Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

GTF மற்றும் BTF ஐ உடைப்பது பற்றி மந்திர ஆலோசனை நடத்திய மக்களவை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரசுரித்தவர்: admin June 20, 2011

_பிரித்தானிய தமிழர் பேரவையை எமது கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும் அவர்கள் நினைத்தபடி செயல்பட விடக்கூடாது, அத்தோடு உலகத் தமிழர் பேரவையின் நடவடிக்கைகளும் எமது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என டென்மார்க் மக்களவை உறுப்பினர் ஸ்கைப்பில் பேசியது ஒலிநாடாவாக வெளியாகியுள்ளது.

காலத்தின் தேவை கருதி அதனை நாம் வெளியிட்டுள்ளோம். சமீபத்தில் நடந்த இந்தக் கலந்துரையாடலின் முழுவடிவமும் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

http://youtu.be/SynBi7K47vw

http://youtu.be/jdq8Ot3VNuI

உலகத் தமிழர் பேரவை தலைவர் பாதர் இமானுவேல் அடிகளார் குளறுபடியானவர்; அவர் குளறுபடியாக கதைப்பார் எனவே, அவரும் துரத்தபட வேண்டியவர் என்று மத்திய குழு கூட்டத்தில் கருத்து முன் வைத்துள்ளனர் தனம் மற்றும் டென்மாக் குட்டி ஆகியோர்.

இவர்களுடைய கருத்தபடி பிரித்தானிய தமிழர் பேரவையை இரண்டாக பிரிக்கவும் உலகத் தமிழர் பேரவையை இமானுவேலிடம் இருந்து பறித்தெடுக்க வேண்டும் எனவும் கருத்து கூறப்பட்டது.

எனினும் டென்மார்க்கில் இருந்து இந்த கலந்துரையாடலில் ஈடுபட்ட முன்னாள் டென்மார்க் மற்றும் பிரான்ஸ் பொறுப்பாளரும் கே.பியின் சகலனுமான குட்டி இது தொடர்பாக தாம் மிக விரைவில் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் கலந்துரையாட உள்ளதாக தெரிவித்தார்.

உலகத் தமிழர் பேரவை தமக்குச் சொல்லாமல் போர் குற்ற ஆதரங்களை தொலைக்காட்சிகளுக்கு வழங்கி வருவதை அவர் மறை முகமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.அதாவது என்ன நடந்தாலும் தமக்கு ஊடாகவே நடக்க வேண்டும் என்பது இவர் கருத்தாக அமைந்துள்ளது.குட்டி என்பவர் தற்போதைய டென்மார்க் மக்களவையின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி மின்னஞ்சல் மூலம் கிடைக்கப் பெற்றது. மக்களின் விழிப்புணர்வுக்காக நாங்கள் இதை பிரசுரிக்கின்றோம். இதை தவிர வேறு எந்த நோக்கமும் நெருடலுக்கில்லை.

http://mykathiravan.com/ta-news/?p=10514

[

உலக தமிழர் பேரவை தங்களால் முடிஞ்சதை செய்யினம், அருட்தந்தை இம்மனுவல் அவர்களை சர்வதேசம் ஒரு மொடரேற்றர் என பார்க்கினம். அதனை குளப்பாமல் இருப்பதே நல்லது.

இனியும் எல்லாம் எங்களுக்கு கீழ் அல்லது எங்களைகேட்டுத்தான் செய்யவேண்டும் என நினைப்பதனை நாம் எல்லோரும் மாற்றவேண்டும்.

நாங்கள் மட்டும்தான் தமிழ் தேசியத்தின்பால் சுத்தமானவர்கள் என்ற உளத்தாக்கமே மேற்கண்டவாறான கருத்துக்களுக்கு காரணம்.

இதனை இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதில் ஓரிடத்தில் மகேஸ் சொன்னவர் என சர்வதேச அரசியல் பற்றி சொல்லுகினம். அந்த ஆளுக்கு 100 மடங்கு நிகரானவர் அருடதந்தை இம்மானுவல். இப்படியானவர்களை மனம் கோணாது இருக்கின்ற வண்டியை வைத்து ஓட முயற்சி செய்யுங்கள்.

