Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மின்னஞ்சல் உடைக்கப்பட்டது ! சிங்கள நாளேடு அதிர்சித் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Monday, June 27, 2011, 14:11தமிழீழம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மின்னஞ்சல் ஊடறுப்பு நடாத்தப்பட்டுள்ளதாக உடைக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்களின் ஒன்றாக அன்று செயற்பட்ட அனைத்துலக செயலகத்தில் ஊடகங்களுக்கான இணைப்பாளராக விளங்கிய நந்து என்று அழைக்கப்படுகின்ற நந்தகோபன் என்ற நபர் ஊடகவே இந்த மின்னஞ்சல் உடைப்பை சிங்கள புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ளதாக அந்த சிங்கள நாளேட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் மேற்கொண்டிருந்த இராஜதந்திர தொடர்புகள் மற்றும் பிற தொடர்பாடல்கள் – தொடர்புடையவர்கள் என அனைத்து தகவல்களையும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை இதனூடாக திரட்டியுள்ளது.

குறிப்பாக புலிகளோடு தொடர்புடைய இராஜதந்திரகளை மட்டுமல்ல அரசியல்துறையோடு தொடர்புடைய புலம்பெயர் விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்துள்ளது.

பிரான்சில் இருந்து ஈழமுரசுலீக்ஸ் எனும் பெயிரில் வெளிவரும் பத்திரிகைத் தொடரானது பா.நாடேசன் அவர்களுடைய மின்னஞ்சல் பரிமாற்றங்களை அடிப்படையாக கொண்டே எழுதப்பட்டு வருவதாக அந்த சிங்கள நாளேடு குறிப்பிட்டுள்ளது.

தங்ளது கட்டுபாட்டில் உள்ள கே.பியை எந்த அடிப்படையில் மனிதாபிமானப் பணிகளுக்கு சிறிலங்கா அனுமதித்துள்ளதோ – அதேபோன்றே நந்தகோபனையும் தொடர்ந்தும் ஊடங்களுக்கான இணைப்பாளராகவே தொடர்ந்தும் இயங்க விட்டுள்ளது.

இந்தவகையில் நந்தகோபன் ஊடகவே சிறிலங்காப் புலனாய்வுத்துறை பா.நடேசனின் மின்னஞ்சல் தகவல்களை வழங்கி வருவதாக உறுத்திப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மைக்கு புறம்மான சோடிப்புக்களுடன் தமிழீழ் தேசிய விடுதலைப் போராட்டத்து தீங்கிளைக்கின்ற வகையிலேயே ஈழமுரசுலீக்ஸ் தொடர் வெளிவருகின்றமை இதற்கு போதுமான சாட்சியாக உள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழக ரெஜியின் ஊடாக போர் குற்றங்கள் தொடர்பிலானசர்வதேச விசாரணைக்கு தயாரென விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு

தமிழீழ அரசென்ற கொள்கைக்கு குறியீடாக இன்று விளங்கி வருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்துவருகின்ற அங்கீகாரம்

ஆகிய மேற்குறிப்பிட்ட விடயங்கள் சிறிலங்கா அரசுக்கு இராஜதந்திர நெருக்கடியை கொடுத்துவரும் நிலையில் இதனை சீர்குலைக்கின்ற வகையில் ஈழமுரசுலீக்ஸ் தொடரில் எழுத்தப்பட்டு வருகின்றமை சிங்களத்தின் பின்னணியை மேலும் உறுத்திப்படுத்துகின்றது.

எவ்வாறு அமெரிக்க அரசின் தகவல்களை விக்கலீக்ஸ் ஊடறுத்து களவாடியமையை அமெரிக்காவில் தேசத் துரோகமாக பார்கப்படுகின்றதோ அதுபோலவே விடுதலைப் புலிகளின் உயர்நிலையின் மின்னஞ்சல் தகவல்களை ஊடறுத்து களாவாடிய தகவல்களை ஈழமுரசுவீக்ஸ் என வெளியிடுவதும் தேசத் துரோகம்தான் என்பது ஈழவிடுதலை செயற்பாட்டாளர்களின் கருத்தாகும்.

