Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

18 ஜூலை 2011

கூறுகிறார் மகிந்த

இனப்பிரச்சினை பற்றி ஒன்றுக்கொன்று முரணாகக் கதைப்பவர்களது குழந்தைகளும் மனைவிமாரும் வெளிநாடுகளிலேயே இருக்கின்றார்கள். அவர்கள் தமது அரசியல் நலனுக்காகவே வேறுபாடுகளை உருவாக்க முற்படுகிறார்களென குற்றஞ்சாட்டியுள்ளார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இன்று யாழ்ப்பாணத்திற்காக விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சென்றிருந்த அவர் வேலணையில் தனது பிரச்சாரக் கூட்டத்தினை ஆரம்பித்திருந்தார். இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் அவர் தீவக மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

கடந்த தேர்தல்களில்; தீவக மக்களே அரசிற்கு கூடிய ஆதரவு அளித்ததாகத் தெரிவித்த அவர் இந்த வகையிலேயே வடக்கிற்கான பிரச்சார நடவடிக்கைகளில் முதலாவது பிரச்சாரக் கூட்டத்திற்கு வேலணையைத் தெரிவு செய்ததாகத் தெரிவித்தார். குறிப்பாக 30 வருட யுத்தத்தினால் இழந்தவற்றை மீளப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்த அவர் மூவின மக்களும் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே அவ்வாறான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

எதிர்த்தரப்பினரைச் சாடுவதிலேயே அவரது பிரச்சார நேரம் கடந்துபோனது. குறிப்பிட்டுச் சொல்லத்தக்கதாக இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் தொடர்பாகவோ அல்லது சனல் - 4 விடயங்கள் மற்றும் ஐ.நா. அறிக்கை தொடர்பாகவோ எந்தவொரு விடயங்கள் தொடர்பாகவும் ஜனாதிபதி இன்றைய பிரச்சாரக் கூட்டத்தில் பிரஸ்தாபித்திருக்கவில்லை. வழமை போலவே வடக்கின் அபிவிருத்தி தொடர்பாகவே அவரது உரை பெரிதும் இருந்;தது. எனினும் அவரது உரையில் முக்கிய விடயங்கள் எதுவும் மேலோட்டமாகக் கூட தொட்டுப்பார்க்கப்பட்டிருக்காமை ஏமாற்றத்தையே ஏற்படுத்தியிருந்தது.

இந்தப் பிரச்சாரக் கூட்டம் வேலணைப் பகுதியில் இடம்பெற்றிருந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனிடையே நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் இரண்டு பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்ளுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. காலை யாழ்ப்பாணம் கோப்பாய் நாவலர் பாடசாலையில் கட்டி முடிக்கப்பட்ட மாடி வகுப்பறைக் கட்டடத்தை அவர் திறந்து வைக்கவுள்ளார். ஊவா மாகாண சபையின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட இப் பாடசாலையின் திறப்பு விழா காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா, மற்றும் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன, வடக்கு மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி, ஊவா மாகாண ஆளுனர் நந்தா மத்தியு, மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர் சசீந்திர ராஜபக்ச மற்றும் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். நாளைய நிகழ்வில் தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதே நேரம் நாளை மாலை யாழ்ப்பாணம் சாவகச்சேரியிலும் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கலந்து கொள்ளவுள்ளார்.

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசாங் கத்துடன் இணைந்து செயற் படுகின்றன – ஜனாதிபதி

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாட்டிற்கு மீண்டும் பயங்கரவாதம் தேவையில்லை எனவும், தமிழ் மக்கள் சுபீட்சமான எதிர்காலம் குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு உரையாற்றிய போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சில தரப்பினர் போலியான தகவல்களை வெளியிடுவதற்கு முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டுகளில் வாழும் வடக்கு மக்கள் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி தமிழ் மொழியில் மக்களுக்கு விளக்கியுள்ளார்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64287/language/ta-IN/article.aspx

வெளிநாட்டுகளில் வாழும் வடக்கு மக்கள் போலியான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இன்றும் மகிந்தரின் இறுதி ஆசைகளை சிங்களத்தின் சார்பாக நிறைவேற்ற தடையாக இருப்பவர்கள் இந்த புலம்பெயர் தமிழர்கள் தான்

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஜனாதிபதி தமிழ் மொழியில் மக்களுக்கு விளக்கியுள்ளார்.

தாயக மக்கள் தாமாகவே முன்னேறுவார்கள் இந்த அடக்குமுறை இராணுவம் அகற்றப்பட்டால். 'அபிவிருத்தி' என்ற பெயருக்குள், முன்பு 'பயயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்' என்ற பெயரில் அழித்த மிகுதியையும், நிறைவேற்ற இந்த முகமூடி.

தீவகத்தில் சிங்கள அரச பயங்கரவாதிகளின் கைக்கூலிகளான டக்ளசின் கடத்தல் - கொலை- கப்பம் - கொள்ளை கும்பல் கள்ள வோட்டு போடுவது தான் வழமை.

  • கருத்துக்கள உறவுகள்

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்

கடந்த தேர்தல்களில்; தீவக மக்களே அரசிற்கு கூடிய ஆதரவு அளித்ததாகத் தெரிவித்த அவர் இந்த வகையிலேயே வடக்கிற்கான பிரச்சார நடவடிக்கைகளில் முதலாவது பிரச்சாரக் கூட்டத்திற்கு வேலணையைத் தெரிவு செய்ததாகத் தெரிவித்தார்.

தீவக மக்களைத் தனக்குப் பின்னால் நிற்பதாகக் கூறி அவமானப்படுத்திய பயங்கரவாதியான மகிந்தவுக்குச் சரியான பதிலை வாக்குமூலம் கொடுக்கத் தீவக மக்கள் முன்வரவேண்டும் .

வட மாகாணத்தில் எப்படி எல்லாம் பிரிவினை இருக்குதோ அதை நன்றாகவே புரிய வைத்துள்ளார்கள் எம்மவர்கள்...

கூறுகிறார் மகிந்த

சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசாங் கத்துடன் இணைந்து செயற் படுகின்றன – ஜனாதிபதி

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/64287/language/ta-IN/article.aspx

:o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.