பாதையும், இலக்கும் தான் முக்கியம்.

பயணம் செய்வோர் நானாகத்தான் இருக்க வேண்டும், நான் தான் வண்டியை ஓட்டவேண்டும், அந்த வண்டி எனக்கு சொந்தமாகவே இருக்கவேண்டும் என நினைப்பது இனியும் தவறு. ஏனென்றால் நாம் இப்போ சர்வதேச அரசியல் மற்றும் அனைத்துலக ஆதரவுடனான பயணத்தினை தொடங்கியுள்ளோம்.

பிரித்தானிய தமிழர் பேரவை, உலக தமிழர் பேரவையினை இன்னும் ஓர் உயர்ந்த ஜனனாயக கட்டமைப்பாக மாற்ற என்ன செய்யலாம் என மூத்தோர்கள், புத்திஜீவிகள் செயற்பாட்டாளர்கள் சிந்திக்கவேண்டும்.

மாறாக காய்க்கின்ற மரத்திற்கு பெயர்பலகையிட்டு நாம்தாம் இதற்கு தண்ணீர் ஊற்றி வளர்த்தோம் என உரிமை கோர நினைப்பது எந்தவொரு தனிப்பட்ட செயற்பாட்டாளர்களுக்கும் உசிதமானது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

உமை உங்களுக்கு ஒரு பச்சை குத்தியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் பேரவைக்கு நிதி சேர்க்க அவுஸ்திரெலியா சிட்னியில் வரும் யூலை 2ம் திகதி சிட்னி வாழ் உள்ளூர் கலைஞர்களினால் இசை நிகழ்வு நடாத்தப்படவுள்ளது. சிட்னி வாழ் தமிழர்கள் கலந்து இசையை இரசித்து உலகத்தமிழர் பேரவைக்கு உதவுங்கள். விபரங்களுக்கு

http://www.globaltamilforum.org/gtf/thetribute

உலகத்தமிழர் பேரவையில் இருக்கும் அமைப்புக்கள்.

Founding member organisations

Australian Tamil Congress

Board member - Dr. Rajeswaran

British Tamils Forum

Board member - Mr. Sivarasan

Canadian Tamil Congress

Board member - Dr. Sri Ranjan

Holland Tamil Cultural Centre

Board member - Mr. Ruban Thiru

Malaysian Tamil Forum

Board member - Dr. Iyngkaran

Norwegian Council of Eelam Tamils

Board member - Dr. Ramanan

Swedish Tamil Forum

Board member - Mr. Jeganmohan

United States Tamil Political Action Council

Board member - Mr. Jey Surier

உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கு நன்றி உமை.

மக்களின் விடுதலைக்கான ஒரு போராட்டம் இன்று அதிகாரங்களை தன்னிடம் குவிக்கும் ஒரு போராட்டமாக மாறி வருகிறது! இது உருப்பட்டமாதிரித்தான்! இன்னும் ஒரு 5 வருடத்தில் இவர்கள் ஆவியாகி போய்விடுவார்கள். தம்மை வலிந்து நாட்கணக்கில் நடந்து போராட்டத்தை நடத்திய நமக்கு இன்று ஸ்கைப்பில் சொகுசான போராட்டம் நடைபெறுகிறது. அன்று பண்டிதர் மாத்தையா சந்தோசம் புலேந்திரன் போன்றோர் நாட்கணக்கில் காலில் செருப்பில்லாது காடுகளில் நடந்து கட்டியெழுப்பிய போராட்டத்தை இதை விட கேவலப்படுத்த முடியம் என்றால் கேவலப்படுத்தங்கள்! உங்களிற்கு அதிகாரமும் பணமும் தான் குறி! மக்களின் விடுதலையல்ல என்பதை புரியவைத்தமைக்கு கோடி நன்றிகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.