Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணைக் கட்டி கோபம்

Featured Replies

கண்ணைக் கட்டி கோபம்

"கோபம் கோபம்

கண்ணைக் கட்டி கோபம்

பாம்பு வந்து கொத்தும்

கண்ணாடி வந்து வெட்டும்"

இந்த கோசத்தை சிறுவயதில் நாம் எல்லோரும் நாளுக்கு ஒரு தடவை என்றாலும் உச்சரிப்போம். பாடசாலையில் கோபம் போடுவதும் பின்னார் நேசம் என்று கையை நீட்டுவதும் சர்வசாதரணம். "அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா" என்பதைப் போல் பாடசாலை நாளில் இது எல்லாம் சகஜம் எமக்கு.

தற்சமயம் ஒருவருடன் கோபம் போட்டுவிட்டால் ஒரு குழுவே கோபமாய் தான் இருக்கும். முக்;கியமானது ஏ வகுப்பில் நாம் இருந்தால் பி வகுப்பினாருடன் ஒரு சண்டை. யார் கூட மார்க்ஸ் எடுப்பது யார் பேச்சுப்போட்டியில் பரிசு பெறுவது என்று. அதற்கு சில ஆசிரியார்களும் உடந்தையாக இருந்தது இப்போது நினைக்கும்போது சிரிப்பாக இருக்கும்.

நான் படித்த பாடசாலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூசை நடக்கும். சுமார் ஒரு மணித்தியாலத்திற்கு அந்த பூசை தொடரும். ஓவ்வொரு கிழமையும் ஒவ்வொரு வகுப்பினர் பூசையைப் பொறுப்பு எடுத்துச் செய்வார்கள். எங்கள் முறைவரும்போது மற்ற வகுப்பை விட நிறையப் பூக்கள் மாலைகள் என்று கொண்டு போவதில் இருந்து பிரசாத விடயங்கள் வரை போட்டி தான். பூசையின் போது பெரிய அக்காமார் சிவபுராணம் சொல்லி தர நாம் சொல்ல வேண்டும். நமது பூசை என்றால் சத்தமாக சொல்லுவோம். மற்ற வகுப்பு என்றால் வேணும் என்று சொல்லி வைத்து முணு முணுப்போம். இந்த காரணத்துக்காகவே பல தடவை அதிபரின் அறையில் கால் கடுக்க நின்ற ஞாபகம்.

கோபம் போட்டு சில நண்பிகளுடன் ஒரு வருடம் என்று கூட கதைக்காமல் இருந்தி;ருக்கிறோம். கோபம் என்றால் றோட்டில் போகும் போது பட்டம் சொல்வது சைக்கிளால் இடிப்பது என்று எவ்வளவோ கிறுக்குத்தனம் எல்லாம் செய்திருக்கின்றோம். அதை கோபக்காரர்கள் அவர்கள் வீட்டிற்கு போய் சொல்ல நமது வீட்டிற்கு வந்துவிடுவார்கள் ஒப்பிணை சாட்சிக்கு. இதில் பங்கு ஏற்று வருபவர்கள் கட்டாயம் அம்மாம்மா அப்பம்மாமார்கள் தான் இருக்கும். எங்கள் வீட்டில் ஒரு கெட்ட பழக்கம். ஒப்பிணை சாட்சிக்கு வருபவர்களிடம் நம்ம பிள்ளை அப்படி செய்ய மாட்டாள் என்று சொல்லவே மாட்டினம். இப்படி நடந்ததா என்று கூடக் கேட்கமாட்டார்கள். முற்றத்தில் உள்ள கிழுவை மரக் கம்பு முறிபடும். அதுவும் கோபக்காரி முன்னால் தான் பூசை நடக்கும். அதை விட கெட்ட விடயம் எதுவுமே இருக்காது. பின்னர் அந்த கோபக்காரிக்கு துணிவு வந்திடும். பாடசாலையில் எதாவது செய்தால் அம்மம்மாவைக் கூட்டிக்கொண்டு வருவேன் என்று மிரட்டல் விடுவா. அந்த மிரட்டலுக்கும் பணிந்த ஞாபகம்.

ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருந்து (எத்தனையாம் ஆண்டு என்று ஞாபகம் இல்லை) தாயகம் நோக்கி பலர் வந்திருந்தார்கள். அதுவும் அந்த கோபக்காரியின் வீட்டிற்கு. அவா நிறைய வெளிநாட்டுச் சாமான்களை எல்லாம் கொண்டு வந்து படம் காட்டுவா. எரிச்சலாகத் தான் இருக்கும் ஆனால் என்ன செய்வது நம்மடை ஆட்கள் யாருமே அந்த காலத்தில் தாயகத்திற்கு வரவில்லையே… கோபக்காரி பக்கத்து வீடு என்றாலும் அவர்கள் வீட்டில் இருந்து வரும் சாப்பாடுகளை கூடச் சாப்பிடமாட்டோம். அவ்வளவு ரோசம் நமக்கு. ஆனால் கடைசியில் அந்த கோபக்காரிகளில் ஒருத்தி இதயத்தில் ஓட்டை என்ற காரணத்துக்காய் நம்மை விட்டு போனபோது நாம் கதறிய கதறலுக்கு கூட நேசம் போடமால் அந்த கோபக்காரி; கோபமாகவே போனாள்.

( அட ரமாக்கு என்ன நடந்தது என்று யோசிக்கிறீர்களா? இன்னொரு கோபக்காரியை எதிர்பராது சந்தித்த சந்தோசத்தில் தான் இப்படியெல்லாம் எழுதத் தோன்றியது. நண்பர்களே! உங்களுக்கும் இப்படி எதாவது கோபக்காரர்கள் இருந்திருந்தால் அவர்களைப்பற்றி எழுதுங்களேன்)

  • Replies 86
  • Views 11.2k
  • Created
  • Last Reply

ஆ..........ஆ.........இந்த பழக்கம் தான் கலியாணம்கட்டினா பிறகு கோவம்போட ஆள் கிடைக்குதில்லை எண்டு புருஷன்மாரை போட்டு தாளிக்கிறது............. என்ன வெளிநாட்டிலை கிழுவல் கதியாலுகள் இல்லை எண்ட உசார்தான் நம்மளுக்கப்பா ஆட்களோடை சண்டைபிடிக்கிறது கோவம் போடுறது பிடிக்கவே பிடிக்காது ஆரும் கோவம்போட்டு போனாலும் அடுத்தநாள் வலியப்போய் நானே கதைச்சு விடுவன் இதாலை ஒரு பட்டபேரும் எனக்கு வைச்சிருந்தாங்கள்(அதை சொன்னா...சிக்கல் ) அப்பிடியான அனுபவம்தான் இப்பவும் பொண்ணம்மாவோடை குடும்பத்தை கொண்டு போக உதவுது................பிள்ளை ரமா வாறன்பாடு பெரிய கஷ்டம் போல கிடக்கு.........எதுக்கும் மாறப்பாருங்கோ...........

  • தொடங்கியவர்

அங்கிள் இதுகள் சிறுவயதில் செய்த விளையாட்டுக்கள் அங்கிள். ஆகவே பல மாற்றங்கள் வந்திருக்கும் என்று நினையுங்கோ... இப்ப எல்லாம் பெரிய பிள்ளைகள் ஆக்கும் :(:(

ஆ..........ஆ.........இந்த பழக்கம் தான் கலியாணம்கட்டினா பிறகு கோவம்போட ஆள் கிடைக்குதில்லை எண்டு புருஷன்மாரை போட்டு தாளிக்கிறது............. என்ன வெளிநாட்டிலை கிழுவல் கதியாலுகள் இல்லை எண்ட உசார்தான் நம்மளுக்கப்பா ஆட்களோடை சண்டைபிடிக்கிறது கோவம் போடுறது பிடிக்கவே பிடிக்காது ஆரும் கோவம் போட்டு போனாலும் அடுத்தநாள் வலியப்போய் நானே கதைச்சு விடுவன் இதாலை ஒரு பட்டபேரும் எனக்கு வைச்சிருந்தாங்கள்(அதை சொன்னா...சிக்கல் ) அப்பிடியான அனுபவம்தான் இப்பவும் பொண்ணம்மாவோடை குடும்பத்தை கொண்டு போக உதவுது................பிள்ளை ரமா வாறன்பாடு பெரிய கஷ்டம் போல கிடக்கு.........எதுக்கும் மாறப்பாருங்கோ...........