பின் குறிப்பு : இவர் நாட்டில் இருந்து யாரால் எப்படி வெளியில் வந்தார் என்று புலத்தில் இருக்கும் செய்யட்பட்டளர்களுக்கு இதுவரை தெரிவிகக் வில்லை . அணைத்து ஊடகங்களையும் தமது கட்டுப்பாட்டில் வைக்க கடும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறார் .

http://www.tamilthai.com/?p=20370

அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மின்னஞ்சல் உடைக்கப்பட்டது! சிங்கள நாளேடு அதிர்ச்சித் தகவல்

தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மின்னஞ்சல் ஊடறுப்பு நடாத்தப்பட்டுள்ளதாக உடைக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்துள்ளது.

விடுதலைப்புலிகளின் கட்டமைப்புக்களின் ஒன்றாக அன்று செயற்பட்ட அனைத்துலக செயலகத்தில் ஊடகங்களுக்கான இணைப்பாளராக விளங்கிய நந்து என்று அழைக்கப்படுகின்ற நந்தகோபன் என்ற நபர் ஊடாகவே இந்த மின்னஞ்சல் உடைப்பை சிங்கள புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ளதாக அந்த சிங்கள நாளேட்டின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் அரசியல் துறையினர் மேற்கொண்டிருந்த இராஜதந்திர தொடர்புகள் மற்றும் பிற தொடர்பாடல்கள் � தொடர்புடையவர்கள் என அனைத்து தகவல்களையும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை இதனூடாக திரட்டியுள்ளது.

குறிப்பாக புலிகளோடு தொடர்புடைய இராஜதந்திரிகளை மட்டுமல்ல அரசியல்துறையோடு தொடர்புடைய புலம்பெயர் விடுதலைப் புலி செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்துள்ளது.

பிரான்சில் இருந்து ஈழமுரசுலீக்ஸ் எனும் பெயிரில் வெளிவரும் பத்திரிகைத் தொடரானது பா.நாடேசன் அவர்களுடைய மின்னஞ்சல் பரிமாற்றங்களை அடிப்படையாக கொண்டே எழுதப்பட்டு வருவதாக அந்த சிங்கள நாளேடு குறிப்பிட்டுள்ளது.

தங்ளது கட்டுப்பாட்டில் உள்ள கே.பியை எந்த அடிப்படையில் மனிதாபிமானப் பணிகளுக்கு சிறிலங்கா அனுமதித்துள்ளதோ � அதேபோன்றே நந்தகோபனையும் தொடர்ந்தும் ஊடங்களுக்கான இணைப்பாளராகவே தொடர்ந்தும் இயங்க விட்டுள்ளது.

இந்தவகையில் நந்தகோபன் ஊடகவே சிறிலங்காப் புலனாய்வுத்துறை பா.நடேசனின் மின்னஞ்சல் தகவல்களை வழங்கி வருவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மைக்கு புறம்மான சோடிப்புக்களுடன் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தீங்கிழைக்கின்ற வகையிலேயே ஈழமுரசுலீக்ஸ் தொடர் வெளிவருகின்றமை இதற்கு போதுமான சாட்சியாக உள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழக ரெஜியின் ஊடாக போர் குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு தயாரென விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு தமிழீழ அரசென்ற கொள்கைக்கு குறியீடாக இன்று விளங்கி வருகின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்து வருகின்ற அங்கீகாரம் ஆகிய மேற்குறிப்பிட்ட விடயங்கள் சிறிலங்கா அரசுக்கு இராஜதந்திர நெருக்கடியை கொடுத்துவரும் நிலையில் இதனை சீர்குலைக்கின்ற வகையில் ஈழமுரசுலீக்ஸ் தொடரில் எழுதப்பட்டு வருகின்றமை சிங்களத்தின் பின்னணியை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

எவ்வாறு அமெரிக்க அரசின் தகவல்களை விக்கிலீக்ஸ் ஊடறுத்து களவாடியமையை அமெரிக்காவில் தேசத் துரோகமாக பார்க்கப்படுகின்றதோ அதுபோலவே விடுதலைப் புலிகளின் உயர்நிலையின் மின்னஞ்சல் தகவல்களை ஊடறுத்து களவாடிய தகவல்களை ஈழமுரசுலீக்ஸ் என வெளியிடுவதும் தேசத் துரோகம்தான் என்பது ஈழவிடுதலை செயற்பாட்டாளர்களின் கருத்தாகும்.

