Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா தலைவர்கள் விரைவில் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவர்- ஐ.நா. அதிகாரி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sunday, June 26, 2011, 17:46சிறீலங்கா

போர்க்குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இரு நாடுகளின் குடியுரிமைகளைப்பெற்றுள்ள ஸ்ரீலங்காவின் தலைவர்களும் அதிகாரிகளும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கக்கூடும் என்று நீதிக்கு முரணான கொலைகள் மற்றும் தன்னிச்சையான படுகொலைகள் தொடர்பான ஐநாவின் விசேட அதிகாரி கிறிஸ் ஹெய்ன்ஸ் கொழும்பிலிருந்து வெளிவரும் லக்பிம ஆங்கில வார இதழுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் தெரிவித்துள்ளர்.

இரு நாடுகளின் குடியுரிமைகளைப்பெற்றவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நியாய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாக கருதப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்காவில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. கிடைத்துள்ள சாட்சியங்களுக்கு முரணாக, குற்றசாட்டுக்களை முற்றாக மறுப்பதாகவே ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாடு அமைந்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்வது மிகவும் கஷ்டமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கண்ணைக்கட்டி விட்டு, நிர்வாண நிலையில் கைகளை பின்னால் கட்டிவிட்டு தலையில் சுட்டுக்கொல்வது பற்றி கருத்து முரண்பாடு சொல்லமுடியாது. மற்றும் அதனை எச்சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜெனிவாவில் தான் சந்திதத் ஸ்ரீலங்கா அதிகாரிகள் போர்க்குற்றச்சாட்டுக்கள் பற்றிய தங்களின்’ கடும் வேதனையை ‘வெளிப்படுத்தினர் என்றும் அவர் கூறினார்.

http://www.tamilthai.com/?p=20281

விரைவு என்பது எப்போது என்பதுதான் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தவொரு சிங்களவனையும் யாரும் சர்வதேசகூண்டில் நிறுத்த முடியாது.இது உறுதியானது.வேறு வழியை நோக்கி நகருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு சிங்களவனையும் யாரும் சர்வதேசகூண்டில் நிறுத்த முடியாது.இது உறுதியானது.வேறு வழியை நோக்கி நகருங்கள்.

அதைத்தான் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளும் நம்மவர்களுக்கு இராஜதந்திர ரீதியாகச் சொல்லிவருகின்றார்கள். சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்குத் தேவையான ஆதாரங்களை வைத்து இலங்கையரசை தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் தரப்பண்ணுவதும் வெற்றியே.

அதைத்தான் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளும் நம்மவர்களுக்கு இராஜதந்திர ரீதியாகச் சொல்லிவருகின்றார்கள். சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதற்குத் தேவையான ஆதாரங்களை வைத்து இலங்கையரசை தமிழர்களுக்கு அரசியல் உரிமைகள் தரப்பண்ணுவதும் வெற்றியே.

அப்படியா?

குறைந்தபட்சம் ஒரேயொரு உதாரணத்தையாவது ஆதாரம் (link உடன்) காட்டமுடியுமா?.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா?

குறைந்தபட்சம் ஒரேயொரு உதாரணத்தையாவது ஆதாரம் (link உடன்) காட்டமுடியுமா?.

என்ன கதைத்தார்கள் என்பதை அப்படியே செய்தியாகப் போடாவிட்டாலும், ரொபேர்ட் ஓ பிளேக் இம்மானுவல் அடிகளாருக்கு என்ன சொல்லியிருப்பார் என்பதை சொற்களின் இடையில் கண்டுபிடிக்கவும்..

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=33772

அரசியல் தீர்வே மிகமுக்கியம் எம்மை பொறுத்தவரையில்.

சரியான அரசியல் நிலையை ஏற்படுத்துவது மூலம் முதலில் அரசியல் தீர்வை பெற்று எம்மை பலப்படுத்திக்கொள்ளலாம். பின்னர் குற்றவாளிகளையும் தண்டிக்கலாம்.

கடாபிக்கு எதிராக இன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனது அங்கத்துவ நாடாக லிபியா இல்லாத போதிலும் மக்களை கொலை செய்தார் என்ற காரணத்தால் இது நடந்துள்ளது. அதேவேளை தென் சூடான் மக்கள் சூடானின் போர்குற்றங்களை வைத்து தனி நாடு பெற்றுள்ளனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு சிங்களவனையும் யாரும் சர்வதேசகூண்டில் நிறுத்த முடியாது.இது உறுதியானது.வேறு வழியை நோக்கி நகருங்கள்.

எனக்கு தெரிந்ததெல்லாம் இரண்டே வழிதான்

ஜனநாயக முறையில் போராடி சிங்களவனை சர்வதேச கோட்டில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுத்தல்.

மற்றைய வழி நாமே சிங்களவருக்கு தண்டனை (போட்டுத்தள்ழுறது) வழங்குவது.

இதில் எது சாத்தியப்படும் ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.