Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்திற்கு விற்பனைக்கு வரும் இலங்கை நாட்டின் பொருட்களை புறக்கணிப்போம்: சீமான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை பொருட்களை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை இனப்படுகொலை செய்ததது மட்டுமின்றி, இன்றுவரை ஈழத் தமிழின அழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் இலங்கை அரசுக்கு எதிராக பொருளாதாரத் தடையை கடைபிடிக்க வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியத் தீர்மானத்தை தமிழக மக்கள் அனைவரும் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

ஈழத் தமிழினத்தின் நீண்ட நெடிய விடுதலைப் போராட்டத்தில் இத்தீர்மானம் ஒரு பெரும்

திருப்புமுனையாகும். இதனை இந்திய அரசு நிறைவேற்றும் என்று நாம் காத்திருந்தால் இலவு காத்த கிளி கதையாக முடிந்துவிடும்.

எனவே, இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை தமிழர்களையாகிய நாம் உடனடியாக செயல்பாட்டிற்குக் கொண்டு வருவோம்.

1. இங்கு விற்பனைக்கு வந்திருக்கும் இலங்கை நாட்டின் பொருட்கள் எதுவாயினும் அவைகளைப் புறக்கணிப்போம்.

2. இலங்கைக்கு இங்கிருந்து அனுப்பப்படும் பொருட்களை நிறுத்துமாறு தமிழ்நாட்டு வணிகர்களை வலியுறுத்துவோம்.

3. இலங்கையில் கடந்த 2010ஆம் ஆண்டில் இந்திய சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டபோது, அதில் இந்தியக் கலைஞர்கள் எவரும் கலந்துகொள்ளக் கூடாது என்று கோரிக்கை விடுத்தோம். அந்த விழா தோல்வியில் முடிந்தது. அதேபோன்று, இப்போதும் இந்தியத் திரைப்படக் கலைஞர்கள் அனைவரும் இலங்கையை முழுமையாகப் புறக்கணித்து தங்களுடைய மனிதாபிமான உணர்வுகளை வெளிப்படுத்துமாறு கோருவோம்.

4. ‘கலை, இலக்கியம் யாவும் மக்களுக்காகவே’ என்கிற முழுக்கத்துடன் எப்போதும் மனிதாபிமானத்துடன் செயல்பட்டுவருபவர்கள் தமிழ்த் திரைப்படக் கலைஞர்கள். இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை முன்னெடுக்கும் மானுடத்தின் தூதுவர்களாக அவர்களை முன்னுறுத்தி செயல்படுவோம். அவர்கள் இந்தியா முழுவதும் சென்று, கலைஞர்களையும், படைப்பாளிகளையும் சந்தித்து இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்வோம்.

5. இதேபோல், இனவெறியை கடைபிடித்த தென் ஆப்ரிக்காவை எப்படி சர்வதேச சமூகம் தனிமைபடுத்தியதோ அதேபோல், தமிழினப் படுகொலை செய்த இலங்கையையும் பன்னாட்டுச் சமூகம் தனிமைபடுத்திட வேண்டும் என்ற முழக்கத்தை உலகளாவிய அளவில் நாம் முன்னெடுப்போம். குறிப்பாக இலங்கையின் கிரிக்கெட் அணி இதற்கு மேல் இந்தியாவில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று போராடுவோம். தமிழ்நாட்டு மண்ணில் அந்த அணிக்கு இடமில்லை என்பதை ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் காட்டுவோம்.

6. இலங்கை அரசின் விமான போக்குவரத்தை மனிதாபிமானமுள்ள யாரும் பயன்படுத்தாதீர்கள் என்று விரிவான அளவில் அனைத்து ஊடகங்களையும் பயன்படுத்தி பரப்புரை செய்வோம்.

7. இலங்கை இனப் படுகொலை செய்த குற்றவாளி என்பதை இந்தியா முழுவதும் கொண்டு செல்வோம்.

8. இந்திய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து இலங்கைக்கு எதிரான பொருளாதாரத் தடையை கொண்டுவருமாறு நாடாளுமன்றத்தில் தங்களுடைய உறுப்பினர்களைக் கொண்டு மத்திய அரசை வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்வோம்.

9. தமிழக சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இலங்கையிலுள்ள சிங்களக் கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்க்கின்றன. தமிழ்நாடு சட்டப் பேரவை நிறைவேற்றியுள்ள

தீர்மானத்தை தாங்கள் கண்டு கொள்ளப் போவதில்லை என்றும், தங்களைப் பொறுத்தவரை இந்திய அரசுடன் மட்டுமே உறவு கொண்டுள்ளதாகவும் திமிருடன் கூறியுள்ளார் இலங்கை அமைச்சக பேச்சாளர் கேகலிய ரம்புக்வாலா. இநதியா வேறு, தமிழ்நாடு வேறு என்று இலங்கை அமைச்சர் பேசுகிறார். நாம் புரியவைப்போம். தமிழ்நாட்டின் சட்டப் பேரவைத் தீர்மானத்திற்கு எந்த அளவிற்கு வலிமை உள்ளதென்பதை தமிழக மக்களாகிய நாம் உணர்த்துவோம்.