29 /06 /2011

http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1309383803&archive=&start_from=&ucat=1&

  • கருத்துக்கள உறவுகள்

Saturday, 02 July 2011 11:34

அனைத்துலக செயலகத்துக்குள் நுழந்த சிங்கள புலனாய்வு! மாட்டிய இராஜதந்திர தொடர்புகள்!!

விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனின் மின்னஞ்சல் ஊடறுப்பு நடாத்தப்பட்டுள்ளதாக உடைக்கப்பட்டுள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் பல கட்டமைப்புக்களில் ஒன்றாக சில பணிகளுக்காக மட்டும் செயற்பட்டுவந்த அனைத்துலக செயலகத்திற்குள் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போரின் பின்னர் சிங்களப்படைகளிடம் சிக்கிய நந்து என்று அழைக்கப்படுகின்ற நந்தகோபன் என்பவரை சாதுரியமாக விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலகத்துக்குள் ஆளுமை செலுத்த வைத்து பின் ஊடகங்களுக்கான இணைப்பாளராக செயற்பட வைத்து மெல்ல மெல்ல விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு வலையமைப்பை அவதானித்து வந்த சிறீலங்கா புலநாய்வுத்துறை அதே நந்தகோபன் ஊடாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளரான பா.நடேசன் அவர்களின் மின்னஞ்சலை கையகப்படுத்தி அதன் ஊடாக விடுதலைப் புலிகளின் அரசியல் துறையினர் மேற்கொண்டிருந்த இராஜதந்திர தொடர்புகள் மற்றும் பிற தொடர்பாடல்கள் - தொடர்புடையவர்கள் என அனைத்து தகவல்களையும் இதனூடாக திரட்டியுள்ளதாக அந்த ஊடகத்தின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் இருந்து ஈழமுரசுலீக்ஸ் எனும் பெயிரில் வெளிவரும் பத்திரிகைத் தொடரானது இவ்வாறு உடைக்கப்பட்ட பா.நாடேசன் அவர்களுடைய மின்னஞ்சல் பரிமாற்றங்களை அடிப்படையாக கொண்டே எழுதப்பட்டு வருவதாக அந்த சிங்கள நாளேடு குறிப்பிட்டுள்ளது. அதனால் விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயலகத்தின் சார்பில் வெளியாகும் ஈழமுரசு நாளேடு தற்போது சிறீலங்கா புலனாய்வாளர்களினால் வழிநடத்தப்படுகிறதோ என்ற அச்சம் ஐரோப்பிய தமிழ் மக்கள் மத்தியில் எழ ஆரம்பித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

விடுதலைப் புலிகளின் சர்வதேச செயற்பாட்டில் நீண்டகாலமாக இயங்கிவந்த கே.பியை தங்ளது கட்டுபாட்டில் எந்த அடிப்படையில் மனிதாபிமானப் பணிகளுக்கு சிறிலங்கா அனுமதித்துள்ளதோ – அதேபோன்றே நந்தகோபனையும் தொடர்ந்தும் விடுதலைப்புலி உறுப்பினர் போன்று காட்டிக்கொண்டு அனைத்துலக செயலகத்தின் ஊடங்களுக்கான இணைப்பாளராக இயங்க விட்டுள்ளதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தவகையில் நந்தகோபன் ஊடகவே சிறிலங்காப் புலனாய்வுத்துறை பா.நடேசனின் மின்னஞ்சல் தகவல்களை வழங்கி வருவதாக உறுத்திப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மைக்கு புறம்மான சோடிப்புக்களுடன் தமிழீழ் தேசிய விடுதலைப் போராட்டத்து தீங்கிளைக்கின்ற வகையிலேயே ஈழமுரசுலீக்ஸ் தொடர் வெளிவருகின்றமை இதற்கு போதுமான சாட்சியாக உள்ளது.

சிறீலங்கா புலனாய்வுத்துறையினரின் கட்டுப்பாட்டில் நந்தகோபன் என்பவர் செயற்பட்டுவருவதும், அவரின் கீழ் உள்ள ஊடகங்களில் ஒன்றான ஈழமுரசு லீக்ஸ் நாளேட்டிலும், கனடாவில் புளோட் உறுப்பினர் ஈசன் என்பவரால் நாடத்தப்படும் புலத்தில் பத்திரிகையிலும் அண்மைக்காலமாக வெளியாகிவரும் குழப்பம் விளைவிக்கும், கருத்துக்களும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இராஜதந்திர தொடர்புகளை அம்பலப்படுத்தி வருவதுமானது தமிழரின் விடுதலை சார்ந்து செயற்படாது காட்டிக்கொடுப்பு முயற்சியில் இறங்கியுள்ளமையையே பறைசாற்றுகிறது.

