Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எம்.ஜி.ஆர் இடத்துக்கு எஸ்.டி.ஆரைக் கொண்டு வருவேன். டி.ஆர்

Featured Replies

விரல்களைச் சொடக்குப் போட்டபடி, விஜய டி.ஆர். ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவதை வெளியே இருந்து கண்ணாடி வழியே 'ம்யூட்’டில் பார்க்கும்போதே, விறுவிறுக்கிறது. இந்தி ஆல்பம், குறள் டி.வி. நேரலை என பிஸியோ பிஸியாக இருந்தவரை ஒருவழியாகப் பிடித்தோம்.

''ஆள் ரொம்ப டயர்டா இருக்கீங்களே... இந்த அளவுக்கு இன்னும் கஷ்டப்படணுமா?'' எனக் கேட்டதுதான் தாமதம்...

''நான் டயர்டா இல்லை சார்... டயட்ல இருக்கேன். 'ஒரு தலைக் காதல்’ படத்துக்காக உடம்பை டைட் பண்ணணும்னு தோணிச்சு. டீகூடக் குடிக்காம ஸ்ட்ரிக்ட் டயட் ஃபாலோ பண்றேன். உங்களுக்கே தெரியுமே... முன்னைக் காட்டிலும் இப்போ நான் எந்த அளவுக்கு இறுகி இருக்கேன்னு!'' என்கிறார் மேஜையில் உள்ளங்கையை முறுக்கி இறக்கி!

''பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் கண்டிச்சு, போராட்டத்துல குதிச்சு இருக்கீங்க... கச்சா எண்ணெய் விலை ஏறினால், அதுக்கு மத்திய அரசு என்ன பண்ண முடியும்?''

'''சார்... எண்ணெய் ஊற்றுகளே இல்லாத பக்கத்து நாடான பாகிஸ்தான்ல, பெட்ரோல் விலை 45, இலங்கையில 50. இந்தியாவில் மட்டும் ஏன் எகிறுது விலை? இந்தியனுக்கு மட்டும் ஏன் இந்த அவல நிலை? இந்திய அரசு வெளிநாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யுது. அதனால, பெட்ரோலுக்கு கலால் வரி 15, சுங்க வரி 7. 'இந்த வரியைக் குறைச்சா என்ன... இந்திய மக்களின் வலியைக் குறைச்சா என்ன?’னு நான் குரல் எழுப்பியதை இங்கே இருக்கிற மீடியாக்கள் கண்டுக்கலை. ஆனா, அமெரிக்காவில் வெளியாகிற 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகைக்கு நெறி கட்டுது. 'இந்தியா வரியைக் குறைத்தால், இந்தியாவின் துண்டு பட்ஜெட் நீண்டுவிடும்’னு குழப்பி குசும்பு வேலை காட்டி இருக்கு அந்தப் பத்திரிகை. அமெரிக்காவில் வாலாட்டும் அந்த 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையைப் பார்த்துக் கேட்கிறேன்... உங்க நாட்டுல பெட்ரோல் விலை 45. இந்தியாவின் துண்டு பட்ஜெட், கர்ச்சீஃப் சைஸ்தான். உங்க நாட்டோட துண்டு பட்ஜெட், தலையில போட்டுக்கிற டவல் சைஸ். யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க? இங்கே தமிழ்நாட்டுல ஜெயலலிதா கேஸ் விலையைக் குறைச்சு இருக்காங்க. இதைப் பார்த்தாவது மத்திய அரசு திருந்தணும்!''

''சமச்சீர்க் கல்வி, அதிகாரிகள்-அமைச்சர்கள் பந்தாட்டம்னு செயல்படுற ஜெ-வை எதிர்ப்பீங்கன்னு பார்த்தால், இப்படி சபாஷ் போடுறீங்களே?''

