Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் பணத்தை யார் வைத்திருக்கின்றார்கள் என்பது பற்றிய தகவல்கள் தெரியும் - குமரன் பத்மநாதன் :

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் பணத்தை யார் வைத்திருக்கின்றார்கள் என்பது பற்றிய தகவல்கள் தெரியும் - குமரன் பத்மநாதன் :

27 ஜூன் 2011

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாரியளவு பணத்தை யார் வைத்திருக்கின்றார் என்பது பற்றிய தகவல்கள் தமக்குத் தெரியும் என புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

2009ம் ஆண்டு யுத்த நிறைவின் பின்னர் இந்தப் பணம் எங்கு பேணப்படுகின்றது என்பது பற்றியும் தாம் அறிந்து வைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாரியளவு பணம் யாரிடம் இருக்கின்றது என்பது தமக்கு தெரியும் என்ற போதிலும் பணத்தைக் கண்டு பிடிப்பது சுலபமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்;கான முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதற்கு தாம் அர்ப்பணிப்புடன் முயற்சி மேற்கொண்டு வருவதாகக் குறிப்பட்டுள்ளார்.

தமிழ், சிங்கள கடும்போக்காளர்களின் நடவடிக்கை, நிர்வாக நடவடிக்கைகளில் தாமதம் ஆகியவற்றினால் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதில் தாமதம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்பதே தமது நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/63195/language/ta-IN/article.aspx

பாரியளவு பணம் யாரிடம் இருக்கின்றது என்பது தமக்கு தெரியும் என்ற போதிலும் பணத்தைக் கண்டு பிடிப்பது சுலபமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்இ சிங்கள கடும்போக்காளர்களின் நடவடிக்கைஇ நிர்வாக நடவடிக்கைகளில் தாமதம் ஆகியவற்றினால் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களை விடுதலை செய்வதில் தாமதம் நிலவி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

:D :D

'புலிகளின் நிதியை கே.பி.யை பயன்படுத்தி சுருட்ட நினைக்கும் ராஜபக்ச!'

விடுதலைப் புலிகளின் நிதியை கே.பி. கொண்டுவந்தால் அது ராஜபக்சவின் குடும்பத்துக்கே போய்ச் சேரும் என்று புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நிதியைக் கைப்பற்றி போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், முன்னாள் போராளிகளுக்கும் புனர்வாழ்வு வழங்க நடவடிக்கை எடுப்பேன் என விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதக் கொள்வனவாளரும், அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்,பிபிசி-க்கு அளித்திருந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கே.பி.-யின் இந்த கருத்து தொடர்பாக விக்கிரமபாகு கருணாரத்ன அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

கே.பி. தங்கக் கூண்டில் சிறை வைக்கப்பட்டுள்ள கைதி.வெளிநாடுகளிலுள்ள புலிகளின் நிதியை அவர் எப்படி வெளிக்கொணர முடியும்.அந்த நிதியை இலங்கைக்குக் கொண்டு வந்தால் ராஜபக்சவின் குடும்பத்துக்கே அது போய்ச் சேரும்.தமிழ் மக்களுக்கு சிறு தொகையே சென்றடையும்.

கே.பியை அரசு எப்படியெல்லாம் பயன்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் இலங்கை அரசு பயன்படுத்துகின்றது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுக்கு வெளிநாட்டில் புலி ஆதரவாளர்கள் பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கைப்பற்றி பயன்படுத்துவேன் என்று கே.பி. கூறியுள்ளார்.

ஒரு கைதி எப்படி சுயாதீனமாகச் செயற்பட முடியும்? அதுவும் வெளிநாட்டு விடயங்களில்? எனவே, இதிலிருந்து இதன் பின்னணியில் அரசு உள்ளது என்பது எமக்குத் தெட்டத் தெளிவாகப் புரிகின்றது.

அப்படியே பணம் கைப்பற்றப்பட்டாலும் அது தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தப்படமாட்டாது. மாறாக ராஜபக்சவின் குடும்பத்தின் புனர்வாழ்வுக்குப் பயன்படுத்தப்படும். எனினும், சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக தமிழ் மக்களுக்கு ஒரு சிறு தொகை வழங்கப்படலாம்.

அதுவும் சந்தேகமாகவே உள்ளது.ராஜபக்சவின் குடும்ப நலன்களுக்காகவே கே.பி. பயன்படுத்தப்படுகின்றார். ஒரு சமூகத்துக்குத் துரோகம் இழைத்துவிட்டு, அரசின் சூழ்ச்சிக்கு கே.பியும் ஒத்துழைப்பு வழங்குகின்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://tamil.webdunia.com/newsworld/news/international/1106/29/1110629028_1.htm

  • கருத்துக்கள உறவுகள்

School-in-Tamil-Nadu.jpeg

10 வகுப்பு 12 வகுப்பில் வரும் மனபாட பகுதியை கண்டு எனக்கு மட்டுமல்ல அனைத்து மாணக்கருக்கும் இப்போதும் கூட எரிச்சல் .. பழைய தமிழ்சொற்களை உள்ளவாறே டப்பா அடித்து(மனப்பாடம் செய்தல்) வாந்தி மாறி பேப்பரில் கொட்ட வேண்டும்.. மற்றும் உச்சரிப்புடன் தமிழ் ஆசிரியரிடம் ஒப்பிவிக்க வேணும்.

சான்பில் நமது மனப்பாட பகுதி:

தேரா மன்னா செப்புவ துடையேன்

எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்

புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்

வாயிற் கடைமணி நடுநா நடுங்க

ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்

ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி

மாசாத்து வாணிகன் மகனை யாகி

வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்

சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு

என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்

கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி

கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே

போக இப்போது நினைத்து பார்த்தாலும் அந்த மாணக்கர் பருவம் திரும்ப வராது அல்லவா? ஆசிரியரிடம் பிரம்பால் அடிவாங்குவது.. ஏச்சு.. பேச்சு ...வாங்கி இரவு முழுக்க மனபாடம் செய்தல் மறுநாள் ஒப்பித்தல் என... ஆனால் பார்த்தால் ஒருசிலருக்கு மீண்டும் அந்த மாணவ பருவ யோகம் வருகிறது.. அந்த வகையில் பத்மநாபன் குடுத்துவைத்தவர்.. இரண்டாம் மாணவ பருவத்தினை மலரும் நினைவுகளாக இப்போ திரும்பி செயல்படுத்தி பார்க்கிறார்... :) :)

டிஸ்கி:

இந்த யோகத்திற்கு பெயர் மறுஜென்ம கமண்டல காய கல்ப யோகமாகும்... இது எல்லோருக்கும் கிடைக்காது...

215.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.