பையங்கள் இப்படியெல்லாம் கோபம் போட்டு நாங்கள் காணேல்ல..! அடிபடுவாங்கள்..கன்ரீனில போய் சிநேகிதம் ஆகிடுவாங்கள்..! பெண்பிள்ளைகளின் பிடிவாதக் குணம்..பாடசாலையிலையே ஆரம்பிக்கிறது போல..! அதால முகத்தார் போன்ற அப்பா(வி)கள் எவ்வளவு கஸ்டப்படினம் என்றதை தற்போதைய ஆசிரியர்கள் கவனிக்க வேணும்..! :wink: :P :(

  • தொடங்கியவர்

ஐய்யோ இது பழைய நினைவுகளை மீட்பதற்காக போடப்பட்ட சிறு ஆக்கம். ஆண் பெண் பேதம் வேண்டமே. சிறுவயதில் நடந்தவற்றை கதைத்து சிரிக்க ஒரு சந்தர்ப்பம் இன்று கிடைத்தது. அதை தான் இங்கு போட்டேன்.....

ஐய்யோ இது பழைய நினைவுகளை மீட்பதற்காக போடப்பட்ட சிறு ஆக்கம். ஆண் பெண் பேதம் வேண்டமே. சிறுவயதில் நடந்தவற்றை கதைத்து சிரிக்க ஒரு சந்தர்ப்பம் இன்று கிடைத்தது. அதை தான் இங்கு போட்டேன்.....

ஐய்யோ...ஆண் பெண் பேதத்துக்கு இல்ல.. அந்தப் பேதமே வேண்டாம் என்றம்..! வளரும் போதே சொல்லிக் கொடுத்திட்டா வளர்ந்த பின்னாவது திருந்திடுவாங்க எல்லா..!

உதாரணத்துக்கு உங்கள் சிறுவயது அனுபவத்தை வைச்சே முகத்தார் போட்டாரே ஒரு போடு.. பாவம் அவர் எவ்வளவு கஸ்டப்பட்டிருக்கிறாரோ..! அந்த அனுபவத்தையும் கொஞ்சம் கவனத்தில எடுக்கத்தானே வேணும் இந்த நேரத்தில..! :wink: :P :(

ஐய்யோ இது பழைய நினைவுகளை மீட்பதற்காக போடப்பட்ட சிறு ஆக்கம். ஆண் பெண் பேதம் வேண்டமே. சிறுவயதில் நடந்தவற்றை கதைத்து சிரிக்க ஒரு சந்தர்ப்பம் இன்று கிடைத்தது. அதை தான் இங்கு போட்டேன்.....

சரி.....சரி........ரமா சும்மா விளையாட்டுக்கு அழுது எங்களோடை கோவம் போட்டாதைங்கோ..........ஏனெண்டால் இஞ்சை பாம்புகள் இருக்கு பிறகு வந்து கொத்திப் போட்டால்?????????

  • தொடங்கியவர்

சரி.....சரி........ரமா சும்மா விளையாட்டுக்கு அழுது எங்களோடை கோவம் போட்டாதைங்கோ..........ஏனெண்டால் இஞ்சை பாம்புகள் இருக்கு பிறகு வந்து கொத்திப் போட்டால்?????????