''நான் ஒண்ணும் பாராட்டுப் பத்திரம் வாசிக்கலை. தமிழக முதல்வருக்கு இருக்கிற அக்கறை, ஏன் மத்திய அரசுக்கு இல்லைனு கேட்கிறேன். அதே நேரம், சமச்சீர்க் கல்வி யைக் கலைஞர் கொண்டுவந்தார்ங்கிறதுக் காக தடுக்கிறதைக் கண்டிக்கிறேன். பாடப்புத்தகங்கள்ல திருவள்ளுவர் படங்களைக்கூட மறைச்சு இருக்காங்க. உலகத்துக்கே பொது மறை பாடிய அவரை கருணாநிதிக்குச் சொந்தக்காரர் மாதிரி சித்திரிப்பது சரியா? பள்ளிக்கூடம் தொடங்கி, இத்தனை நாளாகி யும் என்ன பாடம் நடத்துறதுனு வாத்தியார் களுக்கும் புரியலை. என்ன படிக்கிறதுனு மாணவர்களுக்கும் தெரியலை. அரசுப் பள்ளிகளில் சமச்சீர்க் கல்வியை அமல்படுத் துற அளவுக்கு இருக்கைகள் சரி இல்லைனு ஓட்டைக் காரணத்தை இப்போ சொல் றாங்க. படிப்புங்கிறது பெஞ்ச்சுல இல்ல சார்... படிக்கிறவனோட நெஞ்சுல இருக்கு!''

''தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா திகார் சிறையில் இருக்கார். தி.மு.க-வின் முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளரான நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீங்க?''

''தி.மு.க-வில் இருந்தப்ப நான் சாராய ஃபேக்டரிக்கு லைசென்ஸ் கேட்கலை. கல்லூரி கட்டலை. கட்டப்பஞ்சாயத்து பண்ணலை. எம்.எல்.ஏ-வா இருந்தப்ப, எம்.எல்.ஏ. ஹாஸ்டல்ல ஒருநாள்கூடத் தங்கியது இல்லை. ஆனால், இன்னிக்கு என்ன நடக்குது? தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் இருக்கார் சிறை யிலே... கொள்கை இருக்கிறதா திகாரிலே... தி.மு.க. உருண்டுகொண்டு இருக்கிறது அடுக்கடுக்கான புகாரிலே... குறிப்பிட்ட குடும்பங்கள் செய்த தவறு, தி.மு.க-வே பிழை செய்த மாதிரியான தோற்றத்தை உண்டாக்கி இருக்கு. தந்தைக்கும் மகனுக் கும் சீட்டு, தவறு பண்ணித் தண்டிக்கப் பட்ட மந்திரிக்கு மறுபடியும் பதவி, மறுபடியும் சீட்டு... அப்புறம் எப்படி ஜெயிப்பாங்க? காங்கிரஸ் உடனான உறவைக் கண்டிச்சு, என்னோட சிறு சேமிப்புத் துறைத் துணைத் தலைவர் பதவியை அப்பவே தூக்கி எறிஞ்சேன். நாம ஒரு குல்லாவை வீசினால், மந்திகள் எல்லா குல்லாக்களையும் வீசும்னு ஒரு கதை சொல்வாங்க. அதை மனசுல வெச்சுத்தான் என் பதவியை நான் தூக்கி வீசினேன். ஆனால், மந்திகளுக்கு இருந்த உணர்வுகூட இங்கே இருக்கிற மனிதர் களுக்கு இல்லையே!''

''கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோ விலகியபோது, உங்களுக்கு கார்டனில் இருந்து அழைப்பு வந்ததாமே... உண்மையா?''