இதனால் இதே நந்த கோபனின் கீழ் இயங்கும் ஈழமுரசு பத்திரிகை போன்று பதிவு pathivu.com , sangathie.com ஆகிய இணையங்களும் செயற்படுவது போன்ற தோற்பப்பாடே தெரிகிறது. ஏனெனில் ஈழமுரசு, மற்றும் ஈழமுரசு லீக்ஸ் ஆகிய பத்திரிகைகளில் வரும் செய்திகளையே அப்படியே பிரசுரித்துவருவதை காணமுடிகிறது.

இந்த நிலையில் புலம் பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் இந்த ஊடகங்களுக்கு வழங்கிவரும் ஆதரவுகளை நிறுத்தி சிறீலங்கா புலனாய்வாளர்களின் நயவஞ்சக திட்டத்தை முறியடிக்கவேண்டிய தேவையும், கடமையுமே உள்ளது. அத்தோடு இந்த ஊடகங்களுக்கு மக்கள் தங்கள் ஆதங்கங்களை எழுதி இவ்வாறான தேசவிரோத செயற்பாட்டில் இருந்து அவர்களை விலக்கி சரியான பாதையில் செல்ல வைக்கவும் வேண்டும்.

எவ்வாறு அமெரிக்க அரசின் தகவல்களை விக்கலீக்ஸ் ஊடறுத்து களவாடியமையை அமெரிக்காவில் தேசத் துரோகமாக பார்கப்படுகின்றதோ அதுபோலவே விடுதலைப் புலிகளின் உயர்நிலையின் மின்னஞ்சல் தகவல்களை ஊடறுத்து களாவாடிய தகவல்களை ஈழமுரசுவீக்ஸ் என வெளியிடுவதும் தேசத் துரோகம்தான் என்பது ஈழவிடுதலை செயற்பாட்டாளர்களின் கருத்தாகும்.

http://www.sankathi.com/news

  • கருத்துக்கள உறவுகள்

<_< இதுதான் உண்மை. நந்தன் என்பவன் நடேசன் இருக்கும் காலத்திலேயே சிங்கள புலநாய்வுத்துறைக்காகச் செயற்பட்டவன். நடேசன் அண்ணாவின் அனைத்து மின்னஞ்சல்களும் உடனுக்குடன் அவனால் சிங்களப் புலநாய்வுத்துறைக்கு அனுப்பப்பட்டு வந்தன. போர் முடியும் தறுவாயில்க்கூட உள்வீட்டு வேலைகள் பல நடந்தபோது அதில் முக்கியமாகச் செயற்பட்டவன் நந்தன். இவனைப்பாவித்து புலிகளின் சர்வதேசத் தொடர்பாடுகளை உடைத்து செய்திப்பரிமாற்றங்களை கைய்யகப்படுத்திய சிங்களம் அன்று செய்தது சர்வதேச ரீதியில் புலிகளின் செயற்பாட்டாளர்களை முடக்கியது, கைது செய்யப் பண்ணியதும்தான். அதன்மூலம்தான் புலிகள் யுத்த களத்தில் ஒடுக்கப்பட்டார்கள்.

எந்த மின்னஞ்சல்களை வைத்து புலிகளின் வலையமைப்பை உடைத்ததோ அதே மின்னஞ்சல்களை இன்று அவனூடாகவும் இன்னும் புலிகள் தாம் தான் என்று கூறிக்கொள்ளும் போலித் தேசிய்வாதிகளூடாகவும் உலாவ விட்டு நாடுகடந்த தமிழீழ அரசுக்கெதிராகவும் அதன் செயற்பாட்டளர்களுக்கெதிராகவும் செயற்பட்டு வருகிறது.

நாடுகடந்த தமிழீழ அரசை அழிக்கக் கங்கணம் கட்டி நிற்கு நெடியவம் கும்பலாகட்டும், சிங்களப் பயங்கரவாதமாகட்டும், ரெண்டுமே செயற்படும் விதம் ஒன்றுதான். இவர்களுக்கிடையே தொடர்புகளிருந்தாலும் ஆச்சரியப்படுதற்கில்லை.