:(:(:(:(:(:(:lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொக்காமக்கா,,,, பெண்கள் இப்படியெல்லாம் செய்வாங்களோ (அதுதான் ரோட்டில போகக்கை சைக்கிளால இடிக்கிறது, பட்டப்பெயர் சொல்லி கூப்பிடுறது எண்டு சொன்னியளே),, அட நான் இவ்வளவு நாளும் நினைச்சன் கேர்ள்ஸ் நல்ல பிள்ளைகள் ஆக்குமெண்டு,, எப்படி சண்டைபிடிக்கிறனியள்?? மனசாலயா? அட நானும் கொஞ்சக்காலம் ஸ்கூல்ல குப்பை கொட்டினான் பட் அங்கயும் பெண்கள் இருந்தவைதான்,,, ஆனால் இந்த அளவுக்கு சண்டைபிடிக்கிறேல்ல,, அதுதான் ஒரு டவுட்டில கேட்டன்,, :roll: :roll: :roll: :?

அட அதுதான் களத்தில பெண்கள் சண்டை பிடிக்கிறது இல்லையோ? சா பெண்கள் விசயத்தில டன் ரீப்பிளைட் :(:( :oops:

அட நான் இவ்வளவு நாளும் நினைச்சன் கேர்ள்ஸ் நல்ல பிள்ளைகள் ஆக்குமெண்டு

தம்பி இந்த நினைப்புதான் பிழைப்பைக் கெடுக்கிறது ஏதோ கொஞ்சநாள் உம்மோடை பழகின பழக்கத்திலை சொல்லுறன் ......... யாழ் களத்தை பாத்து தன்னும் அறியாட்டி எல்லாம் வெஸ்ட் தம்பி..........

அடங்கொக்காமக்கா,,,, பெண்கள் இப்படியெல்லாம் செய்வாங்களோ (அதுதான் ரோட்டில போகக்கை சைக்கிளால இடிக்கிறது, பட்டப்பெயர் சொல்லி கூப்பிடுறது எண்டு சொன்னியளே),, அட நான் இவ்வளவு நாளும் நினைச்சன் கேர்ள்ஸ் நல்ல பிள்ளைகள் ஆக்குமெண்டு,, எப்படி சண்டைபிடிக்கிறனியள்?? மனசாலயா? அட நானும் கொஞ்சக்காலம் ஸ்கூல்ல குப்பை கொட்டினான் பட் அங்கயும் பெண்கள் இருந்தவைதான்,,, ஆனால் இந்த அளவுக்கு சண்டைபிடிக்கிறேல்ல,, அதுதான் ஒரு டவுட்டில கேட்டன்,, :roll:  :roll:  :roll:  :?  

அட அதுதான் களத்தில பெண்கள் சண்டை பிடிக்கிறது இல்லையோ? சா பெண்கள் விசயத்தில டன் ரீப்பிளைட்  :(  :( :oops:

இதைச் சொல்லுறீங்கள்.. ஒரு கண்காட்சி நடத்த யாழில ஒரு பிரபல்யமான பெண்கள் பாடசாலைக்குப் போனபோது கண்டமே அவைட கூத்துகளை.. அப்பதான் புரிஞ்சிச்சு...நம்ம பையங்கள் எவ்வளவு உசத்திண்ணு..!

சின்னப்புட்டக் கேளுங்க அவற்ற பாட்னர் ஸ்கூல் வேம்படி வம்புகள் எப்படின்னு.. சொல்லுவார்..! :wink: :(:(

  • கருத்துக்கள உறவுகள்

அடங்கொக்காமக்கா,,,, பெண்கள் இப்படியெல்லாம் செய்வாங்களோ (அதுதான் ரோட்டில போகக்கை சைக்கிளால இடிக்கிறது, பட்டப்பெயர் சொல்லி கூப்பிடுறது எண்டு சொன்னியளே),, அட நான் இவ்வளவு நாளும் நினைச்சன் கேர்ள்ஸ் நல்ல பிள்ளைகள் ஆக்குமெண்டு,, எப்படி சண்டைபிடிக்கிறனியள்?? மனசாலயா? அட நானும் கொஞ்சக்காலம் ஸ்கூல்ல குப்பை கொட்டினான் பட் அங்கயும் பெண்கள் இருந்தவைதான்,,, ஆனால் இந்த அளவுக்கு சண்டைபிடிக்கிறேல்ல,, அதுதான் ஒரு டவுட்டில கேட்டன்,, :roll:  :roll:  :roll:  :?  