''இதில் மறைக்க என்ன சார் இருக்கு? அழைப்பு வந்தது உண்மை. எனக்கு சீட் கொடுக்க, அந்தம்மா முன்வந்தாங்க. அப்போ, அவங்கவெச்ச கோரிக்கையை ஏற்று, நான் அங்கே போக முடியாத நிலை. அதுக்கு முந்தைய தேர்தலிலேயே எனக்கு சீட் கொடுக்க அந்தம்மா முன்வந்தாங்க. ஆனா, 'இத்தனை சீட் கொடுத்தால்தான் வருவேன்’னு சொல்லிட்டேன். 'இதெல்லாம் ஓவராத் தெரியலியா?’னு நீங்க நினைக்கலாம். ஆனால், எதற்காகவும், என் சுய மரியாதையை இழக்கிற பழக்கம் எனக்கு இல்லை. காஞ்சிபுரம், கும்மிடிபூண்டி இடைத் தேர்தலில் எல்லாரும் அந்தம்மாவைத் தவிக்கவிட்டுப் போனப்ப, என்னை மட்டும் தானே அழைச்சாங்க. 'எங்களுக்காகப் பிரசாரம் பண்ணுங்க’னு கேட்டாங்க. நானும் பண்ணிக் கொடுத்தேன்!''

''முதிர்ந்த தலைவரான கருணாநிதி இத்தனை இக்கட்டுக்கு ஆளாகித் தவிப்பதை அவருடைய முன்னாள் தொண்டரா எப்படி தாங்கிக்கிறீங்க?''

''அவருக்கு இருப்பது இக்கட்டுன்னா, இலங்கையில திக்கெட்டுத் தவிச்சவங்க யாரு? செங்கோல் சாய, சிங்களவன் பாய, செங்குறுதி ஓட, ஈழத்திலே வீசியது ரத்த வாடை! சில்லறையைக் கரைக்க, சிந்தையை மயக்க, செம்மொழியைப் பாட, கோவை யிலே போட்டார்கள் மேடை. இதை எல்லாம் சகித்துக்கொள்ள தமிழன் ஆகி விட்டானா சோடை? அவர்கள் சாதித்து விட்டார்கள் காரியம்... சாக்குக்காகப் பேசக் கூடாது ஆரியம்... சக்தி இழந்து விட்டது வேதியம்... சத்தியமா இல்லை வீரியம்!''

''நேற்றைக்கு அரசியலுக்கு வந்த விஜயகாந்த், இன்று எதிர்க் கட்சித் தலைவராகவே ஆகிட்டார். ஆனால், நீங்க இன்னும் அப்படியே இருக்கீங்களே?''

''என்னோட கட்சி சின்னக் கட்சிதான்... சின்னம் இல்லாத கட்சிதான். ஆனாலும், யாரோட வளர்ச்சியையும் பார்த்து நான் பொறாமைப்பட மாட்டேன். 234 தொகுதியிலயும் தனியா ஆள் நிறுத்தும் தைரியம் அவருக்கு எப்போ வந்துச்சோ, அப்பவே அவர் ஜெயிச்சிட்டார் சார். எனக்கு என்ன எழுதி இருக்கோ... அதுதான் நடக்கும்!''

''அரசியல் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் சினிமாவை விடாமல் கெட்டியா பிடிச்சிருக்கீங்களே?''

'' 'ஒரு தலை ராகம்’ படத்தில் ஆரம்பிச்சு, இப்போ 'ஒரு தலைக் காதல்’ வரைக்கும் ஓடிக்கிட்டு இருக்கேன். வெற்றி தோல்விங் கிறது வேற... ஆனா, இன்னிக்கு வரைக்கும் நிலைச்சு நிக்கிறேன்ல. என்னோட வந்த வங்க எல்லாம் இப்போ எங்கே இருக்காங்க? நான் ஒண்ணும் டோப்பா முடி வெக்கலை. இன்னிக்கும் தலை வணங்காமுடிதான். சிம்புவுக்குக்கூட நான் இன்னும் அப்பாவா நடிக்கலை. இன்னிக்கு வரைக்கும் பட்டம் போடாமல் நடிக்கிற கலைஞன் நான்!''

''அதுக்காக 'வீராசாமி’ மாதிரியான படம் எடுத்து மும்தாஜ்கூட டூயட் பாடி ஆடி மிரட்டுறது எல்லாம் நியாயம்தானா?''

