Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முரளிதரன் போன்று உங்கள் பகுதியிலிருந்தும் வீரர்கள் உருவாகவேண்டும்: கிளிநொச்சியில் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முரளிதரன் போன்று உங்கள் பகுதியிலிருந்தும் வீரர்கள் உருவாகவேண்டும்: கிளிநொச்சியில் ஜனாதிபதி _

வீரகேசரி இணையம் 7/21/2011 11:13:00 AM

எமது கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரன் போன்று உங்கள் பகுதிகளிலிருந்து தர்மலிங்கம், ராஜலிங்கம், இதயராஜ் போன்ற தமிழ் இளைஞர்கள் விளையாட வேண்டும். அந்த கனவு நனவாக வேண்டும். அதுவே எனது நோக்கமாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது இன்றும் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் உரிமைகள் உங்களிடமே இருக்க வேண்டும். அதனை யாராலும் பறிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் அமைக்கப்படவுள்ள சர்வதேச விளையாட்டரங்கின் நிர்மாண பணிகளை ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இங்குள்ள இளைஞர்கள் 2018ஆம் ஆண்டு அம்பாந்தோட்டையில் நடைபெறவுள்ள பொதுநல வாய விளையாட்டுப்போட்டிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ரீசேட்களை அணிந்திருப்பதை காணமுடிகின்றது. இவற்றை பார்க்கும்போது எமக்கு நிச்சயமாக தங்கம், மற்றும் வெள்ளிப் பதக்கங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ஜனாதிபதி இந்த நிகழ்வில் தமிழ்மொழியிலும் உரையாற்றினார். அதன்போது அவர் குறிப்பிடுகையில்,

உங்கள் மொழியில் பேசும்போது நான் மகிழ்ச்சியடைகிறேன். 30வருட காலமாக காணப்பட்ட இருண்டயுகம் இதன் பின்னர் இல்லை. நீங்கள் எதிர்கொண்ட துன்பங்கள், வேதனைகள் என்பவை எனக்கு நன்றாகவே தெரியும். தற்போது நீங்கள் அனைவரும் அச்சமின்றி சுதந்திரமாக வாழலாம். பாதுகாப்பாகவும் வாழலாம். ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அது இன்றும் எப்போதும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். உங்கள் உரிமைகள் உங்களிடமே இருக்க வேண்டும். அதனை யாராலும் பறிக்க முடியாது.

வடக்கின் வசந்தம் வேலைத்திட்டத்தின் கீழ் உங்கள் பிரதேசத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மென்மேலும் திட்டங்கள் முன்னெடுக்கப்படும். நாம் உங்கள் மாகாணத்திற்கு அதிகளவில் நிதி ஒதுக்கியுள்ளோம். உங்கள் பிரதேசங்களில் பாதிக்கப்பட்டுள்ள விதவை பெண்களுக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க விசேட வேலைத்திட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் அவர்களுக்கு கௌரவமான வாழ்க்கையை கொண்டு செல்ல முடியும்.

உங்கள் பிள்ளைகளில் சிலர் இன்னும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாம் நீதியை பெற்றுக்கொடுப்போம். மீள்குடியேற்ற செயற்பாடுகளை அதிகளவில் முடித்துவிட்டோம். உங்கள் பிரதேசம் 30 வருடங்கள் பின்னடைவை கண்ட பிரதேசமாகும். கடந்த இரண்டு வருடகாலத்துக்குள் நாங்கள் அனைத்து துறைகளிலும் அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம். அதனை யாராலும் இல்லையென்று கூற முடியாது. கடந்த மாதம் கொக்காவில் கோபுரத்தை திறந்துவைத்தோம்.

உங்கள் பிரதேசத்தில் விளையாட்டுத்துறை வேகமாக முன்னேற்றமடைய வேண்டும். எமது கிரிக்கெட் அணியில் முத்தையா முரளிதரன்போன்று உங்கள் பகுதிகளிலிருந்து தர்மலிங்கம், ராஜலிங்கம், இதயராஜ், போன்ற தமிழ் இளைஞர்கள் விளையாட வேண்டும். அந்த கனவு நனவாக வேண்டும். நாகலிங்கம், எதிர்வீரசிங்கம் போன்றோர் மீண்டும் உங்கள் பகுதிகளிலிருந்து வரவேண்டும். அதுவே எனது நோக்கமாகும்.