அட அதுதான் களத்தில பெண்கள் சண்டை பிடிக்கிறது இல்லையோ? சா பெண்கள் விசயத்தில டன் ரீப்பிளைட்  :lol:  :( :oops:

அப்படியா டண்??

அப்படியா டண்??

:lol::(:(:lol:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நித்திலா சிரிக்கின்றியள்? :evil:

கோபம் போட்டதைப் பற்றி சொன்னபோது சிலதுகள் நினைவுக்கு வருகின்றது. பள்ளி வாழ்வில் கோபம் போட்டு தவறுதலாக இருவரும் முட்டுப்பட்டால் அதை ஊதிக் கொள்ளுவினம். மற்றவரின் மேசையில் புத்தகம் வைத்தால் அதன் கதி அதோ தான். புத்தகம் முழுக்க ஊதின பிறகு தான் தூக்குவினம்.

இதிலும் அதிகமாக அவரிலும், மற்றவரிலும் இடையில் நின்று ஒருவர் இருவரையும் தொட்டால் கறண்ட் கனைக்சன் ஆகினமாதிரி இரண்டு பேரும் விலத்திக் கொள்ளுவினம். :P :lol:

(சரியா டண்?)

ஆகா...ரமாக்கா...ஒரே ஊர் ஞாபகங்களை ஞாபகப்படுத்துறீங்கள்...நான் பிறகு சேரன் போல..ஞாபகம் வருதே..ஞாபகம் வருதே எண்டு பாடப்போறன்.. :lol:

குருவி அண்ணா சொன்ன விடயம் உண்மை தான்..நான் பெண் என்றாலும் சண்டை பிடிப்பது, கோள் சொல்வது, டூ போடுறது, எல்லாமே பெண்கள் தான் கூட செய்வார்கள்..ஆண்கள் சண்டை எண்டால் பெண்களுக்கு முன்னால வீரன் எண்டு காட்ட கட்டிப்புரண்டு சண்டை போடுவார்கள்..ஆனால் அடுத்த நிமிடம் ஒரு விடயமென்றால் ஒன்று கூடி மச்சான் எண்டு தோளில் கை போட்டு விடுவார்கள்..இது நம்ம ஊர் கிளாசிலேயே நடக்கும்..பார்த்திருக்கேன்... :P

எனக்கும் சின்ன வயசில இப்படி சண்டை பிடிச்சுட்டு...அம்மாக்கிட்ட, அப்பாக்கிட்ட பூவரசம் தடியால அடி வாங்கிய ஞாபகம் இருக்கு. அதுவும் சண்டை பிடிச்ச உடனே..ஏதும் அவைக்கு நாங்கள் குடுத்திருந்தா..அதை திருப்பி கேட்கிறதும்..ரோசத்தில திருப்பி குடுக்கிறதும்...போட்டு குடுக்கிறதும்................... :(

இப்ப நினைத்தால் கூட சிரிப்பு தான். பட் இப்ப நான் முந்தி கோவப்பட்ட பிள்ளைகள் ஓட நேசம் போட்டாச்சு :P கதைக்கிறனான். இப்ப சின்னப்பிள்ளைகள் இல்லைத்தானே. :P

நீங்கள் கூடப்படிக்கிற ஆக்களோட தானே சண்டை போட்டதா சொன்னீங்கள் நான் சின்ன வயசில டீச்சரோடயே சண்டை போட்டு அப்பாக்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கிட்டேன். முந்தி டியூசன் விடுவாங்க தானே..அப்போ நான் ஒரு டீச்சர்கிட்ட கணக்கு, தமிழ் படிக்க போறனான்ன். (கனக்குன்னா அவ்ளோ மக்கு நான்) இன்னும் நம்ம ஊர் பிள்ளைகள்..ஆண்கள், பெண்களும் படிச்சோம். அப்போ என்னோட கொப்பியை வாங்கி பார்த்த அம்மா சொன்னா..என்னை வடிவான எழுத்தில முத்து முத்தா எழுதோணும் எண்டு. இல்லண்ணா அடிப்பன் எண்டு..