''நான் ஒண்ணும் 'மன்மதன்’ இல்லை. 'வீராசாமி’யில் என் கேரக்டர் அப்படிப் பட்டது. 'மன்மதன்’ மாதிரி பத்துப் பதினஞ்சு பொண்ணுங்களைக் கூட்டி வெச்சு 'தத்தை தத்தை தத்தை’னு நான் கிளாமர் டான்ஸ் ஆடலை. சரி இல்லாமலா சைதை ராஜ்ல அந்தப் படம் 50 நாள் ஓடிச்சு? கமலா தியேட்டர்ல வீராசாமி யோட கலெக்ஷன் ரெக்கார்டு இருக்கு. 'வீராசாமி’-யில் நான்வெச்ச சிஸ்டர் சென்ட்டிமென்ட்டை, தாய்மார்கள் போய்ப் பார்க்கலை. ஆனா, எனக்கு அதில் நஷ்டம் இல்லை. ஏனா, ரஜினிக்கு நிகரா சம்பாரிச்சவன் நான்!''

''எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர். வரிசையில் உங்கள் மகனைக் கொண்டுவர நினைத்துத்தானே, சிம்புவுக்கு 'எஸ்.டி.ஆர்’-னு பேர்வெச்சீங்க?''

''அவர் ஒரு இடத்தை நோக்கிப் போவார்னு எதிர்பார்த்தேன். அவர் சரியாப் போய்ட்டு இருக்கார். சிம்புவின் 'வானம்’ படத்தின் 75-வது நாளுக்கு நான் தான் விளம்பரம் டிசைன் பண்ணிக் கொடுத்தேன். 'அன்று திரை வானத்திலே துருவ நட்சத்திரம் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இன்றையத் திரை வானிலே வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்’னு எழுதிக் கொடுத்தேன். அந்த இடத்தை நோக்கிப் போகும் தகுதி அவருக்கு இருக்கு சார்!''

''ஆமா, 'வானம்’ படத்தில் அவரே உங்களை இமிடேட் பண்ணினாரே... அதில் உங்களுக்கு வருத்தம் இல்லையா?''

''மத்தவங்க மாதிரி நடிக்காத சிம்பு, இந்த அப்பன் மாதிரி நடிக்க ஆசைப்பட்டு நடிச்சது சார் அது! அதுல என்ன தப்பு?''

''சிம்பு விரல் சுத்துறதையே விட்டுட்டார்... ஆனா, நீங்க இன்னும் எதுகை மோனையை விட மாட்டேங்கிறீங்களே?''

''ஒருவனின் பலம் என்னவோ... அது ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவீனமாத் திட்டமிட்டுப் பரப்பப்படும். அதுக்குப் பின்வாங்கிட்டா, நமக்குத் தோல்விதான். என்னோட எதுகை மோனைக்கு எத்தனை பேர் அடிக்ட்னு உங்களுக்குத் தெரியுமா? நான் பேசுற தமிழைப் பார்த்து, இந்த சந்தம் எங்கே இருந்து வந்ததுன்னு ஆச்சர் யமாக் கேட்கிறாங்க. தமிழ் அமுதத்தை உண்டு வளர்ந்தவன்தான் நான். எதையும் கற்பனை பண்ணிப் பேசுறது இல்லை. கட கடன்னு அதுவாக் கொட்டும். கண்ணை மூடினால், வருதே விருத்தம்... கண் கண்ட சிவனே உமக்கும் எமக்குமே இது பொருத்தம்!''

''காளமேகத்தை விஞ்சுற அளவுக்கு வியக்கவைக்கிறீங்களே சார்?''

''வியக்கவைப்பவனும் அவனே... மயக்க வைப்பவனும் அவனே... இயக்கவைப்பவனும் அவனே... அனைத்தும் அவனே... அவன் எவனே... அது அந்த சிவனே!''