உறுதிகள் இல்லாத காணிகள் தொடர்பான பிரச்சினைகள் விரைவில் திறக்கப்படும். சிலர் உங்களை தவறான பாதையில் அழைத்துச்செல்ல முயற்சிக்கின்றனர். அவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக கோடிக்கணக்கில் நிதியை பெற்றுக்கொள்கின்றனர். அவற்றின் மூலம் அவர்கள் என்ன செய்தார்கள். அவர்களின் வீடுகள் வெளிநாடுகளில் உள்ளன. அனைத்து வசதிகளும் வெளிநாடுகளில் உள்ளன என்றார். __

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=32793

முரளிதரன் போன்று உங்கள் பகுதியிலிருந்தும் வீரர்கள் உருவாகவேண்டும்

நான் நினைச்சன் என்கன்ட கருணா முரளிதரன் போன்ற வீரர்கள் வேணும் என்று சொல்லுகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பதானே நல்ல அடிமைகளாகச் சேவகம் செய்வினம். தேவைக்கேத்தமாதிரி இனவாதியளுக்குப் பாதுகாப்பாக் குலைப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர் உண்மையைத்தானே சொல்கின்றார்

அவருக்கு பிரபாகரன்களைப்பிடிக்காது என்று மறைமுகமாகச்சொல்கின்றார்.

மானமா?

அடிமையா?

அது தமிழருக்கான தெரிவு. கிளிநொச்சி அப்படியேதான் இருக்கிறது. மகிந்தர் புரிந்துகொள்வார்.

வீரர்கள் உருவானால் மட்டும் விளையாட விடுவார்களா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தசாப்தமா கண்டியில் பிறந்து வளர்ந்த முரளிதரனை வைச்சே அரசியல் செய்திட்டாங்க. ஏன் கடந்த இரண்டு தசாப்தங்களாக.. முரளிதரனைத் தவிர வேறு தமிழ் இளைஞர்களை.. ( மலையகம்.. கொழும்பு.. கண்டி என்று பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் வாழினம் என்று அடிக்கடி சொல்லுக்கிறீங்க) சிறீலங்கா அணிக்குள்ள எடுக்க முடியல்ல. கிழக்கு மாகாணத்தின் முக்கிய பகுதிகள் மற்றும் வவுனியா நகரம்.. மன்னார் நகரம்...1990 இல் இருந்தும் யாழ்ப்பாணம் 1995 இல் இருந்தும் உங்கட கட்டுப்பாட்டுக்க தானே இருக்குது. அங்க இருந்தெல்லாம் உங்களால வீரர்களை உருவாக்க முடியல்லையோ..???! இப்ப கிளிநொச்சி முல்லைத்தீவும் மட்டும் தானா மிஞ்சி இருக்குது..???!

இவங்க அந்தக் காலத்தில இருந்து இதையே சொல்லிக் கொண்டிருக்காங்க.. அங்கால சிங்களத்தின் பெரியக்கா.. கிலாரியோடு சேர்ந்து இன மீள் இணைவு நல்லிணக்கம் பற்றி சொல்லிக் கொண்டிருக்க வேண்டியது தான். நாங்கள் நிஜத்தில் எல்லாத்தையும் எல்லாரும் சுருட்டிக் கொண்டு போக விட்டிட்டு வாய் பார்க்க வேண்டியது தான். :unsure::o

Edited by nedukkalapoovan

எமது தாயகத்தில் 'யார் உருவாகின்றார்கள்' என்பது சிங்கள தலைமைகளே தீர்மானிக்கின்றன. அங்கு ஒரு காந்தியோ இல்லை ஒரு லிங்கனோ உருவாகதவரை இங்கே பிரபாகாரங்கள் உருவாவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முதலிலில் வடக்கு கிழக்கு தனிய ஒரு கிரிக்கெட்டு கவுன்சில் உருவாக்கி வெளிநாட்டு பயிற்சியாளரை போட்டு பயிற்சி கொடுடா (தவறு அனுமதி கொடுடா) வெண்ணை வெளக்கெண்ணைய் ராஜபக்சே..

டிஸ்கி:

அவர்கள் வெளிநாட்டில் கவுண்டி கிளப்பில் ஆடியாவது பிழைத்து கொள்ளுவார்கள் :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.