நானும் சரி எண்டு கிளாசில ஆறுதலா டீச்சர் போர்ட்டில எழுதினதை முத்து முத்தா எழுதிக்கொண்டிருக்க...அது நிறைய நேரம் எடுத்திச்சு. டீச்சர் போர்ட்டை அழிச்சிட்டா..எனக்கு வந்திச்சே கோவம்..டீச்சரை பிடிச்சு பேசிட்டன்..ஏன் அழிச்சீங்க அது இது எண்டு..டீச்சர் அது பிறகு பார்த்து எழுதிக்கலாம் எண்டா..நான் சொன்னன் இல்லை.. நீங்கள் சரியே இல்லை....வடிவா சொல்லித்தர்றேல்லை...அதுதான் அம்மா , அப்பா சொன்னவை இனி என்னை உங்களட்ட டியூசனுக்கு விடுறேல்லை வேற டீச்சரட்ட விட போயினம் எண்டு சொன்னவை. நான் இனி உங்களட்ட வர மாட்டன் எண்டு..

அது அம்மா, அப்பா, வேற டீச்சரட்ட விடுவம் எண்டு வீட்டில கதைச்சப்போ கேட்டது. அதை அப்பிடியே அவகிட்ட நான் சொல்லிட்டன்.சின்ன விசயத்தை பலூன் போல பெரிசாக்கி கிளாசை விட்டு வந்துட்டன். :twisted:

அதை வேற வீட்டில சொல்லல. பேசாமல் பம்மிண்டு இருந்துட்டன். பட் நம்ம கிளாசில எனக்கொரு எதிரி இருக்கான். அவன் வந்து முதல் வேலையா போட்டுக்குடுத்திட்டான். அப்புறம் அம்மாவிடம் டீச்சர் வந்து ஏன் நான் என்ன பிழையா சொல்லி கொடுத்தன் எண்டு கேட்டு..பிரச்சனை பண்ண..அப்பா பூவரசம் தடியை முறிக்க..அப்புறம் நம்ம பாடு.. :cry: :cry: :cry:

இதை இப்பவும் சொல்லி என்னை நக்கல் அடிப்பாங்க..என்னாலையும் மறக்க ஏலாது. அதே டீச்சர் பிறகு நம்ம ஸ்கூல் கலை விழாவுக்கு வர..(அப்பொ நான் 7ம் கிளாஸ்) நான் ஒரே பம்மல் தான். ஆனால் டீச்சர் வந்து என்னோட கதைக்க..எனக்கு அழுகையே வந்துடுச்சு. அப்புறம் டீச்சரோடா நேசம் போட்டாச்சு. :P :P

இது என்னோட பல கதைகளில ஒரு கதை.. :(

என்ன நித்திலா சிரிக்கின்றியள்?  :evil:  

கோபம் போட்டதைப் பற்றி சொன்னபோது சிலதுகள் நினைவுக்கு வருகின்றது. பள்ளி வாழ்வில் கோபம் போட்டு தவறுதலாக இருவரும் முட்டுப்பட்டால் அதை ஊதிக் கொள்ளுவினம். மற்றவரின் மேசையில் புத்தகம் வைத்தால் அதன் கதி அதோ தான். புத்தகம் முழுக்க ஊதின பிறகு தான் தூக்குவினம்.  

இதிலும் அதிகமாக அவரிலும், மற்றவரிலும் இடையில் நின்று ஒருவர் இருவரையும் தொட்டால் கறண்ட் கனைக்சன் ஆகினமாதிரி இரண்டு பேரும் விலத்திக் கொள்ளுவினம்.  :P  :lol:  

(சரியா டண்?)

