Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வு பற்றிய பொய்ப்பரப்புரைகளை மறுக்கின்றோம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

.

[Thursday, 2011-06-09 05:56:38]

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான மூன்றாவது அமர்வு கடந்த சில நாட்களில் இடம்பெற்றுள்ளதாக 'குறித்த' சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில், தாங்களாகவே உறுப்பினர் உரிமையை இழந்தவர்களது வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர், மூன்றாவது அமர்வு தொடர்பான உத்தியோகபூர்வக் அறிவித்தல் உரியவழிமுறையில் அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தரப்படும் எனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரனால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் முழுவிபரம் :

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான மூன்றாவது அமர்வு கடந்த சில நாட்களில் இடம்பெற்றுள்ளதாக 'குறித்த' சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை என்பதனை அறியத்தருகின்றோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்வுசெய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான எதுவித மூன்றாவது அமர்வும் இன்னமும் இடம்பெறவில்லை. மூன்றாவது அமர்வு விரைவில் இடம்பெறவுள்ள சூழலில் தமிழ்மக்களினை குழப்பத்திற்குட்படுத்தும் உள்நோக்குடன் இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால், உலகத் தமிழ் சமூகம் விழிப்புடன் இருத்தல் வேண்டுமென நாம் வேண்டுகின்றோம். குறிப்பாக, சிறீலங்கா அரசு பலவழிகளிலும் நாடுகடந்த அரசாங்கத்தினை பலவீனப்படுத்த முற்படுகின்றது என்பதை உலகத்தமிழ்சமூகம் எப்போதும் நினைவில் நிறுத்திடல் வேண்டும்.

சனநாயக மரபுகளுக்கு அமைய தேர்தல்கள் மூலம் தெர்ந்தெடுக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தாம் ஏற்றுக்கொண்ட அரசமைப்புக்கும், தம்மைத்தேர்வு செய்த மக்களுக்கும் விசுவாசமாக பல்வேறு வழிப்பட்ட அரசியல், சமூக, இராஐதந்திரச் செயற்பாடுகளை பலதளங்களிலும் மேற்கொண்டு வருகின்றது. இந்தச் சூழலில், பல்வேறு சர்வதேச தரப்புக்களும் எமது புதுமையான வழிமுறைகள் ஊடான சனநாயக வழி அரசியல் செயற்பாடுகளை அவதானித்தும் - ஊக்குவித்தும் வருகின்றது.

தமிழீழ இலக்கினை பதியம் வைத்து வரைவு செய்யப்பட்ட அரசமைப்பு, அரசமைப்புக்கு கட்டுப்பட்ட உறுப்பினர்கள் என சர்வதேச நியதிகளுக்குட்பட்ட சனநாயக நெறிமுறைகள் ஊடாக பயணிப்பதன் ஊடாக நாங்கள் தகைமையுள்ள அரசாங்கமாகவும், தொலைநோக்குள்ள அரசாங்கமாகவும் எம்மை வலுப்படுத்தியும் வருகின்றோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில், தாங்களாகவே உறுப்பினர் உரிமையை இழந்தவர்களது வெற்றிடங்கள் நிரப்பப்பட்ட பின்னர், மூன்றாவது அமர்வு தொடர்பான உத்தியோகபூர்வக் அறிவித்தல் உரியவழிமுறையில் அனைத்து தமிழ் மக்களுக்கும் அறியத்தரப்படும்.

நன்றி

நாகலிங்கம் பாலசந்திரன்

உள்துறை அமைச்சர்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

source:seithy.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ இலக்கினை பதியம் வைத்து வரைவு செய்யப்பட்ட அரசமைப்பு, அரசமைப்புக்கு கட்டுப்பட்ட உறுப்பினர்கள் என சர்வதேச நியதிகளுக்குட்பட்ட சனநாயக நெறிமுறைகள் ஊடாக பயணிப்பதன் ஊடாக நாங்கள் தகைமையுள்ள அரசாங்கமாகவும், தொலைநோக்குள்ள அரசாங்கமாகவும் எம்மை வலுப்படுத்தியும் வருகின்றோம்.

