Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூடிய அறையில் பேச்சுவார்த்தை: கூட்டு அறிக்கைதானாம் வருமாம்

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் இன்று (29) இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பான தகவல்களை இரு தரப்பிலிருந்தும் அறிந்து கொள்ள முடியாத நிலை ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டது.

விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுடன் தமிழ் ஊடகவியலாளர்கள் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்த போதும் அது கைகூடவில்லை. அவர்களது கைத்தொலைபேசிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

'

இவ்வாறான முக்கிய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஊடகங்களுக்குத் தகவல்களை வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தியா சென்றுள்ளமையும் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா நேற்றைய பேச்சுவார்த்தையில்; கலந்து கொள்ளாமையுமே இந்த நிலைக்குக் காரணமாகவிருக்கலாம் என இலங்கையின் தமிழ் ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.

.

நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் உட்பட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட ஏனைய பிரதிநிதிகளின் கைத்தொலைபேசிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவைத் தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, தான் இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை என்றும் அங்கு என்ன பேசப்பட்டன என்பது தொடர்பில் தன்னால் கூட இன்னும் அறிந்து கொள்ள முடியாதிருப்பதாகத் தெரிவித்த அவர், சில வேளைகளில் இருதரப்பு பேச்சு தொடர்பில்; கூட்டறிக்கை வெளியிடப்படலாமென்ற யூகத்தையும் தெரிவித்தார்.

.

இது இவ்வாறிருக்க, அரசுக்கும் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தன்னிச்சையாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என அரச தரப்புப் பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்றையக் கூட்டத்தில் வலியுறுத்தியதாகவும் தெரிய வருகிறது. பேச்சுவார்த்தைகள் தொடர்பில் இருதரப்பும் கூட்டறிக்கை விடுவது என இங்கு தீர்மானிக்கப்பட்டதாகவும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இலங்கை நேரப்படி நேற்றிரவு (29) 11 00 மணியைக் கடந்தும் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துகள் தெரிவிக்கப்படவோ இருதரப்பு அறிக்கை வெளியிடப்படவோ இல்லை.

Eelanatham

முக்கியமானவர்கள் இல்லாதது கவலையான விடயம்.

வழக்கை வாபஸ் பெற்று தான் ஒரு அரைவேக்காட்டு சட்டத்தரணி என சுமந்திரன் ஏற்கனவே நிரூபித்துள்ளார். இவரின் பங்களிப்பு கேள்விக் குறியாகவே இருக்கும்?

பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடியவர்கள் இவர்கள்தான். வேறுயாரும் தமிழரைப்பற்றிக் கதைப்பதற்கு இலங்கையில் இல்லை. 80 சதவீத மக்களின் ஓட்டினைப் பெறுவதற்கான செயற்றிட்டத்தில் இறங்கியவர்களையும் காணோம். :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.