ஆகா தூயவன் அதே தான்..வெள்ளைச்சட்டை கொஞ்சமா முட்டினாலே..சட்டை முழுசா ஊதி பெருசா படம் காட்டித்தான் மிச்ச வேலை. அதில ஒரே ஒரு நன்மை தான்..இப்ப நினைச்சு சிரிக்க முடியுதே அதுதான் :(

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் வகுப்பில் வேல் என்று ஒரு நண்பன். கிட்டத்தட்ட அரசியல்வாதி மாதிரி கூட்டம் வைத்துக் கொண்டு திரிவான். (6ம் ஆண்டளவில் படிக்கும் போது). அவன் எங்கள் வகுப்பில் எவரோடாவது கதைக்காமல் விட்டால் மற்றவர்கள் எல்லோரும் கதைக்கமாட்டார்கள். அப்படி ஒரு ஆதிக்கம் அவனின். உண்மையில் அதிகம் பாதிக்கப்பட்டது நான் தான். எனக்கும் அவனுக்கும் எப்பவுமே ஒத்து வராது. அதனால் எப்போதுமே தனித்துப் போய்விடுவேன். :x :x

அடுத்த நாள் அவனுக்கு ஏதும் கண்டீனில் வாங்கிக் கொடுத்து, அவனை வசப்படுத்தி கொள்வேன். ஆனாலும் இப்போதும் அவன் மீது கடும்கோபம் உள்ளது. கையில் மாட்டுப்பட்டால் அந்தோ கதி தான் அவன். :evil: :evil: :evil:

ஆகா..வேல் எங்கே...வேல் எங்கே..வேலைக்கூட்டி வந்து இங்க விடணும்..அப்பத்தான் தூயவனை பார்க்கலாம்..சட்ணி தான்..ஹிஹி. :lol::(:(

அதுசரி கன்டீன் என்றதும் எனக்கு அங்கு விற்குமே..மிக்சர் ஞாபகம் தான்.2.50 எண்டு நெக்கிறன்..சூப்பரா இருக்கும்..அப்புறம் ஒரு பிளேன்டி..அதுவும் சூப்பர் :P

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா..வேல் எங்கே...வேல் எங்கே..வேலைக்கூட்டி வந்து இங்க விடணும்..அப்பத்தான் தூயவனை பார்க்கலாம்..சட்ணி தான்..ஹிஹி.  :lol:  :(  :(  

ஏன் தூயவனை இவ்வளவு காலம் பாத்ததில்லையா? உலகத்தில் ஆழகானவன் யார் என்று நினைக்கின்றீர்களோ அதை விட அழகானவனாக கருதிக் கொள்ளுங்கள்!! :P :lol:

( என்ன செய்வது. என்னைப் பற்றி சொல்லவேண்டியதாகக் கிடக்குது) :wink:

எப்பவுமே சரியானதை விட்டு விட்டு தவறானதை சரியாக விளங்கி கொள்ளுவீர்கள் தூயவன்..நான் சொன்னது வேல் வந்தால்...உங்களை என்ன செய்வார் என்பதை கள உறுப்பினர்கள்...சந்தோசமாக பார்த்து ரசிப்பதை தான்...வேற இல்லை..உடனே வந்துடுவீங்களே... :twisted: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராமா ராமா சரியகதான் கோபம் வரும் போல!!!!!!!!!! அதுசரி உங்கட பாடசாலையை பற்றி சரியகதான் பொய் சொல்லிற்ங்கள் போங்க..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணைக் கட்டி கோபம்

"கோபம் கோபம்

கண்ணைக் கட்டி கோபம்

பாம்பு வந்து கொத்தும்

கண்ணாடி வந்து வெட்டும்"

¯ó¾ »¡À¸í¸û - «ÊÀ¢ÊÂû, ºñ¨¼Âû, §¸¡Àõ §À¡ÎÈÐ À¢ÈÌ «¨½îÍì ¦¸¡ñ¼Ð ±øÄ¡õ «§¿¸Á¡ö ±ø§Ä¡÷ Å¡úÅ¢Öõ þÕìÌõ. ¿ÁìÌõ þÕó¾Ð.