நீங்கள் உங்களை வலுப்படுத்தி வருவதற்கிடையில் நாங்கள் முற்றாகத் தேய்ந்து போய் விடுவோம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் உங்களை வலுப்படுத்தி வருவதற்கிடையில் நாங்கள் முற்றாகத் தேய்ந்து போய் விடுவோம்!

நல்லாச்சொன்னிங்க போங்க ....

  • கருத்துக்கள உறவுகள்

சில ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி உண்மைக்கு புறம்பானவை

சேறடிப்பதற்கு என்று சில ஊடகங்கள் நாயாக அலையிறாங்கய்யா. :huh:

சேறடிப்பதற்கு என்று சில ஊடகங்கள் நாயாக அலையிறாங்கய்யா. :huh:

தமிழ் அரசு இந்த செய்தியை முதலில் ஈழம் பிரஸ் எனும் தளத்தை மேற்கோள் காட்டித்தான் இணைத்தார். அந்த்த தளமும் சாதாரணமாக பார்க்கும் போது தமிழ் ஆதரவு தளம் போல் தான் உள்ளது. எனவே எங்களுக்குள் நாங்களே முரண்பாடான தகவல்களை பரிமாறிக்கொள்கிறோமா?

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ வாரம் ஒரு முறை ஒரு அறிக்கை மட்டுந்தான் இவர்களிடம் இருந்து வருகிறது கண்டிக்கிறொம் மெண்டிக்கிறோம் என்று.. போக 2 மாதத்திற்கு ஒரு முறை எந்த நாட்டு தூதரையாவது சந்தித்தோம் என்று வருகிறது.அதுவும் மெக்ஸிக்கோ தூதரை சந்தித்தோம் தென்னபிரிக்கா தூதரை சந்தித்தோம். . இவர்கள் சார்பானவர்கள் எனில் எதிர்ப்பவர்கள் நடுநிலைநாடுகள்.. என்ன செய்வது பிரியாமல் இருக்கும் நாடுகள் ஆகியவற்றின் தூதர்களை சந்தித்து விளக்கபடுத்துவதான் ராஜதந்திரம்..

brother-1460-fax.gif

முதலில் இவர்களுக்கு ஒரு பேக்ஸ் மிசனை வாங்கி கொடுங்கப்பூ.. எந்த நாட்டில் எழவு விழந்தாலும்(இயற்கை அழிவுகள் விபத்துக்கள்)நாங்களும் உங்கள் துயரில் பங்கு கொள்கிறோம் என பேக்ஸ் அனுப்பட்டும்..

"கேட்காத கடனும் பார்க்காத பயிரும் திரும்பி வரா"

அடிக்கடி டச்சில் இருந்தால் தான் வேலைக்காகும்..

த்மிழ்நாட்டு கம்னியுச்டு கட்சி அளவுக்கு கூட இவர்கள் செயல்பாடு இல்லை.. எப்படியோ போங்கப்பா.. :(

டிஸ்கி:

கருநா சதாமு உசேனுக்கு பெனாசீர் புட்டோக்கேல்லாம் கவிதை எழுதி அனுப்புகிறார்..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

எந்த நாட்டில் எழவு விழந்தாலும்(இயற்கை அழிவுகள் விபத்துக்கள்)நாங்களும் உங்கள் துயரில் பங்கு கொள்கிறோம் என பேக்ஸ் அனுப்பட்டும்.. அடிக்கடி டச்சில் இருந்தால் தான் வேலைக்காகும்.

80 களில் நெல்சன் மண்டேலா சிறையிலிருக்கும் பொழுது, அவருக்கு அடித்த தந்திகளும் எழுதிய கடிதங்களுமே பின்னாளில் புலிகள் தென் ஆபிரிக்காவில் புலிகள் கால் பதிக்க வழிவகுத்தன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.