நன்றி ஆனந்த விகடன்

டி.ஆரின் மயக்கவைக்கும் படங்கள் பார்க்க.....

http://www.thedipaar.com/news/news.php?id=30853

Edited by easyjobs

  • கருத்துக்கள உறவுகள்

விரல்களைச் சொடக்குப் போட்டபடி, விஜய டி.ஆர். ரெக்கார்டிங் தியேட்டரில் பாடுவதை வெளியே இருந்து கண்ணாடி வழியே 'ம்யூட்’டில் பார்க்கும்போதே, விறுவிறுக்கிறது. இந்தி ஆல்பம், குறள் டி.வி. நேரலை என பிஸியோ பிஸியாக இருந்தவரை ஒருவழியாகப் பிடித்தோம்.

''முதிர்ந்த தலைவரான கருணாநிதி இத்தனை இக்கட்டுக்கு ஆளாகித் தவிப்பதை அவருடைய முன்னாள் தொண்டரா எப்படி தாங்கிக்கிறீங்க?''

''அவருக்கு இருப்பது இக்கட்டுன்னா, இலங்கையில திக்கெட்டுத் தவிச்சவங்க யாரு? செங்கோல் சாய, சிங்களவன் பாய, செங்குறுதி ஓட, ஈழத்திலே வீசியது ரத்த வாடை! சில்லறையைக் கரைக்க, சிந்தையை மயக்க, செம்மொழியைப் பாட, கோவை யிலே போட்டார்கள் மேடை. இதை எல்லாம் சகித்துக்கொள்ள தமிழன் ஆகி விட்டானா சோடை? அவர்கள் சாதித்து விட்டார்கள் காரியம்... சாக்குக்காகப் பேசக் கூடாது ஆரியம்... சக்தி இழந்து விட்டது வேதியம்... சத்தியமா இல்லை வீரியம்!''

...

''சிம்பு விரல் சுத்துறதையே விட்டுட்டார்... ஆனா, நீங்க இன்னும் எதுகை மோனையை விட மாட்டேங்கிறீங்களே?''

''ஒருவனின் பலம் என்னவோ... அது ஒவ்வொரு காலகட்டத்திலும் பலவீனமாத் திட்டமிட்டுப் பரப்பப்படும். அதுக்குப் பின்வாங்கிட்டா, நமக்குத் தோல்விதான். என்னோட எதுகை மோனைக்கு எத்தனை பேர் அடிக்ட்னு உங்களுக்குத் தெரியுமா? நான் பேசுற தமிழைப் பார்த்து, இந்த சந்தம் எங்கே இருந்து வந்ததுன்னு ஆச்சர் யமாக் கேட்கிறாங்க. தமிழ் அமுதத்தை உண்டு வளர்ந்தவன்தான் நான். எதையும் கற்பனை பண்ணிப் பேசுறது இல்லை. கட கடன்னு அதுவாக் கொட்டும். கண்ணை மூடினால், வருதே விருத்தம்... கண் கண்ட சிவனே உமக்கும் எமக்குமே இது பொருத்தம்!''

''காளமேகத்தை விஞ்சுற அளவுக்கு வியக்கவைக்கிறீங்களே சார்?''

''வியக்கவைப்பவனும் அவனே... மயக்க வைப்பவனும் அவனே... இயக்கவைப்பவனும் அவனே... அனைத்தும் அவனே... அவன் எவனே... அது அந்த சிவனே!''

நன்றி ஜூனியர் விகடன்

டி.ஆரு யாரு..? தமிழனோட வேரு..

முதுமைக்கு தடையா பாரு..

எதுகைக்கு இணை இல்லையே வேறு...

மீறி எதிர்ப்பவர் உண்பதில்லை சோறு..

:D

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பேட்டி! இணைப்புக்கு நன்றி நண்பரே!! :)

  • கருத்துக்கள உறவுகள்

டி.ஆரு யாரு..? தமிழனோட வேரு..

முதுமைக்கு தடையா பாரு..

எதுகைக்கு இணை இல்லையே வேறு...

மீறி எதிர்ப்பவர் உண்பதில்லை சோறு..

:D

கவிதைக்கு நன்றி ராஜவன்னியன் காரு..

ஆளை விட்டா போதும் நான் கிளம்புறேன் இடம் வேறு..... :lol: :lol: :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.