பற்றிய விசாரணைகள் தொடர்கின்றன.

உங்களின் பார்வையில் அந்த இராணுவ பகுப்பாளர்கள் யார்? ஏன் பகுப்பாய்வு செய்வதற்கு (சனல் 4 காணொளியை ) இவ்வளவு தாமதம்? அல்லது ஒரு நளுவல் போக்கை கடைப்பிடிக்கிறீர்களா??

  • தொடங்கியவர்

உங்களின் பார்வையில் அந்த இராணுவ பகுப்பாளர்கள் யார்? ஏன் பகுப்பாய்வு செய்வதற்கு (சனல் 4 காணொளியை ) இவ்வளவு தாமதம்? அல்லது ஒரு நளுவல் போக்கை கடைப்பிடிக்கிறீர்களா??

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்....

எந்த அம்மி என்பதுதான் இதில் உள்ள சூட்சுமம். :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் காணொளியையே இவர் பார்க்கவில்லையாம்.. இவர் எப்படி ஒரு நிபுணர் என்று கதை சொல்லிக்கொண்டு திரியிறார்? :unsure:

அப்படியானால் தமிழர் போராட்டம் மீது சேறடித்த இவரது முந்தைய செயற்பாடுகளில் எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கும்? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியத்துவம் வாய்ந்த அந்தக் காணொளியையே இவர் பார்க்கவில்லையாம்.. இவர் எப்படி ஒரு நிபுணர் என்று கதை சொல்லிக்கொண்டு திரியிறார்? :unsure:

அப்படியானால் தமிழர் போராட்டம் மீது சேறடித்த இவரது முந்தைய செயற்பாடுகளில் எவ்வளவு உண்மைத்தன்மை இருக்கும்? :wub:

இவரது நிபுணத்துவக் கலாநிதிப் பட்டம் குறித்துக் கடந்த காலங்களில் பல கேள்விகன் எழுப்பப் பட்டன!

இவர் சில நாடுகளின் தனிப் பட்ட தேவைகளுக்காக, நிபுணராக்கப் பட்டார்!

உதாரணத்திற்கு அல்-கைதா அமைப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் தேவைப் பட்டது!

ஒருவரும் இருக்கவில்லை! அதனால் இவர் தனக்குத் தானே நிபுணராகப் பட்டம் சூடிக் கொண்டார்!

இவரது நிபுணத்துவக் கலாநிதிப் பட்டம் குறித்துக் கடந்த காலங்களில் பல கேள்விகன் எழுப்பப் பட்டன!

இவர் சில நாடுகளின் தனிப் பட்ட தேவைகளுக்காக, நிபுணராக்கப் பட்டார்!

உதாரணத்திற்கு அல்-கைதா அமைப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒருவர் தேவைப் பட்டது!

ஒருவரும் இருக்கவில்லை! அதனால் இவர் தனக்குத் தானே நிபுணராகப் பட்டம் சூடிக் கொண்டார்!

ஆகவே இவர் ஓர் பேராசிரியர் இல்லை....ஒரு போராசிரியர் என்று சொல்லுங்கோ...

ஆகவே இவர் ஓர் பேராசிரியர் இல்லை....ஒரு போராசிரியர் என்று சொல்லுங்கோ...

சரியாகச்சொன்னீர்கள். படிப்பு, பட்டம் இவற்றை தனது இனவாத, தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு கவசமாக பாவித்தவர். நாட்டிலும் புலத்திலும் தமிழர்கள் ஒற்றுமையை, இன விடுதலை உணர்வை சிதைக்க பாடுபடும் ஒரு போராசிரியர்.

இவர் முகம் சில இடங்களில் கிழிந்து விட்டது, முழுக்க இவர்மீது உலகம் நம்பிக்கை இழந்துவிடும் காலம் வெகுதொலைவில் இல்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் சிங்களவராக இருந்தும் மிக முக்கியத்துவம் வாய்ந்த கருதுதிகளை சொல்கிறார். குறுப்பு எடுத்துகொள்ளுங்கள். அருமையாக விளக்குகிறார். Since the Sri Lanka's State was founded, the Tamil people's fight for their rights has been incessant. Jude Lal Fernando, althought he's sinhalese (the biggest etnia in the island and the only one who has been always in power), he defends the Tamil people's rights. He has been forced to leave Sri Lanka and move to Ireland because of his political activism. Nowadays he's a professor in the University of Dublin.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.