ஆனால் நெடியவன் குழு இயக்கி வரும் உலகத் தமிழர் பேரவையும், பிரித்தானியத் தமிழர் பேரவையும், இன்னும் ஆங்காங்கே நாடுகளில் இயங்கும், ஒருங்கிணைப்புக்குழுக்கள், தமிழ் காங்கிரஸுகள் போன்றவை கூட தவறான வழியில் வழிநடத்தப்பட்டு வருகின்றன. உண்மையான விடுதலை ஒன்றையே வேண்டி சேவையாற்றிவரும் இந்த மனிதர்களின் சேவைக்கு நெடியவன் குழு விலைபேசியிருக்கலாம் என்பதுதான் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

2008 காலப்பகுதியில் சிங்கள பயங்கரவாதம் பெருமளவிலான ஆட்சேப்பில் இறங்க்யிருந்தது. இதை முறியடிக்கும் வகையில் புலிகளும் வன்னியில் ஆட்சேர்ப்பில் ஈடுபட்டார்கள். வீட்டிற்கொரு ஆள் என்கிற முறையில் கட்டாய ஆட்சேர்ப்பும் இதனுள் அடங்கும். இவ்வாறு சேர்க்கப்பட்ட போராளிகள் களத்தில் உக்கிரம் தாங்காது ஒன்றில் வெளியேறியிருக்கிறார்கள், அல்லது சரணடைந்திருக்கிறார்கள். போராட்ட விருப்பமோ அல்லது போதுமான பயிற்சியோ இல்லாது களம் அனுப்பப்பட்ட இவர்களால் பல பழைய போராளிகளுக்கு இடைஞ்சல்களே அதிகரித்திருந்தன. பல நிலைகளை ஊடறுத்து சிங்களம் முன்னேற இவ்வாறான கட்டாய ஆட்சேர்ப்பு நபர்களே காரணமாக இருந்திருக்கிறார்கள். உண்மையான போராளிகள் 500 பேரை மட்டுமே கொண்டிருந்த ஒரு தாக்குதல் அணி, கட்டாய ஆட்சேர்ப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஆயிரக்கணக்கான போராளி அணியினரை விட சிறப்பாக இயங்கியதாகவும், ராணுவத்தை சில இடங்களின் தடுத்து நிறுத்தியதும் இவைதான் என்றும் கூறுகிறார்கள்.

புலிகளின் அணிகளில் பாரிய ஓட்டைகளை திட்டமிட்டு விதைத்த இந்தியா மற்றும் சிங்களம் இறுதியில் முற்றாகவே அவர்களை அழித்துவிட்டன.

அதுமட்டுமல்லாமல் இந்தியாவால் இறகூமதி செய்யப்பட்டிருந்த முன்னால் இ.என்.டி.எல் எப் கூலிப்படைகளும் மிகக் கச்சிதமாக இந்த ஆட்ட்சேர்ப்பில் உள்வாங்கப்பட்டிருந்தனர். யுத்தகால அவரசத்தின்போது போராளிகளின் பின்புலம் அறியப்படாது ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டுள்ளது. இதன் விளைவு, முற்றான ஒரு அழித்தொழிப்புச் சமரை சிங்களம் நடத்தி முடிக்க ஏதுவாகியது.

போர் தொடங்கிய காலம் முதல் இறுதிவரை புலிகளுக்குள்ளிருந்து சிங்களத்துக்காகவும், இந்தியாவுக்காகவும் பலர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதில் ஒருவன் தான் இந்த நந்து எனப்படுகிற நந்தகோபன்.

  • கருத்துக்கள உறவுகள்

லாஜிக் இடிக்குது.. இது ஏதோ கிந்தியாகாரனால்தான் சிங்களவனால்தான் உளவு பிரிவை இயக்கமுடியுமாம்..மற்றவன் எல்லாம் மண்ணு திங்கறான்..... 5... 10..... விட்டெறிந்தால் சரியா போச்சு..எவனும் இந்தகாலத்தில் கர்புர் என கட்டபொம்மன் மாதிரி உறுமி கொன்டிருக்க போவத்தில்லை... :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.