தமிழினத்தின் ஒன்றிணைந்த செயல்பாட்டிலேயே தமிழினத்தின் மீட்சி உள்ளது என்பதனை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு சீமான தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நக்கீரன்.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=55713

முடிந்தளவுக்கு சிங்கள பொருட்கள் / சேவைகளை நாமும் புறக்கணிப்பதுடன் நண்பர்கள்/உறவினர்களையும்

புறக்கணிக்க வேண்டவேண்டும்:

- சிங்கள விமான சேவை ( வேற்று நாட்டு விமான சேவை பயன்படுத்தலாம் )

- சிங்கள தேயிலை ( கென்யா நாட்டு தேயிலை வாங்கலாம்)

- சிங்கள வங்கிகள் ஊடான பண பரிமாற்றம் (உண்டியல் ஊடாக பணம் அனுப்பலாம்)

- சிங்கள மலிபான் (Maliban), மர்க்கரிங் டிப்பர்ட்மேந்து (MD: Marketting Department) உணவுப்பொருட்களை புறக்கணியுங்கள்

--

  • கருத்துக்கள உறவுகள்

INDO- SRI LANKA FREE TRADE AGREEMENT: AN ASSESSMENT OF POTENTIAL AND IMPACT

INDRA NATH MUKHERJI1

TILANI JAYAWARDHANA

SAMAN KELEGAMA

http://www.saneinetwork.net/pdf/SANEI_II/Work_in_progress_Indo_SriLankla.pdf

-------

இப் பதிவு நீளமாகவும் சொற்கள் குழம்பி இருந்ததாலும் நீக்கியுள்ளேன். மேலே புரட்சிகர தமிழ்தேசியன் இணைத்துள்ள கோப்பினைத் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம்.

- இணையவன்

Edited by இணையவன்

உலகத்திடமும் தமிழரிடம் பணம் வாங்கி தமிழரை அழிக்கும் சிங்களத்தை புறக்கணிப்போம்:

1. சர்வதேச நாணய நிதி அமைப்பிடம் இருந்து 2.6 பில்லியன்கள் பெற்றுள்ளது

2. சீனாவிடம் இருந்து அபிவிருத்திக்கு 4 பில்லியன்களை பெற்றுள்ளது

தான் குண்டு போட்டு அழித்த ஒவ்வொரு 260,000 தமிழனின் வீட்டுக்கும் ஒரு வீட்டை உலக நாடுகளின் பணத்தில், 2.1 B USD, மீள கட்டி கொடுத்துள்ளது ??

http://www.sangam.org/2011/06/Pick_Pockets.php?uid=4370

  • கருத்துக்கள உறவுகள்

பல ஆர்பாட்டம் ஊர்வலம் என்று யாழிலே வாசித்துகொண்டிருந்தேன்...............

சென்றவாரம் பாரிஸ் போயிருந்தேன்....... லாப்சப்பலில் உள்ள தமிழ் கடைகளிலும் ரெஸ்ராரண்களிலும் இலங்கை சிங்கள பொருட்களையே அதிகம் பாவிக்கிறார்கள். உண்மையிலேயே வாயடைத்துபோனேன். காரணம் விக்டோரியா சீக்ரெட் காப் போன்ற கடைகளில் ஆடைகள் வாங்காதீர்கள் என்று சில அமரிக்கர்களே அதை புறக்கணிக்கிறார்கள் புறக்கணிப்பு போராட்டங்களில் பங்குகொள்கிறார்கள் அப்படியிருக்கும் போது தமிழராகிய நாம் இப்படி.......................

இந்த இனத்திற்கு விடுதலை ஒரு கேடா? என்று யாரோ இங்கே முன்பு எழுதியிருந்தார்கள்..... அவைதான் என்காதில் எதிரொலித்த சொற்கள்.

எமக்கு விடுதலை கிடைக்காததுதான் ஒரு வகையில் புண்ணியமானது.

நாட்டு விசுவாசிகள் தாம் மட்டுமே இப்போது சிதைகிறார்கள்............ விடுதலை கிடைத்தால் அவர்களை குடும்பத்தோடே சிதைத்துவிடும் இந்த இனம்.

காலம் கையை விட்டு செல்லவில்லை, மனத்தை தளரவிட வேண்டாம் :)

இவ்வளவு காலமும் நடத்தப்பட்ட 'புறக்கணி சிறிலங்கா' போராட்டம் வெற்றிபெறாமல் போனமைக்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக சர்வதேச அளவில் ஒரு நாடும் இதற்கு ஆதரவு தரவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் நிறுத்தலும், பின்னர் தமிழக சட்டசபையின் தீர்மானமும், சனல் 4 ன் ஆவண படங்களும் புதிய பலத்தையும் ஊக்கத்தையும் தந்துள்ளன. இப்பொழுது எமது மக்கள் மத்தியிலும் புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முடிந்தளவுக்கு சிங்கள பொருட்கள் / சேவைகளை நாமும் புறக்கணிப்பதுடன் நண்பர்கள்/உறவினர்களையும்

புறக்கணிக்க வேண்டவேண்டும்:

- சிங்கள தேயிலை ( கென்யா நாட்டு தேயிலை வாங்கலாம்)

-

அவுஸ்திரெலியாவில் உள்ளோர் அவுஸ்திரெலியாத் தயாரிப்பான புசல்ஸ் தேநீரைப் பருகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.