¬É¡ø þí¨¸ À¢Ã¨É ±ýɦÅýÈ¡ø "¸ñ¨½ì ¸ðÊì §¸¡Àõ" ±ýÈ¡ø ±ýÉ ¸ÕòÐ - ¦¾Ã¢ó¾Å÷¸û ¦º¡øÖí§¸¡. ÅÖ º£Ã¢Â…¡ö §¸ì¸¢Èý. ²Ðõ ¿ì¸ø À¾¢Ö¸û ¦º¡øÄ¢ §¸¡Àõ §À¡¼ ¨Å측§¾Ôí§¸¡.

துணியால் கண்ணை கட்டினால் உங்களுக்கு ஒன்றுமே

தெரியாது தானே?

அதே போல.. கோபத்தால் என் கண்களை கட்டுகிறேன்

என் கண்ணுக்கு இனி நீ(ங்கள்) தெரிய மாட்டீர்கள்.. என்று

அர்த்தம்.. :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் வகுப்பில் வேல் என்று ஒரு நண்பன். கிட்டத்தட்ட அரசியல்வாதி மாதிரி கூட்டம் வைத்துக் கொண்டு திரிவான். (6ம் ஆண்டளவில் படிக்கும் போது). அவன் எங்கள் வகுப்பில் எவரோடாவது கதைக்காமல் விட்டால் மற்றவர்கள் எல்லோரும் கதைக்கமாட்டார்கள். அப்படி ஒரு ஆதிக்கம் அவனின். உண்மையில் அதிகம் பாதிக்கப்பட்டது நான் தான். எனக்கும் அவனுக்கும் எப்பவுமே ஒத்து வராது. அதனால் எப்போதுமே தனித்துப் போய்விடுவேன். :x :x

அடுத்த நாள் அவனுக்கு ஏதும் கண்டீனில் வாங்கிக் கொடுத்து, அவனை வசப்படுத்தி கொள்வேன். ஆனாலும் இப்போதும் அவன் மீது கடும்கோபம் உள்ளது. கையில் மாட்டுப்பட்டால் அந்தோ கதி தான் அவன். :evil: :evil: :evil:

சரி தூயவன்... பழசுகளை மறந்திடுங்க.. :lol:

றமா.. பழசுகளை எல்லாம் நினைவு படுத்தீட்டிங்க எனக்கு.. :( சின்ன வயசில இருந்து ஒரு கேள் என்கூட படிச்சா... எதுக்கு எடுத்தாலும் சண்டை.. போட்டி தான் ஆளோட... கிளாஸ் வேற மாறவே இல்லை.... பல தடவை நான் மண்ணைக் கவ்வி இருக்கன்.. பதிலுக்கு பல தடவை அவாவும் மண்ணைக் கவ்வி இருக்கா.. மாக்ஸ் எடுக்கிறதில இருந்து கிண்டல் பண்ணுறது வரை தான் சொல்லுறன்.

யாழ்ல பிரச்சினை வந்தா பிறகு.. எல்லாம் எங்கெங்கோ போயாச்சு... கடைசியா வன்னில OL எக்ஸாம் டைம் ல ஆளைப்பார்த்தன்.. அனிக்கு நோர்மல கதைச்சன். இப்ப கொஞ்ச நாளுக்கு முதல் ஆள் ஒரு பிரச்சினைல சிக்கி கஸ்ட படுறதா கேள்விப்பட்டன்.. :roll: :roll: என்னதான் இருப்பினும் மனசு ரொம்ப கஸ்டமா இருந்திச்சு....

எப்பவாவது ஆளை சந்திச்சா... நான் பண்ணின ஒரு சில கிண்டலுக்கு சொறி கேட்கணும் என்று இருக்கன். :roll:

விஸ்ணு.. கவலைப் படதீர்கள்... சின்ன வயசில

எல்லாரும் இப்படித்தானே? :lol:

நான் சின்ன வயசில ஒராளின் மண்டையையே

உடைச்சிருக்கிறன்.. :( :cry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.